திரித்துவமும் அல்குர்ஆனும்
திரித்துவம்

திரித்துவம்
கிருத்துவ மதத்தின் ஆணிவேரே இந்த திரித்துவம் ஆகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இந்த மூன்றையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளவேண்டும். பிதாவும் கடவுளாக இருக்கிறார். குமாரனும் கடவுளாக இருக்கிறார், பரிசுத்த ஆவியும் கடவுளாக இருக்கிறார். இந்த மூவரும் மூன்று கடவுள்களாக இல்லை, ஒரே கடவுளாக இருக்கிறார் எப்படியென்றால் மூன்றில் ஒன்றாயிருக்கின்றார். ஒன்றில் மூன்றாயிருக்கின்றார்.
1+1+1=3 இது தான் கணிதத்தின் மரபு.
1+1+1=1 (!) இது தான் கிருத்துவர்களின் திணிக்கப்பட்ட திரித்துவத்தின் மரபு.

இத்தத்துவத்தின் பெயர் தான் திரித்துவம். இந்தத் தத்துவத்தை விசுவாசிக்காதவர்கள் கிருத்துவர்களாகவே முடியாது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் திரித்துவத்தை பற்றி பைபிளில் கூறப்படவில்லை. ஆனால் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அல்குர்ஆனில் கூறப்பட்டதை இத்தொடரின் கீழே பார்க்கலாம்.
இது உங்களுக்கு முரண்பாடாக தோன்றலாம், முரண்பாடாக தோன்றினாலும் இதை ஏற்றுகொள்வது தான் கிருத்துவர்களின் நம்பிக்கை.
முரண்பட்ட முக்கடவுள் கொள்கையிலிருந்து பரிசுத்த ஓரிறைக்கொள்கையை ஏற்ற முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் தன்னுடைய பாதிரியிடம் திரித்துவம் பற்றி வினவியபோது, பாதிரியார் விளக்கம் அளிக்கையில்,
நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள் கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் – Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.
மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.
“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.
கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.
மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.
“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.
கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.
அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்று கூறினார். முன்பு ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர், தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார்.
நான் கேட்டேன், ஏன்?
அதற்கு பாதிரியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.
இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.
ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.
அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன்.
ஏன்? – பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும் “தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.
நீ என்ன சொல்ல வருகிறாய்? – பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.
அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!
நீ என்ன சொல்ல வருகியாய்? – பாதிரியார்
அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.
பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்” என்று கூறினேன்.
இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.
பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.
திரித்துவக் கோட்பாட்டை தகர்த்தெறியும் அல்குர்ஆன்
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக அல்லாஹ் (பிதா,சுதன்,பரிசுத்த ஆவி) மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். (5:73)
இவர்கள் அல்லாஹவின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கிறான். (5:74)
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;.
வானங்கள் மற்றும் பூமி அவைகளுக்கு இடையேயுள்ள அனைத்தும் அல்லாஹ்வால் படைக்கப்பெற்றவையும் அவனது உடைமையும் ஆகும். வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைவரும் அவனுடைய அடிமைகள் ஆவர். அவர்கள் அல்லாஹுவின் ஆளுமைக்கும் அதிகாரத்திற்கும் உட்பட்டவர்கள் ஆவர். ஒவ்வொன்றுக்கும் அவனே பொறுப்பாளன் ஆவான்.
அப்படியிருக்க, அந்த அடிமைகளில் எவரும் அவனுக்குத் துணைவியாகவோ பிள்ளையாகவோ எப்படி இருக்க முடியும்? பின்வரும் வசனங்கள் இதையே குறிப்பிடுகின்றன;
அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (6:101)
இன்னும், "அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள் கூறுகிறார்கள். (19:88)
"நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள். (19:89)
இறைத்தூதர் இயேசு (அலை) அவர்களை கடவுள் என்றும் கடவுளின் குமாரர் என்றும் கிருத்துவர்கள் கூறிவரும் நிலையில், ஈஸா (அலை) அவர்களோ ஏக இறைவனாம் அல்லாஹுக்கு அடிபணிந்து வழிபடுவதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியதில்லை.
(ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய் ) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ, அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான். (4:172)
அல்லாஹுவுடன் ஈஸாவும் ஒரு கடவுள் என்று எவ்வாறு மக்களால் கற்பிக்கப்பட்டதோ அதைப் போன்றே, வானவர்களும் கடவுளர் என்று கற்பிக்கப்பட்டனர். அதனாலேயே ஈஸா (அலை) அவர்களுடன் இணைத்து வானவர்களையும் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
ஆக, இயேசுவும் சரி, வானவர்களும் சரி, அனைவருமே அல்லாஹுவின் அடிமைகளில் அடங்குவர்: அவனுடைய படைப்புகளில் சேரும் என்பதை அறிய முடிகிறது.
இறுதியாக,
இயேசுவின் கர்த்தரான அல்லாஹ் கூறுகின்றதை கேளுங்கள்.
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (112:1)
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். (112:2)
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (112:3)
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:4)
அறிவுடைய மக்களுக்கு இந்த சான்றுகள் போதுமானதாகும்.
ஆகையால் மக்களே! கிருஸ்தவர்கள் யாரை தேவகுமாரன் என்று நினைத்துக் கொண்டும், அவர் மூவரில் ஒருவராக இருக்கின்றார் என்றும் நம்புகிறார்களோ அவருக்கும் அல்லாஹ்வின் சங்கை மிக்க இறைத்தூதர்களின் ஒருவரான ஏசு என்ற ஈஸா (அலை) அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் ஏசு என்ற ஈஸா (அலை) அவர்கள் இறைவனோ அல்லது தேவகுமாரரோ அல்ல மாறாக இறைவனின் கண்ணியத்திற்குரிய இறைத்தூதர்களில் ஒருவராவார்.
இதுவே சத்தியமான உண்மை.
இதை விசுவாசங்கொண்டு அல்லாஹ்வை மட்டும் வணங்கத் தகுதியான ஒரே கடவுளாகவும், நபி முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் இறுதித்தூதராகவும், பரிசுத்த குர்ஆனை இறைவனின் இறுதி வேதமாகவும் நம்பி, தூய இஸ்லாத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாதவரை எந்த கிருஸ்தவருக்கும் பரலோக ராஜ்யத்தில் வெற்றியுமில்லை, ஈடேற்றமுமில்லை. கிருஸ்தவ நண்பர்கள் இனியாவது சிந்திப்பார்களா?
இதுவே சத்தியமான உண்மை.
இதை விசுவாசங்கொண்டு அல்லாஹ்வை மட்டும் வணங்கத் தகுதியான ஒரே கடவுளாகவும், நபி முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் இறுதித்தூதராகவும், பரிசுத்த குர்ஆனை இறைவனின் இறுதி வேதமாகவும் நம்பி, தூய இஸ்லாத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளாதவரை எந்த கிருஸ்தவருக்கும் பரலோக ராஜ்யத்தில் வெற்றியுமில்லை, ஈடேற்றமுமில்லை. கிருஸ்தவ நண்பர்கள் இனியாவது சிந்திப்பார்களா?
திரித்துவம் பற்றி மேலும் சில கட்டுரைகள்.
திரித்துவம் ஒரு மாயை
ஒரு புனிதரின் கதை
புனிதர் திரித்துவத்தின் பொருள் தேடிப் பயணித்தார். காடு மலை மேடு பள்ளங்கள் கடந்த நெடும் பயணம். இறுதியாக ஒரு கடலோரமாகப் பயணித்துக் கொண்டிருக்கையில் அங்கே ஒரு சிறுவன் மணற் கூடாரத்தை அமைத்து அதன் மேல் ஒரு துவாரமிட்டு கடல் நீரைக் கைகளில் மொண்டு அதில் உற்றிக் கொண்டிருக்கிறான். இதைப் பார்த்த புனிதர், சிறுவனே என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய்? என்று சிறுவனிடம் கேட்கிறார், ஐயா நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் இந்த மணற் கூண்டில் நிறைக்கப் போகிறேன் என்றான் சிறுவன். ஆச்சர்யத்துடன் புருவத்தை உயர்த்திய புனிதர் சிறுவனே! இது என்ன முட்டாள் தனம்? இந்த மகா சமுத்திரத்தின் நீர் முழுவதையும் இந்த மணல் கூண்டில் நிறைப்பதா? உனக்கு அறிவில்லையா? என்று கேட்கிறார். சிறுவன் நிதானமாகக் கூறினான். ஐயா பெரியவரே! தாங்கள் பொருள் தேடிச் செல்லும் காரியம் இதைவிடக் கடுமையானது! புனிதர் இப்போது தன் நிலை பற்றி சிந்தித்த வண்ணம் வந்த வழியே திரும்புகிறார்.
திரித்துவம் என்ற புரியாத தத்துவத்தைக் கண்ணை மூடிக் கொண்டு நம்பும்படி ஒவ்வொரு கிறித்தவனும் பணிக்கப் பட்டுள்ளான்! அது பற்றிக் கேள்வி எழுப்புதல் கிறித்தவ விசுவாசத்துக்கு உகந்ததல்ல. மூன்றாம் நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற கிறித்தவப் பண்டிதரும் தத்துவ ஞானியுமாகிய புனித அகஸ்டின் திரித்துவம் குறித்து எழுதியதாவது,
''எனக்கு முன்னால் எழுதிய என்னால் படிக்க முடிந்த நூல்களின் ஆசிரியர்களும் பழய மற்றும் புதிய ஏற்பாடுகளின் கத்தோலிக்க விரிவுரையாளர்கள் அனைவருமே பிதா சுதன் பரிசுத்த ஆவி ஆகியோர் கடவுளுக்குள் ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்னும் பிரிக்க முடியாத ஒற்றுமையிலேயே அவர்களின் உள்ளமை இருக்கிறது என்பதைத் தெளிவு படுத்தியுள்ளனர். எனினும் அவர்கள் மூன்று பேர் அல்ல, ஒன்று தான். இருப்பினும் பிதா என்பவர் புத்திரனைப் பிறக்கச் செய்ததால் பிதா புத்திரனாக ஆகமாட்டார். புத்திரனோ பிதாவினால் ஜென்மம் நல்கப்பட்டதால் பிதாவாகவும் மாட்டார். பரிசுத்த ஆவியானது பிதாவும் அன்று புத்திரனும் அன்று! ''
இன்னும் கூறியுள்ளதாவது,
இது கத்தோலிக்க நம்பிக்கையாக இருப்பதுடன் இதுவே என்னுடையவும் நம்பிக்கை ஆகும். இவ்வாறு எழுதியுள்ளார்.
(Saint Augustine: Basic writings edited by Whitne – J – Oates (New York, 1948) Volume 2, Page 672) Quoted by Mohammed Taqi Usmani : “What is Christianity” Page 3.
பிதா புத்திரன் பரிசுத்த ஆவி என்ற முக்கடவுள்களைக் கொண்ட திரித்துவ மாயை மனித அறிவுக்குப் புரியாத புதிராக இருப்பதால் தானோ என்னவோ அதனைக் குறித்து கத்தோலிக்க நம்பிக்கை என்பதுடன் என்னுடையவும் நம்பிக்கை என்று குறிப்பிட்டுள்ளார் போலும்! மூன்று பேர்! மூன்று செயல்பாடுகள்! மூன்று உள்ளமைகள்! ஒருவர் மற்றவருடன் உரையாடுகின்றார்! ஒருவர் மற்றவருக்கு உதவுகிறார்! ஒருவர் மற்றவரோடு உதவி கோருகிறார்! எனினும் மூன்றும் ஒன்று என்று நம்ப வேண்டுமாம்! காரணம் அது கத்தோலிக்க நம்பிக்கையாம்! என்னே முரண்பாடு! மனித சிந்தனைக்குச் சவாலாக இருக்கக் கூடிய இத்தகைய சித்தாந்தத்தை தன்னனகத்தே கொண்டதால் தானோ முன்னர் அறிவியலுக்கும் அறிவு ஜீவிகளுக்கும் எதிராகக் கிறித்தவ சபைகள் களமிறங்கியதோ? திரித்துவக் கொள்கைக்கு நியாயம் கற்பித்து கிறித்தவ சபை அளிக்கும் ஒவ்வொரு விளக்கமும் அதிக குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. புனித அதனாசியஸ் என்பவர் அளிக்கும் விளக்கத்தைப் பாருங்களேன்.
''உண்மையான இறைவன் ஒருவன் மட்டுமே. அவன் அழியாதவனும், மாம்சமில்லாதவனும், உறுப்புகளோ உணர்ச்சி வயப்படுதலோ அற்றவனாகவும் நிலையான சக்தியும் ஞானமும் மிக்கவனாகவும் பார்வைக்குப் புலப்படுவதும் அல்லாததுமான எல்லாப் பொருட்களின் படைப்பாளனாகவும் அவற்றைக் காப்பவனுமாகவும் இருக்கிறான். இறை உள்ளமையின் இத்தகைய ஏகத்துவத்துவம் என்பது மூன்று பேர்களை உள்ளடக்கியதாகும். பிதா, புத்திரன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் கொண்ட அழியாத ஏக சக்தியே அது.''
Art 1 of the 39 Articles. Quoted by W.St. Clair Tisdall: “Christian Reply to Muslim Objections” Page 150.
அழியாதவன்! என்றென்றும் நிலைத்திருப்பவன்! உறுப்புகளோ உணர்ச்சி வயப்படுதலோ அற்றவன்! இப்படியெல்லாம் இவர்களால் வர்ணிக்கப்பட்ட இறைவன் மூன்று பேர்களாக மாறும்போது இந்த அடிப்படைகளையெல்லாம் இழக்க நேரிடுவதை ஏனோ அறியாமலிருக்கின்றனர். மூன்று பேரில் இரண்டாவதாக இவர்கள் கூறும் புத்திரனுக்கு உடலும் உறுப்புகளும் உணர்ச்சிகளும் இருந்தது என்று பைபிள்தான் கூறுகிறது. இப்படி அநேகம் முரண்பாடுகள். இத்தகைய முரண்பாடுகளை முகமூடியிட்டு மறைக்கவே கிறித்தவ சபைகள் மேலே கூறப்பட்ட கதையை உதாரணமாகக் கூறி வருகின்றன.
நன்றி http://christianpaarvai.blogspot.com/2008/07/blog-post_10.html
நன்றி http://christianpaarvai.blogspot.com/2008/07/blog-post_10.html
திரித்துவம் ஒரு மாயை - தொடர் - 2
திரித்துவமும் பெருக்கல் வாய்ப்பாடும்.
கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் வாய்ப்பாடுகளை பள்ளிப் பருவத்தில் பயின்றிருக்கிறோம். திரித்துவத்துக்கும் இந்த வாய்ப்பாடுகளுக்கும் என்ன சம்மந்தம்?
திரித்துவம் பற்றி எழும் கேள்விகளை சமாளிக்க கிறித்தவ சபைகள் கூறிவரும் பல்வேறு காரணங்களுள் ஒன்றே இந்த பெருக்கல் கணக்கு. பைபிளின் அடிப்படையில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் மூன்று தனித்தன்மைகளைக் கொண்ட மூவர்! அப்படியானால் 1 + 1 + 1 = 3 அல்லவா? எப்படி ஒன்றாகும்? என்ற கேள்விக்கு கிறித்தவ சபை அளித்த விடை. 1 x 1 x 1 = 1 என்பதாகும்.
ஆச்சர்யம்! ஒன்றாம் வகுப்பு மாணவனையே வெட்கமடையச் செய்யும் கணக்கு இது! இதே பெருக்கல் கணக்கைக் கூறி இந்து மதக் கடவுள் கொள்கையைக் கூட நியாயப் படுத்த இயலும். 1 x 1 x 1 x 1 x 1 x 1 x 1 x 1 x 1…………………………x 1 = 1 எத்தனை ஒன்றுகள் சேர்ந்தாலும் ஒன்று தான். முப்பத்து முக்கோடி ஒன்றுகள் சேர்ந்தாலும் ஒன்றுதான். இந்தக் கணக்கைக் கூறியதன் மூலம் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்ற இந்துக்களின் கடவுள் கொள்கையையும் கிறித்தவ சபை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்.
நன்றி http://christianpaarvai.blogspot.com/2008/07/blog-post_20.html
திரித்துவம் எனும் மாயை - தொடர் 3
தண்ணீரிலும் திரித்துவம்
தண்ணீருக்கு திடம், திரவம், வாயு (H2O) என்று மூன்று நிலைகள் உள்ளன. இது போன்று இறைவனுக்கும் மூன்று பரிமாணங்கள் உண்டு என்று கிறித்தவ சபை திரித்துவத்துக்கு வியாக்கியானம் கூறுகிறது. இவ்வாறு மூன்று நிலைகளைக் கொண்ட பொருள்களுக்கு திரித்துவ வியாக்கியானம் கூறி திரித்துவம் என்னும் மாயையை நியாயம் கற்பிக்க முற்படுவது சபையின் வழக்கம். திரித்துவம் என்னும் புரியாத புதிரில் புதையுண்டிருக்கும் சாதாரண கிறித்தவனுக்கு இந்த வியாக்கியானங்கள் சற்று ஆறுதலை அளிக்கலாம். ஆனால் இதில் உள்ள விபரீதம் திரித்துவத்தைப் பற்றிய குழப்பங்களை இன்னும் அதிகரிக்கிறது என்பதை சபை அறியாமலிருக்கிறது.
தண்ணீருக்கு திடம், திரவம், வாயு (H2O) என்று மூன்று நிலைகள் உள்ளன. இது போன்று இறைவனுக்கும் மூன்று பரிமாணங்கள் உண்டு என்று கிறித்தவ சபை திரித்துவத்துக்கு வியாக்கியானம் கூறுகிறது. இவ்வாறு மூன்று நிலைகளைக் கொண்ட பொருள்களுக்கு திரித்துவ வியாக்கியானம் கூறி திரித்துவம் என்னும் மாயையை நியாயம் கற்பிக்க முற்படுவது சபையின் வழக்கம். திரித்துவம் என்னும் புரியாத புதிரில் புதையுண்டிருக்கும் சாதாரண கிறித்தவனுக்கு இந்த வியாக்கியானங்கள் சற்று ஆறுதலை அளிக்கலாம். ஆனால் இதில் உள்ள விபரீதம் திரித்துவத்தைப் பற்றிய குழப்பங்களை இன்னும் அதிகரிக்கிறது என்பதை சபை அறியாமலிருக்கிறது.
தண்ணீரில் திட திரவ வாயு என மூன்று நிலைகள் உள்ளது போல் இறைவன் மூன்றில் ஒருவனாக இருக்கிறான் என்று வாதிடுபவர்களிடம் சில கேள்விகள். தண்ணீரை ஐஸ் கட்டியாக மாற்ற இயலும். தண்ணீர் நீராவியாக மாறும். இவ்வாறு மாறும் போது தண்ணீரின் ஒரு நிலை மாறி மற்றொரு நிலையாகி விடுகிறது. இது போல பிதாவை புத்திரனாகவும் புத்திரனை பிதாவாகவும் பரிசுத்த ஆவியை பிதாவும் புத்திரனும் ஆக மாற்றியமைக்க முடியுமா? தண்ணீரை அவ்வாறு மாற்றுவதற்கு சில வழிமுறைகள் கையாளப் படுவதைப்போல் இதற்கு எந்த வழிமுறை கையாளப்படுகிறது? தண்ணீர் ஐஸ்கட்டியாக மாறும் போதும் வாயுவாக மாறும் போதும் தண்ணீராக இருப்பதில்லை. தன் துன்பத்தை நீக்க பிதாவிடம் வேண்டிக் கொண்ட போது பிதாவும் புத்திரனும் வேறுபடுகின்றனர். பிதா புத்திரனாகவும் புத்திரன் பிதாவாகவும் பரிசுத்த ஆவி பிதாவும் புத்திரனுமாகவும் மாறுபடுதில்லை. அவ்வாறு மாற்றுவதற்கு ஏதேனும் வழி இருந்தால் கண்டு பிடியுங்களேன்.
தொடர்கிறது....
தொடர்கிறது....
நன்றி http://christianpaarvai.blogspot.com/2008/07/3_28.html
0 comments:
Post a Comment