நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Monday, June 28, 2010

துணிந்து நின்றால் பணிந்து வருவார்கள்.


நபி(ஸல்) அவர்களது வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சிகளில் இஸ்ரா-மிஃராஜ் பயணம் முக்கியமானதாகும். ஒரே இரவில் நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் மூலமாக மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்து பலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்நிகழ்வு ‘இஸ்ரா’ என அழைக்கப்படுகின்றது.

பின்னர் அங்கிருந்து விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது ‘மிஃராஜ்’ என அழைக்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சியை ஒட்டி எத்தகைய சடங்கு-சம்பிரதாயங்களையோ, வணக்க, வழிபாடுகளையோ இஸ்லாம் அறிமுகம் செய்யவில்லை. இந்நிகழ்வு பற்றிப் பேசுவோர் பல கட்டுக் கதைகளையும், பர்ன-பரம்பரைக் கதைகளையும் அவிழ்த்து விடுவர். மற்றும் சிலர் இஸ்ரா -மிஃராஜுடன் இணைத்து இல்லாத இபாதத்துக்களை உருவாக்கி பித்அத்துக்களை ஊக்குவிப்பர். எனினும், இஸ்ரா-மிஃராஜ் பற்றிப் பேசும் போது பைத்துல் முகத்தஸ் குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது.

‘பைத்துல் முகத்தஸ்’ என்பது முஸ்லிம் உம்மத்தின் முதல் கிப்லாவாகும். பலஸ்தீன பூமி அல்லாஹ்வின் அருள் பெற்ற பூமியாகும். ‘பைத்துல் முகத்தஸைச் சூழ உள்ள பூமியை நாம் பறக்கத் பொருந்தியதாக ஆக்கியுள்ளோம்’ என்று அல்லாஹ் கூறியுள்ளான். இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தளமாக பைத்துல் முகத்தஸ் திகழ்கின்றது. நபிகளாரின் இஸ்ரா-மிஃராஜின் ஒரு அங்கமான பைத்துல் முகத்தஸ், மனித இன விரோதிகளான இஸ்ரேல் வசம் சிக்கித் தவிக்கின்றது. அகழ்வாராய்ச்சியின் பெயரில் பைத்துல் முகத்தஸைச் சூழச் சுரங்கங்கள் தோண்டித் துலாவப்படுகின்றது.

பலஸ்தீனத்தின் பூர்வக் குடிகள் ஆக்கிரமிப்புச் சக்திகளான இஸ்ரேலினால் திறந்த வெளிச் சிறைக் கைதிகளாக நடத்தப்படுகின்றனர்.

அமெரிக்காவும், பிரிட்டனும் கொண்ட கள்ளக் காதலால் கருத்தரித்த சட்ட விரோத நாடே இஸ்ரேலாகும். இதன் மொஸாட் அமைப்பும், அதன் கொலை வெறிக் கூட்டமான ஸியோனிஸ்டுகளும் உலகம் பூராகவும் போர்த் தீயை மூட்டி வருகின்றனர்.

இஸ்லாமிய உம்மத்துக்கு மட்டுமன்றி மனித இன விரோதிகளாகவே இஸ்ரேல் நடக்கின்றது. அதனது ஸியோனிஸ சிந்தனை என்பது அனைத்து இன மக்களையும் அடிமையாக்கும் சிந்தனை கொண்டதாகும்.

இஸ்ரேல் அரசும் அதன் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் அமெரிக்க, பிரிட்டன் நாடுகளின் அரசியல் தலைமைகள், பிர்அவ்னியச் சிந்தனையுடன் இஸ்லாமிய உம்மத்தின் குழந்தைகளைக் கொல்வதைக் கொள்கையாகக் கொண்டுள்ளன. ஈராக், ஆப்கான், பலஸ்தீன் என அனைத்து நாடுகளிலும் இந்த அரக்க நாடுகளின் ஈவு-இரக்கமற்ற, காட்டு மிராண்டித் தனமான தாக்குதல்களில் அதிகம் பலியானவர்கள் ஒன்றுமறியாக் குழந்தைகள்தான்.

‘பொருளாதாரத் தடை’ என்ற போக்கிரிச் சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு உணவு, பால் மா, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதைத் தடை செய்வதன் மூலம் இஸ்லாமியச் சந்ததியைக் கொன்றொழிக்கச் சதி வேலையில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்திப் பிறக்கும் குழந்தைகளையும் உடல் ஊனமுற்றவர்களாக்கும் கொடூரத்தை இந்த நாடுகள் செய்து வருகின்றன.
பலஸ்தீனை ஆக்கிரமித்து ‘இஸ்ரேல்’ என்ற சட்ட விரோத நாட்டை உருவாக்கியவர்கள், அதனை ஒரு யூத நாடு என நிருவுவதற்கான அகழ்வாராய்ச்சிகளை நடத்தி வந்தனர். அறுபது ஆண்டுகள் தோண்டித் துலாவியும் இது ஒரு யூத நாடு என்று நிருவுவதற்கு உருப்படியான ஒரு ஆதாரம் கூட அவர்களுக்குக் கிட்டவில்லை. இந்நிலையில் யூதர்களில் சிலரே ‘இஸ்ரேல் சட்ட விரோத நாடு!’, ‘இஸ்ரேலை உருவாக்கியமை யூத மதத்திற்கும் எதிரானது!’ எனக் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

பலஸ்தீனின் காஸாப் பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டுப் பலஸ்தீனப் பாலகர்களையும் பட்டினிச் சாவுக்குள்ளாக்கி வருகின்றது. மருந்துத் தட்டுப்பாட்டினால் மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
பட்டினி நிலை தொடர்ந்ததைக் கண்ட ஈரநெஞ்சம் கொண்ட உலக நாடுகள் உதவ முன் வந்த போதும் கூட கல்நெஞ்ச இஸ்ரேல் அதனைத் தடுத்து வந்தது. எகிப்து ஊடாக காஸா பகுதிக்கு உணவு வருவதை எகிப்து தடை செய்தது.
பட்டினியின் கொடூரத்தால் சுரங்கப் பாதை அமைத்து காஸாவுக்கு உணவுகளைக் கொண்டு வரும் முயற்சியை எகிப்து கொடூரமாக நசுக்கியது.

மதில்கள் அமைத்தும் சுரங்கப் பாதைகளுக்கு நச்சு வாயு அடித்தும் பிர்அவ்னிய சிந்தனையின் எச்ச-சொச்சத்தை எகிப்தின் அதிபர் நிரூபித்து வருகின்றார்.

முஸ்லிம் அல்லாத மனித நேயர்களின் மனிதாபிமான முயற்சிகளுக்குக் கூடத் தடை விதித்துப் பலஸ்தீனப் பட்டினிச் சாவுக்கு இஸ்ரேலுடன் இணைந்து எகிப்தும் வழிவகுத்து வருகின்றது.

காஸாப் பகுதிக்கு 2008 இல் S.S. Free gaza பயணய கப்பல் மூலம் சென்ற மனிதாபிமான உதவியின் பின்னர் எந்த உதவியும் சென்று சேருவதை இஸ்ரேலின் இதயமற்ற அரசு அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில்தான் பலஸ்தீன மக்களின் மரண ஓலமும், பட்டினிச் சாவும் சர்வதேச நாடுகளில் இதயமுள்ள மனிதர்களின் உள்ளத்தை உருக்கியது.

இஸ்ரேலினதும், எகிப்தினதும் முற்றுகையைத் தகர்த்து காஸா மக்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்க வேண்டும் என்பதற்காக ஒரு குழு தயாரானது.

பிரிட்டன், அயர்லாந்து, அல்ஜீரியா, குவைத், கிரீஸ், துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த 6 கப்பல்கள் மே மாதம் 30 இல் சைப்பிரஸ் துறைமுகத்திலிருந்து காஸா நோக்கிச் சென்றது. இந்தக் கப்பலில் 50 நாடுகளைச் சேர்ந்த மனித நேயத் தொண்டர்கள் 700 பேர் பயணித்தனர். இதில் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்ற மக்கள் தொண்டர்கள், பலஸ்தீன ஆதரவாளர்கள் என நாடு-அரசியல்-இன-மதம் அனைத்தையும் தாண்டிய மனித நேயம் கொண்டவர்கள் உள்ளடங்கியிருந்தனர். இந்தக் கப்பல்களில் 10,000 டொன் உதவிப் பொருட்கள் இருந்தன.

இந்தக் கப்பல் காஸா சென்றடைந்தால் பலஸ்தீன மக்களைப் பட்டினி போட்டுச் சாகடிக்கும் தனது சதிவலை முறியடிக்கப்பட்டு விடும். ஏனைய நாடுகளும் தொடர்ந்து உதவி செய்ய ஆரம்பித்து விடும் என்பதனால் இவர்களைத் தண்டிப்பதற்காகவும், இனி யாரும் உதவி-ஒத்தாசை என்று வந்து விடக்கூடாது என எச்சரிப்பதற்காகவும் இஸ்ரேல் இவர்களைத் தாக்கியது.

சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இஸ்ரேல் இராணுவத்தினரால் இவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். கப்பலில் பயணித்தவர்கள் சமாதான சமிக்ஞை காட்டியும் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து 19 பேரைக் கொன்று குவித்தது. இதில் 12 பேர் படுகாயமுற்றனர். காயப்பட்டு உயிர் தப்பியவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவார்.

சர்வதேசக் கடல் பரப்பில் சர்வதேசச் சட்டங்களைத் தனது கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்து விட்டு, மனித நேய மக்கள் தொண்டர்களைச் சுட்டுக் கொன்ற இஸ்ரேல் இராணுவத்தினர், அவர்களை நடுக் கடலில் தூக்கி வீசியுமுள்ளனர்.
தனது ஈவிரக்கமற்ற ஈனச் செயலை நியாயப்படுத்த வழமை போன்று ‘தற்காப்புத் தாக்குதல்’ எனப் பொய்களை அவிழ்த்து விட்டுள்ளது இஸ்ரேல்.

கப்பல்களில் இருந்தவர்கள் குண்டர்கள் அல்ல; மனித நேய மக்கள் தொண்டர்கள்! தாலிபான், அல்கய்தா போன்ற ஆயுதப் போராளிகள் அல்ல; சமாதானப் விரும்பிகள். முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அதில் அதிகம் இருந்தனர்.

இஸ்ரேலின் இதயத்தில் ஈரமற்ற இந்த ஈனச் செயலுக்கு எதிராக பலத்த எதிர்ப்பு உலகெங்கும் எழுந்துள்ளது. துருக்கி இஸ்ரேலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. அமெரிக்க சார்பு முஸ்லிம் நாடுகளுக்கு இந்நிகழ்வு அரசியல் ரீதியான சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.

இந்நிகழ்வு இஸ்ரேல் சர்வதேசச் சட்டங்களை மதிக்காத நாடு; அது எந்த அக்கிரமத்தைச் செய்து விட்டும் அதற்கு நியாயம் கற்பிக்க முனையும். இது வரை இஸ்ரேல் மேற்கொண்ட எல்லா பயங்கரவாத வன்முறை நிகழ்வுகளையும் ‘தற்பாதுகாப்புத் தாக்குதல்’ என்றுதான் நியாயப்படுத்தி வந்தது. இந்நிகழ்வின் மூலம் சர்வதேச சமூகத்தின் முன்னால் இஸ்ரேலின் கோர முகம் பளிச்செனத் தெரிய ஆரம்பித்துள்ளது.

எனினும், அமெரிக்காவின் அரசியல் ஒத்துழைப்புத்தான் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டிப் போக்கிற்கும், இரும்புக் குணத்திற்கும் காரணமாகும். முஸ்லிம் தலைமைகள் துணிவுடனும், ஒன்றுபட்ட மனதுடனும் செயற்பட்டால் இந்த நிலையை மாற்ற முடியும். இதற்கு இலங்கை சிறந்த உதாரணமாகும்.

புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் இலங்கையைப் பணிய வைக்கப் பாரிய அழுத்தங்களைக் கொடுத்தன. ஆனால், ஜனாதிபதி தலை வணங்காத தலைமையாக நின்று அதனை எதிர்கொண்டார்.

அதன் பின் அரசியல் மாற்றத்தின் மூலம் இலங்கையை அடிபணியச் செய்ய முயற்சி நடந்தது. அதுவும் பழிக்கவில்லை. இந்தியா, சீனா எனப் பிராந்திய அரசுகளுடன் இலங்கை நெருக்கத்தை அதிகரித்தது. இப்போது அமெரிக்காவே பணிந்து வர வேண்டிய சூழ்நிலை உருவானது. தற்போது அமெரிக்காவே இலங்கையின் சில நடவடிக்கைகள் குறித்துத் தாம் திருப்திப்படுவதாக ஒரு தலைப்பட்சமான டயலொக் பேச வேண்டியேற்பட்டது. அமெரிக்காவுக்கு அரசியல் தேவை இருந்தால் பணிய வைக்கப் பயமுறுத்தும்; பயப்படவில்லை என்றால் பணிந்து வரும். இதற்கு வட கொரியாவும் ஒரு சிறந்த உதாரணமாகும்.

முஸ்லிம் உலகு அமெரிக்காவின் பொருளாதார முதுகெலும்பை முறிக்கும் முடிவுகளை எடுத்து, ஒன்றிணைந்து, துணிந்து குரல் கொடுத்தால் அமெரிக்கா பணிந்து வரும். அமெரிக்கா பணிந்தால் இஸ்ரேலின் அராஜகமும், அக்கிரமமும் குன்றிக் குறைந்து விடும் எனத் துணிந்து சொல்லலாம்.

                                                                                                                               இஸ்லாம்கல்வி.காம்

Tuesday, June 8, 2010

மனித சமுதாயமே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதில் என்ன சந்தேகம்-3

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள்.

...8. நன்கு பாதுகாக்கப்பட்ட வானம்
சூரியன் என்பது நாம் வசிக்கும் பூமியைவிட பல மடங்கு அளவில் மிகப்பெரிய நெருப்புப் பந்து. அதனுள்ளே மிகப்பெரிய அணு உலையே இருக்கின்றது. அதில் வினாடிக்கு 500 டன் எடையுள்ள ஹைட்ரஜன் வாயுக்கள் எரிந்து ஹீலியம் வாயுக்களாக மாறுகிறது. அதனால் படுபயங்கரமான கதிர்கள் சூரியனிலிருந்து ஆகாய வெளியெங்கிலும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது. 

இந்த பிரமாண்டமான அணு உலையிலிருந்து பாய்ந்து வரும் கதிர்களுள் ‘புற ஊதாக் கதிர்களும்’ ஒன்று. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் கேடு Sunவிளைவிக்கும் நாசக்கதிர்களாகும். இக்கதிர்கள் நம்மீது படுமானால் நாம் பல்வேறு கேடுகளுக்கு ஆளாகி அழிவைச் சந்திக்க நேரிடும். சரி அப்படியானால் சூரியனிலிருந்து ஆகாயமெங்கிலும் பாய்ந்தோடிச் செல்லும் இந்த அழிவுக் கதிர்கள் ஏன் நமது பூமியைத் தாக்குவதில்லை? என்ற கேள்வி எழலாம்.
நிச்சயமாக கண்ணிமைக்கும் நேரம் கூட தவறாமல் பூமியைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தான் படைத்த உயிரினங்களின் மீது அளவற்ற கருணையுடைய இறைவன் அந்த அழிவுக் கதிர்கள் நம்மீது படாதவாறு தடுத்து வானத்தில் ஓர் கூரையை ஏற்படுத்தி இருக்கிறான். இந்தக்கூரை என்னவென்று பார்ப்போம்.

பூமியின் வளிமண்டலம்: -
நமது புமியைச் சுற்றி மேற்பரப்பில் 500 கி.மீ. உயரம் வரை பரவியிருக்கும் இந்த காற்று மண்டலம் (Atmosphere) பல்வேறு அடுக்குகளாக (Layers) அமைந்துள்ளது. இந்த காற்று மண்டலத்தில் நைட்ரஜன் என்ற வாயு பெருமளவும் 78.03%, ஆக்ஸிஜன் 20.99%, ஆர்கான் 0.94%, கார்பன்-டை-ஆக்ஸைடு 0.03%, ஹைட்ரஜன் 0.01% போன்ற வாயுக்களும், இதைத்தவிர நீராவி மற்றும் தூசிகள் போன்ற பொருட்களும் கலந்துள்ளன. இந்த காற்றுவெளி மண்டலத்தின் முக்கிய பணிகள் என்னவெனில்:

- இதில் உள்ள ஆக்ஸிஜன் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு சுவாசக்காற்றாக இருக்கிறது.

- இதில் உள்ள நைட்ரஜன் பூமியில் உள்ள அனைத்து தாவரங்களும் உயிர்வாழ, வளர உதவுகிறது.

- கார்பன்-டை-ஆக்ஸைடு தாவர வர்க்கங்கள் உயிர்வாழ இன்றியமையாததாக இருக்கிறது.

- இதில் உள்ள ஓஸோன் என்பது சூரியனிலிருந்து பாய்ந்து வரும் புற ஊதாக்கதிர்களை பூமியைத் தாக்காவண்ணம் காக்கின்றது.

ஓசோன் வாயு மண்டலம்: -
ஓஸோன் வாயு மண்டலம் என்பது, பூமியிலிருந்து இரண்டாவதாக உள்ள Straposphere என்ற அடுக்கில் பரவியுள்ள மெல்லிய அடுக்காகும். இதற்கு Ozonosphere என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஓஸோன் என்பது பிராண வாயுவின் மூன்று அணுக்களால் ஆன மூலக்கூறு (Molecule) அடங்கிய வாயுவாகும். பூமியில் காணப்படும் ஓசோன் வாயுக்களில் 90 சதவீதம் இந்த ஓசோன் வாயுமண்டலத்தில் தான் காணப்படுகின்றது.

ஓசோன் வாயுமண்டலத்தை முதன் முதலில் 1913 ஆம் ஆண்டு கண்டறிந்தவர்கள் சார்லஸ் ஃபேப்ரி மற்றும் ஹென்ரி பியூசன் (Charles Fabry and Henri Buisson) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள் ஆவார்கள்.  இந்த ஓசோன் வாயு மண்டலம் சூரியனிலிருந்து கணநேரம் கூட தவறாமல் பூமியை நோக்கி பாய்ந்து வரும் நாசக்கதிர்களான புற ஊதாக்கதிர்களை 97 முதல் 99 சதவீதம் வரை உட்கிரகித்துக் கொண்டு, பூமிக்கு ஒரு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அறிஞர்கள் சூரியனின் புற ஊதாக்கதிர்களை மூன்று வகையினதாகப் பிரிக்கின்றனர்.
1) புற ஊதாக்கதிர் வகை- UV- A
2) புற ஊதாக்கதிர் வகை- UV- B
3) புற ஊதாக்கதிர் வகை- UV – C

முதலாவது வகையான என்பது அதிக பாதிப்பை ஏற்படுத்தாததும் சிறிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமாகும்.  இதில் பெரும்பாலானவைகள் பூமியின் மேற்பரப்பை வந்தடைகிறது.

இரண்டாவது வகையான UV- B என்பது நமது தோல்களைப் பாதித்து Sun Burn மற்றும் தோல் புற்றுநோயை (Skin Cancer) ஏற்படுத்தக் கூடியதாகும். இது பெரும்பாலும் ஓசோன் வாயு மண்டலத்தினால் தடுக்கப்பட்டுவிடுகிறது. இருப்பினும் சிறிய அளவிலான இவ்வகை புற ஊதாக் கதிர்கள் பூமியை வந்தடைகின்றது.

மூன்றாவது வகையான UV- C என்பது மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய நாசக் கதிர்களாகும். இது பூமியின் மேலே 35 கீ.மீ. தூரத்தில் உள்ள ஓசோன் வாயுக்களினால் முற்றிலுமாக தடுக்கப்படுகின்றது.

மனிதர்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் இந்த வகை புற ஊதாக்கதிர்களை அல்லாஹ் படைத்திருக்கின்ற ஓசோன் வாயு மண்டலம் தடுத்து பூமிக்கு ஒரு கூரையாக செயல்படுவதை அறிய முடிகிறது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -
“-இன்னும் வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்: 21:32)

இந்த வசனத்தில் பாதுகாக்கப்பட்ட கூரை எனக் கூறப்படுகிறதே, அப்படியானால் இந்தக் கூரைக்கு ஏதேனும் ஆபத்து காத்திருக்கிறதா என்று கேட்டால் ஓஸோன் என்ற கூரைக்கும் ஆபத்துகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அவைகளைப் பற்றிப் பார்போம்.

ஒசோன் வாயு உற்பத்தி செய்யப்படும் விதம்: -
சூரியனின் புற ஊதாக் கதிர்களினால் துண்டப்பட்ட ஆக்ஸிஜனின் மூலக்கூறுகள் O2 ஒற்றையாக உள்ள ஆக்ஸிஜன் O மூலக் கூறுடன் இணைந்து,  ஓசோன் வாயுவாக O3 மாறுகிறது. இவ்வாறு ஒசோன் வாயுவாக O3  மாறிய இந்த வாயு தொடர்ந்தார் போல் வீசிக் கொண்டிருக்கும் புற ஊதாக்காதிர்களின் தாக்கத்தினால் தாக்குப்பிடிக்கப்பட முடியாமல் சிதைந்து மீண்டும் ஆக்ஸிஜன் வாயுO2  மூலக்கூறுகளாகவும் தனிமையான ஆக்ஸிஜன் மூலக்கூறு O ஆகவும் மாறுகிறது. பின்னர் இவை புற ஊதாக்கதிர்களினால் மீண்டும் ஓசோன் மூலக்கூறாக O3 மாறுகிறது. இவ்வாறாக இந்த சுழற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் பல காரணங்களினால் ஓஸோன் வாயுவின் மூலக்கூறு O3 என்பது தாமாகவே சிதைந்து O2 (ஆக்ஸிஜன்) என்னும் மூலக்கூறு ஆக மாறுகிறது. பூமியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களும் ஓசோன் வாயுவின் மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியதாக இருக்கிறது. இதனால் இந்த ஓஸோன் வாயு மண்டலத்தில் ஏற்படும் O3 வாயுவின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக இறைவன் அதற்கு மாற்று ஏற்பாட்டைச் செய்து அதனைப் பாதுகாக்கின்றான். எப்படியென்றால் பூமியில் எந்த நேரத்திலும் ஏற்படும் இடி, மின்னல்கள் இந்த ஓஸோன் வாயுவை உற்பத்திச் செய்து புதுப்பித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இடி-மின்னல்கள் நைட்ரிக் ஆக்ஸைடு என்ற வேதிப்பொருட்களைத் தோற்றுவிக்கின்றது. இந்த வேதிப்பொருட்கள் சூரிய ஒளியிலுள்ள மற்ற வேதிப்பொருட்களுடன் இணைந்து வேதிவினை மாற்றத்தின் மூலம் ஓசோன் வாயுவைத் தோற்றுவிக்கிறது என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் மிகத் தூயவன்) இடி, மின்னலுக்கு இப்படி ஒரு ஆற்றலை அல்லாஹ் தந்திருக்கிறான்.

பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere): -
அடுத்ததாக ஓஸோன் மண்டலத்திற்கு மட்டுமல்லாது, நமது பூமி மற்றும் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்திற்கே வரும் ஆபத்து என்னவெனில், காற்று மண்டலத்திற்கு அப்பாலுள்ள எல்லையற்ற ஆகாய வெற்றுவெளியில் இந்த காற்று மண்டலம் முழுவதுமே சிதறுண்டு போகும் அபாயமாகும்.
இதுநாள் வரையிலும் பூமியின் புவியீர்ப்பு விசையே நமது காற்றுமண்டலத்தை அவ்வாறு சிதறுண்டு போய்விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானிகள் சூரியனின் வெப்பக்கதிர்களால் மிக அதிக அளவில் வெப்பமடையும் இந்த வாயுக்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்திக்குக் கிடையாது என்கின்றனர். அப்படியானால் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பிராணவாயுவையும் நமக்கு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓஸோன் வாயு மண்டலத்தையும் இந்த பரந்த ஆகாய வெற்றுவெளியில் சிதறுண்டு போய்விடாமல் பாதுகாக்கும் சக்தி எது என தேடிய விஞ்ஞானிகளுக்கு புலப்பட்டது தான் பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere).Earth is 
being protected by the Magnetosphere
20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் விண்ணில் செலுத்தப்பட்ட தொழில்நுட்பம் வாய்ந்த தொலைநோக்கிகளினாலும், இன்னும் பல அரிய கருவிகளினாலும் ஆராய்ந்ததில், இந்த வாயு மண்டலத்தை, இந்த பிரபஞ்சத்தின் வெற்றுவெளியில் சிதறாமல் காப்பது பூமியின் மேற்பரப்பில் 70,000 கிலோ மீட்டர் வரை பரவியிருக்கும் பூமியின் காந்த மண்டலமே என்று கண்டறிந்தனர். இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

இந்த பிரபஞ்சம் ஈர்ப்பு விசை மற்றும் காந்த விசைப் போன்ற பல சக்திகளைக் கொண்டுள்ளது.

அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகிறான்:-
“மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றல் உடையோராவோம்” (அல்குர்ஆன்:51:47)

சூரியன் அதிவேகத்தில் சுழல்வதால் அதிலிருந்து ஏற்படும் காந்தசக்தி ஆகாய வெளியெங்கிலும் பரவியுள்ளது. சூரியனின் காந்த சக்தி எல்லைக்குள் இருக்கும் பூமியும் அதிவேகத்தில் சுழல்வதனால் பூமியைச் சுற்றிலும் காந்தசக்தி ஏற்படுகிறது. இது பூமியிலிருந்து உயரே செல்ல செல்ல குறைந்து கொண்டே வந்து இறுதியில் ஒரு நிலையான காந்தசக்தியைக் கொண்டிருக்கும். பூமியின் காந்தசக்தியின் எல்லைக்கப்பால் இருப்பது சூரியனின் காந்தசக்தியாகும். சரி இனி இந்த காந்தசக்தி பூமியின் காற்று மண்டலத்தை எவ்வாறு பாதுக்காக்கின்றது எனப் பார்ப்போம்..

காற்று மண்டலத்தில் உள்ள வாயுக்களின் அணுக்கள் சூரியனின் வெப்பக்கதிர்களால் தாக்கப்படுவதோடு அல்லாமல், சூரியனின் ஒளிக்கற்றைகளிலிருந்து மின்சாரத்தையும் பெற்று மின்னூட்டம் பெற்ற அணுக்களாகின்றன. (Electrically Charged Particles) மின்னூட்டம் பெற்ற காற்று மண்டலத்தின் இந்த துகள்களை பூமியின் சக்திவாய்ந்த காந்த மண்டலம் தன்வசம் இழுத்து அவைகள் பரந்து விரிந்த ஆகாய வெற்றுவெளியை நோக்கிச் சென்று சிதறுண்டு விடாமல் பாதுகாத்துக் கொள்கிறது.

மேலும் சூரியனிலிருந்து பூமியை நோக்கி தொடர்ந்து  பாய்ந்துக் கொண்டிருக்கும் அழிவுக் கதிர்களையும், அவ்வப்போது சூரியனிலிருந்து வீசும் சூரியப் புயலின் வேகத்தையும் பூமியின் காந்த மண்டலம் தடுத்துக் கொண்டு ஒரு கூரையாக செயல்படுகிறது.
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி சிந்தித்துப் பாருங்கள்:-
“இன்னும் வானத்தை பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம்”
என்று கூறி நம்மை பாதுகாக்கும் இறைவன் மிகவும் கருனையாளன் அன்றோ?

விண்கற்களினால் பூமிக்கு ஆபத்து!: -
அல்குர்ஆன் 21:32 வசனத்தில் பொதிந்துள்ள மற்றுமொரு சான்றினைப் பார்ப்போம்.

இந்த சூரியக்குடும்பம் உருவான காலகட்டத்தில் அவை மிகப்பெரிய நட்சத்திரம் (Parent Star) ஒன்றிலிருந்து தோன்றியது என வானவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அப்போது சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் கோள்களுடன் கோடிக்கணக்கான விண்கற்களும் தோன்றின. அக்கற்களும் சூரியனின் ஈர்ப்புச்சக்திக்கு உட்பட்டு சூரியனைச் சுற்றி வருகின்றன.
அவைகளில் சிறியதும் பெரியதுமாக சில மில்லி மீட்டர் முதல் பல கிலோ மீட்டர் விட்டமுடைய கற்கள் இருக்கின்றன. இவைகளில் பெரிதாக இருக்கும் கற்களுக்கு (Asteroids) ஆஸ்டெராயிட்ஸ் என்றும், சிறிய கற்களை (Meteoroids) மீட்டியராய்ட்ஸ் என்றும் அழைக்கிறார்கள். இவைகள் ஒரு பெரும் கூட்டமாக செவ்வாய் கிரகத்திற்கும், ஜுபிடர் என்ற கிரகத்திற்கும் இடையில் ஒரு பெல்ட்டைப்போல இருந்து கொண்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. இதற்கு ‘ஆஸ்ராயிட்ஸ் பெல்ட்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் இவைகளிலிருந்து சில கற்கள் விலகிச் செல்கின்றன. இவ்வாறு விலகிச் செல்லும் இக்கற்களை பூமியானது தன்னுடைய ஈர்ப்பாற்றலால் தன் வசம் இழுப்பதால் அக்கற்கள் பூமியை நோக்கி மிக வேகமாக வருகின்றன.

மேலும் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படக்கூடிய Comets சென்ற பாதைகளில் ஏராளமான சிறுசிறு கற்கள் கோடிக்கணக்கில் காணப்படுகிறது. பூமி சுழன்று கொண்டே வால்நட்சத்திரம் கடந்து சென்ற பாதைகளில் நகரும்போது அப்பாதைகளில் உள்ள கோடிக்கணக்கான துகள்களும், கற்களும் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு ஷவரிலிருந்து கொட்டும் நீரைப்போல பூமியை நோக்கிக் கொட்டுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் மீட்டியர் ஷவர் என்று (Meteor Shower) கூறுவர்.meteor_shower.jpgMeteor Shower

இவ்வாறு பல வகைகளில் பூமியை நோக்கி பல கோடிக்கணக்கான கற்கள் விழுந்தவண்ணம் இருக்கின்றன. ஒரு ஆண்டிற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியை நோக்கி வருவதாக கணக்கிட்டுள்ளனர். வானத்திலிருந்து கொட்டப்படும் கோடிக்கணக்கான கற்களில் ஒன்றுகூட நம்மீது விழவில்லையே? அவற்றை நம்மீது விழாமல் தடுப்பது எது? என்று ஆச்சரியத்தோடு வினா எழுப்பினால் அதற்கும் விடை தருகிறார்கள் விஞ்ஞானிகள். பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலமே கூரையாக அமைந்து அக்கற்கள் நம்மீது விழாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.
எப்படி என்கிறீர்களா?

தன் பாதையிலிருந்து விலகிய கற்கள் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு மிக அதிக வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்ந்தோடி வரும்போது அவைகள் பூமியின் காற்று மண்டலத்தை கடந்து வரவேண்டியதிருக்கிறது. அதிவேகமாக வரும் கற்கள் காற்று மண்டலத்தில் உராயும்போது ஏற்படும் அளவுக்கதிகமான வெப்பத்தினால் அக்கற்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஒரு சில கற்களே பாதி எரிந்தும் பாதி எரியாத நிலையிலும் பூமியை வந்தடைகின்றன. இவ்வாறு பூமியில் விழும் கற்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் ஆய்விற்கு பெரிதும் உதவுகின்றன. இப்போது நினைத்துப் பாருங்கள். வருடத்திற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியின் மீது பாய்ந்தோடி வந்து கொண்டிருக்கும் நிலையில் அவைகளிலிருந்து இறைவன் நம்மைக் காப்பதற்காகவும் வளிமண்டலம் எனும் வானத்தை கூரையாக படைத்திருக்கின்றான். மேலும் இறைவன் கூறுகிறான்.

“மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை” (அல்குர்ஆன்: 44:38)

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)

சுவனதென்றல்


...9. வானத்திலிருந்து இறக்கப்பட்ட இரும்புகள்

 சூரியக் குடும்பம் உருவான காலகட்டத்தில் பூமியில் இரும்புக்கான தாதுப் பொருட்களே இல்லை என்றும் அதன் பின்னரே விண்கற்கள் மழையாகப் பொழியப்பட்ட காலத்தில் வானிலிருந்து இந்த இரும்புகள் பூமிக்கு வந்திருக்கின்றன என்று நவீன வானவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். இதைப்பற்றி சிறிது விரிவாக பார்ப்போம்.

சூரியக் குடும்பத்தின் ஆற்றல் (Energy of Solar system) இரும்பை உறுவாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை. இரும்பின் ஒரு அணுவை உருவாக்குவதற்கு இந்த சூரியக் குடும்பத்தின் மொத்த ஆற்றலைப்போல நான்கு மடங்கு ஆற்றல் (Four Times energy of Entire solar System is Required to Produce a Single Atom of Iron) தேவைப்படுகிறது. எனவே பூமியில் உள்ள இரும்புகள் எங்கிருந்தோ வானத்திலிருந்து வந்திருக்க வேண்டும் என்கின்றனர் NASA விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.Iron Was Sent 
down from Another Giant StarIron Sent Down

தற்கால அறிவியலாளர்கள், தற்போது பூமியில் காணப்படும் இரும்புகள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனை விடப் பன்மடங்கு பெரிதாகவிருந்த ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துகள்கள் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு அதனோடு மோதி பூமியில் இரும்புக்கான தாதுப்பொருட்கள் பரவலாக கிடைக்க வழி வகுத்தது என்று கூறுகிறார்கள்.  (பார்க்கவும் வீடியோ)

இந்த அறிவியலாளர்கள் மேலும் கூறுகையில், ஆரம்பத்தில் இளகிய நிலையில் இருந்த இந்த பூமி தற்போதுள்ள அளவை விட மிகச் சிறியதாக இருந்ததாகவும் இரும்பின் தாதுப்பொருட்கள் அடங்கிய மிகப்பெரிய ஆஸ்ட்ராயிட்ஸ் எனப்படும் விண்கற்கள் 10 க்கும் மேற்பட்டவைகள் பூமியில் மோதியதாகவும் ஒவ்வொரு தடவையும் மோதும் போது பூமி தன் அளவில் பெரியதாக ஆனதாகவும் கூறுகிறார்கள். (பார்க்கவும் வீடியோ)

பூமி, சந்திரன், சூரியன் இவைகளெல்லாம் மிகப்பெரிய வெடிப்பின் மூலம் (Big Bang) தோன்றியது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு வெடித்துச் சிதறியதால் பூமி, சந்திரன் மற்றும் சூரியன் தோன்றிய அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான சிறியதும், பெரியதுமான விண்கற்கள் (Asteroids and Meteoroids) தோன்றி அவைகளும் இப்பரந்த விண்வெளியில் சுற்றித் திரிகின்றன.

பெரிய கற்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் அவைகள் வெடித்துச்சிதறி புதிய புதிய கற்கள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. அவைகள் அவ்வபோது பூமி, சந்திரன் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு இவைகளின் மீது மோதுகின்றன.

பூமி உருவான காலகட்டத்தில் பூமியின் மீது தொடர்ச்சியாக விண்கல்மாரிகள் பொழிந்தவண்ணமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தை (Bombardment Period) என்று கூறுவர். விழுந்த கற்களில் பல்வேறு தாதுப்பொருட்கள் இருந்தது. இவ்வாறு விண்ணிலிருந்து வந்த விண்கற்கள் மூலமாக கிடைத்ததே இந்த பூமியிலுள்ள இரும்புகள் அனைத்தும் என்கின்றனர் வல்லுனர்கள்.Bombardment 
Period

தற்போது அவ்வபோது இந்த மாதிரி விண்ணிலிருந்து விண்கற்கள் மூலமாக இரும்புகள் பூமியை நோக்கி வந்தவண்ணம் இருப்பதாகக் கூறும் விஞ்ஞானிகள் இதற்கு ஆதாரமாக 1947 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்த விண்கல்லை (Meteorite) காட்டுகின்றனர். 
இக்கல்லில் நான்கு சதவிகிதம் நிக்கல் என்ற பொருளும் ஏனைய பெரும்பகுதி இரும்பாகவும் இருந்ததாகக் கூறுகின்றனர்.

பூமியில் காணப்படும் இரும்புகள் அனைத்தும் பூமியில் தாமாகவே உருவாகவில்லை! மாறாக வானத்தில் வேறு எங்கிருந்தோ பூமியை நோக்கி வந்தது என்பது தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையாகும்.
ஆனால் இந்தப் பேருண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அனைத்துலகங்களைப் படைத்த அந்த இறைவன் உலக மாந்தர்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டிட அவன் இறக்கியருளிய அவனுடைய சத்தியத் திருவேதத்திலே இதைக் குறித்து குறிப்பிட்டு மக்கள் சித்தித்து தெளிபெறுமாறு அறிவுறுத்துகிறான்.Iron Ingot

அல்லாஹ் கூறுகிறான்: -
“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் இறக்கினோம். அதில் கடும் அபாயம் இருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன – (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்” (அல்குர்ஆன்: 57:25)
மனித சமுதாயமே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதில் என்ன சந்தேகம்-1

மனித சமுதாயமே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதில் என்ன சந்தேகம்-2

மனித சமுதாயமே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதில் என்ன சந்தேகம்-2

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள்.

...3. பெருவெடிப்புக் கொள்கை:

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?  21:30
 

பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,
 

1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.
 

2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.
 

3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின.- என்பதாகும்.
 

அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.

protoncollision
(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)

சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.

படம்: LHC (Large Hydron Collider) 
எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்
படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:
 

சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.
 

அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக 
அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் 
கண்டுபிடிப்புகள்
படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.

 

மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.
 

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)
 

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28) 
ரியாதிலிருந்து ஃபைசல்


...4. விரிவடையும் பிரபஞ்சம்.

வானத்தை வலிமை மிக்கதாக படைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவடைய செய்யும் ஆற்றலுடையவராவோம். (குர்ஆன் 51:47).
 

1400 வருடங்களுக்கு முன்னர் வானியல் என்றால் என்னவென்றே தெரியாத அக்காலப்பகுதியில் பிரபஞ்சம் விரிவடைந்து செல்வதை பற்றி அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'ஸமாஉ' என்ற சொல்லானது குர்ஆனின் பல இடங்களில் வெளி,பிரபஞ்சம் என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இவ்வசனத்திலும் அக்கருத்திலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது பிரபஞ்சம் விரிவடைந்து செல்கிறது எனும் கருத்தை தருகிறது. இது இன்றைய நவீன விஞ்ஞானம் கூறுகின்ற தீர்க்கமான முடிவாகும்.

'இன்னா ல மூசிஊனா' என்ற அரபு மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு 'அதை நாமே உறுதியாக விரிவடைய செய்யும் ஆற்றலுடையவராவோம்' என்பதாகும். இது 'அவ்சா' - 'விரிவடைதல்' என்ற வினைசொல்லிருந்து வந்ததாகும். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 'லா' என்ற முற்சேர்க்கை பெருமளவு என்ற கருத்தை தருகிறது. இதனடிப்படையில் ';நாம் இந்த பிரபஞ்சத்தை பெருமளவு விரிவாக்கியுள்ளோம்'; என்பது இதன் கருத்தாகும்.

இந்த முடிவைதான் விஞ்ஞானம் இன்று அடைந்துள்ளது.

'பிரபஞ்சமானது ஒரு மாறா இயல்புடையதும் அறியமுடியாத ஆரம்பத்தைக் கொண்டதுவும் ஆகும்' என்பதே 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அன்றைய விஞ்ஞானம் ஏற்றுக்கொண்ட ஒரே கருத்தாக இருந்தது. எனினும், நவீன


Georges Lemaitre
தொழிநுட்பங்களின் உதவியை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினதும் அவதானங்களினதும் முடிவானது, 'பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் இருந்தது, மேலும் அது தொடர்சியாக விரிவடைந்து செல்கிறது' என்பதாகும்.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்ய பௌதீகவியளாளர் அலெக்ஸான்டர் பிரீட்மேன் (Alexander Friedmann) என்பவரும் பெல்ஜிய பிரபஞ்சவியலாளரான ஜோர்ஜஸ் லேமாட்ரே ( Georges Lemaître) என்பவரும் 'பிரபஞ்சம் தொடர்ச்சியான இயக்கத்தை கொண்டுள்ளதுடன் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது' என்ற கருத்தை கோட்பாடடாக முன்வைத்தனர்.

இவ்வுண்மையானது 1929ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு அவதானிப்புத் தரவுகள் ( Observation) மூலம் உறுதிசெய்யப்பட்டது. அமேரிக்க வானியலாளரான எட்வின் ஹப்ள்
தொலைநோக்கியினூடாக வானை அவதானித்த போது நட்சத்திரங்களும், பால்வெளி மண்டலங்களும் (galaxies) தொடர்ச்சியாக ஒன்றினிலிருந்து மற்றயது விலகி செல்வதை கண்டுபிடித்தார் இக் கண்டுபிடிப்பு வானியல் வரலாற்றில் பெரும் திருப்பு முனை என்று கருதப்படுகிறது.

Edwin Hubble with his giant telescope

இவ்வாறு ஹப்பிள் அவதானித்து கொண்டிருந்த போது நட்சத்திரங்களிலிருந்து சிகப்பு நிற ஒளி வருவதை கண்டார். இதற்கு காரணம் வான் பொருளிலிருந்து பார்வை புள்ளியை நோக்கி வரும் ஒளி ஊதா (violet) நிறமாக இருந்தால் அப்பொருள் அப்புள்ளியை நோக்கி வருகிறது என்றும், பார்வை புள்ளியை நோக்கி வரும் ஒளி சிகப்பு (RED) நிறமாக இருந்தால் அப்பொருள் பார்வை புள்ளியை விட்டும் விலகி செல்கிறது என்பது பௌதீகவியலின் பொதுவான விதியாகும். ஹப்பிள் அவரது அவதானிப்பின் போது நட்சத்திரங்களிலிருந்து சிகப்பு நிறம் வருவதை கண்டறிந்தார்.

[Is-the-Universe-Really-Expanding-2.jpg]

From the moment of the big bang, the universe has been constantly expanding at a great speed. Scientists compare the expanding universe to the surface of a balloon that is inflated.


நட்சத்திரங்களும் பால்வெளிமண்டலங்களும் எம்மை விட்டு மட்டும் விலகி செல்லவில்லை. மாறாக அவை ஒன்று மற்றயதிலிருந்தும் விலகி செல்கிறது. சுருங்க சொல்வதாயின், நட்சத்திரங்கள் மென்மேலும் விலகி செல்கின்றன.

பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் ஏனைய பொருளிலிருந்து விலகி செல்கிறது என்பதன் கருத்து பிரபஞ்சம் விரிவடைந்து செல்கிறது என்பதாகும். தொடர்ந்து வந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகள் (observations) பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைகிறது என்ற கருத்தை உறுதிப்படுத்தியது.

ஒரு சிறு உதாரணத்தை கொண்டு இதை நன்கு விளங்கி கொள்ளலாம். நாம் இந்த பிரபஞ்சத்தை காற்று ஊதப்படும் ஒரு பலூனோடு ஒப்பிடலாம். பலூன் மேலும் ஊதப்பட்டால் அதன் மேற்பரப்பிலுள்ள புள்ளிகள் ஒன்றிலிருந்து மற்றயது விலகி செல்லும். அதை போன்று பிரபஞ்சம் விரிவடையும் போது வானிலுள்ள பொருட்களும் ஒன்றிலிருந்து மற்றயது விலகி செல்கிறது. 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாக கருதப்படும் அல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) இந்நிகழ்வை கோட்பாட்டு ரீதியல் கண்டுபிடித்தார். இருப்பினும் அக்காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'நிரந்தர பிரபஞ்ச திட்டத்' தோடு மோத விரும்பாததன் காரணமாக தனது கண்டுபிடிப்பை வெளியிடவில்லை. பிற்காலத்தில் இந்நிகழ்வை 'தனது வாழ்வின் பெரும் பிழை' என கூறி வருதப்பட்டார்.

தொலைநோக்கி என்றால் என்ன என் அறிந்திறாத காலத்தில்தான் குர்ஆன் இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தியது. ஏனெனில் குர்ஆன் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் படைத்து ஆளுகின்ற இறைவனின் திருவசனமாகும்.

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28).


...5. வான்வெளியிலும் பாதைகள் உண்டு.

சூரியனும் சந்திரனும் அதற்கென வரையப்பட்ட ஒரு சுற்றுப் பாதையிலேயே நீந்துகின்றன என்று குர்ஆன் கூறுகிறது.
http://alienawakening.files.wordpress.com/2009/11/artistsimpression_vega.jpg
அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன. (குர்ஆன் 21:33)

மேலுள்ள வசனத்தில் 'நீந்துகின்றன' என்பதாக பொருள் தரும் 'சபாஹா' என்ற அரபு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது விண்ணில் சூரியனின் நகர்வை விளக்குகிறது. சூரியன் விண்ணில் மனம் போன போக்கில் செல்லவில்லை மாறாக அது தன்னை தானே சுற்றி கொண்டே அதன் பாதையில் செல்கிறது. சூரியன் ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் அது குறிப்பிட்ட பாதையில் செல்கிறது என்பதை இன்னொரு வசனம் கூறுகிறது:

சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் நன்கறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும. (குர்ஆன் 36:38)


இந்த உண்மையை இன்றைய நவீன காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வானியல் அவதானங்களினால் கண்டுபிடிக்க முடிந்தது. வானியல் அறிஞர்களின் கணிப்பீட்டு முடிவுகளின்படி சூரியன் மணிக்கு 7,20,000 கிலோ மீட்டர் எனும் அதி வேகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டத்தில் வேகா (vega) நட்சத்திரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இக்குறிப்பிட்ட பிரதேசம் சூரிய முகடு (solar apex) என அழைக்கப்படுகின்றது. அதாவது, சூரியன் அண்ணளவாக ஒரு நாளைக்கு 17,280,000 கிலோமீட்டர் தூரம் தனது பாதையில் முன்னேறுகிறது. சூரியனுடன் சேர்ந்து ஏனைய கோள்களும், உப கோள்களும் சூரியனின் ஈர்ப்புச் சக்திக்கு உட்பட்டு ஒரே தூர இடைவெளியில் பயணிக்கின்றன. பிரபஞ்பத்தில் உள்ள ஏனைய நட்சத்திரங்களும் திட்டமிட்ட முறையில் அசைந்த வண்ணம் உள்ளன.

வானத்திற்கு பாதைகள் இருப்பதைப்பற்றி மற்றொரு வசனம்,

'பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக' (51:7)

பிரபஞ்சத்தில் அசாதாரண ஒழுங்குகள் காணப்படுவதற்கான காரணங்களில் ஒன்று விண்ணிலுள்ள ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பாதையில் செல்வதாலாகும். நட்சத்திரங்கள், கோல்கள் (planets), உபகிரகங்கள் (satellites) போன்ற அனைத்தும் தத்தம் பாதையில் சூழல்வதோடு மற்றவைகளோடு சேர்ந்து அவைகளும் சூழல்வதாலாகும். ஒரு தொழிற்சாலையிலுள்ள சக்கரங்களை போன்று பிரபஞ்சமும் அசாதாரண ஒழுங்கில் தொழிற்படுகிறது. பிரபஞ்சத்தில் 100 கோடிக்கும் அதிகமான பால்வெளிமண்டலங்கள் (galaxies) இருக்கின்றன. அவற்றிலுள்ள ஒவ்வொரு சிறிய பால்வெளிமண்டலமும் சுமார் ஒரு கோடி நட்சத்திரங்களை கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பெரிய பால்வெளிமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் சுமார் 10 கோடியை தாண்டும்.

இங்குள்ள பல நட்சத்திரங்களுக்கு பல கோல்கள் இருப்பதோடு பல கோல்களுக்கு துணை கோல்களும் இருக்கின்றன. அனைத்து விண்பொருட்களும் நன்கு திட்டமிட்டு கணக்கிடப்பட்ட பாதையில் செல்கின்றன. பல கோடி ஆண்டுகளாக ஒவ்வொன்றும் அதன் பாதையில் எத்தகைய பிசகுமின்றி ஏனையவைகளோடு சேர்ந்து சுற்றி வருகின்றன. மேலும் பல வால்நட்சத்திரங்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. பிரபஞ்சத்திலுள்ள பாதைகள் சில விண்வெளி பொருட்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. சூரிய குடும்பமும் மற்ற பால்வெளிமண்டலங்களும் குறிப்பிட்ட அளவு நகர்ந்து செல்கின்றன. ஒவ்வொரு வருடமும் சூரிய குடும்பம் அதற்கு முன்னைய ஆண்டை விட சுமார் 5 கோடி கிலோ மீட்டர் (3.1 கோடி மைல்கள்) நகர்ந்து செல்கிறது. இத்தகைய பாதையில் மிகச்சிறிய பாதை மாற்றம் ஏற்பட்டால் கூட பெரும் குழப்பம் ஏற்பட்டு முழு பிரபஞ்ச அமைப்பும் முடிவிற்கு வந்துவிடும். உதாரணமாக பூமி அதன் பாதையிலிருந்து வெறும் 3 மில்லிமீட்டர் பாதை மாறினால் ஏற்படும் விளைவை பற்றி பின்வருமாறு கூறப்படுகிறது:

சூரியனை சுற்றும் போது பூமி ஒவ்வொரு 18 மைல்களுக்கும் அதன் நேர்கோட்டிலிருந்து 2.8 மில்லிமீட்டர் பாதை மாறக்கூடிய சூழற்சி முறையை கொண்டுள்ளது. பூமியின் சூழற்சி முறை மாறாது. ஏனெனில் அது 3 மில்லிமீட்டர் பாதை மாறினால் கூட மிகப்பெரும் அழிவை சந்திக்கும். அதன் பாதை மாற்றம் 2.8 மில்லிமீட்டருக்கு பதிலாக 2.5 மில்லிமீட்டராக இருந்தால் சூழற்சி பெரிதாகி நாம் அனைவரும் உறைந்து போவோம். அதன் பாதை மாற்றம் 3.1 மில்லிமீட்டராக இருந்தால் நாம் அனைவரும் கருகி செத்து மடிந்துவிடுவோம்.

விண்பொருட்களின் மற்றொரு முக்கிய பண்பு அவை தம்மை தாமே சுற்றி கொள்வதாகும். உண்மையில் குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் அன்றைய மக்களிடம் பல கோடி கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் வானத்தை ஆராயக்கூடிய தொலை நோக்கிகளோ அல்லது நவீன தொழிநுட்பங்களோ அல்லது நவீன பௌதீகவியல் வானவியல் போன்ற அறிவோ இருக்கவில்லை. அதனால் வானத்தை 'பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக' (குர்ஆன் 51:7) என்று நிரூபிப்பது மிக கடினமாக இருந்திருக்கும். குர்ஆன் இறங்கிய காலத்தில் இந்த உண்மைகளை பற்றிய மிக தெளிவான தகவல்களை கூறுகிறது.

நிச்சயமாகக் குர்ஆன் இறக்கப்பட்ட போது இன்றுள்ள வானியல் அறிவோ, தொலை நோக்கிகளோ, நவீன தொழிநுட்பமோ, பல மில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ளவைகளை அறியும் கருவிகளோ இருக்கவில்லை. ஆகவே குர்ஆன் கூறிய பாதைகள், சுற்றுவட்டங்கள் அக்காலத்தில் விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது அசாத்தியமானதகாவே இருந்தது. அவ்வாறான காலத்தில் இவ்வுண்மையைக் குர்ஆன் கூறியிருப்பது அது அல்லாஹ்வின் சொல் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்.

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28) 

...6. சந்திரனுக்கு சுய வெளிச்சம் இல்லை.
http://home.hiwaay.net/~krcool/Astro/moon/earthshine/eshine.gif


உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம். ஒளிவீசும் விளக்கை அமைத்தோம். (குர்ஆன் 78:12-13)

சூரிய குடும்பத்தில் சூரியனிடம் மட்டுமே ஒளி உள்ளது என்பது எமக்கு நன்கு தெரியும். விண்வெளி வீரர்கள் மற்றும் தொழிநுட்ப புரட்சி போன்றவற்றை கொண்டு சந்திரனுக்கு சொந்த ஒளி கிடையாது, மாறாக சூரியனிலிருந்து வரும் ஒளியை பிரதிபலிக்கிறது என்பது நிரூபனமாகியுள்ளது. மேலுள்ள குர்ஆன் வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'சிராஜ்'; என்ற அரபு சொல்லிற்கு 'விளக்கு' என்பது பொருள். ஓளி மற்றும் வெப்பத்திற்கு காரணமான சூரியனை மிகச் சரியான அடைமொழியை கொண்டு குர்ஆன் அழைக்கிறது.

குர்ஆனில் சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் போன்றவற்றை குறிப்பிடும் போது அவற்றை வௌ;வேறு அடைமொழிகளை கொண்டு அல்லாஹ் அழைக்கிறான். இவ்வாறு தான் அவை குர்ஆனில் அழைக்கப்படுகிறது.

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அமைத்தான். (குர்ஆன் 71 : 15-16)
http://www.emporia.edu/earthsci/amber/students/jones/hppg001.gif

மேலுள்ள வசனத்தில் சந்திரனை 'ஒளி' என்று பொருள் தரும் 'நூர்'; என்ற அரபு சொல்லையும், சூரியனை 'விளக்கு' என்று பொருள் தரும் 'சிராஜ்' என்ற அரபு சொல்லை கொண்டு குர்ஆன் அழைக்கிறது. சந்திரனுக்கு பயன்படுத்தியுள்ள நூர் என்ற சொல்லிற்கு பிரதிபலிக்கும் ஒளி, பிரகாசம், அசைவற்ற உடம்பு என்ற பல கருத்துகள் உள்ளன. அதை போன்று சூரியனுக்கு பயன்படுத்தியுள்ள சிராஜ் என்ற சொல்லிற்கு தொடர்ந்து எறிகின்ற, நிரந்தரமான ஒளி மற்றும் வெப்பத்தின் காரணி போன்ற பொருள்களும் உண்டு.

அதை போன்று நட்சத்திரத்தை நஜாமா என்ற அடைமொழியை கொண்டு குர்ஆன் அழைக்கிறது. அதாவது 'நஜாமா' என்பதன் பொருள் 'தோன்றுகிற., வெளிப்படுகின்ற' என்பதாகும். நட்சத்திரங்களை தாகிப் என்று குர்ஆன் அழைக்கிறது. அதன் பொருள் இருளில் ஒளியை கொண்டு பிரகாசிக்கும், மினுங்கும், எறிகின்ற என்பதாகும். சந்திரனுக்கு சொந்தமாக ஒளி கிடையாது என்றும் அது சூரியனிலிருந்து வரும் ஒளியை பெற்று பிரதிபலிக்கிறது என்பது எமக்கு தெரியும். அதை போன்று சூரியனும் நட்சத்திரங்களும் அவற்றின் சொந்த ஒளியை வெளியிடுகிறன என்பதும் எமக்கு தெரியும். மக்கள் விஞ்ஞான என்றால் என்ன என்று அறியாத, வானவியல் அறிவு மட்டுப்படுத்தபட்டு இருந்த காலத்தில் இறக்கப்பட்ட குர்ஆனில் இந்த உண்மைகள் அருளப்பட்டுள்ளன. இது இப்புத்தகத்தின் அற்புதத்தை எடுத்து காட்டுகிறது.

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)


...7. வானத்தின் அடுக்குகள்

வானம் ஏழு அடுக்குகளாக படைக்கப்பட்டுள்ளதாக குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;. பினனர்; வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (குர்ஆன் 2:29)

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்;. ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கடமை அறிவித்தான்...(அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்);. இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும் (குர்ஆன் 41:12)

குர்ஆனில் பல வசனங்களில் கூறப்பட்டுள்ள ஸமாஉ (வானங்கள்) என்பது பூமிக்கு மேலுள்ள வானத்தையும் அதேநேரம் முழு பிரபஞ்சத்தையும் குறிக்கும். இடத்திற்கேற்ப அதன் பொருள் மாறும். இங்கு பூமியின் வளிமண்டலம் ஏழு அடுக்குகளாக படைக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது. (அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்).

இன்று பூமியின் வளிமண்டலம் ஒன்றன் மேல் ஒன்றாக வௌ;வேறு அடுக்குகளை கொண்டுள்ளது. அதில் காணப்படும் இரசாயனம் அல்லது காற்றின் வெப்பநிலைகளை கருதில் கொண்டு பூமியின் வளிமண்டலத்தை ஏழு மண்டலங்கள் அல்லது அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 21

48 மணித்தியாளங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை கணிக்க பயன்படும் 'லிமிடட் பைன் மெஷ் மொடல்' (Limited Fine Mesh Model [LFMMII]) வளிமண்டலம் ஏழு அடுக்குகளை கொண்டுள்ளது என்று கூறுகிறது. நவீன தொழிநுட்பம் வளிமண்டலத்தை ஏழு அடுக்குகளாக பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது.

      
        1வது அடுக்கு : அயன மண்டலம் (Troposphere)
        2வது அடுக்கு : பi ட மண்டலம் (Stratosphere)
        3வது அடுக்கு : இடை மண்டலம் (Mesosphere)
        4வது அடுக்கு : வெப்ப மண்டலம் (Thermosphere)
        5வது அடுக்கு : புற மண்டலம் (Exosphere)
        6வது அடுக்கு : அயன மண்டலம் (Ionosphere)
        7வது அடுக்கு : காந்த மண்டலம் (Magnetosphere)


ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் என்று மேலுள்ள குர்ஆன் வசனம் கூறுகிறது. வேறு வகையில் கூறுவதென்றால் ஒவ்வொரு வானத்திற்கும் வௌ;வேறு கடமைகளை அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். உண்மையில் பின்வரும் அத்தியாயங்களில் உலகிலுள்ள மனிதன் மற்றும் இதர உயிரினங்களுக்கும் பயன்தரக்கூடிய மிக முக்கிய கடமைகளை இவ் அடுக்குகள் செய்கின்றன என்பதை தெளிவாக விளங்கி கொள்வீர்கள். மழை உருவாவதிலிருந்து பயங்கரமான கதிரியக்கங்களை தடுப்பது வரையும், வானொலி அலைகளை திரும்பி அனுப்புவது முதல் விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பது வரையான ஒவ்வொரு அடுக்கிற்கும் தனித்துவமான செயற்பாடுகள் இருக்கின்றன.

கீழுள்ள வசனங்களில் வளிமண்டலத்தின் அடுக்குகளின் தோற்றம் பற்றி கூறுகிறது:

ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காய் படைத்துள்ளான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? (குர்ஆன் 71:15)

அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்;...... (குர்ஆன் 67:3)

இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள 'திபாக்' என்ற சொல்லிற்கு 'அடுக்குகள்' என்பது பொருளாகும். அதாவது 'பொருத்தமான திரை' அல்லது 'ஒரு பொருளை மூடுவதை' குறிக்கும். இது மேலுள்ள அடுக்கு கீழுள்ள அடுக்கில் எவ்வாறு பொருந்தி வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இங்கு 'அடுக்குகள்' என்று பன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளதை நன்கு சிந்திக்க வேண்டும். மேற்கூறப்பட்ட வசனங்களிலுள்ள குறிப்பிடப்படடுள்ள ஏழு வானங்கள் என்பது எவ்வித சந்தேகமுமின்றி வளிமண்டலத்தை குறிக்கும் மிக பொருத்தமான சொல்லாக கருதப்படுகிறது.

20ம் நூற்றாண்டில் நவீன தொழிநுட்ப உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையை 1400 வருடங்களுக்கு முன்னர் எவ்வித தொழிநுட்ப வசதிகளுமின்றி கூறுவதென்றால் அது நிச்சயமாக இறைவனின் சொல்லாகத்தான் இருக்க வேண்டும்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)Saturday, June 5, 2010

மனித சமுதாயமே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதில் என்ன சந்தேகம்-1அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை, மறுமை நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப் பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (குர்ஆன் 39:67)

“உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்”  என்றும் கூறினார்.( 20:98)

 

இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான் ( 22:66)
 

நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரயீல்) இதைக் கொண்டு இறங்கினார்.  (26:191,192)

“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)  நூற்கள்: புஹாரி, முஸ்லிம்
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.

சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களுடைய இறைவேதம் என்று கூறிக்கொள்ளும் நூல்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. அவையெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டவை; இந்த காலத்திற்கு ஒத்து வராது என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களின் வேத நூல்களில் கூறப்பட்ட பல விஷயங்கள் தற்கால நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படுவதும் இல்லை. அது போன்றே அவர்கள், திருக்குர்ஆனையும் நினைக்கின்றனர். இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் (Proven Scientific Facts) எவையும் அல்குர்ஆனிற்கு முரணாக இல்லை என ஒவ்வொரு முஸ்லிமும் மார்தட்டிக் கொள்ள முடியும். அதே நேரம், இதனை விளங்காத மக்களுக்கு இவற்றை எடுத்து விளக்க வேண்டிய கடமை முஸ்லிம்கள் மேல் உள்ளது.

அல்குர்ஆன் போன்ற ஒன்றை யாராலும் உருவாக்க முடியாது என்பதை அது ஒரு சவாலாக முன்வைக்கிறது.

'நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!' (அல்குர்ஆன் 02:23)


உண்மையில் அல் குர்ஆன் அரபு மொழியில் உயர் தரத்தில் அல்லாஹ்வினால் அருளப்பட்டது. அது போன்ற ஒரே ஒரு அத்தியாயத்தைக் கூட எவராலும் இயற்ற முடியாது. இதனை ஒரு சவாலாகவே அல்குர்ஆன் இறக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை மனித குலத்திற்கு விடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அல்லாஹ்வின் சவாலுக்கு முன்னால் மனித மதி இயலாமைக்கு சரணாகதியடைந்துவிட்டது.


அல்குர்ஆன் அருளப்பட்டு 1431 ஆண்டுகளாகியும் இந்த சவாலை முறியடிப்பதில் மனித சக்திகள் தோல்வியடைந்து இறையாற்றலுக்கு முன்னால் அதை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியைத் தழுவி விட்டன என்று துணிந்து கூற முடியும்.


இதேபோல் அல் குர்ஆன் தன்னிகரற்ற மொழி வளமிக்க வேதம் என்பதற்கும் அடுக்கடுக்கான சான்றுகள் அதனுள்ளே நிறைந்துள்ளன. சிந்திக்கும் திறனுள்ளவர்களுக்கு இது ஒன்றே அது இறை வேதம் என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானதாக உள்ளது.


உலகிலுள்ள எல்லா இலக்கியங்களிலும் கவிஞர்களின் ஆக்கங்களிலும் முரண்பாட்டை அதிகளவு காண முடியும். ஆனால் அல் குர்ஆன் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதால் அதனுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்திற்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது.

மற்ற வேதங்களில் காணப்படுவதைப் போன்ற எந்த வித முரண்பாட்டையும் அல்குர்ஆனில் காணமுடியாது என்பதே அது இறைவனிடமிருந்துதான் வந்தது என்பதை மேலும் ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது.


இது பற்றி இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ள அறிஞர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து சில முற்குறிப்புக்களை இங்கு மேற்கோளிடுகின்றோம்.
'...திருக்குர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும், முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபியால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

இறைவனால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டு அவர்கள் வழியாக மக்களுக்குக் கிடைத்ததே திருக்குர்ஆன் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.


நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என்று திருக்குர்ஆனே தெளிவாகப் பிரகடனம் செய்கிறது.


'அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் 'இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். 'நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்'என (முஹம்மதே!) கூறுவீராக! (மேலும் பார்க்க திருக்குர்ஆன்: 10:37 38 11:13 11:35 16:101-103 69:44-46)

முரண்பாடின்மை!
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து அதை இறைச் செய்தி என மக்களிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைக்கக் கூடும்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக உருவாக்கி இதைக் கூறியிருக்க முடியாது என்பதற்கு ஏற்கத்தக்க நியாயமான பல காரணங்கள் உள்ளன.


பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒருநாள் இரண்டு நாட்கள் வேண்டுமானால் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக் கணக்கில் பேசிட இயலாது.


எவ்வளவு பெரிய அறிஞராக இருந்தாலும் அவரது ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தால் ஏராளமான விஷயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.


• முன்னர் பேசியதை மறந்து விடுதல்!
• முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்!
• கவலை துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றிப் பேசுதல்!
• யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்!
• வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்!
• விளைவுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்!


மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால; முரண்பாடுகள் இல்லாமல் பேசும் ஒரே ஒருவரைக் கூட காண முடியாது.


ஆனால் திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால் 23 வருடப் பேச்சுக்களில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில் முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.


மேலே சுட்டிக் காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏக இறைவனின் வார்த்தையாக திருக் குர்ஆன் இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும்.


இறைவனிடமிருந்து வந்ததால் தான் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக் குர்ஆன் அறைகூவல் விடுக்கிறது.


'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.' (திருக்குர்ஆன் 4:82)


மிக உயர்ந்த தரம்!
திருக்குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.


திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால; அரபு மொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் கூட மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வார். அரபு மொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.


மாபெரும் இலக்கியங்களில் பொய்களும் மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும்.


ஆனால் திருக்குர்ஆனில்:
• பொய் இல்லை!
• முரண்பாடு இல்லை!
• ஆபாசம் இல்லை!
• மிகையான வர்ணனைகள் இல்லை!
• கற்பனைக் கலவை இல்லை!
• நழுவுதலும் மழுப்புதலும் இல்லை!
• மன்னர்களையும் வள்ளல்களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை!


இலக்கியத்திற்குச் சுவையூட்டும் இந்த அம்சங்கள் அனைத்தையும் அடியோடு நிராகரித்துவிட்டு உண்மைகளை மட்டுமே மிக உயர்ந்த இலக்கியத் தரத்துடன் திருக்குர்ஆன் பேசியிருப்பது அன்றைய இலக்கிய மேதைகளையும் பிரமிப்புடன் பார்க்க வைத்தது. இன்று வரை அந்த பிரமிப்பு நீடிக்கிறது.


இவ்வளவு உயர்ந்த இலக்கியத் தரத்தில் முஹம்மது நபி ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் அவர் மாபெரும் பண்டிதராகவும் அரபு மொழியில் கரை கண்டவராகவும் அவருக்கு முந்தைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவராகவும் இருந்திருக்க வேண்டும்.


ஆனால் முஹம்மது நபிக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை.
அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (29:48)

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். ( 62:2)


மேலும் அரபு மொழிப் பண்டிதராக இல்லாத முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத முஹம்மது நபி சொந்தமாகக் கற்பனை செய்தால; அது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபு மொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக அதை விட பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச் செய்தியாகத் தான் இருக்க முடியும்.படிக்காத பாமரமக்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம்:
பொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும்.


மிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அந்த மொழியின் பண்டிதர்கள் மட்டும் தான் அதைப் புரிந்து கொள்ள முடியுமே தவிர அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது.


சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் அந்த நூலில் இருக்காது.


ஆனால் திருக்குர்ஆன் அரபு மொழியைப் பேச மட்டுமே தெரிந்த மக்களுக்கும் புரிந்தது. பண்டிதர்களையும் கவர்ந்தது. அரபு மொழியில் உள்ள எண்ணற்ற இலக்கிய நூல்களை இன்றைய அரபுகளில் பலரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அரபு மொழி பேசும் ஒவ்வொருவரும் குர்ஆனைப் புரிந்து கொள்கின்றனர்.


இன்றைக்கும் கூட எந்த மனிதனாலும் இத்தகைய அம்சத்தில் ஒரு நூலை இயற்றவே முடியாது. எந்த மனிதருக்கும் இயற்ற இயலாத ஒரு நூலை மக்களிடம் முன் வைத்துத் தான் 'இது இறை வேதம' என்று முஹம்மது நபி வாதிட்டார்கள்.


குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனை அல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.இசை நயம்!


எந்த இலக்கியமானாலும் அதில் ஓசை அழகும் இசை நயமும் கிடைக்க வேண்டுமானால் அதனுடைய சீர்களும் அடிகளும் ஒழுங்கு முறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் தான் அவற்றில் இசை நயத்தை நாம் உணர்கின்றோம்.


ஆனால் திருக்குர்ஆனில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட அடிகள் இல்லை. மாறாக உரைநடை போலவே அதன் வசனங்கள் அமைந்துள்ளன.


அவ்வசனங்களிலும் குறிப்பிட்ட அளவிலான சொற்கள் இடம் பெறவில்லை. மாறாக சில வசனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும் சில வசனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும் சில வசனங்களில் பத்து வார்த்தைகளும் சில வசனங்களில் ஐந்து வார்த்தைகளும் இருக்கும். ஒரு வார்த்தையே வசனமாகவும் இருக்கும்.


இப்படி அமைந்துள்ள எந்த நூலிலும் இசை நயம் அறவே இருக்காது. ஆனால் எதில் இசை நயத்தை மனிதனால் கொண்டு வர இயலாதோ அந்த நடையில் மனித உள்ளங்களை ஈர்க்கும் இசை நயம் குர்ஆனுக்கு மட்டுமே இருக்கிறது.


அரபு மொழி தெரியாத மக்களும் கூட அதன் இசை நயத்துக்கு மயங்குகின்றனர்.


இசை நயத்துக்கு எதிரான ஒரு முறையைத் தேர்வு செய்து அதற்குள் இசை நயத்தை அமைத்திருப்பது இது முஹம்மது நபியால் கற்பனை செய்யப்பட்டது அல்ல என்பதற்கு மற்றொரு சான்று...' (மேலதிக விளக்கத்திற்கு பார்க்க: திருக்குர்ஆன் தமிழாக்கம்-2009 பீ.ஜைனுல் ஆபிதீன் பதிப்பு -08)

அல்குர்ஆனின் மொழி:


அல்குர்அன் அல்லாஹ்வினால் அரபு மொழியில் அருளப்பட்ட இறுதி வேதமாகும். இதனை யாரும் சந்தேகிக்க முடியாது. சந்தேகிப்பவன் முஸ்லிமாக இருக்கவே முடியாது.


'நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சியமாக நாமே இறக்கிவைத்தோம்' என அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 12:02)
(மேலும் பார்க்க 2:176 3:3, 4:40, 6:8, 59:21, 6:92-100, 12:2)


தெளிவான அரபு மொழியில் அருளப்பட்ட அல்குர்ஆன் மிக அழகிய உயிரோட்டமுள்ள உணர்ச்சி கலந்த நடையில் மனித வாழ்க்கைக்குத் தேவையான இறைவன் வகுத்தளித்துள்ள அனைத்து விடயங்களையும் சிறப்பாக விளக்குகிறது.


அறிவியல், நவீன கண்டுபிடிப்புக்களைக் கூட அதற்கே உரிய கருத்தாழமும் கவித்துவமும் மிக்க எளிய இனிய, அழகிய நடையில் விளக்குவது அனைவரையும் அதன்பால் விரைவாக ஈர்த்துவிடுகிறது.


அல்குர்ஆனின் அரபு மொழி நடையும் ஒத்திசையும் ஓசைப்பாங்கும் தனித்துவமான மொழிப் பண்புக் கூறுகளையுடையது.அதன் உரை நடைப் பாங்கை யாராலும் பின்பற்ற இயலாத தன்மையைக் கொண்டமைந்துள்ளது ஆச்சரியமும் அதிசயமும் மிக்க உண்மையாகும் என இலக்கிய உலகு வியக்கிறது.


அல்குர்ஆன், அதை செவிதாழ்த்திக் கேட்போரின் உள்ளத்தை ஊடுறுவி,
உணர்ச்சிகளைத் தூண்டி,
கண்களைக் கசிய வைத்து,
மனித ஆன்மாக்களை ஆட்கொண்டுவிடுகிறது.
அதன் ஆகர்ஷண சக்தி வேறு எந்த நூலுக்கும் இல்லை.


அல்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முஹம்மது மெர்மெடியூக் பிக்தால் தனது முன்னுரையில் அல்குர்ஆனின் இலக்கிய சுவையை உய்த்துணர்ந்து இவ்வாறு வர்ணிக்கின்றார்.


'அல்குர்ஆன்,  எந்த மனிதனாலும் பின்பற்ற முடியாத ஓசை நயம் கலந்த உரை நடையையும் மனித உள்ளங்களில் உணர்ச்சிகளைத் தூண்டி, கண்களில் கண்ணீர் மல்கச் செய்யும் சொல்லாட்சியையும் கொண்டுள்ளது.


அதன் மூலத்தின் சுவையையும் ஆழ்ந்த கருத்துக்களையும் அவற்றின் உயிரோட்டத்தையும் இழக்காது பிற மொழிகளில் பெயர்த்தல் அசாத்தியமானது. எனவேதான் ஆங்கில மொழிபெயர்ப்பு எனப் பெயரிடத் தயங்கி, மகத்தான திருக்குர்ஆனின் கருத்துக்கள் - வுhந ஆநயniபெ ழக வாந புடழசரைள ஞரசயn - எனக் குறிப்பிட்டுள்ளேன்.'


பொதுவாக, ஒரு நூல் எந்தளவிற்கு இலக்கியத் தரத்தில் உயர்ந்துள்ளதோ, அந்த அளவிற்கு சாதாரண மக்களை விட்டும் அந்நியப்பட்டு, அவர்களால் புரிந்து கொள்ள முடியாமலிருக்கும்.


தமிழில் அற நூலாக (?) மதிக்கப்படும் திருக்குறளின் ஓர் அடியை, அல்லது கம்பராமாயணத்தின் ஒரு சுலோகத்தை கிராமப்புறத்திலுள்ளவரோ, நகர்புறத்திலுள்ள இலக்கியம் அறியாதவரோ புரிந்து கொள்ள முடியாது.


பாமரர்களுக்குப் புரிய வேண்டுமென்றால் இலக்கண, இலக்கிய விதிகளைத் தளர்த்தியாக வேண்டும். அவை, இரண்டுக்கும் முக்கியத்துவமளித்தால், மக்களுக்குப் புரியாது போய் விடும்.


ஆனால், அல்குர்ஆன் அரபி மொழியில் மிக உயர்ந்த, மிகத் தரமான இலக்கியத்தில் அமைந்துள்ளது. அதனால்தான், 14 நூற்றாண்டுகளாகியும் அல்குர்ஆன் விடுத்த சவாலை முறியடிப்பதில், அதை எதிர் கொள்வதில் இலக்கியவாதிகள் தங்களது இயலாமைக்கு சரணடைந்து நிற்கின்றனர்.


அதே வேளையில், பாமர மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அதன் மொழி நடை அமைந்துள்ளமை ஆச்சரியமான, அதிசயமான உண்மையாகும்.


'இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?'(54:17) என அல்குர்ஆன் விளங்க வருமாறு முழு மனித குலத்திற்கும் அழைப்புவிடுக்கிறது.


மேலும் திருக்குர்ஆனில் எண்ணற்ற அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பொதிந்து கிடைக்கின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல், கருவியல், வானியல் என திருக்குர்ஆன் தொடாத அறிவியல் பகுதிகளே இல்லை என கூறும் அளவிற்கு கட்டுக் கதைகளாக இல்லாமல், அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன.


இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள்
Albert Anstain கூறுகிறார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.Maurice Bucaille கூறுகிறார்::
'அந்த நூற்றாண்டில் வாழ்;ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத - இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புக்களின் யதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படி துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது?' -
The Bible, The Quran and Science 1978,p.125

Sir. William Muir  கூறுகிறார்:
'குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்ஆன் அனைத்திற்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.' -
The life of Mohammed, London 1903, ch. The Coran p.vii.
இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவது மில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.

குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர்ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.


திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள்.
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே  உண்டாக்கினான்; அதனிடம் ‘குன்‘ – ஆகுக – என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)

...1. பிரபஞ்சத்தின் தோற்றம் -
20ம் நூற்றாண்டு வரை பிரபஞ்சம் அதன் நிறை மற்றும் அளவில் எல்லயற்றது என்றும் அதற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை எனற கருத்து நிலவியது. ஆகவே இக் கோட்பாட்டை 'நிரந்தர பிரபஞ்ச திட்டம்'
(Static Universe Model) என்று அழைத்தனர்.

நாத்திக தத்துவங்களுக்கு அடித்தளமிட்ட இக்கோட்பாடு இறைவனை மறுத்ததோடு பிரபஞ்சம் நிலையான மாற்றமடையாத பொருட்களின் குவியல்களால் ஆனது என்று வாதிட்டது. அதாவது பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என்று வாதிட்டது. இருப்பினும் 20ம் நூற்றாண்டில் விஞ்ஞானமும் தொழிநுட்பமும் அடைந்த மாபெரும் வளர்ச்சியின் காரணமாக நிரந்தர பிரபஞ்ச திட்டம் என்ற நாத்திக கோட்பாடு குப்பையில் தூக்கியெறியப்பட்டது.

நாம் புதிய சிந்தனையுடன் 21ம் நூற்றாண்டில் காலடி வைத்துள்ளோம். பிரபஞ்சத்திற்கு ஒரு ஆரம்பம் இருந்தது என்றும் அது ஒரு பெரும் வெடிப்பின் மூலம் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து உருவானது என்றும் பல்வேறு வகையான ஆய்வுகளையும், அவதானிப்புகளையும் மேற்கொண்ட உலக புகழ்பெற்ற சிந்தனையாளர்களுடன் சேர்ந்து நவீன பௌதீகவியலும் கூறுகிறது. மேலும் இப்பிரபஞ்சம் நிலையானது என்று நாத்திகர்கள் பிடிவாதமாக போராடிய போதிலும் அவர்களின் கருத்துகள் விஞ்ஞானத்திற்கு எதிரானைவை எனறு திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

அதற்கு மாற்றமாக பிரபஞ்சம் தொடர்ந்து அசைந்து மாற்றமடைந்து விரிவடைந்து செல்கிறது என்ற கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளது சமீபத்தில் நிரூபிக்கப்பட்ட இத்தகைய உண்மைகள் நிரந்தர பிரபஞ்ச திட்டம் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியில் அறையபட்ட ஆணிகளாக கருதப்படுகின்றன. இன்று இவ் அனைத்து உண்மைகளையும் விஞ்ஞான உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி அல்குர்ஆன் பின்வரும் வசனத்தின் மூலம் விளக்குகிறது

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். 
அல்குர்ஆன் (6:101)

இக்கூற்று இன்றைய நவீன விஞ்ஞானத்தோடு முற்றிலும் உடன்படுகிறது.. இன்று கிடைக்கப்பெற்றுள்ள Astrophysics எனும் விண் இயற்பியலின் முடிவுகளின் படி பிரபஞ்சமானது முன்னர்; பதார்;த்தத்தினதும் (matter), காலத்தினதும் (time), பரிமாணம் இணைந்ததாகவே காணப்பட்டது. பின்னர் எப்போதோ ஏற்பட்ட ஒரு பெரும் வெடிப்பின் மூலம் முழுப்பிரபஞ்சமும் தோற்றம் பெற்றது. இந்நிகழ்வானது 'பெருவெடிப்பு' (The Big Bang) என்று அழைக்கப்படுகிறது.

இக்கோட்பாடு பிரபஞ்சமானது ஒன்றுமில்லாத ஒரு நிலையிலிருந்து தோன்றியதை சுட்டிக்காட்டுகிறது. பிரபஞ்சத்தின் தோற்றப்பாடு குறித்து விளக்குகின்ற ஒரே கோட்பாடாக 'பெருவெடிப்புக் கோட்பாட்டை' தான் இன்றைய நவீன விஞ்ஞானம் குறிப்பிடுகின்றது. சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புள்ளியிலிருந்து பிரபஞ்சம் உருவானது என்பதை அனைத்து விஞ்ஞான பிரிவுகளும் ஏற்று கொண்டுள்ளன.

பெருவெடிப்புக்கு முன்னர்; 'பதார்த்தம்' (matter) என்ற ஒரு பொருள் காணப்படவில்லை. இல்லாமை (nothingness) என்ற இந் நிலையில் பதார்த்தமோ (matter), சக்தியோ (energy), குறைந்தது காலமோ (time) காணப்படவில்லை. அதீத பௌதீகவியலின் (metaphysics) விளக்கத்ததின்படி, பதார்த்தம், சக்தி, காலம் யாவும் அப்போது இருக்கவில்லை. இந்த உண்மையானது நவீன பௌதீகவியலினால் சில வருடங்களுக்கு முன்னர் தான் கண்டுபிடிக்க முடிந்த போதிலும் அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்னரே இதனைக் குறிப்பிட்டது.


The sensitive sensors on board the COBE space satellite which was launched by NASA in 1992, captured evidentiary remnants of the Big Bang. This discovery served as evidence for the Big Bang, which is the scientific explanation of the fact that the universe was created from nothing.


ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)


...2. சூடான புகையிலிருந்து நட்சத்திரங்களும், கோள்களும் உருவாகின.

கோள்களைப் பற்றிய இன்றைய நவீன அறிவியலும் மற்றும் அதன் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும், கோட்பாடுகளும் இந்த வான மண்டலங்கள் தோன்றுவதற்கு முன் இருந்த ஒரு நேரத்தில் இவை யாவும் ஒரே தொகுதியாக மேகம் போன்ற புகை மண்டலமாக, அதிக அடர்த்தியான சூடான வாயுக்களைக் கொண்டவையாகக் இருந்து கொண்டிருந்தது.   (The First Thre Minutes, a Modern View of the Originof the Universe, Weinberg, pp.  94-105). மேற்கண்ட இந்தக் கோட்பாடு இன்றைய வானவியலில் மாற்ற முடியாததொரு கோட்பாடாக இருந்து வருகின்றது.  முன்பு எஞ்சியுள்ள புகை மண்டலங்களிலிருந்து இன்று நட்சத்தரங்கள் உருவாகி வருவதாக கண்டுபிடித்துள்ளனர். (படம். 10,11).

இன்று நாம் இரவில் வானத்தில் காணும் நட்சத்தரக் கூட்டம் யாவும் ஒரு காலத்தில் புகை மண்டலமாக இருந்தவைகள் தான்!!!
ch1-1-c-img1.jpg (12269 bytes)Figure 10: A new star forming out of a cloud of gas and dust (nebula), which is one of the remnants of the ‘smoke’ that was the origin of the whole universe. (The Space Atlas, Heather and Henbest, p. 50.)


Figure 11 
(Large)Figure 11: The Lagoon nebula is a cloud of gas and dust, about 60 light years in diameter.  It is excited by the ultraviolet radiation of the hot stars that have recently formed within its bulk. (Horizons, Exploring the Universe, Seeds, plate 9, from Association of Universities for Research in Astronomy, Inc.)  (Click on the image to enlarge it.)
இதைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் போது:

பின்னர் அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான். (அல்-குர்ஆன்: 41-11).

ஏனென்றால் பூமிக்கு மேலே நாம் பார்க்கக் கூடிய சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள், சூரியக் குடும்பங்கள் ஆகியவற்றை நோக்கும் பொழுது அவை அனைத்தும் ஒரே புகை மண்டலத்திலிருந்து பிரிந்தவை தான் என்ற முடிவுக்கும், இவை யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள் என்ற முடிவுக்கும் தான் நம்மால் வர இயலும். மேலும் இவை யாவும் புகை மண்டலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று தனித்துப் பிரிந்து தனித் தனி கோள்களாகப் பரிணமித்தன என்பதை இன்றைய அறிவியல் ஆய்வுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.  இதையே திருமறைக் குர்ஆனில் இறைவன்.

(ஆரம்பத்தில்) நிச்சயமாக வானங்களும்,பூமியும் (இடைவெளியின்றி) இணைந்திருந்தன: பின்னர், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் இந்நிராகரிப்போர் பார்க்கவில்லையா? (அல் குர்ஆன் 21:30).

டாக்டர். அல்பிரட் க்ரோனர் (Dr. Alfred Kroner) என்பவர் உலகப் புகழ் பெற்ற மண்ணியல் ஆய்வாளர்.  இவர் ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் நகரில் உள்ள ஜொஹென்னஸ் க்யூடென்பர்க் (Johannes Gutenberg University) பல்கலைக்கழகத்தில் மண்ணியல் துறைப் பேராசிரியராகவும், மண்ணியல் அறிவியல் துறையின் மண்ணியல் துறைச் சேர்மனாகவும் பணியாற்றி வருகின்றார். இவர் திருமறையில் கூறப்பட்டிருக்கும் வாயவியல் சம்பந்தமான வசனங்களை ஆய்வு செய்த பின், வானவியல் பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது ...  மிகவும் சிக்கலான, மிகவும் நுடபமான தொழில் நுட்பக் கருவிகளைக் கொண்டு, மிக சமீபத்திய ஆண்டுகளில் தான் கண்டுபிடிக்கப்பட்ட பேரண்டத்தின் தோற்றம் பற்றிய உண்மைகளைப் பற்றி அவர்; வாழ்ந்த காலத்தில் அறிந்திருக்க முடியும் என்பது இயலாத காரியம் என நினைக்கின்றேன் எனக் கூறினார்.    (The refernce for thid saying is This is the Truth (video tape). For a copy of this vidio tape, please contact one of the organisations listed on the last page.)

அணு இயற்பியல்  (Nuclear Physics) பற்றி மிகச் சிலர் கூட அறிந்திருக்க இயலாத காலத்தில் வாழ்ந்த முஹம்மது அவர்கள் வானவியல் பற்றி தெரிந்திருப்பார் எனக் கூற முடியாது.  ஒரு உதாரணத்திற்கு அவருடைய நிலையிலிருந்து அவர் கூறியதை ஆராய முற்படுவோமானால், அவர் கூறியது போல வான மண்டலங்களும் பூமியும் ஒரே பொருளிலிருந்து தோன்றியவையே!!!
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)