நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Friday, April 29, 2011

இயேசு அழைக்கிறார்

ஏக இறைவனின் திருப்பெயரால்......
அன்பான சகோதர, சகோதரிகளே...! கர்த்தருடைய நீதி விசாரணை நாள் நெருங்கிவருகிறது.

அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்,
(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 24:36)

சகோதர, சகோதரிகளே...! கர்த்தர் சொல்லும் அந்த நாள் நம்மை நெருங்கி வருகிறது... அது எப்பொழுது வருமோ என நாம் பயத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், நாம் இந்த உலகத்து அற்ப வாழ்வில் நன்மை செய்திருந்தால் பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றியும், இவ்வுலகில் தீமை செய்திருந்தால் பரலோகத்தில் நமக்கு இழிவும், நாசமும் கொண்ட நரகத்தையும் தருவதாக கர்த்தரே சொல்கிறார்.

நாம் செய்த கருமத்துக்கு அந்நாளில் நாம்தானே அனுபவித்தாக வேண்டும்...? வேறு யாரும் நம்முடைய கருமங்களுக்கான பொறுப்பைச் சுமக்க முடியாது என்பதை பின்வரும் வசனம் தெளிவு படுத்துகிறது :

பாவம் செய்கின்ற ஆத்மாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கிறது. துன்மார்க்கனுடைய துன்மார்க்கம் அவன் மேல்தான் இருக்கும்.
(பழைய ஏற்பாடு  எசக்கியேல் 18:20)

ஆக, தப்பிச் செல்ல முடியாத அந்த மகத்தான நாளின் ராஜா கர்த்தர் மட்டுமே...!
கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள். (பழைய ஏற்பாடு  எரேமியா 10:10)

அப்படிப்பட்ட ஒரே தேவனாகிய கர்த்தரை மட்டுமே நாம் வணங்கவேண்டும். அப்படி கர்த்தரை மட்டும் வணங்காமல் இருந்தால் பரலோக ராஜியத்தில் இடமில்லை என்பதை ஏசுவே கூறுகிறார்:

பரலோகத்திரிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை. (புதிய ஏற்பாடு - மத்தேயு 7:21)

ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்கவேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச் சொல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகாதா...? ஏசுவின் பெயரைச் சொல்ரி இல்லாத காரியம் பண்ணுகிறவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். இதோ:
அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா...? உமது நாமத்தினாலேயே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா...? உமது நாமத்தினாலேயே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா...? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லை... அக்கிரமச் செய்கைக்காரரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
(மத்தேயு 7:21-23)

அன்பான சகோதர, சகோதரிகளே...! ஏசு வணங்கப்படுபவர் அல்லர். ஏசுவுடன் சேர்ந்து நாமும் வணங்கவேண்டியது அந்த கர்த்தரை மட்டும்தான். கர்த்தர் என்பதைத்தான் ஆங்கில மொழியில் GOD என்றும் அரபி மொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கின்றனர். அந்த கர்த்தராகிய அல்லாஹ், ஏசுவைப் பற்றி இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறார். ஏசுவை திருக்குர்ஆன் ஈஸா என்று அழைக்கிறது.

பின்னர் (மேரி என்ற மர்யம்) அக்குழந்தையைச் சுமந்துகொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினார்கள்: மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்! ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே...! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை (என்று பழித்துக் கூறினார்கள்.)

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன்பால் மேரி சுட்டிக்காட்டினார். நாங்கள் தொட்டிரில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்? என்று கூறினார்கள். நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கிறேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும் என்னை தூதராக ஆக்கியிருக்கின்றான்.

இன்னும் நான் எங்கிருந்தாலும் அவன் என்னை நற்பாக்கியமுடையவனாக ஆக்கி இருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (ஏழை வரி) நிறைவேற்ற எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்.) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர்பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும் என்று (குழந்தை ஏசு) கூறியது.
இ(த்தகைய)வர்தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஏசு ஆவார்.) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களோ அதைப்பற்றி உண்மையான சொல் (இதுவேயாகும்.)
(திருக்குர்ஆன் அத்தியாயம் 19.வசனம் 27-34.)

அதுமட்டுமல்ல. ஏசு என்ற ஈஸா (அவர் மீது சாந்தி நிலவட்டுமாக) மனிதர்களால் கொல்லப்படவும் இல்லை. எதிரிகள் அவரைக் கொல்ல நினைத்தபோது கர்த்தர் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டார்.

இன்னும் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் (மேரியின்) குமாரராகிய ஈஸா (ஏசு) மஸீஹை கொன்றுவிட்டோம் என்று அவர்கள் (யூதர்கள்) கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப் பட்டனர்.) அவர்கள் அவரைக் கொல்லவும் இல்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப் பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் அத்தியாயம் 4. வசனம் 157,158)

கர்த்தர் அளவில் உயர்த்தப்பட்ட ஏசு நெருங்கிவரும் இறுதிநாளின் அத்தாட்சியாக மீண்டும் இந்த உலகில் தோன்றவிருப்பதை முஸ்ரிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நிச்சயமாக அவர் (ஏசு) இறுதி காலத்திற்குரிய அத்தாட்சி ஆவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம். மேலும் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேரான வழியாகும். (திருக்குர்ஆன் அத்தியாயம் 43. வசனம் 61)

இதற்குப் பின்னரும் ஏசுவையோ அல்லது அவரது தாயாரையோ அல்லது சிலுவையையோ வணங்குபவர்களுக்கும், கர்த்தர் இறக்கியருளிய இறுதி ஏற்பாடான திருக்குர்ஆனை நம்பாதவர்களுக்கும் எதிராக நீதி விசாரணை நாளில் ஏசுவே சாட்சி சொல்லவிருக்கிறார்.

இன்னும், மர்யம் (மேரி) உடைய மகன் ஈஸா (ஏசு)வே, அல்லாஹ்வை (கர்த்தரை) அன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது (ஏசுவாகிய) அவர், (இறைவா!)நீ மிகவும் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற் கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய். உன் உள்ளத்திரிருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்.

நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே (கர்த்தரையே) வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப் பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவார்.)
(திருக்குர்ஆன் அத்தியாயம் 5. வசனம் 116,117)

அன்பான கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளே...! எல்லாம்வல்ல கர்த்தராகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதன் மூலம் மட்டுமே பரலோக ராஜ்ஜியத்தில் மோட்சத்தை அடைய முடியும் என்று இதன் மூலம் அறியலாம். அறியாமையில் இருந்து விடுபட்டு நேர்வழியின்பக்கம் வரும் கிறிஸ்துவர்களை நோக்கி எல்லாம்வல்ல கர்த்தர் கூறுகிறார்:
நிச்சயமாக யூதர்களையும், இணை வைப்பவர்களையும் விசுவாசிகளுக்குக் கடும் பகைவர்களாகவே (தூதரே!) நீர் காண்பீர்.

நிச்சயமாக நாங்கள் கிறிஸ்துவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, விசுவாசிகளுக்கு (முஸ்ரிம்களுக்கு) நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர். ஏனென்றால், அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.

இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை(திருக்குர்ஆன் வசனத்தை)ச் செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். எங்கள் இறைவனே! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கைக் கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்துகொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். (திருக்குர்ஆன் அத்தியாயம் 5. வசனம் 82-84)

அன்பார்ந்த கிறிஸ்துவ சகோதரர்களே...! ஒருவரை நாம் உண்மையிலேயே மதிக்கிறோம் என்றால் அவரை நாம் பின்பற்ற வேண்டும், அவரது போதனைகளை ஏற்கவேண்டும். ஏசுவின் பெயரால் அவர் அல்லாதவர்கள் சொல்வதையெல்லாம் பின்பற்றுவது சரியா? அல்லது எந்த ஏசுவை நீங்கள் உயிருக்குயிராக மதிக்கிறீர்களோ அந்த ஏசுவை அப்படியே பின்பற்றுவது சரியா? சற்று பொறுமையுடன் சிந்தித்துப் பாருங்கள்...!

சத்தியத்தை ஏற்றுக்கொண்ட மக்களாக நாம் வாழ்ந்திட, ஏசு அழைக்கும் மெய்வழியான இஸ்லாமிய நெறியின் பக்கம் வாருங்கள்...! பரலோக ராஜியத்தில் பரிபூரண வெற்றியைப் பெறுங்கள்...! கர்த்தர் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக...!


நன்றி : சமூக நல்லிணக்க மையம் (CESH)
http://otrumai.net/ 


தொடர்புடைய ஆக்கங்கள் நாம் தேடும் தலைவர்...

ஏக இறைவனின் திருப்பெயரால்......

அன்புச் சகோதர, சகோதரிகளே...! இன்றைய நாட்களில் ஒரு அமைப்பிற்கோ, கட்சிக்கோ, மதத்திற்கோ தலைவர் ஒருவர் உருவானால் அவர் எப்படியெல்லாம் புகழப்படுகின்றார், அவர் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் மக்கள் செலுத்தும் மரியாதைகள், நாகரீகமான இந்த காலத்தில்தானா நடக்கின்றது என்ற எண்ணம் நமக்கே உருவாகின்றது. ஒரு ஏரியா தலைவர் என்றால் நூற்றுக்கு மேற்பட்ட கார்களில் பவனி, ஒரு மதத்தலைவர் என்றால் பல்லக்கில் ஊர்வலம், எடைக்கு எடை நாணயம், அவர் இறந்த பின்போ அவரையே தெய்வமாகக் கருதி செய்யப்படும் வழிபாடுகள்... இப்படி மனிதனுக்கே உள்ள பகுத்தறிவை சிறிதும் கண்டுகொள்ளாத கற்கால பழக்கங்கள் இன்றும் இருந்து வருகின்றன.

இன்றே இப்படி என்றால், 1430 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்... அன்றைய அரேபிய மண்ணில் ஒரு கொலைக்கு ஆயிரம் வருட பகை கொண்டாடும் ஜாதிகள், பெண்ணை இழிவாகக் கருதிய சமுதாயம், நாளொரு கடவுளை வணங்கும் பக்தர்கள், ஜோசியத்தில் மூழ்கிய மக்கள், தண்ணீருக்கு பதிலாக மது குடிக்கும் குடிமகன்கள், சூதாட்டங்கள், வட்டி, சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் மலிந்து காணப்பட்ட அந்த நாளில்தான் மக்கா என்ற நகரில் அப்துல்லாஹ், ஆமினா என்ற தம்பதியருக்கு மகனாக முஹம்மத் என்பவர் பிறக்கின்றார். பிறக்கும் முன்பே தந்தையை இழந்த அவர் தனது ஆறாவது வயதில் தாயையும் இழந்து அநாதையாகிறார். பின்பு உறவினர்களால் எடுத்து வளர்க்கப்படுகிறார்.

அவரது நாற்பதாவது வயதில் ஆதாம், ஆப்ரஹாம், தாவீது, சாலமன், மோஸஸ், ஏசு (அவர்கள் அனைவர்மீதும் இறைசாந்தி நிலவட்டும்.) ஆகியோரின் வரிசையில் இறைவனின் தீர்க்கதரிசனத்தைப் பெற்று, இறைத்தூதர் ஆகிறார். அவருக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் மூலம் உலகில் இஸ்லாமியப் புரட்சி தொடர்கிறது.

மனித சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த சாதிகளை ஒழிக்கிறார். இன, மொழி, நிற வேற்றுமைகளைக் களைகிறார். தன்னைப் பின்பற்றும் மக்களை தன் உற்ற தோழர்களாக கருதி, தான் சொல்லும் சொல்லை உடனுக்குடன் அப்படியே ஏற்று நிறைவேற்றும் மக்களாக மாற்றுகிறார். சாராயம் வாங்குவது, குடிப்பது, விற்பது, ஊற்றிக் கொடுப்பது என அனைத்தையும் தடை செய்கிறார்...

வெறும் போகப் பொருளாகப் பாவிக்கப்பட்ட பெண்களுக்கு ஆன்மா உண்டா என்று அறிஞர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் ஆராய்ச்சி செய்யப்பட்டுவந்த அந்தக் காலத்தில், பெண்களுக்கும் ஆண்களுக்கு இருப்பதைப் போல உரிமைகள் உண்டு என்று இறைவன் அவர் மூலம் நமக்களித்த வேதத்தைக் கொண்டு அறிவித்தார். தன்னலம் மறந்து தான் ஈன்றெடுக்கவிருக்கும் குழந்தையைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அது பிறந்து, வளர்ந்து, சொந்தக் காரில் நிற்கும் வரை தன் தலையில் சுமக்கும் தாயை மதிக்காதவனுக்கு சுவர்க்கம் இல்லை என்று கூறினார்.

இவற்றின் மூலம் எண்ணற்ற படைப்பினங்களை எல்லாம் கடவுள்களாக வணங்கிக்கொண்டிருந்த அன்றைய மக்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையால் கவரப்பட்டார்கள். அதனால் சடங்கு  சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன. உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஏழை  பணக்காரன் என்ற பாகுபாடு நீங்கியது. பொருளாதார வசதி பெற்றவர்கள் ஏழை மக்களுக்கு ஏழைவரி (ஜகாத்) என்ற பெயரில் தங்கள் சம்பாத்தியத்திரிருந்து ஒரு சிறு பகுதியைக் கொடுக்கத் துவங்கினர்.

வட்டி என்ற கொடுமையில் சிக்கித்தவித்து, வாழ வக்கற்றுப் போன மக்களுக்கு திருக்குர்ஆன் மூலம் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, வட்டி வாங்குவது, கொடுப்பது, அதற்கு கணக்கு எழுதுவது, சாட்சி சொல்வது ஆகிய இவையனைத்தும் இறைவனிடம் கடும் தண்டனைக்குரியது என்று உணர்த்தி அன்றைய அரபு சமுதாயத்தின் ஆணிவேராக இருந்த வட்டியை அடியோடு ஒழித்துக் காட்டினார்.

ஓய்வில்லாப் பிரச்சாரத்தின் விளைவுகளால் சுயநலம் பாதிக்கப்பட்ட சிலர், இவர் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தபோதிலும், சமுதாயத்துக்கு செய்திகள் சென்றடைய வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு, அத்தாக்குதல்களை இன்முகத்துடன் சகித்துக்கொண்டார். பிறந்து வளர்ந்த மக்கா நகரத்திரிருந்து துரத்தப்பட்டு, மதீனா என்ற நகருக்கு அவர் சென்றபோது, அங்குள்ள மக்களால் அரவணைக்கப்படுகிறார். அங்குள்ள மக்களைக்கொண்டு ஓர் அழகிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறார்.

இன்று நம் நாட்டில் ஒரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினரைப் பார்ப்பதற்கே பல அப்பாய்ண்ட் மென்டுகள் வாங்க வேண்டிய நிலையில், உலகின் ஒரு பெரும் பரப்பைக் கொண்ட சாம்ராஜ்ஜியத்தின் அதிபரை நாட்டின் சாதாரணக் குடிமகன் ஒருவன் கூட நினைத்த நேரத்தில், எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி பார்க்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.

அன்றைய மாபெரும் அரசுகளான ரோமாபரியும், பாரசீகமும் இவரது காலடியின் கீழ் வந்தது. முழு அரபுலகிற்கும் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார். அப்பேர்பட்ட மாமன்னரின் அரண்மனை எப்படி இருந்தது தெரியுமா? பெரிய மாளிகை அல்ல! சிறிய வீடு அல்ல! ஐந்துக்கு ஐந்து அடி பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய அறைதான்! படுத்திருந்ததோ ஒரு சிறு கயிற்றுக் கட்டில். அதில் படுத்துப் படுத்து, அதன் சுவடுகள் அவரது மேனியில் எப்போதும் காணப்படும்.
செய்யப்படும் குற்றங்களுக்காக உடனுக்குடன் தண்டனைகள் வழங்கப்பட்ட காரணத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தங்களுக்குக் நியாயம் கிடைத்ததை எண்ணிப் பெருமிதப்பட்டு மன நிம்மதி அடைந்தனர். அவர் காட்டித் தந்த இறைச் சட்டங்களால் குற்றங்கள் மிகவும் குறைந்துவிட்ட நிலை. இன்று இஸ்லாமிய சட்டங்களில் ஒரு சிறு பகுதியை மட்டுமே செயல்படுத்திவரும் சவூதி அரேபியா நாட்டில் மற்ற அனைத்து உலக நாடுகளையும் விட குற்றங்கள் குறைவு என்று இன்றைய ஆய்வுகள் கூறுவது இதற்கு மாபெரும் சான்று.

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிப்போம் என்றார் பாரதி. அது கானல் நீராகத்தான் இன்றுவரை உள்ளது. ஆனால், இறைத்தூதர் முஹம்மது அவர்கள் தன் வாழ்நாளிலேயே அதை நிறைவேற்றிக் காட்டினார். அண்டை வீட்டாரை நேசிக்காதவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்று முழங்கினார். பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க நீ மட்டும் ருசியாகச் சாப்பிடாதே...! என்றார். பக்கத்து வீட்டாருக்காக நீங்கள் சமைக்கும் நீர் ஆகாரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்...! என்று வரியுறுத்தினார்.

ஒரு பெண், நள்ளிரவில் தன்னந்தனியாக நகை அணிந்துகொண்டு வெளியில் சென்றுவிட்டு பத்திரமாக என்று வீடு திரும்புகிறாளோ அன்றுதான் நம் நாட்டுக்கு உண்மைச் சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்றார் நம் தேசத்தந்தை காந்தியடிகள். அப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் இதுவரை கிடைக்கவும் இல்லை. இனி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஆனால், நபிகள் நாயகம் முஹம்மது அவர்களோ தன் வாழ்நாளிலேயே இதையும் சாதித்துக் காட்டினார். இன்றும் சில அரேபிய நாடுகளில் தொழுகை நேரம் வந்துவிட்டால் விலை மதிப்புமிக்க கடைகள் அனைத்தையும் திறந்த நிலையிலேயே போட்டுவிட்டு பள்ளிவாசல் நோக்கிச் செல்வதைப் பார்க்கிறோம். அங்கெல்லாம் எந்தத் திருட்டும் நடைபெறுவதில்லை.

இன்று பல்வேறு நாடுகளிலும் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்படுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். எண்ணற்ற சித்ரவதைகளைச் சந்திக்கின்றனர். ஏன்? உயிர் கூட பறிக்கப்படுகிறது. ஆனால், அன்று நபிகள் நாயகத்தின் தலைமையில் உருவான சமுதாயம் பல்வேறு இழப்புகளுக்கு ஆளான பிறகும் போருக்குத் துணியவில்லை. துன்பங்கள் அளவுக்கதிகமான காரணத்தால் போர் திணிக்கப் பட்டபோது கூட போரில் வெற்றி பெற்று கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பிறகும், அந்தக் கைதிகளைத் தண்டிக்காமல், தம்மைச் சார்ந்த மக்களுக்கு கல்வி கற்பித்துக் கொடுத்துவிட்டு விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற அழகான நடைமுறையை ஏற்படுத்தி உலகிற்கே போர் நெறியைக் கற்றுக் கொடுத்தார்.

இன்று நமக்கெல்லாம் கல்வியை வழங்கியது ஐரோப்பா. ஆனால் அந்த ஐரோப்பாவிற்கே கல்வியை வழங்கியது இஸ்லாம். அந்த அளவுக்கு அவரது சமுதாயத்தை கல்வியின்பால் தூண்டினார் நபிகள் நாயகம் அவர்கள்.

இன்று உலகில் பல தலைவர்களின் வாழ்க்கையில் ஒரு பக்கம்தான் நமக்குக் காட்டப்படுகிறது. அவர்களின் மறு பக்கத்தைத் திறந்தாலோ அவரது இமேஜ் அதல பாதாளத்திற்குச் சென்றுவிடும். ஆனால் நபிகள் நாயகம் முஹம்மது அவர்களின் வாழ்க்கையோ பதிவு செய்யப்பட்ட திறந்த புத்தகமாக இன்றும் உள்ளது. அவரது அந்தரங்க விஷயங்கள் கூட மக்களுக்கு முன்மாதிரியாக்கப் பட்டுள்ளது. அவரது வீட்டாரில் ஒருவர் கூட அவரைப் பற்றிப் புகார் கூறியதில்லை. அவரிடம் வேலை பார்த்த ஒரு மாற்று சமய சிறுவன் கூட, என்னை முஹம்மது அவர்கள் ஒருபோதும் சுடுசொல் கூட சொன்னதில்லை என்றான்.

ஓர் இறைவனை வணங்கும் பள்ளிவாசல் ஒன்றில் முஸ்ரிமல்லாத சகோதரர் ஒருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது அதைக் கவனித்த நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைக் தடுக்கவும், கண்டிக்கவும் முனைத்தனர். அப்போது அவர்களைத் தடுத்த முஹம்மது அவர்கள் அந்த நபரை முழுமையாக சிறுநீர் கழிக்க விட்டுவிட்டு, தன் கையாலேயே அதற்குத் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து, கண்ணியமாகவும், மனம் நெகிழும் முறையிலும் அந்த நபருக்கு அறிவுரை வழங்கினார்கள். அதைக் கேட்ட அந்த நபரும் கண்கலங்கி, செய்த தவறுக்காக வருந்தி, ஒழுக்க வாழ்வு வேண்டி அந்த இடத்திலேயே நபிகள் நாயகம் முஹம்மத் அவர்களைப் பின்பற்றி வாழ முடிவெடுத்தார். இப்படிப்பட்ட சரித்திரங்களையெல்லாம் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் மட்டுமே காணமுடியும்.

இவ்வளவு ஏன்? நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை கடும் எதிரியாகப் பார்த்தவர்கள் கூட அவருடைய ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை மட்டும்தான் எதிர்த்தார்களே தவிர, அதைச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நம்பிக்கையாளர், உண்மையாளர், தன்னலமற்றவர் என்றெல்லாம் சொன்னதை நாம் சரித்திரத்தில் தெளிவாகக் காணமுடியும்.

இன்று தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர், தாங்கள் பதவியிரிருக்கும்போதும், பதவியிரிருந்து ஓய்வு பெறும்போதும் தங்களுக்கென்று பல சொகுசுகளைக் கேட்டுப் பெற்று அனுபவித்துவரும் காட்சிகளை நாம் கண்கூடாகக் கண்டே வருகிறோம். அந்தத் தலைவர்கள் மறைந்த பிறகும் கூட, அவரது குடும்பத்தினர் பென்ஷன், உதவித்தொகை என்ற பெயர்களில் மக்கள் பணத்தைப் பெற்றுக்கொள்வதை நம்மால் காணமுடிகிறது. ஆனால் முஹம்மது அவர்கள், தான் உயிருடன் இருக்கும் காலத்திலேயே தானும், தனது குடும்பமும் அரசாங்கப் பொது நிதியிரிருந்து ஒரு துரும்பையும் தொடக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

இந்த விபரம் தெரியாத அவரது பச்சிளம் பேரக்குழந்தை ஒன்று அரசுக் கருவூலத்திரிருந்த பேரீச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டு விடுகிறது. அதைக் கண்ட நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் அந்தக் குழந்தையைத் துப்பச் செய்து அதற்கு அறிவுறுத்துகிறார். அதுபோல, தான் இறந்த பிறகும் தன் குடும்பத்தார் அரசுக் கருவூலத்திரிருந்து எதையும் அனுபவிக்கக் கூடாது என்று கட்டளை பிறப்பித்துவிட்டார். அதனடிப்படையில் அவரது குடும்பத்தாரும் வாழ்ந்து காட்டினர். இவையெல்லாம் சரித்திரம்!

அவர் தீர்க்கதரிசியாவதற்கு முன்பு வரை, அரபு சமுதாயத்தில் புகழ் பெற்ற பெரும் செல்வந்தர்களுள் ஒருவர். ஆனால் அவர் மரணிக்கும் போதோ... அவர் பயன்படுத்திய ஒரு பாத்திரமும், சில ஆடுகளும்தான் மிச்சமிருந்தன. அவரது கவச ஆடை கூட ஒரு சில மரக்கால் அளவுள்ள உணவுப் பொருட்களுக்காக ஒரு யூதரிடம் அடமானமாகக் கொடுக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட நேர்மையான, எளிமையான, கனிவான, சுத்தமான வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட ஒருவரை இதுவரை அறிந்திருக்கிறோமா? இனியாவது பார்க்கத்தான் முடியுமா? ஒரு தலைவர் வாழும் காலத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள், அவர் இறந்தபின் இன்னொரு தலைவரை ஏற்றுக்கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்து 1430 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் நாளுக்கு நாள் அவரைப் பின்பற்றும் மக்கள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறதே தவிர குறையவில்லை... அவருக்குள்ள தலைமையை வேறு எவருக்கும் எவரும் கொடுத்ததில்லை... இன்று உலகில் ஐந்தில் ஒருவர் என்ற கணக்கில் மக்கள் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அவர் காட்டித்தந்த சத்திய இஸ்லாம் மார்க்கமும், அதனடிப்படையில் அமைந்த அவரது அழகிய வாழ்க்கை நெறியும்தான்.

அதனால்தான் பிரபல கிறிஸ்துவ அறிஞரான மைக்கேல் ஹார்ட் என்பவர் தான் எழுதிய தி ஹன்ட்ரட் என்ற நூரில் உலகின் தலைசிறந்த 100 பேரைப் பட்டியரிடும்போது அதில் முதல் நிலைக்குத் தகுதியானவர் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் என்று எழுதியிருப்பதை நாம் காண்கிறோம். ஆகவே, தலைசிறந்த பண்புகளைத் தன்னகத்தே கொண்ட, நேர்மையான, அப்பழுக்கற்ற ஒரு தலைவரை நாம் தேடினோம்.

இதுவரை உங்கள் முன் ஒரு மாமனிதரின் வாழ்க்கையிரிருந்து சில துளிகளைத் தந்துள்ளோம். இவ்வளவு சிறப்புகளைத் தன்னகத்தே பெற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த தூய்மையான வாழ்க்கை நெறிதான் இஸ்லாம். இஸ்லாம் ஒரு மதமல்ல...! மாறாக, ஒருவனை ஒழுக்கசீலனாக மாற்றிக் காட்டும் அழகிய வாழ்க்கை வழிகாட்டி. அதே நேரத்தில், இந்த மார்க்கத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று எவ்வித நிர்ப்பந்தமும் கிடையாது. ஏற்பதும், மறுப்பதும் அவரவர் விருப்பத்தைப் பொருத்தது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எந்த விதமான) நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிரிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகி விட்டது... (திருக்குர்ஆன் 2:256).


நன்றி : சமூக நல்லிணக்க மையம் (CESH)
காயல்பட்டணம். 


Thursday, April 28, 2011

அல்லாஹ் அல்லாதவைகளை அல்லாஹ் என்று அழைத்தால் மட்டும் இணைவைப்பா...?

ஏக இறைவனின் திருப்பெயரால்.......
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.

அன்பான சகோதர சகோதரிகளே, அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்: -
 • ‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)
இந்த வசனத்தில் அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் என்று கூறியிருப்பதை சற்று கவனத்துடன் ஆராயவேண்டும். ஏனென்றால் இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணைவைப்பது என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டு அவற்றிலிருந்து முற்றிலுமாக தவிர்ந்து இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

இணைவைக்கும் ஒருவருக்கு அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்காததோடு மட்டுமில்லாமல் அவர் தம்முடைய வாழ்நாளில் செய்த அனைத்து நல்லறங்களும் அழிந்து நிரந்தர நரகத்திற்கு வழிவகுக்கும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
 • இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும். (அல்குர்ஆன் 6:88)
 • அன்றியும், உமக்கும், உமக்கு முன் இருந்தவர்களுக்கும், வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால், ‘நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள்’ (என்பதுவேயாகும்). ஆகவே, நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக! (அல்குர்ஆன் 39:65 & 66)

இணைவைப்பு என்றால் என்ன....?
பொதுவாக நம்மில் பலர் இணைவைப்பு என்றால் சிலைவணக்கம் என்றும், சிலைவணக்கம் அல்லாமல் உயிருள்ள, மற்றும் உயிரற்ற படைப்பினங்களை இறைவன் என்று பெயர் கூறி அழைத்தாலே மாத்திரம் இணைவைப்பு என்று விளங்கியுள்ளனர். இது தவறானதாகும். இணைவைப்பு எனும் பாவமான காரியத்தை சரியாக விளங்கி கொள்ளாத காரணத்தினால் தான் நமது சமுதாயத்தில் கப்ரு வணக்கம் போன்ற கலாச்சாரத்தை இன்னும் மக்கள் பின்பற்றி கொண்டிருகின்றனர். மேற்கூறிய விசயங்கள் அல்லாமல் இணைவைப்பு என்ற செயல் நிறைய வகைப்படும் என்பதை நாம் விளங்கி கொள்ளவேண்டும். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் மட்டும் அல்ல, அல்லாஹ் அல்லாதவைகளும் உண்டு என்று நம்புவது மட்டும் இணைவைப்பு இல்லை, அல்லாஹுடைய வல்லமையை அல்லாஹ்வுக்கு நிகராக அல்லாஹ்வின் படைப்புகளின் ஒன்றை ஆக்குவதும் இணைவைப்பாகும்.
 • கிறித்துவர்கள் ஈஸா(அலை) அவர்களை அல்லாஹுவின் மகன் என்று கூறியதாலும், அல்லாஹுவின் பண்புகள் ஈஸா(அலை) அவர்களுக்கு உள்ளதால் அவரும் இறைவனாகிவிட்டார் என்று கூறியதாலும் கிறித்துவர்கள் இணைவைத்துவிட்டனர் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர் இது சரியானதாகும்.
 • அதே சமயம் முஸ்லிம்களில் பலர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரால் பாவங்களை மன்னிப்பவரே! படைப்பினங்களை பாதுகாப்பவரே! நெருக்கடியே நீக்குபவரே! தீமையே விட்டும் பாதுகாப்பவரே! என்றெல்லாம் கூறுகின்றனர்.  இவையெல்லாம் இணைவைப்பு அல்லாஹ் மட்டும் தான் மன்னிப்பவன், பாதுகாப்பவன், நெருக்கடியே நீக்குபவன் என்று கூறினால் அவர்கள் கேட்பார்கள்  நபி(ஸல்) அவர்களை புகழ்வது தவறா.........?
 • நாம் அதற்கு பதில் அளிக்கையில் நபி (ஸல்..) கூறினார்கள், கிருஸ்தவர்கள் ஈஸா (அலை..) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை நீங்கள் வரம்பு மீறி புகழாதீர்கள் என்று கூறியுள்ளார்கள் என்றால், அதற்கு அவர்கள் கூறுவார்கள் நாங்கள் ஈஸா(அலை) அவர்களை கிருத்தவர்கள் இறைவனுடைய அந்தஸ்தில் வைத்ததை போன்று நாங்கள் நபி(ஸல்) அவர்களை இறைவனுடைய அந்தஸ்தில் வைக்கவில்லை என்கின்றனர் (அதாவது நபி(ஸல்) அவர்களை இறைவன் என்று கூறவில்லை).
 • இணைவைப்பு என்பது ஒருவரை அல்லாஹ் என்று பெயர் கூறி அழைப்பதனால் மட்டும் இணைவைப்பு அல்ல, அல்லாஹுவின் பண்புகளை அல்லாஹ் அல்லாதவர்கள் மீது கற்பனையாக இட்டுக்கட்டி நம்புவதும் இணைவைப்பு தான்.
உதாரணத்திற்கு..,
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளாகிய ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் (பஷீரன்) மற்றும் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் (அஸ் ஸமீவுன்) என்ற பண்புகள், ஆற்றல்கள் (உயிருள்ள, உயிரற்ற) படைப்பினங்களுக்கு இருப்பதாகக் கருதுவது இணைவைப்பாகும்.

ஒரு உயிருள்ளதையோ அல்லது உயிரற்றதையோ அவைகளின் சக்திக்கு மீறி அவ்விரண்டிலும் இல்லாத ஒன்றை அல்லாஹுவிற்கு இருகின்ற பண்புகளை  போன்று கற்பனையாக அவைகளுக்கும் இருப்பதாக நம்புவது தான் இணைவைப்பாகும்.

உயிருள்ள ஒரு மனிதனின் தன்மையை பற்றி நாம் பார்போம். மனிதன் பார்க்ககூடிய திறனும், கேட்கக்கூடிய திறனும் உடையவனாக படைக்கப்பட்டுள்ளான். மனிதனுக்கு கொடுக்கப்பட்ட இவ்விரு அருட்கொடைகளையும் நாம் சரியாக விளங்கி கொண்டாலே இணைவைப்பின் அடிப்படை விளங்கி விடும்.

உயிருள்ள மனிதன் உயிரற்றவைகளை விட ஆற்றலால் உயர்ந்தவன்....
 • உயிருள்ள மனிதனுக்கு உள்ள ஆற்றலில் ஒன்று பார்வையாகும். அவனுடைய பார்வை திறனில் அவனுடைய பார்வைக்கு எட்டிய அனைத்தையும் பார்க்ககூடியவனாக இருக்கின்றான். இது மனிதனின் இயல்பான பார்வை திறனாகும். மனிதனின் இயல்பான பார்வை திறனுக்கு மீறி மனிதனுடைய பார்வைக்கு எட்டாத ஒன்றை அல்லாஹ் பார்ப்பதை போன்று பார்க்கின்றான் என்று நம்புவது இணைவைப்பாகும். வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன் மட்டும் தான் மனிதனுக்கு எட்டியவைகளையும், மனிதனுக்கு எட்டாதவைகளையும் பார்க்ககூடியவனாக உள்ளான்.
 • அதே போன்று மனிதனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளில் ஒன்று செவியேற்கும் திறன். ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து வரும் ஓசையை ஒரு நேரத்தில் ஒரு ஓசையை மட்டும் கேட்கக்கூடிய நிலையில் தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான். இதல்லாமல் அல்லாஹ் செவியேர்ப்பதை போன்று மனிதனின் செவிபுலணிற்கு எட்டாத தூரத்தில் இருந்து வரும் ஓசையை மனிதன் செவியேர்கின்றான்  என்று நம்புவது இணைவைப்பாகும்.
 • மனிதன் உயிருடன் இருக்கும்போதும் சரியே! மரித்த பிறகும் சரியே! அவனுடைய பார்வை, மற்றும் செவித்திறன் அல்லாஹுவின் பண்புகளுக்கு நிகராக உள்ளது என்று கற்பனையாக எண்ணுவதே இணைவைப்பாகும்.
 • யாராவது ஒருவர் அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய தன்மையை அல்லாஹ்வுக்கு மட்டுமல்லாமல்  (உயிருள்ள, உயிரற்ற) படைப்பினங்களுக்கு இருப்பதாக நம்பி, அல்லாஹ்வின் அந்தப் பண்புகளில், ஆற்றல்களில் இணை வைத்தவராவார்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.

மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.

 • வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான்,  அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.  (அல் குர்ஆன் 42 : 11.) 
 • அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல்குர்ஆன் 112:04)
 •  நிச்சயமாக அல்லாஹ்வையன்றி அவர்கள் எதை (நாயனென) அழைக்கிறார்களோ, அதை அவன் அறிகிறான் - இன்னும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (அல் குர்ஆன் 29:42) 
 • இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே: -
 • மறைவான விசயங்களை அறிபவன் அல்லாஹ்வே: - 
 • பிரார்த்தனைக்கு பதிலளிப்பவன் அல்லாஹ்வே: - 
 • பாவங்களை மன்னிப்பவன் அல்லாஹ்வே: - 
 • உயிரை உண்டாக்குபவனும் அல்லாஹ்வே: - 
 • மரிக்கச் செய்பவனும்  அல்லாஹ்வே: - 
 • மரித்தோரை மீண்டும் எலுப்புவோனும் அல்லாஹ்வே: - 
 • ஒரே நேரத்தில் அனைத்தையும் பார்ப்பவன் அல்லாஹ்வே: - 
 • எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் சக்தி உடையவன் அல்லாஹ்வே: -Saturday, April 23, 2011

நாசரேத்தில் அரை நூற்றாண்டிற்கு பிறகு மீட்டெடுத்த ஓர் அழகிய மஸ்ஜித்.


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

அரை நூற்றாண்டிற்கு பிறகு மீட்டெடுத்த ஓர் அழகிய மஸ்ஜித்.....

http://www.kayalnews.com/images/news/nazareth-masjid-1.jpg

கடந்த 1910 களில் முஸ்லிம் வியாபார குடிமக்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்த பூமி அது. முஸ்லீம்களுக்கென்ற பாரம்பரியத்திற்கு உட்பட்ட 19 கிணறுகள் உள் வரை அளவுக்குட்பட்ட பல ஏக்கர்கள்   உரிமையானவர்களாக வாழ்கை நகர்ந்து கொண்டிருக்கவே.....

விணை கொல்லும் சோதனை காலரா என்ற வடிவில் வந்து சேர்ந்தது.  சோதனையால் துவண்ட மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஆழ்வார்திருநகரி அருகில் அமைந்த்ருக்கும் சவரமங்கலத்தில் குடியேறி தொழில் துறைகளில் முனைப்போடு வாழ்கை நடத்தி வந்த மக்களை கடந்த 1945  களில் வந்த வெள்ளப்பெருக்கின் அனர்த்தங்களால் ஊரையே உலுக்கி மூளையில் வீசியது.  மக்கள் சவரமங்கலத்தயும் காலி செய்யவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகினர்.  வசிக்க திக்கு திசையின்றி காயலர்களிடம் அடைக்கலம் கேட்க முனைந்த அம்மக்களுக்கு வாய்ப்பில்லை என்ற தகவல் கிடைத்ததுமே கேம்லபாத், ஆழ்வார் திருநகரி, பேத்மாநகர் மற்றும் காயல்பட்டினத்தில் சில தெருக்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

http://www.kayalnews.com/images/news/nazareth-masjid-4.jpg

http://kayaltoday.com/images/News/2011/Apr/13_1.jpg

வாழையடி மஸ்ஜித் - புதைக்கப்பட்ட உண்மைகள்
வாழையடி முஸ்லிம் ஜமாத்தின் 19 கிணறுகளை சுற்றிய மொத்த நிலபரப்பு மூன்று ஏக்கர்கள்.  தொற்று நோய் பரவல் மற்றும் இயற்கை சீற்றங்களால் சிதறிய வாழையடி ஜமாத்தினரின் உரிமை சொத்துக்கள் சில தீய சக்திகளிடம் சிக்கியது.   29 /8 என்ற ஆதார பட்டயத்தை அநீதியாக ஆக்கிரமித்து பிளாட்டு போட்டு விற்று தீர்த்தனர்.  காலம் நகர நகர வரலாற்றுக்கு சொந்தமான மண்ணின் மைந்தர்களின் அடையாள குறியீடுகள் அழிக்கப்பட்டாலும் மஸ்ஜிதின் பழைய வரலாற்று சுவர்களும் கப்ருகளும் நெஞ்சின் நீங்கா சுவடுகளாக இன்றும் நிழலாடிக்கொண்டிருக்கிறது.

http://www.kayalnews.com/images/news/nazareth-masjid-6.jpg

http://www.kayalnews.com/images/news/nazareth-masjid-2.jpg


காரியம் சாதித்த வீரிய இளைஞர்கள்
கடந்த 2001 களில் காயல்பட்டினம் மற்றும் சுற்று கிராமங்களான சேதுக்கு வாய்க்கால் போன்ற ஊர்களிலிருந்து மொத்தம் 14 கடைகளும் 5 குடும்பங்களும் மொத்தம் 50 நபர்கள் தற்போது வசித்தும் கடை நடத்தி விட்டு தங்கள் குக்க்கிராமதிற்கும் அன்றாடம் சென்று வருவது வழக்கம்.  இந்த சொற்ப நபர்களின் விவேகத்தினால் 2001 ல் துவங்கிய முயற்சி 2011 ல் வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள் என்ற கம்பீர பாங்கொலியை முழங்க தொடங்கி விட்டனர்.

தற்போது மீட்டு எடுத்த 14 சென்ட் வேலி மட்டும் வாழையடி ஜமாஅத் வசம் அல்லாஹ்வின் கிருபையால் வந்து சேர்ந்தது.  இந்த வீரிய இளைஞர்கள்
ஆத்மார்த்த கடும் உழைப்பினால் அல்லாஹ்வின் ஆலயத்தை செவ்வனே சீரமைத்து துதி செய்யும் ஒவ்வொரு உள்ளமும் இறைவனை நன்றி செலுத்தும் வகையில் ஆழ்ந்தது இன்று  இந்த மஸ்ஜித் திறப்பு விழாவின் போது.
மஸ்ஜிதின் பத்திரங்கள் எப்படியும் கிடைத்துவிடும்.   இன்ஷா அல்லாஹ் கிடைத்து விட்டால் மின்சார துறையினரிடமிருந்து எளிதில் மின்சாரம் கிடைத்து விடும் என்று தங்கள் தவக்கல் பயணத்தை துவங்கி விட்டனர் வாழையடி மஸ்ஜித்துர்ரஹ்மான்  ஜமாத்தினர்கள்.

நன்றி.
காயல் நியூஸ்.காம்
தகவல் :
எம்.எம்.முஜாஹித் அலி.

Tuesday, April 12, 2011

ஏகத்துவத்தை போதித்த அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)


குர்ஆன்,ஹதீஸைப் பற்றிப் பிடித்துக்கொள்!
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்...
 
     ஹிஜ்ரீ ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளைவிட, இவர்கள் பெயரால்தான் அதிகமாக பொய்யான கதைகள் உலவுகின்றன. இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய தகாத சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப்  பிரச்சாரமும் செய்யப்படுகின்றது.

       "என்னை ஆயிரம் முறை அழைத்தால் நான் ஓடோடி வருவேன்"என்றும்,

       "எனது அனுமதியுடன் தான் சூரியன் சந்திரன் உதிக்கின்றன" என்றும்,
       "உலகில் எது நடந்தாலும் எனக்குத் தெரியாமல் நடப்பதில்லை" என்றும்

அவர்கள் கூறியதாக நம்பப்பட்டும் வருகின்றது.  

       இவையும், இன்னும் பல இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானவைகளும் அவர்கள் பெயரால் ஓதப்பட்டு வருகின்ற மவ்லிதுகளிலும், யாகுத்பாவிலும் காணப்படுபவை.

       அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தனது எந்த நூலிலும் இவ்வாறு கூறியிருக்கவில்லை. அவர்கள் காலத்தில் எழுதப்பட்டுள்ள எந்த நூற்களிலும் அவர்கள் இப்படிச் சொன்னதாக ஒரு சிறு குறிப்பும் காணப்படவில்லை. மாறாக ஹிஜ்ரீ-ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்தப் பெரியார் இந்த ஷிர்க்கான சொற்களைச் சொன்னதாக 1100-ல் எழுதப்பட்ட மவ்லிது கிதாபுகளில் தான் காணப்படுகின்றது. அவர்களின் காலத்திற்கு சுமார் 600 ஆண்டுகளுக்குப்பின் வந்தவர்கள்தான் இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசியிருக்கின்றனர்.

       அவர்கள் மரணமடைந்து 600 ஆண்டுகளாக, "அவர்கள் இப்படிச் சொன்னதாக" எவரும் எழுதி வைத்திருக்கவில்லை. இதுவே திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்டுக் கூறிய பொய்கள் என்பதற்கு மறுக்கமுடியாத ஆதாரமாகும்.

       மாறாக இதுபோன்ற தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கின்ற விதத்தில் தான் அவர்களே எழுதிய "குன்யதுத்தாலிபீன்" என்ற நூலில் காணப்படுகின்றது. ஆதாரபூர்வமாக தொகுக்கப்பட்ட அவர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய "ஃபு தூஹுல் கைப்" "அல்ஃபத்ஹுர்ரப்பானி" ஆகிய நூல்களும், இந்தப் பொய்யான தகவல்களை மறுக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

       அவர்கள் தனது கைப்பட எழுதிய உண்மைகளை ஏற்பதா? அல்லது அவர்கள் பெயரால் மிகவும் பிற்காலத்தில் புனையப்பட்ட பொய்களை ஏற்பதா? என்ற முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுகிறோம். 

       அவர்களது நூலிலிருந்தும் ,அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் ,அவர்களின் கருத்தைத் தக்க ஆதாரங்களுடன் தொகுத்துத் தந்துள்ளோம்.

       இதன் பிறகாவது உண்மையை உணராதோர், தனது தவறான முடிவை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புவோம். அல்லாஹ் ,தான் நாடியவர்களுக்கே நேர்வழி காட்டுவான்.

இரண்டு போதுமே!

       நாம் பின்பற்றிச் செல்ல, நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு நபி நமக்கு இல்லை. நாம் செயல்பட குர்ஆனைத் தவிர வேறு வேதம் எதுவுமில்லை. எனவே அவ்விரண்டை விட்டும் அப்பாற்பட்டு விடாதே! அவ்விரண்டையும் நீ விட்டுவிட்டால் நீ நாசமடைந்து விடுவாய்! ஷைத்தானும், உன் மனோ இச்சையும் உன்னை வழி கெடுத்து விடும்.  ஃபுதூஹுல்கைப், 36வது சொற்பொழிவு

          திருக்குர்ஆனையும், நபி வழியையும் உனக்கு முன்னால் வைத்துக்கொண்டு, அவ்விரண்டிலும் ஆழமாகச் சிந்தனை செய்து, அவ்விரண்டின்படி நீ செயல்படு! அவர் அப்படி சொல்லி இருக்கிறார். இதில் இப்படி சொல்லப்பட்டுள்ளது போன்ற உளரல்களைக் கண்டு ஏமாந்து விடாதே! ஏனெனில் "ரசூல் எதைக்கொண்டு வந்தாரோ, அதை எடுத்துக்கொள்ளுங்கள்! அவர் எதைத் தடுக்கிறாரோ அதிலிருந்து விலகிக்கொள்ளுங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். குர்ஆனிலும், நபி வழியிலும் தான் (ஈமானுக்குப்) பாதுகாப்பு உண்டு. அந்த இரண்டைத் தவிர மற்றவைகளில் நாசம் தான் உண்டு. குர்ஆன், நபி வழி இவ்விரண்டின் மூலமாக மட்டும்தான் ஒரு அடியான் இறை நேசனாக முடியும்.  ஃபுதூஹுல்கைப், 36வது சொற்பொழிவு

     குர் ஆனையும், நபி வழியையும் பின்பற்றாத வரை உனக்கு (மறுமையில்) வெற்றி கிட்டாது.  ஃபத்ஹுர்ரப்பானி, 39வது மஜ்லிஸ்                                   

பித்அத் செய்யாதீர்கள்!
       நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றுங்கள்! 'பித்அத்'களை உருவாக்கி விடாதீர்கள்! இறை உத்தரவுக்குக் கட்டுப்படுங்கள்! மனமுரண்டு பிடிக்காதீர்கள்! இறைவனை ஏகத்துவப்படுத்துங்கள்! அவனுக்கு இணை வைக்காதீர்கள்!  ஃபுதூஹுல்கைப், பக்கம் 180

       பித்அத்களை உருவாக்குபவனை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளனர். "எவன் பித்அத்தை உரு வாக்குகிறானோ, அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், நல்லடியார்கள் அனைவரின்  சாபமும் ஏற்படும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.  குன்யதுத் தாலிபீன், பக்கம் 81  
ஏகத்துவ முழக்கம்

       எதனையும் செய்பவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. இயக்குபவனும், இயக்கங்களை முடித்து வைப்பவனும் அல்லாஹ்வைத்தவிர எவருமில்லை; நல்லதும் கெட்டதும், துன்பமும் இன்பமும், கொடுப்பதும் கொடுக்க மறுப்பதும், திறப்பதும் திறந்ததை மூடுவதும், வாழ்வும் மரணமும், இழிவும் மதிப்பும், வறுமையும் செல்வமும் அல்லாஹ்வின் கையில் மட்டுமே உண்டு.  ஃபுதூஹுல்கைப், 2வது சொற்பொழிவு

       படைப்பினங்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதை விட்டுவிடு! அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்து! அத்தனை பொருள்களையும் படைத்ததும் அவனே! அவன் அதிகாரத்திலேயே அத்தனையும் உண்டு. அல்லாஹ் அல்லாதவர்களிடம் தேடுபவனே! நீ அறிவுடையவன் அல்ல. அவன் கஜானாவில் இல்லாதது ஏதும் உண்டோ? ஃபத்ஹுர்ரப்பானி, முதலாவது மஜ்லிஸ் 

        மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காது மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா? படைப்பினங்களிடம் கேட்கத்தேவை எதுவும் ஏற்பட்டு விடாதபோது, படைப்பினங்களிடம் கேட்கின்றாயே!  ஃபத்ஹுர்ரப்பானி, 38வது மஜ்லிஸ்

         அனைத்தையும் படைத்தவனிடமே அனைத்தையும் கேள்! நான் அல்லாஹ்வின் பாதையில் தான் உங்களை அழைக்கிறேன். என் பக்கம் உங்களை நான் அழைக்கவில்லை. முனாஃபிக் தான் தன்பக்கம் மக்களை அழைப்பான்.  ஃபத்ஹுர்ரப்பானி, 8வது மஜ்லிஸ்

         "உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவனைத் தவிர எவரும் அகற்ற முடியாது" என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே உன் துன்பத்தை அல்லாஹ் அல்லாதவரிடம் முறையிடாதே!

       யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுவிட்டானோ அவன் தான் பலமான கயிற்றைப் பிடித்துக்கொண்டான். யார் படைப்பினங்களின் மீது நம்பிக்கை வைக்கின்றானோ, அவன் தண்ணீரை இறுகப் பிடிப்பவனைப் போன்றவன். அவன் கையை விரித்தால் எதனையும் காணமாட்டான். ஃபத்ஹுர்ரப்பானி, 15வது மஜ்லிஸ்

       அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் இந்த போதனைகளின்படி செயல்பட்டு நடக்க அல்லாஹ் அருள்புரிவானாக!

நன்றி : http://www.readislam.net/kadir.html

Wednesday, April 6, 2011

குந்தகம் விளைவிக்கும் குஜராத் கம்பெனி - காயல்பட்டினம் களதொகுப்பு -1


குந்தகம் விளைவிக்கும் குஜராத் கம்பெனி - காயல்பட்டினம் களதொகுப்பு - 1.நன்றி : உணர்வு வார இதழ் 

 DCW கம்பெனியிலிருந்து கடலில் கலக்கும் கழிவுகள்


 http://4.bp.blogspot.com/-1ynXQSQn29A/TZyo3BF1nUI/AAAAAAAAAX4/HCSPAgrBc4U/s1600/dcw-satellite4.jpg

Monday, April 4, 2011

தர்காவும் இனைவைப்பும் (video) தொகுப்பு


அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

தர்காவும் இனைவைப்பும் (video) தொகுப்பு