நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Saturday, July 31, 2010

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகைஅமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார். 

இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள். 

ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத்.

மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க சத்தியமார்க்கம்.காம் பிரார்த்திக்கிறது.

Sunday, July 25, 2010

இறை நேசர்களிடம் உதவி தேடுதல்இறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாராகவும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.

பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார்களையும், ஷெய்ஹு மார்களையும், பீர்களையும், அவ்லியாக்களையும், இறைநேசர்களையும் பிராத்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர். அவைகள் யாவை எனில்,
 1. நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் அல்லாஹ்விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம்
 2. நாங்கள் கேட்பெதல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம்
 3. நாங்கள் பாவங்கள் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் அல்லாஹ்விடம் எங்களின் தேவைகளைக் கேட்டுப் பெற்றுத் தருவார்கள்
 4. நல்லடியார்கள் கேட்கும் துஆ இறைவனால் மறுக்கப்படமாட்டாது. அதனால் அவர்கள் மூலம் இறைவனிடம் கேட்கிறோம்
 5. மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும் சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம்
 6. நாங்கள் ஒன்றும் புதிதாக இதைச் செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறையிட்டுத் தானே தேவைகளைப் பெற்றுவந்தர்கள். அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?
 7. எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத் மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?
அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ் ஒருவனையே வணங்கவேண்டும் என்றும், அவன் ஒருவனிடமே உதவிதேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.

1) இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?
இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், நாம் நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையில்லையா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அது போலத்தான் நாங்களும் இறைவனிடம் வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது இஸ்லாத்தை பற்றி அவர்கள் ஓரளவுக்கு கூட அறியாமல் இருப்பதே காரணம் ஆகும். நீதிபதி நாம் குற்றம் செய்தவாகளா அல்லது நிரபராதியா என்பதை நமக்காக வாதாடும் வக்கீல் எடுத்து வைக்கும் சாட்சியங்களை வைத்தே அறிந்து கொள்வார். அதுவும் சாட்சியங்கள் சரிவர நிருபிக்கப்படாவிட்டால் நிரபராதிக்குக் கூட தண்டணையளிக்கும் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள்.

இது இப்படியிருக்க அகிலங்களையெல்லாம் படைத்து பரிவக்குவப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு நமது தேவைகள் என்ன என்பது தெரியாதா? இதயங்களில் உள்ள இரகசியங்களை அறிபவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று தன்னுடைய திருமறையிலே பல இடங்களில் இறைவன் கூறுகின்றானே!!!

“வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்”(அல்குர்ஆன் 64:4)

இன்னும் பல வசனங்களில் 11:5, 67:13, 28:69, 2:284 அல்லாஹ் மட்டுமே இதயங்களிலுள்ள இரகசியங்களை அறிகிறான் என்றும் மற்ற யாரும் அவற்றை அறிய முடியாது என்றும் கூறுகின்றானே!. நாம் கூறாமலே நமது தேவைகளை அறிந்திருக்கும் இறைவனுக்கு, கேவலம் மனிதர்களிலுள்ள ஒரு வக்கீலோ அல்லது அதிகாயோ எடுத்துச் சொன்னால் தவிர அறிந்துக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நீதிபதியையும், அமைச்சரையும் நாம் எப்படி உதாரணங்களாக கூறமுடியும்?. இது இறைவனின் கண்ணியத்தைக் குறைவாக கருதுவதாகாதா? இறைவனுக்கு நீதிபதியையும், அமைச்சரையும் உதாரணங்களாக கூறி அல்லாஹ்விற்கு உவமைகளை ஏற்படுத்தி இணைவைத்த மாபாதகம் ஆகாதா? இவ்வாறு இறைவனுக்கு உதாரணங்களைக் கூறுபவர்களை அல்லாஹ் கடுமையான எச்சரிக்கின்றான்:

“ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்குர்ஆன் 16:74)

ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறுவது இந்த திருமறை வசனத்தை மீறிய மாபெரும் குற்றமாகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே. அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ்வையே அழையுங்கள் என்றும், அவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கிறான் என்றும் ஆனால் உங்களால் அழைக்கப்படுபவர்களால் பதிலளிக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.

“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல் குர்ஆன் 7:194)

2) நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது:-
இதுவும் அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். நாம் பிற சமுதாயத்து மக்களிடம் அவர்கள் குல தெய்வம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தெய்வத்தை வழிபடுவதைக் காணலாம். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் குலதெய்வம் சக்திவாய்ந்தது, அது நாங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கிறது. அதனால் தான் நாங்கள் அதை தொடர்ந்து வழிபடுகிறோம் எனக் கூறுவர். இன்னும் சிலர் அத்தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக அத்தெய்வங்களின் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளைச் செலுத்துவர். அவர்கள் கூறுவது போன்று அவர்கள் வேண்டிக்கொண்டவைகளில் சில நடைபெறுவதால் தான் அவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இதைப் போலவே நமது சமுதாயத்து மக்களில் சிலர் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப பிடித்தமான அவ்லியாக்களை எடுத்துக் கொண்டு அவர்களை தங்களின் குல அவ்லியாகவாக? ஆக்கி வைத்துக் கொள்கின்றனர். பிற சமுதாயத்தவர்கள் கூறுவதைப் போல இந்த அவ்லியாக்களும் எங்களின் தேவைகளை எல்லாம் நிறைவேற்றித் தருகின்றனர் எனக் கூறுகின்றனர். நிச்சயமாக இவைகள் எல்லாம் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளாகும். அந்த அவ்லியாக்களிடம் நர்ச்சை செய்தால் நிறைவேறுவது போல பிற சமுதயத்து வழிபாட்டுத்தலங்கிலும் நோச்சை செய்தாலும் தான் அவர்களுக்கு சில நாட்டங்கள் நிறை வேறுகின்றன. அதற்காக அங்கேயும் செல்வார்களா?

ஒவ்வொரு காரியமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என அல்லாஹ் கூறுகிறான். நமக்கு நடக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்று நாம் நம்பிக்கை கொள்வோமேயானால் இணைவைக்கும் இது போன்ற செயல்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவான்.

3) வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே:-
நாங்கள் பாவங்கள் பல செய்த பாவிகள், ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத்தருவார்கள் எனக்கூறுகின்றனர் கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் முஸ்லிம்களில் சிலர். இதுவும் இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகும். நாம் பாவங்கள் நிறைய செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் பொருளை புரிந்துக் கொள்வதில்லை. அல்லாஹ் மிகப்பெரும் கருணையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான் என்று திருமறையின் பல இடங்களில் கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்:-

‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)

மேற்கண்ட வசனத்தில், ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பினும், அவர் அல்லாஹ்வுக்கே முற்றிலும் வழிபட்டு தம் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பதாகக் கூறுகின்றான். ஆனால் பாவம் செய்தவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று கூறுவது மேற்கண்ட வசனத்தை நிராகரித்தல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதாகளே!

4) நல்லடியார்களின் பிரார்த்தனை இறைவனால் மறுக்கப்படாது. அதனால் அவர்கள் மூலமாகக் கேட்கிறோம்:-
இது கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் இன்னும் சிலரின் வாதமாகும். முதலில் நாம் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் இறைவனின் விருப்பம். அதில் இறைவனை கட்டாயப்படுத்த யாராலும் முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கே அவர்கள் விரும்பியது சில நேரங்களில் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை எப்படியாயினும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தாகள். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறொன்றாக இருந்ததால் இறுதி வரை நபி (ஸல்) அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றித்தரவில்லை என்று வரலாறுகளில் படித்திருக்கின்றோம். இது ஒருபுறம் இருக்க அமல் செய்ய யாரால் முடியும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில் தான் அவரால் பார்க்கவும், கேட்கவும், அமல் செய்யவும் முடியும். அவர் இறந்து விட்டால் அவரால் எந்த ஒரு அமலையும் செய்யமுடியாது. அவருக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. இதை திருமறை வசனங்களும், ஹதீதுகளும் உறுதி செய்கின்றன. எனவே அமல்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை நமக்காக இறைவனிடம் என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் செய்கின்றார்கள் என்றால் அது பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.

அவர்கள் இறந்தவாகளே உயிருள்ளவர்கள் அல்லர் என்று அல்லாஹ் கூறுகின்றான்:-

“அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்” (அல் குர்ஆன் 16:20-21)

இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தினருக்குமிடையில் ஒரு திரையிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்:-

“அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன” (அல் குர்ஆன் 39:42)

“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)

இறந்த நல்லடியார்களால் நம் தேவைகளைக் கேட்க முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்:-

“நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; – அவ்வாறே செவிடர்களையும் – அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது – (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது” (அல் குர்ஆன் 27:80)

“குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா). (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா). அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.” (அல்குர்ஆன் 35:19-22)

இந்த வசனத்தில், ‘உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ என்று கூறிய இறைவன், உயிருள்ளவாகளில் தாம் நாடியவாகளைச் செவியுறச்செய்து நேர்வழிப்படுத்துவதாகக் கூறுகின்றான். மேலும் ‘கப்ருகளில் உள்ள இறந்தவர்ளளைச் செவியுற செய்பராக நீ இல்லை’ என்று இறைவன் கூறுவதன் மூலம் இறந்தவர்களால் செவியேற்க முடியாது என்று திட்டவட்டமாக அல்லாஹ் கூறிவிட்டான். மேலும் அவன் கூறுகையில்,

“நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 35:14)

“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான் அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” (அல்குர்ஆன் 7:196-197)

“நல்லடியார்களைப் பாதுகாவலாகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான்-

“நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.” (அல்குர்ஆன் 18:102)

நல்லடியார்களால் பரிந்து பேசமுடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்:-

“அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! ‘அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?’ (என்று.)” (அல்குர்ஆன் 39:43)

நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள், அவர்களால் நம் அழைப்பைச் செவியுற முடியாது:-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
 உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவாக்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நல்ல மனிதராக இருந்தால், நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த நல்ல மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், இந்த இடத்திலிருத்து உன்னை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள்.. தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (ஆதாரம்: திர்மிதி ஹதீஸ் சுருக்கம்)

என் குடும்பத்தாரிடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியிருக்க அந்த ஆத்மா பர்ஸக் உலகிலிருந்து இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் மரணித்த நல்லடியார்களின் ஆத்மா இருக்கும் போது, நல்லடியார்கள் அவர்களுடைய கப்ர்களில் இருந்துக் கொண்டே வெளியில் உயிருடன் இருப்பவர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள், அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புகின்றவர்கள் மேற்கண்ட ஹதீஸை நிராகரித்தவர் போல் ஆகமாட்டாரா?
நல்லடியார்கள் அல்லாஹ்விடம் சிபாசு செய்வார்கள் என கூறுபவர்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான்:-

“அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.’ (அல் குர்ஆன் 39:3)

இங்கே சிலர் கூறலாம், நாங்கள் அவர்களை வணங்கவில்லையே, அந்த நல்லடியார்களிடம் இறைவனிடம் எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத்தாருங்கள் என்று தானே பிராத்திக்கிறோம் இந்த வசனம் எப்படி எங்களுக்குப் பொருந்தும்? என்று கேட்கலாம். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனையும் ஒரு வணக்கமாகும் என்று கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையிலே பல்வேறு இடங்களில் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று கூறுவதன் மூலம் பிரார்த்தனையும் ஒரு வணக்கம் என்றே கூறுகின்றான்.
இது போன்ற இன்னும் ஏராளமான வசனங்களில் (பார்க்க : 17:56-57, 34:22, 10:106, 6:71, 7:191, 7:192, 10:107, 27:62) இருந்து நாம் விளங்குவது என்னவென்றால்,
 • இறந்தவர்களால் பிரார்த்தனை செய்யமுடியாது (16:20-21)
 • இறந்தவர்களால் சிபாசு, பரிந்துரை செய்யமுடியாது (39:3, 10:18)
 • இறந்தவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பது கூட அவர்களுக்குத் தொயாது (16:20-21)
 • இறந்தவர்களின் உயிரை அல்லாஹ் தன்னிடத்திலே நிறுத்திக் கொள்கின்றான். (39:42)
 • இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கும் பர்ஸக் என்னும் திரையிருக்கிறது (23:99-100)
 • இறந்த நல்லடியார்கள் புது மணமகணைப் போல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் (ஹதீஸ்)
 • அல்லாஹ்வையன்றி யாரை பிரார்த்திக்கின்றோமோ அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள சக்தி பெறமாட்டார்கள். (7:196-197)
 • அவர்கள் உங்கள் பிரார்த்தனையைச் செவியேற்கமாட்டார்கள் (35:13-15)
 • இறந்த நல்லடியார்களால் பதிலளிக்க முடியாது (17:56-57)
 • அவர்களுக்கு அணுஅளவு அதிகாரமும் இல்லை (35:13-15)
 • அல்லாஹ்வின் அடியார்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது (18:102)
 • அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே (7:194)
 • அல்லாஹ் அல்லர்தவர்களை அழைக்கக்கூடாது (10:106, 6:71, 23:117)
 • அல்லாஹ்வின் இல்லங்களில் நல்லடியார்களை அழைக்கக்கூடாது (72:18) 
எனவே என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் பிராத்தித்தால் அது இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்று ஒருவர் நம்பி அந்த நல்லடியார்களின் கப்ரில் கையேந்தி நின்றால் நிச்சயமாக அவர் மேற்கூறுப்பட்ட வசனங்களை நிராகரித்ததோடல்லாமல் இறைவனுக்கு இணை வைத்த மகா பாவியாகிவிடுவார். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக.

ஷுஹதாக்கள் என்றும் உயிர் வாழும் தியாகிகளாயிற்றே!!!
இன்னும் சிலர் இந்த வசனங்கள் எல்லாம் சாதாரண மனிதாகளைக் குறிக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த ஷுஹதாக்கள் உயிரோடு இருப்பதாக குர்ஆன் கூறுகிறதே! ஆப்படியானால் குர்ஆன் கூறும் அந்த வசனத்தின் பொருள் என்ன என்று கேட்கின்றனர்.
அல்லாஹ் கூறுகின்றான்.

“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை அவர்கள் மரணித்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள் அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்’ (அல்-குர்ஆன்: 2:154)
‘அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.” (அல்குர்ஆன் 3:169)

இந்த வசனத்திற்கு விளக்கமாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸை அறிவிக்கின்றாகள்.
மஸ்ருக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -: இவ்வசனம் குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் வினவினோம்: அதற்கு அவர்கள் கூறினாகள்: அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நாங்கள் கேட்டோம்: அப்போது அண்ணலார் பின் வருமாறு விளக்கினார்கள்:

‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் உடலுக்குள் இருக்கும். அவைகள் அர்ஷில் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூடுகளுக்குள் இருக்கும். சுவர்க்த்தில் அவை நினைத்தபடி சுற்றித்திரிந்து விட்டு அந்த கூட்டுக்குள் வந்து சேரும். அவற்றைப் பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் இறைவன் கேட்பான். இனி எங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? நாங்களோ சுவர்க்கத்தில் விரும்பிய இடங்களிலெல்லாம் கனிவகைகளை உண்டு வருகிறோம் என்று அவர்கள் கூறுவர். இவ்வாறு இறைவன் மூன்று முறை அவர்களிடம் கேட்பான். தாங்கள் ஏதாவது ஒன்றை இறைவனிடம் கேட்காமல் விடப்படமாட்டோம் என்பதை உணர்ந்துக் கொள்ளும் அவர்கள், இறைவா எங்கள் உயிர்கள் எங்கள் உடல்களில் மீட்கப்பட வேண்டும்: மீண்டும் ஒரு முறை உன்னுடைய பாதையில் நாங்கள் உயிர் நீக்க வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு வேறு எந்த தேவையும் கிடையாது என்பதை காணும் இறைவன் அவர்களை (வேறொன்றும் கேட்காமல்) விட்டுவிடுவான்’ முஸ்லிம் ஹதீஸ் எண் 4651

இதுதான அந்த ஆயத்தின் விளக்கம். ஆனால் நம்மில் சிலர், ஷஹீதுகள் கப்ரின் உள்ளே உயிரோடு இருக்கிறார்கள்: அவர்களிடம் நம் தேவைகளை கேட்டால் அவர்கள் அதை செவியுற்று, அத்தேவைகளை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்று தவறாக எண்ணி, கூட்டம் கூட்டமாக கப்ருகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மேற்கண்ட ஹதீஸை படித்து சிந்தித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.

5) அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்:-
மார்க்கத்தில் ஓரளவுக்கு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்டுப் பெறுவதுதான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றி தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்த குறிப்பிட்ட ஒருவருடைய பொருட்டால் தம் தேவைகளை நிறைவேற்றித்தருமாறு இறைவனிடம் வேண்டும் ஒருவர் பின்வரும் குற்றங்களைச் செய்தவா போலாகிறார்.

1) மரணித்த ஒருவரைப் பார்த்து இவர் சுவர்க்கவாதி என கூறுவது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான மரணித்தவர் இறைவனின் திருப்தியை பெற்று மரணித்தாரா அல்லது இறைவனின் அதிருப்தியைப் பெற்று மரணித்தாரா என்ற இரகசியத்தை அறிந்தவர் போலாகிறார்.

ஒருவர் மரணமடையும் போது அவர் முஸ்லீமாக மரணித்தாரா அல்லது முஸ்லிமல்லாதவராக மரணித்தாரா என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிந்துகொள்ள முடியாது. நபி (ஸல்) அவர்களின் உம்மத்துகளில் சுவர்க்கவாதி என்று நபி (ஸல்) அவர்களால் கூறுப்பட்டவர்கள் அஸ்ரத்துல் முபஸ்ஸரா என்று சொல்லப்படக் கூடிய பத்து நபித்தோழர்கள் ஆவர். இவாகளைத் தவிர மற்றெவரையும் அவர் சுவர்க்கவாதி என்றோ அல்லது நரகவாதி என்றோ கூறக்கூடாது என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளையிருக்க ஒருவரைப்பார்த்து இவர் இறைவனுக்கு நெருக்கமானவர், அவர் பொருட்டால் இறைவனிடம் பிரார்த்தித்தால் இறைவனால் மறுக்கமுடியாது என்று கூறுவது ஏராளமான குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராவைகளாகும். இங்கே ஓரு சிறிய உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். உஹது போரின் போது காயம்பட்ட நபி (ஸல்) அவர்கள், தம்முடைய நபியைக் காயப்படுத்திய சமூகம் எப்படி வெற்றியடையும்? என்று கூறினார்கள். அப்போது இறைவன் பின்வரும் திருமறையின் வசனத்தை இறக்கினான்.

(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் – நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக. (அல்குர்ஆன் 3:128)

சகோதர, சகோதரிகளே சற்று சிந்தியுங்கள். உலகத்தார்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டுவதற்காக அனுப்பப்பட்ட உத்தம திருநபி (ஸல்) அவர்களுக்கே அதுவும் அவர்களைக் காயப்படுத்தியவர்களைப் பார்த்து கூறியதற்கே அவ்வாறு கூறுவதற்கு எத்தகைய அதிகாரமும் இல்லை என இறைவன் கூறியிருக்கும் போது நமக்கு ஒருவரைப் பார்த்து இவர் சுவர்க்கவாதி என்றும் மேலும் அவர் இறைவனுக்கு நெருக்கமானவர் என்றும் எப்படி கூற முடியும்?
முஸ்லிம்களாக வாழ்ந்து வழிதவறிய எத்தனையோ கூட்டத்தார்களைப் பற்றி திருமறையின் வாயிலாகவும், ஹதீஸ்கள் மூலமாகவும் படித்திருக்கிறோம். முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அதிலிருந்து வழிதவறிவிடாமல் இருக்கவும், மேலும் முஸ்லிம்களாகவே மரணிப்பதற்கும் இறைவனிடம் பிராத்திக்க திருமறையின் வசனங்கள் நமக்கு வலியுறுத்துகிறது.

‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!’ (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன் 3:8)

2) மரணித்த ஒருவரின் பொருட்டால் தேவையைக் கேட்பது இறைவனுக்கு அவரிடம் ஏதோ தேவையிருப்பது போல கருவதாகும்.
மேலும் நல்லடியார்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றுவாயாக என்று இறைவனிடம் கேட்டால் அந்த நல்லடியாரிடம் இறைவனுக்குத் ஏதோ தேவையிருப்பது போலவும், அதனால் அவன் வேறுவழியில்லாமல் தரவேண்டியதிருக்கிறது என்றும் பொருளாகாதா? இது அல்லாஹ் யாரிடத்திலும் எந்த தேவையுமற்றவன் என்ற திருமறையின் வசனங்களுக்கு (அல் குர்ஆன் 35:15 மற்றும் 112:2) முரனாக உள்ளதே!

3) மரணித்த ஒருவரின் பொருட்டால் தேவையைக் கேட்பது கியாமத் நாளின்அதிபதியாகிய தீப்புக் கூறும் இறைவனின் இடத்தில் அமர்வதற்குச் சமமாகும்

மேலும் யாருடைய பொருட்டால் கேட்கின்றோமோ அவர்கள் மரணிக்கும் தருவாயில் இறைவனின் உவப்பை, திருப்தியைப் பெற்றவர்களாக மரணித்தவர்களா அல்லது இறைவனின் வெறுப்பை பெற்றவர்களாக மரணித்தார்களா? என்பது நமக்கு திட்டவட்டமாக எப்படி தெரியும்? யார் நேர்வழி பெற்றவர்கள், யார் வழிதவறியவர்கள் என்று கியாமத் நாளில் அல்லவா நமக்குத் தெரியும்? அதை இங்கேயே நாம் தீமானிப்பது கியாம நாளின் நீதிபதியாகிய அல்லாஹ்வின் இடத்தில் அமர்வதற்குச் சமமாகாதா? நவூபில்லாஹி மின்ஹா. யாருடைய பொருட்டால் நாம் கேட்கின்றோமோ அவர் இறைவனின் திருப்தியைப் பெற்றிருக்காமல் மாறாக கோபத்தைப் பெற்றவராகயிருந்தால் அவ்வாறு துஆ கேட்ட நம்கதி என்னவாகும்? ஏனென்றால் இறந்த அந்த அடியார் இறைவனின் திருப்தியைப் பெற்று அவனுக்கு மிக நெருக்கமாகி விட்டார் என்பதை திட்டவட்டமாக யாராலும் கூற முடியாது. அவ்வாறு கூறமுடியும் என்று யாராவது கூறினால், இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான, எவர்கள் நல்லடியார்கள், எவர்கள் பாவிகள் என்ற இரகசியத்தை அவர்களும் அறிந்திருப்பதாகக் கூறி இறைவனின் வல்லமையில் பங்குகேட்டு அவனுடைய இடத்தில் அமர்வதற்குச் சமமாகும். இவ்வாறு எண்ணம் கொள்வது இணை வைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்பட முடியாத மாபெரும் குற்றமாகாதா? அல்லாஹ் நம்மனைவரையும் இவ்வாறு எண்ணம் கொள்வதிலிருந்து காப்பாற்றுவானாகவும்.
அல்லாஹ் கூறுகிறான்:-

“நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்” (அல்குர்ஆன் 2:22)

மேலும், நமக்கு உறுதியாக திட்டவட்டமாகத் தெரியாத எந்த விஷயங்களையும் பின்பற்ற வேண்டாம் என்று அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.

“எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.” (அல் குர்ஆன் 17:36)

சரி, அப்படியானால் நீங்கள் அவ்லியாக்களே, இறை நேசர்களே இல்லையென்று கூறுகிறீர்களா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இறைவனின் நேசர்களின் இலக்கணங்களைப் பற்றி அல்லாஹ்வே தன் திருமறையில் பல இடங்களில் கூறுகிறான். நாம் மேற்கூறப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் மூலம் கூறுவது என்ன வென்றால்: -
 •  இறந்தவர்களால் கேட்கவும், பரிந்து பேசவும்முடியாது.
 • அவர்களிடம் கேட்பது அல்லது அவர்களின் பொருட்டால் கேட்பது கூடாது.
 • நமது எல்லாத்தேவைகளையும் அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுதல் வேண்டும்.
இறைவன் கூறுகிறான்:
‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’  (அல்குர்ஆன் 40:60)

எனவே யாருடைய பொருட்டால் நாம் இறைவனிடம் கேட்கின்றோமோ அவர் இறைவனின் உவப்பைப் பெற்றவரா அல்லது இல்லையா என்பது நமக்குத் திட்டவட்டமாகத் தொயாததாலும், மேலும் இவ்விசயம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாவதாலும் நாம் அவ்வாறு கேட்பதிலிருந்து தவிர்ந்துக் கொண்டு, திருமறையில் அல்லாஹ் கூறியிருப்பது போல் அவனிடமே எல்லாத் தேவைகளையும் கேட்டு, அவனையே சாந்திருப்போமாக.

6) முன்னோகள் செய்தது மார்க்கமாகி விடாது:-
ஒரு சிலருக்குத் தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான் தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய் தந்தையரும் நல்லடியார்களிடம் பிராத்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத் தான் செல்வார்களா? இவாகள் என்ன புதுக்குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள்? என்று ஷைத்தான் சிலரின் இதயத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகள் கூறியவற்றை உதாசீனப்படுத்திவிட்டு, அவர்களின் முன்னோர்களுடைய பாதையை பின்பற்றுமாறு செய்துவிடுகின்றான். முன்னோர்கள் செய்தது எல்லாம் மார்க்கமாகி விடாது. குர்ஆன், ஹதீது கூறுவதே மார்க்கமாகும். இவ்வாறு முன்னோர்கள் செய்தார்களே, நாமும் செய்தால் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் பதிலளிக்கின்றான்:

“மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?” (அல் குர்ஆன் 2:170)

இந்த வசனமும் இன்னும் எராளமான வசனங்கள், பார்க்கவும் 7:27-30, 31:21, 37:69-70, 43:22-24, 10:78, 21:53, 37:69, 21:52-54, 11:87, 14:10, 11:109, 5:104, 7:28 போன்ற யாவும் நாம் நமது முதாதையர்களையோ, தாய் தந்தையரையோ பின்பற்றக் கூடாது என்றும் அல்லாஹ்வின் திருமறையையும், அவனுடைய தூதரின் வழிகாட்டுதலையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. எனவே எங்களின் முன்னோர்கள் நல்லடியார்களிடம் பிரார்த்தித்தாகள், அதனால் நாங்களும் அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம் என்று எவரேனும் கூறினால் அது நிச்சயமாக வழிகேடேயாகும். ஏனென்றால் அவர்கள் சென்று போன சமுதாயம். அவர்கள் செய்தது பற்றி நீங்கள் வினவப்படமாட்டீகள் என்பது அல்லாஹ்வின் கூற்றாகும். (அல் குர்ஆன் 2:134)

7) ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகிவிடுமா?
இன்னும் சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் ஒன்றும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீகள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனா. இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர்-ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணைவைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே இறைவனுக்கு பயந்த மார்க்க அறிஞர்கள் வண்மையாகக் கண்டித்து வருகின்றார்கள். இன்றளவும் கண்டித்தும் வருகின்றார்கள். இஸ்லாத்தின் மற்ற சில அம்சங்களில் வேண்டுமானால் ஆலிம்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர ஈமானுக்கு வேட்டு வைக்கும் கப்ரு வணக்கத்தைப் பற்றிய தெளிவுகளில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை நன்கு கற்றுணர்ந்த அறிஞாகளிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர்கள் ஒருமித்த குரலாக இத்தீயச் செயல்களை எதிர்க்கவே செய்கின்றனர். ஆனால் கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போன் கைகளில் அதிகாரமும், பொருளாதாரமும் இருப்பதால் அவர்கள், அந்த கப்ரு வணக்க முறைகளுக்கு எதிரான ஆலிம்களின் குரல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுக்கின்றனர்.

ஆனால் ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஒரு சில சொற்பமானவர்களே, அதிகாரமும், பொருளாதாரமும் மிகுந்த கப்ரு வணங்கிகளிடமிருந்து அற்ப உலக ஆதாயம் பெறும் பொருட்டு, நல்லடியார்களிடம் நேரடியாகக் கேட்டுப்பெறுவதில் எந்தத்தவறும் இல்லை என்று கூறி, நல்லடியார்களின் கப்ருகளில் நடைபெறும் மாக்கத்திற்கு விரோதமான கூடு, கொடியேத்தம், சந்தனம் பூசுதல், மேளதாளம் போன்ற அனாச்சாரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும் இவர்களே முஸ்லிம்களிடையே புரையோடிப்போய் இருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து வகையான பித்அத்தான காரியங்களுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்து தங்களின் வயிற்றைக் கழுவிக் கொள்கின்றனர். இவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையிலே கடுமையாக எச்சரிக்கின்றான்.

“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:42)
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.” (அல் குர்ஆன் 2:159)

மார்க்கத்தின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வது தீமைகளில் மிக மோசமானதும், பொய்யின் வகைகளில் மிக கொடியதும் ஆகும். அதற்கு கூலி நரகமே’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பவர் : ஆபூஹுரைரா ரலி, ஆதார நூல்: புகாரி

எனவே சமுதாய மக்களுக்கு மார்க்க அறிவைப் புகட்டி சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பிலுள்ள சமுதாயத்தின் கண்களான உலமாப்பெருமக்கள் அல்லாஹ்வும், ரஸுலும் நமக்குக் காட்டித்தந்த உண்மையான இஸ்லாத்தை எதற்கும், எவருக்கும் பயப்படாமல் துணிந்துக்கூறி, நாளை மறுமையில் அல்லாஹ் அளிக்கவிருக்கும் அளப்பரிய செல்வங்களைப் பெற்றிட வேண்டுகிறோம். அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய ஆற்றலைத்தந்து மார்க்கச் சேவை செய்வதன் மூலம் ஈருலகிலும் நற்பேருகளை பெற வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.

8. முடிவுரை: -
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறும் முழுமையான ஈமானைத் தந்து, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் கையேந்தி நிற்காமல் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. ஆமீன்.

 சுவனத்தென்றல்

Thursday, July 22, 2010

பாவியாக்கும் பராஅத் இரவு


சூரியன் பொழுதை அடந்ததும் ஒரே பரபரப்பு! முஸ்லிம் வீடுகளில் பெண்கள் விழித்த உடனே மறக்காமல் கணவனிடம், கறி வாங்கிட்டு வாங்க என்று கூறுவதும், பாத்திஹா ஓத முன் கூட்டியே ஹஜரத்திடம் சொல்லி வர ஆளனுப்புவதுமாக வீடு முழுவதும் ஒரே பரபரப்பாகக் காட்சியளிக்கும்.

இது மாத்திரமா? மாலை நேரத்தில் ரொட்டி சுட்டு, வீடு வீடாகக் கொடுப்பதற்காக மாடிக் கட்டடங்கள் போல் அடுக்கப்பட்டிருக்கும். சிலர் நேர்ச்சைக்காக கோழிக் குழம்பு வைப்பார்கள்.

மஃக்ரிப் தொழுகை முடிந்ததும் பள்ளியிலேயே சூரத்துல் பாத்திஹா அமோகமாக ஆரம்பிக்கப்பட்டு விடும். ஹஜரத்தைக் கூட்டிச் செல்வதற்காக குழந்தைகளின் வரிசை ஒரு பக்கம். சில வீட்டினர் தங்கள் ரொட்டிகளை பள்ளிவாசலுக்கே அனுப்பி வைப்பார்கள். வழமைக்கு மாற்றமாக பள்ளிவாசலில் இறைச்சிக் குழம்பு வாடை மூக்கைத் துளைக்கும்.

தொழுகை முடிந்ததும் ஹஜரத் அவர்கள் வெளி வராண்டாவில் (வராண்டா இல்லாத ஊர்களில் உள் பள்ளியிலும்) யாசீன் ஓதுவார். எத்தனை தடவை தெரியுமா? மூன்று தடவை ஓத வேண்டுமாம். எதற்காக?

முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்

இரண்டாவது யாசீன் கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், நீண்ட ஆயுளுக்காகவும்

மூன்றாவது யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.

அது மட்டுமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும் இஷா தொழுகை அன்றிரவு 10மணிக்கு நடைபெறும். காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு சிறந்ததாகப் போய் விட்டது, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?

அந்நாளில் விசேஷத் தொழுகையும் நடைபெறும். எத்தனை ரக்அத்கள் தெரியுமா? 100ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில் இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாகக் கூறப்பட்டுள்ளது தான் வேடிக்கை. பராஅத் இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?

ரஜப் மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக் கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.

(இச்செய்தி ஷாபி மத்ஹபின் இஆனதுல் தாலிபீன் என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் இருக்கின்றது) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுல் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.) பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் பஹ்ருர் ராஹிக் என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்ஹப் புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும் பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ் இவர்களைக் காப்பாற்றுவானாக!

பராஅத் அன்று நோன்பு நோற்கலாமா?

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2, பக்கம்: 273)

ஏன் இந்த சிறப்பு?

அன்றைய தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா? அன்று தான் ஷஅபான் பிறை 15ல் வரும் பராஅத் இரவாம். அந்த இரவைப் புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில் அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.

இத்தனை ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா? பராஅத் இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மட்டுமின்றி ஒரு கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.

மார்க்கத்தில் ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? குர்ஆனை தெளிவுபடுத்த அனுப்பப்பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா? அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள் செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. பராஅத் இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

இவர்கள் மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை அல்லது இட்டுக்கட்டப்பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.

முதல் ஆதாரம்

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன. (அல்குர்ஆன் 44:2-4)

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமளான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன்2:185)

இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமளான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

இரண்டாம் ஆதாரம்

ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: இப்னுமாஜா 1378

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மூன்றாம் ஆதாரம்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: திர்மிதி 670

இந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் உர்வாவிடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரீ கூறிய கருத்தைப் பதிவு செய்து, இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

நான்காவது ஆதாரம்

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான். அறிவிப்பாளர்: அதாவு பின் யஸார்

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,

ஃபலாயிலுர் ரமளான் - இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8

இந்த ஹதீஸை அறிவிக்கும் அதாவு பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்மஸ்வூதி என்பவர் இடம் பெறுகிறார். இவர் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் பக்தாதிற்கு வந்த பிறகு மூளை குழம்பி விட்டார். அதாவது இவரிடம் பக்தாதில் வைத்துக் கேட்டவர்கள் அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாகும். இவரிடமிருந்து அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் ஹைரான் என்பவராவார். அல்மஸ்வூதி என்ற அறிவிப்பாளர் மூளை குழம்பிய பிறகு தான் இவர் செவியேற்றுள்ளார். இந்த அடிப்படையிலும் இது மிகப் பலவீனமான நிலையை அடைகிறது.

ஐந்தாவது ஆதாரம்

ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ

நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129)குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில்,இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர்,ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)

முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.

நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12

பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். நூல்: முஸ்லிம் 3243

எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

அப்படி அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று செய்தால் அது நிராகரிக்கப்படுவது மட்டுமின்றி, அதைச் செய்தவர் நரகத்திலும் புகுவார். இது நபிகளாரின் எச்சரிக்கையாகும்.

ஆன்லைன்பிஜெ

Monday, July 19, 2010

அல்லாஹ் என்றால் யாருங்க?

                      அல்லாஹ் என்றால் யாருங்க? (பதில்)                                            கேள்வி:
                           அல்லான்னா யாருங்க!
                            (சகோ. ஜெகதீஸ்வரன்)

                                                 பதில்
بسم الله الرحمن الرحيم

(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்)

அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்

 • நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
 • நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
 • நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
 • சூரியன் வெளிச்சம் தருகிறது அந்த வெளிச்சத்தை நோக்கி பூமி உட்பட அனைத்து கோள்களும் நகர்கிறது இதன் மூலம் பகல்களும், இரவுகளும் ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
 • பூமி ஒரே சீராக சுழல்வதால் தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு குளிர்காலம், மழைக்காலம், வெயில்காலம் ஆகியன ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
 • நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களின் சுவாசக்குழாயில் முறையாக வந்தடைகிறது அதை கொடுப்பது யார் மனிதனா?
 • நிலப்பரப்பில் உள்ள ஈர்ப்பு சக்தியால் நாம் நடக்கிறோம், அமர்கிறோம், ஓடுகிறோம் இந்த ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன் யார் மனிதனா?
 • நிலத்தில் மனிதன் உழுகிறான் அவனுக்கு விதையை அறிமுகப்படுத்தியவன் யார் மனிதனா?
 • கடல் நீரை மழை நீராக்கி பருகுவதற்கும் நிலத்தை உழுவதற்கும் வானிலிருந்து கொட்டச் செய்பவன் யார் மனிதனா?
 • ஆகாயத்தில் பறக்கும் விமானத்திற்கு பாதையாக வானத்தை கொடுத்தவன் யார் மனிதனா?
 • குடும்ப உறவு கொள்ள மனிதர்களின் உடலில் விந்துத்துளிகளை செலுத்தியவன் யார் மனிதனா?
 • வயிற்றுப் பசியை தனிக்க மலம் சாப்பிடுவதில்லை மாறாக உணவு உட்கொள்கிறோம், தாகத்தை தனிக்க சிறுநீரை குடிப்பதில்லை மாறாக சுத்தமான நீரை பருகுகிறோம் மனிதனுக்கு இந்த பகுத்தறிவை கொடுத்தவன் யாரோ அவனே இறைவன்!
இறைவன் இல்லை என்று சொல்பவன் நாத்திகன் இவன் மாபெரும் பொய்யன் இவனுடைய கழுத்தில் கத்தியை வைத்தால் கடவுளே என்பான் காப்பாற்றப்பட்டவுடன் கடவுள் யார் என்பான்!
அல்லாஹ்வுக்கு பிறப்பு உள்ளதா?
ஒவ்வொரு மனிதனும் படைத்த இறைவனை தன்னுடைய பலவீனமான ஸ்தானத்தில் வைத்துத்தான் பார்க்கிறான் படைத்த இறைவனை இறைவன் என்ற ஸ்தானத்தில் வைத்து பார்ப் பதில்லை.
சிந்தித்துப்பாருங்கள்! உங்கள் தாயின் வயிற்றில் நீங்கள் 3 மாத கருவாக இருந்தீர்கள் அந்த குறிப்பிட்ட 3 மாதங்களுக்கு முன்பு நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதை கூற முடியுமா?
ஒரு மனிதன் தன் தாயின் வயிற்றில் 3 மாத கருவாக இருப்பதற்கு முன் அற்பத்திலும் அற்பமான ஒரு ஆட்டின் புளுக்கையாக கூட இருந்திருக்கவில்லை அப்படிப்பட்ட மனிதனை இறைவன் கருவாக உருவாக்கி, அதனுள் உயிர் கொடுத்து, பெயர் கொடுத்து, பெற்றோரை கொடுத்து கல்வி அறிவைக் கொடுத்து உலகில் வாழவைத்து மனிதனாக்கி சிந்திக்க மூளையை கொடுத்தால் இவன் படைத்த இறைவனின் பிறப்பை பற்றி சிந்தித்து கேள்வி எழுப்புகிறான். இந்த மனிதன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருப்பதை காட்டிலும் நன்றிகெட்டவனாகத்தான் வாழ்ந்து மடிகிறான்!
இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 22:66)
அல்லாஹ்வுக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனரா?

ஒரு மனிதனுக்கு மனைவியும், பிள்ளைகளும் இருப்பது அவனுடைய வம்சத்தை பல்கிப் பெருகுவதற்காகவே தவிர வேறு எதற்கும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் ஒன்று சேருவதன் மூலமாக தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று வம்சம் அபிவிருத்தியாகும் அதே நேரம் குடும்பத்தில் மரணங்கள் சம்பவிக்கும் காரணம் மனிதன் மரணிக்க பிறந்தவன்! இதோ மனித இனமும் அவனது குடும்ப அபிவிருத்தி பற்றிய விழிப்புணர்வு படம்.
மனிதனுக்கு அவனுடைய குடும்பம் சோதனைக் களமாக இருக்கிறது அவன் தன் தாயை, தந்தையை, சகோதர உறவை, மனைவியை, மக்களை என்று அனைவரையும் முறையாக கவனிக்கிறானா? இவர்களுக்காக உழைக்கிறானா? திருடுகிறானா? அல்லது இவன் குடும்பத்தை மறந்து தவறான பாதையில் செல்கிறானா? என்பதுதான் அந்த சோதனை! இந்த சோதனைகளை கொடுப்பவன் இறைவன் எனவே இறைவனை எவனும் சோதிக்க இயலாது மேலும் அவனுக்கு குடும்பமும் கிடையாது!
அல்லாஹ் ஒருவன்” என (முஹம்மத்) நீர் கூறுவீராக!. அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை. மேலும் அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லை. (அல்குர்ஆன்- 112)
அல்லாஹ் ஒருவன், அவனுக்கு இணை துணை கிடையாது!
இஸ்லாம் போதிக்கும் கடவுள் கொள்கை உலகில் உள்ள மற்ற மதங்களின் இறைக் கொள்கைகளை விட சற்று வேறுபட்டு நிற்கிறது. காரணம் இஸ்லாம் ஓரிரைக் கொள்கையை போதிக்கிறது மற்ற மதங்கள் அனைத்தும் பல கடவுள் கொள்கையை போதிக்கிறது!
ஒரு இறைவன் என்ற ஓரிரைக் கொள்கைதான் உண்மை என்பதற்கு கீழ்கண்ட காரணங்கள் தெளிவாக விளக்கும்
நீதி செலுத்த ஒரு இறைவன்தான் இருக்க வேண்டும்!
ஒருவனுக்கு அநீதி இழைக்கப்படும் போது அநீதி இழைக்கப் பட்டவனுக்கு உரிய நீதியை முறையாக செலுத்த வேண்டும் உதாரணமாக மூன்று கடவுள்கள் இருந்தால்
படைக்கும் கடவுள் இந்த மனிதனை நான் படைத்தேன் இவன் பாவியாகிவிட்டான் இவன் என்னை வழிபட்டான் எனவே படைத்த நானே இவனை மன்னிக்கிறேன் என்று கூறும்
கண்காணிக்கும் கடவுள் இந்த பாவியை நான் கண்காணித்து வந்தேன் என் கண்ணால் கண்ட நான் இவனை எவ்வாறு மன்னிக்க இயலும் என்று கூறும்
அழிக்கும் கடவுள் படைக்கும் கடவுள் மனிதனை படைத்துவிட்டது, கண்காணிக்கும் கடவுள் பாவியை கண்காணித்துவிட்டது எனவே அழிக்கும் கடவுளாகிய நான்தான் இவனை தண்டிப்பதா? மன்னிப்பதா என்று தீர்மானிக்கும் உரிமை படைத்தவன் என்று கூறும்
ஒன்றுக்கு மேமற்பட்ட அல்லது மூன்று கடவுள்களாகவோ இருந்தால் தங்களுக்குள் பிரச்சினையை தீர்க்க முடியாமல் வெவ்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டு தங்களுக்குள் உட்பூசல்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஆனால் ஓரிரைக் கொள்கையை போதிக்கும் இஸ்லாம் அல்லாஹ் ஒருவனை மட்டும் கடவுளாக முன் நிறுத்துகிறது அந்த ஒரு இறைவனாகிய அல்லாஹ் தான் நாடினால் தனக்கு இணை கற்பித்த பாவத்தை தவிர மற்ற பாவங்களை செய்த பாவியைக் கூட மன்னிப்பதாகவும் தான் நாடினால் தனக்கு இணை கற்பிக்காமல் தான் வகுத்த சட்டத்தை மீறிய நல்ல அடியானைக் கூட தண்டிப்பதாகவும் கூறுகிறது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.’ (அல்குர்ஆன் 4:48)
ஒரு இறைவனாக இருந்தால் எதற்கும் அடிமையாக முடியாது!
பல கடவுள்கள் இருந்தால் அத்தனை கடவுள்களும் கருத்து வேறுபாடுகள் தோன்றும் இறுதியாக ஏதாவது ஒரு கருத்தின் பக்கம் தலைசாய்க்க ஒரு வஸ்துவிடம் அனைத்து கடவுள்களும் கை கட்டி நின்று கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இப்படிப்பட்ட நிலையில் அந்த ஒரு வஸ்து அனைத்து கடவுள்களுக்கும் அறிவுரை கூறி அவர்களை கட்டுப்படுத்தி விட்டால் அந்த வஸ்து கடவுளாகவும் அந்த வஸ்துவுக்கு முன் குழுமி நின்று கைகட்டி நிற்பவை அனைத்தும் அந்த வஸ்துவின் அடிமையாகத்தான் இருக்கும் எனவே கட்டுப்படும் கடவுள்கள் என்று எதுவும் கிடையாது.
அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன் அவன் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவன் தவிர தான் படைத்த வஸ்துக்களிடம் கட்டுப்பட வேண்டிய இழிவான சூழ்நிலை அவனுக்கு இல்லை எனவேதான் அல்லாஹ் உங்கள் இறைவனாக இருக்கிறான் இந்த இறைவனுக்கு நீங்கள் அடிமையாக இருக்க சந்தோஷப்பட வேண்டும்!
அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன்: 17:111)
ஒரு இறைவனால் அனைத்தையும் நிர்வகிக்க இயலும்!
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான இரத்த அணுக்கள் காணப்படுகின்றன, நூற்றுக்கணக்கான உறுப்புகள் இயங்குகின்றன அத்தனை உறுப்புக்களையும், கோடானு கோடி இரத்த நாளங்கள் மற்றும் இரத்த அணுக்களையும் நிர்வகிப்பதற்கு உங்கள் உடம்பில் உங்கள் உயிரை அல்லாஹ் படைத்துள்ளான் நீங்கள் உங்களை அறியாமலேயே உங்கள் உடலை நிர்வகிக்கிறீர்கள் இப்படிப்பட்ட உங்களுக்கே இப்படியொரு ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கும் போது கடவுளாகிய அல்லாஹ்வுக்கு அண்டசரா சரங்களையும் ஒருவனாக இருந்து நிர்வகிக்க ஆற்றல் இருக்காதா? என்ன!
உங்கள் உடம்பில் உங்களுடைய ஒரு உயிர் இருப்பதால்தான் உங்கள் உடம்பிற்கான கட்டளைகளை உங்களால் சீராக செலுத்த முடிகிறது அதுவே இரண்டு ஆதம்மாக்கள் உங்கள் உடம்பில் இருந்தால் கட்டளைகளில் முரண்பாடு ஏற்பட்டு மூளை பலவீன மடைந்துவிடும்! இதே போலத்தான் ஒரு இறைவன் (அதாவது அல்லாஹ்) இந்த அண்டசராசரங்களுக்குத் தேவையான கட்டளைகளை பிரப்பித்து நிர்வகித்து வருகிறான் மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் கட்டளைகள் ஒழுங்காக சென்று சேராது! அல்லாஹ் அவன் மிக்க அறிவாளியாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ளான் இதைப் பற்றி அருள்மறை குர்ஆன் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறது!
உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.(அல்குர்ஆன் 20:98)
உங்கள் இறைவன் அல்லாஹ் குற்றம் இல்லாதவன்!
பாவம் செய்வது மனித இயல்பு பாவமற்றவன் இறைவன் எனவேதான் கடவுள் என்று எண்ணி ஒரு வஸ்துவுக்கு கை, கால்கள் கொடுத்து நெற்றியில் கண்ணை பதித்து மனித ரூபத்தில் ஒரு சாரார் ரசித்தனர் இறுதியல் அந்த வணங்கப்படும் வஸ்துவை நோக்கி நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறி தங்கள் கடவுள் கூட பாவம் செய்யும் என்ற கண்ணோட்டத்தில் கண்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட இழிவு அல்லாஹ்வுக்கு கிடையாது அவன் குற்றம் குறையற்றவன்.
இரண்டு கடவுள்கள் இருந்தால்தானே நம்மை போன்று குற்றம் குறை கண்டுபிடித்து சண்டை போடவோ அல்லது பொய் சொல்லவோ முடியும் ஆனால் படைத்த இறைவன் ஒருவனாக இருக்கும்போது குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை அந்த ஓரிரைவன் எதை செய்தாலும் நிறையாகவே காணப்படும்!
உங்கள் இறைவன் அல்லாஹ் குறை இல்லாதவன்!
இரண்டு கடவுள்கள் இருந்தால்தான் இந்த கடவுளுக்கு இந்த குறை உள்ளது அந்த கடவுளுக்கு அந்த நிறை உள்ளது என்று கூறமுடியும் மாறாக ஒரே கடவுள் இருந்தால் அதனிடம் எந்த குறையும் தென்படாது அதனிடம் உள்ள அனைத்தும் நிறை வாகத்தான் இருக்கும்! எனவேதான் அல்லாஹ் குறையில்லா தவனாக இருக்கிறான் காரணம் அவன் தனித்தவனாக இணை துணையில்லாதவனாக இருப்பதே அவனுடைய சிறப்பு!
உங்கள் இறைவன் அல்லாஹ் அளவற்ற அருளாளன்
 • ஒன்றுமில்லாமல் இருந்த உங்களை கருவாக ஆக்கினான்
 • கருவுக்குள் உயிரை ஊதி, உடலை கொடுத்தான்
 • உடலுக்குள் உறுப்புகளை கொடுத்தான்
 • உறுப்புகளுக்கு கட்டளை செலுத்த மூளையை படைத்தான்
 • மூளைக்கு சிந்திக்கும் ஆற்றல் கொடுததான்
 • பசி எடுக்கும் போது குழந்தையிடம் அழுகை கொடுத்ததான்
 • அழுத குழந்தைக்கு தாய்ப்பால் மற்றும உணவு கொடுத்தான்
 • உணவுக்காக உலகை கொடுத்தான்
 • உலகில் நிலம், நீர், காற்று, மழை, வெயில், குளிர், உஷ்ணம் என்று அனைத்தையும் கொடுத்தான்
 • உடல் சுகத்தை தணிக்க மனைவியை கொடுத்தான்
 • வயோதிக பருவத்தில் பெற்ற மக்களை போர்வை யாக்கினான்
 • மரணித்தபின் உங்கள் உடலை புதைக்க மண்ணை  கொடுத்தான்.
இத்தனையும் கொடுத்த இறைவன்
 • நாம் நுகரும் காற்றிற்கு உங்களிடம் விலை பேசவில்லை,
 • பருகும் நீருக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை
 • வசிக்கும் நிலத்திற்கும் பேரம் பேசவில்லை
ஆனால் மனிதனாகிய இவன் காற்றை விற்பனை செய்கிறான், நீரை விற்பனை செய்கிறான் நிலத்தை மோசடி செய்து விற்கிறான் இவன் மனிதன் இறைவனை உணராதவன்! இவன் இறைவனது அருளை உணர்ந்துவிட்டால் பாவத்தை கைகழுவ நடிவிடுவான் அல்லாஹ்வுக்கு அடிமையாகிவிடுவான்!
அல்லாஹ் நம்மை சோதிப்பான் ஆனால் உதவுவான் (அவன் மாபெரும் கருணையாளன்)
அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுப்பான் அந்த குறைபாடுகளை பார்க்கும் நாம் ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறான்!
 • கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித் தருகிறான்! இதை விட சிறந்த உதவியாக கண்பார்வை யற்றவர்கள் கண்களின் விபச்சாரத்திலிருந்து பாதுகாப்பு பெற வைக்கிறான்! மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே!
 • காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கும்! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
 • வாய்பேச முடியாத ஊமைகளால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாத காரணத்தினால் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
 • பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் ஏற்பட்டு பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே!  மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்துவிடும்!  மேலும் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!
அல்லாஹ்வுக்கு உள்ள பண்புகளும், தன்மைகளும்!
அல்லாஹ் என்பவன் அனைத்து படைப்பினங்களின் அரசனாக இருக்கிறான் மேலும் படைத்தல், காத்தல், நிர்வகித்தல், அழித்தல் ஆகிய அனைத்து பண்புகளையும் அல்லாஹ் பெற்றுள்ளான். எந்த பொருளையும் முன்மாதிரியின்றி படைக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உள்ளது மேலும் (குன்) ஆகுக என்று கூறினால் போதும் தான் நாடியவாறு அந்த பொருள் ஆகிவிடும். இதைப்பற்றி அருள்மறை குர்ஆன் பின்வருமாறு விவரிக்கிறது!
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் குன்‘ – ஆகுக – என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)
அல்லாஹ்வை நம்புங்கள்
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், ‘மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்என்று கூறினீர்கள் அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (அல்குர்ஆன் 2:55)
விக்ரஹ ஆராதனையை தவிர்த்திடுங்கள்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக் கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித் தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார். (அல்குர்ஆன்: 7:138)
உலக மக்கள் அனைவரும் பொதுவான விஷயத்துக்கு வாருங்கள்
(நபியே! அவர்களிடம்) ”வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ”நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன்3:64)
குறிப்பு
பல்வேறு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளும் கருத்துக்களும் இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்தன! நம் அனைவருக்கும் அல்லாஹ் கல்வி ஞானத்தை வழங்கி நேர்வழிகாட்டி நல்லருள்புரிந்து!
நம் அனைவருக்கும் கல்வி ஞானத்தை வழங்கிவன் அல்லாஹ்தான்  எனவே புகழனைத்தும் அவனுக்கே உரியது நாம் அவனுடைய அடிமைகள்தான்!

அல்ஹம்துலில்லாஹ்


Wednesday, July 14, 2010

ஆக்டோபஸ் குறியும் கூத்தாட்டமும்? நவீன முட்டாள்கள்தனம்


                                       பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஆக்டோபஸ் குறியும் கூத்தாட்டமும்? நவீன முட்டாள்கள்தனம்
2010ம் ஆண்டு ஜுன்-ஜுலை மாதங்களின் இடையே நடைபெற்ற உலக கால்பந்தாட்ட போட்டிகளில் பல்வேறு நாட்டு அணிகள் கலந்துக்கொண்டன இந்த போட்டிகளை உலகத்தில் பல கோடி மக்களும் கண்டு களித்தனர் ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டிகளை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டக்காரர்களும், குறி சொல்லும் சோதிடர்களும் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டனர் அவர்களின் வரிசையில் ஆக்டோபஸ் சோதிடம் மிகவும் பேசப்பட்டது உண்மையில் ஆக்டோபஸ் குறி சொல்லுமா? ஆக்டோபஸ்களை வைத்து குறி பார்க்கும் நவீன சோதிடக்காரர்களுக்கு இதோ சவுக்கடி!
ஆக்டோபஸ் என்றால் என்ன?
எட்டு கால்களும் அதன் நடுவில் வட்ட வடிவமான தலையை கொண்ட ஒருவகை நீர்வாழ் உயிரினத்திற்கு ஆக்டோபஸ் என்று பெயர்.  இந்த ஆக்டோபஸ் குறைந்தபட்சம் 2 அடி முதல் அதிகபட்சமாக 18 அடி நீளம் வரை வளரும். பொதுவாக நடுத்தர வகை ஆக்டோபஸ்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலும் பசுபிக் பெருங்கடலிலும் வாழ்கின்றன.

ஆக்டோபஸ் எவ்வாறு உணவு உட்கொள்கிறது?
இந்த ஆக்டோபஸ்-ன் ஒவ்வொரு காலிலும் ஊறிஞ்சு குழாய்கள் காணப்படுகின்றன மொத்தமாக ஒவ்வொரு ஆக்டோபஸின் உடலிலும் 240 ஊறிஞ்சும் குழாய்கள் ஆங்காங்கே பரவி காணப்படுகின்றன. இந்த உறிஞ்சு குழாய்கள் இறையை இலாவகமாக பிடித்து வாய்ப்பகுதிக்குள் தள்ளுவதற்கு பயன்படுகிறது.

ஆக்டோபஸ் எவ்வாறு இடம் பெயர்ந்து செல்கிறது?
ஆக்டோபஸ் என்ற உயிரினத்தின் 8 கால்களிலும் ஒருவகையான உறிஞ்சு குழாய்கள் இருப்பதை மேலே படித்தீர்கள் இந்த உறிஞ்சு குழாய்கள் உணவை கவ்வி பிடிப்பதற்கு மட்டுமல்லாது கடலுக்கு அடியில் காணப்படும் பெரிய பாறைகளை கவ்வி பிடித்து இலாவகமாக நகர்வதற்கும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இது கடலின் மணல் திட்டுக்களை உறிஞ்சு குழாய்கள் உதவியால் பிடித்துக்கொண்டு நகர்ந்தும் செல்கிறது.

ஆக்டோபஸ்-ன் தற்காப்பு கலை
ஆக்டோபஸ் என்ற உயிரினம் அதிபுத்திசாலி உயிரினங்களின் வரிசையில் இடம்பெறுகிறது அதற்கான காரணம் இது தன்னை பிற உயிரினங்களின் தற்காத்துக்கொள்ளும் விதத்தை வைத்து அறிந்துக கொள்ளலாம்.

இந்த ஆக்டோபஸ்கள் மணல் திட்டுக்களில் காணப்படும் சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியோ அல்லது மணல் குகைகளை அமைத்தோ அதற்குள் பதுங்கிக்கொண்டு எந்த விலங்கினமும் தன்னை நெருங்காத வண்ணம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறது.

மேலும் இதன் வயிறுகளிலிருந்து ஒருவகையான கருமை நிறமுடைய திரவம் வெளிப்படுகிறது அது தன்னை தாக்க வரும் உயிரினத்தின் எதிரில் எச்சரிகை விடுத்து அந்த உயிரினத்தை தன்னிடமிருந்து விரட்டியடிக்க பயன்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி இந்த ஆக்டோபஸ் உயிரினங்கள் பச்சோந்திகளைப் போன்று அவ்வப்போது தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்கிறது. இந்த நிகழ்வு அந்த ஆக்டோபஸ்-ன் உள்ளுணர்வு மாற்றங்கள், சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்கிறது. மேலும் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள இந்த ஆக்டோபஸ்கள் நாடினால் அருகிலுள்ள கடல் பாறைகளின் நிறத்தை சில நிமிடங்களில் தேர்ந்தேடுத்துக் கொண்டு எதிரியை திக்குமுக்காட வைத்துவிடுகிறதாம்.

ஆக்டோபஸும் அதன் இனப் பெருக்கமும்

ஆக்டோபஸ் இடும் முட்டைகள்
ஆக்டோபஸ் என்ற உயிரினத்திலும் ஆண் பெண் என்ற இரண்டு வகை உண்டு இந்த இரண்டுமே தன் இனப்பெருக்கத்திற்கான உணர்வுகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆக்டோபஸும் பிறந்த 5வது மாதத்திலேயே இனப்பெருக்கத்திற்கு தயாராகி விடுகின்றன என்று ஆராய்ச்சியானர்கள் கூறுகின்றனர்.

ஆண் ஆக்டோபஸின் உடலில் உள்ள ஒரு கால் பகுதியில் SPERM எனப்படும் ஒருவகை விந்து அணுக்களுகளை பெற்றுள்ளன இதை SPERMATOPHORES என்று வல்லுநர்கள் அழைக்கின்றனர். இந்த விந்து அணுக்கள் பெண் ஆக்டோபஸின் MANTLE CAVITY என்ற பகுதிக்குள் செலுத்தப்பட்டு அதை சூளுரச் செய்கிறது. பெண் ஆக்டோபஸ் சூள் கொண்ட பின் 1/8 இஞ்ச் கொண்ட முட்டைகளை இடுகிறது. இந்த பெண் ஆக்டோபஸ்கள் சுமார் 100,000 முட்டைகளை இடும் திறன் கொண்டவைகளாக திகழ்கின்றன. இறுதியாக 4 முதல் 8 வாரங்கள் இந்த பெண் ஆக்டோபஸ் கோழிகளை போன்று அடைகாக்கின்றன பின்னர் ஆக்டோபஸ் குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவரத்து துவங்குகின்றன.

ஆக்டோபஸ்களின் வாழ்நாள் எவ்வளவு?
இன்றைய நவீன உலகத்தில் உலா வரும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்  ஆக்டோபஸ்களின் வாழக்கை முறையை உண்ணிப்பாக கவனித்த வந்தாலும் அதன் வாழ்நாளை பொருத்தவரை இன்னும் ஆராய்ச்சியின் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளனர் காரணம் அதுபற்றிய உண்மைகளை இன்னும் அவர்களால் முழுவதுமாக ஆராய முடியவில்லை.  

இந்த ஆக்டோபஸ்கள் உத்தேசமாக பிறந்து ஒருவருடம்  வாழ்ந்து மரணித்துவிடும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள் இதற்கு இவர்கள் முன்வைக்கும் வாதம் ஆக்டோபஸ்கள் பிறந்த 5 மாதத்தில் தங்கள் இனப்பெருக்க உணர்வுகளை எட்டுவதுதான். அதே சமயம் ஆக்டோபஸ்கள் விகாரணமான உடல் அமைப்பை கொண்டுள்ளதால் அதன் மரணம் அதன் உடலமைப்பை கொண்டு அமையலாம் என்று மற்றொரு சாரார் கூறுகின்றனர்.

ஆக்டோபஸ்- குறி கேட்பது பாவமான காரியமாகும்
ஆழ்கடல் நீரோட்டங்களில் அழகாக தன் ஜோடியுடன் சுந்திரமாக உலவிக்கொண்டு திரியும் ஆக்டோபஸ்களை பிடித்து அவைகளை கண்ணாடி நீர்த்தொட்டிகளில் வைத்து காட்சிப் பொருளாக பார்த்து ரசிப்பது அசிங்கமான செயலாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை பற்றி குரள் எழுப்பும் நாம் அழகான விலங்கினங்களையும் பறவை, நீர் வாழ் மற்றும் இன்ன பிற உயிரினங்களின் உரிமையையும் பரிக்க முற்படலாமா?
மேலும் கால்பந்தாட்டத்தில் இந்த அணி வெல்லுமா? அந்த அணி வெல்லுமா என்று என்று சோதிடம் பார்ப்பதற்காக இரண்டு தொட்டிகளில் ஆக்டோபஸ்களின் உணவை வைத்துவிட்டு அந்த கண்ணாடி தொட்டிகளுக்கு வெளியே இரண்டு அணிகளின் தேசிய கொடியை ஒட்டி ஆக்டோபஸ் எந்த தொட்டியின் உணவை சாப்பிடுகிறதோ அந்த அணி வெற்றி பெரும் என்று சோதிடம் கணிக்கிறார்களே இது கேவலமான காரியமாக தென்பட வில்லையா?
பகுத்தறிவை கொண்டுள்ள மனிதன் போயும் போயும் ஆக்டோபஸ்கள், கிளிகள், பறவைகளிடம் மற்றும் வாண்மண்டல கோள்கள் ஆகியவற்றிடம் குறி கேட்பது மனித இனத்திற்கே அசிங்கமான செயலாகும்! இந்த செயல் எவ்வாறு உள்ளதென்றால் அதற்கான உதாரணம் இதோ
துள்ளிக்குதிக்கும் மான்கள் நிறைந்த சோலையில் நான்கு சிங்கங்கள் அமர்ந்துக்கொண்டு இப்போது மான்களை வேட்டையாடினால் வெற்றி கிடைக்குமா? வெற்றி கிடைக்காதா? என்று பேசிக்கொள்ளுமாம் அதற்கு ஒரு முட்டாள் சிங்கம் அருகில் ஊர்ந்துக்கொண்டு செல்லும் நத்தையை பிடித்து மரக்கிளையில் வைக்குமாம் பிறகு அந்த முட்டாள் சிங்கம் கூறுமாம் நத்தை மரத்திலிருந்து கீழே விழுந்தால் நம்முடைய மான் வேட்டையில் வெற்றி கிடைக்கும் நத்தை மரத்திலிருந்து கீழே விழாமல் இருந்தால் நமக்கு தோல்வி நிச்சயம் என்று குறி கூறுமாம். இந்த முட்டாள் சிங்கத்தின் வார்த்தைக்கு மயங்கி மற்ற 3 சிங்கங்களும் மான் வேட்டைக்காக நத்தையை உற்று நோக்கிக்கொண்டே மான்களை தொலைத்துவிடுமாம்!
ஆக்டோபஸ்களை வைத்து குறி பார்க்கும் மடையர்களே!

ஆக்டோபஸ் சோதிடம்
கால்பந்தாட்டத்திற்காக ஆக்டோபஸ்களை நீங்கள் பயன் படுத்தினீர்கள் இதோ இந்தவகை குறி பார்க்கும் ஒரு சுவாரஸ்யமான போட்டியை நடத்த உங்களால் இயலுமா? இதோ அந்த போட்டி
இரண்டு அணிகளை தேர்ந்தேடுங்கள் ஒரு அணி வீரர்களிடம் பழைய ரக துப்பாக்கிகளை கொடுத்துவிடுங்கள் மற்றொரு அணி வீரர்களிடம் நவீன ரக துப்பாக்கிகளை கொடுத்து விடுங்கள் பிறகு இரண்டு நீர்த்தொட்டிகளில் ஆக்டோபஸ் உணவை வைத்துவிட்டு அந்த தொட்டிகளின் வெளியே இரு அணிகளின் சின்னங்களை ஒட்டிவிடுங்கள் இப்போது ஆக்டோபஸ் உயிரினத்தை அந்த தொட்டிக்கு அருகே வைத்துவிடுங்கள் அணி 1-ல் உள்ள தொட்டியின் உணவை ஆக்டோபஸ் சாப்பிட்டால் உங்களை அணி 1 பழைய ரக துப்பாக்கியால் சுடும் அல்லது அணி 2-ல் உள்ள தொட்டியின் உணவை ஆக்டோபஸ் உண்டுவிட்டால் உங்களை அந்த அணியினர் நவீன ரக துப்பாக்கியால் சுடுவார்கள்! ஆக்டோபஸ் உயிரினத்திடம் குறி கேட்கும் மடையர்களே இது உதாரணத்திற்காகத்தான் கூறப்பட்டது இதற்கும் துணிந்துவிடாதீர்கள்!
ஆக்டோபஸ் குறியின் மூலம் குறிப்பிட்ட அணிக்கு வெற்றி எவ்வாறு கிடைத்தது!
இதோ அடுக்கான காரணங்கள்!
 
 • ஒவ்வொரு அணியின் சார்பாக விளையாடும் வீரர்கள் மனிதர்கள்தான்.
 • ஒவ்வொரு மனிதனும் பலவீனமானவன் எளிதில் நம்பிவிடுவான்
 • கால்பந்தாட்ட வீரர்கள் நிற்பது இலட்சம் பேர் கூடியுள்ள மைதானித்தில்
 • கால்பந்தாட்ட வீரர்களின் குறிக்கோள் நன்றாக விளையாட வேண்டும் என்பதே
 • தன் அணிக்காக கோள் அடிக்க தவறினால் தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற பதற்றமும், அணியின் கோச் கேவலமாக திட்டுவார் என்ற பயமும் ஒவ்வொரு அணி வீரனிடமும் இருக்கும்!
 • தன் ஆட்டத்திறன் எடுபடவில்லையென்றால் சொந்த நாட்டில் முகம் காட்ட இயலாது என்ற வெட்க உணர்வும் ஒவ்வொரு வீரனுக்கும் இருக்கும்!
 • தனது அணி தோற்றுவிட்டால் பணத்தை வாங்கிக்கொண்டார்களோ என்ற அவதூறு பட்டம் கிடைத்துவிடுமே என்ற பயமும் ஒரு பக்கம் இருக்கும்!
 • 30 வருடங்களாக எடுத்த கடுமையான பயிற்சி தோல்வியில் முடிந்தால் தன்னுடைய முயற்சிகள் வீனாகிவிடுமே என்ற பதற்றம் நெஞ்சை பிளக்கும்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆக்டோபஸ்களை வைத்து குறி சொல்லி விளையாட விருக்கும் இரு அணியில் ஒரு அணி நிச்சயம் தோற்று போய்விடும் என்று கூறினால் அவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட விளையாட்டு வீரர்களால் எவ்வாறு ஜீரணிக்க இயலும் இது விளையாட்டு துரோகமில்லையா? இதனால் மேற்கூறப்பட்ட பதற்றம் இன்னும் அதிகமாக கூடி அந்த விளையாட்டு வீரர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கோல் அடிக்கும் எண்ணம் வருமா? அல்லது நம் அணி ஆக்டோபஸ் குறி போல் தோற்றுவிடுமா என்ற பயம் வருமா?

இதோ சுய பரிசோதனை செய்து பாருங்கள்
காலையில் உங்கள் நண்பர்களோடு வாக்கிங் செல்வீர்கள் அப்போது யார் முதலில் வருவார் என்று போட்டி கூட வரும் அப்போது உங்கள் பின்னால் ஒருவன் நின்றுக்கொண்டு நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் தோற்றுவிடுவீர்கள் என்று கூறினால் உங்களுக்கு எரிச்சல் வருமா? ஓட்டத்தில் கவனம் வருமா? அல்லது உங்கள் கவனம் சிதறுமா?
இதோ இஸ்லாம் கூறும் அறிவுரைகளை கேளுங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்” என்று சொன்னார்கள். மக்கள், ”நற்குறி என்பதென்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ”அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). நூல்: புகாரி (5754)

பசியால் சாகும் வரை ஒரு பூனையை அடைத்து வைத்திருந்த பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டு நரகத்தினுள் நுழைந்தாள், நீ அந்த பூனையை அடைத்து வைத்திருந்த போது தண்ணீர் புகட்டவுமில்லை, உணவு கொடுக்கவுமில்லை, இன்னும் அதை விட்டுவிடவுமில்லை, (அப்படி அதை அவிழ்த்து) விட்டடிருந்தால் அது பூமியிலுள்ள புழுப்பூச்சிக்களை உண்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

முஃமின்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்வீர்களானால், உங்களுக்கு (நன்மை-தீமையைப்) பகுத்தறியும் தன்மையை அவன் அளித்து, உங்களுடைய தீமைகளை உங்களை விட்டும் அகற்றி, இன்னும் உங்க(ளுடைய பாவங்க)ளை மன்னிப்பான் (ஏனெனில்) அல்லாஹ் மகத்தான கருணை உடையவன். (குர்ஆன் 8:29)

அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. (அல்குர்ஆன் 24:40)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
அல்ஹம்துலில்லாஹ்

islamicparadise