Thursday, March 18, 2010

மத்ஹபுகளும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களும்.

இஸ்லாமிய வரலாற்றில் நபியவர்களின் மரணத்தைத் தொடர்ந்து பல பிரிவுகள் தோன்றின. இப்பிரிவுகளில் முக்கியமாக அரசியல் ரீதியாகத் தோன்றிய பிரிவினறையும்இமத்ஹபுகள் ரீதியாக தோன்றிய பிரிவினரும் குறிப்பிடலாம். இந்தப்பிரிவினர் ஒவ்வொருவரும் குர்ஆன் ஹதீஸை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயன்று தவறான விளக்கங்கள் கொடுக்கலானார்கள். சரியான ஹதீஸ்களில் தங்களுக்கு சாதகமான விஷயங்கள் இல்லாத போது தங்கள் கொள்கையை வலுப்படுத்த பல ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூற ஆரம்பித்தனர்.

நபி(ஸல்) அவர்கள் எச்சரித்த நான் சொல்லாததை நான் சொன்னதாகச் சொல்பவர் தன்னுடைய இடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்' என்ற ஹதீஸைப் புறக்கனித்து விட்டு தங்கள் மனோ இச்சைக்குத் தக்கவாறு மத்ஹபுகளில் பிடிவாதம் கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் மத்ஹபு கூறும் சட்டங்களுக்கு சாதகமாக பல ஹதீஸ்களை புனைந்து கூறினார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் பின்பற்றும் இமாமை புகழ்ந்து கூறி ஹதீஸ்களை உருவாக்கி கூறிவிட்டு அதை நபி அவர்கள் சொன்னதாகச் சொல்லி விட்டனர்.

'என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார் அவருடைய பெயர் முஹம்மது பின் இத்ரீஸ் (ஷாஃபீ). அவர் என்னுடைய உம்மத்தைக் கெடுப்பதில் இப்லீஸைவிட மிக மோசமானவர்' என்று நபி அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். (நூல்: தன்ஷிஹுஷ்ஷரீயத்)

இவ்வாறு ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷாபி மத்ஹபினருக்கு எதிராக இட்டுக்கட்டினர்

'என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார் அவருடைய பெயர் நுஃமான் பின் தாபித் அவர் அபூஹனீபா என்றப் புனைப்பெயரால் அழைக்கப்படுவார். அவர் தனது கையால் அல்லாஹவுடைய மார்க்கத்தையும் என் சுன்னத்தையும் உயிர்ப்பிப்பார்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக தமது ஹனபி மத்ஹபுக்கு சார்பாக ஒரு பொய்யைத் துணிந்து கூறியுள்ளனர்.

சிலர் தாங்கள் பின்பற்றுகின்ற மத்ஹபு கூறுகின்ற சட்டங்கள் நபி அவர்களுடைய வழிமுறைக்கு மாற்றமாக இருந்தாலும் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக பல பலயீனமான ஹதீஸ்களைக் கூறியுள்ளனர். அவற்றுல் சிலதை இங்கே குறிப்பிடுகினறேன்.

பிலால் (ரலி) அவர்கள் (தொழுகைக்காக) இகாமத் சொல்லும் போது قد قامت الصلاة என்று கூறிய வேளையில் நபியவர்கள் أقامها الله وأدامها அகாமஹல்லாஹு வஅதாமஹா என்று கூறினார்கள்.இது ஒரு ஆதாரமற்ற செய்தி என்ற விடயத்தை ஸாபி மத்ஹபின் பிரபல்யமான இமாமான நவவியவர்கள் குறிக்கிடுகின்றார்கள்.(அல்மஜ்மூஃ பாகம்3 பக்கம்126)

ஒரு பள்ளிவாயளுக்கு அருகாமையில் இருப்பவர் அப்பள்ளிவாயளில்தான் தொழவேண்டும். இது ஒரு ஆதாரமற்ற செய்தி என்ற விஷயத்தை ஷாபி மத்ஹபின் பிரபல்யமான இமாமான நவவியவர்கள் குறிக்கிடுகின்றார்கள்.(அல் மஜ்மூஃபாகம்4 பக்கம்191)

முடியையும் ரத்தத்தையும் நகங்களையும் புதையுங்கள் ஏனனில் நிச்சயமாக அவைகள் இறந்தவையாகும் என நபியவர்கள் கூறினார்கள். இமாம் ஸைலயீ அவர்கள் தமது நஸ்புர் ராயஹ் என்ற நூலில் இமாம் பைஹகி அவர்கள் இது சம்பந்தமாக வரும் அனைத்து அறிவிப்புக்களும் ஆதாரமற்றவையாகும்.
எனக் குறிப்பிடுவதாகக் கூறுகிறார்கள். (நஸ்புர் ராயஹ் பாகம்1 பக்கம்417)

தொழுகையில் நபிவழி தக்பீர் கட்டும்போது வலது கையை இடது கையின் மீதுவைத்து தொப்புளுக்கு கீழே வைப்பதாகும். இமாம் நவவியவர்கள் தமது நூலான ஸரஹு முஸ்லிமில் இந்த செய்தி பலயீனம் என்பது ஏகோபிக்கப்பட்டது எனவும் இமாம் பைஹகி அவர்கள் தமது மஃரிபா எனும் நூலில் இந்த செய்தி ஆதாரமற்றது எனவும் குறிப்பிடுவதாக இமாம் ஸைலயீ அவர்கள் தமது நஸ்புர் ராயஹ் என்ற நூலில் கூறுகிறார்கள்.
(நஸ்புர் ராயஹ் பாகம்2 பக்கம்199)(ஸரஹு முஸ்லிம் பாகம்2 பக்கம்138)

பள்ளிவாயளில் பேசுவது ஒரு மிருகம் புள்ளை சாப்பிடுவது போன்று நன்மைகளை அழித்துவிடும். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு ஆதாரமற்ற செய்தியன்று ஹாபிழ் இராக்கியவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
(தக்ரீஜு அஹாதீதில் இஹ்யா பாகம்1 பக்கம்410)

நபியவர்கள் தக்பீர் சொன்னால் தமது இருகைகளையும் கீழே விடுவார்கள்.ஓத நாடினால் வளது கையை இடது கையின்மீது வைப்பார்கள். இது ஒரு ஆதாரமற்ற செய்தி என்று ஹாபிழ் இராக்கியவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தக்ரீஜு அஹாதீதில் இஹ்யா பாகம்1 பக்கம்417)

உங்களில் ஒருவர் மரணித்தால் அவரின் மீது மண்ணை போட்டு கப்ரை சீராக்கிவிட்டு உங்களில் ஒருவர் கப்ரின் தலை மாட்டில் நின்று இன்னாளுடைய மகன் இன்னானே என்று தல்கீன் சொல்லிக் கொடுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறப்பட்டுள்ளது. இதுவும் ஒரு ஆதாரமற்ற செய்தி என்று ஹாபிழ் இராக்கியவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (தக்ரீஜு அஹாதீதில் இஹ்யா பாகம்9 பக்கம்408) (அல் மஜ்மூஃபாகம்5 பக்கம்304)

மேற்குறித்த செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றதாக இருந்தும் ஸாபி மத்ஹபினர் இவைகளை ஆதாரமாகக் கொள்கின்றனர் பிரபல்யமான இமாமான நவவியவர்கள் உட்பட ஆதாரமற்றவைகள் என்று கூறியும் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக இவைகளை ஆதாரமாகக் கொள்கின்றனர். வல்ல இறைவன் வறட்டுப் பிடிவாதத்தை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக.

இன்னும் சிலர் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக சில ஹதீஸ்களைப் புனைந்தும் கூறியுள்ளனர்.

'யார் தனது தொழுகையில் கையை உயர்த்துகிறானோ அவனுக்குத் தொழுகை இல்லை' என்று நபி அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர். காரணம் தொழுகையில் கையை உயர்த்தக் கூடாது என்பதுதான் ஹனபி மத்ஹப் சட்டம். நூல்: அஸ்ஸுன்னத் வமாகானதுஹா

தொழுகையில் இமாம் பிஸ்மியை சப்தமிட்டு ஓதவேண்டுமென்ற மத்ஹபுடையர்கள் அவர்களின் மத்ஹபுக்குச் சாதகமாக பின்வருமாறு ஒரு பொய்யான ஹதீஸை உற்பத்தி செய்து கூறினர்.

'காஃபத்துல்லாஹவில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு இமாமாக நின்று தொழுதார்கள் அப்போது பிஸ்மியை சப்தமிட்டு ஓதினார்கள்' என்று நபி அவர்கள் கூறியதாக பொய்யாகக் கூறியுள்ளனர். நூல்: (தன்ஷி{ஹஷ்ஷரீயத்)

இவ்வாறு மத்ஹபு வெறிபிடித்தவர்கள் இது போன்ற பல ஹதீஸ்களை இடைச்செருகல் செய்துள்ளனர். அவை அவ்வப்போது மக்களுக்கு இனம் காட்டப்பட்டு வந்துள்ளது.

நன்றி தாருல் அதர்

0 comments: