Thursday, December 16, 2010

அழிக்கப்பட்ட ஆது சமூகமும் ஹூத் நபியும்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN8oW8GeupVlBEsh0YLhcKGu5VpLvYI_8VB17dsgn-mhf4NOpxwLCWWtTl5yW7O34Nq08i3vGeZUHMPLtIOQFJ-T5ujJQCT-ChqlgcrA5b-rSj9bjLvtnQlk59wHXxQeI8P3oC9-wNEo4/s1600/Bismillah_2.JPG

       
இறைத்தூதர் ஹூத்(அலை) அவர்களின் வரலாறு....

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...

(இறைத்தூதர்களான ) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் திகழ்கின்றது. (அல்குர்ஆன்  12:111)

நபி நூஹ்(அலை) அவர்களுக்குப் பிறகு அல்குர்ஆன்  குறிப்பிடும் இறைத்தூதர் " ஹூத்" (அலை) அவர்களாவார்கள். இவர் ' ஆத் 'சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்.

http://www.aramcoexpats.com/images/gallery/photostore/205/228_2296.jpg ஆத் என்பது பழங்கால சமூகத்தார் ஆவார். அவர்கள் தென் அரேபியாவில் வசித்து வந்தனர். அதன் எல்லை கிழக்கே பாரசீக வளைகுடாவின் வடக்கிலிருந்து, மேற்கே செங்கடலின் தெற்கு வரை விரிந்திருந்தது. இன்றைய யமன்(ஓமன்) நாடு அதில் அடங்கும். 

ஆத் சமூகத்தாரை நல்வழிப்படுத்த அவர்களில் ஒருவரான ஹூத்(அலை) அவர்களை தன் தூதராக அல்லாஹ் நியமித்தான்.

பைபிள் பழைய ஏற்பாட்டில் இவரது பெயரே ஏபேர் எனக் கூறப்பட்டுள்ளது என்பது சிலரது கருத்தாகும். தெற்கு அரேபியாவில் இன்றும் ஹூத்(அலை) அவர்களின் அடக்கத்தலம் உள்ளது என்ற ஒரு தகவலும் உள்ளது.

ஆது' சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்) (அல்குர்ஆன்  11:50)

வலிமை மிக்க உடல் அமைப்பு
இந்த சமூகத்தினர் வலிமை மிக்க உடலமைப்பைப் பெற்றிருந்தார்கள்.

நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்) (அல்குர்ஆன் 7:69)

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன் 89:6)

(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள், (அல்குர்ஆன் 89:7)

அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. (அல்குர்ஆன் 89:8)

 
அல்லாஹ் இந்த சமுதாயத்தினருக்கு அதிகளவிற்கு உடல் வலிமையைக் கொண்டுத்த போதிலும் அல்லாஹுக்கு நன்றி செலுத்தாமல் ஆணவம் கொண்டு பெருமையடித்தார்கள்.

அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, "எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?" என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள். (அல்குர்ஆன் 41:15)

இதனையெல்லாம் கண்ணுற்ற ஹூத் (அலை) அவர்கள் தமது சமுதாயத்திற்கு பின்வருமாறு உபதேசம் செய்தார்கள்.

"என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொளுக்குத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்" (என்றும் எச்சரித்துக் கூறினார்).  (அல்குர்ஆன் 11:52)

அல்லாஹ் ஆது சமுதாயம் வலிமை மிக்க சமுதாயம் என்று மட்டுமே குறிப்பிடுகிறான். ஆனால் நமது கட்டுக்கதை மன்னர்களோ அவர்களது வலிமையைத் தங்களது கற்பனைத் திறனைப் பயன்ப்படுத்தி பின்வருமாறு புனைந்துள்ளார்கள்.

பூமியில் அல்லாஹ் படைத்த மனித சமுதாயத்தில் இந்த ஆது சமுதாயத்தினர் மிகவும் பலவாங்கலாகவும், பயங்கரத் தோற்ற முள்ளவர்களவும் இருந்துனர். இவர்கள் எண்ணிக்கையில் பெருமளவில் இருந்ததோடு, பெரும் செல்வந்தவர்கலாகவும் இருந்தனர். இவர்கள் ஹள்ர் மவுத்திலிருந்து அம்மான் வரை பரவி வாழ்ந்து கொண்டிருந்தனர். உடல் சக்தி மிகவும் பயங்கரமாக இருந்தது.

ஆது சமுதாயத்தினரின் வாழ்விடம்
ஹூத்(அலை) அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட ஆது சமுதாயம் எந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதைப் பற்றிய மிகத் தெளிவான வரலாற்றுக் குறிப்பு ஏதும் இல்லை என்றாலும் பின்வருமாறு குறிப்பைச் சற்றுச் சிந்திப்போம்.

யமன் தேசத்திலுள்ள ஹள்ரமவுத் என்ற பகுதியிலிருந்து அலீ(ரழி) அவர்களைச் சந்திக்க ஒரு மனிதர் வந்தார். அவர்களிடம் அலீ(ரலி)  அவர்கள் உங்கள் ஊரில் சிவப்பு நிற மண்மேடு மற்றும் மணல் குன்று இலந்தை மரம், சுராக் மரம் ஆகியன இருக்குமே; அதன் அருகில் உத்தமன் என்ற பெயருடைய ஓடை ஒன்று ஓடுமே; அதனை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அந்த மனிதர் " ஆம், நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்த்தது மாதிரியே கேட்கிறீர்களே?" என்று கேட்டார். அதற்கு அலீ(ரழி) அவர்கள். " அங்கு தானே ஹூத்(அலை) அவர்களின் மன்னரை உள்ளது" என்றார்கள், உடனே நீங்கள்
பார்த்திருக்கிறீர்களா?" என்றதும், அலீ(ரழி) அவர்கள் "இல்லை இவ்வாறு நான் கேள்விப்பட்டேன்" என்றார்கள். இந்த குறிப்பு இப்னு ஜரீரில் இடம் பெற்றுள்ளது.

திருமறை குறிப்பிடும் அடையாளங்கள் இச்செய்தி குறிப்பிடும் யமன் தேசத்தின் ஹள்ரமவுத் என்ற இடத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் ஆது சமுதாயம் அங்கே வாழ்ந்திருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.

ஆது சமுதாயம் வாழ்ந்த இடத்தைப் பற்றி திருமறை பின்வருமாறு குறிப்பிடுகிறது...

தூண்களுடைய இரம் என்னும் ஆது சமுதாயத்தை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன் 89:6,7)

மேலும் 'ஆது' (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூது) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, "அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்" என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தவை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக. (அல்குர்ஆன்  46:21)

"அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம். (அல்குர்ஆன்  46:25)

மேற்கண்ட வசனங்களில் ஆது சமுதாயம் வாழ்ந்த இடத்தைப் பற்றி சில குறிப்புகள் உள்ளன. அவையாவன: ஆது சமுதாயம் வாழ்ந்த இடம் சமதளம் கிடையாது, மணற்குன்றுகள் நிறைந்த பகுதியாகும். மேலும், தங்களது வீடுகளை  உயர்ந்த தூண்களால் எழுப்பியுள்ளார்கள் எனவும் அவர்கள் அழிக்கப்பட்டபோது, அவர்களின் குடியிருப்புகள் அழியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் குறிப்புகளை தங்களது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டவர்கள் அல்லாஹ் குறிப்பிடும் இந்த அடையாளங்கள் யமன் தேசத்திலுள்ள ஹளரமவுத் என்ற பகுதியைக் குறிப்பிடும் வகையில் உள்ளது எனத் தங்களது ஆராய்ச்சியின் முடிவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஹூத்(அலை) அவர்களின் பிரச்சாரம்
ஹூத்(அலை) அவர்கள் பல தெய்வ வழிபாட்டில் மூல்கிகிடந்த தமது சமுதாய மக்களிடம் ஏகத்துவப் பிரச்சாரத்தை எடுத்தியம்பினார்கள். ஆனால் அவர்களோ ஹூத்(அலை) அவர்களை மூடர் எனச் சாடிவிட்டு தமது முன்னோர்களின் கொள்கையே சிறந்தது எனவும் வாதாடினார்கள். ஹூத்(அலை) அவர்கள் அச்சமூட்டி எச்சரித்ததைக் கேலி செய்யும் விதமாக, "நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிப்பதைக் கொண்டு வாரும்"   என வேண்டினர். தங்களது நாவுகளால் தங்களுக்கே தீங்கை வரவழைத்ததை அவர்கள் உணரவில்லை.
 
இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சதோரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?" என்று கேட்டார்.  (அல்குர்ஆன் 7:65)

அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.  (அல்குர்ஆன் 7:66)

அதற்கு அவர்? "என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்" என்று கூறினார்.  (அல்குர்ஆன் 7:67)

"நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்" (என்று கூறினார்).  (அல்குர்ஆன் 7:68)

"உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்).  (அல்குர்ஆன் 7:69)

அதற்கு அவர்கள் " எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.  (அல்குர்ஆன் 7:70)

அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.  (அல்குர்ஆன் 7:71)

ஹூத்(அலை) அவர்கள் தமது சமுதாய மக்களிடம் பல தெய்வ வழிப்பாட்டை முறியடிக்க முயன்றதோடு, அவர்களது அடக்குமுறைப் போக்கையும் எதிர்த்தார்கள். அல்லாஹ் அச்சமுதாயத்திற்கு வழங்கியுள்ள அருட்கொடையினை நினைவு கூறுமாறு வேண்டினார்கள். மகத்தான நாளின் வேதனையை அஞ்சுமாறும் எச்சரித்தார்கள்.

ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். (அல்குர்ஆன் 26:123)

அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூது "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" என்று கூறியபோது  (அல்குர்ஆன் 26:124)

"நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.  (அல்குர்ஆன் 26:125)

"மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.  (அல்குர்ஆன் 26:126)

"நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?  (அல்குர்ஆன் 26:127)

இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?  (அல்குர்ஆன் 26:128)

"இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.  (அல்குர்ஆன்  26:129)

"எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.  (அல்குர்ஆன் 26:130)

"மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.  (அல்குர்ஆன் 26:131)

"அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.  (அல்குர்ஆன் 26:132)

"இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).  (அல்குர்ஆன் 26:133)

"நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்" (எனக் கூறினார்).  (அல்குர்ஆன் 26:134)

(இதற்கு) அவர்கள்; "நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்" எனக் கூறினார்கள்.  (அல்குர்ஆன் 26:135)

"இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.  (அல்குர்ஆன் 26:136)

"மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்."  (அல்குர்ஆன் 26:137)

(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.  (அல்குர்ஆன் 26:138)

நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.  (அல்குர்ஆன் 26:139)

இவ்வளவு தூரம் ஹூத்(அலை) அவர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்தும், செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று எதுவும் விளங்காத ஜடங்களாக வாழ்ந்தனர். தனகளது ஆணவத்தால் ஹூத்(அலை) அவர்களை ஏற்க மறுத்தனர். பல தெய்வ வழிபாட்டிலேயே தங்களது வாழ்நாளை அழித்தனர். தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத தன்னை பொய்யர் என்று தூற்றுகிற சமுதாயத்திடம் ஹூத்(அலை) மீண்டும் மீண்டு பொறுமையுடன் பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

"என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொளுக்குத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்" (என்றும் எச்சரித்துக் கூறினார்).  (அல்குர்ஆன் 11:52)

(அதற்கு) அவர்கள்; "ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்" என்று (பதில்) கூறினார்.  (அல்குர்ஆன் 11:53)

"எங்களுடைய தெய்வங்களில் சிலகேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை" (என்றும் கூறினார்கள்; அதற்கு) அவர், "நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்" என்று கூறினார்.  (அல்குர்ஆன் 11:54)

"(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்" (என்றும் கூறினார்).  (அல்குர்ஆன் 11:55)

நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கு இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்.  (அல்குர்ஆன் 11:56)

"நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எனற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்" (என்றும் கூறினார்).  (அல்குர்ஆன் 11:57)

ஹூத்(அலை) அவர்களைப் பொய்யரெனக் கருதிய அவரது சமுதாயம் தங்கள் நாவுகளாலேயே தண்டனையை வேண்டினர். ஹூத்(அலை) அவர்களிடமே "முடிந்தால் நீ சொன்னதைச் செய்" என சவால்விட்டனர். இந்தத் தருணத்தில் மேகமூட்டத்தை மக்கள் பார்த்தனர். மழையை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், அது மழை மேகம் தான் என பெருமை கொள்ளலானார்கள். ஆனால், ஹூத்(அலை) அவர்களோ அது அல்லாஹுவின் தண்டனை என்று அந்த மக்களை எச்சரித்தார்கள்.

அதற்கு அவர்கள்; "எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.  (அல்குர்ஆன் 46:22)

அதற்கவர்; "(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்" என்று கூறினார்.  (அல்குர்ஆன் 46:23)

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், "இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்" எனக் கூறினார்கள்; "அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது  (அல்குர்ஆன் 46:24)

"அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்" (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.  (அல்குர்ஆன் 46:25)

மலட்டுக்காற்றால் அழிக்கபட்டார்கள்
அவர்கள் வேண்டிய வேதனை காற்று உருவத்தில் வந்தது ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் காற்று அவர்களைத் துன்புறுத்தி அணு அணுவாக அழிந்தது அல்லாஹுவின் வாக்கு நிறைவேறியது.

நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.  (அல்குர்ஆன் 54:19)

நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.  (அல்குர்ஆன் 54:20)

ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)  (அல்குர்ஆன் 54:21)

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.  (அல்குர்ஆன் 69:6)

அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான், எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.  (அல்குர்ஆன் 69:7)

அல்லாஹ் ஆது சமுதாயத்தை அழித்த அந்தக் காற்றைப் பற்றி திருமறையில் குறிப்பிடுகையில் 'மலட்டுக் காற்று' எனக் குறிப்பிடுகிறான்.

ஆது சமுதாயத்திடமே (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுகாற்றை அனுப்பினோம். (அல்குர்ஆன் 51:41)

அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 51:42)

காற்று மனிதனுக்குப் பயன்பட வேண்டுமானால் அதில் ஆக்ஸிஜன் போன்ற சில அம்சங்கள் இருந்தாக வேண்டும். காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப் பிரித்து எடுத்துவிட்டால் காற்று இருந்தும் மனிதனால் உயிர் வாழ முடியாது. இதையே மலட்டுக்காற்று என்று இந்த வசனம் கூறுகிறது.

நவீன உலகில்  சில வகையான வெடிகுண்டுகள் கண்டுப்டிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு பகுதியில் வீசினால் அந்தப் பகுதியில் உள்ள கட்டடங்கள் எதுவும் சேதமாகாது. ஆனால் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை மட்டும் இல்லாமல் ஆக்கிவிடும். இதனால் குறிப்பிட்ட பகுதியில் உயிரினங்கள் செத்துவிடும். இது போன்ற காற்றையே இறைவன் அனுப்பியிருக்க வேண்டும் என்பதை மலட்டுக்காற்று என்ற சொல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆது சமுதாயத்தை அழித்த காற்றைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள்:
நான் ('ஸபா' என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; 'ஆது' சமுகத்தார் ('தபூர்' என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர்.  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.  (
புகாரி - 4105)

அகழ்ப்போரின் போது எதிரிகளின் திசையில் கடுமையான குளிர்க்காற்று வீசியது. கிழக்கிலிருந்து வீசியது, கிழக்கிலிருந்து வீசிய அந்தக் காற்றினால் எதிரிகள் நடுநடுங்கிப் போனது மட்டுமின்றி, இரவிலே அவர்கள் மூட்டியிருந்த நெருப்பும் அணைந்துவிட்டது. அவர்களுடைய கூடாரங்கள் பிடிங்கி எறியப்பட்டன. போர் செய்ய இயலாமல் தோல்வி கண்டு எதிரிகள் திரும்பினர். நபி(ஸல்) அவர்களுக்கு அது மாபெரும் வெற்றியானது.

அதனைப் போன்று கி.மு 2000 முன் வாழ்ந்த ஹூத்(அலை) அவர்களின் சமுதாயமான ஆது கூட்டத்தார் இறைக்கட்டளையை மீறி இறைத்தூதர் ஹூத்(அலை) அவர்களுக்கு மாறு செய்து வந்ததால் அவர்களை அழிக்க அல்லாஹ் மலட்டுக் காற்றினை அனுப்பினான். மேலும் ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசிய அந்தக் காற்றினால் அவர்கள் அழிக்கப்பட்டனர்.

மழை மேகம் ஓர் எச்சரிக்கை
ஆது சமுதாயம் மழைமேகம் என நம்பிய போது, இல்லை, அது அல்லாஹுவின் தண்டனை என ஹூத்(அலை) அவர்கள் எச்சரித்த சம்பவத்தை குர்ஆன் ஒளியில் அறிந்தோம். நபி(ஸல்) அவர்கள் மழை மேகத்தை காணும் போதெல்லாம் ஆது சமுதாயத்தின் நிலையை நினைத்து அஞ்சக் கூடியவர்களாகவே இருந்துள்ளார்கள்.

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி(ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தம் அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர்களின் முகம் மாறி விடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும். எனவே, (ஒரு முறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்து கொண்டு), 'இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்" (திருக்குர்ஆன் 46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம் எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார்கள்.  (புகாரி - 3206)

இதுவரை ஆது சமுதாயத்தின் இறைநிராகரிப்பவர்கள், ஹூத்(அலை) அம்மக்களுக்குச் செய்த பிரச்சாரத்தையும், அதனை ஏற்க மறுத்த ஆணவக்கார ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட சம்பவத்தையும், திருமறை குர்ஆன் வாயிலாகவும், நபிமொழிகள் வாயிலாகவும் மூலமும் அறிந்து கொண்டோம். இனியேனும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுவோமாக!


0 comments: