Sunday, April 18, 2010

இறைதூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் வரலாறு


வலிமை மிக்க ஆது சமுதாயத்தின் அழிவிற்குப் பிறகு பல சமுதாயங்கள் இந்த புவியில் வந்து சென்றிருக்கலாம் என்றாலும் ஆது சமுதாயத்திற்கு அடுத்து அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுக் கூறும் சமுதாயம் ஸமூது சமுதாயமாகும். இவர்களும் ஆது சமுதாயத்தைப் போன்று சிலைகளை வணங்கக்கூடியவர் களாகவே இருந்தார்கள். இவர்களின் சமுதாயாதைச் சார்ந்த இவர்களது சகோதரரான நபி ஸாலிஹ்  (அலை) அவர்களயே இவர்களுக்கு இறைத்தூதராக அல்லாஹ் அனுப்பினான்.

ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை"  (7:73)
'ஆது' கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். (7:74) 

ஸமூது சமுதாயம் வாழ்ந்த இடம்.
இவர்கள் வாழ்ந்த இடத்தைப் பற்றி திருமறை குர்ஆன் குறிப்பிடுகையில் அவர்கள் ஹிஜ்ர் ஊர் வாசிகள் என்று குறிப்பிடுகிறது.
cave house of 
Samud people
]%J ($l;lj;jpdH) tho;e;j Fif tPLfs;
(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.  (15:80)

அல்லாஹ் குறிப்பிடும் இந்த ஹிஜ்ர் என்ற ஊர் தற்போதும் உள்ளதா? என்று ஆராயும் போது பின்வரும் வசனம் அதற்கான விளக்கத்தை தருகின்றது.

ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது.  (27:52)

அல்லாஹ் இந்த வசனத்தில் "அவர்கள் வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன" என்று குறிப்பிடுகிறான். அப்படியென்றால் இன்றளவும் அவர்கள் வாழ்ந்த இடம். வசித்த வீடுகள் ஆகியன மனிதனின் படிப்பினைக்காக அவன் அறியும் விதத்தில் அவன் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் நபியவர்களின் பொன் மொழியை ஆராயும்போது ஸமூது கூட்டாத்தார் வசித்த ஹிஜ்ர் என்ற பகுதி மக்காவிற்கும் தபூக்கிற்கும் இடையே அமைந்திருக்ககூடிய பகுதியில் ஒரு பகுதியாகும் என்பதை அறியமுடிகிறது.

மக்கள் (தபூக் போரின்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான 'ஹிஜ்ர்' என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டிவிடும்படியும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டு விடும்படியும் கட்டளையிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் - அலை- அவர்களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) எந்தக் கிணற்றிற்கு வந்து கொண்டிருந்தோ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் உத்திரவிட்டார்கள்.  புகாரி 3379

நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற பொழுது, 'அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்து விடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையதீர்கள்" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். புகாரி  3380  

மேற்கண்ட நபிமொழிகளின் மூலம் அவர்கள் வாழ்ந்த ஹிஜ்ர் என்ற பகுதி மக்காவிலிருந்து தபூக்கிற்குச் செல்லும் வழியில் இன்றளவும் உள்ளது என்பதையும் உலகம் அழியும் காலம் வரை வாழும் மக்களுக்குப் படிப்பினையாக அந்த இடம் இருக்கும் என்பதை  அறியமுடிகிறது.

தற்போதைய வரலாற்றுக் குறிப்பின்படி 'அல் ஹிஜ்ர்' என்பது வட சவூதியில் 'தைமா' வுக்கு தென் மேற்கே உள்ள ஓரிடத்தின் பெயராகும். இப்போது அதை 'மதாயின் ஸாலிஹ்' என அழைகின்றனர். நபி (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது அந்த இடத்தில தான் தங்கினார்கள் என்று ஆதாரப்பூர்வமாகக் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்து பின்வரும் குறிப்பை தப்ஸீர் மாஜிதீயிலுருந்து அறிஞர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஸமூது என்பது வடமேற்கு அரேபியாவில் வாழ்ந்த ஒரு பழம் பெரும் சமூகத்தாரின் பெயராகும். ஹிஜ்ர் எனும் ஊர் அவர்களின் தலைநகராக விளங்கியது. அது இன்று மதாயினு ஸாலிஹ் என அழைக்கப்படுகிறது. ஆது சமூகத்தாருக்குப்பின் வாழ்ந்த இந்த கூட்டத்தார். கட்டடக் கலையில் சிறந்து விளங்கினர். கல் மாளிகைகள், மலைக்குகைக்குள் அமைத்து அவர்கள் வசித்து வந்தனர்.  ஸமூது கூட்டத்தாரை நல்வழிபடுத்த அவர்களில் ஒருவரான ஸாலிஹ் (அலை) அவர்களை நபியாக அனுப்பினான். விவிலியம் பழைய ஏற்பாட்டில் ஸாலிஹ் (அலை) அவர்களயே சாலா என்று குரிப்பிடப்ப ட்டிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். சினாய் தீபகற்பத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஸாலிஹ் (அலை) அவர்களின் அடக்கத்தலம் உள்ளது.

செல்வச் செழிப்பு மிக்க சமூதாயம்.
ஸாலிஹ் நபியின் சமுதாயமான ஸமூது சமுதாயத்தினர் மிக மிக சுகபோகமாக வாழ்ந்தார்கள் என்று திருமறை குறிபிடுகிறது.

"தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்- (26:146)

"வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,  (26:147)

"மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்காளா?)  (26:148)

இன்னும் நினைவு கூறுங்கள்; 'ஆது' கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்" (என்றும கூறினார்).  (7:74)

சுக போகங்களில் மூழ்கித் திளைத்திருந்த இந்த  சமூதாயதிற்குத் தூதராக தேர்தெடுக்கப்பட்ட ஸாலிஹ் நபியும் அந்தச் சமூதாயத்தில் அந்தஸ்து மிகுந்தவர்களாகவே வாழ்ந்த்ஹு வந்தார்கள். இதனை அவர்களது சமூதாய மக்களே நாவுகளால் ஒப்புகொள்கின்றனர்.

"ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக் குரியவராக இருந்தீர்; (11:62)

ஸாலிஹ் (அலை) அவர்களின் பிரச்சாரம்.
ஸாலிஹ் (அலை) ஏகத்துவப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைப்பதற்கு முன்னால் அந்த மக்களிடத்தில் மிகுந்த செல்வாக்கு உடையவராகவே வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர்கள் தங்கள் பிரச்சாரப் பணியை மேற்கொள்ள வேண்டிய நபித்துவத்தை அல்லாஹ் வழங்கினான். அந்தச் சமயத்தில் சுகபோக வாழ்கையில் மூழ்கி இருந்த அவரது சமூதாய மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அந்தச் சமுதாயத்தில் வாழ்ந்த ஒரு சில பலவீனமான  ஏழைகள் மாத்திரமே அவரை முதலில் ஏற்றுக்கொண்டனர்.

அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி; "நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்" என்று (பதில்) கூறினார்கள்.  (7:75)

அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்; "நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள்.  (7:76)

சுகபோக வாழ்கையில் மதி மயங்கி  சைத்தானின் உற்ற நண்பர்களாக மாறி வாழும் தமது சமுதாய மக்களை நினைத்து, ஸாலிஹ் நபியவர்கள் மிகுந்த வேதனை கொள்ளலானார்கள். அல்லாஹுவை மறந்து சிலைகளை வணங்குவதிலேயே மூழ்கித்திளைத்த அந்த மக்களை நேர் வழிப்படுத்த பலவாறு முயன்றார்கள். பல உபதேசங்களை அவர்கள் முன் எடுத்துரைத்தார்கள். ஸாலிஹ் நபியை இறைத்தூதராக ஏற்க மறுத்து அந்த மக்கள் உம்மைப் போன்ற ஒரு மனிதரைத் தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்றும் ஸாலிஹ் நபியை  பெரும் பொய்யர் என்றும் கூறினர்.

இன்னும், ஸமுது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்; "என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்."  (11:61)

அதற்கு அவர்கள், "ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக் குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்" என்று கூறினார்கள்.  (11:62)

ஸாலிஹ் நபியை அவரது சமுதாயம் பொய்யரெனத் தூற்றியது 
ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.  (54:23)

"நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.  (54:24)

"நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்).  (54:25)

இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் முகமாக அல்லாஹ் பின்வருமாறு பதிலளித்தான்.

"ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.  (54:26)

அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!  (54:27)

அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" எனக் கூறியபோது  (26:141)

"நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.  (26:142)

"ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.  (26:143)

"மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.  (26:144)

"இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா?  (26:145) 

அத்தாட்சியாக அனுப்பப்பட்ட ஒட்டகம்
ஸாலிஹ் (அலை) அவர்களைப் பொய்யரெனக் கருதியதோடு அவரைச் சூனியக்காரர் என்றும் வர்ணித்தார்கள். மேலும் ஸாலிஹ் நபி இறைதூதர் தாம் என்பதை நிரூபிக்க ஓர் அடையாளத்தைக் கொண்டு வருமாறு வேண்டினர். அவர்களது வேண்டுதலுக்கு இணங்க அல்லாஹ் அற்புதமான ஓர் ஒட்டகத்தைச் சான்றாக அனுப்பினான்.

"நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்" (என்றனர்).  (26:153)

அவர் சொன்னார்; "இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்."  (26:154)
It is believed 
to be the place where Allah's Camel drunk the water
my;yh`; mDg;gpa xl;lfk; jz;zPh; Fbj;j ,lk; vd;W ek;gg;gLfpwJ.
"இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்."  (26:155)

அவர்கள் அதன் கால் நரம்பதை; துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.  (26:156) 

ஆக, அல்லாஹுவால் ஸமூது சமுதயாத்திற்கு அத்தாட்சியாக வழங்கப்பட்ட ஒட்டகம் ஏனைய ஒட்டகங்களைவிட முற்றிலும் வேறுப்பட்டுதான் இருக்கும் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் ஸமூது சமுதயாத்திற்கென் றுள்ள கிணற்றில் ஒரு நாள் அந்த சமுதாய மக்கள் நீர் பருக வேண்டும். மற்றொரு நாள் ஒரு சமுதாயம் அருந்தும் நீரை ஒரே ஓர் ஒட்டகம் அருந்தவேண்டுமென்று அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கின்றான் என்றால் அந்த ஒட்டகம் மிக மிக பிரம்மாண்டமானது என்பதையும் விளங்கி கொள்ள முடிகிறது. அதே சமயம் அந்த பிரம்மாண்டம் உடல் அமைப்பிலா? உருவத்திலா? என்று எந்த வித முடிவுக்கும் நம்மால் வர முடியாது.

ஸாலிஹ் நபியின் சமுதாயம் ஸாலிஹ் நபியை நபியென விசுவாசம் கொள்ள ஓர் அத்தாட்சியைக் கேட்டன. அதற்காக அல்லாஹ் ஒட்டகத்தை அத்தாட்சியாக அனுப்பினான். இதுவே திருமறை குறிப்பிடும் உண்மை.

ஸாலிஹ் (அலை) அவர்களை கொள்ள சதி திட்டம்
அத்தாட்சியை ஏற்க மறுத்த அந்த மக்கள் ஸாலிஹ் நபியைப் பீடையெனக் கருதி கொலை செய்யும் முயற்சியில் ஈடுப்பட்டனர். அந்த மக்கள் 9 பிரிவுகளாக இருந்தார்கள்.

தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை "நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்" (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள்.  (27:45)

(அப்போது அவர்) "என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கப்மாட்டீர்களா?" எனக் கூறினார்.  (27:46)

அதற்கவர்கள்; "உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்" என்று சொன்னார்கள்; அவர் கூறினார்; "உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது எனினும், நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்."  (27:47)

இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிந்தார்கள்.  (27:48)

அவர்கள்; "நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!" பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) "உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்" என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்).  (27:49)

(இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம்.  (27:50)

ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம்.  (27:51)

அத்தாட்சிகளை  கொன்றொழித்தனர்
அடுத்த கட்டமாக தங்களுக்கு அற்புதமாக வழங்கப்பட்ட ஒட்டகத்தை அறுத்து வதை செய்ய முன் வந்தனர். இந்த ஒட்டகமானது மக்கள் மத்தியில் பாதுகாப்பாக நடமாட வேண்டும் என்றும், அதற்கு அநீதி இழைக்ககூடாது என்றும் அல்லாஹுவால் கட்டளை பிறப்பிக்கப்பட்டு அத்தாட்சியாக அனுப்பபட்டதாகும். ஆனால், அந்த மக்களோ அல்லாஹுவின் கட்டளையை மீறி அறுக்கத் துணிந்தனர்

"அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்" (என்று கூறினார்).  (11:64)

ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்); "நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.  (11:65)

ஒட்டகத்தை அறுப்பதற்குப் பலர் கூடி முடிவெடுத்தாலும் அநியாயக்காரன் ஒருவன்தான் அதனை வெட்ட முன் வந்து வெட்டினான்.
'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.  (91:11)

அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,  (91:12)

அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.  (91:13)

ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.  (91:14)

அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.  (91:15)

பின்வரும் பொன்மொழியைச் சிந்திப்போம்
(ஸாலிஹ் - அலை- அவர்களின் தூதுத்துவத்திற்குச் சான்றாக வந்த) ஒட்டகத்தை (அதன் கால் நரம்புகளை) வெட்டிக் கொன்றவனை நினைவு கூர்ந்தபடி நபி(ஸல்) அவர்கள், 'ஸாலிஹ் உடைய சமுதாயத்தில் அபூ ஸமஆவைப் போல் மதிப்பும் வலிமையும் வாய்ந்த ஒரு மனிதன் அதைக் கொல்ல ஒப்புக் கொண்டு முன்வந்தான்" என்று கூறினார்கள்.  புகாரி  3377

அநியாயக்கார மக்களில் பலமும் செல்வாக்கும் மிக்க ஒருவன் அந்த அபூர்வ ஒட்டகத்தை கொன்றுவிட்டான். இதனை  நினைவுகூர்ந்த இறைதூதர் (ஸல்) அவர்கள் ஸாலிஹ் நபி காலத்தில் ஒட்டகத்தைக் கொன்ற செல்வாக்குமிக்கவனுக்கு தமது காலத்தில் வாழ்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை உதாரணமாகக் குறிப்பிட்டார்கள். அவர்தான் அபூசம் ஆ  அவரது முழுப்பெயர் அஸ்வத் பின் முத்தலிப் என்பதாகும். இவண் இறைமறுப்பாளனாக இருந்தவன். இந்த நபி மொழியை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரழி) அவர்களின் பாட்டனாராவார். இவர் மிகுந்த செல்வாக்குடனும் வலிமையுடனும் திகழ்ந்தார். (உம்தத்தல் காரீ, இர்ஷாதுஸ்ஸாரீ).

தங்களுக்குத் தாங்களே வேதனையை வேண்டினர்:
அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய அற்புதத்தை அநியாயமாகக் கொன்றொழித்ததோடு "நீர் எச்சரித்த வேதனையைக் கொண்டு வாரும் பார்க்கலாம்" எனத் தமது நாவுகளால் வேதனையை வேண்டினர். அதன் விளைவு அவர்களை இடியாலும் பூகம்பத்தாலும் அல்லாஹ் அழித்தான்.

பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.  (7:77)

எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.  (7:78)

ஸாலிஹ் நபியையும் அவரை பின்பற்றிய நல்லடியார்களையும் அல்லாஹ் காப்பாற்றிவிட்டு அநீதி இழைத்த சமுதாயத்தை மாத்திரம் பெரும் சப்தத்தால் அழித்தான்.


நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.  (11:66)
http://foto-work.co.uk/blog/wp-content/uploads/2009/06/graf-art-tags1.jpg
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,  (11:67)

(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! 'ஸமூது' (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.  (11:68) 

ஸாலிஹ் (அலை) அவர்களுக்கு அவர்களுடைய சமுதாயத்தார் மாறு புரிந்து. அல்லாஹ் விஷயத்தில் அவர்கள் பிடிவாதம்  கொண்டு உண்மையை ஏற்க மறுத்து, நல்வழியைப் புறக்கணித்துக் குருட்டு வழியில் சென்றதால் அவர்களை அல்லாஹ் அழித்தான். அவர்களை அழிந்த பின்னர் அவர்களை கண்டித்து நகைக்கும் முகமாக ஸாலிஹ் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.  (7:77)

எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.  (7:78)

அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் "என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, "உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை" என்று கூறினார்.  (7:79)

இந்த கண்டனம் ஸமூது கூட்டத்தாரின் காதுகளில் விழாமலில்லை பின்வரும் நபிமொழி இதற்குச் சான்றாகும்.

பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி(ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி(ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (ம்ணற்றோரம் நின்றிருந்த) நபி(ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, 'இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?' என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (ம்ணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை" என்று கூறினார்கள்.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா(ரஹ்) கூறினார்கள்: 

அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி(ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.   புகாரி 3976

இவ்வாறே ஸாலிஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரிடம். "நான் என் இறைவனின் தூதுச் செய்தியை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்கு நலம் நாடிவிட்டேன்"  என்று கூறினார்கள் என்கிறது இந்த வசனம்.
அதாவது நான் எனது பணியைச் செய்துவிட்டேன். ஆனால், நீங்கள்தான் அதன் மூலம் பயன் பெறத் தவறிவிட்டீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையை நேசிப்பதில்லை. உங்களுக்கு நலம் நாடுபவரை நீங்கள் பின்பற்றுவதில்லை என்று கூறினார்கள்.

0 comments: