நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..

"உலகின் முன்னணி நாத்திகர்களில் ஒருவர், அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கடவுளை நம்புகின்றார்"

இயேசு அழைக்கிறார்

சில கிருத்தவர்களால் இஸ்லாத்திற்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தகர்த்தெறியும் வண்ணம் தமிழில் ஒரு இணையதளம்.

Thursday, March 17, 2011

அடையாள அட்டை! இதென்ன!


ஓரிறையின் நற்பெயரால்... 

http://marymackillop.org/wp-content/uploads/2010/11/Islamic-banking.-Nice-theory.-Little-help-so-far-to-millions-of-starving-Muslims-worldwide..jpg

பெயர்: வட்டி
புனைப்பெயர்:
இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிரைக்கொள்ளும் உயிர்க்கொல்லி.
உடன்பிறந்தோர்:
ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டிகள், கந்துவட்டி,மீட்டர்வட்டி, இன்சூரன்ஸ்,லோன், பைனான்ஸ்.
நண்பர்கள்:
பணக்காரர்கள்,சேட்டுகள், வட்டிக்காகக் கடன் கொடுப்போர், லாவாதேவிக்காரர்கள்.
எதிரி:
தர்மம்,ஸகாத்.

தொழில்: பொருட்களைச்சுரண்டுதல்.
உபதொழில்:
உயிரைப்பரித்தல்,நஷ்டஈடாக கற்பை சூறையாடுதல்.
சுற்றுலாத்தலம்:
பேங்க், நகைக்கடை,அடகுக்கடை.
அலர்ஜி:
வட்டியில்லாக்கடன்.
விரும்புவது:
உயிர்,சொத்து.
விரும்பாதது:
தனக்கெதிரான பிரச்சாரம்.

எதிர்காலத்திட்டம்: கோடிக்கணக்கான பணம்சேர்ப்பது, பொருள்சேர்ப்பது.
சாதனை:
உலக வங்கியில் கடன் வாங்கியதில் இந்தியாவிற்கு முதலாவது இடம்.

பரிசு: நிரந்தர நரகம்.

எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, எந்தவிதமான கஷ்ட காலங்களிலும் வட்டியின்பக்கம் மட்டும் தலைசாய்த்து விடாதீர்கள். ஏனெனில் வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் அல்லாஹ் வெறுக்கின்றான்.

இதைப்பற்றி, அல்லாஹ் தன்திருமறையில்,

2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

3:130. ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.

இன்னும் அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:

‘வட்டி வாங்குபவர்கள், வட்டி கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் – இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி.

5347. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்: 
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

இப்படி அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் வெறுக்கின்ற வட்டியின் பக்கம் நாம் ஏன் போக வேண்டும்.

சிலர், பிறரிடம் உதவி கேட்டால் தர மறுக்கிறார்கள்.வட்டியில்லா கடனும் கொடுக்க மறுக்கிறார்கள்.பிறகு என்ன தான் செய்வது? வட்டிகுதான் கடன் வாங்க வேண்டி வருகிறது என்று கூறுகிறார்கள். பணம் இல்லாவிட்டால் வட்டிக்குப்பணம் கிடைக்கும் என்ற எண்ணம் இருப்பதால்தானே வட்டியின் பக்கம் போகிறோம்.வட்டி என்பதே கிடையாது என்று நினைத்தால் போவோமா? சற்று சிந்தியுங்கள். பன்றிமாமிசம் ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த அளவு பசியிருந்தாலும் பன்றி மாமிசத்தை உண்ண மாட்டோமல்லவா? உணவு எதுவும் கிடைக்காத உயிர்போகும்பட்சதில் பன்றிமாமிசத்தை உண்ணலாம் என்று சலுகை இருந்தும் நாம் உண்ண மாட்டோம். அதே போன்றே இந்த வட்டியையும் ஒரு பன்றிமாமிசமாகக் கருத வேண்டும்.

ஏனெனில் இந்த வட்டியின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் தான் எத்தனை? தனது கற்பைப் பரிகொடுத்த பெண்கள் தான் எத்தனை? தனது பெற்றோர், பிள்ளைகள், உறவினர்களை இழந்தோர் தான் எத்தனை? இவை யாவற்றையும் கணக்கிட முடியாது. அந்த அளவிற்கு இந்த வட்டியின் கொடுமை தலை விரித்தாடுகிறது. வட்டிக்காகப் பணம் கொடுப்பதும், வட்டிக்குப் பணம் வாங்குவது மட்டுமல்ல. அதற்காக சாட்சிக் கையெழுத்துப் போடுவதும் பாவமேயாகும். இதற்கு மறுமையில் மிகப்பெரும் வேதனை மட்டுமல்ல, நிரந்தர நரகமும் கூட. இதைப்பற்றி அல்லாஹ் தன திருமறையில்,

2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.

இன்னும் 2085. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!

“அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!” எனக் கூறினார்கள்.” என ஸமுரா(ரலி) அறிவித்தார்.

எனவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,
நம்மில் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக வட்டியில்லாக்கடன் கொடுக்க முன்வர வேண்டும்.வசதியற்றவர்கள் வட்டிக்காகப் பணம் வாங்குதலும், நகை அடகு வைத்தலும் செய்யாமல் இருக்க வேண்டும். வட்டியை ஒழிக்கப்போராட வேண்டும். வட்டியில்லாக்கடன் திட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் ஏற்ப்படுத்த வேண்டும். அப்போது இந்த உயிர்க்கொல்லி இந்த உலகை விட்டு ஒழியும்.இன்ஷா அல்லாஹ்.

நிச்சயமாக நல்லது செய்வோருக்கு அல்லாஹ் எப்போதும் துணையிருப்பான்.

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
ஹாஜிரா தாஜுன். நவி மும்பை
சுவனத்தென்றல்

Monday, March 14, 2011

டாகின்ஸ் VS வென்டர் - யார் சரி? யார் தவறு?


https://lh4.googleusercontent.com/-_gRkK8-DrSY/S37RWlZTTeI/AAAAAAAAAMA/a7Nny_-iFZk/s1600/Bismillah_2.JPG
நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

-------
பதிவிற்குள் செல்லும் முன் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய சொல்:

உயிரியல் அல்லது பரிணாம மரம் (Evolutionary Tree or Phylogenetic tree or Tree of life): ஒரு பொதுவான மூதாதையரில் இருந்து எப்படி உயிரினங்கள் வெவ்வேறு கிளைகளாக மாறின என்று விளக்குவதே பரிணாம மரம்.
-------

அரிசோனா பல்கலைகழகத்தில் சமீபத்தில் நடந்த "உயிர் என்றால் என்ன?" என்ற விவாதத்தில் பல சுவாரசிய காட்சிகள் நடந்தேறின. உயிரியல் மரம் குறித்து வென்டர் கூறிய கருத்துக்கள் பலரது புருவத்தை உயர செய்துள்ளது. 

(வென்டர் குறித்த இந்த தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்)
டாகின்சின் வார்த்தைகளில் சொல்லுவதென்றால், உயிரியல் மரத்தை "புனைவு/கட்டுக்கதை (fiction)" என்று வர்ணித்துள்ளார் வென்டர்.

இந்த செய்தி உங்களது ஆர்வத்தை தூண்டியிருந்தால் மேற்கொண்டும் படியுங்கள். 

டாகின்ஸ், வென்டர், பால் டேவிஸ், லாரன்ஸ் க்ராஸ், க்றிஸ் மெக்கே உள்ளிட்ட ஏழு அறிவியலாளர்கள் கலந்து கொண்ட இந்த உரையாடல் நிகழ்ச்சியில் "உயிர் என்றால் என்ன?, உயிர் தோன்றியது எப்படி?" என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ரோஜர் பின்ஹம் விவாதத்தை நடத்தினார். 

உரையாடலில் கலந்து கொண்டவர்களில் பலர், இவ்வுலகில் உயிர் என்பது ஒரே வகை தான் என்று கூறினர். அதாவது, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரே மூதாதையரில் இருந்து வந்துள்ளதால் இவ்வுலகில் உயிர் என்பது ஒரு வகை மட்டுமே என்பது பலரது கருத்தாக இருந்தது, ஒருவரைத் தவிர...

ஆம்....கிரேக் வென்டரை தவிர. 
   
அப்போது நடந்த சுவாரசிய உரையாடல் இங்கே உங்கள் பார்வைக்கு, 

வென்டர்: இவ்வுலகில், உயிர் என்பது ஒரு வகைதான் என்ற (இங்குள்ள) என் சக தோழர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடுகின்றேன். நம்மிடையே பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. 

pH 12 baseசில் உங்களை தூக்கி போட்டால் உங்களது தோல் கரைந்து விடும். ஆனால் அதில் வாழக்கூடிய உயிரினங்களும் உள்ளன. இந்த இரண்டையும் ஒரே வகையான உயிரினங்கள் என்று நான் கூற மாட்டேன்.   

பால் டேவிஸ்: (ஆனால்) நமக்கெல்லாம் ஓரே மரபணு குறியீடு (Genetic code) தானே இருக்கின்றது? நமக்கெல்லாம் ஒரே பொதுவான மூதாதையர் தானே...

வென்டர்: இல்லை, நமக்கெல்லாம் ஒரே மாதிரியான மரபணு குறியீடுகள் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், Mycoplasma பாக்டீரியாக்களில் உள்ள மரபணு குறியீடு உங்களது செல்களில் வேலை செய்யாது. ஆக, உயிரினங்களுக்குள்ளாக நிறைய வேறுபாடுகள் உள்ளன. 

உரையாடல் படுசுவாரசியமாக சென்றது...

டேவிஸ்: அவை (Mycoplasmas) வேறு உயிரியல் மரத்தை சார்ந்தவை என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். 

வென்டர்: உயிரியல் மரம் என்பது ஆரம்ப கால அறிவியல் அறிவை கொண்டு புனையப்பட்டது. அது நிலைத்து நிற்கவும் இல்லை. (ஆக) உயிரியல் மரம் என்று ஒன்றுமில்லை. 

வென்டரின் அதிரடியான இந்த பதில்கள் பார்வையாளர்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கும். 

பரிணாம உலகின் அடிப்படையான "பரிணாம மரம்" குறித்த வென்டரின் கருத்துக்கள் டாகின்ஸ் உள்ளிட்ட அனைவரையும் திணறடித்திருக்க வேண்டும். அதனை டாகின்ஸ் வெளிப்படுத்தவும் செய்தார். 

டாகின்ஸ்: உயிரியல் மரம் என்பது கட்டுக்கதை/புனைவு என்ற வென்டரின் கருத்துக்கள் என்னை ஆச்சர்யமடைய செய்கின்றன. இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் டி.என்.ஏ குறியீடுகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆக, இவையெல்லாம் தொடர்புடையவை என்று தானே அர்த்தம்?

இதை அவர் சொல்லி முடித்தது தான் தாமதம். ஓரிரு நொடிகள் அமைதி. ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனர். 
.
.
.
சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தார் வென்டர்.

பின்னர், உரையாடலை நடத்திய ரோஜர் வேறு கேள்விக்கு செல்ல விஷயம் முடிவுக்கு வந்தது. டாகின்சின் பதில் குறித்து வென்டரை கருத்து கேட்டிருந்தால் விவாதம் இன்னும் படு சூடாக இருந்திருக்கும். வென்டர் தானாக முன்வந்தாவது கருத்து சொல்லியிருக்கலாம். எதற்கு இங்கே பிரச்சனை என்று சிரிப்போடு நிறுத்தி கொண்டார் போல...  

டாகின்சின் இத்தகைய பதிலை "பெரிய பொய் (Whopper)" என்று வர்ணிக்கின்றது "பரிணாம செய்திகள் (Evolutionary News)" தளம். 

ஏனென்றால், சற்று முன் தான் வென்டர் தெளிவாக கூறினார், Mycoplasma பாக்டீரியாக்களின் மரபணு குறியீடுகள் வேறானவை என்று. இத்தனைக்கும், வென்டர் கடந்த பல ஆண்டுகளாக தன்னுடைய ஆய்வுக்கு பயன்படுத்தி வருவது இந்த பாக்டீரியாக்களை தான். ஆனால் டாகின்சோ வேறு மாதிரியாக சொல்கின்றார். இவர்களில் யார் சொல்வது உண்மை?

எது எப்படியென்றாலும், வென்டரின் கருத்துக்கள் சிலருக்கு பீதியை ஏற்படுத்தியிருக்கும் என்பது மட்டும் உண்மை.

உயிரின் தேடலைப்பற்றிய இந்த கலந்துரையாடலில் என்னை கவனிக்க வைத்த இரண்டு கருத்துக்கள்,

1. ஆரம்ப கால உலகை ஆழ்ந்து படிக்கும் போது, உயிரினங்கள் முதன் முதலாக காணப்படும் போதே முழுமையாகவும், சிக்கலான வடிவமைப்பை கொண்டதாகவும் இருக்கின்றன. இது மிகவும் மர்மமாக இருக்கின்றது. இந்த சூழ்நிலையே, சில விஞ்ஞானிகளை, உயிர் என்பது இங்கே உருவாகவில்லை, வேறெங்கிருந்தோ பூமிக்கு வந்திறங்கியிருக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைக்க வைத்தது - க்றிஸ் மெக்கே, NASA Ames Research Center.

2. உயிரின் தோற்றத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியாது என்ற கருத்தை ஆமோதிக்கின்றேன். உயிரின் தோற்றத்தை அலசும் பல யூகங்கள் உள்ளன. ஆரம்ப கால பூமியை போன்ற சூழ்நிலையை வேறொரு கிரகத்தில் உருவாக்கி சோதித்தால் ஒழிய நம்மால் உயிரின் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது. அறிவியலில் சிலவற்றை நிரூபிக்க முயலாம். ஆனால், சுமார் 3.5-4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நிகழ்வை விவரிக்கும் யூகங்களை நிரூபிப்பதென்பது முடியாத காரியம் - வென்டர்.

அறிவுக்கு நல்ல தீனியாய் அமைந்த இந்த உரையாடலை காண விரும்புபவர்கள், விவாதத்தின் முதல் பகுதியை கீழே காணலாம் (வென்டர்-டாகின்ஸ் குறித்து நான் மேலே குறிப்பிட்டவை 8.48வது நிமிடத்திலிருந்து தொடங்குகின்றது).


மற்ற இரண்டு பகுதிகளை பார்க்க விரும்புகின்றவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும். 

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

References:
1. The Great Debate - What is life? (part 2 of 3). link
2. The Great Debate - What is life? (part 3 of 3). link
3. Venter vs. Dawkins on the Tree of Life -- and Another Dawkins Whopper. link

by brother ASHIK AHMED

Friday, March 11, 2011

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் வரலாறு

http://1.bp.blogspot.com/_oqgSsBjDlAY/S3pYaEPW6YI/AAAAAAAAAKo/en_n2mS5ZXE/s1600/Bismillah_2.JPGஇயற்பெயர்   :   அஹ்மத் இப்னு ஹம்பல்

குறிப்புப்பெயர்    :  அபூ அப்தில்லாஹ்

பிறப்பு  :  இராக் நாட்டில் பஃதாத் என்ற ஊரில் ஹிஜ்ரீ 164 வது வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள்.

கல்வி :  ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். அப்போது அவர்களுக்கு பதினான்கு வயதாக இருந்தது. குர்ஆனை மனனம் செய்து எழுதப்படிக்க கற்றுக்கொண்டப் பின் இமாம் அஹ்மத் அவர்கள் பஃதாதில் உள்ள ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸ்கலை தொடர்பான விஷயங்களை கற்றார். இவர் முதன்முதலாக அபூஹனீஃபா இமாமின் மாணவரான அபூயூசுஃப் அவர்களிடமிருந்து ஹதீஸ்களை கற்றார்கள். இவர்கள் காலத்தில் இருந்த கல்விகளில் பல துறைகளில் சிறந்து விளங்கினார்கள்.

குறிப்பாக இவர்கள் எழுதிய முஸ்னத் என்ற நூலும் அறிவிப்பாளர்களைப் பற்றி நல்லவரா கெட்டவரா என்று பிரித்தறிவதற்கு  இவர் எழுதிய நூலும் இவர் ஹதீஸ்கலையில் மாபெரும் மேதையாக திகழ்ந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. ஹதீஸ்களில் எளிதில் கண்டுபிடிக்க இயலாத குறைகளுக்கு இல்லத் என்று சொல்வார்கள். இக்குறைகளை ஆராய்ந்து இது தொடர்பாக விளக்கியுள்ளார். இவருக்கென்று ஒரு மத்ஹப் உருவாகும் அளவிற்கு மார்க்கசட்டத்தைக் கூறுவதிலும் பாண்டித்துவத்தைப் பெற்றிருந்தார்.

கல்விக்காக பயணித்த ஊர்கள் :  இவர் பஸரா, கூஃபா, மக்கா, யமன், தர்சூஸ், ரிகா, அபாதான், எகிப்து, ரய் ஆகிய ஊர்களுக்கு சென்றுள்ளார்.

ஆசிரியர்கள்:    இமாம் ஷாஃபி, அபூயூசுஃப், சுஃப்யான் பின் உயைய்னா, அப்துர்ரஸ்ஸாக், வகீஃ, இப்ராஹிம் பின் சஃத், ஹ‎ýஷைம் பின் பஷீர், யஹ்யா பின் சயீத், இப்னு நுமைர், யசீத் பின் ஹாரூன், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ  மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்தார்கள்.

இவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தவர்கள்: இமாம் ஷாஃபி, யஹ்யா, அப்துர்ரஸ்ஸாக், அப்துர்ரஹ்மான், மஹ்தீ, வகீஃ, போன்ற இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து பல ஹதீஸ்களைத் தெரிந்துகொண்டு இவருக்கு மாணவராக இருந்துள்ளார்கள். இன்னும் பிரபலியமான புத்தகங்களின் ஆசிரியரான இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதி, இமாம் இப்னுமாஜா, இமாம் அபூதாவுத், இமாம் நஸயீ

சிறப்பு   :    இவர் மார்க்கத்திற்காக அரும்பெரும் தொண்டாக ஹதீஸ்களை ஒன்றுதிரட்டியதுடன் மார்க்கத்தை முறையாக கடைபிடித்து ஒழுக்கச் சீலராகவும் திகழ்ந்தார்கள். அதிகமாக வணக்கங்களும் நோன்புகளும் வைப்பவராக இருந்தார்கள். இமாம் ஷாஃபி, இமாம் யஹ்யா பின் மயீன், அலீ பின் அல்மதீனீ ஆகியோர் இவரைப் புகழ்ந்து கூறியுள்ளார்கள். அரசனுக்கு பிடிக்காத கருத்தை இவர் வெளியிட்டதற்காக இவர்கள் சிறைபிடிக்கப்பட்டு சோதிக்கப்பட்டார்கள்.

படைப்புகள் :   இவர் எழுதிய முஸ்னத் அஹ்மத் என்ற புத்தகம் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது. இன்னும் அல்இலல், அன்னாஸிஹ் வல்மன்சூஹ், அஸ்ஸ‎ýஹ்த், அல்அஷ்ரிபத், அல்ஃபளாயில், அல்ஃபராயில், அல்மனாசிக், தாஅதுர்ரசூல், அல்முகத்தமு வல்முஅஹ்ஹர், ஜவாபாத்துல் குர்ஆன், ஹதீஸ‎ý சுஃபா, நஃப்யுத்தஷ்பீஹ், அல்இமாமா, கிதாபுல் ஃபிதன், கிதாபு ஃபளாயிலி அஹ்லில் பைத், முஸ்னது அஹ்லில் பைத், அல்அஸ்மாஉ வல் குனா, கிதாபுத்தாரீஹ் ஆகியப் புத்தகங்களை தொகுத்துள்ளார்கள்.

மரணம்:    இவர் ஹிஜ்ரீ 241 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார்கள். பஃதாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமையன்று மரணித்தார்கள். இவர்களுடைய ஜானாஸவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்.

பால்காரியின் மகள் கலீஃபாவின் மருமகள்!

http://1.bp.blogspot.com/_oqgSsBjDlAY/S3pYaEPW6YI/AAAAAAAAAKo/en_n2mS5ZXE/s1600/Bismillah_2.JPG


http://darulislamfamily.com/di/images/stories/milk.jpgன்றைய இரவு அஸ்லமுடன் மதீனா வீதிகளில் உலா சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). பகலெல்லாம் அரசாங்க நிர்வாகம், போர் விவகாரங்கள், குடும்ப அலுவல்கள் என்று ஓயாத ஒழியாத வேலைகள்; இரவிலோ மக்களின் நலன் காக்க ரோந்து; அதன் பின்னர் பின்னிரவுத் தொழுகை என்று அயராது பணியாற்றிக் கொண்டிருந்தவர் உமர். நம்மைப்போல் தொடர்ந்து ஏழு எட்டு மணி நேரத் தூக்கம் என்பதெல்லாம் அவர் ஒருநாள்கூடத் தூங்கியதாய் அறிய முடியவில்லை. சதா காலமும் இறைவனின் நினைப்பையும் அச்சத்தையும் நெஞ்சில் தூக்கித் திரிந்துகொண்டிருந்தார் அவர்.

நள்ளிரவு நெருங்கியிருக்கும். நடந்து வந்து கொண்டிருந்தவருக்கு மிகவும் அசதியாக இருந்தது. ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டார்.

வீட்டின் உள்ளே பேச்சு சப்தம் கேட்டது. “மகளே! சற்று எழுந்து அந்தப் பாலில் தண்ணீர் கலந்து வையேன்”

ஊர் அடங்கியிருந்த நேரம். தாயொருவள் மகளிடம் பேசியது தெளிவாய்க் கேட்டது.

“என்ன, பாலில் தண்ணீர் கலப்பதா? அப்படியானால் கலீஃபாவின் கட்டளை?”

“அது என்ன கட்டளை?”

பாலில் தண்ணீர் கலந்து விற்பதை நம்மூர் பால்காரர்கள் பின்பற்றும் முன்பே இப்பழக்கம் தொன்றுதொட்டு உலகெங்கும் இருந்து வந்திருக்கிறது போலும். உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது பெரும் குற்றம் என்பது இஸ்லாத்தின் நிலை. அதனால் உமருடைய கட்டளைப்படி அவரின் சேவகர் ஒருவர் மதீனா வீதியெங்கும் அறிவிப்புச் செய்திருந்தார், “பாலில் தண்ணீர் கலப்படம் செய்யக் கூடாது என்பது கலீஃபாவின் உத்தரவு”

மகள், தாய்க்கு அந்தக் கட்டளையை நினைவுறுத்தினாள்.

“அது சரி! உமரோ அந்த சேவகனோ காணவியலாத இடத்தில் நம் வீட்டிற்குள் நீ இருக்கிறாய். எழுந்து தண்ணீரைக் கலந்து விடு; யாரும் அறியப்போவதில்லை” என்றாள் அந்தத் தாய்.

“அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன்! பொது இடங்களில் அமீருக்குக் கட்டுப்பட்டவளாகவும் தனிமையில் அவரது உத்தரவுகளுக்கு மாறு செய்பவளுமாக நான் என்றுமே நடந்து கொள்ளமாட்டேன்” என்று திட்டவட்டமான பதில் வந்தது.

மக்கள் மத்தியில், பகலில், சட்டத்திற்கும் உத்தரவிற்கும் கட்டுப்பட்டு நடப்பது மக்களுக்கு நிர்பந்தமாகக்கூட ஆகிவிடுகிறது. ஆனால் யாருமற்ற தனிமையில் இருக்கும்போதும் ஒருவர் இறைவனுக்கும் அவனது சட்டத்திற்கும் பயந்து நடந்துகொண்டால் அது ஒழுக்கத்தின் மேன்மையை அல்லவா எட்டிவிடுகிறது? அதுதானே இறையச்சம்!

தாய்க்கும் மகளுக்குமான இந்த உரையாடலைக் கேட்டு அசதியிலிருந்த உமர் அசந்துவிட்டார்.

“அஸ்லம் இந்த வீட்டின் கதவின்மேல் அடையாளமிட்டு இந்த வீடு எங்கிருக்கிறது என்று நினைவில் வைத்துக் கொள்.”

தெருப்பெயர், கதவு எண் போன்ற அடையாளங்கள் இல்லாத காலத்தில் அதுதான் அவர்களுக்கு எளிய முறை. அஸ்லம் அவ்விதமே குறியிட்டுவிட, பின்னர் தொடர்ந்தது அவரது அன்றைய இரா உலா.

மறுநாள் -

அஸ்லமை அழைத்தார் உமர். “நேற்று குறியிட்டுவிட்டு வந்த அந்த வீட்டிற்குச் செல்லுங்கள். இரவில் உரையாடிக் கொண்டிருந்தது யார், யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆண் துணையிருக்கிறதா என்றும் அறிந்து வாருங்கள்”

அவர்கள் இருவரும் தாயும் மகளும் என்பதையும் மகளுக்குத் திருமணமாகவில்லை; தாயார் கணவனை இழந்தவர் என்பதையும் அறிந்துவந்துச் சொன்னார் அஸ்லம். அடுத்து என்ன நடக்க வேண்டும்?

நமக்குப் பழக்கமான ஆட்சிமுறைப்படி அரசாங்க உத்தரவை மீறுவதற்கு ஊக்குவித்த அந்தத் தாய்க்குத் தண்டனையோ அபராதமோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பெண்ணிற்கு நற்சான்றிதழ், ஒரு பதக்கம், வேண்டுமானால் சற்றுத் தாராளமாய்க் கொஞ்சம் பணமுடிப்பு என்று அளித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கலீஃபா உமர் தம் மகன்களை அழைத்தார். முந்தைய இரவு நடந்தவற்றையும் அஸ்லம் அறிந்து வந்து சொன்னதையும் கூறிவிட்டு,

“உங்களின் தந்தைக்கு மட்டும் வயது முதிர்ச்சி ஏற்பட்டிருக்காவிடில் அவர் இந்தப் பெண்ணை மணமுடிப்பதில் நீங்கள் எவரும் அவருடன் போட்டியாளராக வரமுடியாது. எனவே உங்களில் யாருக்காவது மணமுடிக்கப் பெண் தேவையா?” என்று கேட்டார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), “எனக்கு மனைவியிருக்கிறார். இப்பொழுது வேறு திருமணத்துக்குத் தேவையற்றவனாய் இருக்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.

மற்றொரு மகன் அப்துர் ரஹ்மானும் அதே பதிலையே கூறினார்.

ஆஸிம் மட்டும், “தந்தையே! எனக்கு மனைவியில்லை. எனவே அப்பெண்ணை மணமுடித்து வையுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.

“மிக்க நன்று” என்று அந்தப் பெண்ணுக்குத் தம் மகன் ஆஸிமை மணமுடித்துக் கொடுத்தார் உமர்.

இங்கு சற்று மூச்சை இழுத்துவிட்டு, இலேசாய்ச் தலையையும் சொறிந்து கொண்டு யோசிக்க வேண்டும். இஸ்லாமியப் பேரரசின் கலீஃபா உமர். அவர் தம்முடைய மகன்களுக்கு மன்னர்கள், சக்கரவர்த்திகள், பெருங்குடி மக்கள், செல்வந்தர்கள் போன்றோரிடமிருந்து பெண்களைத் தேடித் தேடி பெற்றுத் தந்திருக்கலாம். அவ்விதம் மணமுடிக்க எவ்வித மறுப்புமின்றிப் பெண்களும் தயாராய் இருந்திருப்பார்கள்.

கடைக்குச் சென்றால் கண்ணைப் பறிக்கும், மனதை மயக்கும் ஒரு பொருளை வாங்கியே தீரவேண்டும் என்று நமக்கெல்லாம் ஓர் உத்வேகம் பிறக்குமே அப்படி, போற்றுதற்குரிய இறையச்சத்துடன் ஒரு பெண் மதீனாவில் உள்ளதை உணர்ந்த அந்தநொடி, அந்தப் பெண் தம் வீட்டிற்கு உரியவர் என்று தீர்மானித்து விட்டார் உமர். அடுத்து என்ன செய்தார்? அஸ்லமை அனுப்பி அந்தப் பெண் பேரழகியா, சீர் செனத்தி தரும் வசதி இருக்கிறதா, பேரீச்சம் தோப்பு, ஒட்டகம் என்று சொத்துபத்து எவ்வளவு என்று பட்டியலிட்டு வரச் சொல்லவில்லை! ‘திருமணத்திற்கு தகுதியான வகையில் இருக்கிறாரா?’ தீர்ந்தது விஷயம்.

ஏன் இப்படி?

இறையச்சம், ஒழுக்கம் போன்ற மாண்புகளில் இணைந்து உருவாகிறதே - அது வாழ்க்கை. உலக மகா வாழ்க்கை! மறுமையின் சிறப்பிற்கு இம்மையில் அடித்தளம் அமைக்கும் வாழ்க்கை. அத்தகு இல்லறம் உலகின் சிறந்த வாரிசுகளை ஈன்றெடுக்கும்; இறைவனின் பாதுகாவல் அவர்களுக்கு என்றென்றும் இருக்கும் என்பது உமரின் நம்பிக்கை.

என்ன ஆயிற்று? பின்னர் நடைபெற இருக்கும் இஸ்லாமிய வரலாற்றின் முக்கிய நிகழ்விற்கு அத்திருமணம் முன்னுரை எழுதியது.

அந்தப் பெண்ணுக்கும் ஆஸிமுக்கும் மகளொருவர் பிறந்தார். அந்த மகளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அவர் வேறு யாருமல்ல. பின்னாளில் நேர்வழி சென்ற கலீஃபாக்கள் வரிசையில் ஐந்தாமவர் என்று இஸ்லாமிய உலகு போற்றுமளவுக்கு ஆட்சி புரிந்த 'இரண்டாவது உமர்', உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்)தாம் அவர்.

இஸ்லாமிய ஆட்சியின் பொற்காலத்தை வாசிக்கும்போது இத்தகு ஆட்சியும் ஆட்சியாளர்களும் நமக்கும் அமைய வேண்டுமே என்று எழும் ஆசையும் ஆதங்கமும் நியாயமானவையே. தப்பே இல்லை. ஆனால் அதனுடன் மற்றொன்றும் நமக்கு நினைவில் இருத்தல் வேண்டும். அவர்களெல்லாம் நல்லதொரு நாளில் வானில் இருந்து குதித்து பூமிக்கு வந்தவர்களல்லர். நபி (ஸல்) வழி எவ்வழி, அவ்வழி என் வழி என்று உணர்ந்தார்கள்; அதை இழுத்து சுவாசித்து வாழ்ந்தார்கள். அவ்வளவுதான்!

தலைவர்கள் உருவானார்கள்!


-நூருத்தீன்


சான்றுகள் :

'அமீருல் முஃமினீன் (உமருடைய) சிறப்பு' - இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) பக்கம் 89-90

'உமர் பின் அல்கத்தாப், வாழ்வும் காலமும்' - மூலம்: டாக்டர் அலீ முஹம்மது ஸல்லாபீ (ஆங்கில மொழியாக்கம் : நாஸிருத்தீன் அல்கத்தாப்)

Sunday, March 6, 2011

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா!

http://1.bp.blogspot.com/_oqgSsBjDlAY/S3pYaEPW6YI/AAAAAAAAAKo/en_n2mS5ZXE/s1600/Bismillah_2.JPG

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
நன்றி : notice from kayaltoday.com
http://4.bp.blogspot.com/-yhvALf7LFoY/TXErQyxtzCI/AAAAAAAAEpg/n5J21IJz2ac/s1600/notice%2B2.jpeg
‘தமிழகத்தில் என்பதுகளுக்கு முன்னிருந்த நிலைமாறி ஏகத்துவ எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது’ என்று நமக்கு நாமே கூறிக்கொள்கிறோம்! ஆனால்,’நீங்கள் எது வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள், நாங்கள் எங்களின் குல தெய்வமான குல அவுலியாவைப் போற்றிப் புகழ்ந்து அவர்களுக்கு பாமாலைகள் பாடி அவர்களை கவுரவித்து அவர்களுக்கு படையல் (சீரணி) படைத்து அவர்களிடம் எங்களின் தேவைகளைக் கேட்டு பெற்று வாழ்வில் சுபிட்சம் பெறுவோம்’ – இப்படி இறைவனுக்கு தொடர்ந்து இணைவைத்துக் கொண்டிருக்கும் மற்றொரு கூட்டம்.

ரபியுல் அவ்வல் மாதத்தில் மீலாது விழா என்ற பெயரில் நடைபெற்ற அநாச்சாரத்திற்குப் பிறகு அதற்கு அடுத்து வந்த மாதத்தில் முஹையத்தீன் பெயரில் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் பெயர்களில் கட்டுக்கதைகளை அள்ளிவிட்டனர். தற்போது சென்ற மாதத்தில் விடுபட்ட கட்டுக்கதைகளை அரங்கேற்றுவதற்காக மதராஸாக்களின் தலைமையில் மற்றுமொரு கந்தூரி விழா!

இந்த கந்தூரி விழா என்ற பெயரிலே இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டுவைக்கும் நம்பிக்கைகளையுடைய கட்டுக்கதைகளை ஏழு வருடங்கள் மதரஸாக்களில் கல்வி பயிலும் வருங்கால உலமாக்களுக்கு மார்க்க கல்வியைப் போதிக்கும் மௌலானா மௌலவிகளே, ஷைகுல் பலக்குகளே கட்டவிழ்த்து விடுவது தான் வேதனையாக இருக்கின்றது. அவர்களுக்கு சத்தியம் இதுதான் என்று தெரியும். இருந்தும் உண்மையைச் சொன்னால் எங்கே தம் பிழைப்புக்கு பொல்லாப்பு ஆகிவிடுமே என்ற அச்சத்தினால் மார்க்கத்தின் பெயராலேயே பொய் கூற துணிந்து விட்டனர்.

அல்லாஹுவை அழைப்பதை விட்டுட்டு முஹிய்யத்தீனை அழைக்கும் அவல நிலையே பாரீர் ........

அப்துல் காதிர் ஜீலானியின் (ரஹ்) வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்நிகழ்ச்சிகளின் இறுதியில் இவர்களால் பயபக்தியுடன் ஓதப்படும் முஹையதீன் மவ்லூது மற்றும் யாகுத்பா போன்ற பாடல்களில் அப்துல் காதிர் ஜீலானியை (ரஹ்) இறைவனுக்கு நிகராக சித்தரித்து இணை வைக்கும் மாபாதக செயல்களைச் செய்கின்றனர்.இவர்களால் பயபக்தியுடன் ஓதப்படும் யாகுத்பா என்ற பாடலை ஒருவர் நம்பிக்கையுடன் பாடினால் அவரை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடும் அளவிற்கு ஷிர்க் நிறைந்தது தான் இந்த யாகுத்பா என்ற நச்சுக்கவிதை! இந்த மௌலானா மௌலவிகள் பயபக்தியுடன் பாடும் இந்த யாகுத்பா பாடலின் சில வரிகளைப் பார்ப்போம்!

காயல்பட்டிணத்தைச் சார்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது ஆகும். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் துதருக்கு நிகராகவும் அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது. சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன் ஹதீஸுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களுக்கு முஹ்யித்தீன் தான் குத்பு!!!!
வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே!

எதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவர் முஹ்யித்தீன்!
(அப்துல் காதிர் ஜீலானி அவர்களே!) நீங்கள் விரும்பிய அத்தனை ஆற்றலையும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கிவிட்டான். எனவே தாங்கள் அவனது படைப்புகளில் எதனையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவராயும் அவர்களின் கீழ்படிதலுக்கு உரியவராயுமிருக்கிறீர்கள்.

முஹ்யித்தீனைக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்கு அருள்???
கவ்ஸுல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அருள் புரிவானாக!

முஹ்யித்தீன் மகத்தான இரட்சகராம்!!!
எல்லா காலங்களிலும் நேரங்களிலும் (எங்களைக்) காப்பாற்றும் மகத்தான இரட்சகரே!
(அல்லாஹ்வுக்கும், உங்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை) நீங்கள் செவியுற்றுக் கொண்டு இருக்கும்போதே காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றியவராகிவிடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கிறீர்! என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது; முஹ்யித்தின் அவர்களே! (இறைவனாலேயே மகத்தான இரட்சகரே என்று அழைக்கப்பட்டதன் மூலம் நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைத்தான் சூட்டப்பட்டு விட்டீர்கள்!

ஆயிரம் தடவை அழைத்தால் ஓடோடி வரும் முஹ்யித்தீன்!!!
எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும் தனது உறக்கத்தைக் களைந்தவராகவும் உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்! எனவே ஓ!அப்துல்காதிர் முஹ்யித்தீனே! என்று அவர் (என்னை) அழைக்கட்டும் (என்று தாங்கள் கூறினீர்கள்)

வழிகாட்டும் முஹ்யித்தீன்!!!
யாருக்கு ஷைகு கிடையாதோ அவருக்கு நான் ஷைகாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறேன்! எந்த அளவுக்கு என்றால் அவன் தனிமையில் இருக்கும் போது நான் உற்ற நண்பனாக இருக்கிறேன்! எனக்கும் அவனுக்குமிடையே ஒரு தொடர்பு இருக்கிறது என்று நீங்கள் கூறினீர்கள் எனக்கும் அவ்வாறே நீங்கள் ஆகிவிடுங்கள் முஹ்யித்தீனே!

மார்க்கத்தை நிலை நிறுத்தக் கூடியவர் முஹ்யித்தீன்!!!
நன்மையான எல்லாசெற்களுக்கும் நீங்களே எனக்கு கலீபாவாக இருந்து கொள்ளுங்கள்! என் சமுதாயத்துக்கு நீங்கள் உதவியாளராக ஆகிவிடுங்கள்! அறிவுடையேர் உங்களைப் பொருந்திக் கொண்டனர் முஹ்யித்தீனே! நீங்கள் தான் என் மார்க்கத்தை நிலை நிறுத்தக் கூடியவர் என்று எனது பாட்டனார் நபி(ஸல்) அவர்கள் சொல்பவர்களாக இருந்தனர்.

இரட்சகர்! உதவி செய்பவர்!
என் தலைவரே! என் ஊன்று கோலே! என் இரட்சகரே! எனக்கு உதவுபவரே! என் எதிரிகளுக்கு பாதகமாக எனக்கு உதவுபவராக நீங்கள் ஆகிவிடுங்கள்! என் கௌரவத்தைக் காப்பவராகவும் ஆகிவிடுங்கள்! காலாகாலம் என்கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குப் பகரமாக எங்களிடம் இருக்கும்! முஹ்யித்தீனே!

தலைவர்களிலெல்லாம் தலைசிறந்த முஹ்யித்தீனே!
உங்களின் தெளிவான பாட்டையை நாடும் (முரீதுகளில்) ஒருவனாக என்னையும் கருதிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு என்றென்றும் கட்டுப்பட்டு நடக்கும் உங்கள் அடியார்களில் ஒருவனாகவும் என்னைக் கருதிக் கொள்ளுங்கள்! உங்களின் போர்ப்படையில் முன்னனி வகிப்பவனாகவும் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! தலைவர்களிலெல்லாம் தலைசிறந்த முஹ்யித்தீனே!

நேர்வழி காட்டும் முஹ்யித்தீன்!
நீங்கள் நடந்து சென்ற நேரான வழியை என் உள்ளத்துக்கு காட்டிவிடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான். நீங்கள் அந்த துறைக்கு சொந்தக்காரராக உள்ளீர்கள்! கொளுந்து விடடெறியுயம் நெருப்பிலிருந்து காத்து விடுங்கள்! அனைத்து வலிமார்களுக்கும் மன்னரே! முஹ்யித்தீனே!

என்றென்றும் நிலைத்திருக்கும் முஹ்யித்தீனின் கை!
எனது இந்தக் கை என்றென்றும் நிலைத்திருக்கும். என் தரீக்காவை நாடுபவர்களுக்கு என் கை துணை நிற்கும். நேர்வழியை நாடும் மக்கள் என் கையால் வெற்றி பெற்று விட்டனர். ‘தீனை உயிர்ப்பித்தவர்’ என்று உண்மையில் அழைக்கப்படுவதற்கு நானே அதிக உரிமை படைத்தவன் என்று தாங்கள் கூறினீர்கள்.

முஹ்யித்தீன் என்ற பெயருக்கான காரணம்!
நேரான வழிகாட்டும் இஸ்லாமிய மார்க்கத்தை மெலிந்த மனிதனின் வடிவில் தாங்கள் கண்டீர்கள்! தங்கள் கைகளால் அவனைத் தாங்கள் தொட்டவுடன் அம்மனிதரிடம் இருந்த நோய் விலகி, அவன் எழுந்து அன்புடன் ‘தீனை உயிர்பித்தவரே!’ என்று தங்களை அழைக்கலானான்.

மக்கத்து முஷ்ரிக்குகளின் நம்பிக்கைகளை விட மிக மோசமான நம்பிக்கைகளையுடைய மற்றும் கராமத்துக்கள் என்ற பெயரில் கட்டுக்கதைகளையுடைய இந்த நச்சுக் கவிதைகளைத் தான் மவ்லூது சரீப் என்ற பெயரிலும் யாகுத்பா என்ற பெயரிலும் இவர்கள் இறையில்லமான பள்ளிவாசலில் வைத்து பாடுகின்றனர். அல்லாஹ்வின் இல்லங்களில் அல்லாஹ்வைத் தவிர்த்து வேறு யாரையும் அழைக்க வேண்டாம் என அல்லாஹ் கட்டளையிட்டிருக்க நாங்கள் அல்லாஹ்வுடன் முஹ்யித்தீனையும் அழைப்போம் என்று இவர்கள் செயல்படுகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 72:18)

அல்லாஹ் அல்லாதவர்களை  ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்பவர்களைப் பார்த்து இவர்கள் கூறுவது  ‘நீங்கள் வழிகெட்டவர்கள்’ என்று! ஆனால் அல்லாஹ்வோ, அவனது வேதத்தில், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை அழைத்து உதவி தேடும் இவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? எனக் கேட்கிறான்.

“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!….. (அல்குர்அன் 7:194)

“மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)

துன்ப நேரங்களில் ஆபத்து காலங்களில் உதவி செய்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை!

(துன்பத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டழைத்தால், அவர்களுக்கு பதில் கூறி, அவர்களுடைய துன்பங்களை நீக்கியவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதியாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா?… (அல்குர்அன் 27:62)

யா முஹ்யித்தீன் என்றோ அல்லது யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே! என்றோ அல்லது வேறு எந்த அவுலியாவின் பெயரை அழைத்தவாறே ஒருவர் மரணித்தாரானால் அவரின் இருப்பிடம் நரகமே!

“யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில் மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்” (ஸஹீஹுல் புகாரி)

துன்பங்களை நீக்குபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை!
அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது…. (அல்குர்அன் 10:107)

அல்லாஹ் இணைவைப்பை மன்னிக்கவே மாட்டான்!
(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்அன் 17:23)
“நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்…… (அல்குர்அன் 4:48)

சத்தியமார்க்கமான இஸ்லாம் தெளிவானது. இதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை! அல்லாஹ் அவனது திருமறையில் இணை வைப்பின் பயங்கர விளைவுகளையும் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை அழைத்து உதவி தேடுபவர்கள் எல்லாம் மிகுந்த வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் தெள்ளத் தெளிவாகக் கூறியிருக்கும்போது அற்ப உலகாதாயத்திற்காக இந்த உண்மையை மூடிமறைத்து அல்லாஹ்வின் பள்ளியிலேயே முஹ்யித்தீனை அழைத்து உதவி தேடுவதற்கு உறுதுணையாக இருக்கும் ஆலிம்களே!

அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை மறைப்பவர்களை இறைவன் எச்சரிக்கும் வசனங்களை சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் அல்லாஹ்வையும் மறுமையையும் உறுதியாக நம்புபவர்களாக இருந்தால் அல்குர்ஆனின் போதனைகளை மார்க்கமறிய பாமரர்களிடம் மறைத்தற்காக அல்லாஹ்விடம் பதில் கூறவேண்டும் என்பதை நினைவில் இருத்திக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!

அல்லாஹ் கூறுகிறான்: -
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்”  (அல்-குர்ஆன் 2:159)

“சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?” (அல்-குர்ஆன் 3:71)

ஆக்கம்: புர்ஹான்
சவூதி அரேபியா