நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Saturday, February 26, 2011

கடவுள் இருந்தால்...


ஓரிறையின் நற்பெயரால்...
      கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு ரீதியான தவறுகளை முன்னிருத்தி தான் கடவுள் மறுப்பதற்கு ஏதோதோ காரணங்கள் என்று சொல்ல முடிகிறதே தவிர கடவுள் இல்லை என்பதற்கு எந்தவித செயல்பாட்டு காரணங்களையும் கடவுளை நிரகரிப்போர் முன்னிருத்தவில்லை.எனினும் கடவுளை நம்பாமல் இருப்பதால் -கடவுளை நம்புதால் மனித சமுதாயம் பெறும் பயன்பாடு குறித்து இந்த சிறியவனின் பார்வையில்..

 எப்போதுமே., ஒன்றை ஏற்பதால் ஏற்படும் பயன் அதனை ஏற்காமல் இருக்கும்போதும் குறைவாகவோ., அல்லது முழுவதும் இல்லாமலோ இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் கடவுளை நம்பாதவர்களுக்கு ஏற்படும் அனேக இழப்புகள் கடவுளை நம்புவர்களுக்கும் ஏற்படுவதை காண்கிறோம்.இதை மையமாக வைத்து நாத்திக சிந்தனை கடவுள் இல்லை என நிறுவ முயல்கிறது. நாம் முன்னரே சொன்னதுப்போல் கடவுளின் பெயரால் அல்லது கடவுளுக்காக என அறிவற்ற மனிதர்கள் செய்யும் தேவையற்ற வணக்கங்களையும் போலி பூஜை புனஷ்காரங்களையும் காரணம் காட்டியே... கடவுளை மறுக்கிறார்களே., தவிர இதுவல்லாத வேறு எந்த செயல் ரீதியான காரணங்களும் இல்லை.
           
முதலில் ஒன்றை விமர்சிப்பதாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை வெளிபடுத்த வேண்டும் பின்பு அதன் பாதிப்பை நிவர்த்தி செய்யும் ஒரு மாற்று தீர்வை அல்லது மாற்று வழியை கொண்டுவர வேண்டும்... என்ற அடிப்படையில் கடவுளை ஏற்போர் அடையும் துன்பங்களுக்கு ஒரு தெளிவான மாற்று தீர்வை கடவுளை மறுப்போர் தெரிவித்தாக வேண்டும் ஆனால் மாறாக அஃது ஏற்போர் அடையும் அனேக துன்பங்கள் கடவுளை நிரகரிப்போரும் அடைகின்றனர். உதாரணமாக பசி, குடும்பத்தில் பிரச்சனை,மோசடி ,வறுமை, திருட்டு, கொள்ளை, கொலை, ஏமாற்றம், இன்னும் இதைப்போன்ற தனிமனித மற்றும் சமுக ரீதியான இழப்புகள். ஆக இதைப்போன்ற இழப்புகள் இரு சாராருக்கும் பொதுவாக ஏற்படுகிறது என்பது தெளிவு. எனவே இதற்கு "கடவுளை ஏற்பது மறுப்பது " என்ற நிலை தாண்டி ஒரு மூன்றாம் காரணம் இருக்கிறது என்பது விளங்குகிறது அதாவது சுய நலம்,விட்டுக்கொடுக்கும் மனபான்மையின்மை, போட்டியும் பொறாமையும் கொண்ட கெட்ட மனித மனங்களே இதற்கு காரணம்
         
இதை கடவுளை ஏற்போர் மொழியில் சொல்வதாக இருந்தால் கடவுள் கூறும் போதனைகளை ஏற்காமல் தன் மன இச்சையின் படி செயல்படும் மனிதர்களின் செயல் பாடே இதைப்போன்ற அனேக இழப்புகளுக்கு வழி வகுக்கிறது,
        
சரி., அப்படியானால் சுய நல மில்லாத மனிதர்களாக வாழ்(இரு)ந்தாலே இவ்வுலகில் நன்மையே மேற்கொள்ள போதுமானது எனும் போது "கடவுளை ஏற்றுத்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழலாம்...

https://lh4.googleusercontent.com/-OY9UkCpfbVg/TWjBbEbDu3I/AAAAAAAAAPo/uFBnl6mTiHI/s1600/mota_ru_9121112.jpg
   
தாராளமாக நல்லெண்ணமிக்க மனிதர்களால் பிறருக்கு எந்த வித கேடுகளையும் தாராமல் இருக்க முடியும். எனினும் சமுகத்தில் உலவும் கெட்ட மனிதர்களால் சமுகத்திற்கு ஆபத்து தானே.... மேலும் நல்ல மனிதர்களின் மனச்சாட்சியும் எப்போதும் நிலையாக இருக்கும் என்பதை சொல்ல முடியாது
   
ஆனால்.,  கடவுளை ஏற்கும் போது எந்த செயலின் விளையும் நமது மனதிற்கு நன்மையோ தீமையோ ஏற்படுத்துவதாக இருந்தாலும் அஃது கடவுளுக்கு பயந்து நடு நிலையோடு செயல் பட தூண்டும் மேலும் இஸ்லாத்தை பொறுத்தவரை கடவுளுக்கு செய்யும் வணக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே அளவிற்கு சக மனிதர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுக்காப்பு கொடுப்பதை ஒரு கடமையாகவே பணிக்கிறது
  
..."நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்-ஆன். 5:32)
   
தனி மனிதனின் உயிருக்கு இதை விட உயரிய வரையறையே வேறு எந்த சட்டத்தால் தரமுடியும்..?
 
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் தனி மனித வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விளக்குகிறது அதிலும் குறிப்பாக அவர்களின் இறுதி பேருரையில்
  
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: "பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. 
 
"ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.
  
ஆக "படைப்புகள் மீது இரக்கம் காட்டாதவன் மீது படைப்பாளன் இரக்கம் காட்டுவதில்லை போன்ற பொன்மொழிகளும் தனி மனிதனுக்கு அவனது உயிர் மற்றும் உடமைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது
   
இவ்வாறு பிறருக்கு உதவுவதை பிறர் நலன் பேணுவதை ஒரு கடமையாக இஸ்லாம் பணிக்கும் போது இதை ஒரு செயலாக மட்டுமே செய்யாமல் இதற்கும் நாளை நம் இறைவனிடம் வெகுமதி உண்டு என்ற எண்ணத்தில் இதைப்போன்ற நன்மையாக காரியங்களை அதிகமாக செய்வதற்கு "கடவுள்" என்ற சொல் நமக்கு அவசியமாகிறது. எனவே கடவுள் இல்லை என்பதை விட கடவுள் இருக்கிறார் என்ற நிலையில் நாம் பிறருக்கு அதிக நன்மை செய்வதற்கு இயல்பாக மனம் நாடுகிறது. இதே எண்ணத்தின் அடிப்படையிலும் பிறரின் நலன் கெடுப்பதற்கும் கடவுள் தண்டனை தருவார் எனும் போது அதிலிருந்து விலகவே மனம் விரும்புகிறது.

 இந்த நேரத்தில் என் நாத்திக சகோதர்களே., ஒன்றை சிந்தியுங்கள் இஸ்லாம் ஓரே கடவுளை மட்டுமே வணங்குங்கள் என்று சொல்வதோடு சக மனிதர்களுக்கு நன்மை செய்து வாழுங்கள் என்றே சொல்கிறது. இதில் என்ன முரண்பாடு அல்லது பகுத்தறிவிற்கு ஒவ்வாத வாதத்தை கண்டு விட்டீர்கள்...?
இறுதியாக., உங்கள் எண்ணத்தைப் போன்று இறப்பிற்கு பிறகு ஒரு வாழ்க்கை இல்லையென்றால் அஃது அது உண்மையென்றாலும் அதனால் கடவுளை நம்பியதால் அவனை வழிப்பட்டதால் எங்களை போன்றோர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை... ஆனால் நாங்கள் சொல்வதுப்போல இறப்பிறகு பிறகு ஒரு வாழ்விருந்து கடவுளை வணங்காமல் காலம் முழுவதும் வாழ்வை கழித்து அவனது முன் நிற்கும் பொழுது உங்களது நிலைமை....?
           
எங்களுக்கு நூறு சதவிகித நம்பிக்கை இருக்கிறது இறப்பிற்கு பின் உள்ள வாழ்வில் உங்களது நம்பிக்கையே பரிசிலனை செய்ய நீங்களும் மேற்கண்ட பத்தியை மறுமுறையும் வாசியுங்கள்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். (அல்குர்-ஆன் 2:21)

                                                              அல்லாஹ் மிக்க அறிந்தவன்
by brother  gulam

Wednesday, February 9, 2011

மவ்லிது தோன்றிய வரலாறு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN8oW8GeupVlBEsh0YLhcKGu5VpLvYI_8VB17dsgn-mhf4NOpxwLCWWtTl5yW7O34Nq08i3vGeZUHMPLtIOQFJ-T5ujJQCT-ChqlgcrA5b-rSj9bjLvtnQlk59wHXxQeI8P3oC9-wNEo4/s1600/Bismillah_2.JPG


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...

மவ்லிதின் தோற்றம்
மவ்லிது என்ற வார்த்தைக்கு பிறந்த நாள் விழா என்பது பொருள். மவ்லிது என்ற பிறந்த நாளை புனிதர்களுக்கு கொண்டாடுவது எகிப்து நாட்டில் வாழும் கிருத்தவர்களின் வழக்கம்! இந்த எகிப்து நாட்டு கிருத்தவர்கள் மவ்லிது விழாவை தங்கள் கிருத்தவ புனிதர்ளின் பிறந்த நாளை மையமாக வைத்து கொண்டாடி வருகின்றனர். வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை காப்டிக் கிருத்தவர்களால் மவ்லிது பாடல்களும் விழாக்களும் நைல் நதிக்கரை முதல் அஸைட் என்ற பகுதிவரை கொண்டாடுவது வாடிக்கையாகும்!  இதை மையமாக வைத்தே குர்ஆன் ஹதீஸ்களை விளங்காத முஸ்லிம்களில் சிலர் கொண்டாடி மவ்லிதை கொண்டாடி வருகின்றனர். (கைசேதமே!).
கிருத்தவ மவ்லிதுகள்
மவ்லித்-அல்-அத்ரா ("Moulid al-Adra",) மவ்லிது அன்னை மரியம் அவர்களின் நினைவாக அஸ்ஸைட் என்ற பகுதியில் காப்டிக் கிருத்தவர்களால் கொண்டாடப் படுகிறது.

மேரி கிர்கிஸ் ("Mari Girgis Moulid ") மவ்லிது காப்டிக் கிருத்தவர்களால் வெஸ்டு பேங்க் என்ற நைல் மற்றும் லக்ஸர் பகுதியில் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது!

பெயர்தாங்கி முஸ்லிம் மவ்லிதுகள் (குறிப்பாக நமதூரில் மட்டும்)
மீலாதுன் நபி,(சுப்ஹான மவ்லிது) முஹிய்யத்தீன், மவ்லிது இன்னும் பல மவ்லிதுகள்.

மவ்லிதும் சூஃபி, ஷியா, ஷைகுமார்களின் கூத்துக்களும்
காலம் காலமாக கிருத்தவர்களை நடைமுறையை இன்றுவரை எகிப்து நாட்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் பின்பற்றி மவ்லிது விழா கொண்டாடி வருகின்றனர் இந்த விழாவின் உச்ச கட்ட நாளான இறுதிநாளை LEILA-EL-KEBIRA அதாவது மிகப் பெரிய இரவு என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள். நம் தமிழ்நாட்டு வழக்கப்படி கூறுவதாக இருந்தால் சிவன்ராத்திரி! (கைசேதமே!)

இந்த நாளின் இரவை மகத்துவமிக்க நாளாக கருதி சூஃபிக்களும் ஷைகுமார்களும் வண்ண வண்ண ஆடை உடுத்தி நகர ஊர்வளம் சென்று ஜிக்ரு செய்து ஆடிப்பாடி மகிழுவார்கள். (கைசேதமே!)

முன்ஷிதீன் எனப்படும் பாடகர்களை வரவழைத்து ராகங்களுடன் மவ்லிது பாடி தம்புரைன் வாத்தியம் இசைத்து விடிய விடிய கூத்து கட்டுவார்கள். வாசனை திரவியங்களின் கமகமக்கும் நறுமனமும் இசையும், நடனமும் அங்கு கூடியிருப்பவர்களை தெய்வீக தன்மைக்கே அழைத்துச் செல்வதாக நம்புவார்கள். (கைசேதமே!)


மவ்லிதை சிறப்பிக்க ஏற்பாடுகள்
மவ்லிது பாடல்களை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக சூஃபிக்கள் கடுமையான பயிற்சி எடுப்பார்கள்! இந்த விழாவின் இறுதிநாளை (LEILA-EL-KEBIRA மகத்துவமிக்க நாள்??) நகரத்தின் மையப்பகுதியில் வைத்து நடத்தப்படும் இங்கு சூஃபிக்கள் மவ்லிது பாடல்களை பாடவதும் ஷைகுமார்கள் அதற்கு விளக்கம் கொடுப்பதும் என கூத்து அரங்கேரும். இந்த நிகழ்ச்சிகளுக்கு SOWAN (சோவன்) அதாவது தங்களுக்குள்ள திறமையான அறிவாற்றலை வெளிப்படுத்துதல் என்று பொருள்.


இந்த பாடல்களை பாடுபவர்களுக்கு MAWALIDIYA அதாவது மவ்லிது பாடும் குழுவினர் என்று பெயர். இவர்கள் ஒரு இடத்தில் பாடி முடித்து மற்றொரு இடத்திற்கு பாட செல்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இது நடைபெறுகிறது! ஒரு தெருவில் பாடி முடித்துவிட்டு மறு தெருவுக்கு சென்று கச்சேரி பாடுவது! (கைசேதமே!

கிருத்துவ நடைமுறை முஸ்லிம்களிடத்தில் ஆரம்பமானது எப்போது?
நபி(ஸல்) அவர்களோ நாற்பெரும் கலீஃபாக்களோ மற்ற நபித்தோழர்களோ அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 - பக்கம் 172).  


ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.


மீலாது விழாவும் கிரிஸ்மஸும்
ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?

கிறித்துவர்கள் ஈசா நபி பிறந்த நாள் விழா.  முஸ்லிம்கள் முஹம்மது நபி பிறந்த நாள் விழா.



பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)


கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.

முஹம்மத் நபி(ஸல்) அவர்ளை நேசிப்பது எப்படி?
அடுத்து ரசூல்(ஸல்)அவர்களின்மீது நேசம் வைப்பது எப்படி என்றால் மவ்லிது கவிபாடி அல்ல. இதோ நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;


'உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அனஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல்;புஹாரி,எண் 15


நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களை நம் உயிரினும் மேலாக மதிப்பதுதான். இதோ சத்திய சகாபாக்கள் நபியவர்களை நேசித்த விதம்பாரீர்;

நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். எனக்கு ஆஸ் இப்னு வாயில் என்பவன் சில திர்ஹம்கள் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்து விடும்படி கேட்டு அவனிடம் சென்றேன். அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உனக்குக் கடன் தீர்க்க மாட்டேன்' என்று கூறினான். நான், 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு உயிராக்கி எழுப்பும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்' என்று கூறினேன். அதற்கு அவன், 'அப்படியென்றால் நான் இறந்து மீண்டும் உயிராக்கி எழுப்பப்படும் வரை என்னைவிட்டுவிடு. அப்போது எனக்குச் செல்வமும் குழந்தைகளும் கொடுக்கப்படும். பிறகு நான் உன் கடனைத் தீர்ப்பேன்' என்று கூறினான்.


அப்போதுதான், 'எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கிறானோ, மேலும் 'பொருள் செல்வமும் மக்கள் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்' என்றும் கூறுகிறானோ அவனை (நபியே!) நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவான உண்மைகளை அறிந்து கொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்தானா? அப்படியொன்றுமில்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்...' (திருக்குர்ஆன் 19:77-80) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது. நூல்;புஹாரி,எண் 2425


இதுதான் உண்மையில் நபியவர்கள் மீது செலுத்தும் நேசமேயன்றி, 'நீங்கள்தான் பாவங்களை மன்னிக்கக்கூடியவர்' ' நீங்கள்தான் பாவங்களை மன்னித்து, மறைக்கக்கூடியவர்' என்று அல்லாஹ்வின் தண்மைகளை அல்லாஹ்வின் தூதரைநோக்கி பாடுவதல்ல என்பதை மவ்லிது அபிமானிகள் விளங்கிக்கொள்ளவேண்டும்.


இப்படி நாம் கூறினால் இவர்கள் அடுத்து ஒரு வாதம் வைப்பார்கள். அதாவது ஹஸ்ஸான் இப்னு தாபித்(ரலி) அவர்கள் கவிபாடினார்களே என்பார்கள். 

ஹஸ்ஸான்(ரலி) அவர்கள் பாடிய கவி என்ன?
மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), 'நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்' என்று கூறிவிட்டு, அபூ {ஹரைரா(ரலி) பக்கம் திரும்பி, 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூ{ஹல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!' என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ {ஹரைரா(ரலி), 'ஆம் (செவியுற்றிருக்கிறேன்)' என்று பதிலளித்தார்கள். நூல்;புஹாரி,எண் 3212


ஹஸ்ஸான்(ரலி)அவர்கள் இஸ்லாமிய எதிரிகளை நபியவர்களின் அனுமதியோடு கவிநடையில் பதிலளித்தது, நபியவர்களை அல்லாஹ்வின் தன்மைகளை சூடி பாடக்கூடிய 'சுப்ஹானமவ்லிதுக்கு எப்படி ஆதாரமாகும்? சிந்திக்க மாட்டீர்களா? வேண்டுமானால், இந்த ஆதாரத்தை வைத்து புஷ், அத்வானி, நரபலி வேட்டையன் கேடி நம்பர்1 நரேந்திர மோடி,  உள்ளிட்ட இஸ்லாமிய எதிரிகளை நோக்கி கவிதை நடையில் பதிலளியுங்கள்.


அல்லாஹ்வின் தூதரை நேசிப்பது என்பது அவர்களை இயன்றவரை அணு அணுவாக பின்பற்றுவதும் அவர்கள் மீது ஸலவாத்தை அதிகமதிகம் மொழிவதும்தான்! அல்லாஹ் பூமியில் சிலவானவர்களை ஏற்படுத்தியிருக்கிறான். என்மீது ஸலவாத் கூறப்பட்டால் அதை எனக்கு எடுத்துக்காட்டுவார்கள் என்ற நபிமொழியின் மூலம் மரணித்துவிட்ட நபியவர்களுக்கு சொல்லப்படும் ஸலவாத்கள்தான் அவர்களை சென்றடையுமேயன்றி, மவ்லிது கவிகள் அல்ல.


எனவே மவ்லிது என்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். மவ்லிதும் மார்க்கம்தான் என்று வரட்டுவாதம் பேசாமல், பக்தி முலாம் பூசாமல், இஸ்லாத்தை முறிக்கும் தவறான நச்சு கருத்து கொண்ட மவ்லிதை தவிர்த்து உரிய முறையில் நபி(ஸல்) அவர்களை பின்பற்றி உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!

மேலும் பார்வைடுங்கள
இஸ்லாத்தை முறிக்கும் தவறான நச்சு கருத்து கொண்ட சுப்ஹான மவ்லிது வரிகள்...

Tuesday, February 1, 2011

ஸ்பெயினில் முஸ்லிம் மக்கள் தொகை 82 சதவீதம் அதிகரிக்கும்


“நிச்சயமாக அல்லாஹ் எனக்கு பரந்து விரிந்த இந்த உலகின் எல்லைகளைக் காட்டினான். அவன் எனக்கு கிழக்கையும் காட்டினான், அவன் எனக்கு மேற்கையும் காட்டினான். மேலும் அவன் என்னிடம், என்னுடைய உம்மத்து (சமுதாயம்) நான் கண்ட எல்லை வரையிலும் பரவும் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: -

வருகிற 2030-ம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டின் முஸ்லிம் மக்கள்தொகை 82 சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


'ஃப்யூ ஃபாரம் ஆன் ரிலிஜியன் அண்ட் பப்ளிக் லைஃப்' என்ற அமைப்பு சர்வதேச அளவில் முஸ்லிம் மக்கள் தொகையை குறித்த ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்விற்கு 'தி ஃப்யூச்சர் ஆஃப் க்ளோபல் முஸ்லிம் பாப்புலேஷன்' என்றுபெயர். இவ்வாய்வில் ஸ்பெயின் நாட்டில் முஸ்லிம் மக்கள் தொகை அடுத்த இருபது ஆண்டுகளில் அதாவது 2030 ஆம் ஆண்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை தற்போதைய பத்து லட்சத்திலிருந்து பத்தொன்பது லட்சமாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஜனத்தொகை அதிகரிப்பதற்கு ஆய்வாளர்கள் கூறும் முதல் காரணம் என்னவெனில், பிற நாடுகளிலிருந்து ஸ்பெயினுக்கு வரும் முஸ்லிம்கள் எண்ணிக்கையாகும்.

இரண்டாவதாக ஸ்பெயினில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகும்.

கடந்த 7 ஆண்டுகளில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இக்கால அளவில் 20 ஆயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிம்களாக மாறியுள்ளனர்.

ஸ்பெயினில் முஸ்லிம் ஜனத்தொகையின் அடுத்த இருபது வருடங்களுக்கான வருடாந்திர வளர்ச்சி சதவீதம் 1.5 ஆகும். ஆனால், இதர மதத்தவர்களின் வளர்ச்சி சதவீதம் 0.7 ஆகும். இந்த ஆய்வினைக் குறித்து கருத்துத் தெரிவித்த இஸ்லாமிய ஆய்வுத்துறை வல்லுநர் அப்துல் அஸீஸ் ஆயதி ப்ரஸ் டி.விக்கு அளித்த பேட்டியில், "இது நல்லதொரு செய்தியாகும். எங்கள் குரலை அனைவரும் கேட்க துவங்கியுள்ளனர். எங்கள் கருத்துக்கள் அரசியல் மற்றும் சமூக களத்தில் அதிக மதிப்புடையதாக மாறியுள்ளது. பெரும்பாலான முஸ்லிம்கள் அரசியல் வாதிகளாக உள்ளனர். மேலும் அவர்கள் ஸ்பெயின் சமூகத்தில் ஒருவருக்கொருவர் உதவும் பொருட்டு நெட்வொர்க்கை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.

உலகில் தற்போதைய முஸ்லிம்களின் ஜனத்தொகை 1.6 பில்லியனிலிருந்து(160 கோடி-23.4சதவீதம்) அடுத்த இருபது ஆண்டுகளில் அதாவது 2030 ஆம் ஆண்டில் 2.2 பில்லியன்(220 கோடி-26.4சதவீதம்) வளர்ச்சியடையும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
News source:presstv