நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Saturday, December 24, 2011

பகுத்தறிவை நோக்கி ஓர் பயணம்


நாத்திகனுக்குள் உண்மையைத் தேடி...                                         ஓரிறையின் நற்பெயரால்.

     பொதுவாக எல்லா மதம் சார்ந்த / சாரா கொள்கைகள் நன்மை செய்வதை முன்னிலைப்படுத்தி கோட்பாடுகளை வகுத்தாலும் ஏனைய மதங்களை விட இஸ்லாமே நாத்திகவாதிகளால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.

 ஏனெனில் ஏனைய கொள்கைகள் போல நன்மைகள் மேற்கொள்வதை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாது, அதன் எதிர் விளைவான தீமையை தடுக்கவும் இஸ்லாம் அதை பின்பற்றுவோர் மீது சமூக கடமையாக பணிக்கிறது.

  ஆக அதனடிப்படையில் இன்று எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் இஸ்லாமியர்கள் அவரவர் பங்களிப்பை முடிந்த வரையில் அளித்து வருகிறார்கள்.  குறிப்பாக இணையத்தில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது., எல்லா துறைச்சார்ந்த கோட்பாடுகளை விளக்கும் தளங்களை விட இஸ்லாத்தை விளக்கும் தளங்கள் தமிழில் அதிகம்., நான் வாசித்த வரையில் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் மேலாக இருக்கிறது 

   ஒரு கொள்கையை விளக்கும் போது நேர்மறை எதிர்மறை கருத்துக்கள் எழ தான் செய்யும் ஆனால் எந்த ஓரு நிகழ்வையும் ஏற்பதும் மறுப்பதும் ஒருவரது நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட விஷயம். ஆனால் தான் கொண்ட கொள்கை தான் உண்மையானது எனக் கூறி பிறரை ஏற்க செய்வதாக இருந்தால் அச்செய்கையை பொதுவில் நிறுத்தி, 
 • அறிவியல் ரீதியாக 
 • தர்க்கரீதியாக 

     ஒன்றின் கீழாக நிறுத்தி அவை விளக்கப்பட வேண்டும். அது இஸ்லாத்திற்கும் பொருந்தும் -நாத்திகத்திற்கும் பொருந்தும்., ஆனால் இஸ்லாம் எப்படி குர்-ஆன் சுன்னாவை முன்னிருத்தி பிறரை தன்பால் அழைக்கிறதோ, அதுப்போல நாத்திகம் அதுக்கொண்ட கொள்கையே முன்னிருத்தி அழைப்பதில்லை. மாறாக ஒரு நிலையில் இஸ்லாத்தை விமர்சித்து -தவறான புரிதலுடன் குற்றப்படுத்தி தம் கொள்கையை பறைச்சாற்றுகிறது. எண்ணற்ற தளங்கள் இஸ்லாம் சார்ந்த விமர்சனத்திற்கு / குற்றச்சாட்டிற்கு தெளிவான விரிவான விளக்கம் தந்துக்கொண்ட இருக்கின்றன.

     மேலும் ஒரு கோணத்தில் உயிரின தோற்றத்தின் மூலத்திற்கு பரிணாமத்தை அடிப்படையாக கொண்ட சித்தாந்தத்தை அறிவியலாகவும்,  கண் முன் இல்லா கடவுளை ஏற்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாது என தர்க்க ரீதியாகவும் வாதமெழுப்ப நாத்திகம் முயல்கிறது., அவற்றை மறுக்கும் விதமாக கீழ்கண்ட தளங்களில்  நாத்திகத்தை பொய்ப்பித்து படைப்பியல் கொள்கையை நிறுவ இஸ்லாத்தை முன்னிருத்தாமல் அவர்களிலும் வழியிலேயே பரிணாமம் -கடவுள் -கம்யூனிசம் குறித்து ஆய்வு ரீதியாவும் தர்க்கரீதியாகவும் ஆக்கங்களை வெளியிடுகிறது.     நீங்களும் பார்வையிடுங்கள் இந்த ஆக்கங்கள் சமூக பயன்பாடு உடையது என நீங்கள் நினைத்தால் இந்த பதிவை மீள்பதிவாகவோ அல்லது தனிப்பக்கமாகவோ உங்கள் வலைத்தளத்தில் வெளியிடுங்கள். குறைந்த பட்சம் நாத்திக சகோதரர்களுக்காவது இப்பக்கத்தை அறிய செய்யுங்கள். 


* * *

" சகோதரர் ஆஷிக் அஹ்மத்தின் பரிணாமம் குறித்த பதிவுகள் "  
  

மேலும் பரிணாமம் குறித்து இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள்25. வாட்சின்:ஆச்சர்யங்கள்-மர்மங்கள்-குழப்பங்கள்.

  * * *  " சகோதரர் பைசலின் பரிணாமம் குறித்த பதிவுகள் ".
       

  * * *

  " சகோதரர் ஹைதரின் கம்யூனிசம் குறித்த பதிவுகள். "
       


  * * *


  " சகோதரர்  குலாம் 'ன்' பகுத்தறிவு குறித்த பதிவுகள். "


  நான் முஸ்லிம்

   அல்லாஹ் மிக்க அறிந்தவன்


  உங்கள் சகோதரன்
                                              G u l a m 
                                                                                                                                                       இறை நாடினால் இனியும் சந்திப்போம்...

  Wednesday, December 14, 2011

  இருளிலும் பிரகாசிக்கும் மார்க்கமும் வழித்தவரும் முஸ்லிம்களும்

  ஓரிறையின் நற்பெயரால்....
  நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

  (நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம்; (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களுக்கும் வணங்குகிறார்கள்;நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம். 11:109

  ஒவ்வொரு காலக் கட்டத்திலும் மனித சமூதாயத்தை நல்வழிப் படுத்துவதற்காக இறைவன் அவர்களிலிருந்தே ஒரு தூதரை எற்படுத்துகின்றான். இறை நெறிகளையும், இறைக் கட்டளைகளையும் இறைவனிடமிருந்து வேதத்தின் மூலம் மக்களுக்கு ஓதிக்காண்பித்து இருளிலிருந்து பிரகாசத்தின் பால் மக்களை அழைக்கின்றனர்.

  'என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள்!'என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை. (21:25)

  முதன்மையாக அனுப்பப்பட்ட தூதர் முதல் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை ஓரிறைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அனுப்பப்பட்டனர். அவர்களில் தூதர்களை உண்மைப்படுத்தியவர்களும் உள்ளனர், பொய்ப்பித்தவர்களும் உள்ளனர். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

  மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்;ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.(16:36)

  இறைவனுடைய தூதர்களை பொய்பித்தவர்கள் இறைவனுக்கு இணையாக சிலைகளையும், சூரியன்,நெருப்பு, இறந்தவர்களின் மன்னரைகளிலும் வழிபாடு செய்துவந்தனர். இறைவனுடைய கட்டளைகளையும், தூதர்களையும் பொய்பித்த காரணத்தினால் இறைவன் அவர்களை உரு தெரியாமல் அழித்தும் விட்டான். இறைவனின் கட்டளை பொய்யர்களின் பால் இறங்கிய போது அவர்கள் வணங்கிய அல்லாஹ் அல்லாத பொய்யான தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை.

  (நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சிற்) சில ஊர்களின் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன; சில (அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின.(11:100)

  அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை. (11:102)

  மேலும் அத்தூதர்களை உண்மைப்படுத்தியவர்கள் தூதர்கள் அவர்களோடு இருக்கும் குறிப்பிட்ட காலம் வரை நல்வழியில் இருக்கின்றனர். அத்தூதர்கள் அவர்களை விட்டும் பிரிந்த பின் இறைநெறிகளையும், இறைக்கட்டளைகளையும் புறக்கணித்து இறைவனுக்கு இணையாக இறைத்தூதர்களையும் வணங்கி தமக்கு தாமே அநீதி இழைத்து வழிதவறிய சமூகமாகவும் ஆகிவிட்டனர்.

  முன் சென்ற சமூகம் வழிதவறியதைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.


  யூதர்களையும், கிறித்தவர்களையும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால், அல்லாஹ் சபித்துவிட்டான் என தன்னுடைய மரண தருவாயில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா அவர்கள் அறிவித்துவிட்டு,"இவ்வாறு ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்காவிட்டால் அவர்களின் கப்ரும் (தரைமட்டத்தைவிட) உயாத்தப்பட்டிருக்கும்" என்றும் கூறினார்கள். ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

  மேலும் முன் சென்ற சமூகம் வழிதவரியதைப் போன்று தமது சமூகமும் இவ்வாறான காரியங்களை செய்துவிடக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்துள்ளார்கள்.

  நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன், "அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்'' என்று கூறுவதை நான் கேட்டேன். அறிவிப்பவர்: ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம் 925

  மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளதை பாருங்கள்.

  கப்ருகளைப் பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள். நூல்: முஸ்லிம் 1610

  நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிக்கும் தருவாயிலும் முன் சென்ற நபிமார்களின் அடக்கதளம் வணக்கதலமாக மாறியதைப் போன்று தம்முடைய அடக்கத்தலமும் இவ்வாறு ஆகிவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்காமல் இருந்திருந்தால் அவர்களின் கப்ரும் உயர்தப்பட்டிருக்கும் என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம் கப்ரை உயர்த்தியோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது என்பதை. ஆனால் நாமோ நல்லடியார்கள் கப்ர் வேறு சாமானியர்கள் கப்ர் வேறு என்று கூறி இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை கேலி செய்யும் வகையில் நாம் நடந்து கொள்கின்றோம்.

  இருளிலும் பிரகாசிக்கும் மார்க்கம்..

  "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அஹ்மது,இப்னு மாஜா 

  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த மார்க்கம் இருளிலும் பிரகாசிக்கும் அளவிற்கு வெள்ளை வெளேரென்ற நிலையில் விட்டுச் சென்றுள்ளார்கள். முன்னோர்களை நினைவுக் கூறுகின்றோம் என்ற பெயரால்.. இனைவைப்பையும், சந்தனக்கூடு விழாக்களையும், மாற்று மத கலாச்சாரத்தையும்,வீணான அனாச்சாரங்களையும் இஸ்லாம் என்ற போர்வையில் பின்பற்றப்படுகின்றன. இவைகள் அனைத்தும் நபி(ஸல்) அவர்கள் காட்டிதராத தடை செய்துள்ள காரியங்களாகும்.


  '"எனது கப்ரை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது சலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய சலவாத்து எனக்கு எடுத்துரைக்கப்படும். நூல் : அபூதாவுத் (1746)

  பொதுவாக கப்ரை உயர்த்திக் கட்டுவதையும், கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

  மேலும் நபியவர்கள் தன்னுடைய கப்ரைக் கூட விழாக் கொண்டாடக் கூடிய இடமாக ஆக்கிவிடக்கூடாது என எச்சரிக்கை செய்திருக்கும் போது இன்றைக்கு நாம் நம்முடைய முன்னோர்களுக்கு தர்ஹாக்கள் கட்டி விழாக் கொண்டாடுகிறோமே இது எவ்வளவு பெரிய பாவச் செயல் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

  இறைவனுக்கு இணைவைத்தால் சுவர்க்கம் தடை செய்யப்பட்டுள்ளது  என்றும், இறைவனிடம் மன்னிப்பு கிடையாது என்றும், அணைத்து அமல்களும் அழிந்து விடும் என்றும் அல்லாஹும் தன் திருமறையில் எச்சரித்துள்ளான். இறைவனுக்கு இணைவைக்கக்கூடிய காரியங்கள் அனைத்தையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்கு தெளிவுப்படுத்தி எச்சரித்துவிட்டு சென்றுள்ளார்கள். எனவே உரியமுறையில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றி சுவர்க்கத்தில் அவர்களோடு இருக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள் புரிவானாக!

  Thursday, December 8, 2011

  இஸ்லாமியர்களின் கடும் கண்டனத்திற்கு பின் தனது செய்தியை மாற்றிய தினமலர்
  அஸ்ஸலாமு அலைக்கும்...

  நேற்றை செய்திதாள்களிலும் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் இஸ்லாத்திற்கு எதிரான ஒரு தவறான செய்தியை தினமலர் என்ற தினமலம் வெளியிட்டது. 

  இன்று இஸ்லாமியர்களின் கடும் கண்டனத்திற்கு பிறகு தனது செய்தியை மாற்றியுள்ளது.

  அல்ஹம்துலில்லாஹ்....அல்ஹம்துலில்லாஹ் 

  நேற்றைய செய்தி டிசம்பர் 07,2011,02:50 IST
  பதியப்பட்ட தவறான செய்தி   image.png

  மாற்றப்பட்ட இன்றைய செய்தி டிசம்பர் 08,2011,12:49 IST


  image.png

  image.png


  தினமலத்தின் இஸ்லாமிய விரோத போக்கை மேலும் அறிய கீழே உள்ள சுட்டிகளை சொடுக்கவும்.
  தினமலர் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும்  தினமலர் 07/12/11 வியாழன் நாளேட்டின் பேப்பர் கட்டிங்

  கிபி 632-ம் வருடம் 
  முஸ்லிம்களின் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்... அவர்கள் ஹிஜ்ரி 11ம் வருடதின் மூன்றாம் மாதமான ரபீஉல் அவ்வல் மாதம் கடும் காய்ச்சல் காரணமாக சிலநாட்கள் கஷ்டப்பட்டார்கள். 

  அன்று வாழ்வின் இறுதிநாள்... 

  முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் தன் அருமை மகள் ஃபாத்திமாவை (ரலி..) அவர்களை அருகே வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாக பேசினார்கள். அதைக்கேட்டவுடன் ஃபாத்திமா (ரலி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக்கூறவே ஃபாத்திமா (ரலி) சிரித்தார்கள். 

  இதைப்பற்றி நபி(ஸல்)அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி..) கூறுவதாவது:

  "இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். 'எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன்' என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன்.'அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன்' என்று நபி (ஸல்) கூறியபோது நான் சிரித்தேன்” என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

  மேலும், “அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா” என்று நபி (ஸல்) அப்போது நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

  குழந்தைகள் ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள். அனைத்து முஸ்லிம்களுக்கும் அப்போது முக்கியமான அறிவுரைகள் கூறினார்கள்.

  பின்னர் மரணிக்கும் அத்தருணத்தில்... நபி (ஸல்) அப்போது.... இப்படி சொன்னார்கள்...

  "இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்... அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச்சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை..." (ஸஹீஹுல் புகாரி)

  ---கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

  ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

  அதே.... கிபி 632-ம் வருடம் 
  தம் தந்தையான நபியவர்களின் முன்னறிவிப்பை உண்மைப்படுத்தும் விதமாக, அதே ஹிஜ்ரி வருடம் ஆறுமாதம் கழித்து, ஒன்பதாம் மாதமான ரமலான் மாதத்தின் 3ம் நாள் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் தன் 29ம் வயதில் மரணித்தார்கள்.

  அன்னை ஃபாத்திமா (ரலி..) அவர்களின் மரணத்தின்போது அவரின் மகன்கள் ஹசன் மற்றும் ஹுசைன் இருவரும் அப்போது முறையே சுமார் 8 மற்றும் 7வயது சிறுவர்கள்..!

  கிபி 669-ம் வருடம்
  தன் தாயார் பாத்திமா (ரலி) அவர்கள் காலமான பின்னர் சுமார் 37 வருடம் கழித்து... ஹிஜ்ரி 50ல் சபர் மாதம் 28ம் நாள் ஹசன் (ரலி) அவர்கள் தன் 47ம் வயதில் மதினாவில் மரணிக்கிறார்கள்.

  கிபி 680-ம் வருடம்
  தன் தாயார் பாத்திமா (ரலி) அவர்கள் காலமான பின்னர் சுமார் 48 வருடம் கழித்து... ஹிஜ்ரி 61ல்  முஹர்ரம் மாதம் 10ம் நாளில் ஹுசைன் (ரலி) தன்  57ம் வயதில் இராக்கில் உள்ள கர்பாலா நகரில் போரில் கொல்லப்படுகிறார்கள்.

  இன்னொரு முக்கிய விஷயம் ஒன்று உள்ளது..!
   'உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள்' (குர்ஆன்-4:29) என்று...தற்கொலை புரிவது தடுக்கப்பட்டு வெறுக்கப்பட்டு பெரும்பாவமாக அறிவிக்கப்பட்டுஹராம் ஆக்கப்பட்டுள்ளது... இஸ்லாமிய மார்க்கத்தில்..! தற்கொலை புரிவோரை, அது நேரடி நரகில் இட்டுச்செல்லும் மிகவும் கேவலமான செய்யத்தகாத ஒரு செயல். எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் அதை நினைக்கவும் மாட்டார்..!

  இப்படிப்பட்ட ஹராமான செயலைத்தான்... "அகில உலக பெண்களின் தலைவி எங்கள் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள்"... செய்ததாக மிகப்பெரிய ஆபாண்டமான அவதூறை அள்ளிவாரி எறிந்திருக்கிறது இந்த அவலமான நாளிதழ் தினமலர்எனும் தினமலம்.

  நம் அன்னையவர்கள் தீக்குளித்து தற்கொலையாம்..! --தினமலர்..!

  இந்த 'தீக்குளித்து தற்கொலை' ஏனாம்..? என்ன காரணமாம்.?

  தன் மகன் ஹசன் மற்றும் ஹுசைன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டாம்..! --தினமலர்..! 

  (மேலே... நீல  நிறத்தில் உள்ளவற்றை மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டு, நன்றாக உள்வாங்கிக்கொள்ளுங்கள் சகோ..! )

  தினமலர் 07/12/11 வியாழன் இணையதள பக்கத்தின் ஸ்நிப் ஷாட்
  11 வருட இடைவெளியில் மரணித்த தன் மகன்களின் இறப்புக்கு சுமார் 37 & 48 வருடங்களுக்கு முன்னரே மரணித்துவிட்ட ஒரு தாய்க்கு, அதெப்படி மகன்கள் இறந்த விஷயம் தெரிந்து... மரணித்தவர் தீக்குளித்து.... அடப்பாவி தினமலரே..! பொய் சொல்ல அளவில்லையா..? இதுவா நீ செய்தி தரும் லட்சணம்..? 

  தொடர்ந்து இஸ்லாம் பற்றியும், இறைத்தூதர் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும், அவதூறு பொய்களை செய்திகளாக இட்டுக்கட்டி அள்ளி விட்டுக்கொண்டே இருக்கும் நீ திருந்துவதாக தெரியவில்லையே..? எத்தனை முறைதான் உன்னை மன்னிப்பது..? 

  உலகப்பெண்களின் தலைவி அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களை அவமதிக்கும் வண்ணம், இஸ்லாமிய வரலாற்றை அசிங்கமாக திரித்துக்கூறும் உன்னை... என்னுடைய அரசும், சட்டமும், காவலும்... கண்டுகொள்ளாததால்.... நான் இனி நம் இறைவனிடம் முறையிடுகிறேன்..!

  இவ்விஷயத்தில், உன் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும் தினமலரே..!   அனைவரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்யுங்கள்.


  தினமலர் மெயில் ஐடி


  தினமலர் சென்னை முகவரி:

  Chennai 
  219, Anna Salai , 
  Chennai - 600 002 
  Mobile No: - 9944309600 
  Ph: 044 2841 3553, 2855 5783 
  Fax: 044 2852 3695 
  Advertisement Ph: 044-24614086   உங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்யுங்கள்