நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Wednesday, February 29, 2012

புற்றை அழிக்கும் புனித நோன்பு!

ஓரிறையின் நற்பெயரால்.... நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183)

உயிர் வாழும் அணைத்து ஜீவராசிகளும் செல்களால் ஆனவை.  மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றிற்கு அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக அமைகின்றன.

செல்களின் வளர்ச்சி, உருவாக்கம் மற்றும் செயல்களுக்கான தகவல்கள் அனைத்தும் டி.என்.ஏ-வில் தான் பதியப்பட்டுள்ளது. 

அதாவது நமது உடல் உறுப்புகளை சீரான முறையில் வளர்ச்சியடைவதற்காக  (Bcl2) மரபணுக்கள் செல் பிரிதலை ஊக்குவித்து( ஒரு செல் இரண்டாக பின் அது நான்கு ,எட்டு, பதினாறு) என பிரிந்து பல்கிப்பெருகி உறுப்புகளை வளர்கின்றன. அதே நேரத்தில் உறுப்புகள் அதிக அளவில் வளராமல் இருக்க செல் பிரிதலை கட்டுப்படுத்திக் கொண்டு உறுப்புகளை வளர்ப்பதை தடுத்து விடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் நமது உடலில் தேய்மானம் அடைந்த செல்களை அப்புறப்படுத்தி தினமும் புதிய செல்களை அமர்த்தியும் வருகின்றன.  அதாவது, செல்கள் தாமே அழியும் தன்மை கொண்டுள்ளதால் இதனை செல் இறப்பு அல்லது திட்டமிடப்பட்ட செல் இறப்பு (Apoptosis or Programmed cell death)  என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு நாளும் செல்கள் இதை செய்கின்றன. இந்நிகழ்வுகளை டி.என்.ஏ தான் உருவாக்குகின்றன.

டி.என்.ஏ வில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் ஒரு செல் புற்று செல்களாக மாறி, Oncogene எனும் புற்று மரபணுக்கள் செல் பிரிதலை ஊக்கிவிக்கும்  (Bcl2) மரபணுக்களை கட்டுப்பாடுகள் இல்லாத செல் பிரிதலை ஏற்படுத்துவதோடும்,  புற்றுகளை(கட்டி)-குறைக்கும் புரதமான (p53) மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள். செல் இறப்பு அல்லது திட்டமிடப்பட்ட செல் இறத்தல் (Apoptosis or Programmed cell death) என்னும் நிகழ்வை Oncogene புற்று மரபணுக்கள் தடுத்து புற்றுநோய் செல்கள் தாமே அழியாமல், புற்றுசெல்களை பல்கி பெருகுவதற்கு துணை புரிகின்றன.


புற்று நோயிக்கு முறையான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப் படாவிட்டாலும், புற்று செல்களை அழிக்கும் வழிமுறையை தெற்கு கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதென்ன  வழிமுறை என்று பார்கின்றீர்களா! 

இறைவனின் கட்டளையை ஏற்று வருடாவருடம் ரமலான் மாதத்தில்  நாம் நோன்பு நோற்கின்றோமே அந்நோன்பின் தாக்கத்தால் புற்றுநோய் செல்கள் அழிவதாக கண்டுபிடித்துள்ளனர். என்ன ஆச்சரியமாக உள்ளதா! அது தான் உண்மை.


இவ்வதிசியத்தக்க உண்மையை புற்றுநோய் நிபுணர் வால்டர் லோங்கோ மற்றும் அவரின் குழுவினர்கள் விலங்குகளில் சோதனை செய்து கண்டறிந்துள்ளனர். நோன்பு புற்றுநோயை தடுப்பது மட்டுமின்றி, நாம் எடுத்து வரும் சிகிச்சையின் பலனை விரைந்து கிடைக்கச் செய்யும்  என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

நோன்பு இருத்தலின் போது, சாதாரன செல்கள் ஓய்வுநிலை அல்லது உறக்க நிலைக்கு சென்று விடுகின்றன. ஆனால் புற்றுநோய் செல்கள் இதற்கு எதிர்மறையாக புதிய புரதத்தை உண்டு பண்ணி செல் பிரிதல் மற்றும் வளர்ச்சியை தொடர செய்து பின் நோன்பின் தாக்கத்தினால்  புற்றுநோய் மரபணு   பாதிக்கப்பட்டு அவைகள்(புற்று செல்கள்) பெருக்கமடைவது மற்றும் பிரிந்து செல்வது தடுக்கப்பட்டு, இறுதியில் புற்று நோய் செல்கள் தன்னை தானே அழித்துக் கொள்கின்றன.  இதை தடுப்பதற்காக புற்று செல்கள் முயல்வதாகவும், ஆனால் அவைகளால் அதை தடுக்க முடியவில்லை என்று கண்டுப்பிடித்துள்ளனர். (அல்லாஹு அக்பர், அல்லாஹ் ஞானமிக்கவன், யாவற்றையும் நன்கறிந்தவன்)

கீமோதெரபி சிகிச்சையின்றி சுழற்சி முறை நோன்பு இருத்தல் மார்பக புற்றுநோய், மெலனோமா, கிளியோமா மற்றும் மனித ந்யூரோபலாஸ்டோமோ போன்ற புற்று நோய் செல்களின் வளர்ச்சியை பெதுவாக்குவதாகவும்,  பல சந்தர்ப்பங்களில் நோன்பு கீமோதெரபி போல் திறன் கொண்டு செயல்படுவதாகவும் ண்டறிந்துள்ளனர்கீமோதெரபி சிகிச்சையுடன் நோன்பு இருத்தல் சில வகை புற்று நோய்களை குனமாக்குவதாகவும், புற்றுநோய் கட்டிகள் மற்ற இடங்களில் பரவுவதையும் விரைந்து தடுத்துவிடுவதாகவும் ண்டறிந்துள்ளனர். 

Fasting Weakens Cancer in Miceமேலும் நோன்பு சாதாரண திசுக்கள் மற்றும்  டியுமர் கட்டிகளை (tumors) கட்டுபடுத்துவதில் மாறுபட்ட விவரத்தை மரபணுவில் வெளிப்படுத்துவதாகவும் கண்டறிந்துள்ள வால்டர் லோங்கோ. நோன்பு புற்று நோய்க்கு நல்லதொரு சிகிச்சையாக அமையும். இந்த கண்டுபிடிப்புகள் புதிய வழியை உருவாக்கும் என தெரிவித்துள்ளார். 

இறைவனின் கட்டளையை ஏற்று ரமலானில் நாம் நோன்பிருக்கும் போது இந்த புற்று நோய் வருவது தடுக்கப்படிகிறது எனும் போது ரமலான் நோன்பும், இந்த நோன்பை வலியுறுத்தும் திருக்குர்ஆனும் படைத்த இறைவனால் வழங்கப்பட்ட ஒன்று என்ற உறுதி ஏற்படுகிறதல்லவா?

திருக்குர்ஆன் குறிப்பிடும் வணக்க வழிபாடுகளில் நமக்கு தெரியாத நோய் நிவாரணங்கள் உள்ளன. அதை ஆய்வுகள் நிரூபிக்கும் போது வல்ல இறைவனைப் புகழ்வதே ஒரு நன்றியுள்ள அடியானின் பண்பாக இருக்க முடியும். அந்த நன்றியுள்ள அடியார்களில் நாமும் இருக்கின்றோமா என்பதை நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். (அல் குர்ஆன் 17:82)
 'இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், நோய் நிவாரணமுமாகும்' என்று கூறுவீராக! (அல் குர்ஆன் 41:44)

நோன்பு நமக்கு கற்றுத்தரும் பாடம் என்னவென்றால், புற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு மட்டுமின்றி, புற்று நோய்களை அழிக்கும் வழியையும் கற்றுத்தருகின்றன. நோன்பு புற்று மரபணுக்கெதிராக ஏற்படுத்திய விளைவுகளை சரியான முறையில் நாம் அறிந்து கொண்டால் புற்றை முற்றிலும் குணப்படுத்தக் கூடிய மருந்தையும் நம்மால் உருவாக்க முடியும். இறைவன் நாடினால் புற்றை ஒழித்துவிடலாம் முற்றாக!

ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது. (முஸ்லிம்)


references :

Tuesday, February 21, 2012

இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள்
தவ்ஹீத் என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும் கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம்.

பெரும்பாண்மையான இணைவைப்பாளர்கள் தவ்ஹீதை எவ்வாறு உணர்ந்துள்ளார்கள்? தவ்ஹீத் தரும் படிப்பினையை எத்திவைப்பவர்கள் மீது இவர்களுக்கு ஏன் கடுங்கோபம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)! வாருங்கள் இதுபற்றி அலசுவோம்!

தவ்ஹீத் எதை போதிக்கிறது
தவ்ஹீத் என்பதற்கு ஏகத்துவம் என்று பொருள்படும் அதாவது ஏகனாகிய அல்லாஹ்வை பற்றி இஸ்லாம் கூறும் சித்தாந்தம் இதோ:
 • அல்லாஹ் தனித்தவன், இணை துணையில்லாதவன்,
 • அல்லாஹுக்கு நிகர் அவனே
 • அல்லாஹுக்கு நிகராக யாரும் இல்லை,
 • அல்லாஹ் அவனே முதலானவன், அவனே முடிவானவன்,
 • அல்லாஹ் அவனே அகிலங்களை படைத்து பரிபாலிப்பவன்
 • அல்லாஹ் அவனே ஜீவராசிகள் அனைத்திற்கும் ரட்சகன்
 • அல்லாஹ் அருளானவன், அன்பானவன், அழகானவன்,
 • அல்லாஹ் பேராற்றலுடையவன், அண்டங்களின் அதிபதி
 • அல்லாஹ்வின் அனுமதியின்றி ஒரு அணுவும் அசையாது
 • அல்லாஹ் படைப்பினங்கள் ஒவ்வொன்றையும கண்காணிப்பவன்
 • அல்லாஹ் அனைத்து பாக்கியங்களையும் அருள்பவன்
 • அல்லாஹ் நம்மை பராமரிப்பவன், நம்மை பாதுகாப்பவன்,
மேற்கண்ட அனைத்து அம்சங்களும் ஒருங்கே கொண்டுள்ள பேராற்றலுடைய அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வை வணங்குகள் அவனைத் தவிர வேறு எதையும் வணங்காதீர்கள் அவ்வாறு வணங்கினால் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள் என்று இஸ்லாம் போதிக்கிறது இந்த கோட்பாடுதான் தவ்ஹீத் அதாவது இஸ்லாத்தின் முதல் முக்கிய கலிமாவாகிய

லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹ்
(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்)

தவ்ஹீத் கொள்கையை பின்பற்றுபவர்கள் என்ன கூறுகிறார்கள்!
தவ்ஹீத் என்ற அழகான கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தாமாக எதையும் உருவாக்கிக்கொண்டு பேசுவது கிடையாது மாறாக அவர்கள் அல்குர்ஆனையும், நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையான ஹதீஸ்களையும் தீர ஆராய்ந்து அந்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எவ்வாறு  வாழந்துக் காட்டி வாழ வலியுறுத்தினார்களோ அதைத்தான் போதிக்கிறார்கள். காரணம் நபி (ஸல்) அவர்களை பின்பற்று பவர்களாகிய நாம் நாமாக, நம் இஷ்டப்படி எதையும் பின்பற்றுவதில்லை எத்திவைப்பதில்லை மாறாக நம் நபிகளாரின் வழிமுறை பின்பற்றுகிறோம். இதோ கீழ்கண்ட இறைவசனத்தை கேளுங்கள்!

அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், ‘இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்’ என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 10:15)

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் கீழ்கண்டவாறு தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவர்கள் சத்தியமுழக்கமிடுகிறார்கள் இதோ அந்த சத்திய முழக்கத்தை சற்று நீங்களே சிந்தியுங்கள்!

அல்லாஹ்வுக்கு இணைவைக்காதீர்கள்!
ஏகனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டுள்ளோம், நம் வாழ்வும் நம் மரணமும் ஒரு சோதனையாக உள்ளது அந்த சோதனையில் வெற்றி பெற வேண்டுமெனில் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அல்லாஹ்விடமே அருளுதவி தேடுங்கள் என்ற கண்ணியமாக முழக்கமிடுகிறார்கள்.

இந்த சத்திய முழக்கத்தை கேட்டவுடன் இணைவைப்பாளர்களும், மாற்றுமத்தவர்களும் எங்கள் இஷ்ட தெய்வங்களை ஏசுகிறான், இவனுக்கு அனுமதியளித்தது யார்? என்று பேசிக்கொள்கிறார்கள் சற்று கீழ்கண்ட வசனத்தை படித்தால் இவ்வாறு முழக்கமிட சொன்னது யார் என்ற புரியும்! இதோ அந்த வசனம்
நபிகளார் (ஸல்) கூறினார்கள்
பிரார்த்தனை தான் வணக்கமாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ர­)
(ஆதார நூல்கள்: அஹ்மத் , திர்மீதி, அபூதாவூத்)

அல்லாஹ் கூறுகிறான்
ல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:106)

இறந்தோரை பிரார்த்திக்காதீர்கள் தர்காஹ்வை வழிபடாதீர்கள்!
தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தர்காஹ் வாதிகளை நோக்கி இறந்தோரை பிரார்த்திக்காதீர்கள் அவர்கள் மண்ணோடு மண்ணாகி மக்கிவிட்டார்கள் அவர்களால் எதையும் கேட்க முடியாது, அவர்கள் பதில் அளிக்கமாட்டார்கள் என்று அறிவுரை கூறினால் உடனே தர்காஹ்வாதிகள் என் அவ்லியாவை திட்டுகிறான் இவனுக்கு ஏன் இந்த நெஞ்சழுத்தம் என்று வினவுகிறார்கள். கப்ருகளை வணங்கும் சகோதரர்களே கீழ்கண்ட அருள்மறை குர்ஆனில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தை கேட்டால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்!

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 7:197, 198)
”கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும், அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தனர்’ (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி.)

தாயத்து கட்டாதீர்கள்!
தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் தர்காஹ்வாதி களிடம் மந்திரித்த தாயத்துக்களை கட்டாதீர்கள் அது நபிவழிக்கு முற்றிலும் மாற்றமானது இதனால் நீங்கள் சீரழிந்துவிடுவீர்கள் என்று அறிவுரை கூறினால் உடனே தர்காஹ்வாதிகள் உனக்கு இவ்வாறு கூறியவன் யார் என்று கேள்வி எழுப்புவார்கள் அதற்கு பதில் இதோ கீழ்கண்ட எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்தான் நம்மை தாயத்து கட்ட வேண்டாம் என்று ஆணை பிரப்பித்தார்!
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :-
தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்

ஷபே பராத் இரவு வேண்டாம், மண்ணரைத் திருவிழா கூடாது!
தவ்ஹீத் என்ற அற்புதமான கொள்கையை ஏற்றுக்கொண்ட நாம் கப்ருகளை வணங்கும் தர்காஹ்வாதிகளையும், மத்ஹபுவாதி களையும் நோக்கி ஷபே பராத் என்ற இரவை நபிகளார் காட்டித் தரவில்லை அன்றைய தினம் மண்ணரைகளில் விழா கொண்டாடுவது காஃபிர்கள் மற்றும் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறை என்று அறிவுரை கூறினால் அதை ஏற்க மறுத்து நம்மை அடிக்க கைகளை ஓங்குகிறார்கள் இவர்கள் ஏன் கீழ்கண்ட வசனத்தை உணர்வதில்லை

அன்னை ஆயிஷா (ரலி) அறிவித்துள்ளார்கள்:-
“எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319    3456)

அல்லாஹ் கூறுகிறான்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

மவ்லூது பாடாதீர்கள், கத்தம் பாத்திஹா ஓதாதீர்கள்!
மவ்லூதுகளை பாடி கத்தம் பாத்திஹாக்களையும், நபிகளார் காட்டித்தராத திக்ருகளையும், 1000 முறை கௌது நாயத்தை அழைப்பதையும் கண்டித்து இதனால் நரகம் சித்தப்படும் என்ற எச்சரித்தால் நம்மை நோக்கி தர்காஹ்வாதிகள் மூடர்கள் இவர்கள் புதுமைவாதிகள் என்று ஏளனம் செய்கிறார்கள் ஆனால் இவ்வாறு உண்மையை உணர மறுக்கும் இவர்கள் நபிகளாரின் கீழ்கண்ட அறிவுரையை இதுநாள் வரை உணராதது ஏன்?

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள். (அலி(ரலி) அபூதாவூது, நஸயீ.)

யார் அதிகப்பிரசங்கவாதிகள் தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவரா?
குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் இணைவைப்பாளர்கள் மத்ஹபுவாதிகள்
அல்லாஹ்வை தவிர எதையும் வணங்காதீர்கள்(அல்குர்ஆன்)
அவ்லியாவையும் வணங்குவோம்
இறந்தோரை பிரார்த்திக்காதிர்கள் (அல்குர்ஆன்)
இறந்தோர் நமக்கு அருள்புரிவார்கள்
கப்ருகளை உயர்த்திக் கட்டாதீர்கள்(நபிமொழி)
கப்ருகளை உயர்த்திக் கட்டுவோம்
உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்குங்கள் (நபிமொழி)
உயர்த்திக் கட்டப்படட கப்ருகளையும், தர்காஹ்களையும் இடிக்கமாட்டோம்!
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள்.
(அலி(ரலி) அபூதாவூது, நஸயீ.)
மார்க்கத்தில் புதுமையை விரும்புவோம் மவ்லூது, கத்தம் பாத்திஹா, கந்தூரி விழா, ஷபே பராத், மண்ணரை திருவிழா 1000 முறை கவுஸ் என்ற அழைப்போம் இன்னும் ஏராளம் இருக்கு அது நம் மூதாதையர்கள் காட்டித்தந்த வழிமுறை அதை விடமாட்டோம்!
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்
தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்
தாயத்தை கட்டினால் என்ன? தாயத்தை கட்டுவோம், கட்டக்கூடாது என்று கூறுபவர் யார்?

முடிவுரை
தர்காஹ்வை வணங்கி வந்த என் அருமை சகோதர சகோதரிகளே இந்த அறிவுரை உண்ணிப்பாக படித்த நீங்கள் இனி எந்த வலிமுறையை பின்பற்ற போகிறீர்கள்!

அல்லாஹ்வும் அவனது அனைத்து நபிமார்களும் காட்டித் தந்த வழிமுறையையா? அல்லது அல்லாஹ்வும் அவனது நபிமார்களும் காட்டித்தராத உங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய கண்மூடித்தனமான குருட்டு வழிமுறையையா?

நீங்கள் எங்கே திசை திருப்பப்படுகிறீர்கள்
இனிப்பு வேண்டுமா? கசப்பு வேண்டுமா என்றால் இனிப்பை அழகாக தேர்ந்தெடுப்பீர்கள்! மானம் வேண்டுமா? அவமானம் வேண்டுமா என்றால் மானம்தான் பெரிது என்பீர்கள்! சுவர்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? என்றால் சுவர்கம்தான் வேண்டும் என்பீர்கள் ஆனால் அந்த சுவர்கத்திற்கு செல்ல நீங்கள் உங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய மார்க்கத்திற்கு முரணாண காரியங்கள் அனைத்தையும் இன்றே இக்கணமே விட வேண்டும் அதற்கு பதிலாக நபிகாளர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் அது எப்படிப்பட்டது இதோ அல்லாஹ் கூறுகிறான் கேளுங்கள்!

(நபியே) மனிதர்களுக்காக அருளப்பட்ட வேதத்தை அவர்கள் சிந்தித்து உணர வேண்டுமென்பதற்காக, தெளிவாக அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கே வேதத்தை நாம் உம்மீது அருளினோம். (அல்குர்ஆன், 16:44)
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்று நபி அவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி

அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

அல்லாஹ் தன் தூதர்களை ஒன்று கூட்டும் (அந்த) நாளில் அவர்களிடம் (நீங்கள் மக்களுக்கு எனது கட்டளைகளை எடுத்துக் கூறிய போது) “என்ன பதிலளிக்கப்பட்டீர்கள்” என்று கேட்பான். அதற்கு அவர்கள் அது பற்றி எங்களுக்கு எவ்வித ஞானமுமில்லை. நிச்சயமாக நீ தான் மறைவானவற்றை யெல்லாம் அறிந்தவன் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5: 109)

(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்59:7)

குர்ஆன் ஹதிஸ் வசனங்களை தேட பேருதவியாக இருந்த வெப், பிளாக் தளங்கள் அனைத்திற்கும் நன்றி!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! புகழனைத்தும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே! அல்ஹம்துலில்லாஹ்!

Friday, February 17, 2012

நபிகள் நாயகத்தின் உருவ அமைப்பும், குணாதிசயங்களும் - 2


ஓரிறையின் நற்பெயரால்....
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவ அமைப்பும், குணாதிசயங்களும் - 2

நபித்துவ முத்திரை

ஸாயிப் இப்னு யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது : எனது சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரியின் மகன் நோய் வாய்ப்பட்டுள்ளான் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எனது தலையை தடவி எனது அபிவிருத்திக்காகப் பிராத்தித்தார்கள். (பின்னர்) உளுச் செய்தார்கள். அவர்கள் மீதம் வைத்திருத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். நபி (ஸல்) அவர்களுடைய முதுகிற்கு பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களுடைய இரு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை நான் பார்த்தேன். அது ஒரு கௌதாரியின் முட்டையைப் போன்று இருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி)

அனஸ்  இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் தலைமுடி இருகாதுகளின் பாதி வரை (தொங்கிக் கொண்டு) இருக்கும். (நூல் - முஸ்லீம், அபூதாவுத், நஸயீ)

தலைவாருதல்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் வகிடு எடுக்காமல் தலைவாரி வந்தார்கள். அப்போது இணைவைப்பாளர்கள் வகிடு எடுத்து தலைவாரி வந்தார்கள். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் வகிடு எடுக்காமல் தலைவாரி வந்தார்கள். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் விசயமாக எந்தக் கட்டளையும் வராhததால் அவர்களுக்கு ஒத்து நடக்க நபி (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். பின்னர் வகிடு எடுத்துத் தலைவாரினார்கள். (நூல் - புகாரி, அபூதாவுத்)

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் அதிகம் எண்ணெய் தேய்ப்பவர்களாகவும் தாடிக்குச் சீப்பிடுபவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலையில் அதிகமாக ஒரு துணி இருந்து கொண்டே இருக்கும். (தலையில் அதிகம் எண்ணெய் இருந்ததால்) அத்துணி நனைந்ததைப் போல் இருக்கும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் தலையிலும், தாடியிலும் பதிநான்கு நரைமுடிக்கு அதிகமாக நான் எண்ணவில்லை.

அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களுக்கு சுமார் 20 நரைமுடிகளே இருந்தன. (நூல் - இப்னுமாஜா)

ஸிமாக் இப்னு ஹர்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் தலையில் நரைமுடிகள் இருந்தனவா? என்று ஜாபிர் இப்னு ஸமுரா ( ரலி) இடம் வினவினேன். அதற்கவர் நபி (ஸல்) அவர்கள் வகிடு எடுக்கும் பகுதியில் சில முடிகளைத் தவிர வேறு எங்கும் நரைமுடிகள் இருக்கவில்லை. எண்ணெய்த் தேய்த்து இருந்தால் (அதுகூட) அவற்றை (நரையை) மறைத்துவிடும் என்று பதிலளித்தார்கள்.

சாயம் ஏற்றல்
பஷிர் இப்னு காஸாஸியாவின் மனைவி ஜஹ்தா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் குளித்துவிட்டு தலை(முடி) யை உதறியவர்களாக தன் வீட்டிலிருந்து வெளியேறினார்கள். அப்போது அவர்கள் தலையில் மருதாணி சாயமிருந்ததை நான் கண்டேன்.

ஆடை
பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது : இரண்டு தோள் புஜங்களுக்கு நெருக்கமாக தலைமுடி தொங்கிக் கொண்டு, சிவப்பு நிற ஆடை அணிந்த நபி (ஸல்) அவர்களை விட அழகானவராக மனிதர்களில் எவரையும் நான் கண்டதில்லை. (நூல் - புகாரி, நஸயீ)

காலணி
கதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் காலணி எப்படியிருந்தது என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் கேட்டபோது, அவற்றில் இரண்டு வார்ப்பட்டைகள் இருந்தன என்று பதிலளித்தார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி)

மோதிரம்
அனஸ்  இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் மோதிரம் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. அதன் மேல்பகுதியில் அபீஸினியா நாட்டின் வேலைப்பாடு இருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, முஸ்லீம், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா)

வலது கரத்தில் மோதிரம் அணிதல்
அலீ இப்னு அபுதாலிப்; (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வலது கரத்தில் மோதிரம் அணிபவர்களாக இருந்தனர். (நூல் - அபுதாவுத், நஸயீ)

வாள்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வாளின் கைப்பிடி வெள்ளியாலாகியிருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, முஸ்லீம், அபுதாவுத், நஸயீ, தாரமீ)

உருக்குச் சட்டை
ஸூபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் கூறியதாவது : உஹதுப் போர் அன்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு உருக்குச் சட்டை அணிந்திருந்தனர். (அதை அணிந்த வண்ணம்) ஒரு கற்பாறையில் ஏறமுயன்றனர். ஆனால் முடியவில்லை. அபுதல்ஹா (ரலி) அவர்களை கீழே அமரச் செய்து (அவர்கள் மேலேறி) அதில் ஏறி அமர்ந்துக் கொண்டார்கள். (அப்போது) நபி (ஸல்) அவர்கள் தல்ஹா (எனது பரிந்துரையை) கடமையாக்கிக் கொண்டார் என்று கூறியதை நான் செவியுற்றேன். (நூல் - ஸூனன் திர்மிதி, அஹமத்)

தலைப்பாகை
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது :  நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது மக்காவில் நுழைந்தார்கள். அப்போது அவர்கள் தலையில் கருப்புத் தலைப்பாகை இருந்தது. (நூல் - ஸூனன் திர்மிதி, முஸ்லீம், அபுதாவுத், நஸயீ, இப்னுமாஜா)

கீழாடை
அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது : ஆயிஷா (ரலி) அவர்கள் ஒட்டுப்போட்ட ஒரு போர்வையையும், கடினமான ஒரு வேட்டியையும் எங்களிடம் காட்டி இந்த இரண்டையும் அணிந்த நிலையில் தான் நபி (ஸல்) அவர்களுடைய உயிர் கைப்பற்றப்பட்டது என்று கூறினார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம்)

நடை
அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களை விட அழகான எவரையும் நான் கண்டதில்லை. அவர்கள் முகத்தில் சூரியன் இலங்கிக் கொண்டிருப்பது போலிருக்கும். நபி (ஸல்) அவர்களைப் போன்று விரைவாக நடப்பவர்களை நான் கண்டதில்லை. பூமி அவர்களுக்கு சுருட்டப்பட்டது போல் இருக்கும். நாங்கள் (அவர்களோடு) செல்ல பெரும் சிரமத்தை எடுத்துக் கொள்வோம். ஆனால் அவர்களுக்கு எச்சிரமமும் இருக்காது. (நூல் - ஸூனன் திர்மிதி, அஹமத், இப்னுஹிப்பான்)

உணவருந்துதல்
கஆப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள். அந்த மூன்று விரல்களைச் சூப்பவும் செய்வார்கள். (நூல் - முஸ்லீம்)

பேச்சு
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் உங்களைப் போன்று விரைவாகப் பேசக்கூடியவர்களாக இருந்ததில்லை. அவரிடம் அமர்ந்திருப்பவர் மனனம் செய்யும் வண்ணம் இடைவெளிவிட்டு தெளிவாக அவர்களின் பேச்சு இருக்கும். (நூல் - ஸூனன் திர்மிதி, அபுதாவுத், நஸயீ)

அனஸ்  இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் (சில வேளைகளில்) விளங்கிக் கொள்வதற்காக ஒரு வார்த்தையை மூன்று முறை கூறுவார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி)

சிரிப்பு
அப்துல்லா இப்னு ஹாரிஸ் இப்னு ஜஸ்வு (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்னகை புரியக் கூடிய எவரையும் நான் பார்த்தில்லை. (நூல் - ஸூனன் திர்மிதி)

ஆமிர் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது : கன்தக் போர் (அகழ் போர்) அன்று நபி (ஸல்) அவர்கள் கடவாய் பற்கள் தெரியுமளவுக்குச் சிரித்தார்கள். எதற்காகச் சிரித்தார்கள் என்று ஸஅத்(ரலி) யிடம் கேட்டேன். அதற்கவர்கள் (அகழ் போர் அன்று எதிரி) ஒருவன் கேடயத்தை வைத்துக் கொண்டு நான் விடும் அம்புகளை எல்லாம் தனது நெற்றியைத் தாக்குவதை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தான். நான் அம்பை எடுத்து (சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன்) அவன் தலையை உயர்த்திய போது அம்பை எறிந்தேன். அது குறிதவறாமல் அவன் நெற்றியை பதம் பார்த்தது. அவன் கீழே விழுந்து காலை உயரத் தூக்கிக் கொண்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் கடவாய்ப் பற்கள் தெரியுமளவு சிரித்தார்கள். நீங்கள் எதற்க்காகச் சிரித்தீர்கள்? என்று கேட்டேன். அந்த மனிதரிடம் நீர் நடந்து கொண்ட முறையைப் பார்த்துத் தான் என்று கூறினார்கள்.

நகைச்சுவை
அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடம் நகைச்சுவையாகப் பேசுகிறீர்களே என்று கேட்டபோது, ஆம்! எனினும் நான் உண்மையைத் தவிர வேறு எதையும் கூறமாட்டேன் என்று கூறினார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி)

அனஸ்  இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ஏறிச்செல்ல ஒரு வாகனம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உம்மை ஒரு ஒட்டக குட்டியின் மீது ஏற்றி விடுகிறேன் என்றார்கள். அதற்கு அம்மனிதர் ஒட்டகக் குட்டியை நான் என்ன செய்வேன் அல்லாஹ்வின் தூதரே! என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எந்த ஒட்டகமும் (தாய்) ஒட்டகத்தின் குட்டி தானே! என்றார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, அபூதாவுத்)

ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிழவி வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் சுவர்க்கம் செல்ல துஆச் செய்யுங்கள்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக கிழவி சுவர்க்கத்தில் நுழைய முடியாது என்றார்கள். அப்பெண்மணி அழுதவர்களாக திரும்பிச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பெண்மணியிடம் கூறுங்கள். அப்பெண்மணி கிழவியாக இருக்கும் நிலையில் சுவர்க்கம் செல்லமாட்டார்கள். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக நாம் அப்பெண்களை புதிய படைப்பாக உண்டாக்கி அவர்களைக் கன்னிகளாகவும், பாசமுடைய சமவயதினராகவும் ஆக்குவோம். (அல்குர்ஆன் : 56 : 35 - 37)

தூக்கம்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் உறங்கினால் குறட்டைவிடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை குறட்டைவிடுமளவுக்கு உறங்கினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு அறிவிப்புச் செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழுதார்கள். ஆனால் உளுச் செய்யவில்லை. (நூல் - புகாரி, முஸ்லீம், அபூதாவுத், நஸயீ, இப்னுமாஜா)

அபுகதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் பயணிக்கும்போது இரவில் ஒய்வெடுக்க எண்ணினால் வலதுபுறமாகப் படுத்துக் கொள்வார்கள். ஸூப்ஹ் நேரத்தின் நெருக்கத்தில் ஒய்வெடுக்க விரும்பினால் கையை நட்ட வைத்து தலையை (வலது) கையின் உள்ளங்கையில் வைத்துக் கொள்வார்கள். (நூல் - முஸ்லீம், இப்னுகுஸைமா, இப்னுஹிப்பான்)

படுக்கை
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் உறங்கும் படுக்கை தோலாலானது. அதன் உள்ளே பேரீத்தநார்கள் நிரப்பப்பட்டிருக்கும். (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம்)

நபிகள் நாயகத்தின் உருவ அமைப்பும், குணாதிசயங்களும் -1


ஓரிறையின் நற்பெயரால்....
நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவ அமைப்பும், குணாதிசயங்களும் - 1

நபி (ஸல்) அவர்களின் அங்க அமைப்புகள்
அனஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இல்லாமல் நடுத்தர உயரமானவர்களாகவும் அழகிய உடலமைப்புடையவர்களாகவும் இருந்தனர். அவர்களின் முடி முற்றிலும் சுருண்டவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இருக்கவில்லை. அவர்கள் கோதுமை நிறமுடையவர்களாக இருந்தனர். நடக்கும் போது (முன்புறம்) சாய்ந்து நடப்பார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி)

பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது : சிவப்புநிற ஆடையணிந்து, தோள் புஜத்தைத் தொடும் தலைமுடியுடன் அழகுற நபி (ஸல்) அவர்கள் விளங்கியது போல் வேறெவரையும் நான் கண்டதில்லை. அவர்களின் தலைமுடி தோள்புஜத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும். இரண்டு தோள் புஜங்களுக்கு இடைப்பட்ட தொலைவு அதிகமாக இருக்கும். (மார்பு அகன்றிருக்கும்). அவர்கள் குட்டையாகவோ நெட்டையாகவோ இருக்கவில்லை. (நூல் - ஸூனன் திர்மிதி, புகாரி, முஸ்லீம், நஸயீ, இப்னுமாஜா)

அலி (ரலி) அவர்கள் கூறியதாவது :  நபி (ஸல்) அவர்கள் நெட்டையாகவோ, குட்டையாகவோ இருக்கவில்லை. இரு உள்ளங்கைகளும், இரு பாதங்களும் சதைபிடிப்புள்ளதாக (உறுதி வாய்ந்ததாக) இருக்கும். தலையும், மூட்டுகளும் பெரிதாக இருக்கும். நெஞ்சிலிருந்து தொப்புள் வரை (கோடுகள்) போன்று முடிகளிலிருக்கும். மேடான இடத்திலிருந்து பள்ளமான இடத்திற்கு இறங்கும் போது அடிஎடுத்து வைப்பது போல் அடிஎடுத்து நடப்பார்கள் (கால்களை தேய்த்துக் கொண்டு நடக்க மாட்டார்கள்). இவர்களைப் போன்றவரை இதற்கு முன்பும் இதற்கு பின்பும் நான் கண்டதில்லை. (நூல் - ஸூனன் திர்மிதி)

ஹஸன் இப்னு அலி (ரலி) அவர்கள் கூறியதாவது :  நான் என் மாமா ஹின்த் இப்னு அபீஹாலா அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் அங்க அடையாளங்களைப் பற்றி வினவினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். எனவே அவர்களைப் பற்றி (அறிந்து) மனனம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும், பிறரால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களின் முகம் பௌர்ணமி இரவின் சந்திரன் போல் பிரகாசிக்கும். நடுத்தரமான உயரமுடையவர்களை விட சற்று கூடுதலாகவும், நெட்டையான மனிதர்களை விட சற்று குறைவானவர்களாகவும் இருந்தனர்.

தலை நடுத்தரத்தை விட சற்று பெரிதாக இருந்தது. அவர்களின் முடி சுருண்டிருந்தது. தலையில் தற்செயலாக வகிடுபடிந்துவிடுமாயின் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். இல்லையெனில் (வகிடு எடுப்பதை) பிராதனப்படுத்துவதில்லை. முடியை வளரவிட்டுருந்தால் அது காதின் சோனையைத் தாண்டிவிடுவதும் உண்டு.

மேனி ஒளிவீசிக் கொண்டிருக்கும். படர்ந்த நெற்றி, அடர்ந்த புருவம், இரு புருவங்களும் சேர்ந்திருக்காது. இரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு நரம்பிருக்கும். கோபம் வரும் போது அது எழும்பிக் கொள்ளும். அவர்களை முதன்முதலில் காண்போர் மூக்கு நீண்டதாக காண்பர். ஆனால் கவனித்துப் பார்த்தால் அதில் ஒளி வீசிக்கொண்டிருக்கும். தாடி அடர்ந்திருக்கும்.

கன்னங்கள் மிருதுவாயிருக்கும். வாய் அகன்றிருக்கும். பற்கள் இடைவெளிவிட்டவையாக இருக்கும். அவர்களின் கழுத்து வெள்ளியால் செதுக்கப்பட்ட உருவத்தைப் போல அழகாயிருக்கும். அவர்களின் அவையங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும் சதைப்பிடிப்புள்ளதாகவும் இருக்கும்.

வயிறும் நெஞ்சும் சமமானதாகவும் இருக்கும். நெஞ்சு விரிந்திருக்கும். இரண்டு தோள்புஜங்களுக்கு மத்தியில் இடைவெளி அதிகமாக இருக்கும். மூட்டுகள் உறுதிவாய்ந்தவையாக இருக்கும். ஆடைகளை அகற்றும் போது உடல் பிரகாசமாயிருக்கும். நெஞ்சுக்கும் தொப்புளுக்கும் மத்தியில் கோடுகள் போன்ற நீண்ட முடியிருக்கும். மார்பிலும், வயிற்றிலும் முடியிருக்காது.

முழங்கைகள், தோள்புஜங்கள், நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் முடியிருக்கும். இரு உள்ளங்கைகளின் மூட்டுகள் நீளமானதாக இருக்கும். உள்ளங்கை விரிந்து இருக்கும். உள்ளங்கையும், பாதமும் சதைபிடிப்புடன் இருக்கும். கை, கால், விரல்கள் பொருத்தமான அளவிலிருக்கும்.

பாதங்கள் சற்று குழிந்திருக்கும். இரு பாதங்களும் சமமாய் இருக்கும். பாதங்கள் மிருதுவாயிருப்பதால் அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லை. நடக்கும் போது முன்புறம் சாய்ந்து நடப்பார்கள். நடக்கும்போது மேடான இடத்தில் இருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் அவர்கள் நடையிருக்கும்.

யாராவது அழைத்தால் முகத்தை மட்டும் திருப்பாமல் முழுமையாக திரும்புவார்கள். அவர்கள் பார்வை பூமியை பார்த்தே இருக்கும். ஒரு சாதாரணப் பொருளைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். தன் தோழர்களை முன்னால் செல்லவிட்டு அவர்கள் பின்னால் வருவார்கள். தன்னைச் சந்திப்பவர்களுக்கு அவர்களே ஸலாம் கூறி ஆரம்பிப்பார்கள்.

ஜாபிர் இப்னு சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்களின் வாய் அகன்றதாக இருக்கும். கண்களின் வெண்மையில் செவ்வரி படர்ந்திருக்கும். குதிங்கால் சதைப் பிடிப்பில்லாததாக இருக்கும். (நூல் - ஸூனன் திர்மிதி, அஹமத், முஸ்லீம்)

ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது :  நிலா ஒளிவீசிக் கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்திருக்கக் கண்டேன். நபியவர்கள் சந்திரனை விட அழகானவர்களாக எனக்குத் தோன்றினார்கள். (நூல் - ஸூனன் திர்மிதி, தாரமீ)

அபுஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் வெள்ளியால் உருவாக்கப்பட்டவர்களைப் போல் வெண்மையாக இருப்பார்கள். அவர்களின் முடி முற்றிலும் சுருண்டைவையாகவோ, முற்றிலும் நீண்டவையாகவோ இல்லாமல் நடுத்தரமாக இருக்கும்.


Monday, February 13, 2012

காதலர் தினமும் கலாச்சார சீரழிவும் !


வருடா வருடம் இந்த பிப்ரவரி 14 ம் தேதி வந்தால் போதும், காதலர் தினம் என்ற போர்வையில் கலாச்சார சீரழிவு பல்வேறு அரங்கேற்றம் ஆகின்றது. இந்த காதலர் தினம் இன்று பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக ஆகிவிட்டது. இளைய தலைமுறைகள் இங்கிதம் இல்லாமல் இதயங்கள் ஊனம் பெரும் இருட்டு தினம். இந்த தினம் கிருத்துவ போதகர் வாலண்டைன் என்பவர் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது. இந்த தினத்தை வணிகமயமாக்குவதர்க்கு மேற்கத்திய நாடுகள் காதலர் தினமாக கொண்டாடுகின்றது. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த தினத்தில் தான் காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் இஸ்லாம் கூறும் முறையே தனி.ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் முடிக்க விரும்பினால் அந்த பெண்ணின் பொறுப்பாளரிடம் போய் பேசி மணம் முடித்துக்கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
இந்த தினத்தின் தாக்கம் மக்கள் மேல் ஏற்படுவதற்கு மீடியாக்களும் ஒரு முக்கிய காரணம். இந்த தினத்தில் காதலை ஊக்கப்படுத்தும் பல்வேறு சிறப்பு நிகழ்சிகள் தயாரித்து இளைஞர்களின் மனதில் காதல் உணர்வு என்ற பெயரில் காம உணர்வுகளை ஊக்குவிக்கின்றனர். இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் என்ற சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர். இதற்கெல்லாம் ஒரு காரணம், இந்த அசிங்கத்தை பற்றிய விழிப்புணர்வும், இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவு பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இல்லாமையே.
"விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6243)
ஆகவே இஸ்லாத்திற்கும் இந்த பாவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமணத்திற்கு முன்பு தான் மணமுடிக்கும் பெண்ணை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ரசூல்(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். முகீரத் இப்னு ஷுஃபா ரலியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?" என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்" என்று கூறினார்கள். (நூல்: நஸயீ 3183)
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர். விளைவு பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தலை குனிந்து நிற்கும் அவலம் ஏற்படுகின்றது. நமதூரிலும் இது போன்ற சம்பவங்களை நாம் கேட்டு நம் மனம் பதறியதும் உண்டு. பள்ளியில் படிக்கும் பெண்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் அந்நிய மதத்தை சார்ந்தவருடன் ஓடி போவதும், அதை சமூகம் ஒரு செய்தியாக மட்டுமே எடுத்துக்கொள்வதும் எந்த வகையிலும் நாம் இதை இலேசாக எடுத்துக்கொள்ள முடியாது.
இதற்கு ஒரு முடிவு கட்ட நமதூரில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் முன் வரவேண்டும். ஆங்காங்கே நமதூர் சிறுவர் சிறுமியர்களுக்கு அவர்களது இள வயதிலேயே தர்பியா வகுப்புகள் மற்றும் இஸ்லாமிய நெறி வகுப்புகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படவேண்டும். இந்த காதலின் தீங்கை பற்றியும் அதனால் ஏற்படும் அல்லல்கள் பற்றியும் அவர்களுக்கு இஸ்லாம் கூறும் முறையில் எடுத்துக்கூறவேண்டும்.
கற்பு என்பது புனிதமானது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. இருவரும் கற்பை பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவிடுகிறது.
"தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக!" (அல்குர்ஆன் 24:30-31)
மேற்கத்திய கலாச்சாரத்தில் இரவு பணிரெண்டு மணிக்கு காதலர்கள் ஒன்று கூடி முத்தமிடுவதும் பூச்செண்டுகளை பறிமாறுவதும் பரிசில்களை கொடுப்பதும் உல்லாசமாக ஊர் சுற்றுவதும் தனித்து நின்று உறவுகொள்வதும் மிகப்பெரிய நாகரீகம். சீ நாணங்கெட்ட கலாச்சாரம். அப்படியொரு கலாச்சாரத்தை தகர்த்து தவிடு பொடியாக்கவேண்டும். அப்படியொரு கலாச்சாரம் இந்திய காலாச்சராமும் அல்ல. இஸ்லாமிய கலாச்சாரமும் அல்ல. மாறாக விரட்டப்பட்ட ஷைத்தானின் கலாச்சாரம். இஸ்லாமிய கலாச்சாரத்தை குழி தோண்டி புதைக்கும் மேற்கத்திய கலாச்சராம்.
பெற்றோர்கள் செய்கின்ற மிகப்பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பது. நம் பிள்ளைகளின் ஒழுக்கத்தை சீர் கெடுக்கின்றது. சீரிய சிந்தனை ஓட்டத்திற்கு தடை விதிக்கின்றது. ஒரு அந்நிய ஆணும் ஒரு அந்நிய பெண்ணும் சந்தித்து பேசிக்கொள்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. அப்படியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நேரில் சந்தித்து பேசுவதானால் சமூகத்தின் கண்ணுக்கு ரொம்பவே பயப்படுவார்கள். ஆனால் இந்த செல்போன் அதற்கும் வழிவகுத்துவிடுகின்றது. மறுமுனையில் அந்நிய பெண்ணுடனோ அல்லது அந்நிய ஆணுடனோ காம உணர்சிகளை தூண்டும் விதத்தில் பேசுவது. இது செல்போனா அல்லது செக்ஸ்போனா என்று நமக்கே சந்தேகம் வரும் படி பேசி தீர்த்து விடுகிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் வாங்கிகொடுத்தால் அதை உங்கள் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி கண்காணித்து கொள்ளவேண்டும்.
ஒரு பெண்ணை காதலிக்கும் ஒரு இளைஞர் தன் அக்காவையோ அல்லது தங்கையய்யோ வேறு எவனும் காதலித்தால் முதலில் சண்டைக்கு வருகிறான். அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!
மேலும் இந்த நாளில் கல்யாணம் முடித்த கணவன் மனைவியும் "ஹாப்பி வாலண்டைன் டே" என்று கூறிக்கொள்வதும், மாப்பிள்ளை பெண் என்று பேசி வைத்தவர்களும் தங்களுக்குள் இவ்வாறு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதும் இஸ்லாமிய காலாச்சாரமே இல்லை. இவ்வாறு பரிமாறி கொள்பவர்கள் இனியாவது திருந்த வேண்டும். இப்படி பரிமாறிக்கொள்ளும் நீங்கள், உங்கள் பிள்ளைகள் இவ்வாறு காதலில் ஈடுபட்டால் அனுமதிப்பீர்களா ? நிச்சயமாக அனுமதிக்க மாட்டீர்கள். எதற்கு இந்த முனாபிக் தனம். எனவே சிந்தித்து பாருங்கள். இஸ்லாம் கூறும் வழிமுறையில் உங்களுடைய வாழ்வை அமைத்துக்கொள்ளுங்கள்.
கன்னியர்க்கு கண்ணிவெடியாகவும், காளையர்க்கு கள்ளுக்குடியாகவும், பெற்றோருக்கு பேரிடியாகவும் இருக்கும் இந்த காதலை தவிர்ப்பீர். காதலர் தினத்தை புறக்கணிப்பீர். இந்த பாவத்திலிரிந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கோருவீர். இஸ்லாம் கூறும் குடும்பத்தை அமைப்பீர். இஸ்லாமிய சமுதாயம் தழைத்திட துணைபுரிவீர்.Thursday, February 9, 2012

தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் முதலாம் பாகம் தற்போது Android சந்தையில் வெளியாகியுள்ளன


நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

 وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَِ  

(இறப்பிற்குப் பின்) அல்லாஹுவிடம் நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படும் நாளை அஞ்சுங்கள். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவரவர் தேடிக்கொண்டது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதியிளைக்கப்படமாட்டார்கள். ( அல் குர்ஆன் 2: 281)

உலகமும், உலகிலுள்ள செல்வங்களும் அழிந்த பின்னர் மறுமை நாள் ஏற்படும். தான் அடியார்கள் தன்னிடமே திரும்பிக் கொண்டுவரப்படுவார்கள்; அப்போது, அடியார்களிடம் விசாரணை செய்து அவர்கள் புரிந்த நன்மை மற்றும் தீமைக்கேற்ப நான் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான். 

குர்ஆனில்  (2: 281இறுதியாக அருள்பெற்ற வசனம் இதுதான் என அப்துலாஹ் பின் அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாக இப்னு ஜரீர்(ரஹ்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த வசனம் அருளப்பெற்ற பின்னர் ஒன்பது நாட்கள் நபி(ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். பின்னர் சனிக்கிழமையன்று கடுமையாக நோய்வாய்ப்பட்டு திங்கட்கிழமை இறந்தார்கள்.

மேற்கூறப்பட்ட வசனத்தின் சுருக்கமான அதன் விளக்கவுரை ரஹ்மத் அறக்கட்டளை மூலம் வெளியிடப்பட்ட  தஃப்சீர்  இப்னு கஸீர்(முக்தசர்) முதலாம் பாகம் தமிழாக்கத்தின் அல் குர்ஆனின் இரண்டாம் அத்தியாமான அல் பகரா வின் 281 ஆம் வசனமாகும். இவ்வசனம் அடங்கிய   தஃப்சீர்  இப்னு கஸீர்(முக்தசர்) இரண்டு அத்தியாயங்களைக் கொண்டு வெளிவந்த முதலாம் பாகம் தற்பொழுது Android Phone உபயோகிப்பவருக்காக Android சந்தையில் வெளியிட்டுள்ளார்கள். இந்நற்செய்தியை ரஹ்மத் அறக்கட்டளை அறிவித்துள்ளது.  அல்ஹம்துலில்லாஹ்! 


சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தின் வெளியீடுகள் தற்போது Android சந்தையில் வெளியாகியுள்ளன. தொடக்கமாக தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் முதலாம் பாகம் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.  இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் Apple Storeலும் கிடைக்கும் என தனது முகநூல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த சேவையை இலவசமாக கீழ்காணும் லிங்கில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

https://market.android.com/details?id=com.softcraft.quran&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5zb2Z0Y3JhZnQucXVyYW4iXQ

ரஹ்மத் அறக்கட்டளை மூலம் ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிஉத் திர்மிதீ முதல் பாகம், தஃப்சீர் இப்னு கஸீர் போன்ற இஸ்லாமிய மூலதார நூல்களின் தமிழாக்கங்கள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.