நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Friday, January 29, 2010

ஸலவாத் கூறுவோம்

إِنَّ اللَّهَ وَمَلَـئِكَـتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِىِّ يأَيُّهَا الَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيْهِ وَسَلِّمُواْ تَسْلِيماً

இந்த நபியின் மீத அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் 33:56)

"ஸலவாத்" என்று சில துஆக்களை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தார்கள். அவை அனைத்துமே நபி(ஸல்) அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் விதமாகவே அமைந்துள்ளன. "ஸலவாத்" களில் மிகவும் உயர்ந்த "அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத்த" என்று தொடங்கும் ஸலவாத்துக்கு உரிய பொருளைப் பார்ப்போம்.

"யா அல்லாஹ்! இப்ராஹிம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீஅருள் புரிந்ததைப் போல், முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிவாயாக" அதாவது ஸலவாத் சொல்வது என்றால் நாம் நபி(ஸல்), அவர்களுக்காக துஆ செய்கிறோம் என்பது பொருள்.

ஸலவாத் ஏன் கூற வேண்டும்?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழி காட்டுதலை நமக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். தனக்கு, வல்ல அல்லாஹ்வால் தரப்பட்ட அந்தப் பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கடுகளவு கூட்டவும், குறைவுமின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள். நரக நெருப்பிலிருந்து நம்மை விடுதலை செய்யும் சரியான வழியை நமக்குக் காட்டினார்கள். மக்கள் நேர்வழி அடைய வேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும், தன் சமுதாயம் நேர்வழி அடைய வேண்டுமென்பதற்காக அத்தனையையும் தாங்கிக் கொண்டார்கள். நமது தாய், தந்தை மற்றும் உலக மக்கள் அனைவரையும் விட அவர்கள் மீது அன்புவைப்பது நம்மீது கடமையாகும். அதில் ஒரு பகுதியாகவே நாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். அதாவது ஸலவாத் சொல்கிறோம். ஆம் ஸலவாத் என்றாலே துஆ என்றுதான் பொருள்.

"ஸலவாத் பொருள்"

நம்மில் சிலர் ஸலவாத் என்றால், "நபிகள் நாயகத்திடம் நாம் எதனையோ கேட்கிறோம்" என்று கருதிக் கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல, மாறாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக ஸலவாத்தில் நாம்தான் துஆ செய்கிறோம். உதாரணத்துக்கு நாம் மேலே எழுதியுள்ள ஸலவாத்தின் பொருளை மீண்டும் பார்ப்போம்.

اللَّهُمَّ صَلَّ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ اللَّهُمَّ بَاَرِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍكَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهيمَ وَعَلَى آلِ إِبْرَاهيمَ إِنَّك حَميدٌ مَجيدٌ

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல், முஹம்மது (ஸல்) அவர்களின் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார்மீதும் நீ அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற்குரியவனாகவும் இருக்கிறாய்.

இறைவா இப்றாஹீம் (அலை) அவர்களுக்கும், இப்றாஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்ததுபோல் முஹம்மத் صلى(ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரிவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரழி) நூல்: புகாரி

இதுதான் அந்த ஸலவாத்தின் உண்மைப்பொருள். இதில் நாம் தான் அல்லாஹ்வின் திருத்தூதருக்காக துஆசெய்கிறோம். நாம் அவர்களிடம் எந்த ஒன்றையும் கேட்கவில்லை. இது போல் நாம் சொல்கின்ற எந்த ஸலவாத்துக்கும் "நபிகளுக்காக துஆ செய்வது" என்பதே பொருள். நமக்கென்ன தகுதி உண்டு? அல்லாஹ்வின் படைப்பினங்களில் தலை சிறந்து விளங்குகின்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு "நாம் துஆ செய்து என்ன ஏற்பட்டுவிடும்" என்ற ஐயம் பலருக்கு ஏற்படலாம்.

"துஆ" என்பது உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்களுக்காக செய்ய வேண்டியது" என்ற தவறான எண்ணமே இந்த ஐயத்தின் அடிப்படை. உண்மையில் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவரும் உயர்ந்தவருக்காக துஆ செய்யலாம். உயர்ந்தவரும் தாழ்ந்தவருக்கு துஆ செய்யலாம். அதற்குரிய ஆதாரங்களை பார்ப்போம்.

"சுவனத்தில் வஸீலா என்ற பதவி ஒன்று உண்டு. அதை ஒரே ஒரு அடியாருக்கு அல்லாஹ் வழங்க இருக்கின்றான். அந்தப் பதவியை அடையும் ஒரு நபராக நான் இருக்க விரும்புகின்றேன்" எனவே எனக்காக வஸீலா என்ற பதவியை அல்லாஹ்விடம் கேளுங்கள்." அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம். என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிகவும் சாதாரண நிலையில் உள்ள நம்மிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றார்கள்.

இன்னொருமுறை உமர்(ரழி) அவர்கள் உம்ரா செய்ய மக்கா சென்ற போது "உமது துஆவில் நம்மை மறந்துவிடாதீர்!" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உமர்(ரழி) அவர்களிடம் தனக்காக துஆ செய்யும்படி கேட்கின்றனர்.

"அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்") என்று உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி ஒருவருக்கொருவர் ஸலாம் கூறிக்கொள்வதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வெகுவாக வலியுறுத்தினர். அதற்கு பதிலாக "வஅலைக்குமுஸ்ஸலாம்" என்று பிரதி துஆ சொல்வதைக் கடமையாகவும் ஆக்கினர்.

அதுபோல் ஸலவாத் கூறுவதன் மூலம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்காக நாம் துஆ செய்கிறோம். எனினும், "நமது இந்த துஆவினால் தான் நபிகள் நாயகத்தின் அந்தஸ்து உயரப் போகின்றது?" என்று எவரும் தவறாக எண்ணலாகாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை மிக உயர்வான நிலையிலேயே வைத்துள்ளான். மாறாக, அல்லாஹ்வின் தூதரை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதற்காக நமக்கே அல்லாஹ் பேரருள் புரிகின்றான். அது பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ள பொன் மொழிகளைப் பார்ப்போம்.

"யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள்புரிகிறான்" என்று நபி(ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) நூல் : முஸ்லிம்.

"என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும்" என்றும் நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல் : அபூதாவூது.

இந்த நபிமொழி நமக்கு ஒரு உண்மையைத் தெளிவாக்குகின்றது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்கிறேன் என்று திருவிழாக்கள் கொண்டாடுவதோ, பாடல்கள் பாடிக் கொண்டிருப்பதோ நபி(ஸல்) அவர்களின் மீது நாம் கொண்ட அன்புக்கு சரியான அடையாளமாகாது. மாறாக அவர்களுக்காக அல்லாஹ்விடம் ஸலவாத் எனும் துஆவைச் செய்வதுதான் உண்மையான அன்பாகும். என்பதை ஹதீஸ் மூலம் நாம் உணரலாம்.

"உங்கள் ஸலவாத் என்னை வந்தடையும்" என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியதிலிருந்து, ஸலவாத்தைத் தவிர மற்ற பாடல்கள் கொண்டாட்டங்கள் அவர்களை அடையாது என்றும் விளங்க முடியும்.

என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவன் நாசமாகட்டும்" என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : திர்மிதீ

"என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன்தான் கஞ்சனாவான்". என்பதும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியாகும். அறிவிப்பவர் : அலி(ரழி) நூல் : திர்மிதீ

"யாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் (அதாவது துஆ செய்தால்) அவன் அவ்வாறு செய்யும் போதெல்லாம் மலக்குகள் (வானவர்கள்) அவனுக்காகத் துஆ செய்கிறார்கள்" என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர் : ஆமிர் இப்னு வபிஆ (ரழி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா.

அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன்" அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் அவுபு(ரழி) நூல் : அஹ்மத்

"உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, சில நபித் தொழர்கள் "நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும் போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்?" என்று கேட்டனர். எங்கள் நபி(ஸல்) அவர்கள் "நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். அதாவது நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது) என்றனர். அறிவிப்பவர் : அவ்ஸ் இப்னு அவ்ஹ்(ரழி) நூல்கள் : அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா

இந்த ஹதீஸிற்குச் சிலர்தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுக்க முற்பட்டதால் இங்கெ சில விளக்கங்களைச் சொல்வது மிகவும் அவசியமாகிவிட்டது.

"நபிமார்களின் உடல்கள் மக்கி விடாது" என்ற சொற்றொடர்களிலிருந்து சிலர் அவ்லியாக்களின் உடல்களையும் மண் மக்கிவிடச் செய்யாது என்று தவறான விளக்கங்கள் கூறத் துவங்கி விட்டனர். அது எவ்வளவு தவறான விளக்கம் என்பது அறிவுடையோருக்கு நன்றாகவே தெரியும். ஸஹாபாக்களில் சிலர்," நீங்கள் மக்கிவிடும் போது எப்படி எங்கள் ஸலவாத் உங்களுக்கு எத்தி வைக்கப்படும்?" என்று கேட்டதற்குப் பதிலாகவே இதனை நபி(ஸல்) கூறினார்கள். இந்த இடத்தில் ஒன்றை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்!

அல்லாஹ்வின் நேசர்களிலேயே நபிமார்களுக்கு அடுத்த இடம் ஸஹாபாக்களுக்குத் தான் உண்டு. அவ்லியாக்களின் உடல்கள் மக்கி விடாது என்றால் ஸஹாபாக்களின் உடல்கள் தான் அதில் முதலிடம் பெறும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபாக்களை நோக்கி "நபிமார்களையும், ஸஹாபாக்களாகிய உங்களையும் மண் திண்ணாது" என்று கூறாமல், "நபிமார்கள்" என்று மட்டும் சொல்கிறார்கள். இதிலிருந்து ஸஹாபாக்களுக்கே இந்த ஊத்திரவாதம் இல்லை என்பது தெளிவு. ஸஹாபாக்களுக்கு இல்லாத சிறப்பு அவர்களுக்குப் பின்னர் தோன்றியவர்களுக்கு இருக்க முடியாது என்று தெரிய முடிகின்றது.

எனவே நபிமார்களின் உடல்களை மட்டும் தான் மக்கிப் போகாமலிருக்கும். மற்றவர்களின் உடல்களை அல்லாஹ் நாடினால் அவன் பாதுகாக்கலாம்: பாதுகாக்காமலிருக்கலாம். அல்லாஹ் நாடினால் பிர்அவ்ன் போன்ற கொடியவனின் உடலையும் கூடப் பாதுபாப்பான்.

ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டிட அனுப்பப்பட்ட நபிமார்கள், பல்வேறு சோதனைகளைத் தாங்கி, ஒரு சில மக்களை நேர்வழியின்பால் கொண்டு வந்தனர். அவ்வாறு நேர்வழி அடைந்த மக்கள், தாங்கள் நேர்வழி அடையக் காரணமாக இருந்த நபிமார்களின் மீது பேரன்பு கொண்டிருந்தனர்.

அந்த அன்பு நாளடைவில் பக்தியாக உருமாறியது. தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களாக அந்த நபிமார்கள் சித்தரிக்கப்பட்டனர். அதன் காரணமாய்த் தங்கள் தேவைகளை அந்தக் ‘காலம் சென்ற நபிமார்களிடமே’ கேட்கத் தலைப்பட்டனர். சுருங்கச் சொல்வதென்றால் "அந்த நபிமார்கள் எந்த லட்சியத்திற்குப் பாடுபட்டனரோ அந்த இலட்சியத்தை அதே நபிமார்களின் பெயரால் அழித்து விட்டனர்."

உதாரணத்திற்குக் கிறித்தவர்கள் ஈஸா நபியை வரம்புமீறி உயர்த்தியதைச் சொல்லலாம். இதைப்பற்றித்தான் நபி(ஸல்) சொன்னார்கள்.

யூத, கிறித்தவர்களை அல்லாஹ் சபிக்கட்டும்! (ஏனெனில்) அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். ஆதார நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, தாரமீ, முஅத்தா, அஹ்மது.

யூத கிறித்தவ சமுதாயம் அடைந்த நிலைகளை தன் சமுதாயம் அடையக்கூடாது என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் தனக்குத் தன் சமுதாயத்தினர், ஸலவாத் கூற வேண்டும் என்று கற்றுத்தந்தனர். மனித இனத்திலேயே மிகவும் உயர்ந்த மதிப்புடைய நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருள்புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி, சொல்லிச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் தேவைகளைக் கேட்கும்படியோ, தன் பொருட்டால் கேட்கும்படியோ, சொல்லாமல் தனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யும்படி சொல்லி இருக்கிறார்கள் என்றால், நபி(ஸல்) அவர்களைவிட மதிப்பில் மிகவும் குறைந்த மற்றவர்களிடம் நம் தேவையைக் கேட்பது எப்படி நியாயமாகும்?

நபி(ஸல்) அவர்களை விட மற்றவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் நெருங்கியவர்கள் என்று எண்ணுவது இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது அல்லவா? தங்களின் துன்ப நேரத்தில் இறந்துவிட்டவர்களை அழைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களைவிட மற்றவர்களை உயர்வாக மதிக்கிறார்கள் என்றுதானே பொருள்?

இன்றைக்கு நல்லவர்களின் பெயரால் நடந்து கொண்டிருக்கின்ற கொண்டாட்டங்களும், இணைவைத்தலுக்கும் "ஸலவாத்" என்பதே தக்க மறுப்பாக அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்களை மதிக்கும் போதும் அன்பு செலுத்தும்போதும் அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் போது மற்றவர்களை மதிப்பதாக எண்ணிக் கொண்டு அவர்களிடம் முறையிடுதலும் தேவைகளைக் கேட்டலும் எப்படி நியாயமாகும். என்று மக்கள் சிந்தித்தாலே போதும். இந்த சமுதாயம் சீர் பெற்றுவிடும்.

ஸலவாத்தை இந்த அளவு நபி(ஸல்) வலியுறுத்திச் சொன்னதின் நோக்கத்தை இதன் மூலம் உணரலாம். ஏனைய நபிமார்களின் பெயரால் ஏற்பட்ட தவறான உடன்படிக்கைகள் தன் பெயரால் ஏற்படக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தன்னை மதிக்கின்ற முறையையும் சொல்லித் தந்தார்கள்.

ஒரு முஸ்லிம், தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறலாம். அதற்கு நன்மையும் உண்டு. இதில் எந்தவித கருத்து வேறுபாடுமில்லை. ஆனால் "இப்படித் தான் செய்ய வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்ற காரியங்களை நாம் அப்படியே செய்ய வேண்டும். அதில் எந்தவித மாறுதலும் செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை.

உதாரணமாக தொழுகையில் ‘ருகூவு’ செய்யும் போதும், ‘சுஜுத்’ செய்யும் போதும் "இதைத் தான் ஓத வேண்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘ஸலவாத்’ ஓதுவது சிறந்தது தானே என்று எண்ணிக் கொண்டு ருகூவில் - சுஜுதில் ஒருவன் ‘ஸலவாத்’ ஓதினால், நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அவன் மாறுதலைச் செய்கின்ற காரணத்தினால், அவன் குற்றவாளியாக ஆகின்றான்.

நபி(ஸல்) அவர்கள் "இதைத்தான் இந்த நேரத்தில் ஓத வேண்டும்" என்று காட்டித் தந்திருக்கும் காரியங்களில், மாறுதலோ கூடுதல் குறைவோ செய்ய எவருக்கும் அனுமதி இல்லை. இந்த அடிப்படையை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு உதாரணம் பார்ப்போம்! தொழுகைக்கு மக்களை அழைப்பதற்காக, நபி(ஸல்) அவர்கள் ‘பாங்கு’ சொல்வதை நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். ‘அல்லாஹு அக்பர்’ என்று துவங்கி ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று முடிக்க வேண்டும். இது தான் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாங்கு. இன்று சிலர் நன்மை என்று கருதிக் கொண்டு, பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ‘பாங்கு’ என்று ஒரு முறையை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கும் போது. அதில் எந்த ஒன்றையும் அதிகமாக்குவது எவ்விதத்திலும் அனுமதிக்கப்படாததாகும். பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ சொல்வதும், ருகூவில் ‘ஸலவாத்’ சொல்வதும் ஒன்று தான்.

பாங்குக்கு முன்னால் ‘ஸலவாத்’ கூற வேண்டும் என்று இருக்குமானால் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருப்பார்கள். நன்மை செய்வதில் நம்மை விட அதிக ஆர்வம் கொண்டிருந்த நபித் தோழாகள் அதனை செய்திருப்பார்கள். ஆனால் நபியவர்களும் நமக்கு அவ்வாறு சொல்லித் தரவில்லை. நபித் தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை.

இந்தச் செயலை அறிஞர்கள் ஆட்சேபணை செய்யும் போது, பாமர மக்கள் ஸலவாத்தையே மறுப்பதாக தவறாக எண்ணிக் கொள்கின்றனர். ஒரு சில விஷமிகள் மக்கள் மத்தியில் இப்படிப்பட்ட பிரச்சாரத்தை முடுக்கி விடுகின்றனர். ஸலவாத் அதிகமாக ஓத வேண்டும். அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட எந்த அமலிலும், ஸலவாத் உட்பட எதனையும் அதிகப்படுத்தக் கூடாது. இதை இன்னும் தெளிவாகப் பார்ப்போம்.

‘ஸலவாத்’ ஓதுவதை விட குர்ஆன் ஓதுவது அதிக நன்மை தரக்கூடியது என்பதில் அறிஞர்களுக்கிடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் கிடையாது. ஒருவன் ‘பாங்கு’ சொல்வதற்கு முன்னால் ‘அலம்தர கைப’ என்ற சூராவை ஓதிவிட்டு பாங்கைத் துவக்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். மறுநாள் இன்னொருவன் பாங்கு சொல்வதற்கு முன்னால் ‘யாஸீன்’ என்ற சூராவை ஓதுகிறான் என்று வைத்துக் கொள்வோம். நாம் நிச்சயமாக அதை ஆட்சேபனை செய்வோம்! "ஸலவாத்தை விட சிறந்த குர்ஆன் வசனங்களைத் தானே நான் ஒதுகிறேன்" என்று அவன் கூறினால் நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? பாங்குக்கு முன்னால் குர்ஆன் ஓதுவதை எந்த அடிப்படையில் தவறு என்று நாம் ஆட்சேபணை செய்தோமோ. அது ‘ஸலவாத்’ பிரச்சனைக்கு பொருந்தாதா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பாங்கு ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று முடிகின்றது, ஒருவன் இப்படி யோசிக்கிறான். ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்பது கலிமாவின் ஒரு பகுதி தான், இன்னொரு பகுதி "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்’ அதைக் காணோம் என்று கருதிக் கொண்டு பாங்கை முடிக்கும்போது "முஹம்மதுர் ரஹுலுல்லாஹ்’ என்று முடித்தால் எவராவது ஏற்க முடியுமா? அவன் சொன்ன வார்த்தை உண்மையான, நன்மையான வார்த்தை என்பதற்காக நாம் அங்கீகரிக்க மாட்டோம். பாங்கின் கடைசியில் நல்ல ஒரு வார்த்தையை அதிகப்படுத்துவது எப்படித் தவறு என்று நாம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வாறே பாங்கு சொல்வதற்கு முன்னாலும் எதையும் அதிகமாக்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாங்குக்கு முன்னால் ஸலவாத் சொல்வது ஆதாரமற்றது என்று நாம் சொல்லும் போதும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தவிர நாமாக உருவாக்கிக் கொண்ட ‘பித்அத்’ தான ஸலவாத்களை சொல்லக் கூடாது என்று நாம் கூறும் போதும், நாம் ஸலவாத்தையே மறுப்பதாக நம்மீது அவதூறு பரப்பப்படுகின்றது . நாம், அவர்கள் சொல்லித் தந்த முறைப்படி சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாகவே சொல்கிறோம். அல்லாஹ் நம் அனைவரையும் உண்மையை உள்ளபடி புரிந்து கொண்டவர்களாக ஆக்குவானாக - ஆமீன்.

Saturday, January 16, 2010

இஸ்லாத்தில் பித்அத்(புதிது) என்றால் என்ன?

மனித குலத்திற்கு வாழ்வியலின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுகின்ற இஸ்லாமிய சன் மார்க்கம் இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட உயரிய நன்மார்க்கமாகும். இறுதி நபி நமது இறைத் தூதர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் அதனை பரிபூரணப் படுத்திவிட்டான். நபிகளார் (ஸல்) அவர்கள் தமது தூதுத்துவத்தை முழுமைப்படுத்தி இஸ்லாமிய சன்மார்க்கத்தை முழுமைப்படுத்தி வைத்துவிட்டார்கள். நபிகளின் வாழ்வும், வாக்கும், திருமறை குர்ஆனும் அதனை ஊர்ஜிதம் செய்கின்றது. அல்லாஹ் தன் திருமறையில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்:

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நான் நிறைவாக்கி விட்டேன். எனது அருட்கொடைகளை நான் உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன். இஸ்லாமிய சன்மார்க்கத்தை உங்களுக்குரிய வாழ்க்கை நெறியாக நான் அங்கீகரித்துக் கொண்டு விட்டேன். (5 : 3)

இறைமார்க்கம் இஸ்லாம் இவ்வாறு முழுமை படுத்தப்பட்டிருந்த போதிலும், நபிகளாரிடத்தில் அழ கிய முன்மாதிரி இருக்கிறது, அவர்களையே பின்பற்ற வேண்டும் என திருமறையும், நபியின் வாழ் வும் உறுதியாக வலியுறுத்திய போதிலும் பிற்காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தினர் சிலர் இஸ்லாத் தினுள் பலவிதமான புதுப்புது கொள்கைகளையும் வழிபாடுகளையும் புகுத்தினர். மற்றும் சிலர் தாம் வாழ்ந்த சூழல், நாடு, மொழி, இனம் போன்றவற்றில் ஊறிக் கிடந்த மத, கலாச்சார கொள்கைகளை ஒட்டிய சில பழக்க வழக்கங்களையும், பிற மதங்களின் செயற்பாடுகளையும் மார்க்கத்தின் பெயரால் பக்தி பரவசத்துடன் கடைப்பிடிக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு உருவானது தான் பித்அத் ஆகும்.

மார்க்கத்தில் இல்லாத, புதிய நூதனச் செயல்கள், அனுஷ;டானங்கள் அனைத்துமே பித்அத் என வழங்கப்படுகிறது. எனவே புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் பித்அத் எனும் நூத னச் செயல்களாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் கற்றுத்தராத ஒன்றை, கட்டளையிடாத வற்றை முன்னோர்கள், பரம்பரையினர் செய்தார்கள், செய்கின்றார்கள் என்ற ஒரே காரணத்தினால் மார்க்கத்தின் ஒரு அங்கமாக நினைத்து செயல் படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு விடயமுமாகும். அத்தோடு அதற்கு மறுமையில் தண்டனையை யும் அனுபவிக்க வேண்டிவரும்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் வழி கேடுகளாகும்|. (புகாரி).

மேலும் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : யார் நம்முடைய இந்த மார்க்க விடயத்தில் அதில் இல்லாத ஒன்றைப் புதிதாக எவரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப் பட்டு விடும்| (முஸ்லிம்).

மேலும் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களைத் தண்ணீர் அருந்த விடாமல் மலக்குமார்கள் இழுத்துச் சென்று விடுவார்கள்|. (புகாரி)

யாராவது ஒருவர் அவ்வாறான நூதன செயல்களை அங்கீகரிப்பாரேயானால் மார்க்கம் பூர்த்தியாக்கப்படவில்லை என்ற முடிவுக்கோ, நபியவர்கள் தனக்கிட்ட கட்டளையை சரிவரப் பூர்த்தி செய்யாமல் எதனையோ விட்டு விட்டார்கள் என்ற முடிவுக்கோ அல்லது அன்னார் தனக்குக் கிடைத்த மார்க்கத்தை சம்பூர்ணமாக மக்களுக்குப் போதிக்காமல் விட்டுவிட்டார்கள் என்ற முடிவுக்கோ அவர் வந்து விட்டார் என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது. ஆனால் அன்னாரின் வாழ்நாளிலேயே அல்லாஹ் மார்க்கத்தைப் பூர்த்தி செய்து விட்டதாக ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டுள்ள அல்-குர்ஆனின் இறை வசனம் சாட்சி பகர்கின்றது. இக்குர்ஆன் வசனம் நபி (ஸல்) அவர்கள் தனது ஹஜ்ஜில் அறஃபாவில் இருக்கும்போது அருளப்பட்டதாகும்.

இவ்வாறு மார்க்கத்தில் விளையாடிய முன்னர் வாழ்ந்த யூத-கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை அல்குர்ஆன் பல இடங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் அதன் கேடுகளைக் கடுமையாக எச்சரிக்கின்றது. எனவே நாமும் மார்க்கத்தில் இவ்வாறான புதிய செயல்கள், பழக்க வழக்கங்கள் உருவாக்குவதை விட்டும் முற்றிலும் விலகி இருக்க வேண்டும்.

மேலும் நாம் அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் வைத்திருக்கும் அன்பிற்கு அடையாளமே இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவதும், அல்லாஹ்வுக்கும் ரஸூலுக்கும் மாற்றம் செய்யாமலிருப்பதுமாகும். இதனைத் திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது:

(நபியே! மனிதர்களிடம்) நீர் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களை அவன் உங்களுக்காக மன்னித்து விடுவான். (3 : 31)

அல்லாஹ்வும் ரஸூலும் வணக்க வழிபாடுகள் நற்கிரியைகள் என எதனைக் கற்றுத் தந்துள்ளார்களோ அவ்வாறே சற்றும் பிசகாமல் புரிந்து அவற்றிற்கான பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்ள கருணைமிகு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!

நம் சமூகத்திலுள்ள சில பித்அத்துகள்

இஸ்லாம் மார்க்கம் அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்வால் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் மனித இனத்தின் இரட்சிப்புக்காக அருளப்பட்டது. அந்த இறை மார்க்கம் இஸ்லாம் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்திலேயே முழுமை பெற்று விட்டது என்று அல்குர்ஆனும் அன்னாரது வாக்கும் வாழ்வும் தெளிவான ஆதாரமாக இருக்கும்போது, மக்கள் தம் கருத்துக்களையும் செயல்களையும், பிற மத கோட்பாடுகளையும், கலாச்சாரங்களையும், இஸ்லாத்தில் நுழைத்தும், திணித்தும் செயல்படுகின்றனர். இவை நம் சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற அனுமதிக்க முடியாத பித்அத்துக்களாகும். அவற்றில் சில:

ரஜபும்,ஷஃபானும்

சிலர் ரஜப் மாதத்தின் 27ம் இரவை மிஃராஜ் தின இரவு எனக்கருதி பலவித வணக்க வழிபாடுகளில் ஹதீஸிலோ எவ்வித ஆதாரமும் இல்லை. அத்தோடு நபியவர்களோ மற்றும் அன்னார் வழிவந்த ஸஹாபாக்களோ அவ்வாறான இரவு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு வணக்க வழிபாடுகளில்

அதேபோல் ஷஃபான் மாதம் 14-15ம் தினங்கள் பராஅத் தினம் என்று கருதி பலவிதமான வணக்க வழி பாடுகளிலும், பாவமன்னிப்புத் தேடுவதிலும் மஃரிப் தொழுகைக்கும் இஷh தொழுகைக்கும் இடையில் பாவமன்னிப்புத் தேடுகின்றவர்களாகும்

தெளிவான இவ்வேதத்தின்மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம்||. (44 : 1-2)

மேலும் குர்ஆன் தெளிவாக இயம்புகின்றது:

அதில் மலக்குகளும் (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றன. (97 : 4)

மீலாத் விழா

ரபீயுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டாலே அது நபியவர்கள் பிறந்த மாதம் என்று கூறிக்கொண்டு விழாக் கோலம் பூண்டு விடுகின்றனர். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா என்று அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்து பார்ப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் முக்கிய கடமையாகும்.

நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்களுக்குப்பின் வாழ்ந்த தாபி இஸ்லாத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவர்களாகவும் இருந்தனர். நபியவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது நன்மை பயக்கும் என்றோ அல்லது நன்மையான காரியம் என்றோ இருக்குமானால் அவர்கள் பிரமாண்டமான பல விழாக்கள் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்களோ நபியவர்கள் சம்பந்தமாக எந்த விழாவையும் கொண்டாட வில்லை.

கிறிஸ்தவர்கள் நபி ஈஸா அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதால் நாமும் நமது தலைவர் விழா வைக் கொண்டாடலாமே என்ற எண்ணத்துடன் நம் சமூகத்தினரும் இவ்வாறு பலவிதமான வழிபாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாட்டுக் கச்சேரிகள் போன்ற நிகழ்ச்சிகளுடன் கொண்டாட ஆரம்பித்திருக்கின் றனர். அவற்றில் சில பள்ளிவாசல்களிலேயே மார்க்கம் என்ற பெயரில் அரங்கேறுகின்றன. அவற்றில் அதிகமானவை அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத இணைவைக்கக் கூடிய விடயங்களும் நடைபெறுகின்றன. ஆனால் நபியவர்களோ இவற்றையெல்லாம் முட்டை கட்டிவிடும் விதமாக பிற சமயக் கலாசாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன்| என எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபு-தாவூத்).

மீலாது விழாக் கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லாவிட்டாலும் நபியவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக விழாக் கொண்டாடலாம் என சிலர் காரணம் கூறுவர். வெளிப்படையாக இது நல்ல காரி யமாகத் தெரிந்தாலும் இங்கு மார்க்கத்திற்கு முரணான செயல்களும், அனாச்சாரங்களுமே அதிகம் உள்ளன. ஆகவேநபியவர்கள் அனுமதிக்காத மீலாத் விழாவும் முற்றிலும் மார்க்கத்திற்கு அப்பாற்பட்ட செயலாகும்.

மற்றைய நிகழ்ச்சிகள்

அதே போல் ஸஃபர் மாதம் பீடை நிறைந்த மாதம் என்றும் மக்கள் மத்தியில் ஒரு தப்பான அபிப்பிராயம் இருந்து வருகின்றது. நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: தொற்று நோய், சகுனம், ஆந்தை அலறலின் கேடு, ஸஃபர் கேடு போன்றன இஸ்லாத்தில் இல்லை| (புகாரி, முஸ்லிம்)

இந்த மாதம் பீடை பிடித்த மாதம் என்று அனேகர் அம்மாதத்தில் பிரயாணங்கள் செய்தல், பலன் கிடைக் காது என்றும் மேலும் இவ்வுலக, மறுவுலக காரியங்களைச் செய்வதிலும் ஒதுங்கி விடுகின்றனர். இவையனைத் தும் ஆதாரமற்ற எண்ணங்களாகும். ஷஸஃபர் மாதம் அல்லது அது அல்லாத ஒரு காலத்தைக் கொண்டு அது பீடை பிடித்தது என்று கூறுவது தப்பாகும். காலங்கள் எல்லாவற்றையும் அல்லாஹ்தான் படைத்தான். அந்தக் காலங்களில் ஆதமுடைய மகனின் காரியங்கள் நிகழ்கின்றது. ஒரு முஃமின் தன்னை அல்லாஹ்வுக்கு வழிபடுவதில்

ஆகவே இவ்வாறானதும் மற்றும் நம் மத்தியில் ஊடுறுவியுள்ள மற்றும் பித்அத்களையும் தவிர்ந்து நம் அமல்களை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்வதற்கு முயலுவோமாக!

நன்றி tamilislam.com

இறுதிநாள் நெருங்குகிறது

உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :- உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்' என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது...

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது - இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது (99 : 1,2)

பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது, (56:5)

வானம் பிளந்து விடும்போது (84:1)

வானம் பிளந்து விடும்போது - நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, கப்றுகள் திறக்கப்படும் போது, (82: 1-4)

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது (81:1)

இவ்வாறு இறைவன் திருக்குர்ஆனில் உலகின் அழிவைப் பற்றி முன்னறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகின் அழிவைப் பற்றிக் கூறும் பொழுது...

''நானும் இறுதி நாளும் இப்படி இணைத்து அனுப்பட்டிருக்கிறோம்'' என்று தன் இரு விரல்களையும் சேர்த்துப் பிடித்துக் காட்டினார்கள்.(புகாரி)

உலகம் அழிவை நெருங்கும் போது என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்று 1425 வருடங்களுக்கு முன்னரே இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் முன்னறிவிப்பு செய்துவிட்டான். அந்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றாக இந்த காலகட்டத்தில் அப்படியே பொருந்தி வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

இதோ அம்முன்னிவிப்புகளில் ஒருசில...

'காலம் சுருங்கி விடும்' எந்தளவுக்கென்றால் 'ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும், ஒரு நாள்; ஒரு மணிநேரம் போல் ஆகிவிடும், ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல் ஆகிவிடும்' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அரபுப் பிரதேசம் வளமே இல்லாமல் வெறும் பாலைவனமாக காட்சியளித்தது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''ஒரு காலம் வரும், இந்த அரபுப் பிரதேசம் செல்வச் செழிப்பாக, சோலையாக மாறும் வரை யுக முடிவுநாள் வராது'' (முஸ்லிம் -157)

விபச்சாரம் விவசாயமாய் நடக்கும். எந்த அளவுக்கு என்றால் பெண்கள் நடுவீதிகளில் நின்று விபச்சாரம் புரிவர். விபச்சாரத்தின் பக்கம் பகிரங்கமாக மற்றவர்களை அழைப்பாள். எவரும் அதனை ஆட்சேபிக்க மாட்டார்கள். அக்காலத்தில் நல்லவன் யாரெனில், இச்செயலை கொஞ்கம் மறைத்து செய்யக் கூடாதா? என்று சொல்பவன்;தான் அப்போது நல்லவன். (புஹாரி 5577, 5580) (மும்பையில் மட்டும் 12000க்கும் மேற்பட்ட விபச்சார விடுதிகள் உள்ளன)

தகாத காரியங்களில் (விபச்சாரத்தில்)

(இந்த நவீன யுகத்தில் ''எயிட்ஸ்'' என்ற உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டதை பார்க்கிறோம்.)

ஒரு காலம் வரும் ''மது அருந்துவது அதிகமாகிவிடும். தாறுமாறாக அதிகமாகும். அது இல்லாமல் இருக்கமாட்டார்கள்''. (புஹாரி : 5581, 5231)

என்னுடைய சமுதாயத்தில் மதுவுக்கு மாற்று பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அபூதாவூத்)

அருகதையற்ற கெட்டவர்கள் தலைமைப் பதவியில் இருப்பார்கள். அநியாயக்கார அரசனை மக்கள் ஏற்றிப் போற்றுவர்.(புகாரி)

(இந்த இழிவான நிலையை குக்கிராமங்கள் முதல் வல்லரசு நாடுகள் வரை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.)

ஆண்களுக்கு இருக்கும் வெட்க உணர்வு கூட பெண்களுக்கு இருக்காது.பெண்கள் ஆடையணிந்தும் நிர்வாணமாகக் காட்சியளிப்பர். (முஸ்லிம் : 3921)

சங்கீத உபகரணங்கள் மிகுதியாகும். இசையில் மயங்கும் மனிதர்கள் பெருகுவார்கள்.(திர்மிதி)

காலையில்

எதற்காக யார் எப்படிச் செய்தார்கள் என்று தெரியாத அளவுக்கு கொலைகள் அதிகமாகும். (முஸ்லிம்) (ஒரு கோப்பை தேநீருக்கெல்லாம் கொலைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம்)

முஸ்லிம்கள் உலக சுகங்களுக்காகப் போட்டி போடுவார்கள். (புகாரி)

பூகம்பங்கள் அதிகம் ஏற்படும். (புகாரி)

பூமி அலங்கரிக்கப்படும். (திர்மிதி)

பருவ மழைக்காலம் பொய்க்கும்.

திடீர் மரணங்கள் அதிகரிக்கும், மனித ஆயுள் குறையும்.

முஸ்லிம்கள் பெருகியிருப்பர், ஆனால் கடல் நுரைபோல் இருப்பர்.

பெருமைக்காக பள்ளிவாசல் கட்டுவார்கள். (நஸயீ, அஹ்மது, இப்னுமாஜா)

யுக முடிவு நாளின் நெருக்கத்தில் ''இட நெருக்கடி ஏற்படும். மக்கள் ஒரே இடத்தில் வந்து குவியும் போது கட்டிடங்கள் உயரமாகும்''. (நகரங்களின் மக்கள் தொகைப் பெருக்கத்தையும் அதனால் அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகமாவதையும் நாம் காண்கிறோம்.)

வியாபாரமுறைகள் மாறும் (புகாரி)

(இன்டெர்நெட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் புதிய விதங்களில் வியாபார முறைகள் மாறியுள்ளதைக் காண்கிறோம்.)

பழங்கள் பெரிதாகும். ஒரு மாதுளையை ஒரு கூட்டம் சாப்பிடும். (முஸ்லிம்)

ஒரு தடைவை ஒரு மாட்டில் கறக்கும் பால் ஒரு கலத்திற்கே போதுமானதாக இருக்கும்.(முஸ்லிம்)

திருக்குர்ஆன் தங்க மையால் அச்சிடப்பட்டிருக்கும் ஆனால் அதனைப் பின்பற்ற மாற்றார்கள். (பைஹகி)

சத்திய விசுவாசிகள் அவமானப்படுத்தப்படுவர்.

ஃபித்னா (குழப்பம்) கடலைப்போன்று அடுக்கடுக்காய் தோன்றிக் கொண்டிருக்கும். (புகாரி, முஸ்லிம்)

சின்ன சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருப்பார்கள்.

பேச்சையே (அதிகம் பேசி வியாபாரம் செய்வதையே) பிழைப்பாக்கிக் கொள்வார்கள்.

சந்தைகள் அதிகரித்து அருகாமையில் வந்துவிடும்.

பொருளாதார வள்ச்சி அதிகமாகும். (புகாரி : 7121,1036,1424)

பொய் மிகைத்து நிற்கும். (திர்மிதி)

உங்களிடம் ஒரு காலம் வந்தால், பின்னால் வரும் காலம் முன்னால் சென்ற காலத்தைவிட மேசமாகவே இருக்கும். (புகாரி :7068)

அமல்கள் (நன்மைகள்) குறைந்து போய்விடும். மக்களின் உள்ளங்களில் பேராசையின் விளைவாக கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். (புகாரி)

முஸ்லிம்கள் மறுமையை நேசிப்பதற்குப் பதிலாக இம்மையை நேசித்து மரணத்தை வெறுப்பார்கள்.

பசியோடு இருப்பவர்கள் உணவு பாத்திரத்தின் மீது பாய்வது போல் மற்ற சமூகத்தினர் என் சமுதாயத்தின் மீது பாய்வார்கள். எதிரிகளின் உள்ளங்களில் முஸ்லிம்களைப் பற்றி பயம் இருக்காது. முஸ்லிம்களின் உள்ளங்களில் கோழைத்தனம் வந்துவிடும். (அபூதாவூத்)

முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் படித்து செயல்பட வேண்டிய நபிமொழி:

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான், அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319, 3456)

(சந்தனக்கூடு, கொடிமரம், சமாதி வழிபாடு, அவ்லியாக்களுக்கு நேர்ச்சை, கப்ரை உயர்த்திக் கட்டுதல், தஸ்பீஹ் மணி, மவ்லூது பாடல்கள், இசைக்கச்சேரிகள், உரூஸ் உண்டியல், யானை குதிரை ஊர்வலங்கள், இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள், வட்டி வாங்குதல், வரதட்சணை பிடுங்குதல், ஜோதிட நம்பிக்கை, திருமணத்தில் பெண்ணுக்கு தாலி கட்டுதல் மற்றும் வாழைமரம் நடுதல், பிறந்த நாள் விழா எடுப்பது, ஆண்கள் தங்கம் அணிவது இது போன்ற பழக்கவழக்கங்களை மாற்று மதத்தவரிடமிருந்து முஸ்லிம்கள் அப்படியே காப்பியடித்து பின்பற்றுவதை நடைமுறையில் கண்டு வருகிறோம்.)

எனவே சகோதர சகோதரிகளே! நாம் செய்ய வேண்டியது என்ன?

மரணவேளை எப்போது நிகழும் என்று எந்த மனிதனும் அறிய முடியாது. அவ்வேளை நெருங்கி வரும் முன் நாம் நமது அமல்களைப் பெருக்கிக் கொள்வோம். ''இஸ்லாம்'' இறைவனின் மார்க்கம்தான் என்று சந்தேகமற நம்பவேண்டும். இறைவன் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவன் சொன்ன கட்டளைக்கு மாறு செய்யாமல் உறுதியாக நிலைத்து நிற்க வேண்டும். நமது

விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ளவேண்டும்.

நேர்வட்டி, ஏலச்சீட்டு, பிக்சட் டெபாசிட், எல்.ஐ.சி போன்ற அனைத்து வகை ஹராமான வட்டிகளைவிட்டும் முற்றிலும் ஒதுங்க வேண்டும்.

மது, சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்ற இறைவன் விரும்பாத அனைத்து செயல்களைவிட்டும் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

ஏமாற்றுதல், அளவு நிலவையில் மோசடி செய்தல், அமானித மோசடி, வாக்கு மாறுதல், பொய் பேசுதல் போன்ற இழிசெயல்கள் நம்மைவிட்டு ஓடிவிட வேண்டும்.

அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசுவது, இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுவது, பொறாமைப்படுதல், அவதூறு கூறுவது, குடும்ப சண்டைகள் போன்ற நாகரிகமற்ற செயல்களை விட்டும் நாம் விடுபட வேண்டும்.

இறைவனின் கட்டளைக்கு மாறான, அற்பச் செயலும், சமூகக் கொடுமையும், அக்கிரமமும், அநியாயமும், அநாகரிகமுமான வரதட்சணை போன்ற பாவங்களிலிருந்து நாமும் விலகி, நம் சமூகத்தையும் விலக்க வேண்டும். இவ்வரதட்சணைக் கொடுமைக்கு துணைபோகிறவர்கள், இக்கொடுமையை இழைப்பவர்கள், இதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரும் இறைவனின் முன்னிலையில் தண்டனைக்குரியவர்கள் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அநியாயமும், அக்கிரமுமான இறைவன் மன்னிக்காத, இறைவன் விரும்பாத சமாதி வழிபாடு, பெரியேர்களுக்கு நேர்ச்சை செய்வது, ஜோசியம் பார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்லநேரம் என நம்புவது, செய்வினைகளை நம்புவது, குத்பியத் மவ்லிது போன்ற இணை வைத்தல்கள் (ஷிர்க்) என்னும் மகா பாவங்களிலிருந்தும், மூடபழக்கவழக்கங்களிலிருந்தும் நம்மை நாம் காத்துக் கொண்டு இந்த மாய உலகத்தில், நாம் எதற்காக படைக்கப் பட்டிருக்கின்றோம்? நமது இலட்சியம் என்ன? என்று நம்மை நாமே உணர்ந்து செயல்படுவோமாக!

இன்று இஸ்லாத்தின் எதிரிகளால்; ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' என்ற விஷப் பிரச்சாரம் உலக அளவில் முழுவீச்சில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இக்காலச் சூழ்நிலைiயின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, திருக்குர்ஆனை அதன் மொழியாக்கத்தோடு நாம் படித்து சிந்தித்து அவைகளை நாம் பின்பற்றி நடப்பது மட்டுமல்லாது மாற்று மத நண்பர்களுக்கும் எடுத்துரைத்து, பிற சமூகமக்களுக்கும் திருக்குர்ஆனை படிக்கக் கொடுத்து ''இஸ்லாம் தீவிரவாதத்தைத் தூண்டும் மார்க்கமல்ல மாறாக சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம்'' என்பதை எடுத்துக் கூறும் முக்கியக் கடமைகளும் நம்மீதுள்ளது என்பதையும் புரிந்து நடப்போமாக!

நமது வாழ்க்கை நெறி திருக்குர்ஆனாக இருக்கட்டும்!

நமது வழிமுறை இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அடிச்சுவடாகவே அமையட்டும்!!

இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை. மறுமை வாழ்வுதான் உண்மையான வாழ்வாகும். அவர்கள் (மனிதர்கள்) அறியக்கூடாதா? (திருக்குர்ஆன் 29:64)

நேரம் நெருங்கி விட்டது (திருக்குர்ஆன் 54:1)

மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 21:1)

சிந்திப்போம்!!

ed;wp J.A.Q.H gpuRuk; மற்றும் otrumai.com

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்ட தர்கா வழிபாடு


(அல்லாஹ்வுடைய நேசரான) ஒரு நல்லவரின் சமாதியில் அல்லாஹ்வையே வணங்குவது கூடாது என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருக்க, அந்த சமாதிக்காரரையே வணங்கினால் என்னவாகும்?

ஹதீஸ்கள்:-
நிச்சயமாக உம்மு ஸலமா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள், அபீஸீனியா நாட்டில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும், அதில் உள்ள உருவப் படங்களையும் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் அப்போதவர்கள் அது, அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால், அ(ந்த நல்ல)வருடைய சமாதியின் மீது மஸ்ஜிதைக் கட்டி, அந்தப்படங்களை அதில் உருவமைத்து விடுவார்கள். அத்தகையோரே அல்லாஹ்விடத்தில் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் எனக் கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா - ரலியல்லாஹூ அன்ஹா நூல்: புகாரீ


இவர்கள், சமாதிகளின் குழப்பம் மற்றும் உருவப்படங்களின் குழப்பம் ஆக இரண்டு குழப்பங்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டார்கள் (என்ற இப்னு தைமிய்யா அவர்களின் கூற்றை, இவ்விரண்டால் ஏற்பட்ட தீமைகளின் கொடூரத்தை உணர்த்த ஆசிpரியர் எடுத்துக் கூறியுள்ளார்)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மரணம் நெருங்கிய பொழுது, தன் முகத்தின் மீது தனக்குரிய ஓர் ஆடையை போடுபவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்கள் மூச்சுத் திணறும் போது, அதை (முகத்தை விட்டும்) உயர்த்தி, அவ்வாறான நிலையிலேயே அவர்கள் இருக்க, 'யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாவதாக! தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜித்களாக ஆக்கிக்கொண்டார்கள்' என அவர்கள் செய்து கொண்ட ஒன்றை (மற்றவர்களுக்கும்) எச்சரிப்பவர்களாக - கூறுவார்கள். இ(வ்வகை எச்சரிக்கையான)து இல்லாதிருந்தால் அவர்களின் சமாதி (வீட்டுக்கு வெளியில் பகிரங்கமாக) ஆக்கப்பட்டிருக்கும் என்றாலும் அது மஸ்ஜிதாக ஆக்கப்பட்டு விடுமோ என அஞ்சப்பட்டது. அறிவிப்பாளர்: ஆயிஷா - ரலியல்லாஹூ அன்ஹா நூல்: புகாரீ, முஸ்லிம்.

உங்களில் ஒருவர் எனக்கு மிகவும் உற்ற தோழராக ஆகுவதை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன் ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் - (நபி) இப்றாஹீமை தன் உற்ற தோழராக அவன் எடுத்துக் கொண்டது போன்று - என்னையும் அவன் உற்ற தோழனாக எடுத்துக் கொண்டான். நான் என் உம்மத்தவரிலிருந்து ஒரு உற்ற தோழரை எடுத்துக் கொள்பவனாக இருந்தால், அபூபக்கரையே உற்ற தோழராக எடுத்திருப்பேன் அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தவர்கள் தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை வணக்கத்தலங்களாக (மஸ்ஜிதுகளாக) எடுத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். ஆகவே, அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் சமாதிகளை வணக்கத்-தலங்களாக (மஸ்ஜிதுகளாக) எடுத்துக் கொள்ளாதீர்கள் ஏனெனில் நிச்சயமாக நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன் என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியேற்றேன். அறிவிப்பாளர்: ஜூன்துப் பின் அப்துல்லாஹ் - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: முஸ்லிம்.

நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் கடைசி நேரத்தில் அதை விட்டும் தடுத்துள்ளார்கள்.

பின்னர், நிச்சயமாக அவர்கள் முன் சென்ற ஹதீஸின் தொடரிலே அதைச் செய்பவரை சபித்துள்ளார்கள். அவ்விடத்தில் தொழுவதும் - பள்ளியாக அது கட்டப்படாவிட்டாலும் அ(வ்வாறு சபிக்கப்பட்ட)தில் உள்ளதாகும். இதுவே ஆயிஷா அவர்களின் (நபிகளாரின் கப்ரான) அது மஸ்ஜிதாக ஆக்கப்பட்டு விடுமோ என அஞ்சப்பட்டது என்ற சொல்லுக்கு விளக்கமாகும். எனவே, நபித்தோழர்கள் நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சமாதியைச் சுற்றி மஸ்ஜிதைக் கட்டவில்லை. தொழுகையை நிறைவேற்ற நாடப்படுகின்ற ஒவ்வொரு இடமும் மஸ்ஜிதாக எடுக்கப்பட்டதாகும். மாறாக, எனக்கு பூமியை மஸ்ஜிதாகவும், (அதன் மண்ணைக் கொண்டு தயம்மும் செய்வதற்கு) சுத்தமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று தொழப்படக் கூடிய ஒவ்வொரு இடமும் மஸ்ஜிதாகக் கணிக்கப்படும்.

எவர்களை மறுமை நாள் - அவர்கள் உயிரோடு இருக்கும் நிலையிலேயே வந்தடையுமோ அவர்களும், சமாதிகளை மஸ்ஜிதுகளாக ஆக்கிக் கொண்டார்களே அத்தகையோருமே நிச்சயமாக மக்களில் மிகக் கெட்டவர்கள் என ஹதீஸில் வந்துள்ளது. அறிப்பாளர்: இப்னு மஸ்ஊது - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: முஸ்னது அஹ்மது

படிப்பினைகள்:-
1. நல்லவர்களின் சமாதிகளில் மஸ்ஜிதுகளைக் கட்டுவதைப் பற்றி நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவற்றை அறிந்து கொள்வது.

2. சிலைகளை தவிர்த்துக் கொள்ளும்படி கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

3. சமாதிகளை மஸ்ஜிதுகளாக ஆக்குவதைத் தடுத்து நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியவற்றிலிருந்து படிப்பினை பெற்றுக் கொள்வது. அதாவது நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இதை முதலில் விவரித்துக் கூறி, பின்னர் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் அதை தடுத்துக் கூறியதுடன் நிறுத்தி விடாது, தம் உயிர் பிரியும் கடைசி கட்டத்திலும் அதைத் தடுத்துக் கூறி எச்சரித்துள்ளார்கள்.

4. நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு உருவாவதற்கு முன்னால் அதை மஸ்ஜிதாக ஆக்குவதை விட்டும் தடுத்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வது.

5. நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜிதாக ஆக்குவது யூத, கிறிஸ்தவர்களின் வழியாகும்.

6. இவ்வாறு செய்ததினால் அவர்களை நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.

7. இவ்வாறு நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துக் கூறியதின் நோக்கம் நம்மை எச்சரிக்கை செய்வதாகும்.

8. ஏன் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை வெளியில் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதின் காரணம் மேல் சென்ற ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9. சமாதிகளை மஸ்ஜிதுகளாக ஆக்கிக் கொண்டவர்களும், கியாமத் நாள் வரும் பொழுது வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இருசாரார்களை இணைத்து ஒரே ஹதீஸில் கூறியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்வது.

10. ராஃபிளிய்யா, ஜஹ்மிய்யா என்ற இருசாரார்களுக்கு மேலேயுள்ள இரண்டாவது ஹதீஸில் மறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு சாரார்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தவர்களைச் சார்ந்தவர்கள் அல்லர் என சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ராஃபிளிய்யா என்ற சாரார்களினால்தான் (முஸ்லிம்களின் மத்தியில்) ஷிர்க்கும், கப்ரு வணக்கமும் உண்டானது. அவர்கள்தான் முதலில் கப்ருகளின் மீது மஸ்ஜிதுகளைக் கட்டினார்கள்.

11. மரண வேளையில் ஏற்படும் வேதனை கொண்டு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் சோதிக்கப்பட்டுள்ளார்கள்.

12. அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் நபித்தோழர்களில் சிறந்தவர் என்று மேலேயுள்ள ஹதீஸில் தெளிவாக வந்துள்ளது. மேலும், அவர்கள்தான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் முதல் கலீஃபா ஆவார்கள் என சமிக்கினையாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் சில படிப்பினைகள்:-
சமாதிகளின் மீது கட்டிடங்களை எழுப்பியதால் மார்க்கத்திற்கு முரணான ஷிர்க்கான பல செயல்கள் நிகழ்கின்றன அவற்றை எல்லாம் விரிவாக அல்லாஹ்தான் நன்கறிவான். என்றாலும், இஸ்லாமிய மார்க்க மூதறிஞர்களில் ஒருவரான இப்னுல் கைய்யிம் - ரஹிமஹூல்லாஹூ அவர்கள் அதில் சிலவற்றை குறிப்பிட்டுள்ளார்கள். அதை இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

1. சமாதியில் தொழுவதை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்க அதை சிலர் வழக்கமாக்கிக் கொண்டனர்.

2. அங்கு சென்று தங்களுக்காக துஆச் செய்கின்றனர். மேலும், இந்த அவ்லியாவின் கபுரடியில் துஆச் செய்தால் உடனே அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று கூறுகின்றனர். இது தடுக்கப்பட வேண்டிய பித்அத்தான செயலாகும்.

3. கஷ்டங்களை நீக்கவும், நல்லதைக் கொடுக்கவும் இந்த கப்ரில் அடங்கி இருக்கும் அவ்லியாவுக்கு தனித்தன்மை உண்டு என்று நம்புகின்றனர். மேலும், ஊரில் உள்ள இந்த அவ்லியாவின் சமாதியினால் அந்த ஊர்வாசிகளின் பலாய் முசீபத்துகள் தவிர்க்கப்படுகின்றன என்றும் உறுதியாக கூறுகின்றனர். ஆனால் நிச்சயமாக இவையெல்லாமே இஸ்லாத்திற்கு முரணான செயல்கள் என்பதில் சந்தேகமேயில்லை காரணம், அப்படியே அவர்கள் கூறுவது உண்மையாக இருப்பின் அதற்கு தகுதியுடைய கப்ரு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய கப்ருதான். ஆனால், நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்த சொற்ப காலத்திலேயே மதீனா வாசிகளின் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் பலாய் முசீபத்துகள் பஞ்சங்கள், கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு இருப்பதினால் அவை எல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டுமே! ஏன் தவிர்க்கப்படவில்லை? எப்பொழுது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரு இருக்குமிடத்தில் அவை தவிர்க்கப்படவில்லையோ அப்பொழுதே அந்த மக்கள் சொல்வது பொய் எனத் தெளிவாகிறது.

4. கப்ருகளை ஜியாரத் செய்ய ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுகின்றனர். இவ்வாறு ஒன்று கூடுவதால் பல தகாத செயல்களும் தொழுகையை விடுவதும் ஏற்படுகின்றன. இந்தப் பாவங்களை கப்ரு உடையவர்கள் சுமந்து கொள்வார்கள் என நினைக்கின்றனர்.

5. விலையுயர்ந்த பட்டுப்புடவையால் கப்ரை போர்த்தி கண்ணியப்படுத்துகின்றனர்.

6. பொருட்களையும், செல்வங்களையும் அதற்கென்று ஒதுக்கி விடுகின்றனர்.

7. ஜியாரத் செய்கின்றவர்கள் அந்த கப்ருக்கு ஸஜ்தா செய்கின்றனர். இது குஃப்ரு என்பதில் சந்தேகம் இல்லை.

8. அதற்கென்று பொருட்களை ஹதியாவாக கொடுக்கின்றனர். இந்த ஹதியாக்களை பெறக் கூடிய தர்கா லெப்பைமார்கள்தான் இந்த ஷிர்க்கான செயல்களுக்கு முதல் காரணகர்த்தாக்கள். ஏனெனில், இந்த கப்ரில் அடங்கி இருப்பவரை அழைத்தால் பதில் கூறுவார். உதவி கேட்டால் உதவி செய்வார் என்றெல்லாம் அறியாத மக்களிடம் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் தங்களுக்கு ஹதியாக்களும், நேர்ச்சைகளும் அதிகமாக வர வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.

9. கோவில்களுக்கு பூசாரிகளை நியமிப்பதைப் போல சமாதிகளுக்கும், தர்ஹாக்களுக்கும் லெப்பைகளை நியமிக்கின்றனர்.

10. அதில் அடங்கி இருப்பவர் சமாதி வணக்கஸ்தர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வை விட மிக உயர்ந்தவராக திகழ்கின்றார். (உதாரணமாக, திடீரென ஒரு ஆபத்தான காரியம் நடந்துவிட்டால், யாஅல்லாஹ்! என அழைப்பதற்கு பதிலாக யா முஹ்யத்தீன்! யா ஹாஜா! என்றெல்லாம் அழைக்கின்றனர்.)

11. கப்ரை ஜியாரத் செய்யுங்கள் நிச்சயமாக அது உங்களுக்கு மறு உலகத்தை நினைவூட்டும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போல மறு உலகத்தை நினைவு கூறவேண்டும். அதில் அடங்கியிருப்பவர்களுக்காக அல்லாஹ்விடம் நாம் துஆச் செய்ய வேண்டும். மன்னிப்புக்கோர வேண்டும் என்பதற்காக நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஜியாரத்தை இஸ்லாத்தில் அமல்படுத்தினார்கள். ஆனால், கப்ரு வணங்கிகளோ அதை நேர்மாற்றமாக புரட்டி விட்டார்கள். அதாவது அவர்கள் உலக வாழ்க்கையை மனதில் வைத்துக் கொண்டு அங்கு சென்று அதில் அடங்கியிருப்பவரிடம் தங்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆச் செய்ய வேண்டுகின்றனர்.

மேலும், இதுபோல் மார்க்கத்துக்கு முரணான எத்தனையோ ஷிர்க்கான செயல்கள் தர்ஹாக்களில் நடைபெறுகின்றன. நாம் அவற்றை உணர்ந்து அவற்றை எல்லாம் தவிர்த்துக் கொள்வதுடன் பிறரைத் தடுக்கவும் வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

நல்லோர்களின் சமாதிகளில் வரம்பு மீறுவது அவர்களை அல்லாஹ்வன்றி வணங்கப்படும் சிலைகளாக மாற்றிவிடுகின்றது

நூலாசிரியர் இத்தலைப்பின் மூலம் நான்கு விஷயங்களைக் குறிப்பிடுகிறார்:-
1. நல்லவர்களின் கப்ருகளில் வரம்பு மீறுவது குறித்து எச்சரிக்கையாக இருப்பது.

2. அவ்வாறு வரம்பு மீறுவது அவர்களை வணங்கும் அளவுக்கு கொண்டு செல்கின்றது.

3. அவ்வாறு அக்கப்ருகள் வணங்கப் பட்டால் அவற்றுக்கு சிலைகள் என்றே கூறப்படும்.

4. கப்ருகள் மீது கட்டிடங்கள் கட்டுவதற்கும், அவற்றை மஸ்ஜிதுகளாக மாற்றுவதற்கும் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹதீஸ்:-
யாஅல்லாஹ்! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்ரகமாக ஆக்கி விடாதே! தங்கள் நபிமார்களின் சமாதிகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்களே அந்த சமூகத்தார்மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகயிருக்கின்றது என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இமாம் மாலிக் நூல்: அல்முஅத்தா

நீங்கள் (வணங்கும்) லாத்தையும், உஜ்ஜாவையும் கண்டீர்களா? என்ற (53:19) வசனத்திற்கு முஜாஹித் அவர்கள் கூறிய விளக்கத்தை இப்னு ஜரீர் அவர்கள் கூறுகிறார்கள் 'லாத்' என்பவர் (முந்தைய காலத்தில் வாழ்ந்த நல்லோர்களில் ஒருவர் அவரின் பெயர் சர்மத் பின் கன்ம் என்பதாகும் அவர்) ஹாஜிகளுக்கு மாவு குழைத்துக் கொடுப்பவராக இருந்தார். அவர் மரணித்து விடவே அவரின் கப்ரில் மக்கள் தங்கியிருக்கலாயினர். இப்படியாக காலப் போக்கில் அவரையே வணங்கலாயினர். இவ்வாறே இப்னு அப்பாஸ் அவர்களும், அவர் ஹாஜிகளுக்கு மாவு குழைத்துக் கொடுப்பவராக இருந்தார் என கூறியதாக அபூல் ஜல்ஸா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களையும், அதன் மீது மஸ்ஜிதுகளை மற்றும் (எரிப்பதற்கு) விளக்குகளை எடுத்துக் கொள்பவர்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் - ரலியல்லாஹூ அன்ஹூமா நூல்: அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

படிப்பினைகள்:-

1. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் உம்மத்தினர் தம் கப்ரை வணக்கத்தலமாக மாற்றிவிடுவார்களோ என பயந்து அதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள்.

2. கப்ருகளை மஸ்ஜிதுகளாக ஆக்குவோரின் மீது அல்லாஹ் கடும் கோபமுடையவனாக இருக்கிறான்.

3. லாத் எனும் சிலை வணங்கப்படும் பெரிய சிலையாக எப்படி ஆனது என்பதை அறிதல்.

4. அது ஆரம்பத்தில் நல்லதொரு மனிதனின் கப்ராகத்தான் இருந்தது.

5. லாத் என்பது அக்கப்ரில் அடங்கியிருக்கும் நல்லவரின் தொழில் பெயராகும்.

6. கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்துள்ளார்கள்.

7. அதில் விளக்கேற்றுபவர்களையும் சபித்துள்ளார்கள்.
அவ்லியாக்கள், நல்லோர்கள் விஷயத்தில் வரம்பு மீறி நடப்பதுதான் உலகில் ஷிர்க் உண்டாவதற்கான மூல காரணமாகும். அவ்லியாக்களை நேசிக்க வேண்டும் என அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதுடன் அவர்களுக்குள்ள அந்தஸ்துகளில் அவர்களை வைக்க வேண்டும் அதில் மிகைப்பட நடந்து கொள்ளலாகாது எனவும் கட்டளையிட்டுள்ளான்.

அவ்லியாக்களைக் கண்ணியப்படுத்துவதற்கும், நேசிப்பதற்கும் உரிய ஒரே வழி அவர்கள் காட்டிச் சென்ற நற்செயல்களைப் பின்பற்றி நடப்பதும், அந்த வழியில் மக்களை அழைப்பதுமாகும். அவர்கள் சொல்லாத மற்றும் செய்யாத மார்க்கத்திற்கு முரணான காரியங்களை அவர்களின் பெயரில் செய்வது அவர்களை பிரியம் வைப்பதாக ஆகாது. மாறாக, அவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

ஆகவே நமக்கு மத்தியில் அவ்லியாக்களின் பெயரால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் அவர்கள் நமக்குக் கற்றுத் தராத செயல்களாகும். அதைத் தவிர்ப்பது மிகவும் அவசரமும் அவசியமுமானதாகும்.

முஸ்தஃபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தவ்ஹீதுடைய புறத்தைப் பாதுகாத்ததிலும், ஷிர்க்கின்பால் சேர்த்து வைக்கும் ஒவ்வொரு வழியையும் அவர்கள் அடைத்திருப்பதிலும் வந்துள்ள ஆதாரங்கள்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்று:-
(விசுவாசிகளே!) உங்களிலிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார் (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு வருத்தமாக இருக்கும் உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர் விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர் மிகக் கிருபையுடையவர்.

(நபியே! இதற்குப்) பின்னரும், அவர்கள் (உம்மை ஏற்காது) விலகிக்கொண்டால், (அவர்களிடம்) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயனில்லை. அவன் மீது (என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துள்ளேன். அவனே மகத்தான அர்ஷின் அதிபதியாவான்' (9:128,129)

ஹதீஸ்கள்:-
'நீங்கள் உங்கள் இல்லங்களை கப்ருகளாக ஆக்காதீர்கள் என்னுடைய கப்ரை
அலீ பின் ஹூசைன் அவர்கள், ஒரு மனிதரை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய கப்ருக்கு பக்கத்திலிருந்த பொந்தின் பக்கம் வந்து அதில் நுழைந்து துஆச் செய்பவராகக் கண்டார்கள் (அதுமாதிரி செய்வதை விட்டும்) அப்போது அவரைத் தடுத்தார்கள் மேலும், நான் உங்களுக்கு என்னுடைய தந்தை, என்னுடைய பாட்டனார் வழியாக நான் செவியேற்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை அறிவிக்கட்டுமா? எனக் கூறினார்கள். 'என்னுடைய கப்ரை உங்களின் இல்லங்களை கப்ருகளாகவும் ஆக்கிக் கொள்ளாதீர்கள் நிச்சயமாக (நீங்கள் என் மீது கூறக்கூடிய) என்னை வந்தடையும்' என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: முக்தாரா

படிப்பினைகள்:-
1. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தம் உம்மத்தவர்களை ஷிர்க்கின்பால் சேர்த்து வைக்கும் எல்லா வழிகளை விட்டும் தூரமாக்கி உள்ளார்கள்.

2. நாம் சிறந்த உம்மத்தவர்களாக ஆக வேண்டுமென்பதில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பேரார்வம் கொண்டவர்களாகவும், நம்மீது இரக்க குணமுடையவர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள்.

3. ஜியாரத்து செய்வது ஒரு நல்ல செயலாக இருப்பதுடன் குறிப்பிட்ட முறையில் தங்களின் கப்ரை ஜியாரத் செய்வதை விட்டும் நம்மை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள்.

4. அதிகமாக ஜியாரத் செய்வதையும் தடுத்துள்ளார்கள்.

5. சுன்னத்தான தொழுகைகளை ஆண்கள் தங்களது இல்லத்திலேயே நிறைவேற்றும்படி நம்மைத் தூண்டி உள்ளார்கள். (அதாவது சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறை வேற்றும்படி கூறியுள்ளார்கள்.)

6. கபுரடியில் தொழுவது கூடாது என்பது உலமாக்களின் ஏகோபித்த முடிவாகும்.

7. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஒருவர் எங்கிருந்து சலவாத்துஈ ஸலாம் கூறினாலும் அது அவர்களை வந்தடையும். மாறாக, பக்கத்திலிருந்து தான் சொல்ல வேண்டும் என்பதில்லை.

8. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆலமுல் பர்ஜகில் இருந்தவாறே அவர்கள் மீது கூறப்படும் சலவாத்துகள் மற்றும் ஸலாம்களை அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

ஷேக் முஹம்மத் பின் அப்துல் வஹாப் அவர்களின்
''கிதாப் அத்தவ்ஹீத்'' புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது

நன்றி tamilislam.com

கப்ருகளை ஜியாரத் செய்வோம்

இஸ்லாத்தை அரபு மண்ணில் நபி (ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தும் போது, மக்களில் சிலர் முக்கியமானதொரு நபர் இறந்து அவர் அடக்கம் செய்யப்பட்டதும், அவர்கள் இறந்து போன பின்பும் கூட, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என நம்பி அவர்களின் புதைகுழிக்குச் சென்று அவைகளை வழிபடுவதும், அந்த இடத்தில் அறுத்துப் பலியிடுவதும், தங்களின் நேர்ச்சைகளை அவ்விடத்திலேயே நிறைவேற்றுவதுமாய் இருந்தனர். இன்னும் சிலர் இறந்து போனவர்களை உருவமாக சிலை வடிவில் செய்து வணங்கிடவும் செய்தனர்.

வழிபடுவது, நேர்ச்சை செய்வது அறுத்துப் பலியிடுவது, பிரார்த்தனை செய்வது போன்ற வணக்கங்கள் அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டும் என்றிருக்க, அல்லாஹ் அல்லாத இறந்து போனவர்களின் சமாதி முன்பும், சிலைகள் முன்பும் செய்ய் மக்கள் முன் வரக் காரணமாக அமைந்தது அவர்கள் கப்ருகளை ஸியாரத் செய்யச் சென்றது தான். இதைத் தடை செய்து விட்டால், அவர்கள் வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்குச் செய்ய மாட்டார்கள் என, எண்ணியே இஸ்லாம் ஆரம்ப காலத்தில் ஸியாரத் செய்வதைத் தடை செய்து விட்டது. பின்பு மக்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் அவர்கள், மண்ணறைவாசிகளால் ஏதும் செய்ய இயலாது என்று நம்பியதும் அவர்களைச் சிறிது காலத்திற்குப் பின்பு ஸியாரத் செய்ய இஸ்லாம் அனுமதித்தது.

உங்களை (முதலில்) கப்ருகளை ஸியாரத் செய்ய தடை செய்திருந்தேன். (தடை நீக்கப்பட்டது இனிமேல்) அவைகளை ஸியாரத் செய்யுங்கள் என, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, ஹாகிம், அபூதாவூத், இப்னு ஹிப்பான்).

ஸியாரத்தின் நோக்கம்

ஸியாரத் செய்வதால் ஏதேனும் பரக்கத் கிடைக்கும், அங்கே அடக்கமாகி இருப்போரின் ஆசி கிடைக்கும் என்றெல்லாம் நாம் எண்ண சிறிதும் ஆதாரம் இல்லை. ஸியாரத்தின் நோக்கம், மரணச் சிந்தனையும், மறுமை சிந்தனையும் ஏற்பட வேண்டும் என்பது மட்டுமே!

கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள், நிச்சயமாக அது உலகப் பற்றை நீக்கும். மறுமையை நினைவுபடுத்தும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயிதுல் குத்ரீ (ரலி) நூல் : அஹ்மது


என் தாயின் கப்ரை ஸியாரத் செய்ய என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதியளித்துள்ளான். எனவே, நீங்களும், கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில், அது மரணத்தை நினைவுபடுத்தும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, அபூதாவூது, நஸயீ.

ஸியாரத் செய்யும் முறை

ஸியாரத்திற்கு அனுமதி என்றதும், பத்தி, பழம், தேங்காய், சர்க்கரை, பூ என்று படையல் பொருட்களைக் கொண்டு செல்வதோ, அங்கு துஆ ஓதிட ஆள் தேடுவதோ, அவர்களுக்கு கூலிப்பணம் கொடுப்பதோ என்று செயல்படுவது கூடாது. ஏன் எனில், ஸியாரத் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறைகளில் அவகைள் ஏதும் இல்லை. கப்ரை ஸியாரத் செய்யச் செல்வோர், அங்கே அடக்கமாகி உள்ளவர்களுக்காக ஸலாம் கூற வேண்டும். அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும். ஆனால் அவர்களிடம் துஆக் கேட்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் மண்ணறை பகுதிக்கு வரும் போது,

அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்

(முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்! நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே! என்று கூறுவார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி). நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.

அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன் - வல் முஸ்லிமீன் - வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆபியா

(முஃமினான - முஸ்லிமான மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும், எங்களுக்கும் அல்;லாஹ் விடம் சுக வாழ்வைக் கேட்கிறோம்) என்று கப்ரு பக்கம் வரும் போது கூறும்படி ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள். அறிவிப்பாளர் : புரைதா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அஹமது, இப்னுமாஜா).

மண்ணறைவாசிகளுக்குத் தான் நாம் துஆச் செய்ய வேண்டுமே தவிர, அவர்களிடம் நம் தேவைகளை கூறிப் பிரார்த்திப்பதோ, வழிபாடு செய்வதோ கூடாது. துஆ என்றதும், பாத்திஹா ஓதுவது என்று எண்ணிவிடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மேற்கண்ட துஆக்கள் மட்டுமே சொல்ல வேண்டும்.

காஃபிர்களின் கப்ரை ஸியாரத் செய்யலாமா?

மரணத்தை நினைவுபடுத்திக் கொள்ளும் முகமாக முஸ்லிமல்லாதவர்களின் கப்ரைக் காணவும் செல்லலாம். ஆனால், முஸ்லிம்களின் கப்ரில் சொல்லும் துஅவை சொல்லக் கூடாது. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கவும் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் தன் தாயின் கப்ரை ஸியாரத் செய்யும் போது அழுதார்கள். சுற்றியுள்ளோர்களும் அழுதார்கள். பின்பு என் தயாருக்காக பாவ மன்னிப்புக் கோர என் இறைவனிடம் அனுமதி கோரினேன். எனக்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் கப்ரைக் காண அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதிக்கப்பட்டது. எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள். நிச்சயமாக அது மரணத்தை நினைவுபடுத்தும் எனக் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி)

முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) நம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்கள் நரக வாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின், அவர்களுக்காக மன்னிப்புக் கோருவது நபிக்கும்,

ஆண்களுக்கே அனுமதி! பெண்களுக்கு இல்லை!

கப்ருகளை ஸியாரத் செய்ய ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கப்ரு உள்ள இடத்தில் வர அனுமதி இல்லை.

கப்ருகளை ஸியாரத் செய்யச் செல்லும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி, இப்னு ஹிப்பான்).

கப்ருகளில் விழாக் கொண்டாடலாமா?

பெரியார்கள் என்ற பெயரில் கப்ருகளை கட்டிடமாக எழுப்பி, அவைகளுக்கு தனி அறை எழுப்பியும், அந்த கப்ரின் மீது பச்சைத் துணி போர்த்துவதும், கப்ரில் ஓரப் பகுதியில் எண்ணைத்தூண் வைத்து, அதில் எண்ணெய்யை ஊற்றி, வருவோர் போவோரெல்லாம் அதை கண்ணில் தடவிக் கொள்வதும், கப்ரின் அருகில் பத்தி வைத்தக் கொளுத்தி வைப்பதும், கப்ரில் சந்தனத்தை தெளிப்பதும், அங்கே ஒரு கூட்டம் வருவோரை ஏமாற்றி சுரண்ட அமர்ந்திருப்பதும் இது போன்ற எந்த செயல்பாட்டுக்கும் துளி கூட ஆதாரம் இல்லை.

கப்ருகள் கட்டப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக தடுத்துள்ளார்கள்.

கப்ருகள் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி), நூல்கள் : அஹ்மது, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதி.

யூத கிறிஸ்த்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும் போது, அவனது கப்ரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக் கொள்வார்கள். நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி.

யூதர்களும் கிறிஸ்த்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால் அல்லாஹ் சபித்து விட்டான். என, தனது மரணத் தருவாயில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள் நூல் : புகாரி.

நீங்கள் எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் : அபூதாவூத்.

கப்ருகள் கட்டிடமாக இல்லையெனில், சிறிது காலத்திலேயே கப்ரு உள்ள இடமாக அது இருக்காது. மேலும் யாருடைய கப்ரு என அறிய முடியாமல் போய் விடும். இதனால் அனுமதிக்கப்படாத செயல் முறைகள் உருவாகவும் வாய்ப்பில்லை. ஆனால் கப்ருகள் கட்டிடமாக கட்டப்பட்டாலோ எல்லா அநாச்சாரங்களும் வந்து விடும். இதனால் தான் கட்டிடமாக கட்டடப்படும் கப்ருகளை தரைமட்டமாக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

உயரமான எந்த கப்ரையும், (இடித்து) சமப்படுத்தாமல் விட்டு விடாதே! எனக் கூறி, நபி (ஸல்) அவர்கள் என்னை அனுப்பிய பணிக்கே உம்மையும் அனுப்புகிறேன், என அலீ (ரலி) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹய்யாஜீல் அஹ்தீ (ரலி) நூல்கள் : முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அபூதாவூத், அஹ்மது.

தர்காக்களுக்குச் செல்லலாமா?

தர்கா என்ற பெயரில் கப்ருகளை கட்டி வைத்து உள்ளனர். அதை ஸியாரத் செய்யச் செல்லக் கூடாது. இங்கே செல்வோரிடம் மரணச் சிந்தனை, ஸியாரத்தின் நோக்கம் என்பது இல்லாமல், பரக்கத்தே என்பதாக உள்ளது.

காஃபிர்களின் கப்ரையும் காணலாம் என்பதில் இருந்தே ஸியாரத்தின் நோக்கம் பரக்கத் அல்ல என்பது தெளிவாகும். நோக்கம் சிதைந்து விடுவதாலும், கப்ருகளை கட்டக் கூடாது என்ற ஹதீஸுக்கு மாற்றமாக கட்டிடமாக கட்டி வைத்துள்ளதாலும், விழாக்கள் நடத்தும் இடமாக கப்ருகள் இருக்கக் கூடாது என்பதற்கு மாற்றமாக விழா நடக்கும் இடமாக உள்ளதாலும் மேலும் பல அனாச்சாரங்கள் நடைபெற காரணமாக உள்ளதாலுமே தர்காக்களுக்குச் செல்லக் கூடாது.

ஸியாரத் செய்யச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குடன் தர்காக்களுக்கு சென்றால் தவறா? என்ற கேள்வி எழவே செய்யும்!

தர்கா என்பது மட்டுமல்ல, எந்த இடத்தில் தவறு நடந்தாலும் ஒரு முஸ்லிம் கையால் தடுக்க வேண்டும் முடியாது என்றால் மனதளவில் வெறுத்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். தர்காக்களில் தவறு நடக்கிறது. குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பாத்திஹாக்கள் ஓதப்படுகிறது. வழிபாடு செய்யப்படுகிறது. இப்படி பல அநாச்சாரங்கள் நடந்தும் தடுக்க முடியாத முஸ்லிம் அங்கு போகாமல் இருப்பதே சரியாகும்.

உங்களில் எவரேனும் கூடாத காரியங்கள் செய்யப்படுவதை கண்டால், அவர் தன் கையால் அதை மாற்றட்டும். இயலவில்லை எனில், நாவால் (கூறித் தடுக்கட்டும்), இயலவில்லை எனில், தன் இதயத்தால் (வெறுக்கட்டும்) இதுவே

எனவே, ஸியாரத் செய்ய விரும்பும் ஆண்கள், நபி (ஸல்) அவர்கள் கூறித் தந்த ஒழுங்குப்படி பொது மண்ணறைக்கு மட்டுமே செல்ல வேண்டும். தர்காக்களுக்குச் செல்லக் கூடாது. பெண்களுக்குச் ஸியாரத் செய்ய அனுமதி இல்லை.

நமது கேள்வியும் குர்ஆனின் பதிலும்

அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்துப் பிரார்த்திக்கலாமா?

சான்று :

அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (16:20-22)

சான்று : 2

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7:194)

இறந்தவர்கள் (கப்ருகளில் உள்ளவர்கள்) செவியேற்க முடியுமா?

சான்று :

அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. (35:22)

அல்லாஹ் அல்லாதவரை அழைப்பவர் யார்?

சான்று : 1

உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடவீர்.(10:106)

சான்று : 2

கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழை;ப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது. (46:05)

சான்று : 3

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (18:102)

அல்லாஹ் அல்லாதவர் உதவி செய்ய முடியுமா?

சான்று :

அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக) நீங்கள எண்ணிக்கொண்டிருப்பவர்களை அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி பெறவில்லை (என்பதை அறிவீர்கள்). (17:56)

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த தேடப்படுவோனும் பவஹீனர்களே. (22:73)

அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்ய முடியுமா?

சான்று :

அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! ''அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?'' (என்று.) ''பரிந்து பேசதல் எல்லாம், அல்லாஹ்வுக்கே உரியது; வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உரியது; பின்னர் அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக! (39:43-44)

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்காதவர் யார்?

எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான். (43:36)

இறைவனிடமே உங்களது தேவைகளைக் கேளுங்கள் :

''என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்'' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (39:53)

தவ்பாச் செய்து உடன் மீண்டு விடுங்கள்..! மறுமை மிகச் சமீபத்தில் இருக்கின்றது..!

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள். ''அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே''! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும், அல்லது ''அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால், நானும் முத்தகீன் - பயபக்தியுடையவர்களின் - ஒருவனாசி இருப்பேனே!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும், அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், ''(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும், (பதில் கூறப்படும்;) ''மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்.'' அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா? எவர் பயபக்தியுடன் நடந்து கொள்கிறாரோ, அவர்களை அல்லாஹ் வெற்றியைக் கொண்டு அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:54-62)

நன்றி tamilislam.com

ஈமானின் கிளைகள்

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான். (அல்குர்ஆன் 2:208)

ஈடிணையற்ற அருட்கொடை

மனிதன் தன் வாழ்வில் அனுபவிக்கும் அருட்கொடைதான் எத்தனை! எத்தனை! அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை கணக்கிட்டால் அதனை எண்ணிலடக்க முடியாது. (அல்குர்ஆன் 14:34)

ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல் பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார். இவ்வுலகில் சகல வசதிகளுடன் வாழும் ஒருவனுக்கு ஈமானும் அதற்குரிய செயல்பாடுகளும் இல்லையெனில் நிச்சயமாக அவன் ஈருலகிலும் தோல்வி அடைந்துவிட்டான். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹ் என அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்துக் கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (அறிவிப்பவர்: இத்பான்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

ஈமான் முழுமையடைவது எப்போது?

ஈமான் என்பது மனித வாழ்வின் அனைத்துத் துறைகளையும் சூழ்ந்து நிற்கும் வாழ்க்கைத் திட்டத்தின் பெயராகும். ஏகத்துவக் கொள்கை என்பது ஈமானின் நுழைவாயில். அதனுள் நுழைந்த பிறகு அதில் கடக்க வேண்டிய எத்தனையோ கட்டங்கள்! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஈமானிற்கு எழுபதிற்கும் அதிகமாக கிளைகள் உள்ளன. அதில் முதன்மையானது லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது. வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும். (நூல்: முஸ்லிம்)

எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான ஈமான், மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் மனிதன் மட்டுமே ஈமானில் முழுமையடைகிறான். வாழ்வில் அனைத்துத் துறையிலும் மிளிர்ந்திடும் ஈமான் அம்மனிதனின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றிவிடுகிறது.

ஆனால் நமது சமுதாயத்தில் ஏகத்துவக் கொள்கையை ஏற்று, தனக்கு ஓர் இஸ்லாமியப் பெயரையும் சூட்டிக்கொண்டதோடு ஈமான் முழுமை அடைந்துவிட்டது என திருப்தியடைபவர் ஒருபுறம். நான் தொழுவேன், நோன்பு நோற்பேன், ஆனால் வரதட்சணை வாங்கிக் கொள்வேன், என்னுடைய தொழிலில் வட்டித் தொடர்பிருக்கும் என சில கடமைகளைப் பேணி, பல கடமைகளை புறக் கணிப்பவர் மற்றொருபுறம், ரமலான்மாதத்தில் மட்டும் பள்ளிவாயிலுடன் தொடர்பு வைத்து, அதற்குப் பிறகு பள்ளி செல்ல அடுத்த ரமலானை எதிர் பார்த்திருக்கும் கூட்டத்தினரோ உலகெங்கிலும் ஏராளம். இவ்வகையினர் மார்க்கத்தைப் பின்பற்றுவதாக எண்ணி, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு, பெயர் தாங்கி முஸ்லிமாக வாழ்வது மிக வருத்தத்திற்குரியது.

ஈமானின் பயன்கள்

முழுமையடைந்த ஈமானின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் பல உள்ளன. அவை அம்மனிதனோடு மட்டும் நின்றுவிடாது பிறரையும் சென்றடைகின்றன. அல்லாஹ் கூறுகிறான்:

(லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்)நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் கூறும் உதாரணத்தை (நபியே!)நீர் பார்க்கவில்லையா? அது நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்தும் அதன் கிளைகள் வானளாவியும் இருக்கின்றன. அது தன் இரட்சகனின் அனுமதி கொண்டு ஒவ்வொரு நேரத்திலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. (அல்குர்ஆன் 14:24,25)

ஏகத்துவக் கொள்கையை உள்ளத்தில் ஆழப்பதித்து, அதை வாழ்வின் அனைத்துத் துறையிலும் வெளிப்படுத்தும் மனிதன் காய்த்துக் குலுங்கும் பயனுள்ள மரத்தைப் போன்றவன் என அல்லாஹ் கூறும் உவமையைக் கவனித்தீர்களா!

அது மட்டுமல்ல! அம்மனிதர் மரணிக்கும் போது மலக்குகள் அவரிடம் உரையாடுவதைக் கேளுங்கள்!

நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் எனக் கூறி, அதில் உறுதியாக நிலைத்து நின்றவர்கள் மீது(அவர்களின் மரண வேளையில்)மலக்குகள் இறங்கி, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கச் சுபச்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! நாங்கள் உங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள். அ(ச்சுவனத்)தில் உங்கள் மனம் விரும்பியவை உங்களுக்குண்டு. அதில் நீங்கள் தேடுபவை உங்களுக்குண்டு. மிகவும் மன்னிப்பவனான, கிருபையுடையோனிடமிருந்துள்ள விருந்தாக (அச்சுவனத்தைப்)பெற்றுக் கொள்வீர்கள் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30,32)

இந்நிலையில் அவர் தன்வாழ்வின் இறுதி வார்த்தையாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற ஏகத்துவக் கலிமாவுடன் இவ்வுலகிற்கு விடைதரும் பாக்கியத்தைப் பெறுகிறார்.

குவளையிலிருந்து ஊற்றப்படும் தண்ணீர் போல் மிக எளிதாக அவரின் உயிரை எடுத்து சொர்க்கக் கம்பளத்தில் வைத்து மலக்குகள் எடுத்துச் செல்ல, இவரின் பிரிவால் நல்லோர்கள் கண்ணீர் வடித்து துக்கத்தில் ஆழ்கின்றனர். ஏன்!

அவரின் மரணத்திற்காக வானம், பூமி கூட அழுகிறது. (கருத்து, அல்குர்ஆன் 44:29)

ஏகத்துவக் கொள்கை மற்றும் அது எதிர்பார்க்கும் அமலுஸ் ஸாலிஹ் எனும் நல்லறங்களுடன் வாழ்ந்த அம்மனிதர் நரகம் செல்லாமல் -இறையருளால்- நேரடியாக சொர்க்கம் செல்கிறார். இதுவல்லவா உண்மையான வெற்றி! அல்லாஹ் கூறுகிறான்:

யார் நரகை விட்டும் தூரமாக்கப்பட்டு, சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ நிச்சயமாக அவரே வெற்றி அடைந்தவராவார். (அல்குர்ஆன் 3:185)

ஆம்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதுவே உண்மையான வெற்றி!

அன்புச் சகோதர, சகோதரிகளே! நாமும் நம்முடைய வாழ்க்கையை இவ்வாறு ஏன் அமைத்துக் கொள்ளக் கூடாது?! சற்று நிதானமாக, தனிமையில் உங்கள் உள்ளத்துடன் உரையாடுங்கள்! அல்லாஹ் விரும்புவதை உங்கள் விருப்பமாகவும் அவன் வெறுப்பை உங்கள் வெறுப்பாகவும் அவனிடம் கிடைக்கும் நற்பெயரையே உங்கள் இலட்சியமாகவும் ஆக்கிக் கொள்ள நாம் ஏன் முன்வரக் கூடாது?! சிந்தியுங்கள்! சுயபரிசோதனை செய்து, செயல்படத்துவங்குங்கள்! அல்லாஹ் அப்பாதையை உங்களுக்கு நிச்சயமாக எளிதாக்குவான்!

இதோ தங்களுக்கு முன் தங்கள் ஈமான் முழுமைபெற, அதன் மூலம் இறைநேசத்தைப் பெறுவதற்கான வழிகள். அல்லாஹ் நம் அனைவருக்கும் இதன்படி செயல்பட கிருபை செய்வானாக!

ஈமானின் கிளைகள்

1) அல்லாஹ்வை நம்புவது.

2) இறைத்தூதர்களை நம்புவது.

3) மலக்குமார்களை நம்புவது.

4) அல்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது.

5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது.

6) உலக அழிவு நாளை நம்புவது.

7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது.

8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது.

9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது.

10) அல்லாஹ்வை நேசிப்பது.

11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது.

12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது.

13) அல்லாஹ்வின் மிதே தவக்குல் வைப்பது.

14) நபி(ஸல்) அவர்களை நேசிப்பது.

15) நபி(ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது.

16) இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்! எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது.

17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது.

18) கல்வியைப் பரப்புவது.

19) அல்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது.

20) தூய்மையாக இருப்பது.

21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது.

22) ஜகாத் கொடுப்பது.

23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது.

24) இஃதிகாஃப் இருப்பது.

25) ஹஜ் செய்வது.

26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது.

27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது.

28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது.

29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் னீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது.

30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது.

31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது உடலுறவு கொள்ளல் போன்றவற்றின் பரிகாரங்கள்)

32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது.

33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது.

34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது.

35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது.

36) கொலை செய்யாதிருப்பது.

37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது.

38) திருடாதிருப்பது.

39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது.

40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது.

41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது.

42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது.

43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது.

44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது.

45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது.

46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது.

47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது.

48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது.

49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது.

50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது.

51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது.

52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது.

53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது.

54) வெட்கப்படுவது.

55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது.

56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது.

57) நற்குணத்துடன் நடப்பது.

58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது.

59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது.

60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது.

61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது.

62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது.

63) நோயாளியை விசாரிப்பது.

64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது.

65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது.

66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது.

67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது.

68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது.

69) பிறரின் குறைகளை மறைப்பது.

70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது.

71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது.

72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது.

73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது.

74) அதிகமாக தர்மம் செய்வது.

75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது.

76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது.

77) தனக்கு விரும்புவதை தனது முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்புவது.

78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது.

(குறிப்பு: மேற்கூறப்பட்ட 77 கிளைகளும் ஹதீஸ் க வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ(ரஹ்) அவர்கள் ஷுஃபுல் ஈமான் -ஈமானின் கிளைகள்- எனும் நூலில் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் தொகுத்துக் தந்தவைகளில் தலைப்புகளாகும். இவைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் விரிவாகக் கற்று அதன்படி செயல்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.)

நன்றி islamkalvi.com

எழுபது பெரிய பாவங்கள்

1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)

...எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)

எவன் பிறரின் பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)

2. கொலை

எவர் ஒரு விசுவாசியை (அவர் விசுவாசி என்று நன்கறிந்திருக்கும் நிலையில்) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் (என்றென்றும்) தங்கியும் விடுவான். அவன் மீது அல்லாஹ் கோபங்கொண்டு அவனைச் சபித்தும் விடுவான் (இதனை) அன்றி மகத்தான வேதனையையும் அவனுக்குச் தயாராக்கி வைத்திருக்கின்றான். (4:93)

ஒரு விசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதை விட அல்லாஹ்விடம் பயங்கரமானதாகும் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம், திர்மிதி, நஸயீ, பைஹகீ, இஹ்பானீ, இப்னுமாஜா)

3. சூனியம்

அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவது இடத்தைப் பெறுவது சூனியமாகும். (புகாரி, முஸ்லம், அபுதாவூத், நஸயீ)

மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவில் மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன்,சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)

மந்திரித்தலும், தாயத்துக் கட்டுவதும், நூல் கட்டுவதும் ஷிர்க்காகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், இப்னுஹிப்பான், ஹாகிம்)

4. தொழுகையை வீணாக்கி விடுதல்

ஷதங்கள் தொழுகையில் பாராமுகமாயிருக்கும் (நயவஞ்சகமான) தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107:4,5)

மறுமையில் முதலாவதாக மனிதனிடம் தொழுகையைப் பற்றித்தான் கேள்வி கேட்கப்படும் தொழுகை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டிருந்தால் வெற்றியடைந்த நற்பாக்கியவானாவான். தொழுகையில் குறைபாடுள்ளவன் நஷ்டமடைந்த துர்ப்பாக்கியவானாவான் என நபி(ஸல்) அவர்;கள் கூறியுள்ளார்கள். (அபூதாவூத், திhமிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)

5. ஸக்காத்தை கொடுக்க மறுத்தல்

அல்லாஹ் தன் அருளைக் கொண்டு அவர்களுக்கு அளித்த பொருட்களில் எவர்கள் உலோபித்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிவிடவேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே முடியும். எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். (3:180)

கொடுமை புரியும் தலைவன், ஸக்காத்து கொடுக்காதவன், பெருமையடிக்கும் ஏழை ஆகிய மூவரும் தான் நரகில் முதலாவதாக நுழைவார்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா, இப்னுஹிப்பான்)

6. நோன்பை விடுதல்

விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டிருந்த பிரகாரமே உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கின்றது (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம். இவ்விதம் விதிக்கப்பட்ட நோன்பு சில குறிப்பிட்ட நாட்களில் (நோற்பது கடமையாகும்).. (2:183,184)

எவன் ஒருவன் எவ்வித காரணமுமின்றி ரமழான் மாதத்தில் நோன்பை விடுகிறானோ அவன், ஏனைய நாட்கள் எல்லாம் நோன்பு வைத்தாலும் அதற்கு சமமாகாது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, இப்னுகுஸைமா)

7. ஹஜ்ஜு செய்யாமை

.....எவர்கள் அங்கு யாத்திரை செல்ல, சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும்... (3:97)

8. பெற்றோரைத் துன்புறுத்துதல்

...... (மனிதனே!) நீ எனக்கும் உன்னுடைய தாய், தந்தைக்கும் நன்றி செலுத்துவாயாக! (முடிவில் நீ) என்னிடமே வந்து சேர வேண்டியதாயிருக்கிறது. (31:14)

பொற்றோரின் திருப்தி அல்லாஹ்வின் திருப்தியாகும். பெற்றோரின் வெறுப்பு அல்லாஹ்வின் வெறுப்பாகும் (திர்மிதீ, இப்னுஹிப்பான், ஹாகிம்)

தாயின் காலடியில் சுவர்க்கமிருக்கிறது என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (நஸயீ, இப்னுமாஜா)

9. உறவினர்களை வெறுத்தல்

உறவினர்களை வெறுப்பவன் சுவனம் புக மாட்டான் (புகாரி, முஸ்லிம்)

எவன் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டானோ அவன், தன் உறவினர்களை இணைத்து நடப்பானாக! (புகாரி, அபூதாவூத், திர்மிதீ)

10. விபச்சாரம்

(விசுவாசிகளே!) நீங்கள் விபச்சாரத்தின் அருகேகூட நெருங்க வேண்டாம். ஏனென்றால் அது மானக் கேடானதாகவும் தீய வழியாகவுமிருக்கிறது (17:32)

கண்ணின் விபச்சாரம் அந்நியப் பெண்ணைப் பார்த்தல், நாவின் விபச்சாரம் (அவளுடன்) பேசுதல், கையின் விபச்சாரம் (பெண்ணைப்) பிடித்தல், காலின் விபச்சாரம் (அவளைத் தேடி) நடத்தல். மர்மஸ்தானங்கள் இவைகளை உண்மைப்படுத்துகின்றன அல்லது பொய்யாக்குகின்றன என நபி அவர்கள் கூறியுள்ளார்கள.; (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)

11. ஆண் புணர்ச்சி

லூத் நபியின் கூட்டத்தினர் செய்த கொடிய (ஆண் புணர்ச்சி) எனும் பாவத்தைச் செய்பவர்களைக் கண்டால் இருவரையும் கொலை செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)

ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் எனவும் நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, நஸயீ, இப்னுஹிப்பான்)

12. வட்டி

விசுவாசிகளே! (அசலுக்கு அதிகமாவும், வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக் கூடிய வட்டியை (வாங்கி) உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:130)

வட்டியின் பாவங்கள் எழுபது பிரிவுகளையுடையன. அதில் மிகவும் இலேசானது ஒருவன் தன் தாயைப் புணர்வது போன்ற பாவமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, பைஹகீ)

13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்

எவர்கள் அனாதைகளின் பொருட்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) அவர்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பிளும் நுழைவார்கள். (4:10)

அனாதைகளின் பொருளை அவர்கள் பிராயமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி, தொடாதீர்கள்... (6:152)

அனாதையைப் பொறுப்பேற்பவனும் நானும் சுவர்க்கத்தில் இணைந்து இருப்போம் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

14. அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் பொய்யுரைத்தல்

(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் மறுமை நாளன்று கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்... (39:60)

பொய்யெனத் தெரிந்தும் என் மீது பொய்யுரைப்பவன் பொய்யனாவான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்

....உங்களில் (பொறுமையும்) சகிப்புத்தன்மை(யும்) உடைய இருபது பேர்களிருந்தால் இருநூறு பேர்களை வெற்றி கொண்டு விடுவார்கள். (8:65)

16. தலைவன் அநீதி செய்தல்

எந்தத் தலைவனாவது தன் கீழுள்ளவர்களுக்கு எதிராக, சதி செய்தால் அவன் நரகவாதியாவான் (தப்ரானி)

எவனுக்கு அதிகாரமளிக்கப்பட்டு அதை அவன் முறையாக நிறைவேற்றவில்லையோ அவனுக்கு அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கிவிடுவான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

17. பெருமை

நிச்சயமாக அவன் கர்வங்கொண்டவர்களை விரும்பமாட்டான். (16:23)

பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே, மனிதர்களுக்கு அது எவ்வகையிலும் பொருந்தாது. கண்ணியம் எனது ஆடை, பெருமை எனது போர்வை என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

18. பொய்ச்சாட்சி கூறல்

பொய்ச் சாட்சியம் கூறுபவனின் பாதமிரண்டும் மறுமையில் அவன் நரகம் போகும் வரை அசையாமலிருக்கும் என நபி அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா, ஹாகிம்)

19. மது அருந்துதல்

எவன் இவ்வுலகில் மது அருந்துகிறானோ அவன் மறுமையில் நரகவாதிகளின் ஊணைக் (சீழை) குடிப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ)

அல்லாஹ் என்னுடைய உம்மத்திற்கு மதுவை மருந்தாக ஆக்கவில்லை. (மது சேர்ந்த மருந்தும்கூட ஹராம்) என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, அஹ்மத், ஹாகிம்)

20. சூது

விசுவாசிகளே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், விக்கிரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்

எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி (அதனை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அ(த்தயைக)வர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள் (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் (வரம்பு மீறிய) தீயவர்கள். (24:4)

22. மோசடி செய்தல்

''மோசம்'' செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசடிசெய்தால் அவர் அந்த மோசடி செய்த பொருளையும் மறுமை நாளில் (தம்முடன்) கொண்டு வரவேண்டியிருக்கும்... (3:161)

23. களவு

ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இ(த்தீ)ச் செயலுக்கு அல்லாஹ்விடமிருந்து உள்ள தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தோனும் ஞானமுடையோனுமாகியிருக்கிறான். (5:38)

24. வழிப்பறி

ஒருவன் திருடினால் கையை வெட்டுங்கள், மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால் காலை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் கையை வெட்டுங்கள், மீண்டும் செய்தால் மற்றக் காலை வெட்டுங்கள் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள் (அபூதாவூத், நஸயீ)

25. பொய்ச் சத்தியம்

மறுயைமில் அல்லாஹ் மூவரின் பாவத்தை மன்னிக்கமாட்டான், அவர்களோடு பேசவும் மாட்டான் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு அவர்கள் யாவரெனில்

1. தரையில் படும்படி உடை உடுப்பவன்,

2. கொடுத்ததைச் சொல்லிக்காட்டுபவன்,

3. பொய்ச்சத்தியம் செய்து தன் பொருளை விற்பவன் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா)

26. அநீதி இழைத்தல்

அடியார்களே! எனக்கு நானே அநீதத்தை ஹராமாக்கியுள்ளேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கியுள்ளேன். ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்! என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

27. கப்பம் பெறல்

(குற்றம் சுமத்த) வழி ஏற்படுவதெல்லாம் மனிதர்களுக்கு அநியாயம் செய்து நியாயமின்றி, பூமியில் கொடுமை செய்கிறார்களே, அவர்கள் மீதுதான், அத்தகையோர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)

28. தகாத உணவு

நீங்கள் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் உண்ணவேண்டாம் (2:188)

அனஸ்! உன் உழைப்பைச் சுத்தமானதாக்கிக் கொள்! தகாத உழைப்பிலிருந்து ஒரே ஒரு கவளம் உடலினுள் சென்றால் நாற்பது நாட்களுக்கு பிரார்த்தனைகள் ஒப்புக் கொள்ளப்படமாட்டாது (தப்ரானீ)

29. தற்கொலை

எவன் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்வானோ அவன் அதே ஆயுதத்தால் நரகில் துன்பமனுபவிப்பான். விஷமருந்தி உயிரைப் போக்கியவன் தன் கையில் விஷத்தை வைத்துக் கொண்டே நரகில் துன்பப்படுவான். மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்தவன் நரகக் குழியில் குதித்துக் கொண்டேயிருப்பான். எப்பொழுதும் மீட்சியைக் காணவே மாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ)

30. பொய்

... யார் வரம்பு மீறுவதுடன் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (40:28)

மாபெரும் சதியாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

31. கெட்ட நீதிபதி

... எவர்கள் அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே (5:44)

32. அதிகாரியின் இலஞ்சம்

இலஞ்சம் வாங்குபவனையும், கொடுப்பவனையும் அல்லாஹ் சபிப்பானாக என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, ஹாகிம்)

33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்

ஆணுக்கொப்பாகும் பெண்ணையும், பெண்ணுக்கொப்பாகும் ஆணையும் அல்லாஹ் சபிப்பானாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா)

34. கூட்டிக் கொடுத்தல்

(கேவலமான) ஒரு விபச்சாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபச்சாரியை அல்லது இணை வைத்து வணங்குபவளை அன்றி (வேறு ஒருத்தியையும்) மணந்து கொள்ள மாட்டான். ஒரு விபச்சாரி ஒரு விபச்சாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி வேறு எவரையும் மணந்து கொள்ள மாட்டாள். இத்தகைய திருமணம் விசுவாசிகளுக்கு தடுக்கப்பட்டிருக்கிறது. (24:3)

35. ஆகாததை ஆகுமாக்குபவன்

36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை

(நபியே!) உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்: அசுத்தங்களை வெறுத்து விடும் (74:4,5)

37. முகஸ்துதி

சிறிதளவாவது முகஸ்துதி சேர்ந்தால் அச்செயல் ஷிர்க்கை ஒத்ததாகும். அது பாவமுமாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், தப்ரானி)

38. கற்ற கல்வியை மறைத்தல்

'அறிஞர்களிடம் வாதிட்டு வெல்வதற்கும்', பாமரமக்களிடம் 'அறிவாளி' எனப் பெயர் எடுப்பதற்கும், 'மக்களைத் தன்பக்கம் திருப்புவதற்கும் கல்வி கற்பவனை' அல்லாஹ் நரகில் நுழையவைப்பான் என நபி அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

39. சதி செய்தல்

நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெறவிட மாட்டான் (12:52)

சதியும், பொய்யும் இல்லாத எல்லா விஷயங்களையும் அல்லாஹ் பதிந்து கொள்கிறான் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்

''சதி செய்பவனும், உலோபியும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும்'' சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (நஸாயி, திர்மிதி)

41. விதியைப் பொய்ப்படுத்துதல்

எல்லாச் சமூகத்தவர்களிலும் மஜுஸிகள் (நெருப்பை வணங்கும் மிகக் கெட்டவர்கள்) உள்ளனர். என் உம்மத்தின் மஜுஸிகள் விதியைப் பொய்யாக்குபவர்களாவர் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

42. மற்றவர்களின் இரகசியத்தை ஒற்றுக் (ஒத்துக்) கேட்டல்

43. கோளுரைத்தல்

இழிந்தவனான, அதிகம் சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்படியாதீர். (அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (68:10,11)

44. திட்டுதல் (சபித்தல்)

ஒரு முஸ்லிமைத் திட்டுவது கெட்டதாகும். அவனைக் கொலை செய்வது குஃப்ராகும் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸாயி)

45. வாக்கு மாறுதல்

விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள் (5:1)

நயவஞ்சகனின் அடையாளம் மூன்று: அவன் தொழுதாலும், நோன்பு பிடித்தாலும் தான், ஒரு முஸ்லிம் என எண்ணிக் கொண்டாலும் சரியே (நயவஞ்சகனேயாவான்)

1. பேசினால் பொய்யுரைப்பான்

2. வாக்களித்தால் மாறு செய்வான்

3. நம்பினால் மோசடி செய்வான் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்

எவரொருவர் ஜோதிடனை அணுகி, எதைப்பற்றியாவது கேட்டு அவன் கூறியதை உண்மை என நம்பிக்கை கொள்வாராயின் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

47. கணவனுக்கு மாறு செய்தல்

... எவளும் (கணவனுக்கு) மாறுசெய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையிலிருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள், (அதிலும் சீர்திருந்தாவிடில்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு வழிப்பட்டு விட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேன்மையானவனும், மிகப்பெரியவனுமாக இருக்கிறான். (4:34)

48. உருவப் படம் வரைதல்

நாயும், உருவப்படங்களுமுள்ள வீட்டில் மலக்குகள் நுழையமாட்டார்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

49. ஒப்பாரி வைத்து அழுதல்

ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்கு முன் தௌபாச் செய்யவில்லையானால் தாரினால் ஆன சட்டை போடப்பட்டு நரகில் வேதனை செய்யப்படுவாள் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், இப்னுமாஜா)

50. கொடுமை செய்தல்

(அளவு மீறி) மனிதர்கள் மீது அக்கிரமங்கள் செய்து நியாயமின்றி பூமியில் கொடுமை செய்வோருக்கு எதிராகத்தான் (குற்றஞ் சாட்ட) வழி இருக்கிறது. இத்தகையோருக்கு மிகத்துன்புறுத்தும் வேதனையுண்டு. (42:42)

51. வரம்பு மீறுதல்

எவன் பெருமைக்காக ஆடையை பூமியில் படும்படி (உடுத்தி) இழுத்து (நடக்கின்றானோ) அவனை மறுமையில் அல்லாஹ் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான் என நபி அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயி)

52. அயல் வீட்டாரைத் துன்புறுத்துதல்

அபூதர்ரே! நீர் கறி சமைத்தால் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கொடுப்பதற்காக அதில் சிறிது தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்வீராக என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அண்டை வீட்டார் பசித்திருக்கும்போது வயிறாற உண்பவன் மூஃமினல்லன் என நபி அவர்கள் கூறினார்கள். (ஹாகிம், பைஹகீ)

53. முஸ்லிம்களைத் துன்புறுத்துதல்

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரராவார் சகோரத முஸ்லிமுக்கு அநீதமிழைப்பதோ அவரை அவமானப்படுத்துவதோ பழிப்பதோ கூடாது என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)

54. துறவிகளைத் துன்புறுத்துதல்

எவன் என் நேசர்களைத் துன்புறுத்துகிறானோ அவனோடு நான் சண்டையிடுவேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

55. மமதையும், தற்பெருமையும்

...பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! கர்வங்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதேயில்லை. (31:18)

56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்

தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் உண்பதையும், குடிப்பதையும் பட்டாடைகளை அணிவதையும், அதில் உட்காருவதையும் நபி அவர்கள் தடுத்துள்ளார்கள் என அபூஹுதைபா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

ஒரு மனிதரின் கையில் தங்கத்தினாலான மோதிரம் இருப்பதை நபியவர்கள் கண்டு அதனைக் கழற்றிவிட்டு, யாரும் நரகத்து நெருப்புத் துண்டிலிருந்து ஒரு துண்டை அணிந்து கொள்வார்களா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம்)

ஒரு கையில் தங்கத்தையும், மற்றொரு கையில் பட்டாடையையும் எடுத்துக் காண்பித்து, இவையிரண்டும் என் உம்மத்திலுள்ள ஆண்களுக்கு ஹராமானதாகும் (விலக்கப்பட்டதாகும்) என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸாயி)

57. அடிமை ஒளிந்தோடல்

நபி அவர்கள் காலத்தில் இந்த அடிமைப் பிரச்சினை இருந்தது. அவர்களுக்கென்று சில சட்டங்களும் இருந்தன. இப்போது உலகில் எங்குமே அடிமைகள் இல்லையாகையால் இதுபற்றிய விளக்கமும் தேவையில்லை என்றே எண்ணுகிறோம்.

58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல் (பலியிடுதல்)

அல்லாஹ் அல்லாதவருக்கு யார் அறுத்துப் பலியிடுகின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ் அல்லாதவருக்கு நேர்ச்சை செய்யவும் கூடாது. அறுத்துப்பலியிடுவதும் கூடாது. இப்படிப்பட்ட இறைச்சியை உண்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.

59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்

தன் சொந்த, தகப்பனைப் புறக்கணித்து விட்டு வேறொருவனைத் தகப்பனாக ஏற்றுக் கொள்பவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

60. மேலதிக நீரைத்தடுத்தல்

'மற்றவனுடைய பயிர் செழிப்பாக வளரக்கூடாது' என்பதற்காக மேலதிக நீரைத் தடுத்து விடாதீர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) எனவும்,

61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்

நீங்கள் அளந்தால் பூரணமாக அளவுங்கள் நிறுத்தால் சரியான எடையைக்கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) நன்மையையும் மிக்க அழகான பலனையும் தரும். (17:35)

62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்

அல்லாஹ்விடத்தில் மிகக் கோபமான மனிதர்கள் வீண் விதண்டாவாதம் பண்ணுபவர்கள் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்

(சொல்லுங்கள் நபியே!) அல்லாஹ் எங்களுக்கு விதித்துள்ளதைத் தவிர (வேறொன்றும்) நிச்சயமாக எங்களை அணுகவே அணுகாது (9:51)

64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்

யார் என் நேசரை பகைக்கின்றாரோ அவரோடு நான் ''யுத்தப் பிரகடனம்'' செய்வேன் என அல்லாஹ் கூறியதாக நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி)

65. தனித்துத் தொழுதல்

ஜமாஅத்தோடு தொழும் தொழுகை, தனிமையில் தொழும் தொழுகையை விட இருபத்தி ஏழு மடங்கு சிறந்தது என நபிÉ அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

66. ஜும்ஆவைத் தவற விடல்

எவன் அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களைத் தவற விடுகிறானோ (நேர்வழியைத் தவறவிட்டவன் என்பதாக) ''அவனது உள்ளத்தில் முத்திரையிடப்பட்டுவிடும்'' என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

...(மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டத்தை உண்டு பண்ணாதவனாக இருக்க வேண்டும். (இது) அல்லாஹ்வுடைய கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தோனும், மிகப்பொறுமை உடையோனுமாக இருக்கிறான். (4:12-14)

68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான். (4:142)

69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்

யுத்த காலங்களில் எதிரியின் நிலைகளை அறிவதற்காக மட்டும் உளவு பார்க்க அனுமதியுண்டு. ஒரு தளபதி இதற்காகச் சிலரை உளவாளிகளாக ஊதியங்கொடுத்து வைத்துக் கொள்ளவும் முடியும். நபிÉ அவர்கள் உளவு பார்க்க சில தோழர்களை யுத்த காலங்களில் அனுப்பியுள்ளார்கள்.

70. நபித் தோழர்களைத் தூஷித்தல்

முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாத்தில்) முதலாவதாக முந்திக்(கொண்டு விசுவாசங்) கொண்டார்களோ அவர்களையும், நற்கருமங்களில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகிறான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். (9:100)