நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ۖ ثُمَّ تُوَفَّىٰ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَِ
(இறப்பிற்குப் பின்) அல்லாஹுவிடம் நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படும் நாளை அஞ்சுங்கள். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவரவர் தேடிக்கொண்டது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதியிளைக்கப்படமாட்டார்கள். ( அல் குர்ஆன் 2: 281)
உலகமும், உலகிலுள்ள செல்வங்களும் அழிந்த பின்னர் மறுமை நாள் ஏற்படும். தான் அடியார்கள் தன்னிடமே திரும்பிக் கொண்டுவரப்படுவார்கள்; அப்போது, அடியார்களிடம் விசாரணை செய்து அவர்கள் புரிந்த நன்மை மற்றும் தீமைக்கேற்ப நான் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் தெரிவிக்கின்றான்.
குர்ஆனில் (2: 281) இறுதியாக அருள்பெற்ற வசனம் இதுதான் என அப்துலாஹ் பின் அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாக இப்னு ஜரீர்(ரஹ்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த வசனம் அருளப்பெற்ற பின்னர் ஒன்பது நாட்கள் நபி(ஸல்) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். பின்னர் சனிக்கிழமையன்று கடுமையாக நோய்வாய்ப்பட்டு திங்கட்கிழமை இறந்தார்கள்.
மேற்கூறப்பட்ட வசனத்தின் சுருக்கமான அதன் விளக்கவுரை ரஹ்மத் அறக்கட்டளை மூலம் வெளியிடப்பட்ட தஃப்சீர் இப்னு கஸீர்(முக்தசர்) முதலாம் பாகம் தமிழாக்கத்தின் அல் குர்ஆனின் இரண்டாம் அத்தியாமான அல் பகரா வின் 281 ஆம் வசனமாகும். இவ்வசனம் அடங்கிய தஃப்சீர் இப்னு கஸீர்(முக்தசர்) இரண்டு அத்தியாயங்களைக் கொண்டு வெளிவந்த முதலாம் பாகம் தற்பொழுது Android Phone
உபயோகிப்பவருக்காக Android சந்தையில் வெளியிட்டுள்ளார்கள். இந்நற்செய்தியை ரஹ்மத் அறக்கட்டளை அறிவித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

சென்னை ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனத்தின் வெளியீடுகள் தற்போது Android சந்தையில் வெளியாகியுள்ளன. தொடக்கமாக தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் முதலாம் பாகம் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் Apple Storeலும் கிடைக்கும் என தனது முகநூல் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த சேவையை இலவசமாக கீழ்காணும் லிங்கில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
ரஹ்மத் அறக்கட்டளை மூலம் ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஜாமிஉத் திர்மிதீ முதல் பாகம், தஃப்சீர் இப்னு கஸீர் போன்ற இஸ்லாமிய மூலதார நூல்களின் தமிழாக்கங்கள் புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 comments:
ஐ-போன் வைத்திருப்பவர்கள் இந்த சேவையை இலவசமாக கீழ்காணும் லிங்கில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
http://itunes.apple.com/us/app/tamil-quran/id499779028?ls=1&mt=8
Post a Comment