நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Thursday, December 30, 2010

உண்மையாகும் நபிகளாரின் முன்னறிவிப்புhttp://www.tntj.net/wp-content/uploads/2010/12/ramadas-300x223.jpg
உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற் கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 3456

மேற்கண்ட நபிகளாரின் முன்னறிவிப்பை முஸ்லிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பெயர்தாங்கி முஸ்லிம்களில் சிலர் உண்மைப்படுத்தி வருகின்றனர். அத்தகைய நிகழ்வுகளில் ஒன்றுதான் கடந்த வாரம் நடந்த சமயநல்லிணக்க நிகழ்ச்சி என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி.

பா.ம.க ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி யில், முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும், இரண்டு போலி உலமாக்கள் கலந்து கொண்டு, அரசியல் கூத்தாடி ராமதாஸோடு இணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளனர். அது அவர்களுடைய புகைப்படத்தோடு மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது.

ஆம்! சென்னை புரசைவாக்கம் ஜும்ஆ மசூதி இமாம் முஜிபுர் ரஹ்மான் மற்றும் வட பழனி ஜும்ஆ மசூதி இமாம் சர்வேஷ் ரசாதி ஆகியோர்தான் அந்த போலி உலாமாக்கள்.

இதன் மூலம், உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள் என்ற நபிகளாரின் முன்னறிவிப்பை இவர்கள் உண்மைப்படுத்தியிருக்கின்றார்கள். உடும்புப் பொந்துக்குள் நுழையாதது மட்டும்தான் இன்னும் குறையாக உள்ளது.

மாற்றுச் சமுதாயம் உடும்புப் பொந்துக்குள் நுழையாமல் இருப்பதால்தான் அதையும் இன்னும் விட்டு வைத்துள்ளார்கள் என்று நினைக்கின்றோம். அவர்கள் உடும்புப் பொந்துக்குள் நுழைந்தால் நாங்களும் அவர்களோடு சேர்ந்து உடும்புப் பொந்துக்குள் நுழைவோம் என்ற இவர்களது பிரகடனத்தைத்தான் மேற் கண்ட இவர்கள் செயல் வெளிப் படுத்துகின்றது.

இந்த கிறிஸ்தவ கலாச்சாரத்தை பின்பற்றி ஏசு பிறந்த நாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதைப் போன்றுதான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நம்முடைய முஸ்லிம் சமுதாயமும் கொண்டாடி வருகின்றது. அதுவும் நபிகளாருடைய மேற்கூறப்பட்ட முன்னறிவிப்பை உண்மைப் படுத்துவதாகத்தான் அமைந்துள்ளது.

நபிகளாரின் எச்சரிக்கையை அவர்களுடைய விஷயத் திலேயே அவர்களுக்கே பிறந்த நாள் கொண்டாடி உண்மைப்படுத்தி வருவதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. ஏசு பிறந்த நாளுக்கு கேக் வெட்டி அவரது பிறந்த நாளைக்கொண்டாடும் இந்த போலி உலாமா கூட்டம் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பிரம் மாண்ட கேக் வெட்டி மீலாது விழாவை கொண்டாடப் போகிறோம் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

tntj.net

Wednesday, December 29, 2010

பரிணாமத்தில் மனிதன்..?     ஓரிறையின் நற்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...

             பொதுவாக, ஒரு செல் உயிரி மூலமாக ஏனைய உயிரிகள்
வளர்ச்சியடைந்தன என்றாலும், அஃது அவ்வாறு ஒரு உயிரி பிறிதொரு உயிரியாக மாற்றமடைய அவ்வுயிரியின் சுய தேவை, வாழும் சூழல், மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இவற்றை அடிப்படையாக கொண்டுதான் ஒரு உயிரி காலப்போக்கில் தன்னை பிறிதொரு உயிரினமாக மாற்றிக்கொள்கிறது. -என்பது தான் பரிணாமத்தின் தகவமைப்பு கோட்பாடு.        ஏனைய உயிரினங்களைப்போல மனிதன் என்ற உயிரினமும் மேற்கண்ட சங்கிலித்தொடர் உயிரின வளர்ச்சியிலேயே இறுதியாக உருவான ஒரு உயிரினம் என்பதும் பரிணாமம் எடுத்து வைக்கும் வாதம்.

http://2.bp.blogspot.com/_dvidMtjlQtw/TRi0145jYUI/AAAAAAAAAPY/PS-aNwzJSkg/s1600/shy.jpg   ஒரு உயிரிலிருந்து மேற்கண்ட அடிப்படையில் பிறிதொரு உயிரினம் உருவாவதென்றால் அதன் முந்தைய நிலையில் இருக்கும் உயிரின் அனைத்து சிறப்பியல் கூறுகளையும் மாற்றமடையும் உயிரி இயல்பாகவே பெற்று இருக்க வேண்டும். எந்த ஒரு உயிரியும் அதன் முந்தைய நிலையில் இருக்கும் ஏனைய உயிரினங்களின் எந்த ஒரு சிறப்பியல் கூறுகளை தாங்கி உருவாதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம் இனி., உயிர் படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மனிதனின் தோற்றம் குறித்து பரிணாம கோட்பாட்டின் அடிப்படையில் சில இயல்பான சந்தேகங்கள் குறித்து காண்போம்.,

 சங்கிலித்தொடர் வரிசையில் ஏனைய உயிரிகளைப்போல் பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் உருவானான் என்றால் இயல்பாகவே ஏனைய உயிரினங்களின் சிறப்பியல்புகளை தாங்கி உருவாகி இருக்கவேண்டும் அஃது உருவாகாதது ஏன்?

உதாரணத்திற்கு, எந்த ஒரு உயிரினமும்
நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன >>> பறப்பன 
போன்ற இயற்பண்புகள் அடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.இதன் அடிப்படையில் வாழ்வை தொடரும் உயிரினத்தில் இறுதியாக உருவாகும் ஓர் உயிரி மேற்கண்ட பண்புகளை தாங்கி உருவாவது அவசியமாகும். அதுவும் ஒர் அறிவார்ந்த உயிரி மேற்கண்டவற்றை தாங்கி வளர்வது எளிதே., ஆனால் மேற்கண்ட பண்புகளில் நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன போன்ற பண்புகளை பெற்று உருவான மனிதன் "பறப்பன" என்ற பறவைகளின் மிக சாதாரண ஒரு பண்பை தாங்கி உருவாகாதது ஏன்? ஏனெனில் உயிரியின் பிரத்தியேக மாற்றத்திற்கு மிக முக்கிய காரணி., அவ்வுயிரியின் சுயதேவை மற்றும் கால சூழல் ஆகும் எனும்போது மனிதன் பறக்கவேண்டும் என்பது அவனது சுயதேவை என்ற நிலையும் தாண்டி... காலகாலமாக அவனது தேடுதலின் அதிகப்பட்ச பேராசையாக இன்றும் ஆழ்மனதில் நிறைவேறாத எண்ணமாக தொடர்கிறது,

மனிதனால் பறக்கமுடிந்தால் ஏனைய நிலைகளை விட எந்த ஒரு பணியையும் விரைவாகவும், எளிதாகவும் செய்ய முடியும். எனவே பறக்கும் மனிதனால் சாரதாரண நிலையில் இருக்கும் மனிதனை விட அதிக அளவில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் ஆக செயல் ரீதியான காரணங்களின் உந்துதலால் ஏற்படும் மாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பரிணாமத்தில், உயிரின வளர்ச்சி விளைவால் இன்னும் மனித உயிரி பறக்க முற்படாதது ஆச்சரியமே.....

இதைத்தவிர தர்க்கரீதியாகவும் பல இடர்பாடுகள் இருக்கிறது பரிணாமம் உருவாக்கிய மனிதனுக்கு.
  
மனிதன் என்ற ஒரு உயிரினம் ஏனைய உயிரினங்களைப்போல் இல்லாமல் தனித்தொரு சீராய் ஒழுங்குப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட படைப்பினமாக காண்கிறோம். அஃதில்லாமல் பரிணாமம் தான் மனிதனை உருவாக்கியது என்றால்...

ஏனைய உயிரினங்களைப்போல் ஊண், உறக்கம், பசி, இச்சை, கோபம், வேகம், பாசம் போன்ற ஏனைய வாழ்வியல் பண்புகள் மனிதனுக்கும் பொதுவாக கொண்டாலும் "வெட்கம்" என்ற உயரிய பண்பை எந்த உயிரின் மூலத்திலிருந்து பெற்றான்..? பொதுவாக உலகில் பல்வேறு பகுதியில் வாழவேண்டி இருந்ததால் மனிதன் கால சூழலுக்கு தகுந்தாற்போல் ஆடை அணிய கற்றுக்கொண்டான் என்றாலும் அஃது தங்களின் வெட்கத்தலங்கள் மறைக்கப்படவேண்டியவைகள் என்பதை எந்த பரிணாம மூலத்தில் கற்றுக்கொண்டான்.

ஏனெனில் உயிரின மாற்றத்தின் விளைவாக உணவு, பாதுகாப்பு போன்ற வாழ்வாதார தேவையை மட்டுமே கண்டறிந்து அதற்கான செய்கைகளை 
வேண்டுமானால் அதிகப்படுத்த முடியுமே தவிர உயிர் வாழ தொடர்பே இல்லாத வெட்கம் என்ற பண்பை கற்ற வேண்டியது அவசியமே இல்லை.

ஆனால் மனிதனுக்கு மட்டும் அத்தகைய பிரத்தியேக பண்பு உண்டானது எப்படி?

இன்றும், நாம் சர்வ சாதாரணமாக பார்க்கிறோம், கால்நடைகளில் குட்டியே தன் தாயோடு கூடுவதை காண்கிறோம். மேலும் உடல் உறவில் எந்த ஒரு ஒழுக்க நெறியையும் அவை பின்பற்றுவதில்லை. ஆனால்., மனித உயிரி., தாய் (தகப்பன்)- சகோதரி(சகோதரன்) - மகள்(மகன்) - என்று தரம் பிரித்து மனைவியோடு (கணவனோடு) மட்டுமே கூடும் அசாத்திய ஒழுக்க மாண்பை எங்கிருந்து பெற்றது...

  எந்த பரிணாம உயிரியின் இயல்புகள் மனிதனுக்கு அத்தகைய சிறப்பை வழங்கியது?

   அத்தோடு மட்டுமில்லாமல்., மனைவி/ கணவன் தவிர்த்து மாற்றாருடன் கூடுவது தவறு என்ற உயிரிய பண்பையும் எந்த பரிணாம உயிரின வளர்ச்சியில் கற்றுக்கொண்டான்...?

 ஆக மனிதன் பிரத்தியேகமாக திட்டமிடப்பட்டு ஒழுக்க நெறி முறைகளின் படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான தனியானதொரு படைப்பு என்பது தெளிவு! இதை தாண்டியும் உயிரின வளர்ச்சியின் விளைவாக குரங்கினம் >>> நியண்டர்தால் >>> மனிதன் உருவானதாக சொன்னால் எதிர்ப்பார்ப்போம்.. மேற்குறிப்பிடப்பட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாமம்...?

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (திருக்குர்-ஆன் 04:170)
                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்

by brother  gulam 

ஒற்றுமை மார்க்கமும் உலக முஸ்லிம்களும்

http://islamiccenterofcarolinas.wikispaces.com/file/view/bismillah.jpg/79687007/bismillah.jpg

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ... 

"இன்னும், அல்லாஹ்வின் (வேதமெனும்) கயிற்றை நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து (வலுவாகப்) பற்றிக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள்"(அல்குர் ஆன் 3:103).
http://www.satyamargam.com/images/stories/news10/va-tasimoo.jpg 
"வாத்தியார் பிள்ளை மக்கு; வைத்தியர் பிள்ளை நோயாளி" என்று தமிழில் ஒரு வழக்குச்சொல் உண்டு.

ஊருக்கே கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் சொந்தப் பிள்ளை மக்குப்பிள்ளையாக இருப்பான்; ஊர் மக்களுக்கு மருத்துவம் செய்து நோய்களைக் குணப்படுத்தும் வைத்தியரின் பிள்ளை நோயாளியாக இருப்பான் என்பது அதன் விரிவு.

அதுபோல,

உலக மாந்தர்களை ஒற்றுமைப் படுத்தவல்ல இஸ்லாத்தின் சொந்தப் பிள்ளைகள், வேற்றுமையில் மூழ்கிப் பிரிந்து கிடக்கின்றனர். அறியாமைப் பிணியகற்றி, உலகத்துக்கே அறிவொளி புகட்ட வந்த மார்க்கத்தின் மக்கள் இன்னும் அறியாமையில் உழன்று கிடப்பதில் சுகம் காணுகின்றனர்.

அண்மையில் வெளிவந்து உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் முஸ்லிம் நாடுகளைப் பற்றிய செய்திகளுள் ஒன்று, "ஃபலஸ்தீனப் போராளிகளும் கஸ்ஸாவின் ஆட்சியாளர்களுமான ஹமாஸை அழிக்குமாறு பொம்மை அதிபர் மஹ்மூது அப்பாஸ் இஸ்ரேலை வேண்டிக் கொண்டார்" என்பதாகும். இன்னொன்று "ஈரானைப் போட்டுத் தாக்குமாறு அமெரிக்காவுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்த சவூதி மன்னரைப் பற்றிய Saudi king urged U.S. to attack Iran" செய்தி.

நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தோருக்கு அல்லாஹ் ஆயத்தப் படுத்தி வைத்திருக்கும் அற்புத ஆசனங்களைக் காட்டிலும் இவ்வுலக அற்ப ஆசனங்களின்மீது கொண்ட அடங்காத பேராசையால், சொந்தச் சகோதரனைப் போட்டுத் தள்ளுவதில், போட்டுக் கொடுப்பதில் முஸ்லிம்களின் அமைப்புகள் தொடங்கி அரசுகள் வரைக்கும் ஒன்றேபோல் செயற்படுகின்றன.

முஸ்லிம்கள் தங்களுக்குள் துணை நிற்பதில் எவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கு உவமையாக, "இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்படிக் கூறும்போது தங்கள் கைவிரல்களை ஒன்றோடொன்று பின்னிக் காட்டினார்கள்.

கட்டி அடுக்கி எழுப்புவதால் 'கட்டடம்' என்றானது. முஸ்லிம்கள் ஒருவரோடொருவர் பிணைந்திருக்க வேண்டியதை, "கட்டடம்" உவமை மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுருங்கக்கூறி விளக்கினார்கள். அண்ணலாரின் அறிவுரைகளை அலட்சியப்படுத்தும் சமுதாயமாக இருப்பதால்தான் நம் சமகால முஸ்லிம் சமுதாயம் உலகளாவிய அலட்சியத்துக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறதென்றால் மிகையில்லை.

உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் பலநூறு கூறுகளாகப் பிரிந்து கிடந்தாலும் அவற்றுள் பெரும் பிரிவுகளாக ஷியா-ஸுன்னீ பிரிவும் ஆண்டுக்கொருமுறை புதுப்பிக்கப்படும் ஷியாக்களின் 'ஆஷுரா மாரடிப்பு'களும் இஸ்லாத்தை உலகத்தார் அருவருப்புடன் பார்ப்பதற்கு வழிவகுத்து வைத்திருக்கின்றன. அத்தோடு இருபிரிவினருக்கும் இடையிலுள்ள இடைவெளியை நிரந்தரப் படுத்தி வைத்திருக்கின்றன.

"கர்பலாப் போர்" என்று சொல்லப்படுவது போரே அல்ல. அது, ஆயுதமற்ற 70 முஸ்லிம்களை - பெண்கள் சிறுவர்கள் உட்பட - யஸீதின் இராணுவம் கொன்றொழித்த படுகொலைதான். போர் செய்யப்படுவதற்குத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களுள் ஒன்றான முஹர்ரம் மாதத்தில் ஹிஜ்ரீ61இல் நடைபெற்ற அந்தப் படுகொலை, இஸ்லாத்தின் வரலாற்றில் பதிந்துபோன கரும்புள்ளிதான். அதற்காக, ஒவ்வோர் ஆண்டும் துக்கம் கொண்டாடுவது, "எவருடைய இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேற்கொண்டு கூடுதல் துக்கம் கொண்டாடக் கூடாது" எனும் அல்லாஹ்வின் தூதரின் அறிவுரைக்கு எதிரான செயலாகும்.

கர்பலாப் படுகொலையில் எவர் பக்கம் நியாயம் எவர் பக்கம் அநியாயம் என்பது குறித்து ஒரு குறுவிவாதத்தைத் துவக்கிய ஒருவரிடம் இமாம் ஷாஃபி (ரஹ்), "கர்பலாவில் சிந்திய குருதி காய்ந்து உலர்ந்து விட்டது. அதை இப்போது நீ நக்கத் துடிப்பது ஏன்?" என்று கேட்டார்கள்.

எனவே, முஹர்ரம் மாதத்திலும் ஆஷுரா நாளிலும் நாம் நினைவு கூர்வதற்கும் பாடம் பெறுவதற்கும் உரிய வேறுபல நிகழ்வுகளை நினத்துப் பார்ப்போம்.

oOo

"முஹர்ரம்" என்றதும் நமது சிந்தையில் வரவேண்டியவற்றுள் தலையாயது 'ஹிஜ்ரத்' எனும் மிகப்பெரும் தியாகம்; அந்த மிகப்பெரும் தியாகமான புலப்பெயர்வை அடிப்படையாகக் கொண்ட 'ஹிஜ்ரீ' எனும் இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம்; அதன் பின்னணி நிகழ்வுகள் அனைத்தும் நம் நினைவுக்கு வரவேண்டும்.

கொடுங்கோலன் ஃபிர்அவ்னும் அவன் படையும் துரத்திட, மூஸா (அலை) அவர்கள் கடலை அடைந்து தப்பிட வழியில்லாத இக்கட்டான நிலையிலும், "அல்லாஹ் என்னோடு இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்" (26:62) என்று கூறிய ஈமானின் உறுதிப்பாடு நினைவுக்கு வரவேண்டும்.

மூஸா (அலை) அவர்களும் அவர்களது சமுதாயமும் அல்லாஹ்வின் உதவி பெற்று, கடல் பிளந்து வழிவிட்ட அற்புதமும் அதே கடலில் ஃபிர்அவ்னும் அவனது படையும் மூழ்கி மரணித்த அற்புதமும் (10:90-92) நடந்தது ஆஷுரா எனும் முஹர்ரம் 10ஆம் நாளில் என்பது நமக்கு நினைவுக்கு வரவேண்டும்.

மூஸா (அலை) அவர்களும் அவர்களைப் பின்பற்றிய சமுதாயமும் அல்லாஹ்வினால் காப்பாற்றப்பட்டதற்காக அவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக முஹர்ரம் 10இல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆஷுரா நோன்பு நோற்றதும் முஸ்லிம்களை ஆஷுரா நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டதும் நம் நினைவுக்கு வரவேண்டும்.

ஆனால், நம் நினைவுகளில் முஹர்ரமின் முன்னுரிமைகளாக வேறு நிகழ்வுகள்தாம் இடம்பெறுகின்றன.

அவற்றுள் இஸ்லாத்துக்கும் அறிவுக்கும் மனித இயல்புக்கும் எதிராக நடந்தேறும் பஞ்சாக் கூத்து முதலிடம் வகிக்கிறது.

சில பகுதிகளில் முஹர்ரம் 10 அன்று மேளதாளங்களோடு கத்தியாலும் வாளாலும் உடலைக் கீறிக் கொண்டும் மாரில் அடித்துக் கொண்டும் எடுக்கப்படும் பஞ்சா எனும் முஹர்ரம் ஊர்வலமும் கோஷங்களும் அவற்றில் தம்மைத் தாமே வருத்திக் கொள்ளும் 'இரத்தசாட்சி'களின் காட்சிகள்தாம் நம் நினைவில் வருகின்றன.

ஆஷுரா நாளில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பேரனும் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களின் மகனுமான ஹுஸைன் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டதையொட்டி துக்கம் அனுஷ்டிப்பதாகக் கூறி, முஸ்லிம்களில் சிலர் நெஞ்சிலும் கன்னத்திலும் அடித்துக்கொண்டு உடலைக் கீறிக் காயப்படுத்திக்கொண்டு ஊர்வலம் வருகின்றனர். 

நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் இவ்வாறு நடந்தால் இதை அவர்கள் விரும்பியிருப்பார்களா? எல்லாஹ்வற்றையும் கண்காணிக்கும் அல்லாஹுக்கு இது உகந்த செயலாகுமா? அவன் திருப்தியையும் பெறுமா? என்பதையெல்லாம் அவர்கள் சிந்திக்க மறுக்கின்றனர். மேலும் இஸ்லாம் எனும் உன்னதமான வாழ்க்கை நெறியை எத்திவைத்து மக்களை அதன்பால் அழைக்கக் கடமைப் பட்டவர்கள், தங்களின் அநாகரிகச் செயற்பாடுகளால் இஸ்லாம் எனும் மார்க்கத்தையும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் பிறமக்கள் வெறுத்து ஒதுங்க வழி வகுக்கின்றனர்.

இஸ்லாம் வெறுத்து ஒதுக்குவதை, இவர்கள் ஆண்டுதோறும் கொண்டாட்டத்துடன் செய்யும்படி மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர்.

ஒரு முதியவர், தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். " (கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!" என்று மக்கள் கூறினார்கள். நபி (ஸல்), "இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!" என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறுஉத்தரவிட்டார்கள்.

அல்லாஹ்வுக்காக செய்த நேர்ச்சையே இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டிருக்குமானால் அது செல்லாது எனும்போது அலீ (ரலி) அவர்களது குடும்பத்தினரின் பெயரால் ஷியாக்கள் அடிக்கும் கூத்துகளை என்னவென்பது?
இன்னும் சிலர் ஆஷுரா நோன்பை ஹுசைன் (ரலி) அவர்களுடன் இணைத்து, 
 • இந்த மாதத்தின் முதல்பத்து நாட்களில் விசேஷத் தண்ணீர் பந்தல் அமைப்பது,
 • அதற்காக விசேஷமாக பயான் எனும் பெயரில் மேடைகள் அமைத்து அழுது புலம்புவது.
 • அதற்குப் பணம் வசூலிப்பது,
 • முஹர்ரம் பத்து அன்று சர்பத் என்று குளிர்பானம் விநியோகிப்பது
போன்ற ஆதாரமற்ற பித்அத்தான நூதனக் காரியங்களில் ஈடுபடுவதும் ஒருசில பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அவற்றுக்கு மாற்றுக் கருத்தில் உள்ளவர்கள்,

"இது ஷியாக்கள் எனும் வழிகேடர்களின் நூதன செயல்; இதற்கும் இஸ்லாத்திற்கும் அறவே சம்பந்தம் இல்லை; இது போன்ற செயல்கள் மூலம் இஸ்லாத்தை இழிவு படுத்துகின்றனர்; தொழுகை போன்ற முக்கிய கடமைகள் நிறைவேற்றத் தவறுபவர்கள் பரவலாக இது போன்ற காரியங்களில் ஈடு படுகின்றனர்; அல்லாஹ்வின் கட்டளைக்கும் நபிவழிக்கும் இவர்கள் மாறு செய்கின்றனர்"

என்று கூறி குளிர்பானக் கூட்டத்தினரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். எனவே, இருசாராருக்கும் எப்போதும் மனக்கசப்பும் வெறுப்பும் நிலவுவது நிரந்தரமாகிப் போனது.

ஷியாக்களிள் சிலர் புனிதச் செயலாக நினைத்துக் கொண்டு ஆண்டுதோறும் நிகழ்த்தும் காட்டுமிராண்டித் தனத்தைப் பற்றி அவர்களுக்குச் சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்ளாமல் சுட்டிக் காட்டுபவர்களை எதிரிகளாகக் கருதுவதால் இருபிரிவினருக்கும் இடையே பகைமூட்டம் நிரந்தரமாக நிலவுகிறது.

இதற்குத் தீர்வு என்ன?

முஸ்லிம்கள் அனைவரும் பிரிவுகள் அனைத்தையும் சற்று ஒருபுறம் ஒதுக்கி விட்டு, இஸ்லாத்துக்கு மாற்றமான கருத்துக்களை / செயல்களை, நியாயப்படுத்துவதை / ஆதரிப்பதை / எதிர்ப்பதை / தாக்குவதைக் கைவிட்டு, தவறில் தொடர்ந்து இருப்பவர்கள் நேர்வழியில் வருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அனைத்துக்கும் முதலாவதாக, உலகமுஸ்லிம் சமுதாயம் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதை மனமார விரும்பி அதற்காக அல்லாஹ்விடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.

oOo

ஏறத்தாழ இரண்டரை ஆண்டுக்கு முன்னர், ஷியா-ஸுன்னீ பிரிவினர் இணைந்து லக்னவ்வில் கூட்டுத் தொழுகை (குத்பா) நடத்தியபோது, "ஏக இறைவனால் மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட தூய்மையான ஏக இறைமார்க்கமாகிய இஸ்லாத்தைத் தானும் உணர்ந்து, பிற சமுதாயத்தினருக்கும் உணர்த்தி, நேர்வழியும் ஈடேற்றமும் பெற வழிவகுக்க வேண்டிய முஸ்லிம்கள், தங்களிடையே நிலவும் ஷிர்க் அல்லாத மற்ற கருத்து வேறுபாடுகளைத் தள்ளி வைத்து, சமூகத்தில் இருக்கும் பிளவுகளையும் குழப்பங்களையும் நீக்க உதவும் இதுபோன்ற முயற்சிகள்தாம் முஸ்லிம்கள் மட்டுமின்றி முழு மனித சமுதாயமும் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து ஈடேற்றம் பெற வழிவகுக்கும்" என்று நாம் குறிப்பிட்டிருக்கிறோம்.

அதனைத் தொடர்ந்து,

உலகளாவிய அளவில் ஏகாதிபத்திய சக்திகளும் சியோனிஸ, ஃபாஸிஸ சக்திகளும் முஸ்லிம்களைத் திட்டமிட்டுக் கருவறுப்பதற்கு, முஸ்லிம்களிடையே நிலவும் ஒற்றுமையின்மையும் உலக முஸ்லிம்களுக்கான தனித்ததொரு தலைமை இன்மையும் முக்கிய காரணங்களாக இதுகாறும் இருந்து வந்திருக்கின்றன. சவூதியில் ஷியா (அரசியல் பிரிவு) முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் சவூதியின் கிழக்கு மாகாணப் பகுதியில் அமைந்த நகரங்களில் 'கத்தீஃப்' ஒன்றாகும். அந்நகரிலுள்ள  ஷியா முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் ஒன்றில் ஷியா-ஸுன்னீ முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை (13-06-2008) ஜும்ஆத் தொழுகை நடத்தியுள்ளனர்.

கத்தீஃபில் நிகழ்ந்தேறிய ஷியா-ஸுன்னீ ஒருமித்த ஜும்ஆத் தொழுகை, உலக முஸ்லிம்களால் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு பார்க்கப்படுகின்ற அதேவேளை, முஸ்லிம்களைக் கொன்றொழிப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட பயங்கரவாத சக்திகளை அச்சத்துடனும் கவலையுடனும் பார்க்க வைத்திருக்கின்றது.

இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் மீண்டுமொருமுறை அடிக்கால் நடும் இத்தகைய நிகழ்வுகள், இந்த இரு அரசியல் பிரிவினரிடையே பெருத்த மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "நட்புறவும் ஒற்றுமையும் ஒரு சேர மலர்ந்ததாக" இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஸுன்னீ முஸ்லிம்கள் சார்பில் ஷேக் முக்கல்லஃப் பின் தஹம் அல்-ஷம்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தொழுகையில் ஷியா முஸ்லிம்களுக்கிடையே பிரபலமான ஷேக் ஹஸன் அல்-ஸஃபர் அவர்களின் உரை நடைபெற்றது.

இஸ்லாம் கூறும் ஒற்றுமையினை வலுப்படுத்தும் காரணிகளை வலியுறுத்தியும் அதே நேரத்தில் இஸ்லாம் கடுமையாகச் சாடும் பிரிவினைகளை நீக்கும் வழிமுறைகளைப் பற்றிய விளக்கங்களும் அந்த ஜும்ஆ உரையில் இடம் பெற்றிருந்தன.

இருபிரிவினரும் ஒன்றாய்க் கலந்து அமர்ந்திருந்த அந்த ஜும்ஆ பள்ளிவாசலில் "சகோதரத்துவத்தினை ஏற்படுத்தும் இத்தகைய நல்ல விஷயங்களை ஊக்குவிப்பதும் பிரிவினை வளர்ப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ள தீய சக்திகளை எதிர்ப்பதும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் கடைமையாகும்" என்ற ரீதியில் ஜும்ஆ உரை தொடர்ந்தது.

பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்வு பற்றி ஷேக் அல்-ஷம்ரீ அவர்கள் பேசுகையில் "இதே போன்ற இன்னொரு ஜும்ஆத் தொழுகையை ஷியா முஸ்லிம்கள் கூட்டாகச் சென்று அல்கோபார் பகுதியில் உள்ள மஸ்ஜித் ஒன்றில் ஸுன்னீ முஸ்லிம்களுடன் ஒன்றிணைந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொழுவதற்கு ஏற்பாடாகி இருக்கிறது" என்று சுட்டிக்காட்டினார்.

எனும் செய்தியையும் நாம் வெளியிட்டிருந்தோம்.
அவ்விரண்டு முயற்சிகளைப்போல் உலகெங்கும் வாழும் ஷியா-ஸுன்னீ பிரிவினர் தொடர்ந்து தங்களின் ஒற்றுமை முயற்சியைக் கைவிடாமல் தற்கால இஸ்லாமிய விரோத நவீன ஃபிர்அவ்ன்களின் கொடுமைகளுக்கெதிராக அஞ்சாமல், துணிவாக இஸ்லாம் எனும் சத்தியமார்க்கம் உலகெங்கும் ஓங்கிட வேண்டுமெனில், தமது கருத்து வேறுபாடுகளைக் கைவிட்டு ஒன்றிணைந்து முன்மாதிரியாகத் திகழ்ந்திட வேண்டும்.

காலங்காலமாகத் தொடர்ந்திடும் ஷியா-ஸுன்னீ 'பிரிவுக்கோடு' அழிந்திட வேண்டும். முழுமுஸ்லிம் சமுதாயமும் அல்லாஹ்வின் வேதத்தை வலுவாகப் பற்றிப் பிடித்து, ஒற்றுமை எனும் மறுமலர்ச்சி காணவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கு அல்லாஹ் அருள்புரிய வேண்டும்!


ஆக்கம் : இபுனு முஹம்மது

Thursday, December 16, 2010

அழிக்கப்பட்ட ஆது சமூகமும் ஹூத் நபியும்


http://1.bp.blogspot.com/_oqgSsBjDlAY/S3pYaEPW6YI/AAAAAAAAAKo/en_n2mS5ZXE/s1600/Bismillah_2.JPG

       
இறைத்தூதர் ஹூத்(அலை) அவர்களின் வரலாறு....

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...

(இறைத்தூதர்களான ) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் திகழ்கின்றது. (அல்குர்ஆன்  12:111)

நபி நூஹ்(அலை) அவர்களுக்குப் பிறகு அல்குர்ஆன்  குறிப்பிடும் இறைத்தூதர் " ஹூத்" (அலை) அவர்களாவார்கள். இவர் ' ஆத் 'சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்.

http://www.aramcoexpats.com/images/gallery/photostore/205/228_2296.jpg ஆத் என்பது பழங்கால சமூகத்தார் ஆவார். அவர்கள் தென் அரேபியாவில் வசித்து வந்தனர். அதன் எல்லை கிழக்கே பாரசீக வளைகுடாவின் வடக்கிலிருந்து, மேற்கே செங்கடலின் தெற்கு வரை விரிந்திருந்தது. இன்றைய யமன்(ஓமன்) நாடு அதில் அடங்கும். 

ஆத் சமூகத்தாரை நல்வழிப்படுத்த அவர்களில் ஒருவரான ஹூத்(அலை) அவர்களை தன் தூதராக அல்லாஹ் நியமித்தான்.

பைபிள் பழைய ஏற்பாட்டில் இவரது பெயரே ஏபேர் எனக் கூறப்பட்டுள்ளது என்பது சிலரது கருத்தாகும். தெற்கு அரேபியாவில் இன்றும் ஹூத்(அலை) அவர்களின் அடக்கத்தலம் உள்ளது என்ற ஒரு தகவலும் உள்ளது.

ஆது' சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்) (அல்குர்ஆன்  11:50)

வலிமை மிக்க உடல் அமைப்பு
இந்த சமூகத்தினர் வலிமை மிக்க உடலமைப்பைப் பெற்றிருந்தார்கள்.

நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்) (அல்குர்ஆன் 7:69)

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன் 89:6)

(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள், (அல்குர்ஆன் 89:7)

அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. (அல்குர்ஆன் 89:8)

 
அல்லாஹ் இந்த சமுதாயத்தினருக்கு அதிகளவிற்கு உடல் வலிமையைக் கொண்டுத்த போதிலும் அல்லாஹுக்கு நன்றி செலுத்தாமல் ஆணவம் கொண்டு பெருமையடித்தார்கள்.

அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, "எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?" என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள். (அல்குர்ஆன் 41:15)

இதனையெல்லாம் கண்ணுற்ற ஹூத் (அலை) அவர்கள் தமது சமுதாயத்திற்கு பின்வருமாறு உபதேசம் செய்தார்கள்.

"என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொளுக்குத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்" (என்றும் எச்சரித்துக் கூறினார்).  (அல்குர்ஆன் 11:52)

அல்லாஹ் ஆது சமுதாயம் வலிமை மிக்க சமுதாயம் என்று மட்டுமே குறிப்பிடுகிறான். ஆனால் நமது கட்டுக்கதை மன்னர்களோ அவர்களது வலிமையைத் தங்களது கற்பனைத் திறனைப் பயன்ப்படுத்தி பின்வருமாறு புனைந்துள்ளார்கள்.

பூமியில் அல்லாஹ் படைத்த மனித சமுதாயத்தில் இந்த ஆது சமுதாயத்தினர் மிகவும் பலவாங்கலாகவும், பயங்கரத் தோற்ற முள்ளவர்களவும் இருந்துனர். இவர்கள் எண்ணிக்கையில் பெருமளவில் இருந்ததோடு, பெரும் செல்வந்தவர்கலாகவும் இருந்தனர். இவர்கள் ஹள்ர் மவுத்திலிருந்து அம்மான் வரை பரவி வாழ்ந்து கொண்டிருந்தனர். உடல் சக்தி மிகவும் பயங்கரமாக இருந்தது.

ஆது சமுதாயத்தினரின் வாழ்விடம்
ஹூத்(அலை) அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட ஆது சமுதாயம் எந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றிய மிகத் தெளிவான வரலாற்றுக் குறிப்பு ஏதும் இல்லை என்றாலும் பின்வருமாறு குறிப்பைச் சற்றுச் சிந்திப்போம்.

யமன் தேசத்திலுள்ள ஹள்ரமவுத் என்ற பகுதியிலிருந்து அலீ(ரழி) அவர்களைச் சந்திக்க ஒரு மனிதர் வந்தார். அவர்களிடம் அலீ(ரலி)  அவர்கள் உங்கள் ஊரில் சிவப்பு நிற மண்மேடு மற்றும் மணல் குன்று இலந்தை மரம், சுராக் மரம் ஆகியன இருக்குமே; அதன் அருகில் உத்தமன் என்ற பெயருடைய ஓடை ஒன்று ஓடுமே; அதனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அந்த மனிதர் " ஆம், நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்தது மாதிரியே கேட்கிறீர்களே?" என்று கேட்டார். அதற்கு அலீ(ரழி) அவர்கள். " அங்கு தானே ஹூத்(அலை) அவர்களின் மன்னரை உள்ளது" என்றார்கள், உடனே நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா?" என்றதும், அலீ(ரழி) அவர்கள் "இல்லை இவ்வாறு நான் கேள்விப்பட்டேன்" என்றார்கள். இந்த குறிப்பு இப்னு ஜரீரில் இடம் பெற்றுள்ளது.

திருமறை குறிப்பிடும் அடையாளங்கள் இச்செய்தி குறிப்பிடும் யமன் தேசத்தின் ஹள்ரமவுத் என்ற இடத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் ஆது சமுதாயம் அங்கே வாழ்ந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.

ஆது சமுதாயம் வாழ்ந்த இடத்தைப் பற்றி திருமறை பின்வருமாறு குறிப்பிடுகிறது...

தூண்களுடைய இரம் என்னும் ஆது சமுதாயத்தை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன் 89:6,7)

மேலும் 'ஆது' (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, "அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்" என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக. (அல்குர்ஆன்  46:21)

"அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம். (அல்குர்ஆன்  46:25)

மேற்கண்ட வசனங்களில் ஆது சமுதாயம் வாழ்ந்த இடத்தைப் பற்றி சில குறிப்புகள் உள்ளன. அவையாவன: ஆது சமுதாயம் வாழ்ந்த இடம் சமதளம் கிடையாது, மணற்குன்றுகள் நிறைந்த பகுதியாகும். மேலும், தங்களது வீடுகளை  உயர்ந்த தூண்களால் எழுப்பியுள்ளார்கள் எனவும் அவர்கள் அழிக்கப்பட்டபோது, அவர்களின் குடியிருப்புகள் அழியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் குறிப்புகளை தங்களது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டவர்கள் அல்லாஹ் குறிப்பிடும் இந்த அடையாளங்கள் யமன் தேசத்திலுள்ள ஹளரமவுத் என்ற பகுதியைக் குறிப்பிடும் வகையில் உள்ளது எனத் தங்களது ஆராய்ச்சியின் முடிவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஹூத்(அலை) அவர்களின் பிரச்சாரம்
ஹூத்(அலை) அவர்கள் பல தெய்வ வழிபாட்டில் மூல்கிகிடந்த தமது சமுதாய மக்களிடம் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்தியம்பினார்கள். ஆனால் அவர்களோ ஹூத்(அலை) அவர்களை மூடர் எனச் சாடிவிட்டு தமது முன்னோர்களின் கொள்கையே சிறந்தது எனவும் வாதாடினார்கள். ஹூத்(அலை) அவர்கள் அச்சமூட்டி எச்சரித்ததைக் கேலி செய்யும் விதமாக, "நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிப்பதைக் கொண்டு வாரும்"   என வேண்டினர். தங்களது நாவுகளால் தங்களுக்கே தீங்கை வரவழைத்ததை அவர்கள் உணரவில்லை.
 
இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சதோரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?" என்று கேட்டார்.  (அல்குர்ஆன் 7:65)

அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.  (அல்குர்ஆன் 7:66)

அதற்கு அவர்? "என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்" என்று கூறினார்.  (அல்குர்ஆன் 7:67)

"நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்" (என்று கூறினார்).  (அல்குர்ஆன் 7:68)

"உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்).  (அல்குர்ஆன் 7:69)

அதற்கு அவர்கள் " எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.  (அல்குர்ஆன் 7:70)

அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.  (அல்குர்ஆன் 7:71)

ஹூத்(அலை) அவர்கள் தமது சமுதாய மக்களிடம் பல தெய்வ வழிப்பாட்டை முறியடிக்க முயன்றதோடு, அவர்களது அடக்குமுறைப் போக்கையும் எதிர்த்தார்கள். அல்லாஹ் அச்சமுதாயத்திற்கு வழங்கியுள்ள அருட்கொடையினை நினைவு கூறுமாறு வேண்டினார்கள். மகத்தான நாளின் வேதனையை அஞ்சுமாறும் எச்சரித்தார்கள்.

ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். (அல்குர்ஆன் 26:123)

அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று கூறியபோது  (அல்குர்ஆன் 26:124)

"நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.  (அல்குர்ஆன் 26:125)

"மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.  (அல்குர்ஆன் 26:126)

"நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?  (அல்குர்ஆன் 26:127)

இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?  (அல்குர்ஆன் 26:128)

"இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.  (அல்குர்ஆன்  26:129)

"எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.  (அல்குர்ஆன் 26:130)

"மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.  (அல்குர்ஆன் 26:131)

"அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.  (அல்குர்ஆன் 26:132)

"இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).  (அல்குர்ஆன் 26:133)

"நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்" (எனக் கூறினார்).  (அல்குர்ஆன் 26:134)

(இதற்கு) அவர்கள்; "நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்" எனக் கூறினார்கள்.  (அல்குர்ஆன் 26:135)

"இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.  (அல்குர்ஆன் 26:136)

"மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்."  (அல்குர்ஆன் 26:137)

(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.  (அல்குர்ஆன் 26:138)

நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.  (அல்குர்ஆன் 26:139)

இவ்வளவு தூரம் ஹூத்(அலை) அவர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தும், செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று எதுவும் விளங்காத ஜடங்களாக வாழ்ந்தனர். தனகளது ஆணவத்தால் ஹூத்(அலை) அவர்களை ஏற்க மறுத்தனர். பல தெய்வ வழிபாட்டிலேயே தங்களது வாழ்நாளை அழித்தனர். தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத தன்னை பொய்யர் என்று தூற்றுகிற சமுதாயத்திடம் ஹூத்(அலை) மீண்டும் மீண்டு பொறுமையுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

"என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொளுக்குத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்" (என்றும் எச்சரித்துக் கூறினார்).  (அல்குர்ஆன் 11:52)

(அதற்கு) அவர்கள்; "ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்" என்று (பதில்) கூறினார்.  (அல்குர்ஆன் 11:53)

"எங்களுடைய தெய்வங்களில் சிலகேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை" (என்றும் கூறினார்கள்; அதற்கு) அவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்" என்று கூறினார்.  (அல்குர்ஆன் 11:54)

"(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்" (என்றும் கூறினார்).  (அல்குர்ஆன் 11:55)

நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்.  (அல்குர்ஆன் 11:56)

"நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எனற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்).  (அல்குர்ஆன் 11:57)

ஹூத்(அலை) அவர்களைப் பொய்யரெனக் கருதிய அவரது சமுதாயம் தங்கள் நாவுகளாலேயே தண்டனையை வேண்டினர். ஹூத்(அலை) அவர்களிடமே "முடிந்தால் நீ சொன்னதைச் செய்" என சவால்விட்டனர். இந்தத் தருணத்தில் மேகமூட்டத்தை மக்கள் பார்த்தனர். மழையை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், அது மழை மேகம் தான் என பெருமை கொள்ளலானார்கள். ஆனால், ஹூத்(அலை) அவர்களோ அது அல்லாஹுவின் தண்டனை என்று அந்த மக்களை எச்சரித்தார்கள்.

அதற்கு அவர்கள்; "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.  (அல்குர்ஆன் 46:22)

அதற்கவர்; "(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்" என்று கூறினார்.  (அல்குர்ஆன் 46:23)

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது  (அல்குர்ஆன் 46:24)

"அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.  (அல்குர்ஆன் 46:25)

மலட்டுக்காற்றால் அழிக்கபட்டார்கள்
அவர்கள் வேண்டிய வேதனை காற்று உருவத்தில் வந்தது ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் காற்று அவர்களைத் துன்புறுத்தி அணு அணுவாக அழிந்தது அல்லாஹுவின் வாக்கு நிறைவேறியது.

நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.  (அல்குர்ஆன் 54:19)

நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.  (அல்குர்ஆன் 54:20)

ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)  (அல்குர்ஆன் 54:21)

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.  (அல்குர்ஆன் 69:6)

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.  (அல்குர்ஆன் 69:7)

அல்லாஹ் ஆது சமுதாயத்தை அழித்த அந்தக் காற்றைப் பற்றி திருமறையில் குறிப்பிடுகையில் 'மலட்டுக் காற்று' எனக் குறிப்பிடுகிறான்.

ஆது சமுதாயத்திடமே (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுகாற்றை அனுப்பினோம். (அல்குர்ஆன் 51:41)

அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 51:42)

காற்று மனிதனுக்குப் பயன்பட வேண்டுமானால் அதில் ஆக்ஸிஜன் போன்ற சில அம்சங்கள் இருந்தாக வேண்டும். காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப் பிரித்து எடுத்துவிட்டால் காற்று இருந்தும் மனிதனால் உயிர் வாழ முடியாது. இதையே மலட்டுக்காற்று என்று இந்த வசனம் கூறுகிறது.

நவீன உலகில்  சில வகையான வெடிகுண்டுகள் கண்டுப்டிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு பகுதியில் வீசினால் அந்தப் பகுதியில் உள்ள கட்டடங்கள் எதுவும் சேதமாகாது. ஆனால் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை மட்டும் இல்லாமல் ஆக்கிவிடும். இதனால் குறிப்பிட்ட பகுதியில் உயிரினங்கள் செத்துவிடும். இது போன்ற காற்றையே இறைவன் அனுப்பியிருக்க வேண்டும் என்பதை மலட்டுக்காற்று என்ற சொல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆது சமுதாயத்தை அழித்த காற்றைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள்:
நான் ('ஸபா' என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; 'ஆது' சமுகத்தார் ('தபூர்' என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர்.  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  (
புகாரி - 4105)

அகழ்ப்போரின் போது எதிரிகளின் திசையில் கடுமையான குளிர்க்காற்று வீசியது. கிழக்கிலிருந்து வீசியது, கிழக்கிலிருந்து வீசிய அந்தக் காற்றினால் எதிரிகள் நடுநடுங்கிப் போனது மட்டுமின்றி, இரவிலே அவர்கள் மூட்டியிருந்த நெருப்பும் அணைந்துவிட்டது. அவர்களுடைய கூடாரங்கள் பிடிங்கி எறியப்பட்டன. போர் செய்ய இயலாமல் தோல்வி கண்டு எதிரிகள் திரும்பினர். நபி(ஸல்) அவர்களுக்கு அது மாபெரும் வெற்றியானது.

அதனைப் போன்று கி.மு 2000 முன் வாழ்ந்த ஹூத்(அலை) அவர்களின் சமுதாயமான ஆது கூட்டத்தார் இறைக்கட்டளையை மீறி இறைத்தூதர் ஹூத்(அலை) அவர்களுக்கு மாறு செய்து வந்ததால் அவர்களை அழிக்க அல்லாஹ் மலட்டுக் காற்றினை அனுப்பினான். மேலும் ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசிய அந்தக் காற்றினால் அவர்கள் அழிக்கப்பட்டனர்.

மழை மேகம் ஓர் எச்சரிக்கை
ஆது சமுதாயம் மழைமேகம் என நம்பிய போது, இல்லை, அது அல்லாஹுவின் தண்டனை என ஹூத்(அலை) அவர்கள் எச்சரித்த சம்பவத்தை குர்ஆன் ஒளியில் அறிந்தோம். நபி(ஸல்) அவர்கள் மழை மேகத்தை காணும் போதெல்லாம் ஆது சமுதாயத்தின் நிலையை நினைத்து அஞ்சக் கூடியவர்களாகவே இருந்துள்ளார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தம் அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர்களின் முகம் மாறி விடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும். எனவே, (ஒரு முறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்து கொண்டு), 'இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்" (திருக்குர்ஆன் 46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம் எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்கள்.  (புகாரி - 3206)

இதுவரை ஆது சமுதாயத்தின் இறைநிராகரிப்பவர்கள், ஹூத்(அலை) அம்மக்களுக்குச் செய்த பிரச்சாரத்தையும், அதனை ஏற்க மறுத்த ஆணவக்கார ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட சம்பவத்தையும், திருமறை குர்ஆன் வாயிலாகவும், நபிமொழிகள் வாயிலாகவும் மூலமும் அறிந்து கொண்டோம். இனியேனும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவோமாக!


Wednesday, December 15, 2010

அல்லாஹுவை நம்மால் பார்க்க இயலுமா?

http://1.bp.blogspot.com/_oqgSsBjDlAY/S3pYaEPW6YI/AAAAAAAAAKo/en_n2mS5ZXE/s1600/Bismillah_2.JPG


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...

இயலும். ஆனால் இவ்வுலகில் அல்ல. மறுமையில்.

கடவுள் என்பதை இஸ்லாமியர்கள் அல்லாஹ் (அதாவது வணக்கத்திற்குரிய ஏக இறைவன்) என்றழைக்கின்றனர்.

அல்லாஹ், அவன் கண்ணியத்திற்கு ஏற்ப முன்பு வந்து சென்ற இறைத் தூதர்களிடம் பேசியிருக்கிறான். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை ஏழு வானத்திற்கு அப்பால் அழைத்துச் சென்று திரைமறைவில் உரையாடி அவர்களை சிறப்பித்து அனுப்பியிருக்கிறான். அந்த ஏகனை இம்மையில் பார்க்கும் சக்தி எவருக்கும் இல்லை. ஆனால் மறுமையில் திரையின்றி நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியத்தையும், நேருக்கு நேர் பேசும் பாக்கியத்தையும் சொர்க்கவாசிகளுக்கு அளிப்பேன் என்னும் வாக்குறுதியை அல்லாஹ் வழங்குகிறான். 

"அந்நாளில்(நியாய தீர்ப்பு நாளில்) சில முகங்கள் மகிழ்ச்சியுடனும் தமது இறைவனைப் பார்த்துக் கொண்டும் இருக்கும்." (அல்குர்ஆன் 75:22,23)

"நிச்சயமாக அவர்கள் (நிராகரிப்பவர்கள்) தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்." (அல்குர்ஆன் 83:15)

மனிதன் இவ்வுலகில் செய்த நல்ல தீய செயல்களை குறித்து விசாரித்து இறைவன் தீர்ப்பு வழங்கும் மறுமை நாளில், நற்செயல்களை செய்து இறைவனிடமிருந்து பெறுதற்கரிய சுவர்க்கத்தைப் பெற காத்திருக்கும் சுவர்க்கத்துக்குரியவர்கள் இறைவனை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என மேற்கண்ட வசனம் தெளிவாக உணர்த்துகிறது.


மேலும் தீய செயலைச் செய்தவர்கள் இறைவனைக் காண்பதை விட்டும் தடுக்கப்படுவார்கள் என்பதையும் மேற்கண்ட வசனம் தெளிவிக்கிறது.


(அல்லாஹ்) அவனுக்கும் (அடியார்களுக்குமிடையே) ஒளித் திரையாக உள்ளது. அந்த ஒளித்திரையை அவன் அகற்றினால் அவன் திருமுகத்தின் ஜோதி அவன் பார்வை படும் படைப்பினங்களை எல்லாம் எரித்து விடும் என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள் (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் தூதரே! எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று நாங்கள் கேட்டோம். மேகத்தால் மறைக்கப்படாத சூரியனை நடுப்பகலில் காண்பதற்கு உங்களுக்குச் சிரமம் எதுவும் இருக்குமா? என்று திருப்பிக் கேட்டார்கள். ‘இருக்காது’ என்று நாங்கள் கூறினோம். இவ்விரண்டையும் காண்பதில் உங்களுக்குச் சிரமம் ஏற்படாது என்பது போலவே உங்கள் இறைவனைக் காண்பதில் சிரமப்பட மாட்டீர்கள் என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)

உங்களில் எவருடனும் உங்கள் இறைவன் பேசாமலிருக்கமாட்டான். அவனுக்கும் அவனது இறைவனுக்குமிடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்கள் என்றும் நபி-ஸல் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திலும். நரகவாசிகள் நரகத்தில் நுழைந்தவுடன் :

‘சுவனவாசிகளே! அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதி ஒன்று உள்ளது. அதை உங்கள் இறைவன் நிறைவேற்ற விரும்புகின்றான் என்று அழைப்பாளர் ஒருவர் கூறுவார். அதற்கு அவர்கள் ‘அது என்ன வாக்குறுதி? எங்கள் நன்மையின் எடையை அவன் அதிகப்படுத்தவில்லையா? எங்கள் முகங்கள் வெண்மையாக்கிவிடவில்லையா? எங்களை சுவர்க்கத்தில் நுழைக்கவில்லையா? நரகிலிருந்து எங்களை அவன் விடுவிக்கவில்லையா? (இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்) என்பர். உடன் இறைவன் திரையை விலக்குகிறான். அவனை அவர்கள் காண்பர். அவனைக் காண்பதை விடவும் விருப்பமான மகிழ்ச்சியான வேறு ஒன்றையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதில்லை’ என்று நபி-ஸல் அவர்கள் கூறினார்கள். (அஹமது, திர்மதி, இப்னுமாஜா)


இதிலிருந்து இவ்வுலகில் நல்லறங்கள் செய்து நல்லவர்களாக வாழ்பவர்கள் நாளை மறுமையில் இறைவனை காணும் பாக்கியத்தைப் பெறுவார்கள் என்பதை அறியலாம்.


சத்தியமார்க்கம்

முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் (ஆஷுரா)


ஓரிறையின் நற்பெயரால்............
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ..

http://1.bp.blogspot.com/_2c-sMLVb9hY/TPpXRr-aC-I/AAAAAAAAAW0/YYdP_XW3rgA/s1600/muharram_fasting.jpgமுஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று வழங்கப் படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம்.


"நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது "மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரி(பிர்அவ்ன்) இடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்" என்று யூதர்கள் காரணம் கூறினர். "உங்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு நான்தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி, அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

இந்தக் கட்டளை மூலம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்திருந்தாலும் ஆஷுரா நோன்புக் கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது - ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் - இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்புக் கடமையாக்கப்பட்டபின்  ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.

"நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், "விரும்பியவர் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் விட்டு விடலாம்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

 இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்).

ஆண்டுகள் உருண்டோடின. யூதர்களைப் போன்றே பல முஸ்லிம்களும் முஹர்ரம் 10ஆம் நாளில் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்கு ஓராண்டிற்கு முன்னர்,  நபித்தோழர்களுள் சிலர் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கவனத்துக்குக் கொண்டு சென்றனர்:

"ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்" என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது, "அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்." அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது.

மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. நோன்பு வைப்பவர்கள் பிறை 9ம், 10ம் வைக்க வேண்டும், பத்திலும் பதிவொன்றிலும் வைக்க ஆதாரமில்லை.

வழக்கமாக எல்லாப் பிரச்சனைகளிலும் கட்டுக்கதைகள் நுழைந்தது போலவே இந்த ஆஷுரா நாள் பற்றியும் நிறைய கட்டுக் கதைகள் உலா வருகின்றன.ஆஷுரா நாளில் ஒருவன் குளித்தால் அந்த ஆண்டு முழுவதும் நோய்வாய்ப்பட மாட்டான் என்று கூறப்படுவதும், நபிமார்கள் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் ஆஷுரா தினத்தில்தான் நடந்தன என்று கூறப்படுவதும் இட்டுக்கட்டப்பட்ட, நிராகரிக்கப்பட வேண்டிய பொய்களாகும். ஸஹீஹான ஹதீஸ்களில் இதற்கு எள்ளளவும் ஆதாரம் இல்லை. ஒரு சில குத்பா கிதாபுகளிலும், கிஸ்ஸாக்களிலும்தான் அவை காணப்படுகின்றன. ஹதீஸ்கலை வல்லுனர்கள் அவற்றை ஏற்கவில்லை.

இதே ஆஷுரா தினத்தில் நபி(ஸல்) அவர்கள் திருப்பேரர் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டது, இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சோகமான நிகழ்ச்சியாகும். கல் நெஞ்சமும் கரைந்துவிடக் கூடிய அந்த நிகழ்ச்சி இந்த தினத்தில்தான் ஏற்பட்டது. இஸ்லாமியன் மட்டுமல்ல, மனிதாபிமானம் உள்ள எவரும் அந்த நிகழ்ச்சியைக் கேள்வியுறும்போது கண்கலங்காமல் இருக்க முடியாது.

'கர்பலா' என்ற இடத்தில் நபி(ஸல்) அவாகளின் பேரர் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக, நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறிய ஆஷுரா நாளை சோகமயமாக ஆக்கிக் கொள்ள நமக்கு அனுமதி கிடையாது. இந்த நாளில் இரண்டு போராட்டங்கள் நடந்தன. ஒன்று பிர்அவுனுக்கும், மூஸா(அலை) அவர்களுக்கும் நடந்தது. அதில் மூஸா(அலை) வென்றார்கள். அதே ஆஷுரா நாளில் நடந்த இன்னொரு போராட்டத்தில் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

ஓர் உண்மையான முஸ்லிம் அந்த நாளில் நடந்த நல்லதை நினைத்துத் தன்னைத் தேற்றிக் கொள்ள வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படி அந்த நாளில் நோன்பு நோற்க வேண்டும். கர்பலா நிகழ்ச்சிகூட ஒரு நன்மைதான் என்று கருத வேண்டும். அல்லாஹ்வுக்காகத் தன்னுயிரை அர்ப்பணம் செய்த தியாகிகள் என்போர் நபிமார்களுக்கு அடுத்தபடியாக உயர்ந்த பதவியை அடைவார்கள் என்பது எவரும் அறிந்த உண்மை. தனது நபியின் திருப்பேரருக்கு அந்த மகத்தான அந்தஸ்தை அல்லாஹ் வழங்க நாடி அவர்களை ஷஹீதாக்கி விட்டான். அந்த மாபெரும் அந்தஸ்தை இமாம் ஹுஸைன்(ரழி) அடைவதற்குக் கர்பலாதான் காரணமாக இருந்தது.
இந்த உலக வாழ்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவர்கள்தாம், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அழுது புலம்புவர். மறுஉலக வாழ்க்கை உண்டு என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டோர், "நாம் மறு உலக வாழ்வில் இமாம் ஹுஸைன்(ரழி) அவர்களை மிக உயர்ந்த அந்தஸ்துடன் சந்திக்க இருக்கிறோம்" என்று, தம்மைத் தேற்றிக் கொள்வர்.

"தங்களுக்கு ஏதேனும் முஸீபத் (சோதனை) ஏற்படும்போது நாங்களும் அல்லாஹ்வுக்கு உரியவர்களே; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம் என்று கூறி பொறுமையை மேற்கொண்டவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!" (அல்குர்ஆன் 2:156) என்று அல்லாஹ் கூறியதற்கிணங்க வாழும்போதுதான் இறைவனின் திருப் பொருத்தத்துக்கு நாம் ஆளாக முடியும்.

அதற்காக, ஒப்பாரி வைப்பதும், மாரடித்துக் கொள்வதும், பஞ்சா எடுப்பதும், தீ மிதிப்பதும், ஊர்வலங்கள் நடத்துவதும், யஸீதையும் மற்றவர்களையும் ஏசுவதும், ஹுஸைன் மவ்லுது ஓதுவதும் நமக்குத் தேவையில்லாதவற்றைப் பேசுவதும், ஒரு முறை ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்டதை வர்ணனையுடன் பல பொய்களைக் கலந்து சொல்லி ஆண்டுதோறும் அவர்களைக் கொலை செய்வதும், இஸ்லாம் காட்டிய மரபு அல்ல.

"கன்னத்தில் அறைந்து கொண்டு, சட்டைகளைக் கிழித்துக் கொண்டு அறியாமைக் காலத்துக் கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவன் நம்மைச் சேர்ந்தவனில்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத்.

"உள்ளத்தினாலும் கண்களாலும் சோகத்தை வெளிப்படுத்துவது இறைவன் புறத்திலிருந்து உள்ளதாகும். கைகளாலும் நாவினாலும் சோகத்தைக் காட்டுவது ஷைத்தானின் வேலையாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்: அஹ்மத்

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற பெரும்பாலான நிகழ்ச்சிகள் அறியாமைக் காலத்து நடைமுறைகள்தாம். இவற்றைச் செய்வதன் மூலம் நபி(ஸல்) அவர்களைச் சேராதவர்களாக நாம் ஆகிவிடாமல் நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக. தஞ்சை மாவட்டத்தின் சில பகுதிகளில் முஹர்ரம் மாதம் பத்து நாட்கள் புதுமணத் தம்பதிகளைப் பிரித்து விடுகின்ற கொடுமையும் நடந்து வருகின்றது. "அந்தப் பத்து நாட்களில் கரு உருவானால் அந்தக் குழந்தை இரத்தக் காயம்பட்டு சாகும்" என்று அதற்கு மடத்தனமான காரணம் வேறு கூறிக் கொள்கின்றனர்.

இது அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித் தராத விஷயமாகும். மேலும் இது மூட நம்பிக்கையைத் தவிர வேறில்லை. அல்லாஹ் ஹலாலாக்கிய திருமண உறவைக்கூட சில நாட்கள் ஹராமாக்க எவருக்கும் உரிமை இல்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அல்லாஹ்வின் அதிகாரத்தில் நேரடியாகத் தலையிட்ட மாபெரும் குற்றத்திற்கு நாம் ஆளாக நேரிடும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில், ஹுஸைன்(ரழி) அவர்களின் தலை, கை போன்ற வடிவங்களில் கொழுக்கட்டை அவித்து, பாத்திஹா ஓதி வருகின்றனர், அவர்கள் மீது தாங்கள் கொண்ட அன்புக்கு இது ஓர் அடையாளம் என்று எண்ணிக் கொள்கின்றனர். இப்படி எல்லாம் செய்பவர்களைப் பற்றி "என்னைச் சேர்ந்தவரல்லர்" என்று நபி(ஸல்) அவாகள் மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸில் எச்சரிக்கை செய்துள்ளனர். இது போன்ற மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறிய வேண்டும். இஸ்லாத்தில் இது போன்ற செயல்களுக்கு அறவே இடம் இல்லை.

மூஸா நபியை அல்லாஹ் இந்த நாளில்தான் காப்பாற்றினான் என்று எண்ணிக் கொண்டு, அந்தப் பெரும் பாக்கியத்துக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நபி(ஸல்) அவர்கள் காட்டிய பிரகாரம் ஒன்பது, பத்து ஆகிய இரு நாட்களும் நோன்பு வைத்து ஏனைய சடங்குகளை விட்டொழிப்போமாக!

ஆக்கம்: அபூ முஹம்மத்
நன்றி: அந்நஜாத் செப்டம்பர், 1986

Tuesday, December 7, 2010

விதி மாற்றமா ஏமாற்றமா?                                               ஓரிறையின் நற்பெயரால்.............

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...
          
           அனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவுளே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை  கடவுள் நமக்கு வழங்க வேண்டும் .. நியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,

இப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக
"உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே....!"

  என்ற மாநபி கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.

                                                                                    
     பொதுவாக அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படித்தான் நடக்கிறதென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு விதி குறித்த இக்கருத்து அல்லாஹ்வின் பேராற்றலை பிரதிபலிக்கும் வல்லமையின் வெளிபாடாக சொல்லப்படுகிறது அதாவது இப்பூவியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளும் அவன் அறியாமல் நடந்தேறாது.

(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்."  
(அல் குர்ஆன் 3:29)

     எனினும் தர்க்கரீதியாக விதிக்கு கடவுளை காரணம் காட்டி தமது தீய செயலுக்கு நியாயம் கற்பிப்பது பொருத்தமான வாதமா?

   அல்லாஹ் மனித இனத்திற்கு ஏனைய படைப்புகளை போலல்லாமல் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுத்ததும் திறனுடன் படைத்திருக்கிறான். ஆக எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவன் தனது சிந்தனைக்கு உட்பட்டு இது தவறு இது சரி என தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். இன்று விதியின் மேல் பழிபோடும் ஒரு இறை நிராகரிப்பாளர் இறைவன் நாடியதால் தான் நான் இறை நிராகரிப்பாளான இருக்கிறேன் என்று கூறுவாரேயானால் அது அவர் இறை குறித்து தனது சிந்தனையை ஆராய முற்படாததே தவிர இறைவன் காரணமல்ல ஏனெனில் அஃது அவரது வீட்டில் திருட்டோ அல்லது அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டாலோ இதுவும் இறைவன் நாட்டப்படி (விதிப்படி) தான் நடக்கிறது என்று சும்மா உட்கார மாட்டார் அதை தொடர்ந்த ஆயத்த பணிகளை செய்து தான் தீருவார்,  அஃதில்லாமல் தமது வாழ்வாதார  தேவைக்கும், அதிகப்படியான பொருளாதார தேவைக்கும் நாமே முயன்று தேடித்தேடி நல்லவற்றை பெற முயலும் ஒருவர் இறைக்குறித்தும் அவனது போதனை குறித்தும் அறிய முற்படாமல் அவனது நாட்டத்தால் தானே நான் இறைவன் குறித்து அறியாமல் இருக்கிறேன் என்று கூறுவது அறிவுடைய வாதமா?

   இறுதியாக, அனைத்து நிலைகளிலும் இறைவன் தான் மக்களின் அனைத்து காரியங்களுக்கும் முழு முதற் பொறுப்பு என்று கூறி தீமையான செயல்களுக்கு விதி மூல(லா)ம் பூச முற்பட்டால் அதே இறைவன் தான் மனிதர்கள் எல்லா நிலையிலும் நல்லனவற்றை பின்பற்றி வாழ அந்தந்த கால கட்டத்தில் இறைத்தூதர்களை மக்கள் மத்தியில் அனுப்பியும் வைத்தான். அவர்களை பின்பற்ற வேண்டியதும் இறைவனின் நாட்டம் தானே அவர்களை பின்பற்ற தவறியது ஏனோ...? நாத்திகம் வளர்க்கும் பகுத்தறிவின் பதில் என்ன?

ஏனெனில் வேத வரிகள் மனித மனங்களைப்பற்றி கூறும் போது

எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன். (அல் குர்ஆன் 9:115)

    முடிவுற்ற ஒரு செயல் நமக்கு பாதகமாக அமைந்தாலோ அல்லது நன்கு முயற்சித்து மேற்கொண்ட ஒரு செயலின் விளைவு தோல்வியில் முடிந்தாலோ அங்கே விதி என்னும் அளவுகோலை அல்லாஹ் பயன்படுத்த சொல்கிறான்., ஏனெனில் அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெறவும் நம்மை நாமே தாழ்வு மனப்பான்மையில் ஆளாக்கி கொள்ளமாலும் இருக்க செய்வதற்கே; அதுப்போல நாம் ஒரு திறன் மிக்க செயலை மேற்கொண்டு கிடைக்கும் புகழ், பொருள் மூலம் நாம் (அதிகம்) கர்வமடையாமல் இருக்கமுமே எல்லாம் இறை நாட்டமே எனும் விதி அங்கு அவசியமாகிறது.,

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் -57:23)

    ஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செயலாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்ததே  தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை

  ...மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. (அல் குர்ஆன் 53:39)
                        
                                       அல்லாஹ் மிக்க அறிந்தவன்

by brother  gulam

Wednesday, December 1, 2010

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது

http://1.bp.blogspot.com/_oqgSsBjDlAY/S3pYaEPW6YI/AAAAAAAAAKo/en_n2mS5ZXE/s1600/Bismillah_2.JPG


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...
RAFEEK AHMED.H - Dubai.


http://img.technospot.in/pink-ribbon.jpgநீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

 
கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:
 • 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

 • 2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

 • 3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

 • 4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

 • 5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

 • 6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது

 • 7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது

 • 8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை.

 • 9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும்.

 • 10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.

 • 11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

 • 12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

 • 13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது.

 • 14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known to cause apoptosis, or programmed cell death, the body's normal method of disposing of damaged, unwanted, or unneeded cells)

 • 15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும்,
  ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!


 • 16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது (Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.

உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:-
 • 1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

 • 2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

 • 3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது..

 • 4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

 • 5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it.