Saturday, January 16, 2010

தவ்ஹீத் என்றால் என்ன?

ஏகத்துவம்

தவ்ஹீத் என்றால் ஏகத்துவம், ஒருமைப்படுத்துதல் என்பதாகும். அதாவது வணக்கத்திற்கு தகுதி உள்ளவன் அல்லாஹுவைத்தவிர

வேறு யாரும் இல்லை என்று நம்புவதுடன் அவனன்றி வணங்கப்படக்கூடிய அனைத்தையும் விட்டு விட வேண்டும்.

ஏகத்துவம் மூன்று வகைப்படும்

1-படைக்கும் விஷயத்தில் அல்லாஹுவை ஒருமைப்படுத்துவது.

2-வணக்க விஷயத்தில் அல்லாஹுவை ஒருமைப்படுத்துவது.

3-பெயர் இன்னும் அவனுக்குரிய தன்மை விஷயத்தில் அல்லாஹுவை ஒருமைப்படுத்துவது.

படைக்கும் விஷயத்தில் அல்லாஹுவை ஒருமைப்படுத்துவதென்பது

இவ்வுலகத்தையும் இவ்வுலகத்திலுள்ளவைகளையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே இவைகளைப்படைக்கும் விஷயத்தில் அல்லாஹ்வோடு வேறு அல்லாஹ்வின் எந்தப்படைப்பும் சம்மத்தப்படவில்லை என்று நம்புவது.

நபியவர்களின் காலத்தில் வாழ்ந்த இணைவைப்பாழர்கள் உட்பட இவ்வுலகத்தை படைத்து பரிபாலிப்பது அல்லாஹ் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த வகையை மாத்திரம் நம்பி மற்ற இரு வகயையோ அல்லது அதில் ஒன்றையோ மறுத்தால் அவர் அல்லாஹுவுக்க இணை வைத்தவராகவே கருதப்படுவார். அல்லாஹுதான் இவ்வுலகத்தை படைத்தான் என்று மக்கா முஷ்ரிகீன்கள் எற்றுக்கொண்டதை அறிவிக்கும் இறை வசனங்கள்.

ழூவானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லது செவிப்புலனையும்,பார்வைகளையும் சொந்தமாக்கிக்கொண்டிருப்பவன் யார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துபவனும் உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளிப்படுத்துபவனும் யார்? (அகிலத்தாரின்) சகல காரியங்களைத்திட்டமிட்டு நிகழ்த்துபவனும் யார்? என (நபியே!) நீர் (அவர்களைக்)கேட்பீராக! அ(தற்க)வர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா? என்று நீர் கூறுவீராக. 10-31

ழூ(நபியே!) அவர்களிடம் வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் கேட்டால், (யாவையும்) மிகைத்தவன், நன்கறிகிறவன் (ஆகிய அல்லாஹ்)தான் அவைகளை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவாhகள். 43-9

ழூ(அன்றி)ஏழு வானங்களின் இரட்சகனும் , மகத்தான அர்ஷின் இரட்சகனும் யார்? என்று (நபியே!) நீர் கேட்பீராக! அ(தற்க)வர்கள் (அவையாவும்) அல்லாஹ்வுக்கே உரியன என்று கூறுவார்கள். (அவ்வாறாயின்) நீங்கள் (அவனுடைய தண்டனையை) பயப்படமாட்டீர்களா? என்று நீர் கூறுவீராக. 23-86,87

வணக்க விஷயத்தில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது

அதாவது வணக்கத்திற்கு தகுதி உள்ளவன் அல்லாஹுவைத்தவிர வேறு யாரும் இல்லை என்று நம்புவதுடன் அவனன்றி வணங்கப்படக்கூடிய அனைத்தையும் விட்டு விட வேண்டும், நபிமார்கள் அனுப்பப்பட்ட நோக்கமே இந்த வகையை மக்களுக்கு அறிவிப்பதற்குத்தான்.

ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம், (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்). 16-36

வணக்கம் என்பது தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் போன்றவைகள் மட்டும் அல்ல எவைகளையெல்லாம் அல்லாஹுவுக்கு மாத்திரம் செய்யவேண்டுமென்று குர்ஆனிலும் ஹதீதிலும் சொல்லப்பட்டிருக்கின்றதோ அவைகளெல்லாம் வணக்கம்தான். அவைகள் எல்லாவற்றையும் அல்லாஹுவுக்காக மாத்திரமே செய்ய வேண்டும். அவைகளில் எதையாவது ஒன்றை அல்லாஹ்வின் படைப்புக்கு செலுத்தினால் அதற்கு ஷிர்க் (இணைவைத்தல்) என்று சொல்லப்படும்.

வணக்கம் இரண்டு வகைப்படும்

1-உள்ளத்தால் செய்யும் வணக்கம்

2-உறுப்புக்களால் செய்யும் வணக்கம்

உள்ளத்தால் செய்யும் வணக்கத்திற்கு சில உதாரணங்கள்.

அல்லாஹ்வை மாத்திரம் அல்லலாஹ்வை மாத்திரம் அஞ்சுவது, அல்லாஹ்வை மாத்திரம் எந்த ஒரு விஷயத்திலும் ஆதரவு வைப்பது, அல்லாஹ்விடத்தில் மாத்திரம் தவக்குல வைப்பது இன்னும் இது போன்றவைகள். இவைகள் அல்லாஹ்வக்குத்தான் செய்ய வேண்டும் என்பதற்கு குர்;ஆனின் ஆதாரங்கள்.

-அல்லாஹ்வை மாத்திரம் அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது இறக்கிவைத்த இவ்வேத்ததையும் (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதங்களையும் விசவாசியுங்கள். 4-136

-அல்லாஹ்வை மாத்திரம் நேசிப்பதற்கு ஆதாரம் :-(நபியே! மனிதர்களிடம்) சநீர் கூறுவீராக நீங்கள் அல்லாஹ்வை Nநிசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள், (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். 3-31

-அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சுவதற்கு ஆதாரம் :- இது ஒரு ஷைத்தான்தான், அவன் தன் நண்பர்களைப்பற்றி (அவர்கள் பலசாலிகள், கடுமையானவர்கள் என) உங்களைப்பயப்படுத்துகிறான். ஆகவே நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருநடதால் அவர்களுக்கு பயப்பட வேண்டாம், எனக்கே பயப்படுங்கள். 4-175

-அல்லாஹ்விடத்தில் மாத்திரம் தவக்குல் வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் :- நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின்மீதே நம்pபிக்கை வையுங்கள். 5-23

இன்னும் 32-48, 65-3, 14-12 போன்ற வசனங்களை பார்வையிடுக

-அல்லாஹ்வின் மீது மாத்திரமே ஆதரவு வைக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் :-எவர் தன் இரட்சகனை சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்கருமங்களைச் செய்யவும். 18-110

இன்னும்33-21, 21-90, 94-7,8 போன்ற வசனங்களை பார்வையிடுக.

உறுப்புக்களால் செய்யும் வணக்கத்திற்கு உதாரணம்.

1-துஆ செய்வது

சிறிய காரியமாக இருந்தாலும் சரி, பெரிய காரியமாக இருந்தாலும் சரி அல்லாஹ்விடத்திலேயே மாத்திரம் பிரார்த்தனை செய்ய வேண்டும், அவன் மாத்திரமே நம் தேவைகளை நிறைவு செய்து தர முடியம், அவனுடைய படைப்புகளால் நமது தேவைகளை செய்து தரமுடியாது. அப்படி செய்வோமேயானால் நம் அல்லாஹ்வுக்கு இணை வைத்த குற்றவாழிகளாகி விடுவோம். இன்று நமது முஸ்லிம்களில் அதிகமானோர் அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்காமல் அல்லாஹ்வின் படைப்புகளாகிய நல்லடியார்களிடத்தில் தங்களின் தேவைகளை கேட்கின்றார்கள் இது முற்றிலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இணைவைப்பதற்கு கிடைக்கும் தண்டனையைப்பற்றி அதற்குரிய இடத்திலே கூறுகின்றேன்.

அல்லாஹ்விடத்தில் மாத்திரம்தான் துஆ கேட்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் :-

அன்றியும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காக இருக்கின்றன எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். 72-18

இன்னும் 2-186, 3-135, 27-62 போன்ற வசனங்களையும் பார்வையிடுக.

2-நேர்ச்சை செய்வது.

நேர்ச்சையையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே நிறைவேற்ற வேண்டும், இன்று முஸ்லிம்களில் அதிகமானோர்

அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் போதும் அந்த பிச்சினையிலிருந்து தீர்வு கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ஏதோ ஒரு அவ்லியாவின் பெயரில் நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றியும் விடுகின்றார்கள். இது மாபெரும் ஷிர்க்காகும். அல்லாஹ்வுக்கு மாத்திரமே நேர்ச்சை செய்ய வேண்டும் என்பதற்கு ஆதாரம்.

இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும் அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்;சசை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான். 2-265

விளக்கம் :- நேர்ச்சை அல்லாஹ்வுக்குரிய வணக்கம் என்பதினால்தான் அதை அவன் நன்கறிந்து அதற்குரிய கூலியை கொடுப்பதாக கூறுகின்றான்.

இவர்கள் (தங்கள்) நேர்ச்சயை நிறைவேற்றுவார்கள். 76-7

விளக்கம் :-அல்லதஹுத்தஆலா முஃமின்களின் பண்புகளை கூறும் போது அவர்கள் செய்த நேர்ச்சயை அல்லாஹ்வின் பெயரில் நிறைவேற்றுவார்கள் என்று கூறுகின்றான். ஆகவே நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்குரிய வணக்கம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

யார் அல்லாஹ்வுக்கு அடிபணிவதாக நேர்ச்சை செய்கின்றார்களோ அதை நிறைவேற்றட்டும், யார் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்கின்றாhகளோ அதை நிறைவேற்றக்கூடாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :- ஆயிஷா (ரலி) அவர்கள்- ஆதாரம் :-

3-உதவி தேடுவது

நாம் உதவி தேடும் போதும் அல்லாஹ்விடத்தில் மாத்திரமே உதவி தேட வேண்டும், அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். 1-4

நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவியும் தேடு என்பதாக நரி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- திர்மிதி

4-சத்தியம் செய்வது

சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின்மீதே சத்தியம் செய்ய வெண்டும். அல்லாஹ்வின் எந்த படைப்பின் மீதும் சத்தியம் செய்யக்கூடாது.

யார் அல்லாஹ் அல்லாத ஒன்றின் மீது சத்தியம் செய்கின்றாரோ அவர் அல்hலஹ்வின் மீது உறுதியாக .இணைவைத்து விட்டார் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-

5-குர்பானி கொடுப்பது

நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய அறுப்பு(குர்பானியு)ம், என் வாழ்வும், என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகம் என்று (நபியே) நீர் கூறுவீராக. 6-162

ஆகவே நீர் உமதிரட்சகனைத் தொழுது, இன்னும் (குர்பானியம் கொடுத்து அதை) அறுப்பீராக. 108-2

அல்லாஹ் அல்லாத ஒன்றுக்காக யார் குர்பானி கொடுக்கின்றாரோ அவருக்கு அல்லாஹவின் சாபம் உண்டாகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- முஸ்லிம்

6-ருகூஉ, சுஜுது

ருகூஉ என்பது தலை சாய்ப்பது, சுஜுது என்பது தலையை தரையில் வைப்பது இவ்விரண்டையும் அல்லாஹ் அன்றி வேறு யாருக்கும் செய்யக்கூடாது. இன்று முஸ்லிம்களில் பலர் அரசியல் தலைவர்களுக்கும், பிள்ளைகள் தாய் தந்தைக்கும், மனைவி கணவனுக்கும் ருகூஉ சுஜுது செய்கின்றார்கள் இதுவும் ஷிர்க்காகும்.

விசுவாசங்கெண்டோரே! நீங்கள் (குனிந்து) ருகூஉச் செய்யுங்கள், இன்னும் (சிரம்பணிந்து) ஸுஜுதும் செய்யுங்கள், இன்னும் உங்கள் இரட்சகனை வணங்குங்கள், மேலும் நீங்கள் வெற்றியடைவதற்காக நன்டையைச் செய்யுங்கள். 22-77

7-தவாபு செய்தல்

(ஹச்சின் அடிப்படைக்கடமையான தவாபை நிறைவேற்ற) பூர்வீக ஆலயமான (கஃபா எனும்) வீட்டையும் அவர்கள் (தவாஃபு செய்ய) சுற்றி வரவும். 22-29

மேலே கூறப்பட்ட வணக்கங்களைப்போல் இன்னும் குர்ஆனிலும் ஹதீதிலும் கூறப்பட்டிருக்கக்கூடிய எல்லா வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும், அவைகளில் எதையாவது அல்லாஹ்வின் படைப்புகளுக்கு செய்தால் அல்லாஹ்வுக்கு இணைவைத்த குற்றமாகவே கருதப்படும் அல்லாஹ் நம் அனைவரையும் அவனுக்கு இணைவைக்கும் குற்றத்திலிருந்தும் மற்ற எல்லா குற்றங்களிலிருந்தும் பாதுகாப்பானாக.

மூன்றாவது வகை அல்லாஹ்வின் பெயர் மற்றும் அவனின் தன்மைகளில் அவனை ஒருமைப்படுத்துவது

அதாவது அல்லாஹ்வுக்குரிய திருநாமங்கள் இன்னும் அவனுக்குரிய தன்மைகள் குர்ஆனிலும் ஹதீதிலும் எப்படி கூறப்பட்டிருக்கின்றதோ அதை அப்படியே நம்ப வேண்டும், அதை கூட்டவோ குறைக்கவோ கூடாது, அல்லாஹ்வின் தன்மைகள் மற்றும் அவனின் பெயருக்கு அத்தன்மையை அல்லாஹ்வின் எந்தப்டைப்புக்கும் கொடுக்கக்கூடாது அல்லாஹ்வைத்தவிர மறைவானவற்றறை யாரும் அறியமுடியாது என்றும், உள்ளத்தில் உள்ளவைகளை அறியக்கூடியவன் என்றும், கண் சாடைகளைக்கூட அறியக்கூடியவன் என்றும் இப்படி மறைவானவற்றை அறிவது அது எனக்குரிய பண்பாக அல்லாஹ் கூறுகின்றான் ஆகவே அல்லாஹ்வுக்குரிய பண்புகள் இன்னும் அவனுக்குரிய பெயர்களை அவனுக்கே சொந்தமாக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் மாத்திரம் இல்லை அதைவிட அதிகமாக இருக்கின்றது குர்ஆன் ஹதீதில் அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய பெயர்களைத்தவிர வேறு பெயர்களும் உண்டு அவைகளை அவனுடைய படைப்புகளில் யாருக்கு அறிவித்து கொடுத்தானோ அவர்களைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. மேலே வரும் ஹதீத் அதை தெழிவு படுத்துகின்றது.

ஒரு நீளமான ஹதீதில் வந்துள்ளது :- உனக்கு நீ பெயர் வைத்துக்கொண்ட எல்லா பெயர்களின் உதவியாலும், அல்லது உன் படைப்புகளில் யாருக்காவது நீ கற்றுக்கொடுத்த பெயர்களின் உதவியாலும், அல்லது நீ உன் வேதத்தில் இறைக்கிவைத்த பெயர்கள் அல்லது மறைவான உன் அறிவில் நீ தேர்ந்தெடுத்த பெயரின் உதவியாலும் நான் உன்னிடம் கேட்கின்றேன். ஆதாரம் :- அஹ்மத்

இந்த ஹதீதிலிரந்து விளங்கிகக்கொள்வது :- அல்லாஹ்வுக்கு குறிப்பட்ட பெயர்கள்தான் இருக்குமென்று சொல்ல முடியாது, நாம் தெரிந்திரிக்கும் பெயர்கள் அல்லாது இன்னும் பல பெயர்கள் அல்லாஹ்வுக்கு உண்டு அவைகளை அப்படியே நம்ப வேண்டும், அவைகளை எந்த கூட்டுதல் குறைத்தல் இன்றி அப்படியே நம்ப வேண்டும் இதுதான் ஒரு முஸ்லிமின் பண்பாகும்..

இன்னும் அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன, ஆகவே அவற்றைக்கொண்டே நீங்கள் அழையுங்கள், அவனுடைய பெயர்களில் (தவறான பொருள் கொண்டு) திரித்துக்கூறுவோரை விட்டுவிடுங்கள், அவர்கள் செய்துகொண்டிருந்தவைக்குரிய கூலியைக் கொடுக்கப்படுவார்கள். 7-180

இதே போல் அல்லாஹ்வுக்கு மாத்திரம் கூறப்பட்ட பல பண்பகள் இருக்கின்றன அவைகளையும் எந்த கூட்டதல் குறைத்தல் இன்றி நம்ப வேண்டும்.

அல்லாஹ்வின் பெயருக்கு சில உதாரணங்கள் :- சக்தியுள்ளவன், அறிவுள்ளவன், இரக்கமுள்ளவன், உணவளிப்பவன், பாவங்களை மன்னிப்பவன் இப்படி இன்ளுனும் பல யெர்கள்.

அல்லாஹவின் பண்புகளுக்கு உதாரணம் :- சக்தி, அறிவு, இரக்கம், மன்னித்தல் இன்னும் இது போன்றவைகள்.

ஷிர்க்

ஷிர்க் என்றால் இணைவைத்தல், அதாவது அல்லாஹ்வுக்கு நிகராக அல்லாஹ்வின் படைப்புகளின் ஒன்றை நிகராக்குவது. அதாவது மேலே கூறப்பட்ட வணக்கங்கள் அல்லது அது போன்ற அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்த வேண்டுமென்று குர்ஆன், ஹதீதில் சொல்லப்பட்ட வணக்கங்களின் ஒன்றை அவனின் படைப்புகளுக்கு செலுத்துவது இதற்கு ஷிர்க் என்று சொல்லப்படும். தஃஹீதின் வகைகளில் எந்த வகையில் அல்லாஹ்வுக்கு நிகரை ஏற்படுத்தினாலும் அது ஷிர்க்குதான், ஆனால் வணக்க விஷயத்தில்தான் அதிகமாக இணைவைத்தல் ஏற்படுகின்றது. உதாரணமாக பிரார்த்தனை செய்வது, முஸ்லீம்களில் அதிகமானோர் அல்லாஹ்வின் படைப்புகளிடத்தில் பிரார்த்தனை செய்வதை சருவ சாதாரணமாக நாம் பார்க்கிறோம் பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மட்டுமே செய்ய வேண்டும், அப்படி இல்லாமல் அல்லாஹ்வின் எந்தப்படைப்பினத்திலாவது பிரார்த்தனை செய்தால் அது அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைத்த குற்றமாகவே கருதப்படும். இது அல்லாஹ்விடத்தில் மாபெரும் குற்றமாகும் ஒருவர் ஷிர்க் வைத்த நிலையில் மரணித்தால் அல்லாஹ் அவரின் குற்றத்தை மன்னிப்பதே இல்லை அவருக்கு நிலந்தர நரகம்தான் அல்லாஹ் நம் அனைவரையும் அப்படிப்பட்ட குற்றத்திலிரந்து பாதுகாப்பானாக.

ஷிர்க் செய்தவருக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனை

1-மேலும் அல்லாஹ்வையே வண்குங்கள் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். 4-36

2-நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே) மாட்டான், இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான், இன்னும் யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாக கற்பனை செய்து விட்டார். 4-48

3-நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான், மேலும் இதல்லாத (குற்றத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான், இன்னும் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ வெர் திட்டமாக வெகு தூரமான வழி கேடாக வழிகெட்டு விட்டார். 4-116

4-நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியை தடுத்து விடுகின்றான், மேலும் அவர் தங்குமிடம் நரகம்தான், இன்னும் (இத்தகைய) அநியாயக்கரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்வோர் இல்லை. 5-72

5-இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்பற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப்போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகுதூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக்கொண்டு சென்றதைப்போன்றோ இருக்கின்றான். 22-31

யார் அல்லாஹ்வுக்கு இணை வைத்த நிலையில் மறணிக்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி விடுகின்றான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-அஹ்மத்

ஆகவே ஷிர்க் என்னும் கொடிய குற்றத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வோமாக, நபியவர்களின் சாச்சா அபூதாலிப் நபியவர்களுக்கு 38 வருடம் உதவி செய்தார்கள் ஆனால் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணித்தார்கள் இதனால் அவர்களும் நரகவாதியே, நாம் எவ்வளவு பெரிய வணக்கம் செய்தாலும் ஷிர்க் செய்வதினால் நம் வணக்கம் எல்லாம் அழிக்கப்பட்டு விடும்,

அன்றியும் உமக்கும் உமக்கு முன் இருந்தவர்களுக்கும் வஹீ மூலம் நிச்சயமாக அறிவிக்கப்பட்டது என்னவென்றால் நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால் உமது நன்மைகள் (யாவும்) அழிந்து நஷ்டமடைபவர்களாகி விடுவீர்கள், (என்பதுவேயாகும்)

நபியவர்களுக்கே இந்த நிலை என்றால் நமது நிலை என்ன? ஆகவே ஷிர்க்கிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்வோம், செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடத்திலே பாவமன்னிப்புத்தேடுங்கள்.

நன்றி:tamilislam.com

0 comments: