Thursday, February 25, 2010

ஆழ்கடலும் அதன் உள் அலைகளும் பற்றித் திருகுர்ஆன்

இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்,

அல்லது (இவர்களுடைய செயல்களுக்கு உதாரணம்); ஆழ் கடலிலுள்ள இருள்களைப் போன்றதாகும்: அதனை ஒரு அலை மூடிக்கொள்கிறது: அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கு மேல் மேகம்; (இவ்வாறு) பல இருள்கள்: அதில் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (இருள்களால் சூழப்பட்ட நிலையில் பார்ப்பவன்) தன் கையை வெளியாக்கி (நீட்டி) னால் அதனை அவனால் பார்க்க முடியாது. இன்னும், எவருக்கு அல்லாஹ் ஒளியை ஆக்கவில்லையோ அவருக்கு (எங்கும்) ஒளி இல்லை. (அல் குர்ஆன் 24:40).;




மேற்கண்ட இந்த வசனத்தில் இறைவன், கடல்களிலும், பெருங்கடல்களிலும் அதன் ஆழத்தில் இருள்கள் சூழ்ந்து இருப்பதாகவும், அந்த ஆழத்தில் ஒருவன் தன் கைகளை நீட்டிப் பார்க்க முனைந்தால், அவனது கையை அவனே பார்க்க இயலாது, என்கின்றான்.









Figure 15: Between 3 and 30 percent of the sunlight is reflected at the sea surface. Then almost all of the seven colors of the light spectrum are absorbed one after another in the first 200 meters, except the blue light. (Oceans, Elder and Pernetta, p. 27.)




கடல்களிலும், பெருங்கடல்களிலும் அதன் 200 மீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆழத்தில் இருள்கள் காணப்படுகின்றன. அதற்கு மேற்பட்ட 1000 மீட்டர் ஆழத்தில் வெளிச்சம் என்பதை அறவே காண இயலாது.ழூ நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது நவீன சாதனங்களின் துணை இல்லாமல் 40 மீட்டருக்கும் கீழே மனிதனால் நீரில் மூழ்க முடியாது. மனிதனால் எந்தவித கருவிகளின் துணையுமின்றி நீரின் 200 மீட்டர் ஆழத்தில் உயிர் வாழவே இயலாது என்று நவீன அறிவியல் கூறுகின்றது. Oceans, elder and Pernetta, p.27. (படம் 15)


மேலும், ஆழ்கடலில் உள்ள ஆழமான இடங்களில் மேற்கண்ட நவீன சாதனங்களான நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றுமுள்ள கருவிகளின் துணையுடன் கூட ஒருவர் நீந்த இயலாது, என்பதை கடலாராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டறிந்துள்ளனர்.


இறைவனின் திருமறைக் குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் '... ஆழ்கடலிலுள்ள ... அதனை ஒரு அலை மூடிக்கொள்கிறது.அதற்கு மேல் மற்றோர் அலை: அதற்கு மேல் மேகம்... ' என்ற மேற்கண்ட வசனத்தில், ஆழ்கடலிலுள்ள கடல் நீரை ஒரு அலை மூடிக்கொள்கிறது, இந்த அலையை இன்னொரு அலை மூடிக்கொள்கிறது., இந்த இரண்டாவது கட்ட அலையின் மேற்பரப்பை மேகம் மூடிக்கொண்டுள்ளது. மேலும் இந்த இரண்டாவது கட்ட அலையின் மேற்பரப்பில் தான் நாம் காணும் மேகம் இருக்கின்றது எனும் போது, குர்ஆன் கூறும் முதற்கட்ட அலை என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுகின்றது.










Figure 16: Internal waves at interface between two layers of water of different densities. One is dense (the lower one), the other one is less dense (the upper one). (Oceanography, Gross, p. 204.)



அதாவது, கடலின் ஆழத்திலும் உள் அலைகள் இருக்கின்றன என்றும், கடல் நீரின் ஆழத்தில் இருக்கக்கூடிய பல்வேறு நிலைகளிலுள்ள அடர்த்தி விகிதங்களின் மாறுபாடுகள், கடலின் ஆழத்தை பல்வேறு அடுக்குகளாகப் பிரிக்கின்றது என்றும், அந்த அடர்த்தியின் மாறுபாடுகள் சந்திக்கின்ற இரு வேறுபட்ட அடர்த்தியின் இடைப்பட்ட நிலைகளில் தான் உள் அலைகள் காணப்படுகின்றன என்ற உண்மையை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.ழூ(படம் 16) கடலின் மேற்பரப்பிலுள்ள நீரின் அடர்த்தியை விட கடலின் ஆழத்தில் உள்ள நீரில் அடர்த்தியின் விகிதம் அதிகம் காணப்படுவதால், கடலின் ஆழத்தில் ஏற்படும் உள்அலைகளை ஆழ்கடல் நீரானது மூடிக்கொள்கின்றது. Oceanography, Gross, p.205.




கடலின் மேற்பரப்பில் காணப்படும் அலைகள் போலவே, கடலின் ஆழத்தில் ஏற்படும் உள்அலைகளும் அகடுகளையும் முகடுகளையும் கொண்டதாகவும், மேலெழும்பி தாழ்வாகி அலை அலையாய் செல்லக்கூடிய தன்மைகளைக் கொண்டதாகவும் உள்ளன. ஆனால் கடலின் மேற்பரப்பில் நாம் காணும் அலைகளைப் போல கடலின் அடியில் ஏற்படும் உள்அலைகளை மனிதக் கண்களால் காண முடியாது. குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் வெப்பம் அல்லது உப்புத்தன்மையின் மாறுபாடுகளைக் கொண்டே நாம் கடலின் ஆழத்தில் காணப்படும் பல்வேறு அடுக்குகளைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். (oceanography, Gross, p.205)


மிகச் சமீபத்தில் தான் கண்டறியப்பட்ட இந்த அறிவியல் உண்மைகள் 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒருவரால் எவ்வாறு இவ்வளவு தெளிவாகக் கூற முடிந்தது. ஏனெனில் அவர்; இந்த உலகையெல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற ஏக இறையோனால் அனுப்ப்பட்ட உண்மைத்தூதர் அல்லவா!!!



0 comments: