நரக நெருப்பையும் - அதன் வேதனையையும் SAMPLE IN THE WORLD
அஸ்ஸலாமு அலைக்கும்.இஸ்லாம் நரக நெருப்பையும் - அதன் வேதனையையும் பற்றி கடினமாக எச்சரிக்கை செய்கின்றது. நரகத்தின் அகோரமும், அதன் தீப்பிழம்புகளும் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரணங்கள் சிறிய அளவில் பூமியி்ன் சிற்சில பகுதிகளில் அவ்வப்போது தெரியத்தான் செய்கின்றன. நல்லுணர்வு பெறும் உள்ளங்களுக்கு இந்த அடையாளங்கள் மகத்தானதாகும்.
உலக நெருப்பிற்கும், நரக நெருப்பிற்கும் உள்ள வேறுபாடு.
நூல்: புகாரி பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3265
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள்.
فَاتَّقُواْ النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ
மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2:24)
لَهُم مِّن جَهَنَّمَ مِهَادٌ وَمِن فَوْقِهِمْ غَوَاشٍ وَكَذَلِكَ نَجْزِي الظَّالِمِينَ
(ஓரிரைக் கொள்கையில் நம்பிக்கையற்று வாழும்) அவர்களுக்கு நரகத்தில் விரிப்புகளும், அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.(அல்குர்ஆன் 7:41எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு "எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லப்படும். (அல்குர்ஆன் 32:20)
وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَن يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ

إِنَّهُ مَن يَأْتِ رَبَّهُ مُجْرِمًا فَإِنَّ لَهُ جَهَنَّمَ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيى
நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது. அதில் அவன் மரிக்கவும் மாட்டான். வாழவும் மாட்டான். (அல்குர்ஆன் 20:74)

إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍ بَعِيدٍ سَمِعُوا لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا
(அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.(அல்குர்ஆன் 25:12)
ஏக இறைவா! எங்கள் பாவங்களுக்காக நாங்கள் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறோம். இந்த பயங்கர வேதனையிலிருந்து எங்களை தூரமாக்கிவை.
0 comments:
Post a Comment