நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Sunday, February 28, 2010

காதலர் தினம்பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்!

(காதலர்கள் கொண்டாடும் காம இச்சை தினம்)

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்

(சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளிலிருந்தும் அல்லாஹுவிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்)

ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான் அவன் நம் ஆதி பெற்றோரான ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) ஆகியோரை அல்லாஹ்விடமிருந்து பிரித்து சுவனத்திலிருந்து வெளியேற்றி சுகம் கண்டவன் இப்படிப்பட்ட ஷைத்தான்தான் மீண்டும் காதல் என்னும் காம மாயவலையில் நம் இளம்பிள்ளைகளை சிக்கவைத்து அவர்களின பெற்றோர்களை விட்டும் பிரித்து சுகம் காண துடித்துக் கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து நாம்மை பாதுகாப்பதற்காகவே அல்லாஹ் நமக்கு தனது புறத்திலிருந்து நபிமார்களை அனுப்பி அவர்களுக்கு வேதங்களை கொடுத்து மக்களை விழிப்புணர்வு பெறச் செய்துள்ளான் ஆனால் நாம் இவற்றை சிந்திக்காமல் குருடர்களாக ஷைத்தானின் மாயவலையில் சிக்கிக்கொள்கிறோம்

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்;. அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்;. மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. (அல்குர்ஆன் 4:120)

ஷைத்தானுக்கு வாசல் திறந்துவிடும் பெற்றோர்!

இங்கு நல்ல பெற்றோரை பற்றி குறிப்பிடவில்லை நல்ல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கிறார்கள் ஆனால் சில பெற்றோர் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கிறோம் என்ற பெயரில் சில அசிங்கங்களை செய்கின்றனர்.

 • தந்தை குடிகாரனாக இருந்தால் அவனுடைய மகன் தந்தையே இந்த கீழ்தனமான காரியத்தை செய்கிறார் நாம் செய்தால் என்ன? என்று சிந்திக்கிறான்!

 • தாய் சினிமா திரையறங்குகள் செல்பவளாக இருக்கிறாள் அல்லது தொலைக்காட்சிகளில் ஆபாச நிகழ்ச்சிகளான குரங்காட-குயிலாட டேன்ஸ், கூத்துக்கள், நாடகங்கள் ஆகியன ரசிப்பவளாக இருந்தால் அவளுடைய மகளோ பெற்ற தாயின் நிலையே இவ்வாறு உள்ளது நாம் செய்தால் என்ன என்று நினைக்கிறாள்.

சிந்தித்துப்பாருங்கள் பெற்றோர் ஒழுங்காக குர்ஆன்-ஹதீஸ்களை படித்துக் கொண்டும் அதை தம் பிள்ளைகளுக்கு போதித்துக் கொண்டும் தொழுகையை முறையாக பேணிக் கொண்டும், நாகரீகமான முறையில் வாழ்ந்துக்கொண்டும் இருந்தால் இந்த அவலநிலை தொடருமா?

ஷைத்தானை சுதந்திரமாக அறையில் தங்கவைக்கும் பெற்றோர்

சில வீடுகளில் குழந்தைகளுக்கு தனி அறையும், முதியவர்களுக்கு தனி அறைகளும், பெற்றோருக்கு தனி அறையும் இருக்கும் இவ்வாறு தனித்தனியாக அறைகள் இருப்பது தவறல்ல ஆனால் அந்த ஒவ்வொரு அறைகளிலும் ஒவ்வொரு தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து அதில் கேபிள் இணைப்புகள் கொடுத்து மகிழ்கின்றனர் ஏன் என்று கேட்டால் என் பிள்ளைகள் திரையறங்குச் செல்வதில்லை எனவேதான் நாம் அவர்கள் உள்ளத்தை நோகடிக்காமல் இருப்பதற்காக தொலைக்காட்சியை கொடுக்கிறோம் என்கின்றனர். அவர்களை நோக்கி தனித்தனி தொலைக்காட்சிகளை கொடுப்பதால் பணம் விரையமாகிறதே என்று கூறினால் அவர்களோ நாம் இலவச கலைஞர் டி.வி. கொடுக்கிறோம் இதில் என்ன வீண் விரையம் இருக்கிறது என்று பதில் கூறுகின்றனர்.

இரவில் பெற்றோர் தங்கள் அறைகளுக்குச் சென்று தாழிட்டுக் கொள்கிறார்கள் மற்றொருபுறம் பிள்ளைகளும் தங்கள் தனி அறைக்குச் சென்று தாழிட்டுக் கொள்கிறார்கள். பெற்றோர் தம் பிள்ளைகள் உறங்குகிறார்கள் என்றுதான் எண்ணுகிறார்கள் ஆனால் அதே வேளையில் ஷைத்தானோ பிள்ளைகளின் உள்ளத்தில் தொலைக்காட்சி ஆபாசத்தை பார்க்க தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான். இதனால் இளம்வயதில் ஆசைகளை தணிக்க தன் துணையை தேடி இளம்பிள்ளைகள் அலைகின்றனர்.

ஷைத்தானின் செயல்களை சுதந்திரமாக ரசிக்கும் வயோதிகர்கள்!

ஒவ்வொரு வீட்டிலும் சில வயதுமுதிர்ந்த தாத்தா, பாட்டிக்கள் இருக்கின்றர் அவர்களில் தொழுகையைப் பேணும் நல்லவர்களும் உள்ளனர் ஆனால் பெறும்பாலான வயதுமுதிர்ந்தவர்கள் ஷைத்தானின் செயல்களை தொலைக்காட்சிகளில் காண் கிறார்கள். அதிலும் குறிப்பாக ஆண் கிழடுகளுக்கு ஆங்கிலச் சேனல்களை பார்ப்பதில் அலாதி பிரியம். இது தவறு என்று கூறினால் நம் காலத்தில் இந்த மாயபெட்டி இல்லை என்ன செய்வது என்று பதில்கூறுவார்கள், தட்டிக்கேட்டால் எங்களை திட்டுகிறார்கள் என்று மற்றவர்களிடம் அழுதுகாட்டி பரிதாப கரமான சூழலை ஏற்படுத்திக் கொள்வார்கள். உங்களின் செயல்களால் குழந்தைகள் கெட்டுப்போக வாய்ப்பு உள்ளதே என்று விளக்கிக்கூறினால் நம் காலத்தில் அதையெல்லாம் விடு! இந்த காலத்து குழந்தைகளாவது சுநந்திரமாக இருக்கட்டுமே! வெளியே சென்று சீரழிவதைவிட வீட்டில் இருந்து பார்ப்பதால் தவறுகிடையாதே என்று இளைஞர்களுக்கு வக்காலத்து வாங்குவார்கள்! செல்போன் கூட வாங்கித்தருவார்கள்!

கேடுகெட்ட உடன்பிறப்புகள்

வீட்டில் ஒரு சகோதரன் இருப்பான் அவன் தனது தங்கையை வெளியே செல்லக்கூடாது என்று மிரட்டி வருவான் ஆனால் இவன் முச்சந்தியில் நின்று இளம்பெண்களுடன் சிரித்து கொழிஞ்சிப் பேசுவான் இதை தங்கை அறிந்துக் கொண்டால் உடனே தன் தவறு வெளிப்பட்டுவிடுமோ என்று பயந்து அன்றுமுதல் தங்கையை அதட்டமாட்டான். (இந்த உடன்பிறப்பு யோக்கியவான்??) உடன்பிறந்த சகோதரின் நிலையை பயன்படுத்திக் கொண்டு தங்கையும் ஆண் துணையைத் தேடி தவறான வழிக்கு சென்று விடுகிறாள் அண்ணன் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறான்!

ஒரு வீட்டில் இரு சகோதரிகள் இருந்து அவர்களில் ஒருத்தி காதலனுடன் உள்ளாசமாக சுற்றித்திரிவதை இளைய சகோதரி கண்டுவிட்டால் இந்த செயலை பெற்றோரிடம் கூறாமல் மூத்த சகோதரியை தனியாக அழைத்து மிரட்ட ஆரம்பிக்கிறால் பிறகு இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி தனது காதலை முத்த சகோதரியிடம் வெளிப்படுத்தி தன் மீதும் அனுதாபத்தை தேடிக்கொள்கிறாள்! இப்படிப்பட்ட சகோதரிகள் சுத்தமான வர்களா? இறுதியில் ஏமாற்றமடைவது பெற்றோர் தானே!

படித்து பட்டம் வாங்கி பறக்க விடும் குடும்ப கவுரவம்!

நமது குழந்தைகள் கல்லூரியில் படிக்கிறார்கள் என்று பெற்றோர் பெருமையாக பேசிக்கொள்வார்கள் ஆனால் அவர்களோ அந்த கல்லூரியில் பயிலும் சக தோழர், தோழியர்களுடன் காதல் கத்தரிக்காய் என்று உள்ளாசமாக பேசி உலகே எதிர்த்து வந்தாலும் நான் உனக்குத் துணை நிற்கிறேன் நீ கலங்காதே அன்பே! என்று சினிமா டையலாக் பேசிக் கொள்வார்கள். இதிலும் ஆசிரியர்களோ நடத்துவது ரோமியோ ஜுலியட் காதல் பாடம் தான்! படிப்பதோ பட்டம் பறக்க விடுவதோ குடும்ப கவுரவத்தை!

என் மகன் மற்றும் மகள் கெட்டிக்கார்கள்!

நமது குழந்தைகள் பிறரை விட கெட்டிக்காரர்கள் என்று பெற்றோர் பெருமையாக ஊர் முழுவதும் தண்டோரா அடிப்பார்கள் ஆனால் ஒருசில இளம் மகனோ, மகளோ என்ன செய்கிறார்கள் தெரியுமா? தந்தை கூறுவது உண்மைதான் என்று விளங்கிக் கொண்டு மேஜர் சர்டிபிகட் வாங்கிக்கொண்டு காவல்நிலையத்தில் ஜோடியாக நின்றுவிடுகிறார்கள். இன்று ஒருசில இளம் சந்ததி யினரின் கெட்டிக்காரத்தனம் காவல்நிலையத்திலும், மேஜர் சர்டிபிகட் வாங்கும் திறமையின் மூலமும் தானே வெளிப்படுகிறது!

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கூறிக்கொண்டே இளம் பெண்களை கல்லூரியில் சேர்த்து படிக்க வையுங்கள் என்று தமிழ் சமூகத்தார் வியாக்கியானங்களை அளித்தனர் அதன் பிரதிபலனாக ஒரு சில துணிச்சலுடைய பெண்கள் தனியாக வீட்டை விட்டு கல்லூரிக்குச் சென்று பட்டம் படித்து கற்பை இழந்து நிற்கிறார்கள்.

ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் இந்திய மகளிர் ஓடுகிறார்களோ இல்லையோ தினந்தோறும் இந்திய மகளிர் பம்பாய் பட ஸ்டைலில் கயவனுடன் காம இச்சை கொண்டு ஓடுவதில்தான் குறியாக இருக்கிறார்கள்! காவல்துறையும் இவர்களுக்கு கோல்டு மெடல் கொடுப்பது போன்று காதல்திருமணம் செய்து வைக்கிறார்கள்!

இன்றெல்லாம் சச்சின் சேஞ்சுரி போடுகிறானோ இல்லையோ ஒவ்வொரு காவல் நிலையங்களும் 100-வது காதல் ஜோடி தஞ்சம் என சேஞ்சுரி போடுகிறார்கள். இன்று காவல்நிலைய காதல் திருமணங்கள் வெகு விமரிசையாக நியுஸ் சேனல்களிலும் போஸ்டர்களிலும், நாளிதழ்களிலும் வெளிவரும் அளவுக்கு நிலைமை சீரழிந்துவிட்டது. இது வேதனையின் உச்ச கட்டம்!

இளம் மங்கையர்களே! கீழ்கண்டவற்றை இளைஞர்களே சிந்தியுங்கள்!

 • உங்களில் சிலர் சிலர் காதல் வலையில் சிக்கி பெற்றோரை துன்புறுத்துகிறீர்கள்! சமுதாயத்தை தலை குனிய வைக்கிறீர்கள்! இறுதியாக காதலனிடம் ஏமாந்து கற்பை இழக்கிறீர்கள்!

 • உடல் சுகத்தை அனுபவித்தவுடன் ச்சீ! இதற்காகத்தான் ஓடிப்போனாமா? என்று சமுதாயத்தின் முன் சிறுமைப் பட்டு நிற்கிறீர்களே இது நியாயமா?

 • கைப்பிடித்தவன் காணாமல் போனால் கண்கலங்கி பிழைக்க வழி இல்லாமல் நிற்கிறீர்களே இந்த நிலை தேவையா?

 • பெற்றோரின் அறிவுரையுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்திருந்தால் கண்ணியமான வாழ்கைத் துணை கிடைத் திருக்குமே? சாகும் வரை நிம்மதியாக கற்புள்ள பெண் என்று போற்றப்படுவீர்களே இந்த இழிவு உங்களுக்குத் தேவையா?

 • உங்களை காதல் வலையில் சிக்கவைத்து இழுத்துக் கொண்டு ஓடினானே அந்த கயவன் நாளை வேறு பெண்ணுடன் இந்த மாய வலையை விரித்து அவளை இழுத்துக்கொண்டு ஓடி உங்களை நிர்வாணப்படுத்துவானே இந்த நிலை உங்களுக்குத் தேவையா?

இன்றைய இளைஞர்களே, இளைஞிகளே எதை நீங்கள் காதல், காதல் என்று கூறுகிறீர்களோ அது உண்மையில் காதல் இல்லை அது உடல் சுகத்தை தணிக்கும் காம இச்சையே தவிர வேறு இல்லை! இதுதான் இன்றைய காதலுக்கான இலக்கணம்!


அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ – (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். (அல்குர்ஆன் 2:257)

முடிவுரை

காந்தியடிகள், மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஜவஹர்லால் நேரு, அண்ணா, காமராஜர் போன்ற தேசத்தலைவர்களெல்லாம் கஷ்டப்பட்டு தேடித்தந்த சுதந்திரத்தை இந்த சைத்தானியத் காதல் அழித்து வருகிறது இன்று நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டது ஆனால் சினிமாவிற்கும், ஆபாச தொலைக்காட்சி ஊடகங்களுக்கும், செல்போன்களுக்கும் இளைய தலைமுறையினரை அடிமையாக்கி சைத்தானிய காதல் வளையில் வளையில் மீன்களைப் போன்று சிக்கி அடிமைகளாக திக்கற்றர்களாக அலைய வைத்துள்ளது!

குர்ஆன் ஹதீஸ்களை அறிந்துக்கொண்ட எந்த ஆணோ பெண்ணோ இது போன்ற பாவத்தில் ஈடுபடுகிறார்களா? சிந்தித்துப் பாருங்கள் எங்கெல்லாம் திருமறையை உணரப்பட வில்லையோ! எங்கெல்லாம் நபிகளாரின் வாழ்க்கையை அறியப்பட வில்லையோ அங்கெல்லாம் இந்த இழிவுதான் நிகழந்துக்கொண்டு உள்ளது ஆம் இஸ்லாத்தின் தூய்மையை புறக்கணிப்பவர்களிடம் தான் இந்த ஷைத்தான் தலைவிரித்து ஆடுகிறான்!

அனைத்து சமுதாய மக்களும் ஓர் இனிய அறிவுரை

காதலர் தினம் எனனும் காம இச்சையர்கள் தினத்தில் உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலணுக்கு நீங்கள் செய்ய வேண்டியவை

 1. அன்றையதினம் உங்கள் மகளிர்களை வீட்டை விட்டு வெளியே செல்ல அணுமதிக்காதீர்கள்! அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் சரியே!

 1. அவர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்! ஆபாச லவ் எஸ்.எம்.எஸ்கள் நிறைய வரலாம்!

 1. அன்றைய தினம் ஆண்களில் இளைஞர்களுக்கு அதிகமான பணம் கொடுக்காதீர்கள்! குடித்து சீர்கெட வாய்ப்பு உள்ளது!

 1. அன்றைய தினம் இளைஞர்கள் சுற்றுலா செல்ல அணுமதிக்காதீர்கள்! பெண்களுடன் சுற்ற வழி பிறக்கலாம்!

 1. அன்றைய தினம் உங்கள் அவர்களுக்கு நீங்களே பாதுகாவலாக இருக்கவும்! காவல்துறையை நம்பி மோசம் போகாதீர்கள்!

காதலர் தினம் என்னும் காம இச்சையர்கள் தினத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகளை நோட்டமிடவும், அவர்கள் தவறான வழியில் சென்றால் இஸ்லாம் கூறும் அடிப்படையில் கண்டிக்கவும்! குர்ஆன் ஹதீஸ்களை நீங்களும் கற்று உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுத்தரவும்! PEACE TV மற்றும் இஸ்லாமிய தாவா நிகழ்ச்சிகளை அதிகமதிகம் பார்க்கவும்!

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்).நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:1)

சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து நம் சந்ததியினரை காப்பாற்றவும், காமக் காதலர் தினத்தை எதிர்த்து ஜாதி, மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையாக ஓரணியில் நின்று போராடமாட்டார்களா?

இந்த நாள் என்று வரும்?

இத்தகுல்லாஹ் (அல்லாஹ்வுக்கு பயந்துக் கொள்ளுங்கள்)

நபி வழியை பின்பற்றுவதின் அவசியம்

وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ

(முஹம்மத்) அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை (53:3-4)

இஸ்லாமிய மார்க்கத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரம் ‘ஸுன்னா’ஆகும். இஸ்லாமிய உலகிலும், தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் இஸ்லாமிய எழுச்சியும், மார்க்கம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டுவருகின்ற இக்காலகட்டத்தில், தவ்ஹீத் பிரச்சாரத்தின் அடிப்படைகளில் ஒன்றான, ‘ஸுன்னா’ வின்பால் மக்களை அழைக்க வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது.

நபிகளாரின் ‘அல்ஹதீஸ்’ எனப்படும் ‘ஸுன்னா’ வியத்தில் நாம் அதீக கவனம் செலுத்தக் காரணம் என்னவெனில், இஸ்லாமிய மார்க்கத்தில்‘ஸுன்னா’வுக்கு வழங்கப்பட்டுள்ள அளப்பரிய மகத்துவமும், அந்தஸ்த்து மேயாகும்.

‘ஸுன்னா’ என்பது திருமறை குர்ஆனுக்கான விளக்கவுரையாகும். ஏனெனில், திருமறை வசனங்களை விளக்கும் விதமாகவும், அதன் அந்தரங்கங்களை வெளிக் கொணர்வதாகவும், வரையறைகளை தெளிவு படுத்துவதாகவும் அல்குர்ஆனுக்கு செயல் வடிவம் கொடுக்கின்றதாகவும்‘ஸுன்னா’ அமைந்துள்ளது.

‘ஸுன்னா’வினை விடுத்து அல்குர்ஆனோடு மாத்திரம் சுருங்கிக் கொள்ள முடியாத இஸ்லாமிய மார்க்கத்தில் தூதரைப் பின்பற்றுவது பற்றி திருமறை என்ன கூறுகின்றது என்பதனையும், இறைத்தூதரின் பணிகள் தொடர்பாக ஆராய்வதன் மூலம் ஸுன்னாவின் முக்கியத் துவத்தினை உணர்ந்து கொள்ளலாம்.

01. திருக்குர்ஆனைப் போன்று ‘ஸுன்னா’வும் அல்லாஹ்வின் வஹியாகும்.

‘அவர் மனோ இச்சைப்படி பேசுவதில்லை. அவர் பேசுவது, அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை’ (53:3,4).

02. திருமறை குர்ஆனை மக்களுக்கு விளக்கும் பணி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீதே பொறுப்பாக்கப்பட்டதாகும்.

‘மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப்போதனையை உமக்கு அருளினோம்’ (16:44).

‘எந்த தூதரையும், அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கி கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகின்றான். அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்’ (14:4).

03. இறைவனுக்கு வழிப்பட்டவராக வேண்டுமென்றால் தூதருக்கும் வழிப்பட்டேயாக வேண்டும்.

‘இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்கு கட்டுப் பட்டவராவார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை’ (4:80).

04. பிறப்பு முதல் இறப்பு வரை எமது தனிப்பட்ட, சமூக, அரசியல் விவகாரங்கள், வணக்கவழிபாடுகள் அனைத்திலும் சர்ச்சை, தெளிவின்மை ஏற்படும் போது அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவினை நோக்கியே பயணிக்க வேண்டும்.

இறை விசுவாசத்தின் அடிப்படையும் அதுவேதான்.
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும்(முஹம்மதுக்கும்), உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு வியத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்’ (4:59).

05. தூதரின் ஏவல், விலக்கல்களை கவனத்திற் கொள்ளாது விட்டால் அல்லாஹ்வின் கடுமையான தண்டனைக்கு உட்பட நேரிடும்.

‘இத்தூதர் உங்களுக்கு எதைக்கொடுத்தாரோ அதை வாங்கிக்கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களை தடுத்தாரோ(அதிலிருந்து) விலகிக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாக தண்டிப்பவன்’ (59:07).

06. தூதருக்கு மாறு செய்தால் குழப்பம் ஏற்படுவதுடன், கடினமான வேதனைக்கும் இலக்காகவேண்டி வரும்.

‘உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்’ (24:63).

07. அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் தீர்ப்பை உளமாற ஏற்கவேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு வியத்தில் தீர்ப்புச் செய்தால் மனோ இச்சை, பெரியார்கள், மத்ஹபுகள் போன்றவற்றிற்கு அடிமையாகாது. அப்படியே கட்டுப்படுவதுதான் நம்பிக்கை கொண்ட ஆண்களினதும், பெண்களினதும் கடமையாகும்.

‘அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்’ (33:36).

நாம் மேற்கண்ட வசனங்களிலிருந்து ‘ஸுன்னா’வின் முக்கியத்துவத்தினையும் இஸ்லாமிய மார்க்கத்தில் அது பெற்றிருக்கின்ற மிக உயர்ந்த அந்தஸ்த்தினையும் அறிந்து கொள்ளும் அதே வேளை, சமுதாயத்தில் ‘ஸுன்னா’வின் யதார்த்தமும், அது பற்றிய விழிப்புணர்வும் இல்லாத போதுதான் தனிமனிதர்களுக்குப் பின்னால் சென்று ‘பித்அத்’களை உயிர்ப்பித்து தமது அமல்களின் பரக்கத்துக்களை இழப்பதனைப் பார்க்கின்றோம்.

அல்லாஹ்வின் தூதருடைய ‘ஸுன்னா’வின் முழுக் கவணத்தையும் செலுத்தும் போதுதான் இச்சமூகம் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக்கொள்ளும்.

நன்றி தாருல் அதர்

Thursday, February 25, 2010

peaceconference2010

சென்னையில் peaceconference2010 நடந்த போது மாற்று மதத்தினர் இஸ்லாத்தை ஏற்று கொண்ட காட்சிகள் சில

Brother reverting to islam by Dr Zakir.MPGHindu Brother reverts back to ISLAM by Dr Zakir Naik (2010)


Hindu Sister Accepts ISLAM by Dr Zakir Naik - 2010மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்

காலம் காலமாக, மனிதன் சூரியன், சந்திரன், விலங்குகளின் சிலைகள், மனிதர்களின் சிலைகள் ஆகியவைகளை வணங்குவதன் மூலம் நிம்மதி அடைவதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் அல்லாஹ் தன்னுடைய மிகப் பெறும் கிருபையால் அனைத்து சமூகத்திற்கும் தூதர்களை அனுப்பி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் மூலம் நிம்மதி அடைய முடியும் என்று அழைக்கச் செய்தான்.

உண்மையான அமைதி மற்றும் நிம்மதி என்பது, நம்மையும், வானம் பூமியையும் மற்றும் இதற்கிடையில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவனை எப்போதும் நினைவு கூறுவதில் தான் உள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: -

“ (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள் மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு (எல்லா) நற்பாக்கியங்களும் உண்டு இன்னும் அழகிய இருப்பிடமும் உண்டு.”(அல்-குர்ஆன் 13:28-29)

ஆகையால் ஒருவர் அல்லாஹ்வுடைய மற்றும் அவனுடைய தூதருடைய வழிமுறைகளை பின்பற்றாமல் தனக்கு தானே நிம்மதி அடைய முயற்சி செய்தால், அது அவன் பார்க்கின்ற, உணர்கின்ற சிலை வணக்கங்களின் பக்கம் அவனை இட்டுச் செல்லும். இதன் மூலம் அவன், அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற வெறுக்கத் தக்க குற்றத்தை செய்தவன் ஆகின்றான். அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் என்பது இஸ்லாத்தில் மிகப் பெறும் பாவமாகும் அல்லாஹ்வுக்கு இணை வைத்த நிலையில் மரணித்த ஒருவனை இறைவன் மன்னிக்க மாட்டான் மேலும் அவர்களுக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கியும் விடுகிறான். முன்னால் வாழ்ந்த சமுதாயங்கள் அழிக்கப்பட்டதெல்லாம், அவர்களுக்கு தெளிவான அல்லாஹ்வின் போதனைகள் அவனுடைய தூதரின் மூலம் வந்த பின்பும், அதனை பின்பற்றாமல் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரும் பாவமான அவனுக்கு இணை வைத்தது தான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான் இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான் யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” (அல்-குர்ஆன் 4:48)

‘நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்’ என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: ‘இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்’ என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவி புரிபவர் எவருமில்லை” (அல்-குர்ஆன் 5:72)

மக்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மனித மற்றும் மிருகங்களின் சிலைகள், கப்ருகளில் உள்ளவர்களை அழைப்பது ஆகியவைகள் அனைத்தையும் செய்வதற்கு ஒரே காரணம் அவர்களின் மூதாதையர்கள் அவ்வாறு செய்த காரணத்தினால் தான். அவர்கள், இந்த சிலைகள் தம்மை படைக்கவும் இல்லை, தமக்கு எதையும் கொடுக்கவும் இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தனர். மேலும் இந்த உருவங்கள் தமக்கு வாழ்க்கையையோ சொத்து சுகங்களையோ, குழந்தைகளையோ, இறப்பையோ கொண்டு வருவதில்லை என்பதையும் அறிந்திருந்தனர். மனித இனம் முழுவதும் ஏக மனதாக, “நாம் அனைவரும் இந்த உலகத்தைப் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனின் படைப்பிகள் தான்” என்பதை நம்பியிருந்தனர். இருந்த போதிலும் இவர்கள், தங்களுக்குத் தாங்களே கடவுளாக்கி கொண்டவர்களையும் மகான்களாக்கி கொண்டவர்களையும் சிரம் பணிந்து மன்றாடி, கையேந்தி வழிப்பட்டு வருகின்றனர். தங்கள் மூதாதையர் செய்ததால் தவிர வேறெந்த காரணத்தையும் அவர்களால் சொல்ல முடியவில்லை.

இஸ்லாம் என்பது குர்ஆனின் போதனைகள் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமே அல்லாமல், மூதாதையர்களின் வழிமுறைகளை பின்பற்றக்கூடிய மார்க்கமல்ல. இதை அல்லாஹ்வும் அவனுடைய திருமறையில் வலியுறுதிக் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: -

“மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால் ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 2:170-171)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -

“அல்லது, ‘இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே! நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் – அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?’ என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)

அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்” (அல்-குர்ஆன் 7:173-174)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -

“அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் ‘நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?’ என்று கேட்ட போது: அவர்கள், ‘எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள். (அதற்கு) அவர், ‘நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் – பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்’ என்று கூறினார்” (அல்-குர்ஆன் 21:52-54)

இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!

அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: ‘நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?’ என்று கேட்டபோது,

அவர்கள்: ‘நாங்கள் சிலைகளை வணங்குகிறோம் நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்’ என்று கூறினார்கள்.

(அதற்கு இப்றாஹீம்) கூறினார்: ‘நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?

‘அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)

(அப்போது அவர்கள்) ‘இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்’ என்று கூறினார்கள்.

அவ்வாறாயின், ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?’ என்று கூறினார்.

‘நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).’

‘நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே – அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).’

‘அவனே என்னைப் படைத்தான் பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.

‘அவனே எனக்கு உணவளிக்கின்றான் அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.’

‘நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

‘மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான் பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.’

‘நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். (அல்-குர்ஆன் 26:69-82)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -

‘அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்’ என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ‘(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்’ என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)” (அல்-குர்ஆன் 31:21)

“நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: ‘இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்’ என்று கூறுகிறார்கள் இன்னும் அவர்கள் ‘இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை’ என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்: திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, ‘இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை’ என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்” (அல்-குர்ஆன் 34:43)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -

“அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: ‘நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.’

இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: ‘நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம் நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்’ என்று கூறாதிருக்கவில்லை.

(அப்பொழுது அத்தூதர்,) ‘உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ‘நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்’ என்று சொல்கிறார்கள்.

ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம் எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக! (அல்-குர்ஆன் 43:22-25)

தற்போது உள்ள உலகத்தில், சாதாரண உலக விஷயங்களை எடுத்துக் கொண்டால், ‘என்னுடைய தந்தை படிக்காதவராக இருந்தார் ஆகையால் அவரைப் போல நானும் படிக்காதவனாக இருக்கப் போகிறேன்’ என்று யாரும் சொல்வதில்லை. மாறாக ஒவ்வொருவரும் கடின உழைப்பு செய்து தன்னுடைய குடும்பத்தினரை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்கின்றனர்.

அதே போல தன்னுடைய தந்தை ஏழையாக இருந்தார், ஆகையால் நானும் ஏழையாக இருக்கப் போகிறேன் என்றும் யாரும் சொல்வதில்லை. மாறாக ஒவ்வொருவரும் அதிகமதிகம் பணம் சம்பாதிப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

ஏன் மார்க்க விஷயங்களில் மட்டும் முளையை மழுங்கடித்து குருட்டுத்தனமாக தன்னுடைய மூதாதையர்களை பின்பற்றுகிறேன் என்கிறார்கள்? குர்ஆனின் போதனைகளை மட்டும் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்? குர்ஆன் உண்மையின் பக்கம் வழிகாட்டிய போதும், ஏன் குருட்டுத்தனமாக தன்னுடைய மூதாதையரை பின்பற்றுகிறார்?

நன்றி
சுவனதென்றல்கிறிஸ்தவ கன்னியாஸ்திரி நான் ஏன் முஸ்லிம் ஆனேன்

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? – ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono

நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.


பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் “Stray Sheeps” என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை” தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக “காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் “காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

“இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

- ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

- முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

- வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

- ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

- தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? – இஸ்லாம்

இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் “இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை “அயர்லாந்தின் தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் “ஐரோப்பிய தீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் – இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், “இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே” கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, “நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள் கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் – Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்று கூறினார். முன்பு ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர், தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார்.

நான் கேட்டேன், ஏன்?

அதற்கு பாதியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.

அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன்.

ஏன்? – பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் “தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

நீ என்ன சொல்ல வருகிறாய்? – பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

நீ என்ன சொல்ல வருகியாய்? – பாதிரியார்

அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்” என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

நன்றி : சுவனதென்றல்


ஆழ்கடலும் அதன் உள் அலைகளும் பற்றித் திருகுர்ஆன்

இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்,

அல்லது (இவர்களுடைய செயல்களுக்கு உதாரணம்); ஆழ் கடலிலுள்ள இருள்களைப் போன்றதாகும்: அதனை ஒரு அலை மூடிக்கொள்கிறது: அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கு மேல் மேகம்; (இவ்வாறு) பல இருள்கள்: அதில் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (இருள்களால் சூழப்பட்ட நிலையில் பார்ப்பவன்) தன் கையை வெளியாக்கி (நீட்டி) னால் அதனை அவனால் பார்க்க முடியாது. இன்னும், எவருக்கு அல்லாஹ் ஒளியை ஆக்கவில்லையோ அவருக்கு (எங்கும்) ஒளி இல்லை. (அல் குர்ஆன் 24:40).;
மேற்கண்ட இந்த வசனத்தில் இறைவன், கடல்களிலும், பெருங்கடல்களிலும் அதன் ஆழத்தில் இருள்கள் சூழ்ந்து இருப்பதாகவும், அந்த ஆழத்தில் ஒருவன் தன் கைகளை நீட்டிப் பார்க்க முனைந்தால், அவனது கையை அவனே பார்க்க இயலாது, என்கின்றான்.

Figure 15: Between 3 and 30 percent of the sunlight is reflected at the sea surface. Then almost all of the seven colors of the light spectrum are absorbed one after another in the first 200 meters, except the blue light. (Oceans, Elder and Pernetta, p. 27.)
கடல்களிலும், பெருங்கடல்களிலும் அதன் 200 மீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆழத்தில் இருள்கள் காணப்படுகின்றன. அதற்கு மேற்பட்ட 1000 மீட்டர் ஆழத்தில் வெளிச்சம் என்பதை அறவே காண இயலாது.ழூ நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது நவீன சாதனங்களின் துணை இல்லாமல் 40 மீட்டருக்கும் கீழே மனிதனால் நீரில் மூழ்க முடியாது. மனிதனால் எந்தவித கருவிகளின் துணையுமின்றி நீரின் 200 மீட்டர் ஆழத்தில் உயிர் வாழவே இயலாது என்று நவீன அறிவியல் கூறுகின்றது. Oceans, elder and Pernetta, p.27. (படம் 15)


மேலும், ஆழ்கடலில் உள்ள ஆழமான இடங்களில் மேற்கண்ட நவீன சாதனங்களான நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றுமுள்ள கருவிகளின் துணையுடன் கூட ஒருவர் நீந்த இயலாது, என்பதை கடலாராய்ச்சியாளர்கள் தற்பொழுது கண்டறிந்துள்ளனர்.


இறைவனின் திருமறைக் குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் '... ஆழ்கடலிலுள்ள ... அதனை ஒரு அலை மூடிக்கொள்கிறது.அதற்கு மேல் மற்றோர் அலை: அதற்கு மேல் மேகம்... ' என்ற மேற்கண்ட வசனத்தில், ஆழ்கடலிலுள்ள கடல் நீரை ஒரு அலை மூடிக்கொள்கிறது, இந்த அலையை இன்னொரு அலை மூடிக்கொள்கிறது., இந்த இரண்டாவது கட்ட அலையின் மேற்பரப்பை மேகம் மூடிக்கொண்டுள்ளது. மேலும் இந்த இரண்டாவது கட்ட அலையின் மேற்பரப்பில் தான் நாம் காணும் மேகம் இருக்கின்றது எனும் போது, குர்ஆன் கூறும் முதற்கட்ட அலை என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுகின்றது.


Figure 16: Internal waves at interface between two layers of water of different densities. One is dense (the lower one), the other one is less dense (the upper one). (Oceanography, Gross, p. 204.)அதாவது, கடலின் ஆழத்திலும் உள் அலைகள் இருக்கின்றன என்றும், கடல் நீரின் ஆழத்தில் இருக்கக்கூடிய பல்வேறு நிலைகளிலுள்ள அடர்த்தி விகிதங்களின் மாறுபாடுகள், கடலின் ஆழத்தை பல்வேறு அடுக்குகளாகப் பிரிக்கின்றது என்றும், அந்த அடர்த்தியின் மாறுபாடுகள் சந்திக்கின்ற இரு வேறுபட்ட அடர்த்தியின் இடைப்பட்ட நிலைகளில் தான் உள் அலைகள் காணப்படுகின்றன என்ற உண்மையை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.ழூ(படம் 16) கடலின் மேற்பரப்பிலுள்ள நீரின் அடர்த்தியை விட கடலின் ஆழத்தில் உள்ள நீரில் அடர்த்தியின் விகிதம் அதிகம் காணப்படுவதால், கடலின் ஆழத்தில் ஏற்படும் உள்அலைகளை ஆழ்கடல் நீரானது மூடிக்கொள்கின்றது. Oceanography, Gross, p.205.
கடலின் மேற்பரப்பில் காணப்படும் அலைகள் போலவே, கடலின் ஆழத்தில் ஏற்படும் உள்அலைகளும் அகடுகளையும் முகடுகளையும் கொண்டதாகவும், மேலெழும்பி தாழ்வாகி அலை அலையாய் செல்லக்கூடிய தன்மைகளைக் கொண்டதாகவும் உள்ளன. ஆனால் கடலின் மேற்பரப்பில் நாம் காணும் அலைகளைப் போல கடலின் அடியில் ஏற்படும் உள்அலைகளை மனிதக் கண்களால் காண முடியாது. குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் வெப்பம் அல்லது உப்புத்தன்மையின் மாறுபாடுகளைக் கொண்டே நாம் கடலின் ஆழத்தில் காணப்படும் பல்வேறு அடுக்குகளைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். (oceanography, Gross, p.205)


மிகச் சமீபத்தில் தான் கண்டறியப்பட்ட இந்த அறிவியல் உண்மைகள் 1400 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒருவரால் எவ்வாறு இவ்வளவு தெளிவாகக் கூற முடிந்தது. ஏனெனில் அவர்; இந்த உலகையெல்லாம் படைத்து பரிபாலிக்கின்ற ஏக இறையோனால் அனுப்ப்பட்ட உண்மைத்தூதர் அல்லவா!!!