Tuesday, June 8, 2010

மனித சமுதாயமே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதில் என்ன சந்தேகம்-2

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள்.

...3. பெருவெடிப்புக் கொள்கை:

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?  21:30
 

பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,
 

1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.
 

2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.
 

3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் – சந்திரன்களாக உருவாகின.- என்பதாகும்.
 

அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN), இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.

protoncollision
(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)

சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.

படம்: LHC (Large Hydron Collider) 
எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்
படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:
 

சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.
 

அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக 
அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் 
கண்டுபிடிப்புகள்
படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.

 

மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.
 

அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)
 

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28) 
ரியாதிலிருந்து ஃபைசல்


...4. விரிவடையும் பிரபஞ்சம்.

வானத்தை வலிமை மிக்கதாக படைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவடைய செய்யும் ஆற்றலுடையவராவோம். (குர்ஆன் 51:47).
 

1400 வருடங்களுக்கு முன்னர் வானியல் என்றால் என்னவென்றே தெரியாத அக்காலப்பகுதியில் பிரபஞ்சம் விரிவடைந்து செல்வதை பற்றி அல்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'ஸமாஉ' என்ற சொல்லானது குர்ஆனின் பல இடங்களில் வெளி,பிரபஞ்சம் என்ற கருத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இவ்வசனத்திலும் அக்கருத்திலேயே பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது பிரபஞ்சம் விரிவடைந்து செல்கிறது எனும் கருத்தை தருகிறது. இது இன்றைய நவீன விஞ்ஞானம் கூறுகின்ற தீர்க்கமான முடிவாகும்.

'இன்னா ல மூசிஊனா' என்ற அரபு மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு 'அதை நாமே உறுதியாக விரிவடைய செய்யும் ஆற்றலுடையவராவோம்' என்பதாகும். இது 'அவ்சா' - 'விரிவடைதல்' என்ற வினைசொல்லிருந்து வந்ததாகும். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 'லா' என்ற முற்சேர்க்கை பெருமளவு என்ற கருத்தை தருகிறது. இதனடிப்படையில் ';நாம் இந்த பிரபஞ்சத்தை பெருமளவு விரிவாக்கியுள்ளோம்'; என்பது இதன் கருத்தாகும்.

இந்த முடிவைதான் விஞ்ஞானம் இன்று அடைந்துள்ளது.

'பிரபஞ்சமானது ஒரு மாறா இயல்புடையதும் அறியமுடியாத ஆரம்பத்தைக் கொண்டதுவும் ஆகும்' என்பதே 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அன்றைய விஞ்ஞானம் ஏற்றுக்கொண்ட ஒரே கருத்தாக இருந்தது. எனினும், நவீன


Georges Lemaitre
தொழிநுட்பங்களின் உதவியை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளினதும் அவதானங்களினதும் முடிவானது, 'பிரபஞ்சத்திற்கு ஆரம்பம் இருந்தது, மேலும் அது தொடர்சியாக விரிவடைந்து செல்கிறது' என்பதாகும்.

20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரஷ்ய பௌதீகவியளாளர் அலெக்ஸான்டர் பிரீட்மேன் (Alexander Friedmann) என்பவரும் பெல்ஜிய பிரபஞ்சவியலாளரான ஜோர்ஜஸ் லேமாட்ரே ( Georges Lemaître) என்பவரும் 'பிரபஞ்சம் தொடர்ச்சியான இயக்கத்தை கொண்டுள்ளதுடன் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருக்கிறது' என்ற கருத்தை கோட்பாடடாக முன்வைத்தனர்.

இவ்வுண்மையானது 1929ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு அவதானிப்புத் தரவுகள் ( Observation) மூலம் உறுதிசெய்யப்பட்டது. அமேரிக்க வானியலாளரான எட்வின் ஹப்ள்
தொலைநோக்கியினூடாக வானை அவதானித்த போது நட்சத்திரங்களும், பால்வெளி மண்டலங்களும் (galaxies) தொடர்ச்சியாக ஒன்றினிலிருந்து மற்றயது விலகி செல்வதை கண்டுபிடித்தார் இக் கண்டுபிடிப்பு வானியல் வரலாற்றில் பெரும் திருப்பு முனை என்று கருதப்படுகிறது.

Edwin Hubble with his giant telescope

இவ்வாறு ஹப்பிள் அவதானித்து கொண்டிருந்த போது நட்சத்திரங்களிலிருந்து சிகப்பு நிற ஒளி வருவதை கண்டார். இதற்கு காரணம் வான் பொருளிலிருந்து பார்வை புள்ளியை நோக்கி வரும் ஒளி ஊதா (violet) நிறமாக இருந்தால் அப்பொருள் அப்புள்ளியை நோக்கி வருகிறது என்றும், பார்வை புள்ளியை நோக்கி வரும் ஒளி சிகப்பு (RED) நிறமாக இருந்தால் அப்பொருள் பார்வை புள்ளியை விட்டும் விலகி செல்கிறது என்பது பௌதீகவியலின் பொதுவான விதியாகும். ஹப்பிள் அவரது அவதானிப்பின் போது நட்சத்திரங்களிலிருந்து சிகப்பு நிறம் வருவதை கண்டறிந்தார்.

[Is-the-Universe-Really-Expanding-2.jpg]

From the moment of the big bang, the universe has been constantly expanding at a great speed. Scientists compare the expanding universe to the surface of a balloon that is inflated.


நட்சத்திரங்களும் பால்வெளிமண்டலங்களும் எம்மை விட்டு மட்டும் விலகி செல்லவில்லை. மாறாக அவை ஒன்று மற்றயதிலிருந்தும் விலகி செல்கிறது. சுருங்க சொல்வதாயின், நட்சத்திரங்கள் மென்மேலும் விலகி செல்கின்றன.

பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் ஏனைய பொருளிலிருந்து விலகி செல்கிறது என்பதன் கருத்து பிரபஞ்சம் விரிவடைந்து செல்கிறது என்பதாகும். தொடர்ந்து வந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புகள் (observations) பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடைகிறது என்ற கருத்தை உறுதிப்படுத்தியது.

ஒரு சிறு உதாரணத்தை கொண்டு இதை நன்கு விளங்கி கொள்ளலாம். நாம் இந்த பிரபஞ்சத்தை காற்று ஊதப்படும் ஒரு பலூனோடு ஒப்பிடலாம். பலூன் மேலும் ஊதப்பட்டால் அதன் மேற்பரப்பிலுள்ள புள்ளிகள் ஒன்றிலிருந்து மற்றயது விலகி செல்லும். அதை போன்று பிரபஞ்சம் விரிவடையும் போது வானிலுள்ள பொருட்களும் ஒன்றிலிருந்து மற்றயது விலகி செல்கிறது. 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாக கருதப்படும் அல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) இந்நிகழ்வை கோட்பாட்டு ரீதியல் கண்டுபிடித்தார். இருப்பினும் அக்காலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'நிரந்தர பிரபஞ்ச திட்டத்' தோடு மோத விரும்பாததன் காரணமாக தனது கண்டுபிடிப்பை வெளியிடவில்லை. பிற்காலத்தில் இந்நிகழ்வை 'தனது வாழ்வின் பெரும் பிழை' என கூறி வருதப்பட்டார்.

தொலைநோக்கி என்றால் என்ன என் அறிந்திறாத காலத்தில்தான் குர்ஆன் இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தியது. ஏனெனில் குர்ஆன் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் படைத்து ஆளுகின்ற இறைவனின் திருவசனமாகும்.

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28).


...5. வான்வெளியிலும் பாதைகள் உண்டு.

சூரியனும் சந்திரனும் அதற்கென வரையப்பட்ட ஒரு சுற்றுப் பாதையிலேயே நீந்துகின்றன என்று குர்ஆன் கூறுகிறது.
http://alienawakening.files.wordpress.com/2009/11/artistsimpression_vega.jpg
அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன. (குர்ஆன் 21:33)

மேலுள்ள வசனத்தில் 'நீந்துகின்றன' என்பதாக பொருள் தரும் 'சபாஹா' என்ற அரபு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது விண்ணில் சூரியனின் நகர்வை விளக்குகிறது. சூரியன் விண்ணில் மனம் போன போக்கில் செல்லவில்லை மாறாக அது தன்னை தானே சுற்றி கொண்டே அதன் பாதையில் செல்கிறது. சூரியன் ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் அது குறிப்பிட்ட பாதையில் செல்கிறது என்பதை இன்னொரு வசனம் கூறுகிறது:

சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் நன்கறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும. (குர்ஆன் 36:38)


இந்த உண்மையை இன்றைய நவீன காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வானியல் அவதானங்களினால் கண்டுபிடிக்க முடிந்தது. வானியல் அறிஞர்களின் கணிப்பீட்டு முடிவுகளின்படி சூரியன் மணிக்கு 7,20,000 கிலோ மீட்டர் எனும் அதி வேகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்டத்தில் வேகா (vega) நட்சத்திரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இக்குறிப்பிட்ட பிரதேசம் சூரிய முகடு (solar apex) என அழைக்கப்படுகின்றது. அதாவது, சூரியன் அண்ணளவாக ஒரு நாளைக்கு 17,280,000 கிலோமீட்டர் தூரம் தனது பாதையில் முன்னேறுகிறது. சூரியனுடன் சேர்ந்து ஏனைய கோள்களும், உப கோள்களும் சூரியனின் ஈர்ப்புச் சக்திக்கு உட்பட்டு ஒரே தூர இடைவெளியில் பயணிக்கின்றன. பிரபஞ்பத்தில் உள்ள ஏனைய நட்சத்திரங்களும் திட்டமிட்ட முறையில் அசைந்த வண்ணம் உள்ளன.

வானத்திற்கு பாதைகள் இருப்பதைப்பற்றி மற்றொரு வசனம்,

'பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக' (51:7)

பிரபஞ்சத்தில் அசாதாரண ஒழுங்குகள் காணப்படுவதற்கான காரணங்களில் ஒன்று விண்ணிலுள்ள ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பாதையில் செல்வதாலாகும். நட்சத்திரங்கள், கோல்கள் (planets), உபகிரகங்கள் (satellites) போன்ற அனைத்தும் தத்தம் பாதையில் சூழல்வதோடு மற்றவைகளோடு சேர்ந்து அவைகளும் சூழல்வதாலாகும். ஒரு தொழிற்சாலையிலுள்ள சக்கரங்களை போன்று பிரபஞ்சமும் அசாதாரண ஒழுங்கில் தொழிற்படுகிறது. பிரபஞ்சத்தில் 100 கோடிக்கும் அதிகமான பால்வெளிமண்டலங்கள் (galaxies) இருக்கின்றன. அவற்றிலுள்ள ஒவ்வொரு சிறிய பால்வெளிமண்டலமும் சுமார் ஒரு கோடி நட்சத்திரங்களை கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பெரிய பால்வெளிமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் சுமார் 10 கோடியை தாண்டும்.

இங்குள்ள பல நட்சத்திரங்களுக்கு பல கோல்கள் இருப்பதோடு பல கோல்களுக்கு துணை கோல்களும் இருக்கின்றன. அனைத்து விண்பொருட்களும் நன்கு திட்டமிட்டு கணக்கிடப்பட்ட பாதையில் செல்கின்றன. பல கோடி ஆண்டுகளாக ஒவ்வொன்றும் அதன் பாதையில் எத்தகைய பிசகுமின்றி ஏனையவைகளோடு சேர்ந்து சுற்றி வருகின்றன. மேலும் பல வால்நட்சத்திரங்கள் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. பிரபஞ்சத்திலுள்ள பாதைகள் சில விண்வெளி பொருட்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. சூரிய குடும்பமும் மற்ற பால்வெளிமண்டலங்களும் குறிப்பிட்ட அளவு நகர்ந்து செல்கின்றன. ஒவ்வொரு வருடமும் சூரிய குடும்பம் அதற்கு முன்னைய ஆண்டை விட சுமார் 5 கோடி கிலோ மீட்டர் (3.1 கோடி மைல்கள்) நகர்ந்து செல்கிறது. இத்தகைய பாதையில் மிகச்சிறிய பாதை மாற்றம் ஏற்பட்டால் கூட பெரும் குழப்பம் ஏற்பட்டு முழு பிரபஞ்ச அமைப்பும் முடிவிற்கு வந்துவிடும். உதாரணமாக பூமி அதன் பாதையிலிருந்து வெறும் 3 மில்லிமீட்டர் பாதை மாறினால் ஏற்படும் விளைவை பற்றி பின்வருமாறு கூறப்படுகிறது:

சூரியனை சுற்றும் போது பூமி ஒவ்வொரு 18 மைல்களுக்கும் அதன் நேர்கோட்டிலிருந்து 2.8 மில்லிமீட்டர் பாதை மாறக்கூடிய சூழற்சி முறையை கொண்டுள்ளது. பூமியின் சூழற்சி முறை மாறாது. ஏனெனில் அது 3 மில்லிமீட்டர் பாதை மாறினால் கூட மிகப்பெரும் அழிவை சந்திக்கும். அதன் பாதை மாற்றம் 2.8 மில்லிமீட்டருக்கு பதிலாக 2.5 மில்லிமீட்டராக இருந்தால் சூழற்சி பெரிதாகி நாம் அனைவரும் உறைந்து போவோம். அதன் பாதை மாற்றம் 3.1 மில்லிமீட்டராக இருந்தால் நாம் அனைவரும் கருகி செத்து மடிந்துவிடுவோம்.

விண்பொருட்களின் மற்றொரு முக்கிய பண்பு அவை தம்மை தாமே சுற்றி கொள்வதாகும். உண்மையில் குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் அன்றைய மக்களிடம் பல கோடி கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் வானத்தை ஆராயக்கூடிய தொலை நோக்கிகளோ அல்லது நவீன தொழிநுட்பங்களோ அல்லது நவீன பௌதீகவியல் வானவியல் போன்ற அறிவோ இருக்கவில்லை. அதனால் வானத்தை 'பாதைகளுடைய வானத்தின் மீது சத்தியமாக' (குர்ஆன் 51:7) என்று நிரூபிப்பது மிக கடினமாக இருந்திருக்கும். குர்ஆன் இறங்கிய காலத்தில் இந்த உண்மைகளை பற்றிய மிக தெளிவான தகவல்களை கூறுகிறது.

நிச்சயமாகக் குர்ஆன் இறக்கப்பட்ட போது இன்றுள்ள வானியல் அறிவோ, தொலை நோக்கிகளோ, நவீன தொழிநுட்பமோ, பல மில்லியன் கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ளவைகளை அறியும் கருவிகளோ இருக்கவில்லை. ஆகவே குர்ஆன் கூறிய பாதைகள், சுற்றுவட்டங்கள் அக்காலத்தில் விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது அசாத்தியமானதகாவே இருந்தது. அவ்வாறான காலத்தில் இவ்வுண்மையைக் குர்ஆன் கூறியிருப்பது அது அல்லாஹ்வின் சொல் என்பதற்கு சிறந்த ஆதாரமாகும்.

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28) 

...6. சந்திரனுக்கு சுய வெளிச்சம் இல்லை.
http://home.hiwaay.net/~krcool/Astro/moon/earthshine/eshine.gif


உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம். ஒளிவீசும் விளக்கை அமைத்தோம். (குர்ஆன் 78:12-13)

சூரிய குடும்பத்தில் சூரியனிடம் மட்டுமே ஒளி உள்ளது என்பது எமக்கு நன்கு தெரியும். விண்வெளி வீரர்கள் மற்றும் தொழிநுட்ப புரட்சி போன்றவற்றை கொண்டு சந்திரனுக்கு சொந்த ஒளி கிடையாது, மாறாக சூரியனிலிருந்து வரும் ஒளியை பிரதிபலிக்கிறது என்பது நிரூபனமாகியுள்ளது. மேலுள்ள குர்ஆன் வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'சிராஜ்'; என்ற அரபு சொல்லிற்கு 'விளக்கு' என்பது பொருள். ஓளி மற்றும் வெப்பத்திற்கு காரணமான சூரியனை மிகச் சரியான அடைமொழியை கொண்டு குர்ஆன் அழைக்கிறது.

குர்ஆனில் சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள் போன்றவற்றை குறிப்பிடும் போது அவற்றை வௌ;வேறு அடைமொழிகளை கொண்டு அல்லாஹ் அழைக்கிறான். இவ்வாறு தான் அவை குர்ஆனில் அழைக்கப்படுகிறது.

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அமைத்தான். (குர்ஆன் 71 : 15-16)
http://www.emporia.edu/earthsci/amber/students/jones/hppg001.gif

மேலுள்ள வசனத்தில் சந்திரனை 'ஒளி' என்று பொருள் தரும் 'நூர்'; என்ற அரபு சொல்லையும், சூரியனை 'விளக்கு' என்று பொருள் தரும் 'சிராஜ்' என்ற அரபு சொல்லை கொண்டு குர்ஆன் அழைக்கிறது. சந்திரனுக்கு பயன்படுத்தியுள்ள நூர் என்ற சொல்லிற்கு பிரதிபலிக்கும் ஒளி, பிரகாசம், அசைவற்ற உடம்பு என்ற பல கருத்துகள் உள்ளன. அதை போன்று சூரியனுக்கு பயன்படுத்தியுள்ள சிராஜ் என்ற சொல்லிற்கு தொடர்ந்து எறிகின்ற, நிரந்தரமான ஒளி மற்றும் வெப்பத்தின் காரணி போன்ற பொருள்களும் உண்டு.

அதை போன்று நட்சத்திரத்தை நஜாமா என்ற அடைமொழியை கொண்டு குர்ஆன் அழைக்கிறது. அதாவது 'நஜாமா' என்பதன் பொருள் 'தோன்றுகிற., வெளிப்படுகின்ற' என்பதாகும். நட்சத்திரங்களை தாகிப் என்று குர்ஆன் அழைக்கிறது. அதன் பொருள் இருளில் ஒளியை கொண்டு பிரகாசிக்கும், மினுங்கும், எறிகின்ற என்பதாகும். சந்திரனுக்கு சொந்தமாக ஒளி கிடையாது என்றும் அது சூரியனிலிருந்து வரும் ஒளியை பெற்று பிரதிபலிக்கிறது என்பது எமக்கு தெரியும். அதை போன்று சூரியனும் நட்சத்திரங்களும் அவற்றின் சொந்த ஒளியை வெளியிடுகிறன என்பதும் எமக்கு தெரியும். மக்கள் விஞ்ஞான என்றால் என்ன என்று அறியாத, வானவியல் அறிவு மட்டுப்படுத்தபட்டு இருந்த காலத்தில் இறக்கப்பட்ட குர்ஆனில் இந்த உண்மைகள் அருளப்பட்டுள்ளன. இது இப்புத்தகத்தின் அற்புதத்தை எடுத்து காட்டுகிறது.

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)


...7. வானத்தின் அடுக்குகள்

வானம் ஏழு அடுக்குகளாக படைக்கப்பட்டுள்ளதாக குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;. பினனர்; வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (குர்ஆன் 2:29)

இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்;. ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கடமை அறிவித்தான்...(அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்);. இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும் (குர்ஆன் 41:12)

குர்ஆனில் பல வசனங்களில் கூறப்பட்டுள்ள ஸமாஉ (வானங்கள்) என்பது பூமிக்கு மேலுள்ள வானத்தையும் அதேநேரம் முழு பிரபஞ்சத்தையும் குறிக்கும். இடத்திற்கேற்ப அதன் பொருள் மாறும். இங்கு பூமியின் வளிமண்டலம் ஏழு அடுக்குகளாக படைக்கப்பட்டுள்ளதை குறிக்கிறது. (அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்).

இன்று பூமியின் வளிமண்டலம் ஒன்றன் மேல் ஒன்றாக வௌ;வேறு அடுக்குகளை கொண்டுள்ளது. அதில் காணப்படும் இரசாயனம் அல்லது காற்றின் வெப்பநிலைகளை கருதில் கொண்டு பூமியின் வளிமண்டலத்தை ஏழு மண்டலங்கள் அல்லது அடுக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 21

48 மணித்தியாளங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை கணிக்க பயன்படும் 'லிமிடட் பைன் மெஷ் மொடல்' (Limited Fine Mesh Model [LFMMII]) வளிமண்டலம் ஏழு அடுக்குகளை கொண்டுள்ளது என்று கூறுகிறது. நவீன தொழிநுட்பம் வளிமண்டலத்தை ஏழு அடுக்குகளாக பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது.

      
        1வது அடுக்கு : அயன மண்டலம் (Troposphere)
        2வது அடுக்கு : பi ட மண்டலம் (Stratosphere)
        3வது அடுக்கு : இடை மண்டலம் (Mesosphere)
        4வது அடுக்கு : வெப்ப மண்டலம் (Thermosphere)
        5வது அடுக்கு : புற மண்டலம் (Exosphere)
        6வது அடுக்கு : அயன மண்டலம் (Ionosphere)
        7வது அடுக்கு : காந்த மண்டலம் (Magnetosphere)


ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் என்று மேலுள்ள குர்ஆன் வசனம் கூறுகிறது. வேறு வகையில் கூறுவதென்றால் ஒவ்வொரு வானத்திற்கும் வௌ;வேறு கடமைகளை அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். உண்மையில் பின்வரும் அத்தியாயங்களில் உலகிலுள்ள மனிதன் மற்றும் இதர உயிரினங்களுக்கும் பயன்தரக்கூடிய மிக முக்கிய கடமைகளை இவ் அடுக்குகள் செய்கின்றன என்பதை தெளிவாக விளங்கி கொள்வீர்கள். மழை உருவாவதிலிருந்து பயங்கரமான கதிரியக்கங்களை தடுப்பது வரையும், வானொலி அலைகளை திரும்பி அனுப்புவது முதல் விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பது வரையான ஒவ்வொரு அடுக்கிற்கும் தனித்துவமான செயற்பாடுகள் இருக்கின்றன.

கீழுள்ள வசனங்களில் வளிமண்டலத்தின் அடுக்குகளின் தோற்றம் பற்றி கூறுகிறது:

ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காய் படைத்துள்ளான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? (குர்ஆன் 71:15)

அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்;...... (குர்ஆன் 67:3)

இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள 'திபாக்' என்ற சொல்லிற்கு 'அடுக்குகள்' என்பது பொருளாகும். அதாவது 'பொருத்தமான திரை' அல்லது 'ஒரு பொருளை மூடுவதை' குறிக்கும். இது மேலுள்ள அடுக்கு கீழுள்ள அடுக்கில் எவ்வாறு பொருந்தி வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் இங்கு 'அடுக்குகள்' என்று பன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளதை நன்கு சிந்திக்க வேண்டும். மேற்கூறப்பட்ட வசனங்களிலுள்ள குறிப்பிடப்படடுள்ள ஏழு வானங்கள் என்பது எவ்வித சந்தேகமுமின்றி வளிமண்டலத்தை குறிக்கும் மிக பொருத்தமான சொல்லாக கருதப்படுகிறது.

20ம் நூற்றாண்டில் நவீன தொழிநுட்ப உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையை 1400 வருடங்களுக்கு முன்னர் எவ்வித தொழிநுட்ப வசதிகளுமின்றி கூறுவதென்றால் அது நிச்சயமாக இறைவனின் சொல்லாகத்தான் இருக்க வேண்டும்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  (55:13)
 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)0 comments: