கிறித்தவ நண்பர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை நாம் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.
அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக் கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர் கூறவில்லை.
மாறாக ஒரே கடவுளைத் தான் வணங்க வேண்டும் என்றே அவர் போதித்தார்.
கிறித்தவர்களுக்கு எதிரியாக இருந்து கிறித்தவர்களுக்குக் கொடுமைகள் பல இழைத்த சவுல் என்ற யூதர் பவுல் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு கிறித்தவ மதத்தில் சேர்ந்து இயேசு போதித்த கொள்கைக்கு மாற்றமான கொள்கையை உருவாக்கினார். அதைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இயேசுவுக்கு எதிரான கொள்கையை கிறித்தவ மார்க்கமாக்கி விட்டார்.
இதை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகள் முதல் கடைசி வரை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.
பவுல் தனது முகமூடியைத் தானே கிழித்துக் காட்டுவதை பைபிளில் நீங்கள் காணலாம்.
இதோ பவுல் கூறுவதைக் கேளுங்கள்!
19.நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.
20. யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.
21. நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப் பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும் நான் தேவனுக்கு முன்பாக நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
22. பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
23. சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.
1கொரி-9:19-23
மத்தேயு, மாற்கு, யோவான், லூக்கா ஆகிய நான்கு பேர் சுவிஷேசங்களை எழுதினார்கள். அது போல் நானும் சுவிஷேசத்தில் பங்காளியாவதற்காகவே இவர் புதுக் கொள்கையை உண்டாக்கியதாக பவுல் கூறுகிறார்.
மேலும் ஒவ்வொரு இனத்தவரையும் ஏமாற்றுவதற்காக ஒவ்வொருவரிடமும் ஒரு வேடம் போட்டுள்ளார் என்பதை அவரே தன் வாயால் சொல்கிறார்.
இன்னும் அவர் சொல்வதைக் கேளுங்கள்!
5. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?
6. அப்படிச் சொல்லக் கூடாது; சொல்லக் கூடுமானால் தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?
7. அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?
8. நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவரகள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
ரோமர் 3:5-8
இவர் கூறுவது அனைத்தும் பொய் என்று அன்றைக்கு எதிர்ப்பு வந்த போது தேவனுக்கு மகிமை ஏற்படுத்துவதற்காக அதாவது மதத்துக்கு ஆள் பிடிப்பதற்காக பொய் சொல்லலாம் என்று பச்சையாக ஒப்புக் கொள்கிறார்.
இயெசுவின் கொள்கையைச் சொன்னால் எடுபடாது. இரத்தம் சிந்தியதை வைத்து ஒரு கொள்கையை உருவாக்கினால் அது நன்றாக எடுபடும்; அதிக மக்கள் சேருவார்கள் என்பதற்காகவே இந்தக் கொள்கையை பவுல் உண்டாக்கினார்.
இன்றும் கூட கிறித்தவ மத குருமார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள் என்று பொது இடங்களில் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றுவதற்குக் காரணம் கடவுளுக்காக பொய் சொல்லலாம் என்ற பவுல் கொள்கையே காரணம்.
பவுல் கூறுவது வேதத்துக்கும் இயேசுவுக்கும் எதிரானது என்று பண்டிதர்கள் அன்றைக்கே கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பவுல் சொல்லும் பதில் இது தான்.
15. எப்படியெனில் நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
ரோமர் 7:15
எனக்கே விருப்பமில்லை தான்; ஆள் பிடிக்க வேண்டுமானால் இரத்ததைக் காட்டி பச்சாதாபம் தேடுவது தான் உதவும் என்பதற்காக தனக்கே விருப்பமில்லாத ஒன்றைப் பிரச்சாரம் செய்வதாக ஒப்புக் கொள்கிறார்.
இயேசு மரணித்த பின் உயிர்த்தெழுந்தார் என்ற கொள்கையை உண்டாக்கியதே நான் தான் எனவும் தனது மகன் தீமேத்தயூவுக்கு எழுதிய அறிவுரையில் குறிப்பிடுகிறார் பவுல்.
8. தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசு கிறிஸ்து என் சுவிசேஷத்தின்படியே மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.
2-தீமேத்தயூ 2:8
இயேசுவுக்குப் பின் பல காலம் கழித்து இயேசுவின் கொள்கைக்கு எதிராக வேதத்துக்கு எதிராக இவர் செய்த அநேக மாற்றங்கள் உள்ளன.
முரண்பாடு 1
இயேசு(அவருக்கு சாந்தி உண்டாகுவதாக) அவர்கள் அனுப்பப்பட்டது இஸ்ரவேலர்களுக்காகவா? அல்லது இஸ்ரவேலர்கள் அல்லாதவருக்காகவா?
பவுல் | இயேசு |
அப்போஸ்தலர் 13 அதிகாரம் 47. நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். அப்போஸ்தலர் 18 அதிகாரம் 6. அவர்கள் எதிர்த்து நின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி, அப்போஸ்தலர் 28 அதிகாரம் 28. ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். ரோமர் 15 அதிகாரம் 16. தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன். | மத்தேயு 10 அதிகாரம் 5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், மத்தேயு 15 அதிகாரம் 24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். யோவான் 4 அதிகாரம் 22. நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. |
இயேசு(அவருக்கு சாந்தி உண்டாகுவதாக) அவர்களோ இஸ்ரவேலருக்கு அனுப்பபட்டேன் என்று மத்தேயு 15 அதிகாரம் 24. சொல்கிறது. மேலும் அவர் தனது சீடருகளுக்கு மத்தேயு 10 அதிகாரம்
5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,
6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
இஸ்ரவேல் அல்லாத மக்களுக்கு கிறித்தவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று இயேசு சொல்லி இருக்க அவரது சீடர்களும் அவ்வாறே வழி நடந்திருக்க பவுல் தான் இதையும் மாற்றியதாக வாக்கு மூலம் தருகிறார்.
அப்போஸ்தலர்
13 அதிகாரம்
46. அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
முரண்பாடு 2
பவுல்: இயேசு பிரிவினையே போக்கி சமாதானத்தை உண்டாக்கினார்..
இயேசு: நான் பிரிவினையே உண்டாக்க வந்தேன்.
பவுல் | இயேசு |
ரோமர் 12 அதிகாரம் 18. கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். எபேசியர் 2 அதிகாரம் 14. எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, 15. சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, 16. பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். 17. அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். | மத்தேயு 10 அதிகாரம் 34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். லூக்கா 12 அதிகாரம் 51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். |
முரண்பாடு 3
ஆண்கள் விருத்த சேதனம் செய்யலாமா? அல்லது செய்யக்கூடாதா?
பவுல் | இயேசு |
கலாத்தியர் 5 அதிகாரம் 2. இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 3. மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். 6. கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும். | ஆதியாகமம் 17 அதிகாரம் 11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். 12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். 13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. 14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். |
ஆண்கள் கட்டாயம் விருத்த சேதனம் செய்ய வேண்டும் என்று ஆதியாகமம்
17 அதிகாரம் 11 முதல் 14 வரை சொல்கிறது. இயேசுவும் விருத்த சேதனம் செய்யப்பட்டார். விருத்தசேதனம் என்பது கர்த்தரால், முடிவில்லாத - நித்திய உடன்படிக்கை என்று சொல்லப்பட்ட - கண்டிப்பாக அனைவரும் செய்யவேண்டும் - என்று வலியுறுத்தப்பட்ட ஒரு சட்டம் என்பது மேற்கூறப்பட்ட பைபிள் வசனங்களின் மூலம் நமக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. ஆனால் பவுல் அவசியம் இல்லை என்கிறார்.
முரண்பாடு 4
பவுல்: நீ புத்தியீனன்,
இயேசு: மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
பவுல்: நீ புத்தியீனன்,
இயேசு: மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்.
பவுல் | இயேசு |
கலாத்தியர் 3 அதிகாரம் 1. புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற் போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவை--யிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. I கொரிந்தியர் 15 அதிகாரம் 36. புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. | மத்தேயு 5 அதிகாரம் 22. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்ளுகிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனை சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான். |
முரண்பாடு 5
பவுல்: துன்பங்களை இயேசு நீக்குகின்றார்.
இயேசு: துன்பங்களை நீக்குபவர் இயேசு அல்ல, இயேசுவின் இறைவனே.
பவுல் | இயேசு |
கலாத்தியர் 1 அதிகாரம் 3. பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; கலாத்தியர் 2 அதிகாரம் 20. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். | மத்தேயு 27 அதிகாரம் 46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மாற்கு 15 அதிகாரம் 34. ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மத்தேயு 26 அதிகாரம் 38. அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி; 39. சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். |
முரண்பாடு 6
இயேசு: மறைவானதை இயேசு அறிவதில்லை.
பவுல்: மறைவான ஞானத்தை இயேசு அறிவார்.
இயேசு: மறைவானதை இயேசு அறிவதில்லை.
பவுல் | இயேசு |
கொலோசெயர் 2 அதிகாரம் 3. அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. | மாற்கு 13 அதிகாரம் 32. அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். |
முரண்பாடு 7
பவுல்:இயேசுவே நீயாயத்தீர்ப்பு செய்வார்.
இயேசு: நான் யாருக்கும் நீயாயத்தீர்ப்பு செய்வதில்லை.
பவுல் | இயேசு |
II கொரிந்தியர் 5 அதிகாரம் 10. ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். | யோவான் 8 அதிகாரம் 15. நீங்கள் மாம்சத்துச்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை; லூக்கா 12 அதிகாரம் 14. அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். யோவான் 12 அதிகாரம் 47. ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். |
இயேசு அவர்கள் தாம் யாருக்கும் நீயாயத்தீர்ப்பு செய்வதில்லை என்கிறார்கள். மேலும் நியாயத்தீர்ப்புக்கு என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றும் கேட்கின்றார்கள். இன்னும் இயேசு அவர்கள் கூறுகின்றார்கள் நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன் என்று கூறுகின்றார்கள் ஆனால் பவுல் அதற்கு முற்றிலும் மாற்றமாக இயேசு அவர்கள் நீயாயன்த்தீர்ப்பு செய்வார் என்கிறார்.
முரண்பாடு 8
இயேசு: தீங்கு செய்பவர்களை நேசியுங்கள்.
பவுல்: தீங்கு செய்பவர்களை அடியுங்கள்.
இயேசு: தீங்கு செய்பவர்களை நேசியுங்கள்.
பவுல் | இயேசு |
அப்போஸ்தலர் 23 அதிகாரம் 2. அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான். 3. அப்பொழுது பவுல் அவனைப்பர்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான். 4. சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதான ஆசாரியரை வைகிறாயா என்றார்கள். | மத்தேயு 5 அதிகாரம் 44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். |
முரண்பாடு 9
பவுல் | இயேசு |
கலாத்தியர் 2 அதிகாரம் 16. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. | மத்தேயு 16 அதிகாரம் 27. மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். |
பைபிளில் கூறப்பட்டுள்ள கடவுள் கொள்கையையும் பிற்காலத்தில் பவுல் அதிகமாக ஆள் சேர்ப்பதற்காக கற்பனையாக உருவாக்கியதே முக்கடவுள் கொள்கை.
மனிதர்களின் பாவத்தைச் சுமப்பதற்காக இயேசு தன் உயிரை விட்டார்; இதை ஏற்றுக் கொண்டால் தான் பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றி பெற முடியும் என்பதும் பவுலின் கற்பனையே.
இயேசு மரணித்த பின் உயிர்த்தெழுந்தார் என்ற கொள்கையை உண்டாக்கியதே நான் தான் எனவும் தனது மகன் தீமேத்தயூவுக்கு எழுதிய அறிவுரையில் குறிப்பிடுகிறார் பவுல்.
8. தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசு கிறிஸ்து என் சுவிசேஷத்தின்படியே மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.
2-தீமேத்தயூ 2:8
எனவே கிறித்தவ அன்பர்களுக்கு இயேசுவின் மீது அன்பும் மதிப்பும் இருந்தால் பவுலை விட இயேசு பெரியவர் என்ற நம்பிக்கை இருந்தால் இயேசுவை மனிதர் என்றும் கடவுளின் தூதர் என்றும் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. கள்ளக் கிறித்துகளின் பிடியிலிருந்து மீண்டு இயேசு சொன்ன கொள்கையைக் கலப்படமில்லாமல் கட்டிக்காத்து வரும் இஸ்லாத்தில் இணையுங்கள் என்று அன்பான அழைப்பு விடுக்கிறோம்.
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.(அல்குர்ஆன் 2:18)
2 comments:
என்னவாயிற்று திரு முஜாஹித் அவர்களே, ஏன் பதில்களை அழித்து விட்டீர்கள்
M. George Thomas
Kanyakumari
நன்றி திரு M. George Thomas அவர்களே,
என்னவாயிற்று திரு முஜாஹித் அவர்களே, ஏன் பதில்களை அழித்து விட்டீர்கள்.
எந்த பதிலை அழித்தோம் என்பதை தெளிவாக சொல்லவும். நீங்கள் ஏதும் பின்னூட்டம் அனுப்பினீர்களா?
Post a Comment