நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Thursday, October 6, 2011

எட்டிப்பார்த்தேன் நடுங்கியது ஈமான்..


ஓரிறையின் நற்பெயரால் ........

அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு.
நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (2:208)
இன்று  காலை  பொழுதில் தாரை தப்பட்டையுடன் அந்த பகுதியே அதிரும் அளவிற்க்கு சப்தம் மக்கள் கூட்டம் என்ன தான் நடைபெறுகின்றன என்று அருகில் சென்று பார்த்தால் தசராவிற்காக மாற்றாரின் நடனம் நிகழ்ச்சி அரைகுறை ஆடையுடன் இளம் பெண் நடனமாடும் காட்சி அதை ரசித்து பார்க்கும் நம் இஸ்லாமிய சமூகம். கிடைத்தது அதிர்ச்சி, நடுங்கியது உள்ளம், விழித்தது ஈமான். தன்னையும் அறியாமல் தம் ஈமானை பாழ்படுத்தும் காரியங்களை கண்டுகளிக்கும் நமது இஸ்லாமிய சமூகம்..நம் ஊர் மக்கள்  எங்கே செல்கின்றன நமது சமூகம்.??
06102011003
எல்.கே லெப்பை தம்பி சாலையில் தசரா கரகாட்டம் இன்றைய காட்சிகள்
ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் எவ்வாறு இதை பார்த்து ரசித்துக் கொண்டிருகின்றோம்?
06102011004
தீமையான காரியங்களை நாம் செய்யாவிட்டாலும் அக்காரியங்கள் நடைபெறும் இடத்தில நாம் இரண்டற கலந்து நிற்பதே அத்தீமையை செய்ததாகவே இறைவனால் கருதப்படுகின்றோம் என்பதை நாம் ஏன் இன்னும் விளங்க வில்லை.
06102011
06102011006
அல்லாஹ் கூறுவதை கேளுங்கள்.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். (4.140. )
பொதுவாக அல்லாஹுவின் வசனங்கள் கேலி செய்யும் வகையிலும், அதை மறுக்கும் வகையிலும் யார் செயல்பட்டாலும் அவர்களுடன் நாம் சேர்ந்து அமரக்கூடாது என்று அல்லாஹ் தன திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
இஸ்லாத்தை ஏற்றவர்கள் இவ்வாறான காரியங்கள் நடைபெறும் இடத்தில அமரக்கூடாது என்றும் மற்றவர்கள் செய்தால் அந்த இடத்தில அமரலாம் என்றும் இறைவன் கூறவில்லை, மாறாக மார்க்கத்திற்கு புறம்பான காரியத்தை யார் செய்தாலும் அந்த சபையில் இருக்ககூட்டாது என்று பொதுவாகவே அல்லாஹ் கூறுகின்றான்.
மேலும் ஒரு முஸ்லிம் தீமையான காரியங்கள் நடந்தேறும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இறைதூதர்(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்...
"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்); அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்" என்றார். அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி). (முஸ்லிம் 70)
மார்க்கத்திற்கு புறம்பான ஒன்றை வெறுப்பதென்றால் அதில் நாம் பங்கெடுக்காமல் இருப்பதாகும். இது தான் ஈமானின் இறுதி நிலையாகும். ஆனால் அந்த காரியங்கள் நடந்தேறும் இடத்தில இருந்து அவைகளுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டு நான் மனதால் வெறுத்து விட்டேன் என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் விஷயம் என்று நாம் விளங்கி கொள்ள வேண்டும்.
நம்மிடம் எவ்வளவு ஈமான் இருக்கிறது என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ளலாம். குறைந்த பட்சம் தீமையை மனதால் வெறுத்து ஒதுக்கும் கடைசி நிலையையாவது நாம் கை கொள்ள வேண்டும். ''இப்போது சிந்தியுங்கள் நாம் நமது ஈமானை பாழ்படுத்தும் இடங்களில் வேடிக்கை பார்த்து நிற்கலாமா..?''.
அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள். (25.72)
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம். ( 109 : 6)
வீணானதைச் செவியுற்றால் அதைப் புறக்கணித்து விடுபவர்களாக விசுவாசிகள் இருப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றானே அந்த உன்னத விசுவாசிகளின் பட்டியலில் நாமும் நிலைத்திட வேண்டாமா..? உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம் என்று கூறி நமது விசுவாசத்தை பறைசாற்றி சென்றிருக்க வேண்டாமா..?
இஸ்லாம் எச்சரிக்கும் இணைவைப்பு காரியங்கள் நடைபெறும் இடங்களில் அதை நாம் அங்கிகரிப்பதைப் போன்று தீமை நடக்கும் இடத்திலிருந்து நாம் செல்லாமல் இரண்டற கலந்து இருப்பதன் மூலம் நாம் எந்தளவிற்கு இஸ்லாமை பின்பற்றிக் கொண்டிருகின்றோம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்
இதைப் போன்று ஓரிறைக் கொள்கைக்கு எதிரான காரியங்கள் நடைபெறும் இடங்களில் நம்மை ஈடுப்படுதிக் கொள்ளாமல் இருக்க, வல்ல அல்லாஹ் நம் ஈமானை பாதுகாப்பானாக.
எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல். (3.8)
நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (5:2)