Wednesday, February 29, 2012

புற்றை அழிக்கும் புனித நோன்பு!

ஓரிறையின் நற்பெயரால்.... நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183)

உயிர் வாழும் அணைத்து ஜீவராசிகளும் செல்களால் ஆனவை.  மனித உடல் பலவகையான திசுக்களால் ஆனது என்றாலும் அவற்றிற்கு அடிப்படையாக இருப்பது செல்கள்தான். இந்த செல்களில் நிகழும் பல்லாயிரக்கணக்கான வேதிவினைகள்தான் மனித உடலின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பு மற்றும் ஆரோக்கியம் பேணுவதற்கும், அவற்றுக்குத் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் காரணமாக அமைகின்றன.

செல்களின் வளர்ச்சி, உருவாக்கம் மற்றும் செயல்களுக்கான தகவல்கள் அனைத்தும் டி.என்.ஏ-வில் தான் பதியப்பட்டுள்ளது. 

அதாவது நமது உடல் உறுப்புகளை சீரான முறையில் வளர்ச்சியடைவதற்காக  (Bcl2) மரபணுக்கள் செல் பிரிதலை ஊக்குவித்து( ஒரு செல் இரண்டாக பின் அது நான்கு ,எட்டு, பதினாறு) என பிரிந்து பல்கிப்பெருகி உறுப்புகளை வளர்கின்றன. அதே நேரத்தில் உறுப்புகள் அதிக அளவில் வளராமல் இருக்க செல் பிரிதலை கட்டுப்படுத்திக் கொண்டு உறுப்புகளை வளர்ப்பதை தடுத்து விடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் நமது உடலில் தேய்மானம் அடைந்த செல்களை அப்புறப்படுத்தி தினமும் புதிய செல்களை அமர்த்தியும் வருகின்றன.  அதாவது, செல்கள் தாமே அழியும் தன்மை கொண்டுள்ளதால் இதனை செல் இறப்பு அல்லது திட்டமிடப்பட்ட செல் இறப்பு (Apoptosis or Programmed cell death)  என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு நாளும் செல்கள் இதை செய்கின்றன. இந்நிகழ்வுகளை டி.என்.ஏ தான் உருவாக்குகின்றன.

டி.என்.ஏ வில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் ஒரு செல் புற்று செல்களாக மாறி, Oncogene எனும் புற்று மரபணுக்கள் செல் பிரிதலை ஊக்கிவிக்கும்  (Bcl2) மரபணுக்களை கட்டுப்பாடுகள் இல்லாத செல் பிரிதலை ஏற்படுத்துவதோடும்,  புற்றுகளை(கட்டி)-குறைக்கும் புரதமான (p53) மரபணுவில் ஏற்படும் மாற்றங்கள். செல் இறப்பு அல்லது திட்டமிடப்பட்ட செல் இறத்தல் (Apoptosis or Programmed cell death) என்னும் நிகழ்வை Oncogene புற்று மரபணுக்கள் தடுத்து புற்றுநோய் செல்கள் தாமே அழியாமல், புற்றுசெல்களை பல்கி பெருகுவதற்கு துணை புரிகின்றன.


புற்று நோயிக்கு முறையான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப் படாவிட்டாலும், புற்று செல்களை அழிக்கும் வழிமுறையை தெற்கு கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதென்ன  வழிமுறை என்று பார்கின்றீர்களா! 

இறைவனின் கட்டளையை ஏற்று வருடாவருடம் ரமலான் மாதத்தில்  நாம் நோன்பு நோற்கின்றோமே அந்நோன்பின் தாக்கத்தால் புற்றுநோய் செல்கள் அழிவதாக கண்டுபிடித்துள்ளனர். என்ன ஆச்சரியமாக உள்ளதா! அது தான் உண்மை.


இவ்வதிசியத்தக்க உண்மையை புற்றுநோய் நிபுணர் வால்டர் லோங்கோ மற்றும் அவரின் குழுவினர்கள் விலங்குகளில் சோதனை செய்து கண்டறிந்துள்ளனர். நோன்பு புற்றுநோயை தடுப்பது மட்டுமின்றி, நாம் எடுத்து வரும் சிகிச்சையின் பலனை விரைந்து கிடைக்கச் செய்யும்  என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

நோன்பு இருத்தலின் போது, சாதாரன செல்கள் ஓய்வுநிலை அல்லது உறக்க நிலைக்கு சென்று விடுகின்றன. ஆனால் புற்றுநோய் செல்கள் இதற்கு எதிர்மறையாக புதிய புரதத்தை உண்டு பண்ணி செல் பிரிதல் மற்றும் வளர்ச்சியை தொடர செய்து பின் நோன்பின் தாக்கத்தினால்  புற்றுநோய் மரபணு   பாதிக்கப்பட்டு அவைகள்(புற்று செல்கள்) பெருக்கமடைவது மற்றும் பிரிந்து செல்வது தடுக்கப்பட்டு, இறுதியில் புற்று நோய் செல்கள் தன்னை தானே அழித்துக் கொள்கின்றன.  இதை தடுப்பதற்காக புற்று செல்கள் முயல்வதாகவும், ஆனால் அவைகளால் அதை தடுக்க முடியவில்லை என்று கண்டுப்பிடித்துள்ளனர். (அல்லாஹு அக்பர், அல்லாஹ் ஞானமிக்கவன், யாவற்றையும் நன்கறிந்தவன்)

கீமோதெரபி சிகிச்சையின்றி சுழற்சி முறை நோன்பு இருத்தல் மார்பக புற்றுநோய், மெலனோமா, கிளியோமா மற்றும் மனித ந்யூரோபலாஸ்டோமோ போன்ற புற்று நோய் செல்களின் வளர்ச்சியை பெதுவாக்குவதாகவும்,  பல சந்தர்ப்பங்களில் நோன்பு கீமோதெரபி போல் திறன் கொண்டு செயல்படுவதாகவும் ண்டறிந்துள்ளனர்கீமோதெரபி சிகிச்சையுடன் நோன்பு இருத்தல் சில வகை புற்று நோய்களை குனமாக்குவதாகவும், புற்றுநோய் கட்டிகள் மற்ற இடங்களில் பரவுவதையும் விரைந்து தடுத்துவிடுவதாகவும் ண்டறிந்துள்ளனர். 

Fasting Weakens Cancer in Miceமேலும் நோன்பு சாதாரண திசுக்கள் மற்றும்  டியுமர் கட்டிகளை (tumors) கட்டுபடுத்துவதில் மாறுபட்ட விவரத்தை மரபணுவில் வெளிப்படுத்துவதாகவும் கண்டறிந்துள்ள வால்டர் லோங்கோ. நோன்பு புற்று நோய்க்கு நல்லதொரு சிகிச்சையாக அமையும். இந்த கண்டுபிடிப்புகள் புதிய வழியை உருவாக்கும் என தெரிவித்துள்ளார். 

இறைவனின் கட்டளையை ஏற்று ரமலானில் நாம் நோன்பிருக்கும் போது இந்த புற்று நோய் வருவது தடுக்கப்படிகிறது எனும் போது ரமலான் நோன்பும், இந்த நோன்பை வலியுறுத்தும் திருக்குர்ஆனும் படைத்த இறைவனால் வழங்கப்பட்ட ஒன்று என்ற உறுதி ஏற்படுகிறதல்லவா?

திருக்குர்ஆன் குறிப்பிடும் வணக்க வழிபாடுகளில் நமக்கு தெரியாத நோய் நிவாரணங்கள் உள்ளன. அதை ஆய்வுகள் நிரூபிக்கும் போது வல்ல இறைவனைப் புகழ்வதே ஒரு நன்றியுள்ள அடியானின் பண்பாக இருக்க முடியும். அந்த நன்றியுள்ள அடியார்களில் நாமும் இருக்கின்றோமா என்பதை நாம் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். (அல் குர்ஆன் 17:82)
 'இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், நோய் நிவாரணமுமாகும்' என்று கூறுவீராக! (அல் குர்ஆன் 41:44)

நோன்பு நமக்கு கற்றுத்தரும் பாடம் என்னவென்றால், புற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பதோடு மட்டுமின்றி, புற்று நோய்களை அழிக்கும் வழியையும் கற்றுத்தருகின்றன. நோன்பு புற்று மரபணுக்கெதிராக ஏற்படுத்திய விளைவுகளை சரியான முறையில் நாம் அறிந்து கொண்டால் புற்றை முற்றிலும் குணப்படுத்தக் கூடிய மருந்தையும் நம்மால் உருவாக்க முடியும். இறைவன் நாடினால் புற்றை ஒழித்துவிடலாம் முற்றாக!

ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது. (முஸ்லிம்)


references :

0 comments: