Wednesday, February 24, 2010

கடல்கள் மற்றும் ஆறுகளைப் பற்றித் திருகுர்ஆன்

தற்போதைய நவீன அறிவியலில் கடலாய்வும் ஒன்று. கடலில் ஒரு இடத்தில் இரு வேறு கடல்கள் சங்கமிக்கின்றன, அவ்வாறு அவைகள் சங்கமித்தாலும் இரண்டு கடல்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் உள்ளது என்றும், மேலும் அவற்றின் வெப்பம், உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவற்றிலும் தங்களது தனித்தன்மைகளுடனேயே உள்ளன என்றும், சமீபத்திய தமது ஆய்வில்
கடலாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். Principles of Oceangraphy, Davis, p.92-93.

Figure 13: The Mediterranean sea water as it enters the Atlantic
over the Gibraltar sill with its own warm, saline, and less dense
characteristics, because of the barrier that distinguishes
between them. Temperatures are in degrees Celsius (C°).
(Marine Geology, Kuenen, p. 43, with a slight enhancement.)
(Click on the image to enlarge it.)

உதாரணமாக, மத்திய தரைக்கடலை அட்லாண்டிக் கடலுடன் ஒப்பிடுவோமானால், மத்தியதரைக்கடல் வெதுவெதுப்பான, உப்புத்தன்மையான மற்றும் குறைந்த அடர்த்தியும் கொண்டது. ஜிப்ரால்டர் ஜலசந்தியில் மத்திய தரைக்கடல் அட்லாண்டிக் கடலுடன் சங்கமிக்கும் போது, 1000 அடி ஆழத்தில் பல நூறு மைல்கள் தூரம் அட்லாண்டிக் கடலுக்குள் பயணம் செய்கின்றது. அவ்வாறு பயணம் செய்யும் மத்திய தரைக்கடல், வெப்பம், உப்புத்தன்மை மற்றும் அடர்த்தி ஆகியவற்றில் எந்த மாற்றமும் அடையாமலேயே தன் பயணத்தை அட்லாண்டிக் கடலினுள் தொடர்கின்றது. ஆழத்திலும் மத்திய தரைக்கடல் தனது தன்மையில் மாறாத நிலையையே பெற்றிருக்கிறது. (படம் 13) Principles of Oceangraphy, Davis, p.93.

இதனிடையே இரு கடல்களிலும் உண்டாகும் பேரலைகள், சக்திவாய்ந்த நீரோட்டங்கள் மற்றும் சிற்றலைகள் போன்றவற்றின் தாக்கத்தால் எந்த பாதிப்பையும் இரு கடல்களிலும் உண்டாக்குவதில்லை.
Principles of Oceangraphy, Davis, p.92-93.

இதையே திருமறையில்இறைவன், கடல்களுக்கிடையேஅவை சந்திக்கும்இடத்தில் ஒரு தடுப்புச்சுவர் உண்டு, ஆனாலும்அவை ஒன்றையொன்றுமீற மாட்டா! என்றுகூறுகின்றான். அதாவது,

இரு கடல்களை - அவைஇரண்டும்ஒன்றோடொன்று சந்திக்கஅவனே விட்டு விட்டான். (ஆயினும்) அவைஇரண்டுக்கிடையில் ஒருதடுப்புண்டு: (அத்தடுப்பானதை) அவ்விரண்டும் மீறிவிடாது. (அல் குர்ஆன்: 55:19-20).

ஆனால், மேலே நாம்பார்த்த இறைவசனத்தில்இறைவன் கடலும் கடலும்சந்திக்கும் இடத்தில்தடுப்புச் சுவர் உண்டு எனக்கூறிய இறைவன், நல்லதண்ணீர் மற்றும் கடல்நீரைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவைஇரண்டுக்கும் இடையேஉள்ள தடையில் ஒருஷமீற முடியாத தடுப்பை| அமைத்துள்ளோம் எனக்குறிப்பிடுகின்றான். இதையே இறைவன் தனதுதிருமறைக் குர்ஆனில்,

இன்னும் அவன்எத்தகையவனெ;னறால், இரு கடல்களையும் அவன்ஒன்றுசேர்த்திருக்கின்றான்: (அதில் ஒன்றான) இதுமிக்க மதுரமானது, தாகம்தீர்க்கக் கூடியது: (அதில்மற்றொன்றான) இதுஉப்புக்கரிப்பானது, கசப்பானது: இவ்விரண்டிற்குமிடையில்அவை ஒன்றொடொன்றுகலந்திடாமல்) திரையையும், மீறமுடியாத ஒருதடையையும் அவன்ஆக்கியிருக்கின்றான். (அல் குர்ஆன்.25:53).

திருமறையானது, கடலும்கடலும் சங்கமிக்கும்இடத்தில்அவையிரண்டுக்கும்இடையே ஒரு தடையைஏற்படுத்தியுள்ளோம் எனக்கூறும் அதே வேளையில், கடலும் நதியும் (நல்லதண்ணீர்) கலக்கும் போதுஅவையிரண்டுக்கும்இடையே திரையையும்அதையடுத்து ஒரு மீறமுடியாத தடையையும்ஏறபடுத்தியுள்ளோம் எனஏன் கூற வேண்டும்? எனஒருவர் கேள்வி எழுப்பமுடியும். இதற்கானபதிலை நவீனஅறிவியலாளர்களிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள் கூறுவதைப்பார்ப்போம்.


Figure 14: Longitudinal section showing salinity (parts per thousand ‰) in an estuary. We can see here the partition (zone of separation) between the fresh and the salt water. (Introductory Oceanography, Thurman, p. 301, with a slight enhancement.) (Click on the image to enlarge it.)


கடலும் நதியும் சங்கமிக்கும் கழிமுகங்களில் தங்களது ஆய்வுகளை மேற்கொண்ட அறிவியலாளர்கள், கடலும் கடலும் சங்கமிப்பதற்கும், கடலும் நதியும் சங்கமிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியலானார்கள். அதாவது இங்கே தண்ணீரின் மாறுபட்ட அடர்த்தியின் விகிதம் ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்டு, ஒரு விகிதத்தல் இருந்து இன்னொரு விகிதத்திற்கு மாறக்கூடிய நிலையில் அவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட அதனதன் விகிதத்தைப் பிரித்துக் காட்டக் கூடிய பகுதி தான், நல்ல தண்ணீரையும், கடல் நீரையும் பிரித்துக் காட்டும் திரையாகச் செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.ழூ இவ்விரண்டு கடல் நீர் மற்றும் நல்ல தண்ணீர் ஆகியவற்றின் உப்புத் தன்மையை விட, இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் நீரின் உப்புத்தன்மையின் அளவில் மாறுபாடும் காணப்படுவதால்,ழூழூ திருமறையில் இறைவன் கூறியுள்ளபடி, கடல் நீருக்கும் நல்ல தண்ணீருக்குமிடையே திரையையும், மீற முடியாத தடையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம், என்ற திருமறைக் குர்ஆனின் வசனம் அறிவியலாளர்களால் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. (படம் 14). Oceabography, Gross, p.242. Also see Introductory Oceanography, Thurman, pp.300-301. ** - Oceanography, Gross, p.244, and Introductory Oceanography, Thurman, pp.300-301.

மேற்கண்ட தகவல்கள் யாவும் இன்றைய நவீன அறிவியல் கருவிகளின் துணை கொண்டு, நீரின் வெப்பம், உப்புத் தன்மை, அடர்த்தி, மற்றும் ஆக்ஸிஜன் கரையும் அளவு ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவற்றின் தகவல்களின் துணை கொண்டு தான் அறிவியல் அறிஞர்கள் இந்த பேருண்மைகளைக் கண்டறிந்துள்ளார்கள். மேலும் இரண்டு கடல்களையும் பிரிக்கும் தடுப்பை மனிதக் கண்கள் கொண்டு காண முடியாது, கடலின் மேற்பரப்பு யாவும் ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும். இதே போல கழிமுகத் துறைகளில் நின்று கவனித்தால் கூட நல்ல தண்ணீர் ஒரு பிரிவாகவோ, கடல் நீர் ஒரு பிரிவாகவோ, இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி
(Pycnocline zone) ஒரு பிரிவாகவோ நமக்குத் தோற்றமளிக்காமல் ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும்.

கடல் பயணமே செய்தறியாத எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வளவு துள்ளிதமாக கடலின் தன்மைகள் பற்றி எவ்வாறு கூற முடிந்தது!!? நம்மை வியக்க வைக்கும் திருமறையை அதன் அற்புதங்களை நமது சிந்தனைக்கு வழங்கியவன் இந்த பேரண்டத்தைப் படைத்து பரிபக்குவப்படுத்தி பாதுகாத்து வரும் ஏக இறையோனாகிய அல்லாஹ் அல்லவா!!!!!

0 comments: