நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில், காலை 07.30 மணிக்கு காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. இதில் 2500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் நெய்னா முஹம்மது தொழவைக்க, பள்ளி கத்தீப் அப்துல் மஜீத் மஹ்லரி குத்பா பேருரை நிகழ்த்தினார். தொழுகை கிடைக்கபெறாதவர்க்கு உடனடியாக இரண்டாவது ஜமாத் நடத்தப்பட்டது.
காயல்பட்டினம் ஐ.ஐ.எம். பைத்துல்மால் நிதிக்காக ஆண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 57,000மும், பெண்கள் பகுதியிலிருந்து ரூபாய் 60,000 மற்றும் 8 கிராம் தங்க காசு உட்பட தங்க, வெள்ளி ஆபரணங்களும் வசூலானது.
காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள்:





பின்னர், அருகிலுள்ள ஈச்சமர வளாகத்தில் சந்தித்து அளவளாவி தமது பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.






சஊதி அரபிய தொலைக்காட்சி நிறுவன நிருபர்கள் இக்காட்சியை ஒளிப்பதிவு செய்ததுடன் காயலர்களிடம் பேட்டியும் கண்டனர்.

சீனா, ஜியாங்க்மேன் வாழ் காயலர்கள், நேற்று (09-09-2010) நோன்பு பெருநாள் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட காட்சி:

ஐக்கிய அரபு அமீரக துபையில் வெள்ளியன்று (10-09-2010) நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டது. அல் பரஹா பகுதியில், ஈத்கா பள்ளியில், காலை 6:30 மணி அளவில் நடந்த தொழுகையில் காயலர் பலர் கலந்து கொண்டனர்.















ஜப்பானில் காயலர்கள் நேற்று (10-09-2010) நோன்பு பெருநாள் கொண்டாடிய போது எடுக்கப்பட்ட காட்சிகள்:


0 comments:
Post a Comment