நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Thursday, August 11, 2011

நபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... 

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை)க் கேட்கும்போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்தி விட நெருங்குகிறார்கள். “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர். (68:51)

(மக்கத்துக்) காஃபிர்களோ (நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே என்று கூறுகின்றனர், (10:2)

தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர். “இவர் ஒரு சூனியக்கார பொய்யர் என்றும் காஃபிர்கள் கூறினர். (38:4)

”ஓரு பைத்தியம் பிடித்த புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா? என்றும் கேட்டனர். (37:36)

அவர்கள் (உம்மை பற்றி, அவர் ஒரு) “கவிஞர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழிப்பார்த்து இருக்கின்றோம்” என்று கூறுகிறார்களா? (52:30)

அநியாயக்காரர்கள் (மூமின்களை நோக்கி) “சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வெறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை” என்றும் கூறுகிறார்கள். (25:8)

(நினைவூட்டும்) வேதம் அருளப்பட்ட(தாகக் கூறுப)வரே! “நிச்சயமாக நீர் பைத்தியக்காரர் தாம்” என்று கூறினார்கள். (15:6)

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “இவர் (ஒரு சாதாரண) மனிதரேயன்றி வேறில்லை; உங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள். இன்னும் அவர்கள், “இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும் அல் ஹக்கு (சத்தியம்: அல்குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (34:43)

இது (அல்குர்ஆன்) பொய்யேயன்றி வேறில்லை. இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார். இன்னும் மற்ற மக்கள், கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிப் புரிந்துள்ளார்கள் என்றும் நிராகரிப்போர் கூறுகின்றனர். (25:4)

இன்னும் “அவை முன்னோர்களின் கட்டுக்கதைகளே; அவற்றை இவரே எழுதிக் கொண்டிருக்கிறார்” என்றும் கூறினர். (25:5)

இதனை (குர்ஆனை) இவர் இட்டுக்கட்டிச் சொல்கிறார் என்று கூறுகிறார்களா? (11:13)

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டப்பட்டவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள். (16:101)

(அல்குர்ஆன்) “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்”, இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பியுள்ளனர்).

(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் (கூறும்படி) உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால் உம்மைத் தம்) அவர்கள் உற்ற நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். (17:73)

http://www.readislam.net

Thursday, August 4, 2011

துன்னூன் (மீனுடையவர்).......


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN8oW8GeupVlBEsh0YLhcKGu5VpLvYI_8VB17dsgn-mhf4NOpxwLCWWtTl5yW7O34Nq08i3vGeZUHMPLtIOQFJ-T5ujJQCT-ChqlgcrA5b-rSj9bjLvtnQlk59wHXxQeI8P3oC9-wNEo4/s1600/Bismillah_2.JPG
இறைத்தூதர் யூனூஸ் (அலை) அவர்களின் வரலாறு....

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...

(இறைத்தூதர்களான ) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் திகழ்கின்றது. (அல்குர்ஆன்  12:111)

மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.  (37:139)

நபி யூனூஸ் பின் மத்தா(அலை) அவர்கள் (யோனா - jonah)  கி.மு எட்டாம் நூற்றாண்டில் இராக்கிலுள்ள நைனுவா என்னும் பகுதிக்கு நபியாக அனுப்பட்டார்கள். சிலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவருடைய சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக பல்லாண்டுகள் பாடுபட்டார்கள். அனாலும் அவரது சமூகம் அவரை நிராகரித்துவிட்டது. இதனால் மனம் வெறுத்துப் போன யூனூஸ்(அலை) அவர்கள் அல்லாஹுவின் ஆணையைப் பெறாமலேயே அந்த ஊரைவிட்டும் வெளியேறி விட்டார்கள். அல்லாஹுவின் ஆணையின்றி வெளியேறுவது குற்றம் என்பதை உணராமலேயே அங்கே பயனளிக்க தயாராக இருந்த கப்பலில் ஏறி சென்றுவிட்டார். எனவே அல்லாஹ் அவரைத் தண்டிக்க நினைத்தான். அவர் பயணித்த கப்பலை நடுக்கடலில் தடுமாற, தத்தளிக்க வைத்தான். 

இறுதியில் அக்கப்பலிலிருந்து யாரேனும் ஒருவர் இறங்கினால் மாத்திரமே மற்றவர்கள் அனைவரும் தப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே அவர்களுக்கிடையில் சீட்டு குலுக்கி போட்டனர். அதில் யூனூஸ்(அலை) அவர்கள் பெயர் வரவே, அவர் வீசி எறியப்பட்டார். அச்சமயம் அல்லாஹ் யூனூஸ்(அலை) அவர்களை விழுங்கும்படி, ஒரு மீனுக்குக் கட்டளையிட்டான். மீன் வயிற்றில் சிறைப்பிடித்தான். இதன் பிறகு தான் யூனூஸ்(அலை) அவர்கள், தான் அல்லாஹுவின் ஆணையின்றி ஊரை விட்டு வெளியேறியது மிகப்பெரிய குற்றம் என்பதை உணர்ந்தார்கள். அல்லாஹுவிடம் பாவமன்னிப்புத் தேடினார்கள். 

உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அணியாக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன் என்று பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்கள். பிறகு அல்லாஹ் அவரை மன்னித்து மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றினான். 

மீன் வயிற்றினுள் நபி யூனூஸ்(அலை)...
நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -  (37:140)
 
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).  (37:141)
 
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார் ஒரு மீன் விழுங்கிற்று.  (37:142)

மீன் வயிற்றினுள் இறைவனைத் துதித்தார்....  

 لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

இன்னும் (நினைவு கூர்வீராக); துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார் எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து "உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்" என்று பிரார்த்தித்தார்.  (21:87)

எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.  (21:88)

மீன் வயிற்றினுள் இறைவனைத் துதிசெய்திராவிடில்.....
ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -  (37:143)
 
 (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.  (37:144)
 
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியெற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.  (37:145)
 
அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.  (37:146)

நபி யூனூஸ்(அலை) அவர்களின் சமூகத்தின் மாற்றம்....
இதற்குள் நபி யூனூஸ்(அலை) அவர்களின் சமுதாய மக்கள் அல்லாஹுவின் வேதனை தங்கள் மீது வரப்போவதை உணர்தார்கள். வேதனையின் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே மனம் திருந்தி, வருந்தி அல்லாஹுவிடம் கதறி அழுது பாவமன்னிப்புத் தேடினர். இவர்களது பாவமன்னிப்பை ஏற்றுகொண்ட அல்லாஹ் அவர்களை மன்னித்து இழிவுப்படுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினான்.

தங்களுடைய ஈமான் பலனளிக்கு மாறு (நம்பிக்கை கொண்டு வேதனையிலிருந்து தப்பித்துக் கொண்ட) யூனுஸுடைய சமூகத்தாரைப்போல், மற்றோர் ஊரார் ஏன் ஈமான் கொள்ளாமல் இருக்கவில்லை? அவர்கள் (யூனுஸுடைய சமூகத்தார்) ஈமான் கொண்டதும் இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றினோம்; அன்றி, சிறிது காலம் சகம் அனுபவிக்கும் படியும் வைத்தோம்.  (10:98)


ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு நபியாக யூனூஸ்(அலை)....
நபி யூனூஸ்(அலை) அவர்களையும், அவரது சமூக மக்களையும் மன்னித்து அல்லாஹ் மீண்டும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு நபியாக யூனூஸ்(அலை) அவர்களை அனுப்பிவைத்தான்.

அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம்.  (37:147)

அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம்.  (37:148) 

மீனுடையவரைப் போன்று ஆகிவிடவேண்டாம் என்ற  இறைவனின் கட்டளை...

நபி யூனூஸ்(அலை) தனது சமூக மக்களிடம் கோபம் கொண்டு இறைவனின் அனுமதி இல்லாமலேயே ஊரைவிட்டு வெளியேறியது போன்று நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் நடந்துவிடக் கூடாது என பின்வருமாறு அறிவுறுத்துகிறான்.

ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக, மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம், அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:  (68:48)

அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.  (68:49)

ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.  (68:50)


நபி யூனூஸ்(அலை) அவர்களைப் பற்றி நபி(ஸல்) அவர்களை பின்வருமாறு கூறினார்கள்...

நான் யூனுஸ் (அலை) அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) உங்களில் எவரும் சொல்ல வேண்டாம்.   புஹாரி 3412

Wednesday, August 3, 2011

அத்தியாயம் அல் முல்க் - (அதிகாரம்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.



அத்தியாயம் : 67

மொத்த வசனங்கள் :30

அல் முல்க் - அதிகாரம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், ஆட்சி அவன் கையில் எனத் துவங்குவதால் இதற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
 
67.1. எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
 
67.2. உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத் தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
 
67.3. அவனே ஏழு வானங்களை அடுக்கடுக் காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! எதேனும் குறையைக் காண்கிறீரா?
 
67.4. இரு தடவை பார்வையைச் செலுத்து! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.
 
67.5. முதல் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம்.307 அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
 
67.6. தமது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் வேதனை உள்ளது'. (அது) கெட்ட தங்குமிடம்.
 
67.7. அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கடும் இரைச்சலைச் செவியுறுவார்கள்.
 
67.8. கோபத்தால் அது வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் 'எச்சரிக்கை செய் பவர் உங்களிடம் வரவில்லையா?' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.
 
67.9. அதற்கவர்கள் 'ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய் யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழி கேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்' எனக் கூறுவார்கள்.
 
67.10. நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகி யிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.
 
67.11. மேலும் தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். அப்போது நரகவாசிகளுக்குக் கேடு தான்.
 
67.12. தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
 
67.13. உங்கள் கூற்றை இரகசியமாக்குங் கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.
 
67.14. படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
 
67.15. அவனே பூமியை (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங் கள்! அவனது உணவை உண்ணுங்கள்! அவனிடமே மீளுதல் உள்ளது.
 
67.16. வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்.
 
67.17. அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அப்போது அறிந்து கொள்வீர்கள்.
 
67.18. அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். அப்போது எனது பதிலடி எவ்வாறு இருந்தது?
 
67.19. அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை.260 அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.
 
67.20. அளவற்ற அருளாளனையன்றி உங்களுக்கு உதவி செய்யும் உங்களுக்குரிய படையினர் உள்ளனரா? (அவனை) மறுப்போர் ஏமாற்றத்திலேயே உள்ளனர்.
 
67.21. அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும், வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.
 
67.22. முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர் வழி பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவனா?
 
67.23. அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளை யும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக!
 
67.24. அவனே பூமியில் உங்களைப் பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்றும் கூறுவீராக!
 
67.25. 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?' எனக் கேட்கின்றனர்.
 
67.26. 'அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே' என (முஹம்மதே) கூறுவீராக!
 
67.27. அதை அருகில் அவர்கள் பார்க்கும் போது (ஏக இறைவனை) மறுத்தோரின் முகங்கள் கெட்டு விடும். 'நீங்கள் தேடிக் கொண்டிருந்தது இதுவே' எனக் கூறப்படும்.
 
67.28. 'என்னையும், என்னுடன் உள்ளவர் களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால்  துன்புறுத் தும் வேதனையிலிருந்து (ஏக இறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்' என்றும் கூறுவீராக!
 
67.29. அவனே அளவற்ற அருளாளன். அவனை நம்பினோம். அவனையே சார்ந்திருக்கிறோம். தெளிவான வழி கேட்டில் உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்' எனக் கூறுவீராக!
 
67.30. 'உங்கள் தண்ணீர் வற்றி விட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!' எனக் கேட்பீராக!