Sunday, February 14, 2010

விஞ்ஞானிகளின் பார்வையில் திருக்குர்ஆன்

அப்துல் மஜீத் ஏ ஜிந்தானி என்பவர் கீழ்க்கண்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து திருக்குர்ஆன், ஹதீது கியவற்றில் அடங்கியுள்ள கருவியல், கடலியல், பிரபஞ்சம், பூமி, மலைகள் போன்றவற்றைப் பற்றிய விஞ்ஞானக் கருத்துக்களைக் கொண்ட வசனங்களை எடுத்துக்காட்டி, விளக்கி, அவற்றை அவர்களை ராயச் செய்து அவர்களுடைய கருத்துக்களை வீடியோப் பதிவு செய்துள்ளார். சவுதி அரேபியாவில் நடந்த 8வது உலக மருத்துவ கலந்தாய்வுக் கூட்டத்தின் சார்பாக இதெல்லாம் நடந்துள்ளது. This is the Truth எனும் அந்த வீடியோ பதிவு அரபிக், ங்கிலம், ·ப்ரெஞ்ச், உர்து, துர்கிஷ் கிய மொழிகளில் கிடைக்கிறது. இந்த வீடியோப் பதிவு www.it-is-truth.org/ என்ற முகவரியிலும் கிடைக்கிறது.


பேரா. டாக்டர். கெய்த் எல். மூர் (Prof. Dr. Keith L. Moore)

டொராண்டோ பல்கலைக் கழகத்தின் உடற்கூறியல் மற்றும் உயிரணு உயிரியல் துறையில் பேராசிரியராக இருந்தவர். தற்போது ஓய்வு பெற்றவர். (Professor Emeritus). புகழ்பெற்ற கருவியலாளர். மருத்துவ நூல்கள் பல எழுதியவர். குறிப்பாக Clinically Oriented Anatomy என்ற நூலையும் (3ம் பதிப்பு) T.V.N. பெர்சாத் என்பவரோடு இணந்து The Developing Human என்ற நூலையும் (5ம் பதிப்பு) எழுதியவர்.

கனாடிய உடல்கூறு வல்லுணர்களின் சங்கம், அமெரிக்கன் அசோசியேஷன் ·ப் க்ளினிகல் அனாட்டமிஸ்ட்ஸ் கியவற்றின் தலைவராக இருந்தவர். முதலில் சொல்லப்பட்ட சங்கத்தினால் மதிப்பு மிகுந்த ஜேஸிபி க்ராண்ட் விருதும் (J.C.B. Grant Award), “க்ளினிக்கல் உடல்கூறியல் துறையில் தனிச்சிறப்பு வாய்ந்த பங்களிப்பு” செய்ததற்காக 1994ல் இரண்டாவது சங்கத்தின் கௌரவ உறுப்பினர் விருதும் பெற்றார்.

அவர் கூறுகிறார்:

"நான் கடந்த மூன்று ண்டுகளாக, சவுதியில் ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தின் கருவியல் குழுவில் மனித இனவிருத்தி மற்றும் குழந்தை பிறப்பதற்கு முந்திய வளர்ச்சி நிலைகள் கியவை பற்றிக் குர்ஆனிலும் ஸ¤ன்னாவிலும் சொல்லப்பட்ட பல செய்திகளை விளக்குவதில் உதவி செய்பவனாகப் பணிபுரிந்து வந்தேன். கருவியல் விஞ்ஞானம் உருவாகி ஸ்தாபிக்கப்படுவதற்கு முந்திய கி.பி. 7-ம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட பிழைகளற்ற அந்த நுட்பமான கருத்துக்களைச் சிந்தித்த எனக்கு முதலில் வியப்புதான் ஏற்பட்டது. கி.பி. 10-ம் நூற்றாண்டில் வாந்த முஸ்லிம் விஞ்ஞானிகளின் புகழ்மிகு வரலாற்றையும் அவர்கள் மருத்துவ உலகுக்கு அளிந்த பங்களிப்பு பற்றியும் நான் அறிவேன்னால் குரானிலும் ஸ¤ன்னாவிலும் கூறப்பட்டிருக்கும் மார்க்க நிஜங்களையும் நம்பிக்கைகளையும் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது”.

கெய்ரோவில் நடந்த ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தில் டாக்டர் கெய்த் மூர் ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கிறார். அதில் அவர்:

“மனித வளர்ச்சி பற்றி குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்களின் பொருளைத் தெளிவு படுத்த உதவுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. கடவுள் அல்லது அல்லாஹ்விடமிருந்துதான் இச்செய்திகள் முஹம்மதுவுக்கு வந்திருக்க வேண்டும் என்பதில் நான் மிகத்தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் அதில் கூறப்பட்டுள்ள உண்மைகள் பலவும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஹம்மது இறைவனுடைய அல்லது அல்லாஹ்வுடைய தூதராகத்தான் இருக்க வேண்டும் என்பதை இது எனக்கு நிரூபிக்கிறது.

"...ஏனெனில் மனித கரு வளர்கின்ற நிலைகளானது மிகவும் சிக்கலானது. ஏனெனில் அது வளரும்போது தொடர்ந்து பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. குர்ஆன் மற்றும் ஸ¤ன்னாவில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களின் அடைப்படையில் ஒரு புதிய வகைப்படுத்துதலுக்கான அமைப்பை ஏற்படுத்த புதிய செயல்திட்டம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த திட்டமானது மிகவும் எளிமையானதும் முழுமையானதுமாகும். அதுமட்டுமின்றி, திருமறை மற்றும் திருநபி வழியிலான இந்த வகைப்படுத்துதல் தற்போதுள்ள கருவியல் அறிவோடு ஒத்துப்போகக் கூடியதாகவும் அதை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


"கடந்த நான்காண்டுகளாக குர்ஆனையும் நபிமொழிகளையும் தீவிரமாக ஆராய்ந்ததில், மனித கருவை வகைப்படுத்துவதற்கான ஒரு புதிய அமைப்பை வெளிப்படுத்த முடிந்துள்ளது. இது மிகவும் வியக்கத்தகு அமைப்பாகும். ஏனெனில் இது கி.பி. 7-ம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டதாகும்...அந்த நூற்றாண்டில் சொல்லப்பட்ட குர்ஆனின் விவரணைகள் அந்த காலகட்டத்தின் விஞ்ஞானக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவில்லை.”

பேரா. ஈ. மார்ஷல் ஜான்ஸன் (Prof. E. Marshall Johnson)

அமெரிக்காவின் பென்சில்வேனியா, ·பிலடெல்·பியாவில் உள்ள தாமஸ் ஜெ·பர்சன் பல்கலைக்கழகத்தின் டேனியல் பா இன்ஸ்ட்டிட்யூட்டின் (Daniel Baugh Institute) இயக்குனர். உயிரியல் வளர்ச்சி மற்றும் உடற்கூறியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர். 200-க்கும் மேற்பட்ட வெளியீடுகளின் சிரியர். அற்புதங்கள் பற்றி ராயும் கழகத்தின் (Teratology Society) முன்னால் தலைவரகவும் இவர் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

குர்ஆனின் விஞ்ஞான அடையாளங்கள் பற்றிய 7-வது கலந்தாய்வுக் கூட்டம் சவுதியில் 1982-ம் ண்டு நடந்தது. அதில் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் உள்ள விஞ்ஞானக் கருத்துக்கள் பற்றி ராய்வதற்காக ஒரு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அப்போதுதான் இந்த விஷயம் பற்றி ஆராயும் ஆர்வம் பேராசிரியர் ஜான்சனுக்கு ஏற்பட்டது. அப்படிப்பட்ட விஞ்ஞானப்பூர்வமான கருத்துக்கள் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் உள்ளன என்ற கருத்தையே முதலில் ஜான்ஸன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஷெய்க் ஜிந்தானியோடு கலந்துரையாடிய பிறகு இவருக்கு இந்த விஷயம் பற்றி அறிய ர்வம் ஏற்பட்டது. எனவே இவர் தனது ஆராய்ச்சியை கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வெளிப்பக்க மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சி பற்றி திருப்பினார். அவர் கூறுகிறார்:

"...சுருக்கமாகச் சொன்னால், கருவில் உள்ள சிசுவின் வெளிப்பக்க வளர்ச்சியைப் பற்றி மட்டுமல்ல, அதன் உள்ளார்ந்த வளர்ச்சி நிலைகளையும் குர்ஆன் விவரிக்கிறது. தற்கால விஞ்ஞானம் அங்கீகரித்துள்ள முக்கிய நிகழ்வுகளை குர்ஆனும் வலியுறுத்திக் கூறுகிறது".

"ஒரு மாணவன் என்ற முறையில் எனக்கு தெளிவாக எது தெரிகிறதோ அதைத்தான் நான் படிக்க முடியும். கருவியல¨யும் வளர்ச்சி சார்ந்த உயிரியலையும் என்னால் புரிந்துகொள்ள முடியும். குர்ஆனிலிருந்து எனக்கு மொழிபெயர்த்து சொல்லப்படும் சொற்ளை என்னால் புரிந்து கொள்ள முடியும். அந்தக் காலகட்டத்தில் நான் வாழ்ந்திருப்பேனேயானால், குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை நிச்சயமாக என்னால் சொல்லியிருக்க முடியாது...

“முஹம்மது என்ற இந்த தனிமனிதர் ஏதோ ஒரு மேலிடத்திலிருந்து இந்த செய்திகளைப் பெற்றுக்கொண்டார் என்ற கருத்தை மறுப்பதற்கான ஆதாரம் எதையும் நான் பார்க்கவில்லை...எனவே அவருக்குக் கிடைத்த செய்திகள் தெய்வீகமானவை என்ற கருத்தில் முரண்பாடு எதையும் நான் பார்க்கவில்லை."


பேரா. டி.வி.என். பெர்சௌத்

உடற்கூறியல் மற்றும் குழந்தை மருத்துவம், குழந்தை ரோக்கியம் கியவற்றில், கனடாவின் மணிட்டோபா பல்கலைக் கழக பேராசிரியர்.

20-க்கும் மேற்பட்ட நூல்களின் சிரியர் மற்றும் பதிப்பாசிரியர். 181-க்கும் மேற்பட்ட விஞ்ஞான ராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். டாக்டர் கெய்த் மூரொடு இணைந்து வளரும் மனிதன் (The Developing Human) என்ற நூலை எழுதியவர். 1991-ல் ஜேசிபி க்ராண்ட் விருது (J.C.B. Grant Award) பெற்றவர்.

"முஹம்மது மிகவும் சாதாரண மனிதர். அவருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. 1400 ண்டுகளுக்கு முந்திய காலத்தைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்றைய விஞ்ஞான அறிவு ஏற்றுக்கொள்கின்ற நுட்பமான மிகச்சரியான கருத்துக்களைச் சொல்லும் எழுத்தறிவில்லாத ஒரு மனிதரை இங்கே பார்க்கிறோம்..!

“இது ஒரு தற்செயலாக இருக்க முடியும் என்ற என்னால் நினைக்க முடியவில்லை. மிகச்சரியான நுட்பமான தகவல்கள் ஏராளமான உள்ளன. டாக்டர் மூர் சொல்வதைப் போல, இது அவருக்கு ஏற்பட்ட ஒரு தெய்வீக வெளிப்பாடு என்பதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.”


பேரா. ஜோ லெய் சிம்சன் (Joe Leigh Simpson)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பெய்லர் மருத்துவக் கல்லூரியின் (Baylor College of Medicine, Houston, Texas, USA) மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நோய் மருத்துவத்துக்கான துறையில் பேராரிரியர் மற்றும் தலைவர். அமெரிக்க இனப்பெருக்க சங்கத் தலைவராகவும் உள்ளார் (President of the American Fertility Society). பல விருதுகளைப் பெற்றவர். 1992-ல் இவர் பெற்ற மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிர் நோய் மருத்துவத்துக்கான துறைப் பேராரிரியர்கள் சங்க பொதுமக்கள் அங்கீகார விருது குறிப்பிடத் தக்கது. தான் சிறப்பு ராய்ச்சி செய்கின்ற கருவியல் பற்றிய பல உண்மைகளை குர்ஆனும் நபிமொழிகளும் சொல்வதை அறிந்து இவரும் பல விஞ்ஞானிகளைப் போல முதலில் வியப்படைந்தார். ஷெய்க் ஜிந்தானியைச் சந்தித்தபோது, தன்னிடம் காட்டப்பட்ட சில குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் உள்ள வசங்களின் பொருளில் உள்ள உண்மையை நிரூபிக்க வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினார்.

"..இந்த ஹதீதுகள் இந்த ‘எழுத்தாளர்’ (நபிகள் நாயகம்) வாழ்ந்த காலத்தில் இருந்த விஞ்ஞானக் கருத்துக்களில் இருந்து பெறப்பட்டிருக்க முடியாது...மரபியலுக்கும் இஸ்லாம் மதத்துக்கும் இடையே எந்த முரண்பாடுமில்லை என்பதை மட்டுமல்ல, ஒரு மதமானது தெய்வீக வெளிப்பாடுகளின் மூலம் மரபுவழிப்பட்ட விஞ்ஞான அணுகுமுறைகளுக்கு புதிய வழிகாட்ட முடியும் என்பதையும் இது நிரூபிக்கிறது....குர்ஆனிலுள்ள சில வசனங்களின் பொருள் அதற்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின் கிடைத்த அறிவைக்கொண்டு உறுதிசெய்யப்படும்போது, குர்ஆனிலுள்ள அறிவு இறைவனிடமிருந்து வருவதாகும் என்பது உறுதியாகிறது.”

பேரா. ஜெரால்டு சி. கோரிங்கர் (Gerald C. Goeringer)

கருவியல் பேராசிரியர், ஒருங்கிணைப்பாளர், உயிரணு உயிரியல் துறை, மருத்துவக்கல்லூரி, ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், வாஷிங்டன் டிஸி, யு.எஸ்.ஏ.

கருவியல் ராய்ச்சி வரலாற்றில், பிறப்பதற்கு முன்பான கருவின் பல நிலைகளிலான வளர்ச்சி பற்றி ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய காலத்தில் கருவியல் பற்றிய நூல்கள் ஏதேனும் இருந்துள்ளனவா என்று ஷெய்க்.ஜிந்தானி இப்பேராசிரியரைச் சந்தித்தபோது கேட்டார். அதோடு, கருவறையில் சிசுவின் வளர்ச்சி பல்வேறு படிநிலைகளில் காணப்படுவதைப்பற்றி திருக்குர்ஆனின் சில வசனங்கள் பேசுவது பற்றியும் பேராசிரியரின் கருத்து என்ன என்று வினவினார். நீண்ட பல விவாதங்களுக்குப் பிறகு, சவுதியில் நடந்த 8-வது மருத்துவக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேரா.கோரிங்கர் இவ்விஷயம் பற்றிய தனது ய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார். அதில் அவர் கூறுகிறார்:

“...குழந்தை பிறப்பதற்கு முன்பாக, உயிரணுக்கள் கலப்பதிலிருந்து, சிசுவின் உடலுறுப்புகள் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெறுவதைப் பற்றி, ஒரு சில வசனங்களிலேயே குர்ஆனில் ஒட்டுமொத்தமாக விவரிக்கப்பட்டுள்ளது. அதற்குமுன்பு கருவின் வளர்ச்சி நிலைகள் பற்றிய தெளிவான, முழுமையான, வகைப்படுத்துதலோ, அவற்றைக் குறிப்பிடும் வார்த்தைகளோ விவரணைகளோ இருந்ததில்லை. மரமான விஞ்ஞான நூல்களில் இதுபற்றி சொல்லப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, குர்ஆனின் வசனங்கள் இதுபற்றி விவரிக்கின்றன.”

பேரா. ல்·ப்ரெட் க்ரோனர் (Alfred Kroner)

ஜெர்மனின்யின் மெயின்ஸ் பல்கலைக்கழக ஜியோசயின்சஸ் துறைப் பேராசிரியர். (Professor of the Department of Geosciences, University of Mainz, Germany).

உலகின் புகழ்பெற்ற நிலஅமைப்பியல் வல்லுணர்களில் பேரா. குரோனரும் ஒருவர். தனது துறை விஞ்ஞானிகளின் கோட்பாடுகளை கடுமையாக விமர்சித்தவர் என்ற வகையிலும் இவர் பிரபலம். ஏற்கனவே கூறப்பட்ட ஜிந்தானி இவரைச் சந்தித்து குர்ஆன் மற்றும் நபிமொழிகளாகிய ஹதீதுகள் கியவற்றிலிருந்து பல வசனங்களை எடுத்துக்காட்ட, அவற்றை ஆராய்ச்சி செய்த க்ரோனர் கூறுகிறார்:

“முஹம்மது எங்கேயிருந்து வந்தார் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது... இந்த பிரபஞ்சம் தோன்றிய விதம் குறித்தெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க முடியும் என்று சொல்வதெல்லாம் சாத்தியமே இல்லாதது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளுக்குள்தான் அவை பற்றியெல்லாம் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத் துணைகொண்டு விஞ்ஞானிகள் இது இப்படித்தான் அது அப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வரமுடிந்திருக்கிறது.

“அணுவிஞ்ஞானம் பற்றியெல்லால் ஒன்றுமே தெரியாத ஒரு மனிதர், 1400 ஆண்டுகளுக்கு முன்பு அவராகவே இந்த பூமியும் மற்ற கோள்களும் தோன்றிய விதம் பற்றியும், மேலும் இங்கே நாம் விவாதித்துகொண்டிருந்த கேள்விகளுக்கான விடைகள் பற்றியெல்லாம் தெரிந்து கொண்டிருக்கவே முடியாது...

“இதையெல்லாம் சேர்த்து வ¨த்துப் பார்க்கும்போது, சாதாரண எளிமையான ஒரு மனிதனுக்கான ஒரு எளிமையான விஞ்ஞான நூலாக குர்ஆன் இருக்கிறது என்று சொல்லலாம். 1400 ண்டுகளுக்கு முன் அதில் முஹம்மது சொல்லியிருக்கின்ற பல விஷயங்களை அந்தக்காலத்து அறிவை வைத்து நிரூபிக்கவே முடியாது. இந்தக்காலத்து விஞ்ஞான முறைகளைக் கொண்டுதான் அவைகளை விளக்க முடியும்.”

யுஷிதி கூஷன் (Yushidi Kusan)

ஜப்பானில் உள்ள டோக்கியோ வானில ய்வுக்கூட இயக்குனர். (Director of the Tokyo Observatory, Tokyo, Japan).

பிரபஞ்சத்தின் தோற்றம், வின் கோளங்களின் உருவாக்கம், பூமிக்கும் மற்ற கோள்களுக்குமிடையான உறவு -- இவை பற்றியெல்லாம் உள்ள குர்னின் வசனங்களை ஷெய்க் ஜிந்தானி இவரிடம் காட்டினார். அதோடு, மிக உயர்ந்த ஒரு நிலையிலிருந்து இந்த பிரபஞ்சம் மிகத்தெளிவாகக் கூர்ந்து கவனிக்கப்படுவதையும் அவர் எடுத்துரைத்தார்.

“குர்ஆனில் வானசாஸ்திரம் தொடர்பான உண்மைகள் இருப்பதைக் கண்டு நான் மிகவும் வியப்படைகிறேன். கவரப்படுகிறேன். நவீன வானசாஸ்திர ராய்ச்சியாளர்களாகிய நாங்கள் இப்பிரபஞ்சத்தின் மிகச்சிறிய பகுதியைத்தான் ராய்ந்து வருகிறோம். ஒரு சிறிய பகுதியைப் புரிந்துகொள்வதன்மீதுதான் நாங்கள் எங்கள் முயற்சிகளையெல்லாம் குவிக்கிறோம். ஏனெனில் தூரநோக்கிகள் வழியாக வானத்தின் ஒரு சில பகுதிகளைத்தான் எங்களால் பார்க்க முடியும். முழு பிரபஞ்சத்தையும் பற்றியெல்லாம் நினைக்கவே முடியாது. குர்ஆனைப் படிப்பதன் மூலமும், கேள்விகளுக்கு பதில் காணுவதன் மூலமும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய எனது ராய்ச்சியின் எதிர்கால வழியை என்னால் காணமுடியும்.”

பேரா. ம்ஸ்ட்ராங் (Professor Armstrong)

பேரா. ம்ஸ்ட்ராங் அமெரிக்காவின் கான்சாஸ் பல்கலைக்கழக வானவியல் பேராசிரியராகவும், நாசாவில் பணிபுரியும் விஞ்ஞானியாகவும் இருப்பவர்.

பிரபஞ்சம் பற்றிய குர்ஆனின் வசனங்களைப் பற்றி அவரிடம் கேட்டபோது அவர், “நாம் பார்த்த வசனங்கள் ரொம்ப ஆச்சரியமானவை. சாதாரண மனித அனுபவம் என்பதைத் தாண்டி வேறு எதோ ஒன்று நிச்சயமாக இருந்திருக்க வேண்டும். என்பதையே இந்த வசனங்கள் காட்டுகின்றன” என்றார்.

பேரா. வில்லியம் ஹே (William Hay)

அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக் கழகத்தின் பெருங்கடல் ஆய்வியல் பேராசிரியர்.

அமெரிக்காவில் இருக்கும் மிகப்புகழ் பெற்ற கடல் விஞ்ஞானியாவவர். ஜிந்தானி இவரைச் சந்தித்து கடலின் மேற்பகுதி, கடலின் மேல்பகுதியையும் ஆழத்தையும் பிரிக்கும் பகுதி, கடலின் தரை, கடல் நிலவியல் பற்றியெல்லாம் பல கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர் கூறிய பதில்:

“இம்மாதிரியான விஷயங்கள் பண்டைய வேதமான புனித குர்ஆனில் இருப்பது ரொம்ப சுவாரஸ்யமான விஷாயம். அத்தகவல்கள் எங்கிருந்து வந்திருக்க முடியும் என்று என்னால் தெரிந்து கொள்ள வழியில்லை.” என்று சொன்ன அவர், இவ்விஷயங்கள் பற்றிய குர்ஆனின் வசனங்களைப் பற்றிக் கேட்டதற்கு, “அது கடவுளால் சொல்லப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும்” என்று பதில் சொன்னார்.

பேரா. துராஜ் ராவ் (Durja Rao)

சவுதி அரேபியா, ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தில் கடல் நிலவியல் பேராசிரியர்.

இவருடைய துறை தொடர்பான குர்ஆனின் பல வசனங்களை ஷெய்க் ஜிந்தானி இவரிடம் காட்டி, அதுபற்றி வினவினார். அதற்கு பேராசிரியர் கூறியது:

“இந்த அறிவு 1400 ண்டுகளுக்கு முன்பு இருந்தது என்ற விஷயம் நம்புவதற்கே மிகவும் கடினமாக உள்ளது. சில விஷயங்களைப் பற்றி பொதுவாக சொல்ல முடிந்திருக்கலாம். ஆனால் மிகவும் ழமாக இதைப்பற்றியெல்லாம் சொல்ல வேண்டுமெனில், இது நிச்சயமாக சாதாரண மனித அறிவால் முடியாது. ஒரு சாதாரணம் மனிதனால் இந்த விஷயம் பற்றியெல்லாம் இவ்வளவு விரிவாகச் சொல்லவே முடியாது. எனவே இந்த தகவல்கள் எல்லாம் தெய்வீக மூலத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.”


தெஜாதத் தெஜாசன் (Tejatat Tejasen)

வானவியல் துறையின் தலைவர். தாய்லாந்தில் உள்ள சியாங் மியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ‘டீன்’(முதல்வர்) கவும் இருந்தவர்.

நவீன கருவியல் பற்றியும் அது தொடர்பான குர்ஆனின் பல வசனங்களையும் பற்றி இவர் பல ராய்ச்சிக்கட்டுரைகளைப் படித்தார். முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர் என பல அறிஞர்களோடும் நான்கு நாட்கள் இவர் செலவழித்து இந்த விஷயம் பற்றி குர்ஆன் ஹதீதில் காணப்படுவது என்ன என்று தெளிந்து கொண்டார். சவுதியில் நடந்த 8-வது மருத்துவ கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் எழுந்து சொன்னது:

“கடந்த மூன்று ண்டுகளாக நான் குர்ஆனில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன்...என்னுடைய ராய்ச்சிகள் மூலமாகவும், இந்த கலந்தாய்வின் மூலமாகவும் நான் தெரிந்துகொண்டது என்னவெனில், 1400 ண்டுகளுக்கு முன்னால் குர்ஆனில் சொல்லப்பட்ட அனைத்துமே உண்மையாகத்தான் இருக்க வேண்டும். விஞ்ஞானப்பூர்வமாக அவற்றை நிரூபிக்க முடியும்.

“தூதர் முஹம்மது எழுதப்படிக்கத் தெரியாத ஒருவராக இருந்தபடியால், அவர் ஒரு உண்மையான தூதுவராகவே இருந்திருக்க வேண்டும். அவருக்கு இறைவவெளிப்பாடு மூலமாக கிடைத்தவற்றையே அவர் பதிவு செய்திருக்கிறார். அந்த படைப்புகளின் சிரியர் கடவுள் அல்லது அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

“லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸ¥லுல்லாஹ் என்ற கலிமாவை சொல்லி முஸ்லிமாவதற்கு இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். இந்த கலந்தாய்வுக் கூட்டத்து வந்ததன் மூலம் எனக்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத ஒரு விஷயம் லாயிலாஹா இல்லல்லாஹ் என்று சொல்லி முஸ்லிமாவதுதான்.”

டாக்டர் மௌரிஸ் புசைஸ் (Dr. Maurice Bucaille)

இவர் 1920-ல் பிறந்தார். பாரிஸ் பல்கலைக் கழகத்தில் சர்ஜிகல் க்ளினிக்கின் தலைவராக இருந்தார். பல ண்டுகளாக புனித வேதங்களில் சொல்லப்பட்ட விஷயங்களையும் மதம் சாராத விஞ்ஞானக் கருத்துக்களையும் ராய்ச்சி செய்தார்.

"The Bible, The Qur'an and Science" (1976) என்ற உலகப்பிரசித்தி பெற்ற நூலின் சிரியர். குர்னில் குறிப்பிடப்பட்ட ·பரோவா மன்னனின் ‘மம்மி’ உடலை கெய்ரோ அருங்காட்சியகத்தில் சென்று ஆய்வு செய்து திருக்குர்னில் சொல்லப்பட உண்மைகளை இந்த நூலின் மூலம் உலகுக்கு தெரியப்படுத்தினார்.

ஹீப்ரூ, அரபிக் போன்ற வேத மொழிகளை நன்கு கற்றார். எகிப்திய ரகசியக் குறியீட்டு எழுத்து முறையையும் கற்றவர் இவர். இந்த அறிவுகளெல்லாம் இவருடைய பல்துறை ராய்ச்சிக்கு உதவியது. ஒரு மருத்துவர் என்ற முறையிலும் இவருடைய பங்களிப்பு முடிவான சில கருத்துக்களை அறிவுலகுக்கு வழங்கியுள்ளது.

இவருடயை "Mummies of the Pharaohs - Modern Medical Investigations" (St. Martins Press, 1990) என்ற நூலுக்கு ‘ஹிஸ்டரி ப்ரைஸ்’ என்ற விருது ·ப்ரெஞ்ச் அகாடமியால் வழங்கப்பட்டது. ·ப்ரெஞ்ச் நேஷனல் அகாடமியாலும் ஒரு பரிசு இதற்கு வழங்கப்பட்டது.

What is the Origin of Man (Seghers, 1988), Moses and Pharaoh, the Hebrews in Egypt, (NTT Mediascope Inc, 1994); போன்றவை இவருடைய மற்ற சில புத்தகங்கள்.

பத்து வருட ராய்ச்சிக்குப் பிறகு, டாக்டர் புசைல், பெரெஞ்ச் அகாடமி ·ப் மெடிசினில் 1976-ல் ற்றிய சொற்பொழிவு உலகப் பிரசித்தி பெற்றது. உடலியல் கூறுகளைப் பற்றியும் இனப்பெருக்கம் பற்றியும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள வசனங்களைப் பற்றிய சொற்பொழிவு அது. அப்படி ஒரு ராய்ச்சி ஏன் செய்ய வேண்டி வந்தது என்பது பற்றி அவரே சொல்கிறார்:

“இந்த துறைகளைப் பற்றிய நமது இன்றைய அறிவை வைத்துப் பார்க்கும்போது, குர்ஆன் வெளியான காலகட்டத்தில் அதில் இப்படிப்பட்ட விஷயங்கள் கூறப்பட்டுள்ளது எப்படி என்பது விளக்க முடியாததாக உள்ளது.

“முஹம்மதுதான் குர்ஆனின் சிரியர் என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்பது தெளிவாக விளங்குகிறது. எழுதப்படிக்கத் தெரியாத ஒரு மனிதர் அரேபிய இலக்கியத்திலேயே மிகமுக்கியமான ஒரு இலக்கிய அந்தஸ்து கொண்ட ஒரு படைப்பாளியாக எப்படி க முடியும்?

“அவருடைய காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாலும் சொல்ல முடியாத விஞ்ஞான உண்மைகளையெல்லாம் அவரால் எப்படி சொல்ல முடிந்தது? அதுவும் ஒரு சின்ன தவறுகூட இல்லாமல்?”

டாக்டர் மௌரிஸ் புசைல் பின்னாளில் முஸ்லிமானார்.

மேற்கண்ட விஞ்ஞானிகளின் கருத்துக்களை கீழ்க்கண்ட நூல்களிலும் ஆய்வுக்கட்டுரைகளிலும் காணலாம்:

· The Developing Human with Islamic Additions (3ம் பதிப்பு, W.B. Saunders Company, Philadelphia, 1982, with Dar Al-Qiblah for Islamic Literature, Jeddah, Saudi Arabia, 1983, பக்கம் viiic

· The Qur'an and Modern Science - Correlation Studies, என்ற நூல் Islamic Academy for Scientific Research, Makkah, Saudi Arabia. மறுபதிப்பு World Assembly of Muslim Youth (WAMY), USA., 1990.

· Human Development as Described in the Qur'an and Sunnah. Moore, Keith L.; Johnson, E. Marshall; Persaud, T.V.N.; Goeringer, Gerald C.; Zindani, Abdul-Majeed A.; and Ahmed Mustafa A, Commission on Scientific Signs of the Qur'an and Sunnah, Muslim World League, Makkah Al-Mukarramah, Saudi Arabia, 1992, ISBN 0-9627236-1-4. Collection of papers that were originally presented in the First International Conference on Scientific Signs of the Qur'an and Sunnah, held in Islamabad, Pakistan, 1987, and after some modifications and development, presented in their present form in Dakar, Sengal in July 1991.


0 comments: