நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Sunday, March 28, 2010

Dr.Zakir Naik's dialogue with Sri Sri Ravi Sankar in Tamil

Dr.Zakir Naik's dialogue with Sri Sri Ravi Sankar in Tamil
இறைவனைப்பற்றி இந்து மற்றும் இஸ்லாமிய புனித வேத நூல்களின் கருத்தாவது.
தமிழில் IIM வெளியீடு காயல்பட்டணம்.






















































இந்த வீடியோவை youtube ல் அப்லோட் செய்த சகோதரர்களுக்கு நன்றி

Saturday, March 27, 2010

காயல்பட்டினத்தில் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால்

அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் அரங்கேறும் விழா .

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்
அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே!நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும். (திருக் குர்ஆன் 7:194)
ரபீவுல் ஆகிர் மாதம் பிறந்து விட்டது. முஹ்யித்தீன் ஆண்டவர்(?) பிறந்த நாள்விழா கொண்டாட்டங்கள் குதூகலத்துடன் தொடங்கப்போகின்றன. இதயத்தில் இதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச ஈமானும் கொடிமரங்களில் இனி தஞ்சமடையப் போகின்றன. (நவு+து பில்லாஹ்) அல்லாஹ் நம்மைக் காப்பானாக.
தூய இஸ்லாத்தில் இல்லாத திருவிழாக்களும் வழிகேடுகளும் மாற்றார் எள்ளி நகையாடும் விதத்தில் முஸ்லிம்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களால் இன்னமும் அரங்கேற்றப் படுவதைக் கண்டு நம் நெஞ்சு பொறுக்குதில்லையே!
அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அநாச்சாரங்களில் முஹ்யித்தீன் அப்துல்; காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயரால் நடக்கும் அநாச்சாரங்கள் தான் கொடுமையிலும் கொடுமை.

இதை அல்லாஹுவின் அச்சமின்றி அரங்கேற்றுபவர்கள் மார்க்கம் படித்த உலமாக்கள்.

காயல்பட்டினத்தில் அன்னாரின் பெயரால் நடத்தப்படும் அநாச்சாரங்களை எதிர்த்து நமது சகோதரர்களால் வெளியிடப்பட்ட நோட்டீஸ் இங்கே இணைத்திருகின்றோம்.

படத்தை பெரிதாக்க படத்தில் சொடுக்கவும்

ப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் அறிவுரையைக் கேளுங்கள்
ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக திக்ரு ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களை பார்த்து ப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள், நான் நபி அவர்களின் தோழர்களின் ஒருவனாக இருந்திருக்கிறேன். நபி அவர்களுடைய காலத்தில் யாரும் இவ்வாறு திக்ரு, ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி அவர்கள் காட்டித்தராத பித்அத்தைச் செய்கிறீர்கள் என்று கூறி அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.

அன்னாரின் பெயரால்.............


எத்திவைப்பதுதான் நம் மீது கடமை
42:48. எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்); நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்; இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை – நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் – நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான்.

42:53. (அதுவே) அல்லாஹ்வின் வழியாகும்; வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (யாவும்) அவனுக்கே சொந்தம் – அறிந்து கொள்க! அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீண்டு வருகின்றன.


மாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி, அதை பித்அத்து ஹஸனா(அழகிய பித்அத்து) என்று சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே உண்டாக்கி விட்டான்.
மாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடை முறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய் ருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.

மாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன் நபி அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்து விட்டார்கள் என்றே கருதுகிறான்.எனேன்றால், அல்லாஹ், அல்யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்……என்று சொல்லிவிடடான். அன்று மார்க்கமாக ல்லாதது இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.
மாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது:ரசூல் அவர்களும், அவர்களது தோழர்களும் ருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும். நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ

சகோதரர்களே! உங்கள் அனைவருக்கும் இறுதியாக கீழே உள்ள அல்லாஹ்வின் வார்த்தையை (திருக்குர்ஆன்) மற்றும் ஹதீஸ்-ஐ எத்திவைக்கிறேன்!

அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! மேலும் நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டும் விலகி இருப்பீராக! (7:199)

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள் கூறினார்கள். (ப்னு மஸ்வூத் (ரலி) ,ஜாபிர்(ரலி) புகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)

எனதருமைச் சகோதர சகோதரரிகளே! உத்தம நபிகளாரின் உண்ணதமான வாழ்க்கை முறையின் (ஹதீஸ்களின்) பக்கம் விரைந்திடுங்கள் தங்களின் மறுமைக்காக குர்ஆன் – ஹதீஸ் அல்லாத பிற கிதாபுகளை புறம்தள்ளிவிடுங்கள்.

நம அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ்வே போதுமானவன்! நாம் மார்க்கத்தை எத்திவைப்பவர்களே!

Thursday, March 25, 2010

குழப்பத்தை தோற்றுவிக்கும் மத்ஹபுச் சட்டங்கள்

‘அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.’ (அல்குர்ஆன் 4:82)

இஸ்லாம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தத்துவத்தை உரக்கச் சொல்லக் கூடிய ஓர் மார்க்கமாகும். இஸ்லாத்தில் ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன், வெள்ளையன். கறுப்பன் என்ற வித்தியாசம் கிடையாது. அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்பதை உலகிற்குப் போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை வேற்று மதத்தில் இருப்பவர்கள் கூட ஏற்றுக்கொள்கின்றனர்.

இத்தூய இஸ்லாமிய மார்க்கத்தில் இன வேறுபாட்டை காட்டும் வகையில் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலியென்று மத்ஹபுகளின் பெயரால் இவர்கள் பிரிந்தது மாத்திரமின்றி சட்டங்களிலும் பாகுபாடு காட்டுவது அல்லாஹ்வுக்குச் சொந்தமான மார்க்கம் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சட்டம் ஒன்றுதான் என இறைவனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் கூறியிருக்க மத்ஹபுகளின் பெயரால் பிரிந்தவர்கள் ஒரே விடயத்தில் பல்வேறுபட்ட சட்டங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். நாம் பின்னால் கூறப்போகும் ஒரே விடயத்தில் ஷாபி மத்ஹபுக்காரர்களுக்கு கூடும் என்றும், ஹனபி மத்ஹபுக் காரர்களுக்கு கூடாது என்றும், மாலிகி மத்ஹபுக் காரர்களுக்கு இரண்டும் கூடும் என்றும். சட்டம் அமைந்திருப்பதைக் கானலாம்.

இவ்வாறான சட்டங்கள் மூலமாக அல்லாஹ்வுக்குச் சொந்தமான மார்க்கத்தில் மக்கள் பலதரப்பட்ட அடிப்படையில் காணப்படுகின்றனர். இன்னும் சிலர் இக்கருத்துக்களில் எது சரியானது? என்று குழம்பிப் போகின்றனர். இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் பற்றிய அறியாமையாகும்.

இனி மத்ஹபுகளில் உள்ள மக்களைக் குழப்பக்கூடிய சட்டங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
இஸ்லாம் வுழுவை முறிக்கக் கூடிய காரியங்கள் எவை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அவற்றில் ‘ஒரு பெண்ணைத் தொட்டால் உளூ முறியாது. மாறாக, உடலுறவு கொண்டால்தான் உளூ முறியும்’ என்பதும் ஒன்றாகும்.

ஆனால் மத்ஹபுகள் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பாருங்கள்.

ஷாபி மத்ஹபில் ஒரு பெண்ணை ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியும்.


இது தொடர்பாக நவவி அவர்கள் தமது மஜ்மூஃ என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.
பார்த்தால் ஆசை ஏற்படக்கூடிய அந்நிய ஆண் அல்லது பெண்ணுடைய உடலுறுப்புக்கள் சந்தித்தால் தொட்டவரின் உளூ முறிந்து விடும். ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியும். மறந்து தொட்டாலும் விரும்பித் தொட்டாலும் சரியே! (நூல்: அல் மஜ்மூஃ, பாகம்-2 பக்கம்-26,33)

ஹனபி மத்ஹபில் ஒரு பெண்ணை ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியாது. இது தொடர்பாக இப்னு நஜ்ம் அவர்கள் தமது அல் பஹ்ருர் ராயிக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.

ஒரு பெண்ணுடைய உடம்பை ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியாது. (நூல்: அல் பஹ்ருர் ராயிக் பாகம்-1 பக்கம்-47)

இமாம் மாலிக்கிடத்தில் ஒரு பெண்ணை ஆசையோடு தொட்டால் மாத்திரம்தான் உளூ முறியுமேயன்றி ஆசையின்றித் தொட்டால் உளூ முறியாது. இது தொடர்பாக அபுல் அஸ்ஹரி அவர்கள் தமது ‘அத்தமருத் தானி பீ தக்ரீபில் மஆனி’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.

ஆசையோடு தொட்டால் தொடுவதின் மூலம் உளூ செய்வது அவசியமாகும். இன்பத்தை அடைந்தாலும் அடையாவிட்டாலும் சரியே! (நூல் அத்தமருத் தானி பீ தக்ரீபில் மஆனி, பாகம்-1 பக்கம்-30)

இமாம் அஹ்மதிடத்தில் ஒரு கருத்தின் பிரகாரம் ஆசையோடு தொட்டால் மாத்திரம்தான் உளூ முறியுமேயன்றி ஆசையின்றித் தொட்டால் உளூ முறியாது. இது தொடர்பாக மாவுர்தி அவர்கள் தனது ‘அல் இன்ஸாப்’ என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார்.

ளூவை முறிக்கக் கூடிய அம்சங்களில் ஒன்று ஒரு பெண்ணை ஆசையோடு தொடுவதாகும். (நூல்: அல் இன்ஸாப், பாகம்-1 பக்கம்-211)

மற்றொரு கருத்தின் பிரகாரம் ஒரு பெண்ணை ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியாது என்பதாகும்.

இந்தக் கருத்துக்களின் பிரகாரம்தான் எமது சகோதர, சகோதரிகள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்றால் அவர்களை கூட்டிச் செல்லும் வழிகாட்டி களான மார்க்க அறிஞர்கள் சஊதி அரேபியாவில் வைத்து ஷாபி மத்ஹபைப் பின்பற்றும் நம்மவர்களை ஹனபி மத்ஹபுக்கு மாறிவிடுமாறு கூறுவர்.

இதற்கு அறபியில் ‘மஸ்அலதுத் தல்பீக் ஒரு மத்ஹபுக் கருத்தில் இருந்து மற்றொரு மத்ஹபுக் கருத்துக்கு மாறல்’ என்று சொல்லப்படும். இதன் அடிப்படையில் தான் நம்மவர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குறித்த விடயத்தில் மத்ஹபுகளின் பெயரால் பல்வேறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ளதை அவதானிக்கலாம். இதில் சரியான கருத்து எது என்பதை அல்குர்ஆன், ஸுன்னாவில் தேடிப்பார்த்தால் பொதுவாக பெண்ணைத் தொட்டால் உளூ முறியாது என்பதை அறியலாம். ஆனால், தொடும் போது முன்துவாரத்தால் ஏதாவது வெளிப்பட்டால் உளூ முறிந்துவிடும் என்பதை கவனத்திற் கொள்ளவும்.


பெண்களைத் தொட்டால் வுழு முறியாது என்பதற்கான ஆதாரங்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது மனைவிமார் சிலரை முத்தமிட்டு விட்டு உளூ செய்யாமல் தொழுதார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூற்கள்: அபூதாவுத்-179 அஹ்மத்-25766)

‘நான் நபி(ஸல்)அவர்களுக்கு முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். என் கால்களிரண்டும் அவர்களின் முகத்திற்கு நேராக இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும் போது (விரலால் என் காலில்) குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-513)

ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது.

அப்போது அவர்கள் ‘அல்லாஹும்ம அஊது பிரிளாக்க மின் சகதிக்க வபிமுஆஃபாதிக்க மின் உகூபதிக்க வஅஊது பிக்க மின்க்க லா உஹ்ஸி ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நப்ஸிக்க’ என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

(பொருள்: இறைவா! உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன் (தண்டனையி) னையை விட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்து கொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்)’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-839)

நபி மொழிகள் தெட்டத்தெளிவாக உளூ முறியாது என்று கூறியிருக்க மத்ஹபுகள் வுழு முறியும் எனக்கூறுகிறது. அல்லாஹ்வின் மார்க்கத்தில் தமது விருப்பத்தின் பேரில் ஒன்றைக் கூடும் என்றோ, கூடாது என்றோ சொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு கூட அதிகாரம் கிடையாது. நபியவர்கள் தமது சுயவிருப்பத்தின் பேரில் தேனை தமக்குத் தாமே தடுத்துக் கொண்ட போது அல்லாஹ் சூறதுத் தஹ்ரீம் என்ற ஓர் அத்தியாயத்தையே இறக்கி நபியவர்களைத் கண்டித்தான். இந்த விபரத்தை ஸஹீஹுல் புஹாரி-4911 இலக்கத்தில் பார்க்கலாம்.

ஒரு பெண்ணை ஆசையோடு தொட்டாலும் ஆசையின்றித் தொட்டாலும் உளூ முறியும் என்று கூறுபவர்கள் பிரதான ஆதாரமாக எடுத்து வைக்கும் ஆதாரமும் அதற்கான தெளிவான விளக்கமும். இக்கருத்தைக் கொண்டவர்கள் திருமறைக் குர்ஆனில் 5ம் அத்தியாயம் 6ம் வசனத்தில் உளூவை முறிக்கக் கூடிய காரியங்களைக் குறிப்பிடும் போது அல்லது (உடலுறவின் மூலமாக) பெண்களை தீண்டினால் என இறைவன் குறிப்பிடுகின்றான்.

இவ்வசனத்தை இவர்கள் பெண்களைத் தொட்டால் என தவறாக மொழியாக்கம் செய்கின்றனர். சரியான மொழியாக்கம் நாம் மேலே குறிப்பிட்டதாகும். இதை நாம் பின்வரும் அடிப்படையில் கூறுகிறோம். ஆதாரபூர்வமான நபிமொழிகள் தெட்டத் தெளிவாக பெண்களைத் தொட்டால் உளூ முறியாது எனக்குறிப்பிடுகின்றது.

அடுத்து மேலே கூறப்பட்ட வசனத்தில் இறைவன் கையாலும் சொற்றொடர்களின் போக்கை கவனிக்கும் போது தெளிவாக பெண்களைத் தொடுவதால்; உளூ முறியாது என்பதைக் காணலாம்.

இறைவன் இவ்வசனத்தில் சிறு தொடக்கில் இருப்பவர் உளூ செய்து துப்பரவாக வேண்டும் என்றும் பெருந் தொடக்கில் இருப்பவர் குளித்து துப்பரவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டுவிட்டு, சிறு தொடக்கிற்கு உதாரணமாக மலஜலம் கழிக்கச் சென்று வருவதையும் பெருந் தொடக்கிற்கு உதாரணமாக பெண்களோடு உடலுறவு கொள்வதையும் குறிப்பிடுகின்றான்.

ஹதீஸ்களின் துணையுடன் இவ்வாறுதான் இவ்வசனத்தைப் புரிய வேண்டும். அவ்வாறின்றி பெண்களைத் தொட்டால் என மொழியாக்கம் செய்தால் குர்ஆனின் போக்கிற்கு மாற்றமானதாக அமைந்து விடும்.

நன்றி தாருல் அதர்

Tuesday, March 23, 2010

காயல்பட்டணத்தில் பித்அத்களை எதிர்த்து துண்டு பிரச்சாரம்

நோட்டீஸ்
மீலாது விழாவும், உண்மையே மறைக்கும் சுன்னத்துவல் ஜமாஅத் உலமாக்களும்,
உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:116)

நான் உங்களை வெள்ளைவெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகக் கூடியவர்களைத் தவிர வேறு எவரும் அதில் வழி தவறவே மாட்டார்கள். அறிவிப்பவர்: இர்பால் இப்னு ஸாரியா (ரலி) நூல்: இப்னுமாஜா

பித்அத் புரியும் ஒருவரது தொழுகை, நோன்பு, ஈகை, ஹஜ், உம்ரா, தியாகம், மார்க்கத்திற்காக முயற்சிகள் முதலிய அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட மாட்டா. குழைத்த மாவிலிருந்து தலைமுடி எப்படி இலகுவாக வெளியேற்றப்படுமோ, அதே போல் பித்அத்காரன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவான். அறிவிப்பாளர்: ஹுதைபா(ரலி) நூல்: ஸுனன் இப்னுமாஜ்ஜா

நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா
ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!

மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி(ஸல்) அவர்களோ நாற்பெரும் கலீஃபாக்களோ மற்ற நபித்தோழர்களோ அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 - பக்கம் 172)

ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

மீலாது விழாவும் கிரிஸ்மஸும்
ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?

பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)

கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகிஇ முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.

மீலாது விழாவும் சஹாபாக்களும்
நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம் மீலாது விழா கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.

அரபுக் கவிதைகள்
பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மவ்லிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைதான் இருக்கிறது. ஆனால் அவை பள்ளிவாசலிலும் கூட கூட்டம் கூடிஇ புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்) கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன. எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை புகழ்வதற்கே பாடப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயிலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.

பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?

இது சரியான காரணம்தானா?
மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர். வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை மறைத்துவிட்டார்கள் என்று கூறவேண்டிவரும். நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். -நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:
நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். (ஹதீஸின் சுருக்கம் - முஸ்லிம்)

நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களும் இறுதி நபியும் ஆவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள். செய்திருப்பார்கள். அதனை நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி(ஸல்)அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.

இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)

உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் -அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

எனவே நபி(ஸல்)அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.

மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான்.

இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும்போதுஇ நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோஇ அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீலாது விழா என்பது நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூதஇ கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.

மார்க்கத்தில் நூதனச் செயல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நமது இந்த மார்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக ஒருவர் உண்டாக்கினால் அது ஏற்றுக் கொள்ளபட மாட்டாது.(புகாரி, முஸ்லிம்)

இன்னும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் எனக்குபின் வாழ்கின்றாரோ அவர் அதிகமான கருத்து வேருபாடுகளை காண்பார். அப்போது நீங்கள் எனது சுன்னத்தையும் எனக்குப் பின் நேர் வழி பெற்றவர்களான எனது கலீபாக்களின் சுன்னத்தையும் பற்றி பிடித்து கொள்ளுங்கள். (அதனால் ஏற்படும் சோதனைகளின் போது) கடவாய் பற்களால் கடித்து(ப்பொருத்து)க்கொள்ளுங்கள். மார்கத்தில் புதிய அமல்களை புகுத்துவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டது அனைத்தும் பித்அத்துகளே, அனைத்து பித்அத்துகளும் வழிகேடாகும். வழிகேடனைத்தும் நரகில் கொண்டு போய் சேர்க்கும். (அஹ்மத், அபூதாவுத், நஸஈ, திர்மிதி)

நிச்சயமாக உம்மு ஸலமா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள், அபீஸீனியா நாட்டில் தாம் கண்ட ஒரு கிறிஸ்தவக் கோயிலையும், அதில் உள்ள உருவப் படங்களையும் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் அப்போதவர்கள் அது, அவர்களில் நல்லவர் மரணித்து விட்டால், அ(ந்த நல்ல)வருடைய சமாதியின் மீது மஸ்ஜிதைக் கட்டி, அந்தப்படங்களை அதில் உருவமைத்து விடுவார்கள். அத்தகையோரே அல்லாஹ்விடத்தில் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் எனக் கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா - ரலியல்லாஹூ அன்ஹா நூல்: புகாரீ

உங்களில் ஒருவர் எனக்கு மிகவும் உற்ற தோழராக ஆகுவதை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன் ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் - (நபி) இப்றாஹீமை தன் உற்ற தோழராக அவன் எடுத்துக் கொண்டது போன்று - என்னையும் அவன் உற்ற தோழனாக எடுத்துக் கொண்டான். நான் என் உம்மத்தவரிலிருந்து ஒரு உற்ற தோழரை எடுத்துக் கொள்பவனாக இருந்தால், அபூபக்கரையே உற்ற தோழராக எடுத்திருப்பேன் அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தவர்கள் தங்களுடைய நபிமார்களின் சமாதிகளை வணக்கத்தலங்களாக (மஸ்ஜிதுகளாக) எடுத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். ஆகவே, அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் சமாதிகளை வணக்கத்-தலங்களாக (மஸ்ஜிதுகளாக) எடுத்துக் கொள்ளாதீர்கள் ஏனெனில் நிச்சயமாக நான் அதை விட்டும் உங்களைத் தடுக்கிறேன் என நபி தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியேற்றேன். அறிவிப்பாளர்: ஜூன்துப் பின் அப்துல்லாஹ் - ரலியல்லாஹூ அன்ஹூ நூல்: முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள்:

எனது மன்னறையை விழா கொண்டாடும்இடமாக ஆக்கி விடாதீர்கள். அல்லாஹ் யூதர்களையும், நஸாராக்களையும் சபித்து விட்டான். (ஏனென்றால்) அவர்கள் தங்கள் நபி மார்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிவிட்டார்கள். (மண்ணறையை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்குவதை விட்டு விட்டு) என் மீது ஸலவாத் கூறுங்கள்.(அபூதாவுத், திர்மிதி)

நபி(ஸல்) அவர்கள் அலீ (ரலீ) அவர்களுக்கு உபதேசித்துள்ளார்கள்:

அலியே! நீங்கள் எந்த உருவங்களையும்அழிக்காமல் விட்டு விடாதீர்கள். தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விட்டு விடாதீர்கள்.(அஹ்மத், முஸ்லிம்)

அல்லாஹ் கூறுகின்றான்:
நம் தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள்(மனமொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.(59:7)

இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்:
எவர் (நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அத்தகையவர்கள்(உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்து விடுவதையோ அல்லது துன்புருத்தும் வேதனை பிடித்து விடுவதையோ பயந்து கொண்டிருக்கவும்(24:63)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமது மார்கத்தில் இல்லாத காரியங்களை யாறேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும். (முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்:
மார்கத்தில் புதிதானவற்றை செய்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் மார்க்கத்தில் மிகக் கெட்டது அதில் புதிதான வற்றை ஏற்படுத்துவதாகும்.(திர்மிதி)

அல்லாஹ் கூறுகின்றான் :
அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணைவைப்பாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா? (42:21)

எனவே மார்க்க விஷயங்களில் புதிதாக ஒன்றை ஏற்படுத்துவதை இஸ்லாம் வெருத்து வழிகேடெனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பித்அத்காரன் அவனது பித்அத்தை விடும் வரை நிச்சயமாக அல்லாஹ் அவனது தவ்பாவை ஏற்கமாட்டான்.(தப்ரானி)

மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
எல்லா பித்அத்துகளும் வழிகேடுதான். அவற்றை செய்பவன் அதை நன்மையென கருதினாலும் சரியே, பித்அத் என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாமலிருந்து பின்னர் உண்டாக்கப்பட்டவையாகும். அதனால் நபி(ஸல்) அவர்கள் பிறந்த தின(மீலாது) விழாவும் பித்அத் ஆகும்.

மேலும் நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதை கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும், இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104)

அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின அடிப்படையில் அழைக்கும் சகோதரர்கள்.

இவண்,
மத்ரஸா அண்ணை கதிஜா (ரழி)
காயிதே மில்லத் நகர், காயல்பட்டணம். செல் : 9894431440

இவ்வாறு நோட்டீஸ் வெளியிடப்பட்டது. மேலும் இதுவரையிலும் மாற்று கொள்கையுடைவர்களிடம் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Monday, March 22, 2010

நபிவழிக்கு முரணான மத்ஹபுச் சட்டங்கள்

“ நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.” (அல்குர்ஆன் 4:59)

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாக அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் அமைந்திருக்கின்றது. இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொரு முஸ்லிமும் இவ்விரண்டின் அடிப்படையிலும் தமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

மத்ஹபு நூற்களைப் பொறுத்த மட்டில் அவற்றில் அல்குர்ஆனுக்கு மாற்றமான சட்டங்கள் காணப்படுவது போல் நபிவழிக்கு நேர் முரணான சட்டங்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.

01. ஒருவரோ அல்லது பலரோ பள்ளிவாயலுக்கு கூட்டுத்தொழுகைக்காக வந்து இமாமை எந்த நிலையில் கூட்டுத்தொழுகையில் காண்கின்றார்களோ, அவர்கள் அந்த இமாமுடன் சேர்ந்து தொழ வேண்டும்.

இதுதான் நபிவழியும் இஸ்லாத்தின் சட்டமுமாகும். இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

‘(கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும், கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்) தைத் தொழுங்கள், உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-636)

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.

‘இமாம் கடைசி ரக்அத்தின் ருகூவை முடித்ததன் பின் பள்ளிவாயலுக்கு வரும் கூட்டத்தினர் இமாம் சலாம் கொடுக்கும் வரை (தொழுகையில்) சேராமல் பொறுமையாக இருந்து அவர் சலாம் கொடுத்த பின்பு தனி ஜமாத்தாக தொழ வேண்டும். இதுதான் ஸுன்னத்தாகும். (இக்கருத்து ஷாபி மத்ஹபின் பத்ஹுல் முயீன் எனும் நூலில் பாகம்-02, பக்கம்-06ல் கூறப்பட்டுள்ளது)

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.’ (அல்குர்ஆன் 4:59)

02. திருமறை குர்ஆனை ஓதுவது இஸ்லாத்தில் வணக்கமாகக் கருதப்படும் ஓர் அம்சமாகும். ஒருவர் திருக்குர்ஆனை மூன்று நாட்களுக்குக் குறைவாக ஓதி முடிப்பதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று நாட்களுக்குக் குறைவாக ஒரு குர்ஆனை ஓதி முடிப்பதற்குத் தடை விதித்தார்கள். இதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

‘நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று கூறினார்கள். இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது! என்று நான் கூறினேன். முடிவில், ஒருநாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக! என்று கூறினார்கள்.

மேலும் ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக! என்றார்கள். இதைவிட அதிகமாக (ஓத) எனக்கு சக்தி உள்ளது! என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக்கொண்டே வந்து முடிவில் மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக! என்று கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1978)

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.

ஒருவர் குர்ஆனை ஒவ்வொரு நாளும் ஒரு தடவை ஓதி முடிக்க வேண்டும். ரமழானில் அறுபது தடவை ஓதி முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் தொழுகையிலேயே ஓதி முடிக்க வேண்டும். (இக்கருத்து ஷாபி மத்ஹபின் இஆனதுத் தாலிபீன் எனும் நூலில் பாகம்-01 பக்கம்-16ல் கூறப்பட்டுள்ளது.)

ஒரு நாளைக்கு இருதடவை குர்ஆனை ஓதிமுடிப்பது சாத்தியமா? என்பது ஒருபுறம் இருக்க, இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? என்பதைக் கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

03. ஜும்ஆத் தொழுகையின் நேரம் தொடர்பாக இஸ்லாம் பின்வருமாறு கூறுகிறது. ஜும்ஆவுக்கு இரண்டு நேரங்கள் உள்ளன. ஒன்று ழுஹர் நேரம் மற்றது முற்பகல் நேரம் இதுபற்றி பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

‘நாங்கள் வெள்ளிக்கிழமை அன்று (மிகவும்) மகிழ்ச்சியாக இருப்போம் என்று சஹ்ல் பின் சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள். நான் ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் மதீனாவிலுள்ள ‘புளாஆ’ எனும் பேரிச்சந் தோட்டத்திற்கு ஆளனுப்பி (அங்கு பயிராகும்) தண்டுக் கீரையின் தண்டுகளைக் கொண்டுவரச் செய்து, அதை ஒரு பாத்திரத்தில் இடுவார். அத்துடன் சிறிது வாற்கோதுமையை அரைத்து அதில் இடுவார்.

நாங்கள் ஜுமுஆத் தொழுதுவிட்டு திரும்பி வந்து அந்த மூதாட்டிக்கு சலாம் சொல்வோம். அப்போது அவர் அந்த உணவை எங்கள் முன் வைப்பார். அதன் காரணத்தினால் நாங்கள் (வெள்ளிக்கிழமை) மகிழ்ச்சியோடு இருப்போம். ஜுமுஆவிற்குப் பிறகுதான் நாங்கள் மதிய ஓய்வு எடுப்போம், காலை உணவையும் உட்கொள்வோம்.’ (அறிவிப்பவர்: அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்), நூல்: ஸஹீஹுல் புஹாரி-6248)

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.

ஜும்ஆத் தொழுகை நிறைவேறுவதற்கு முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று அது ழுஹர் நேரத்தில் தொழப்பட வேண்டும் என்பது. அதற்கு முன் தொழப்பட்டால் அந்த ஜும்ஆ செல்லத்தக்கதல்ல.
(இக்கருத்து ஷாபி மத்ஹபின்; பத்ஹுல் முயீன் எனும் நூலில் பாகம்-02, பக்கம்-62ல் குறிப்பிடப்பட்டுள்ளது.)

04. போதைப் பொருள் பாவனையை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. குறைவாகப் பாவித்தாலும், கூடுதலாகப் பாவித்தாலும் போதை ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் ஹராமேயாகும்.

போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும். இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. ‘அழ்ழாஹ்வின் தூதரே! எங்கள் (பிறந்த இடமான) யமன் நாட்டில் தேனில் ‘அல்பித்உ’ எனப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப் படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது. (ஹராம்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரி (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-6124)

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.

கொஞ்சம் (போதைப் பொருள் சாப்பிடலாம்) என்பதன் கருத்து என்னவெனில் அது அறிவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது. அது போதையூட்டக் கூடியதாக இருப்பினும் சரியே. அதிகம் என்பதன் கருத்து அது அவ்வாறு அறிவில் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.

எனவே, இது மக்ரூஹ் (வெறுக்கத் தக்கது) என்பதுடன் கொஞ்சம் சாப்பிடுவது கூடும். இது ஹராம் ஆகாது. ஆனால், இதைக் கண்டிப்பாகப் பொது மக்களிடம் மறைத்தாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் கொஞ்சம் என்று எண்ணிக் கொண்டு அதிகம் சாப்பிட்டு விடுவார்கள். (இக்கருத்து ஷாபி மத்ஹபின்; இஆனதுத் தாலிபீன் எனும் நூலில் பாகம்-4 பக்கம்-156ல் கூறப்பட்டுள்ளது)

05. இஸ்லாத்தில் அடிப்படை மூலாதாரமான அல்குர்ஆன் முஸ்லிம்களிடத்தில் மகத்துவமிக்க வேதமாகும். அதை ஓதுவதையும் அதன்படி நடப்பதையும் இஸ்லாம் வணக்கமாகக் கருதுகிறது. ஏனெனில் அது இறைவனின் வார்த்தையும் வழிகாட்டலுமாகும். திருக்குர்ஆனில் ஸுரத்துல் பாத்திஹாவுக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

‘நான்(பள்ளிவாசலில்) தொழுதுகொண்டிருந்தபோது என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுதுமுடித்த பிறகு) அல்லாஹ்வின் தூதரே நான் தொழுதுகொண்டிருந்தேன்.

(அதனால்தான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்க வில்லை) என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்’ (இறை நம்பிக்கையாளர்களே) அழ்ழாஹ்வும் (அவனுடைய தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள் என்று 8:24ஆவது வசனத்தில்) சொல்லவில்லையா? என்று கேட்டார்கள்.

பிறகு நீங்கள் பள்ளி வாசலிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக குர்ஆனிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியாயத்தை உங்களுக்கு நான் கற்றுத்தர வேண்டாமா? என்று வினவியபடி எனது கையைப் பிடித்தார்கள்.

நாங்கள் (பள்ளிவாசலிலிருந்து)வெளியேற முனைந்த போது நான் (அவர்கள் வாக்களித்ததை நினைவூட்டி)அல்லாஹ்வின் தூதரே தாங்கள் குர்ஆனிலேயே மகத்துவம் பொருந்திய தோர் அத்தியாயத்தை நான் உங்களுக்குக் கற்றுத்தர வேண்டாமா? என்று கேட்டீர்களே! என்று வினவினேன்.

நபி (ஸல்) அவர்கள் (அது) அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (என்று தொடங்கும் அல்பாத்திஹா அத்தியாயமே) ஆகும். அது திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப் பெற்றுள்ள மேன்மை மிகு குர்ஆனுமாகும் என்று சொன்னார்கள்.’(அறிவிப்பவர்: அபூசயீத் பின் முஅல்லா (ரழி), நூல்: ஸஹீஹுல் புகாரி-5006)

ஆனால், குர்ஆனை அவமதிக்கும் வகையில் குறிப்பாக ஸூரத்துல் பாத்திஹாவை அவமதிக்கும் வகையில் ஹனபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.

சின்னி மூக்கு உடைந்து விட்டால் தன்னுடைய நெற்றியிலும் மூக்கிலும் இரத்தத்தைக் கொண்டு ஸூரத்துல் பாத்திஹா அத்தியாயத்தை எழுதிக் குணமாகும் எனில் அவ்வாறு குணமாவதற்காக எழுதுவது கூடும்.

சிறுநீரில் எழுதினால் குணம் கிடைக்கும் என்றால் பாத்திஹா அத்தியாயத்தை சிறுநீரில் எழுதுவதும் குற்றமில்லை. (இக்கருத்து ஹனபி மத்ஹபின்; ஹாஷியது இப்னு ஆபிதீன் எனும் நூலில் பாகம்-1, பக்கம்-210ல் கூறப்பட்டுள்ளது)

குர்ஆனிலேயே சிறந்த மகத்துவமிக்க அத்தியாயமென்றும் அல்குர்ஆனின் தாயென்றும் போற்றப்படும் அல்ஹம்து அத்தியாயத்தை எந்த அளவு மதித்துள்ளார்கள் பாத்தீர்களா! அல்லாஹ்வின் வேதத்தை சிறுநீரில் எழுதச்சொல்லி அல்குர்ஆனை அவமதிக்கும் இந்த மத்ஹபை தூக்கிப் பிடிப்பது அவசியம்தானா? மத்ஹப் வாதிகள் சிந்திக்கட்டும்.

06. இஸ்லாம் தாம்பத்திய உறவின் மூலம் உடலியல் ரீதியான தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கூறுகிறது. ஒருவன் தனது ஆசையை மணைவியிடத்தில் எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

திருமறை குர்ஆனில் 2:222ம் வசனத்தில் மாதவிலக்கு ஏற்படும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் எப்போது வேண்டுமானாலும் இல்லறத்தில் ஈடுபடலாம் என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக ஷாபி மத்ஹபு நூல் பின்வருமாறு கூறுகிறது.

மாதத்தில் முதல் நாள் இரவிலும் கடைசி இரவிலும் மாதத்தின் நடு இரவிலும் உடலுறவு கொள்வது வெறுப்பிற்குறியதாகும். காரணம் இந்நாட்களில் உடலுறவு கொல்லும் போது ஷைத்தான் விஜயம் செய்கிறான். என்று இஹ்யாவில் வருவதாக முக்னி என்ற நூலில் பதிவாகியுள்ளது. (இக்கருத்து ஷாபி மத்ஹபின்; இஆனதுத் தாலிபீன் எனும் நூலில் பாகம்-3 பக்கம்-273ல் குறிப்பிடப்பட்டுள்ளது.)

இவ்வாறாக நேரடியாகவே நபிவழிக்கு முரண்படக்கூடிய மத்ஹபுச் சட்டங்களை இன்னும் நாம் பின்பற்ற வேண்டுமா?

நன்றி தாருல் அதர்

Thursday, March 18, 2010

மத்ஹபுகளும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும்.

இஸ்லாமிய வரலாற்றில் நபியவர்களின் மரணத்தைத் தொடர்ந்து பல பிரிவுகள் தோன்றின. இப்பிரிவுகளில் முக்கியமாக அரசியல் ரீதியாகத் தோன்றிய பிரிவினறையும்இமத்ஹபுகள் ரீதியாக தோன்றிய பிரிவினரும் குறிப்பிடலாம். இந்தப்பிரிவினர் ஒவ்வொருவரும் குர்ஆன் ஹதீஸை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்று தவறான விளக்கங்கள் கொடுக்கலானார்கள். சரியான ஹதீஸ்களில் தங்களுக்கு சாதகமான விஷயங்கள் இல்லாத போது தங்கள் கொள்கையை வலுப்படுத்த பல ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூற ஆரம்பித்தனர்.

நபி(ஸல்) அவர்கள் எச்சரித்த நான் சொல்லாததை நான் சொன்னதாகச் சொல்பவர் தன்னுடைய இடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்' என்ற ஹதீஸைப் புறக்கனித்து விட்டு தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறு மத்ஹபுகளில் பிடிவாதம் கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் மத்ஹபு கூறும் சட்டங்களுக்கு சாதகமாக பல ஹதீஸ்களை புனைந்து கூறினார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் பின்பற்றும் இமாமை புகழ்ந்து கூறி ஹதீஸ்களை உருவாக்கி கூறிவிட்டு அதை நபி அவர்கள் சொன்னதாகச் சொல்லி விட்டனர்.

'என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார் அவருடைய பெயர் முஹம்மது பின் இத்ரீஸ் (ஷாஃபீ). அவர் என்னுடைய உம்மத்தைக் கெடுப்பதில் இப்லீஸைவிட மிக மோசமானவர்' என்று நபி அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (நூல்: தன்ஷிஹுஷ்ஷரீயத்)

இவ்வாறு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபினருக்கு எதிராக இட்டுக்கட்டினர்

'என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார் அவருடைய பெயர் நுஃமான் பின் தாபித் அவர் அபூஹனீபா என்றப் புனைப்பெயரால் அழைக்கப்படுவார். அவர் தனது கையால் அல்லாஹவுடைய மார்க்கத்தையும் என் சுன்னத்தையும் உயிர்ப்பிப்பார்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக தமது ஹனபி மத்ஹபுக்கு சார்பாக ஒரு பொய்யைத் துணிந்து கூறியுள்ளனர்.

சிலர் தாங்கள் பின்பற்றுகின்ற மத்ஹபு கூறுகின்ற சட்டங்கள் நபி அவர்களுடைய வழிமுறைக்கு மாற்றமாக இருந்தாலும் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக பல பலயீனமான ஹதீஸ்களைக் கூறியுள்ளனர். அவற்றுல் சிலதை இங்கே குறிப்பிடுகினறேன்.

பிலால் (ரலி) அவர்கள் (தொழுகைக்காக) இகாமத் சொல்லும் போது قد قامت الصلاة என்று கூறிய வேளையில் நபியவர்கள் أقامها الله وأدامها அகாமஹல்லாஹு வஅதாமஹா என்று கூறினார்கள்.இது ஒரு ஆதாரமற்ற செய்தி என்ற விடயத்தை ஸாபி மத்ஹபின் பிரபல்யமான இமாமான நவவியவர்கள் குறிக்கிடுகின்றார்கள்.(அல்மஜ்மூஃ பாகம்3 பக்கம்126)

ஒரு பள்ளிவாயளுக்கு அருகாமையில் இருப்பவர் அப்பள்ளிவாயளில்தான் தொழவேண்டும். இது ஒரு ஆதாரமற்ற செய்தி என்ற விஷயத்தை ஷாபி மத்ஹபின் பிரபல்யமான இமாமான நவவியவர்கள் குறிக்கிடுகின்றார்கள்.(அல் மஜ்மூஃபாகம்4 பக்கம்191)

முடியையும் ரத்தத்தையும் நகங்களையும் புதையுங்கள் ஏனனில் நிச்சயமாக அவைகள் இறந்தவையாகும் என நபியவர்கள் கூறினார்கள். இமாம் ஸைலயீ அவர்கள் தமது நஸ்புர் ராயஹ் என்ற நூலில் இமாம் பைஹகி அவர்கள் இது சம்பந்தமாக வரும் அனைத்து அறிவிப்புக்களும் ஆதாரமற்றவையாகும்.
எனக் குறிப்பிடுவதாகக் கூறுகிறார்கள். (நஸ்புர் ராயஹ் பாகம்1 பக்கம்417)

தொழுகையில் நபிவழி தக்பீர் கட்டும்போது வலது கையை இடது கையின் மீதுவைத்து தொப்புளுக்கு கீழே வைப்பதாகும். இமாம் நவவியவர்கள் தமது நூலான ஸரஹு முஸ்லிமில் இந்த செய்தி பலயீனம் என்பது ஏகோபிக்கப்பட்டது எனவும் இமாம் பைஹகி அவர்கள் தமது மஃரிபா எனும் நூலில் இந்த செய்தி ஆதாரமற்றது எனவும் குறிப்பிடுவதாக இமாம் ஸைலயீ அவர்கள் தமது நஸ்புர் ராயஹ் என்ற நூலில் கூறுகிறார்கள்.
(நஸ்புர் ராயஹ் பாகம்2 பக்கம்199)(ஸரஹு முஸ்லிம் பாகம்2 பக்கம்138)

பள்ளிவாயளில் பேசுவது ஒரு மிருகம் புள்ளை சாப்பிடுவது போன்று நன்மைகளை அழித்துவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு ஆதாரமற்ற செய்தியன்று ஹாபிழ் இராக்கியவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
(தக்ரீஜு அஹாதீதில் இஹ்யா பாகம்1 பக்கம்410)

நபியவர்கள் தக்பீர் சொன்னால் தமது இருகைகளையும் கீழே விடுவார்கள்.ஓத நாடினால் வளது கையை இடது கையின்மீது வைப்பார்கள். இது ஒரு ஆதாரமற்ற செய்தி என்று ஹாபிழ் இராக்கியவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தக்ரீஜு அஹாதீதில் இஹ்யா பாகம்1 பக்கம்417)

உங்களில் ஒருவர் மரணித்தால் அவரின் மீது மண்ணை போட்டு கப்ரை சீராக்கிவிட்டு உங்களில் ஒருவர் கப்ரின் தலை மாட்டில் நின்று இன்னாளுடைய மகன் இன்னானே என்று தல்கீன் சொல்லிக் கொடுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறப்பட்டுள்ளது. இதுவும் ஒரு ஆதாரமற்ற செய்தி என்று ஹாபிழ் இராக்கியவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தக்ரீஜு அஹாதீதில் இஹ்யா பாகம்9 பக்கம்408) (அல் மஜ்மூஃபாகம்5 பக்கம்304)

மேற்குறித்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றதாக இருந்தும் ஸாபி மத்ஹபினர் இவைகளை ஆதாரமாகக் கொள்கின்றனர் பிரபல்யமான இமாமான நவவியவர்கள் உட்பட ஆதாரமற்றவைகள் என்று கூறியும் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக இவைகளை ஆதாரமாகக் கொள்கின்றனர். வல்ல இறைவன் வறட்டுப் பிடிவாதத்தை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக.

இன்னும் சிலர் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக சில ஹதீஸ்களைப் புனைந்தும் கூறியுள்ளனர்.

'யார் தனது தொழுகையில் கையை உயர்த்துகிறானோ அவனுக்குத் தொழுகை இல்லை' என்று நபி அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர். காரணம் தொழுகையில் கையை உயர்த்தக் கூடாது என்பதுதான் ஹனபி மத்ஹப் சட்டம். நூல்: அஸ்ஸுன்னத் வமாகானதுஹா

தொழுகையில் இமாம் பிஸ்மியை சப்தமிட்டு ஓதவேண்டுமென்ற மத்ஹபுடையர்கள் அவர்களின் மத்ஹபுக்குச் சாதகமாக பின்வருமாறு ஒரு பொய்யான ஹதீஸை உற்பத்தி செய்து கூறினர்.

'காஃபத்துல்லாஹவில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு இமாமாக நின்று தொழுதார்கள் அப்போது பிஸ்மியை சப்தமிட்டு ஓதினார்கள்' என்று நபி அவர்கள் கூறியதாக பொய்யாகக் கூறியுள்ளனர். நூல்: (தன்ஷி{ஹஷ்ஷரீயத்)

இவ்வாறு மத்ஹபு வெறிபிடித்தவர்கள் இது போன்ற பல ஹதீஸ்களை இடைச்செருகல் செய்துள்ளனர். அவை அவ்வப்போது மக்களுக்கு இனம் காட்டப்பட்டு வந்துள்ளது.

நன்றி தாருல் அதர்