Sunday, November 21, 2010

பெண்களும், மெனோபாஸ் காலமும்


  அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர காத்துஹூ...


                      ஹெச். ஃபாத்திமா அஜீஸ், கல்பாக்கம்

நபியே! மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை, எனவே மாதவிடாயின்போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! அல்லாஹ் திருந்திக் கொள்ளுவோரை விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்எனக் கூறுவீராக என்று கூறுகிறான்.
(அல்குர்ஆன் 2:222)


பெண்கள் பருவமடைந்த பிறகு சராசரியாக அவர்களுக்கு 40 வயது முதல் 50 வயது வரை மாதவிடாய் வந்து பின்பு முற்றிலுமாக இது நின்றுவிடுகிறது. இது முழுவதுமாக நின்றுபோகும் நிலையை ஆங்கிலத்தில் மெனோபாஸ் என்கிறார்கள். இந்த காலகட்டம்தான் பெண்களுக்கு சோதனையான காலகட்டமாக உள்ளது. மெனோபாஸ் என்கிற நிலையை உணர பெண்களுக்கு கிட்டத்தட்ட ஒரு வருட காலம் கூட ஆகும். ஏனெனில் சில பெண்களுக்கு 2 மாதங்கள்,  3 மாதங்கள்,  ஏன் 5, 10 மாதங்கள் கூட நின்று விட்டு பின்பு மாதவிடாய் வருவதுண்டு. இறுதியாக சில மாதங்கள் தொல்லை கொடுத்துவிட்டு முழுமையாக நின்றுவிடும்.

இந்த காலகட்டங்களில் பெண்கள் உடல் அளவில், மனதளவில் பல பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். உடல் அளவில் மாற்றங்கள் வருகிறது. அடிக்கட வியர்த்துப் போகுதல், படபடப்பு, கோபம், எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, ஏதோ தீராத நோய் வந்துவிட்டது போலவும், இறைவன் நம்மை சோதிக்கிறான் என்பது போலவும் ஒரு சிந்தனை வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், “மாதவிடாய் என்பது ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் விதித்த ஒன்றாகும்” (புகாரி 5548)

இப்பொழுது பல பெண்மணிகளுக்கு மெனோபாஸ் காலத்திற்குப் பிறகு கர்ப்பப்பை எடுக்க வேண்டிய சூந்நிலை ஏற்பட்டு விடுகிறது. பெரும்பாலும் நிரந்தர கருப்பைத் தடை ஆப்ரேஷன் செய்த பெண்களுக்கு ஒரு முறை வயிற்றை கீறிவிட்டால் நிச்சயமாக பல காரணகாரியங்களுக்காக நாட்பட்ட பல தொல்லைகள், கட்டிகள் தோன்றிவிடுகிறது. இது கர்ப்பப்பை கேன்சராகவும், மார்பக புற்றுநோயாகவும் மாறவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இதனால் உடனடியாக கர்ப்பப்பையை எடுத்து விடுகிறார்கள். நிரந்தர கருத்தடை செய்ய வேண்டாம் என இஸ்லாம் இதனால்தானோ நமக்கு தடைவிதித்து இருக்கிறது (இறைவன் அறிந்தவன்). அப்படி கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளும் பல மடங்காகிவிடும்.

மாதவிடாய் நின்ற பிறகு வூடினைஸிங் ஹார்மோனும், புரோஜெஸ்டிரான் சுரப்பது குறைந்துவிடுவதால் இரத்த ஓட்டம் குறைந்துவிடுகிறது. திசுக்கள் அனைத்தும் நீர் வற்றி அவற்றின் பலத்தை இழந்துவிடுவதால், மலக்குடல், சிறு நீர்ப்பை பிடிமானம் குறைந்து உரிய இடங்களை விட்டும் கீழே இருக்கும். இதுவே பெண்களுக்கு அசௌகரியமாக இருக்கும்பொழுது, எலும்பின் தன்மையும் முற்றிலுமாக மாறிவிடுகிறது.

மூட்டுக்கு மூட்டு வலி ஏற்படுகிறது. சிறியதாக அடிபட்டாலும்கூட எலும்பு முறிந்துவிடும் அபாயம் ஏற்படும். இவையெல்லாம் உடல் வேதனைகள் என்றால், மனதளவில் இந்த பெண்கள் படும்பாடு மிகவும் வேதனைக்குரியது. நாம் தனிமைபடுத்தப்பட்டுவிட்டோமோ, நம்மை உதாசீனப்படுத்துகிறார்களோ என்று கவலை அடைவார்கள்.

ஒன்றைமட்டும் நாம் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்; 40, 45 வயது என்பது முதுமையான காலம் அல்ல. அது நடுத்தர வயது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். திசுக்களில் நீர் வற்றிவிடுவதால் பிறப்பு உறுப்பு அதன் நெகிழ்ச்சி தன்மையிலிருந்து வறட்சி தன்மைக்கு மாறிவிடுகிறது. இந்த நிலையில் தாம்பத்தியம் வலியுடன் கூடிய மிகுந்த சிரமத்தை உள்ளாக்கிவிடும்.

கணவனை திருப்திப்படுத்த இயலாத பெண்கள் மன தேவனை அடைந்து கணவன்மார்களையே சந்தேகம் கொள்ளுவார்கள். கணவருக்கோ மனைவியின் மீது கடுப்பு ஒரு பக்கம். பெண்கள் தான் பெற்ற பிள்ளைகள் மீது கோபத்தையும், இயலாமையையும் காண்பிக்க, பிள்ளைகளும் இந்த காலகட்டத்தில்தான் பெற்ற தாயை உதாசீனப்படுத்துகிறார்கள்.

கணவன்மார்களும், பிள்ளைகளும் இந்த நேரத்தில்தான் அவர்களுக்கு மிக ஆதரவாக நிச்சயம் இருக்க வேண்டும். இவர்களை மனநோய் தாக்காமல் இருக்க குடும்பத்தார்கள் ஆதரவாகவும், அன்னியோன்யமாகவும் பழக வேண்டும். அவர்களை உரிய மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவதுடன், உடற்பயிற்சியுடன் கூடிய உணவு முறைகளை சீரிய முறையில் நடைமுறைப்படுத்தி உடல்நலம் பெற வேண்டும்.

இந்த தருணத்தில் மார்க்கத்தின் பக்கம் நம் கவனத்தை திருப்புவது மிகுந்த நன்மை பயக்கும். இஸ்லாம் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வை நம்முன் வைக்கிறது.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றொருவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள்.  தீமையை தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாதையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள் புரிவான். அல்லாஹ் மிகைத்தவன். ஞான மிக்கவன்
(அல்குர்ஆன் 9:17)
என்று எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் கூறுகிறான். தொழுகையை பேணுதலாக தொழுவதும், முடிந்த அளவு தர்மம் செய்வதும், திக்ருகளில் கவனம் செலுத்துவதிலும் சகோதரிகளே நீங்கள் முனைப்பு காட்டினால் இவையாவும் மனதளவில் நம்மை மறுமை வாழ்விற்கு தயார் செய்துவிடும்.

மார்க்கத்தில் ஈடுபடுவதோடு, சமூகப் பணிகளில் ஈடுபடுவதும் நம்மை சொர்க்கம் கொண்டு சேர்க்கும் ஒரு காரியம் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

சகோதரர்களே! உங்கள் மனைவியை சமூக பணி ஆற்ற அனுமதி தருவதோடு உங்களின் ஒத்துழைப்பையும் கொடுங்கள். மன சஞ்சலம் உள்ள எந்த ஒரு பெண்மணியும் ஆதரவும், அன்பும் தரும் தன் கணவனின் தோளில் சாயும் பாக்கியம் பெற்றால், நெகிழ்ந்துதான் போவார். இதற்காகத்தான் நமது இறைவன் நீங்கள் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் என்கிறான்.

இந்த உலக வாழ்விற்காக நாம் அடையும் உடல் வேதனையைவிட மன வேதனையைவிட மறுமை வாழ்விற்காக நாம் நல்ல அமல்கள் செய்ய வேண்டும். சேகரிக்க வேண்டிய நன்மைகள், ஆற்ற வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது. நமக்காக எல்லாம் வல்ல இறைவன் சித்தப்படுத்தி வைத்துள்ள சொர்க்கத்தை அடைய உடல் நலத்தையும், மனபலத்தையும் நிச்சயம் நமக்கு அளிப்பான். மார்க்கத்தின் வழியில் மறுமைக்காவும், குடும்பத்திற்காகவும், சமுதாய நலனுக்காவும் வாழ நமதிறைவன் அருள்புரிவானாக!

மெனோபாஸ் பற்றி ஒரு வார இதழிலில் வந்திருந்தது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது. கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு தினரும் போது கணவனோ, மகனோ அவளின் நிலையை அறிந்து செயல்படுதல் முக்கியம்.

மெனோபாஸ்
45 வயதிற்கு மேல் பெண்ணின் சினைப் பையின் செயல்பாடு குறைந்து மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.

பொதுவாக 40 வயதிற்கு மேல் 50 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களுக்கே ஏற்படுகிறது.

அறிகுறி
1. உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போல இருக்கும். (ஹாட்ஃபாளஷ்).
2. திடீரென வியத்துக் கொட்டும். பனிக்காலமாக இருந்தாலும் வியர்க்கும்.
3. படபடப்பு, சோகம், எரிச்சல், அசதி, அழுகை என மனநிலை மாற்க்கொண்டே இருக்கும்.
4. ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால் தாம்பத்திய உறவில் சிரமம் ஏற்படும்.

செய்ய வேண்டியது
1.                  ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வது அவசியம்.
2.                  கால்சியம் சத்து குறைவதால் எழும்பு மெலியும் அபாயம் உள்ளது.
3.                  சரியான உணவுப்பழக்கம் இருந்தாலே மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பல பிரட்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.
4.                  கொழுப்பு நீக்கப்பட்ட பாலால் ஆனா தயிரை தினந்தோறும் சேர்க்க வேண்டும்
5.                  சாப்பாட்டில் எள் நிறைய சேர்க்க வேண்டும்.
6.                  பச்சை காய்கற்கள், பழங்கள் சேர்ப்பது நலம்.
7.                  கைக்குத்தல் அரிசியும், கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவுகளும் பல குறைபாடுகளை தீர்க்கும்.
8.                  கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்த்து 45 நிமிடங்கள் மாலைவேளையில் நடந்தால் 90 சதவீத மெனோபாஸ் காலத்தில் வரும் நோய்களை தவிர்க்கலாம்.
9.                  கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
கால்சியம் மாத்திரை

சமீபத்தில் தொலைக்காட்சிகளில் அடிக்கடி ஒரு கால்சியம் மாத்திரை நிறுவனம் விளம்பரம் செய்து வருகிறது. குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்காக அதை உட்கொள்ளுமாறு கூறுகிறது. குழந்தைகளின் வளர்ச்சியில் ஆர்வமுள்ள பெற்றோர்கள் அதை வாங்கி குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் எலும்பு வளர்கிறதோ இல்லையோ சிறுநீரக்த்தில் கற்கள் வளர்ந்து விடும்.

சராசரியான குழந்தைக்கு தினம் பாலில் இருக்கும் கால்சியம் அளவே போதுமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நமது உடலில் இருக்கும் சத்துகள் குறைந்தால் அதற்காக மாத்திரை, மருந்துகளை உட்கொள்வதில் நியாயம் இருக்கிறது. நாமாக எதையும் முடிவு செய்து கொண்டு மருந்துகளை எடுத்துக் கொள்வதால் தேவையில்லாத விபரீதங்களே தோன்றுகின்றன.

காய்சலுக்கு பாரசிடமால் எடுத்துக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஒரு வார இதழில் அதன் விளைவுகளை படித்த்திலிருந்து நான் பாரசிடமால் பக்கம் போவதே இல்லை. இப்போது சிக்கன் குன்யாவைப் போல பரவலாக ஒரு காய்ச்சல் வருகிறது. டெங்கு காய்ச்சலின் சில அறிகுறிகள் மட்டும் தென்படுகின்றன. அது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை குறைத்து விடுகிறது. வெள்ளை அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்தி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த காய்ச்சல் கொசுவால் பரப்பப்படும் வைரஸால் ஏற்படுகிறது என்று மருத்துவர் சொன்னார்.
எச்சரிக்கையாக இருங்கள் நண்பர்களே.

0 comments: