Friday, May 7, 2010

இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை


கிறித்தவ நண்பர்கள் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை நாம் இங்கே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

நீங்கள் இயேசுவை உண்மையாகவே மதிப்பவர்களாக இருந்தால் இயேசு தான் உலகில் வாழும் போது எதைச் சொன்னாரோ அதை ஏற்று நடக்க வேண்டும்.

அவர் இந்த உலகில் வாழும் போது தன்னைக் கடவுள் என்றோ கடவுளின் தன்மை பெற்றவர் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ அவர் கூறவில்லை.

மாறாக ஒரே கடவுளைத் தான் வணங்க வேண்டும் என்றே அவர் போதித்தார்.

கிறித்தவர்களுக்கு எதிரியாக இருந்து கிறித்தவர்களுக்குக் கொடுமைகள் பல இழைத்த சவுல் என்ற யூதர் பவுல் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு கிறித்தவ மதத்தில் சேர்ந்து இயேசு போதித்த கொள்கைக்கு மாற்றமான கொள்கையை உருவாக்கினார். அதைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இயேசுவுக்கு எதிரான கொள்கையை கிறித்தவ மார்க்கமாக்கி விட்டார்.

இதை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகள் முதல் கடைசி வரை வாசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளலாம்.
பவுல் தனது முகமூடியைத் தானே கிழித்துக் காட்டுவதை பைபிளில் நீங்கள் காணலாம்.

இதோ பவுல் கூறுவதைக் கேளுங்கள்!
19.நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும் நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு என்னைத் தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

20. யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும் படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும் நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.

21. நியாயப் பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப் பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும் நான் தேவனுக்கு முன்பாக நியாயப் பிரமாணமில்லாதவனாயிராமல் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.

22. பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.

23. சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன்.
1கொரி-9:19-23

மத்தேயுஇ மாற்குஇ யோவான்இ லூக்கா ஆகிய நான்கு பேர் சுவிஷேசங்களை எழுதினார்கள். அது போல் நானும் சுவிஷேசத்தில் பங்காளியாவதற்காகவே இவர் புதுக் கொள்கையை உண்டாக்கியதாக பவுல் கூறுகிறார்.

மேலும் ஒவ்வொரு இனத்தவரையும் ஏமாற்றுவதற்காக ஒவ்வொருவரிடமும் ஒரு வேடம் போட்டுள்ளார் என்பதை அவரே தன் வாயால் சொல்கிறார்.

இன்னும் அவர் சொல்வதைக் கேளுங்கள்!
5. நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப் பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா?

6. அப்படிச் சொல்லக் கூடாது; சொல்லக் கூடுமானால் தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி?

7. அன்றியும் என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால் இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

8. நன்மை வரும்படிக்குத் தீமை செய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவரகள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
ரோமர் 3:5-8

இவர் கூறுவது அனைத்தும் பொய் என்று அன்றைக்கு எதிர்ப்பு வந்த போது தேவனுக்கு மகிமை ஏற்படுத்துவதற்காக அதாவது மதத்துக்கு ஆள் பிடிப்பதற்காக பொய் சொல்லலாம் என்று பச்சையாக ஒப்புக் கொள்கிறார்.

இயெசுவின் கொள்கையைச் சொன்னால் எடுபடாது. இரத்தம் சிந்தியதை வைத்து ஒரு கொள்கையை உருவாக்கினால் அது நன்றாக எடுபடும்; அதிக மக்கள் சேருவார்கள் என்பதற்காகவே இந்தக் கொள்கையை பவுல் உண்டாக்கினார்.

இன்றும் கூட கிறித்தவ மத குருமார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள்; செவிடர்கள் கேட்கிறார்கள் என்று பொது இடங்களில் நாடகம் நடத்தி மக்களை ஏமாற்றுவதற்குக் காரணம் கடவுளுக்காக பொய் சொல்லலாம் என்ற பவுல் கொள்கையே காரணம்.

பவுல் கூறுவது வேதத்துக்கும் இயேசுவுக்கும் எதிரானது என்று பண்டிதர்கள் அன்றைக்கே கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பவுல் சொல்லும் பதில் இது தான்.

15. எப்படியெனில் நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
ரோமர் 7:15

எனக்கே விருப்பமில்லை தான்; ஆள் பிடிக்க வேண்டுமானால் இரத்ததைக் காட்டி பச்சாதாபம் தேடுவது தான் உதவும் என்பதற்காக தனக்கே விருப்பமில்லாத ஒன்றைப் பிரச்சாரம் செய்வதாக ஒப்புக் கொள்கிறார்.

இயேசு மரணித்த பின் உயிர்த்தெழுந்தார் என்ற கொள்கையை உண்டாக்கியதே நான் தான் எனவும் தனது மகன் தீமேத்தயூவுக்கு எழுதிய அறிவுரையில் குறிப்பிடுகிறார் பவுல்.

8. தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசு கிறிஸ்து என் சுவிசேஷத்தின்படியே மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.
2-தீமேத்தயூ 2:8

இயேசுவுக்குப் பின் பல காலம் கழித்து இயேசுவின் கொள்கைக்கு எதிராக வேதத்துக்கு எதிராக இவர் செய்த அநேக மாற்றங்கள் உள்ளன.
உதாரணத்துக்குச் சிலவற்றை இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.

ஆண்கள் கட்டாயம் விருத்த சேதனம் செய்ய வேண்டும் என்று வேதம் சொல்கிறது. இயேசுவும் விருத்த சேதனம் செய்யப்பட்டார். ஆனால் பவுல் அவசியம் இல்லை என்கிறார்.

எனக்கும் உங்களுக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும் நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால் உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்
ஆதியாகமம்-17:10

உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள். அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
ஆதியாகமம்-17:11

உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும் அப்படியே விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும்.
ஆதியாகமம்-17:12

உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும் விருத்தசேதனம் பண்ண வேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக் கடவது.
ஆதியாகமம்-17:13

நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால் அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான் என்றார்.
ஆதியாகமம்-17:14

எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படக் கடவது.
லேவியராகமம்-12:3

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ண வேண்டிய எட்டாம் நாளிலே அது கரப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டாரகள்.
லூக்கா-2:21

விருத்த சேதனம் செய்வது கட்டாயக் கடமை எனவும் கடவுள் மனிதனுக்கு இட்ட கட்டளை எனவும்இ கடவுளிடம் மனிதன் செய்து கொண்ட ஒப்பந்தம் எனவும் தலை முறை தலைமுறையாக இது நடைமுறைப்படுத்த வேண்டியது எனவும்இ இது எக்காலத்திலும் மாற்றப்படக் கூடாது எனவும் வேதம் மிகத் தெளிவாகச் சொல்கிறது.

ஆனால் பவுல் சொல்வதைப் பாருங்கள்!
விருத்த சேதனமும் ஒன்றுமில்லை விருத்த சேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.
1-கொரிந்தியர் 7:19

இதோ நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒருபிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்
.
கலாத்தியர் 7:19

இயேசு சொன்னதையும் கடவுள் சொன்னதையும் கேட்காமல் என் சொல்லைக் கேளுங்கள் என்று கூறும் ஒருவர் வகுத்த கொள்கை எப்படி நம்பகமானதாக இருக்கும்?

இயேசுவும் இன்னும் பல தீர்க்கதரிசிகளும் தத்தமது இனத்துக்காக அனுப்பப்பட்டனர். இயேசு அனுப்பப்பட்டது உலக மக்களுக்காக அல்ல. இஸ்ரவேல் என்ற ஒரு இனத்துக்காகவே அனுப்பப்பட்டார். ஆனால் அதை மீறி அதை எதிர்த்து இஸ்ரவேல் அல்லாதவர்களுக்கும் நான் பிரச்சாரம் செய்வேன் என்று பவுல் தான் மாற்றம் செய்தார். இயெசுவின் போதனை மதிப்பில்லாமல் ஆக்கினார்.

22. அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடரந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக் கொண்டார்கள். 
24. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி மற்றப்படியல்ல வென்றார்.
25. அவள் வந்து: ஆண்டவரே எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். 
26. அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
27. அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 
28. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

மத்தேயு 15:22-28

இஸ்ரவேலர்களுக்குப் பிரச்சாரம் செய்யும் அதிகாரம் மட்டுமே தனக்கு உள்ளது என்றும் மற்றவர்களுக்கு அல்ல என்றும் இயேசு குறியதை மற்ற சுவிஷேசக்காரரும் கூறுகிறார்கள்.

மேலும் தந்து சீடர்களை நோக்கி இஸ்ரவேல் இனத்தில் பன்னிரண்டு கோத்திரத்தாருக்குப் பிரச்சாரம் செய்யுமாறு தான் இயேசு கட்டளை இட்டார்.

நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீரக்கிறவரகளாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீரகள் என்றார
.
லூக்கா- 22:30

அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது என்னைப் பின்பற்றின நீங்களும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீரகள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 19:28

5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில் அவரகளுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார நாடுகளுக்குப் போகாமலும் சமாரியர பட்டணங்களில் பிரவேசியாமலும்

6. காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

மத்தேயு 10:5,6

இஸ்ரவேல் அல்லாத மக்களுக்கு கிறித்தவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று இயேசு சொல்லி இருக்க அவரது சீடர்களும் அவ்வாறே வழி நடந்திருக்க பவுல் தான் இதையும் மாற்றியதாக வாக்கு மூலம் தருகிறார்.

அதனடிப்படையில் தான் பாதிரிகளும் செயல்பட்டு வருகின்றனர்.

அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவ வசனத்தைச் சொல்ல வேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால் இதோ நாங்கள் புற ஜாதியாரிடத்தில் போகிறோம்
.
அப்போஸ்தலர் நடபடிகள் 13:46

பைபிளில் கூறப்பட்டுள்ள கடவுள் கொள்கையையும் பிற்காலத்தில் பவுல் அதிகமாக ஆள் சேர்ப்பதற்காக கற்பனையாக உருவாக்கியதே முக்கடவுள் கொள்கை.

மனிதர்களின் பாவத்தைச் சுமப்பதற்காக இயேசு தன் உயிரை விட்டார்; இதை ஏற்றுக் கொண்டால் தான் பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றி பெற முடியும் என்பதும் பவுலின் கற்பனையே.

இயேசு தானாக பலியாகவில்லை. ஓடி ஒளிந்தவரைப் பிடித்து வந்து பலி கொடுத்தார்கள் என்று தான் பைபிள் கூறுகிறது.

(இது குறித்து விரைவில் வெளிவரவுள்ள இயேசுவின் சிலுவைப் பலி என்ற நூலில் விளக்கப்படும்.)

எனவே கிறித்தவ அன்பர்களுக்கு இயேசுவின் மீது அன்பும் மதிப்பும் இருந்தால் பவுலை விட இயேசு பெரியவர் என்ற நம்பிக்கை இருந்தால் இயேசுவைக் மனிதர் என்றும் கடவுளின் தூதர் என்றும் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. கள்ளக் கிறித்துகளின் பிடியிலிருந்து மீண்டு இயேசு சொன்ன கொள்கையைக் கலப்படமில்லாமல் கட்டிக்காத்து வரும் இஸ்லாத்தில் இணையுங்கள் என்று அன்பான அழைப்பு விடுக்கிறோம்.

நன்றி  onlinepj.com

1 comments:

you can't write without understanding anything.
christians belive in Trinity if you know about trinity in the first thing then you would have undersatnd this.