Monday, August 9, 2010

யூத மத பெண்கள் 'ஹிஜாப்' அணிய யூத மதகுருக்கள் ஃபத்வா.



சுதந்திரத்தைப் பறிக்கின்றதா 'ஹிஜாப்' அணிய 'பிரான்ஸ்' விதித்த தடை உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இது மத உணர்வை காயப்படுத்துவதாகவும், பிரான்சில் இஸ்லாம் மதம் பின்பற்றுபவர்கள் அதிகரிப்பதை தடுக்க அரசு இவ்வாறு தடை விதிக்கிறது என்ற கருத்து முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில்... இஸ்ரேலைச் சேர்ந்த யூத குருமார்கள், "யூத மதப்பெண்கள் கட்டாயம் 'ஹிஜாப்' அணிய வேண்டும்" என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

முஸ்லிம் பெண்கள் அணியும் அதே வகை 'ஹிஜாப்'களையே இவர்களும் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'டெய்லி மாரிவ்' (Daily Mariv) என்ற யூத பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் யூத குருமார்கள் தங்கள் மத பெண்களை 'ஹிஜாப்' அணிய அறிவுறுத்தி வருவதாகவும்,

இதன் ஒரு பகுதியாக நகரம் முழுவதும் சுவரொட்டி கொண்டு விளம்பரம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதில் பெண்கள் தலை முதல் பாதம் வரை முழுவதும் மறைத்து உடை அணியவும்,

தலைமுடியினை மறைத்துக்கொள்ளவும்,

ஒளி ஊடுருவுகிற (Transparent) ஆடைகள் மற்றும் இறுக்கமாக உடல் அங்கங்கள் தெரியும் உடைகள் அணிய கட்டுபாடுகள் விதித்தும்,

கறுப்பு நிற மேலங்கி உபயோகப்படுத்த வலியுறுத்தியும் விளம்பரம் செய்துள்ளனர்.

இவை பெண்களைப் பாவங்களில் இருந்து விடுபட செய்யும் செயல்கள் எனவும்,

மீறுவது யூத மத வேதம் டோராவிற்கு எதிரானது என்றும் அவர்கள் விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த மதகுருமார்கள் குட்டை பாவடை, நீச்சல் உடை மற்றும் வண்ணமயமான அலங்கார உடைகளை பெண்கள் உடுத்துவதற்கும் கட்டுபாட்டு ஆணைகள் இட்டு வருகின்றனர்.

டோரா வேத குருமார்கள் மத சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் மிகவும் கண்டிப்பானவர்கள்.

மற்றொரு பிரிவான ஹரேடிம் ஏற்கனவே இவற்றைப் பின்பற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், பெண்கள் போது இடங்களில் செல்போன் உபயோகிப்பதற்கும் தடை விதித்துள்ளனர். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த விளம்பரங்கள் தெரிவிப்பதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுயுள்ளது.

இது அங்கு உள்ள மற்ற யூத மத பிரிவுகள் இடையே கருத்து வேற்றுமையை ஏற்படுத்தி உள்ளது என்றும் அந்தச் செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.

source: inneram.com

5 comments:

இஸ்லாத்தின் பேரால் நீங்க செய்யும் அநியாயத்தை அல்லா தட்டிகேட்கமாட்டாரோ?? ஏன் அவரும் ஒருமத திவிரவாதியா???

திரு rishad அவர்களே ...

இஸ்லாத்தின் பேரால் நீங்க செய்யும் அநியாயத்தை அல்லா தட்டிகேட்கமாட்டாரோ?? ஏன் அவரும் ஒருமத திவிரவாதியா???


என்ன அநியாயம் என்று சொல்லுங்களேன்.

முசுலிம் பெண்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்தவர்களல்ல!அடிமைத் தனத்துக்கு முடிவு வேண்டாமா?தனியாக முசுலிம் குழந்தைகளை,பெண்களை அழைத்துக் கேட்டுப் பாருங்கள்!உண்மை நிலை தெரியும்!மதத்தில் பற்றுதல் இருக்கலாம்,ஆனால் அதுவே வெறியாக மாறி விடக் கூடாது!மேலும்,அரபு நாடுகளை விட்டு பொருள் தேடி மேற்குலக,அமெரிக்க நாடுகளுக்கு குடி பெயரும்போதே மேலைத் தேய நாகரீகங்களுக்கு இணங்கிப் போக வேண்டிய தேவையையும் மறுத்து விட முடியாதே?அரச சேவையில் இருக்கும் அரபுக்கள்/:முசுலிம்கள் பாரம்பரிய?!உடையுடன் கடமையாற்ற முடியுமா?சிந்தியுங்கள் நண்பர்களே!!!!!

பர்தா(ஹிஜாப்) பற்றி Dr.ஜாகிர் நாயக்

ஹிஜாப் பற்றி PJ - பாகம் 1

ஹிஜாப் பற்றி PJ - பாகம் 2

பர்தா பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்றதா?

ஹிஜாப் தரும் சுதந்திரம்!

ஆடைகளைக் களைவதா சுதந்திரம்?

சகோதரி யுவான் ரிட்லியின் கட்டுரை!

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்...

"நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.
முழுமையாக வாசிக்க >>

சகோதரி யுவான் ரிட்லியின் கட்டுரை!