Friday, March 11, 2011

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களின் வரலாறு

http://1.bp.blogspot.com/_oqgSsBjDlAY/S3pYaEPW6YI/AAAAAAAAAKo/en_n2mS5ZXE/s1600/Bismillah_2.JPGஇயற்பெயர்   :   அஹ்மத் இப்னு ஹம்பல்

குறிப்புப்பெயர்    :  அபூ அப்தில்லாஹ்

பிறப்பு  :  இராக் நாட்டில் பஃதாத் என்ற ஊரில் ஹிஜ்ரீ 164 வது வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் பிறந்தார்கள்.

கல்வி :  ஹிஜ்ரீ 179 ஆம் வருடம் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். அப்போது அவர்களுக்கு பதினான்கு வயதாக இருந்தது. குர்ஆனை மனனம் செய்து எழுதப்படிக்க கற்றுக்கொண்டப் பின் இமாம் அஹ்மத் அவர்கள் பஃதாதில் உள்ள ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸ்கலை தொடர்பான விஷயங்களை கற்றார். இவர் முதன்முதலாக அபூஹனீஃபா இமாமின் மாணவரான அபூயூசுஃப் அவர்களிடமிருந்து ஹதீஸ்களை கற்றார்கள். இவர்கள் காலத்தில் இருந்த கல்விகளில் பல துறைகளில் சிறந்து விளங்கினார்கள்.

குறிப்பாக இவர்கள் எழுதிய முஸ்னத் என்ற நூலும் அறிவிப்பாளர்களைப் பற்றி நல்லவரா கெட்டவரா என்று பிரித்தறிவதற்கு  இவர் எழுதிய நூலும் இவர் ஹதீஸ்கலையில் மாபெரும் மேதையாக திகழ்ந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. ஹதீஸ்களில் எளிதில் கண்டுபிடிக்க இயலாத குறைகளுக்கு இல்லத் என்று சொல்வார்கள். இக்குறைகளை ஆராய்ந்து இது தொடர்பாக விளக்கியுள்ளார். இவருக்கென்று ஒரு மத்ஹப் உருவாகும் அளவிற்கு மார்க்கசட்டத்தைக் கூறுவதிலும் பாண்டித்துவத்தைப் பெற்றிருந்தார்.

கல்விக்காக பயணித்த ஊர்கள் :  இவர் பஸரா, கூஃபா, மக்கா, யமன், தர்சூஸ், ரிகா, அபாதான், எகிப்து, ரய் ஆகிய ஊர்களுக்கு சென்றுள்ளார்.

ஆசிரியர்கள்:    இமாம் ஷாஃபி, அபூயூசுஃப், சுஃப்யான் பின் உயைய்னா, அப்துர்ரஸ்ஸாக், வகீஃ, இப்ராஹிம் பின் சஃத், ஹ‎ýஷைம் பின் பஷீர், யஹ்யா பின் சயீத், இப்னு நுமைர், யசீத் பின் ஹாரூன், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ  மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்தார்கள்.

இவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தவர்கள்: இமாம் ஷாஃபி, யஹ்யா, அப்துர்ரஸ்ஸாக், அப்துர்ரஹ்மான், மஹ்தீ, வகீஃ, போன்ற இவருடைய ஆசிரியர்கள் கூட இவரிடமிருந்து பல ஹதீஸ்களைத் தெரிந்துகொண்டு இவருக்கு மாணவராக இருந்துள்ளார்கள். இன்னும் பிரபலியமான புத்தகங்களின் ஆசிரியரான இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் திர்மிதி, இமாம் இப்னுமாஜா, இமாம் அபூதாவுத், இமாம் நஸயீ

சிறப்பு   :    இவர் மார்க்கத்திற்காக அரும்பெரும் தொண்டாக ஹதீஸ்களை ஒன்றுதிரட்டியதுடன் மார்க்கத்தை முறையாக கடைபிடித்து ஒழுக்கச் சீலராகவும் திகழ்ந்தார்கள். அதிகமாக வணக்கங்களும் நோன்புகளும் வைப்பவராக இருந்தார்கள். இமாம் ஷாஃபி, இமாம் யஹ்யா பின் மயீன், அலீ பின் அல்மதீனீ ஆகியோர் இவரைப் புகழ்ந்து கூறியுள்ளார்கள். அரசனுக்கு பிடிக்காத கருத்தை இவர் வெளியிட்டதற்காக இவர்கள் சிறைபிடிக்கப்பட்டு சோதிக்கப்பட்டார்கள்.

படைப்புகள் :   இவர் எழுதிய முஸ்னத் அஹ்மத் என்ற புத்தகம் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது. இன்னும் அல்இலல், அன்னாஸிஹ் வல்மன்சூஹ், அஸ்ஸ‎ýஹ்த், அல்அஷ்ரிபத், அல்ஃபளாயில், அல்ஃபராயில், அல்மனாசிக், தாஅதுர்ரசூல், அல்முகத்தமு வல்முஅஹ்ஹர், ஜவாபாத்துல் குர்ஆன், ஹதீஸ‎ý சுஃபா, நஃப்யுத்தஷ்பீஹ், அல்இமாமா, கிதாபுல் ஃபிதன், கிதாபு ஃபளாயிலி அஹ்லில் பைத், முஸ்னது அஹ்லில் பைத், அல்அஸ்மாஉ வல் குனா, கிதாபுத்தாரீஹ் ஆகியப் புத்தகங்களை தொகுத்துள்ளார்கள்.

மரணம்:    இவர் ஹிஜ்ரீ 241 ஆம் வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார்கள். பஃதாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமையன்று மரணித்தார்கள். இவர்களுடைய ஜானாஸவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள்.

0 comments: